தொடர்பு கொள்ள

எங்களது சித்த ஞான சபையில் உறுப்பினராக திருமணம் முடிந்தவர்தான் புதிய நபராக சேர முடியும் .மேலும் ஒவ்வொரு பௌர்ணமியன்றும் சபைக் கூட்டம் நடக்கும் .அதில் மூன்று கூட்டங்களுக்காகவாவது புதிய நபர்கள் தவறாமல் வந்திருக்க வேண்டும்.இந்த இரண்டு விதி முறைகளுக்கும் யாருக்குப் பொருந்துகிறதோ அவர்களுக்கு அடுத்து வரும் பௌர்ணமியோடு கூடிய வியாழக்கிழமையிலோ அல்லது வளர் பிறையில் வரும் வியாழக்கிழமையிலோ உபதேசம் கொடுக்கப்படும்.இந்த உபதேசம் சித்தர்கள் வழியில் மச்ச முனிவரின் ஞான உபதேச வழியில் கொடுக்கப்படும்.

எம் குருநாதர் ஆன்மீக வள்ளல் திரு பார்த்த சாரதி அவர்கள்,சாமீ அழகப்பனான நான் மச்ச முனிவரின் ஆசிரமத்தைச் சேர்ந்த கடைமகன். இந்த ஆசிரமம் இந்தியாவில் தமிழ்நாட்டில் இராமநாதபுரம் மாவட்டத்தில், பரமக்குடி தாலுக்காவில், நயினார் கோவில் அருகே பாண்டியூர் என்ற தெய்வீகத் திருத்தலத்தில் அமைந்துள்ளது. ஒவ்வொரு மாதம் இரவுப் பௌர்ணமியில் அங்கே சபைக் கூட்டம் நடை பெரும். அதில் சித்தர் பாடல்களுக்கான விளக்கங்கள் அளிக்கப்படும். மதம் ஒரு தடையில்லை.

இமெயில் முகவரி :  machamuni.com@gmail.com