அற்புத மூலிகைகளின் செயல்பாட்டு வகைகள் – பாகம் 1

April 26, 2012 by: machamuni

சித்த வைத்தியத்தில் பல அற்புத மூலிகைகள் உள்ளன.அவற்றின் செயல்பாடுகளை வைத்து பல வகைகளாகப் பிரித்துள்ளனர்.அந்த வகைகளின் பெயர்களையும் அவற்றின் செயல்பாடுகளையும் கீழே விவரிக்கிறேன்.இவற்றை வைத்துத்தான் இன்ன மூலிகை இன்ன வியாதியை குணமாக்கும் என்று தெரிந்து தெளியலாம்.

வியதாபேதகாரி:- நோயை வளர விடாமல் உடலைக் காத்து நாளுக்கு நாள் சிறிது,சிறிதாக நோயை குணமாக்கி சரீரத்தை ஆரோக்கிய நிலையில் கொண்டு வரும் மருந்துகள் ( ALTERNATIVE ) .

அசுவகந்தி(அமுக்கராக்கிழங்கு) , அவுரியிலை , அழிஞ்சில் மரம் ,அருகன் கட்டை, ஆதொண்டை , ஆழிவிதை , இலுப்பை வேர் , ராக்காசி மடல் , உகா மரம் , கடலழிஞ்சில் , கடற்பாலை வேர் , சங்கங் குப்பி , கருடன் கிழங்கு , கருப்பு அழிஞ்சில் மரம் , கார்போக அரிசி , குக்கில் , சணப்பஞ் செடி , சதுரக்கள்ளி , சரக்கொன்றை மரம் , சவுரிப்பழம் , சிறுகாஞ்சொறி வேர் ( செந்தட்டி ) , சீந்திற்கிழங்கு , செங்கத்தாரி வேர்ப்பட்டை , செவ்வல்லிப்பூ , சேங்கொட்டை , சேங்கொட்டை நெய் , தழுதாழை இலை , திக்காமல்லி , தில்லம் வித்து , தில்லம் பால் , நத்தைச்சூரி வேர் , நறு முன்னை , நறுமுன்னை வேர் , நன்னாரி வேர் , நாகமல்லி வேர் , நீரடி முத்து , நீரடி முத்து நெய் , நிர்விஷம் , நீர்ப்பூலாப்பட்டை , நொச்சி இலை , பற்பாடகம் , பாதிரி வேர் , பாலை மர வேர் , பிரம்மதண்டு , பீதரோகணி , புங்கம் பால் , பூவரசு சமூலம் , மணக்கத்தை அரிசி , மயிர் மாணிக்கம் , மர மஞ்சள் , மருதோன்றி வேர் , மாதுளம் பழ ஓடு , மாதுளம் பிஞ்சு , மாதுளம் பூ , மாவிலங்கப்பட்டை , வல்லாரை , வாய்விளங்கம் , முத்தக்காசு , வில்வப்பழம் , வில்வ வேர் , விஷ்ணு கிரந்தி ,வெங்காலி மர வேர் , வெள்ளறுகு , வெள்ளை நாவி , வேப்பம் வித்து , வெட்சி செடி.

வேதனா சாந்தினி:-நோயைத் தணிக்கும் மருந்து (ANODYNE ).வலியைக் குறைக்கும் மருந்து.

அபினி , ஊமத்தங்காய் , ஊமத்தை வித்து , ஊமத்தை , கசாகசாத் தோல் (போஸ்தக்காய் ஓடு) , கஞ்சா , கருநொச்சி இலை , கரு ஊமத்தை இலை , கரு ஊமத்தை வித்து , குரோசாணி ஓமம் , குன்றி மணி இலை , சூத்திர நாவி , செவ்வாமணக்கிலை , நாவி , நிர்விஷம் , நொச்சியிலை , பிரம்ம தண்டு , பெருந் தேட்கொடுக்கு , பொன்னூமத்தை , வெண்குன்றி இலை , வெள்ளாமணக்கிலை , அக்ரு , பெரு ஏலக்காய் , கஸ்தூரி மஞ்சள் , புங்கம் நெய் , மஞ்சள் , மருதம் பட்டை , முசற் காதிலை , எருக்கிலை.

ஆம்ல நாசினி:- வயிற்றில் உள்ள புளிப்பை கண்டிக்கும் மருந்து ( ANTACID ).

உப்பிலாங் கொடியைப் போன்ற லவண ( உப்பு ) சாரங்களைப் பெற்றுள்ள மூலிகைகள்.

 

17 responses to “அற்புத மூலிகைகளின் செயல்பாட்டு வகைகள் – பாகம் 1”

 1. Yahaventhan says:

  Ayya arumaiana pathivu.pani thodara vazhthukal

  • machamuni says:

   கருத்துரைக்கு நன்றி திரு யாகவேந்தன் அவர்களே,பாராட்டுக்கு நன்றி.
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 2. kale says:

  சாமி அழகப்பன் அவர்களுக்கு வணக்கம்,

  நீண்ட நாட்களாக உங்கள் தளத்தை வலம் வருகிறேன்.
  உங்கள் படைப்புகள் அற்புதம்.

  நீண்ட நாட்களாக ருத்ராட்சத்தை பற்றி ஆராய்ந்து வருகிறேன். ஆனால் எனக்கு, உண்மையான ருத்திராட்சத்தை கண்டரிய முடியவில்லை. பல போலியானவற்றை வாங்கி ஏமாந்தும் இருக்கிறேன். உண்மையானவற்றை கண்டறிய எதாவது வழி இருகிறதா ?

  நன்றி,

  • machamuni says:

   கருத்துரைக்கு நன்றி திரு காளியப்பன் அவர்களே,ருத்திராக்கம் என்பது சிவனின் கண்ணீர்த் துளியில் இருந்து தோன்றியது என்பார்கள்.ருத்திராக்கத்தை இரு தாம்பிரத் தகடுகளின் இடையில் வைத்தால் உண்மையான ருத்திராக்கம் என்றால் அது நன்றாக சுழலும்.போலி என்றால் சுற்றாது.ஏனெனில் ருத்திராக்கத்தில் இருக்கும் மின்காந்த சக்தி இப்படி சுழலச் செய்கிறது.
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 3. தயாளன் says:

  ஐயா,

  நீண்ட நாட்களாக உங்கள் தளத்தை அவ்வபோது வலம் வருகிறேன்…”மனம் அன்பில் நிலைக்கிறது”
  எல்லோரும் நலமாய் வாழ தங்களின் பணி தொடர.. வாழ்த்துக்கள்
  நன்றியுடன்..
  தயாளன்

 4. manoharan says:

  Dear சாமீ அழகப்பன்,
  Pl write mahalakshmi ANJANAM .HOW TO PRAPARATION.MATERIAL & MANTHRAM.
  RULES.
  I WILL WAITING YOURS REPLY.

  THANKS&REGARDS,
  MANOHARAN

  • machamuni says:

   அன்பு மிக்க திரு மனோகரன் அவர்களே உங்களுக்கான பதில் இப்போது பதிவிடப்படும் ஒரு மஹா மூலிகை நத்தை சூரி என்ற தொடர் பதிவில் வர இருக்கிறது தொடர்ந்து பார்த்து வருக!!!!!
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

   • manoharan says:

    Dear சாமீ அழகப்பன்,

    மிக்க நன்றி.

    i will waiting நத்தை சூரி lesson.

    எல்லோரும் நலமாய் வாழ தங்களின் பணி தொடர.. வாழ்த்துக்கள்
    நன்றியுடன்..
    thanks,
    manoharan.R

    • machamuni says:

     அன்பு மிக்க திரு மனோகரன் அவர்களே,
     கருத்துரைக்கு மிக்க நன்றி !!!!!
     மிக்க நன்றி
     என்றென்றும் பேரன்பினால்
     சாமீ அழகப்பன்

 5. MANOHARAN.R says:

  Dear சாமீ அழகப்பன்,
  Pl write mahalakshmi ANJANAM .HOW TO PRAPARATION.MATERIAL & MANTHRAM.
  RULES.
  I WILL WAITING YOURS REPLY.

  THANKS&REGARDS,
  MANOHARAN
  9047895133
  8883772216

  • machamuni says:

   அன்பு மிக்க திரு மனோகரன் அவர்களே,
   கருத்துரைக்கு மிக்க நன்றி !!!!!
   விரைவில் இது போன்ற விடயங்களுக்கு வருவோம் . கொஞ்சம் பொறுமை காக்கவும்.கல்வி , செல்வம் , வீரம் ஆகிய அனைத்தும் வேண்டுமல்லவா???? சகல லோக வசிய மை இந்த விடயத்துக்கு உதவும்.
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 6. Ramachandran says:

  அய்யா

  கருடன் கிழங்கு எண்ணெய்

  சேங்கொட்டை நெய்

  இடி வல்லாதி

  ஆகியவற்றை உபயோகிப்பது எபபடி ?–
  Regards

  Ramachandran

  • machamuni says:

   அன்பு மிக்க திரு ராமச்சந்திரன் அவர்களே,
   கருத்துரைக்கு மிக்க நன்றி!!!!
   இவையெல்லாம் கடுமையான மருந்துகள் . தேர்ந்த மருத்துவரால் மட்டுமே கையாளப்பட வேண்டியவை.நீங்கள் சித்த மருத்துவராக இருந்தால் , உங்களுக்கே தெரிந்திருக்கும். சாதாரண நபராக இருந்தால் நம்மிடம் கேட்கவே கேட்காதீர்கள்.
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 7. tharani says:

  மதிற்பிற்குரிய ஐயா,

  மரபணு சார்ந்த முடி பிரச்சனைகளை தீர்க்க முடியுமா ? என் அம்மா,பாட்டிக்கு முடி மிகவும் கம்மி. என் 18 வயது முதல் முடி கொட்ட துவங்கியது இப்போது 29 வயது.

  பிறந்த முதல் உள்ள ஏர் நெற்றியில் புதிதாக முடி முளைக்க வெயப்பது சாத்தியமா ?

  என்னை போல் என் பெண் குழந்தைக்கும் ஏர் நெற்றி வழுக்கை உள்ளது.

  எனக்கு 11 மாத குழந்தை உள்ளது. பால் ஊட்டுவதால் கர்ப்பம் தரித்த முதலே எந்த ஆங்கில மருந்தும் சாப்பிட வில்லை.

  குரு அருளை நாடி,

  தாரணி.

  • machamuni says:

   அன்புள்ள திரு தாரணி அவர்களே,
   கருத்துரைக்கு மிக்க நன்றி,
   இது மரபணு சார்ந்த பிரச்சினை அல்ல.பரம்பரையில் வரும் உருவ ஒற்றுமை கடத்துதல்.உங்கள் குழந்தை உங்களைப் போல இல்லை என்றால்தான் பிரச்சினை.உங்களைப் போல இருந்தால் பிரச்சினை ஏதும் இல்லை.தலைமுடி சிறு நீரகம் சம்பந்தப்பட்டது.சிறு நீரகம் வலுவாக ஆனால் யாருக்கும் தலைமுடி முளைக்கும்.ஆமாம் ஆங்கில மருந்துகளை (விஷங்களை ) சாப்பிடவில்லை என்று மிக வருத்தப்பட்டு சொல்லியிருக்கிறீர்களே . அவை விஷங்கள் தவிர்ப்பது மிக மிக நல்லது .
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்.

 8. ravichandran says:

  நன்றி சாமிஅழகப்பன்அவர்களே.அழிந்து கொண்டு இருக்கும்மூலிகை வைத்தியத்தையும்,நம்மைச்சுற்றியே இருக்கும் அருமை மூலிகைகளையும் ,அவற்றின் பயன்களையும் பட்டியல் இட்டுக் காட்டியமைக்கு நன்றி நன்றி.தயவுசெய்து மூலிகைகளின் படங்களை பதிவு செய்யுங்கள்.மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

  • machamuni says:

   அன்புள்ள திரு ஆறுமுகம் அவர்களே நன்றி ,
   ஏற்கெனவே முடிந்த வரை மூலிகைகளின் படங்களை வெளியிட்டே வருகிறோம்.இனிமேலும் உங்கள் வேண்டு கோள் ஏற்கப்பட்டு படங்கள் வெளி வரும் .
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

− 4 = 5