தீபாவளி ஸ்பெசல்(பாகம் 2)

November 5, 2010 by: machamuni
தீபாவளி நல் வாழ்த்துக்கள்
தீபாவளி ஸ்பெசலில் அடுத்த விஷயமான வயிறு வேலை நிறுத்தம் செய்தல் என்பதையும், அதற்கான மருந்துகள் என்ன என்பதைப் பற்றியும் பார்ப்போம்.
ஒரு அடுப்பில் விறகை அளவோடு திணித்தால், எரியும் அளவுக்கு மிஞ்சி திணித்தால் புகையும்,கரும் புகையாக கக்கும் ஆனால் எரியாது.குறைவாக விறகு இட்டால் எரிய விறகு இருக்காது,எனவே அதிகமாக விறகை திணிக்கவும் கூடாது,குறைவாக விறகு வைத்துவிட்டு மறந்துவிடவும் கூடாது.   
 
சித்த வைத்தியத்தில் வயிற்றில் உள்ள ஜடராக்கினி குறையும்போது வயிறு அதிகமாக விறகு திணித்த அடுப்பு போல புகையும்,கரியும் ஆனால் எரியாது.எனவே போட்ட உணவு எரிந்து,அதாவது சீரணித்து அன்ன ரசமாகவும்,சப்த தாதுவாகவும் மாற இந்த ஜடராக்கினி தேவை.அதை தொடர்ந்து எரிய வைக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும்.
அதுவும் மழைக்காலமாக இருந்தால் ஜடராக்கினி இன்னும் மோசமாக குறைவு ஆகும்.இதற்கு ஹோமியோ மருந்துகளில் பல்சடில்லா-30(PALSADILLA-30) என்ற மருந்தை க்லாயூபல்ஸ்( அதாங்க பார்லி உருண்டை போல இருக்குமே அதாங்க) ஒரு ஐந்து உருண்டை எடுத்து சப்பி சாப்பிட வயிறு சரியாகும்.
 
சித்த மருந்துகளில் தீக்காயத்துக்கு செம்பரத்தைத் தைலம்,சோற்றுக் கற்றாழைத் தைலம்,கரிசலாங்கண்ணித் தைலம், பொன்னாங்கண்ணித் தைலம் இவற்றைக் கலந்து வைத்துக் கொண்டோ அல்லது தனித்தனியாகவோ வைத்துக் கொண்டு கோழி இறகாலோ,மயில் இறகாலோ தடவி வரலாம்.அல்லது உடனடியாக எரிச்சலைத் தணிக்க உருளைக் கிழங்கை அம்மியில் வைத்து அரைத்து பற்றிட( அம்மியில் மிளகாய் வைத்து அரைத்து இருந்தால் நன்றாக இரண்டு மூன்று முறை கழுவி உபயோகிக்கவும். இல்லையெனில் எரிச்சல் எடுக்கும்) தீக்காய எரிச்சல் உடனே தணியும்.புளித்த மாவைப் போட்டாலும் தீப்புண் கொப்புளிக்காமல் இருக்கும்.
அஜீரணத்திற்கு இஞ்சி லேகியம்,பெருங்காய லேகியம், சவுபாக்கிய சுண்டி லேகியம்,ஜீரண லேகியம்,தீபாவளி லேகியம் போன்றவற்றை ஒரு கரண்டி சாப்பிட்டு சரி செய்து கொள்ளலாம்.மேலும் இவற்றை உற்பத்தி செய்யும் மருந்துக் கம்பெனிகள் மலையப்பசாமி வைத்தியசாலை பழனி, அரவிந்த் ஹெர்பல்ஸ்,அன்னை அரவிந்த் ஹெர்பல்ஸ்,IMPCOPS ,TAMPCOL,போன்ற சித்த மருந்து உற்பத்தியாளர்கள் உற்பத்தி செய்கிறார்கள்.வாங்கி உபயோகித்து பயன் பெறவும்.
அடுத்து ஒரு முக்கிய விஷயத்தோடு அடுத்த பதிவில் சந்திக்கிறேன்.

2 responses to “தீபாவளி ஸ்பெசல்(பாகம் 2)”

 1. pulipani says:

  இதயம் நிறைந்த தீபத் திருநாள் வாழ்த்துக்கள். இந்த நன்னாளில் உங்களின் அகமும் புறமும் மலர்ந்து சிறந்திட வாழ்த்துகிறேன்.

 2. சாமீ அழகப்பன் says:

  வாழ்த்துரைக்கு மிக்க நன்றி திருபுலிப்பாணி அவர்களே,நீங்கள் வாழ்த்து தெரிவித்தவுடன்தான் நான் நமது வலைப்பூ அன்பர்களுக்கு தீபாவளி வாழ்த்து தெரிவிக்காதது கவனத்திற்கு வந்தது.உடனே வலைப்பூவில் முதல் வார்த்தையாக வாழ்த்தை இணைத்தேன்.தங்களுக்கு எனது தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
  மிக்க நன்றி
  என்றென்றும் பேரன்பினால்
  சாமீ அழகப்பன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

63 + = 66