சந்தான கரணி ( சதையை ஒட்டி காயத்தை உடனே ஆற்றும் அரிய மூலிகை )

April 1, 2012 by: machamuni

இந்தப் பதிவில் கம்ப ராமாயணத்தில் கூறப்பட்டுள்ள சந்தான கரணி என்னும் மூலிகையைப் பற்றிய பதிவே இது.

சஞ்சீவி வனம்

வால்மீகி ராமாயணத்தில் போர்க்காண்டத்தில் ராமனும்,அவரது தம்பி இலக்குவனும் நாக பாசத்தால் கட்டுண்டு வீழ்ந்திருக்கையில் அவர்களை,நாகபாசக் கட்டிலிருந்து விடுவிக்க இராமனுடைய படையில் இருந்த பலர் பலவிதமான ஆலோசனைகளை சொல்லிய வண்ணம் உள்ளனர்.அப்போது சுக்ரீவனுடைய மாமனான சுஷேணன் என்பவன் “தேவாசுர யுத்தத்தில் முன்பு தேவர்களுக்கு இங்ஙணம் மரணம் நிகழ்ந்த போது, தேவ குருவான பிருகஸ்பதி ஔஷதாதிகளைக் (விசால்யகரணி, சாவர்ண்ய கரணி, சஞ்சீவகரணி , ஸந்தான கரணி) கொண்டு உயிர்ப்பித்தார்.ஆதலால் அந்த ஔஷதங்கள் சந்திரம், த்ரோணம் என்ற மலைகளில் இருக்கும்,அந்த ஔஷதங்களை அனுமன் கொண்டு வரட்டும்.“என்று சொல்வார்.

அதையே கம்ப ராமாயணத்தில் அனுமனுக்கு அங்கதன் “அனுமனே சில மூலிகைகளை சஞ்சீவி மலையில் இருந்து கொண்டு வா!முதலாவது அமிர்த சஞ்சீவி. இது மாண்டவர்களை உயிர்ப்பிக்கும் தன்மை உடையது.அடுத்தது சந்தான கரணி. போரில்- விபத்தில் காய முற்றுச் சேத மடைந்த உடல் உறுப்புகளை ஒட்டுவித்துச் சேர்ப்பது.முற்றும் அழிந்தபின் பழையபடி உருவத்தைத் தருவது சமனி கரணி.உடம்பிற்குள் புகுந்துள்ள ஆயுதத் துகள் களை அப்புறப்படுத்தக்கூடியது சல்லிய கரணி.“என்று கூறுவதாக காட்சி அமைக்கப்பட்டு இருக்கும்.

இப்படி அனுமார் கொண்டு வந்து, திரும்ப தமிழ் நாட்டின் வழியே கொண்டு வரும்போது விழுந்த துண்டுகள்தான் பல மூலிகைகள் உள்ள சஞ்சீவி மலைகள் என்று அழைக்கப்படுகின்றன என்று செவி வழிக் கதைகள் கூறுகின்றன.இவை மேற்கு தொடர்ச்சி மலையில் பல இடங்களில் காணப்படுகின்றன.பதிவின் மேல் பகுதியில் உள்ள படம் சதுரகிரியில் உள்ள முலிகைகள் அடர்ந்துள்ள சஞ்சீவி வனம் என்பதாகும்.

அதற்கான கம்ப ராமாயண முழுப் பாடல் நினைவுக்கு வரவில்லை. அதில் ஒரு வரி, நமக்குத் தேவையான வரி மட்டும் ஞாபகத்தில் உள்ளது.அது“எலும்புகள் சந்துர புல்லுவதொன்று “.

அதாவது சந்தான கரணி என்ற மூலிகை போரில்- விபத்தில் காய முற்றுச் சேத மடைந்த உடல் உறுப்புகளை (எலும்பையும் சேர்த்து)ஒட்டுவித்துச் சேர்ப்பது என்பதே இதன் பொருள் .

அந்த சந்தான கரணி என்ற மூலிகைப் பொடியை ஒரு ரீபில் இல்லாத பேனாவில் அடைத்து திரு சதுரகிரி ஹெர்பல்ஸ் கண்ணன், அனைவரின் உபயோகத்திற்காக கொடுத்து வருகிறார்.அவர் பொருளை அதிகம் விரும்பாத நபர் .அந்தப் பேனாவின் படம்

இந்தப் பொடியை இரத்த உறைவுப் பொடி என்ற பெயரில் அவர் சந்தைப் படுத்தி வருகிறார்.இந்த பொடியை இரத்த உறையாத தன்மை உள்ள ஹீமோபிலியா என்ற வியாதி உள்ளவர்கள் பயன் படுத்திப் பார்த்து நல்ல பலன் கிடைத்துள்ளது.

பொருளில்லாத பலருக்கு இலவசமாகவே வைத்தியம் பார்த்து அனுப்புவார்.நான் எழுதும் கட்டுரைகளைக் கூட அவர் பார்க்கும் அளவுக்கு வசதி வாய்ப்புக்கள் இல்லாதவர்.அவரது மூலிகைப் பொருட்கள் பல தரமானதாக இருந்தாலும்,அபூர்வமான மூலிகைப் பொருட்களால் செய்யப்பட்டு இருந்தாலும், வியாபார ரீதியாக சிந்திக்கத் தெரியாத நபராக இருப்பதால் அவரிடம் இந்தப் பொருட்களை வாங்கிச் சென்று மேல்விலை வைத்து விற்பதனால் பலர் பணக்காரர்களாக ஆகிக் கொண்டிருக்கிறார்கள்.

நமது வலை வாசக அன்பர்களுக்கு இடைத்தரகு இல்லாமல் மிக,மிக குறைந்த விலைக்கு கிடைக்கட்டும் என்ற உயரிய நோக்கத்தில்தான் இது போன்ற பல மூலிகைகளை உங்களுக்கு அறிமுகம் செய்கிறேன். மேலும் திரு கண்ணன் அவருக்கு ஒரு நாளில் கிடைக்கும் குறிப்பிட்ட வரும்படியை சதுரகிரி அன்னதானத்திற்கு அரிசி வாங்கிக் கொடுக்க செலவிட்டு வருகிறார்.இத்தனை தயாள குணமும் அவரது கள்ளம் கபடமற்ற தன்மையும் என்னை அவரிடம் அன்பு கொள்ள வைத்தது.மற்றபடி இதில் எந்த வியாபார நோக்கமும் இல்லை என்பதை தெளிவாக தெரிவித்துக் கொள்கிறேன்.

அவரது அலைபேசி எண் ஏற்கெனவே வெளிவந்த பதிவான ஆகாச கருடன் பற்றிய பதிவில் உள்ளது. அந்த பதிவின் இணைப்பு இதோ

http://machamuni.com/?p=442

மேலும் அவரது தொடர்பு எண்ணை நான் வலையில் தெரிவித்து இருப்பது வாசகர்களின் நன்மைக்காகவே.அவரிடம் என் அலைபேசி எண்ணைக் கேட்க வேண்டாம். விரைவில் எனது அலைபேசி எண் (குறிப்பிட்ட நேரத்தில் பேசுவதற்காக மட்டும்) விரைவில் வெளியிடப்படும்.அவசியமான சந்தேகங்களை மட்டும் கேட்டு தெளிந்து கொள்ளுங்கள்.அந்த நேரம் மற்ற வாசகர்களும் தொடர்பு கொள்ள முயற்சிப்பார்கள் என்பதால் கேள்விகளை சிக்கனமாக குறித்து வைத்து கேட்கவும் .

இதை அப்படியே ஹோமியோ முறையில் மருந்தாக்கி உள்ளுக்கும் கொடுத்து வருகிறார் எனது சீடரான திரு தமிழ வேள் அவர்கள்.அந்த மருந்து ஹீமோபிலியா என்ற வியாதி உள்ளவர்களுக்கு நல்ல பலன் அளித்து குணமாக்கியுள்ளது.

எனது சீடர் தமிழ வேள் பற்றிய பதிவு பழைய எனது வலைப்பூவில் உள்ளதால் (அதில் உள்ள அனைத்து இடுகைகளையும் எனது வலைத் தளத்தில் இணைக்கவில்லை )_ புதிய வாசகர்களுக்கு தெரியும் முகமாக தமிழவேள் பற்றி வெளியான அந்த வலைப்பூ இணைப்பை இங்கே கொடுத்துள்ளேன் ஹீமோபிலியா என்ற வியாதி உள்ளவர்களுக்காக.

http://machamuni.blogspot.in/2011/10/2.html

கீழ்க் கண்ட ஒளிக் காட்சி இணைப்பில் தோன்றுபவர் திரு ரவிக் குமார். இவர் தேனீயில் இருக்கிறார். இவர் சதுர கிரி ஹெர்பல்ஸ் கண்ணனிடம் மூலிகைகளை வாங்கி சந்தைப் படுத்துபவர்.

சந்தான கரணி என்ற மூலிகையின் செயல்பாடு பற்றிய யூ டியூப் ஒலிக்காட்சி இணைப்பு.

santhana karani

மேலும் இந்த மூலிகை வெட்டுக் காயங்களுக்கும், தீச்சுட்ட புண்களுக்கும்,சர்க்கரை வியாதியில் வரும் புண்களுக்கும்,சர்க்கரை வியாதியஸ்தருக்கு ஏற்படும் காயங்களுக்கும்,படுக்கைப் புண்களுக்கும், சைலன்சர் சுட்ட புண்ணுக்கும், ராஜ பிளவைக்கும் உபயோகிக்கலாம். புண்ணில் போட்டவுடன் சற்று எரிச்சலுடன் குணமளிக்க ஆரம்பித்துவிடும்.பல மாதங்களாக ஆறாத புண்களையும் இதே மூலிகை குணமளித்துள்ளது.

இதைவிட சக்தி குறைந்த மூலிகைகள் பல உள்ளன.அவையாவன கிரந்தி நாயகம், சிறுகண் பீழை, சதையொட்டி,தாத்தாச் செடி என்றழைக்கப்படும் கிணற்றுப் பாசான்,வெள்ளைக் கரிசலாங் கண்ணி, குப்பை மேனி ,சிறு செருப்படை,பொடுதலை ஆகியனவாகும்.

39 responses to “சந்தான கரணி ( சதையை ஒட்டி காயத்தை உடனே ஆற்றும் அரிய மூலிகை )”

 1. shareef says:

  wow super ji

  மூலிகையில் தான் எத்தனை
  ஆற்றலை வைத்து இறைவன்
  படைத்து இருக்கிறான்

  நன்றி ஜி

  • machamuni says:

   கருத்துரைக்கு நன்றி திரு ஷெரீஃப் அவர்களே,
   இன்னும் பல மூலிகை அற்புதங்களை இறைவன் அருளினால் வெளிப்படுத்தலாம் எனக் கருதி உள்ளேன்.இறைவன் எனக்கு அருட் கருணை புரிவானாக!!!!
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 2. Srikkanth says:

  Dear Alagappan sir – Another interesting article on healing for injuries. It is worth studying.
  I have the following doubts:
  1. Can we cure completely torn Ligament in the knee? Ligament is the place where there is no blood flow and hence the re-construction is not possible as per allopathy, they only prefer for operation. Is there any medicine or cure available in siddha?
  2. சந்தான கரணி – can this be used for bigger damages like hands getting cut into pieces. Will it help in joining them?

  Regards,
  Srikkanth S

  • machamuni says:

   ஸ்ரீகாந்த் அவர்களே நீங்கள் உங்கள் தாயாருக்காக இதை கேட்கிறீர்கள் என்பது தெரிகிறது.அவர்கள் இது போன்ற பல மூலிகைகளால் சிகிச்சை செய்ய வேண்டியவர்கள்.அல்லோபதி வைத்தியத்தில் பல கேடான விடயங்கள் செய்த பின்னர் அவர்கள் நமது உடலின் குணமாக்கும் தன்மையையும் கெடுத்து வைத்துவிடுகிறார்கள்.எனவேதான் அப்படி வரும் பிணியாளர்களுக்கு உடலை நலமாக்குவதோ,குணமாக்குவதோ தாமதம் ஆகிறது.
   ஆனால் இதை செய்வதற்கு முன்னரே நமது சித்த வைத்திய முறைகளில் சிகிச்சை அளித்தால் மிக வேகமாக குணம் கிடைக்கும்.எனது தந்தையாருக்கு கழுத்தில் உள்ள காரை எலும்பு(காலர் போன்) உடைந்துவிட்டது.அதற்கு சாதாரண முட்டைப் பற்றில் மூன்று நாட்களில் முழு குணம் கிடைத்தது.ஆனால் என் தந்தையாருக்கும்,என் குடும்பத்தினருக்கும் இவ்வளவு சீக்கிரம் இது எப்படி குணமாகும் என்ற சந்தேகத்தில் எலும்பை படம் பிடித்து எலும்பு சிகிச்சை நிபுணரிடம்???? கொண்டு போய் காண்பிக்க,அவர் சொன்னதோ பெரும் கூத்து.உங்களுக்கு எலும்பு உடையவேயில்லை இது வேறொருவரின் நிழற் படம்,என்று சொல்லி இவ்வளவு சீக்கிரம் எலும்பு வயதானவர்களுக்கு சேர வாய்ப்பேயில்லை.ஆனால் உங்களுக்கு இப்போது நன்றாக உள்ளது என்று கூறியவுடன் நிம்மதி அடைந்தனர்.வெறும் கண்ணாலேயே எலும்பு உடைந்ததைப் பார்த்த என் தந்தைக்கு மட்டும் இது பெறும் அற்புதமாகவே தெரிந்தது.இதைவிட இன்னும் பல நல்ல மூலிகைகள் உள்ளன.கடலாரை,பிரண்டை(வஜ்ஜிர வல்லி) போன்ற மூலிகைகளை கையாண்டால் நிச்சயம் குணம் கிடைக்கும்.

   • Srikkanth says:

    Dear Sir –

    The live examples which you give inspires a lot and helps in motivating people.

    I have another doubt, recently i had a ligament tear in my left knee. I did an MRI scan and the allopathy doctor has told that the ligament is completely torn. He suggested me to do an operation, if not i will not be able to run or play games any more.

    But i didnt take any surgery or medication from them. I just tied the knee with grip band. Now it is more than 2 months. I am able to run slowly and to walk better now. Can you please suggest me a best treatment for this.

    Allopathy doctors say that there is very little or no blood flow in the ligament of our knee, so it cant get cured once it is damaged. Can you please pour your thoughts.

    Thanks & Regards,
    Srikkanth S

    • machamuni says:

     அத்திப்பால் ஒன்றே இந்தச் சவ்வு கிழிந்ததை ஒட்ட வல்லது.உங்கள் ஊர் அருகே அத்தி மரம் இருந்தால்,காலை 6 மணிக்கு சென்று அந்த அத்தி மரத்தில் தட்டினால் பால் வரும் அந்தப் பாலை இந்த கிழிந்த இடது முழங்காலில் நன்றாகக் குளிரத் தடவிவிடவும்.இது போல மூன்று நாட்கள் முதல் 10 நாட்கள் வரை செய்ய எந்த கிழிந்த சவ்வும் ஒட்டும்.மேலும் அத்தி என்றால் யானை என்று பொருள்.யானையைப் போல பலமும் கொடுப்பதனால் இதற்கு இந்தப் பெயர்.சீமை அத்திப் பழம் என்று கடையில் கிடைக்கும்,இதை வாங்கி சூடான காய்ச்சிய பாலில் பிய்த்துப் போட்டு 10 நிமிடம் கழித்து சீமை அத்திப் பழத்தை வாயில் போட்டு, வாயை மூடியபடி நன்றாக மென்று சாப்பிட்ட பின் அந்தப் பாலை சுவைத்து எச்சிலுடன் நன்றாக கலந்து சாப்பிட்டுவிடவும்.இத்துடன் வெளியிலும் மேற்சொன்னபடி அத்திப்பால் அடித்து வர சுத்தமாக குணம் கிடைக்கும்.முட்டைப் பற்றிடத் தெரிந்தவர்கள் யாரேனும் இருந்தால் மூன்று முறை முட்டைப் பற்றிட நல்ல குணம் கிடைக்கும்.அல்லோபதி மருத்துவர்களுக்கு இவை பற்றி எல்லாம் ஒன்றும் தெரியாது.அவர்களுக்கு தெரிந்ததெல்லாம் அறுவை சிகிச்சை மட்டும்தான்.இது போன்ற அற்புத விடயங்கள் எல்லாம் உணராதவர்கள்.தெய்வீகமான சித்த மருத்துவம் இறந்தவரையே பிழைக்க வைக்கும் வன்மை படைத்தது.விரைவில் மற்றொரு அற்புத மூலிகையுடன் உங்களை தொடர்பு கொள்கின்றேன்.
     மிக்க நன்றி
     என்றென்றும் பேரன்பினால்
     சாமீ அழகப்பன்

     • Srikkanth says:

      Dear Sir –

      Thanks a lot. I will try this and let you know the improvements. Eagerly waiting for your next post 🙂

      Regards,
      Srikkanth S

     • saravanan says:

      sathuragiri herbels kannan avargalin books or phone no herbels chart or please give his address and phone no

     • machamuni says:

      அன்புள்ள திரு சரவணன் அவர்களே,
      கருத்துரைக்கு மிக்க நன்றி,
      முதலில் தமிழில் எழுதுங்கள். பொதுவாக தமிழில் கருத்துரை எழுதாத நபர்கள் மீது எமக்கு சரியான மரியாதை ஏற்படுவதில்லை.நமது மொழி தமிழ்.நமது தமிழ் நம் உயிர்.நாமே அதை உபயோகிக்காவிட்டால் தமிழ் எப்படி வாழும்.பழக்கத்தில் உள்ள மொழிதான் வாழும்.நாம் எழுதியதை தமிழை அறிந்ததால் நீங்கள் படித்தீர்கள். முடியாது.ஆங்கிலத்தில் கேள்வி கேட்டால் பதிலளிக்கக் கூடாது என்று முடிவு எடுத்துள்ளோம்.இனி ஆங்கிலத்தில் கேள்விகள் கேட்டால் அது வெளியிடப்படவும் மாட்டாது என்பதை மிகப் பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
      தமிழில் எழுதாதற்கு காரணமாக சொல்லிக் கொண்டே இருக்காதீர்கள்.“ தமிழ் எங்கள் உயிருக்கு நேர்” “ சாகும் வரை தமிழ் பயின்று சாக வேண்டும் .என் சாம்பலிலும் தமிழ் மணந்து வேக வேண்டும்” என்ற பாரதிதாசனின் வார்த்தைகள் எமக்கு உயிரான வார்த்தைகள்.எமது வலைத் தளத்தில் தமிழே முக்கியமானதாக இருக்க வேண்டும்.
      அந்தந்த பதிவிலேயே சதுரகிரி ஹெர்பல்ஸ் கண்ணன் அவர்கள் அலைபேசி எண் மற்றும் முகவரி ஏற்கெனவே எழுதி இருக்கிறேனே பாருங்கள்.எல்லா கட்டுரைகளும் படிக்காமல் கேள்விகளை கேட்காதீர்கள்.
      மிக்க நன்றி
      என்றென்றும் பேரன்பினால்
      சாமீ அழகப்பன்

 3. shareef says:

  சாமி ஜி

  உங்கள் மூலிகை
  பற்றிய ஞானம் வியக்க
  வைக்கிறது

  • machamuni says:

   கருத்துரைக்கு நன்றி திரு ஷெரீஃப் அவர்களே,
   எல்லாம் வல்ல இறைவன் அருட் கருணை இத்தனை விடயங்களை தெரிய வைத்தது!!!!
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 4. vijay says:

  i am 45 yrs old. is there any mooligai for memory power.

  • machamuni says:

   கருத்துரைக்கு நன்றி திரு விஜய் அவர்களே,
   பல மூலிகைகள் ஞாபக சக்திக்கு என உள்ளன.பொதுவாக கற்பத்திற்கு உதவும் அத்தனை மூலிகைகளும் ஞாபக சக்திக்கு உதவும்.குறிப்பாக வல்லாரை,பிரம்மி,வெள்ளைக் கரிசலாங்கண்ணி,முசுமுசுக்கை,தூதுவளை ஆகியவை ஞாபக சக்திக்கும் ஞானத்திற்கும் உதவும் மூலிகைகள்.
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 5. Sathish says:

  Hi sir,
  Your article really so helpful and proud to be indian and tamilan. I need a help sir,
  What is the herbal medicine for dandruff

  • machamuni says:

   கருத்துரைக்கு நன்றி திரு சதீஷ் அவர்களே,
   எல்லாம் வல்ல இறைவன் அருட் கருணை இத்தனை விடயங்களை தெரிய வைத்தது!!!!dandruff என்ற பொடுகுத் தொல்லைக்கு பொடுதலை என்ற மூலிகையே மிகவும் உகந்தது.எனவேதான் அதற்கு பொடுதலை என்றே பெயர் வந்தது.மலையப்பசாமி வைத்தியசாலை பொடுதலைத் தைலம் கடையில் கிடைத்தால் வாங்கித் தேய்த்து வரவும்.காய்ந்த (dry) உணவுகளைத் தவிர்க்கவும்.எந்த உணவைச் சாப்பிட்டால் தண்ணீர் தாகம் அதிகம் எடுக்கிறதோ அது காய்ந்த உணவு.உதாரணம் தோசை.
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

   • Really thank you very much sir, i not expected this much soon reply, your service very great and helpful to us. but will that poduthalai thailam available on all siddha shop..

    • machamuni says:

     கருத்துரைக்கு நன்றி திரு சதீஷ் அவர்களே,
     மலையப்பசாமி வைத்தியசாலை தயாரிக்கும் பொடுதலைத் தைலம்,மிகவும் சிறந்தது முடிந்தால் அது எந்தக் கடையில் கிடைக்கும் எனத் தெரிந்து வாங்கி உபயோகிக்கவும்.மலையப்பசாமி வைத்தியசாலை பழனியில் ரெயில்வே பீடர் ரோட்டில் உள்ளது.சென்றும் வாங்கிக் கொள்ளலாம்.
     மிக்க நன்றி
     என்றென்றும் பேரன்பினால்
     சாமீ அழகப்பன்

     • Suresh says:

      Ji..vanakam nan spinal bone L5 dislocation, disc prolapse al avathi padukiren.i believe remedy is in your herbs. Pls help me . Thank u

     • machamuni says:

      அன்புள்ள திரு சுரேஷ் அவர்களே,
      உங்களது கருத்துரைக்கு நன்றி,
      உங்கள் பிரச்சினைக்கு நீங்கள் நாட வேண்டிய மின்னஞ்சல் முகவரி
      திரு அமீர் சுல்தான்.
      மின்னஞ்சல் :-
      machamunimooligaiyagam@gmail.com
      அலைபேசி எண் :- 9597239953
      அங்கு தேவைப்படும் ஆலோசனைகளும் மருந்துகளும் தரப்படும்.
      மிக்க நன்றி
      என்றென்றும் பேரன்பினால்
      சாமீ அழகப்பன்

 6. shareef says:

  பொடுதலை பொடியை சாப்பிடலாமா
  அல்லது தலைக்கு தேய்த்து குளிக்கலாமா ஜி

  • machamuni says:

   கருத்துரைக்கு நன்றி திரு ஷெரீஃப் அவர்களே,
   பொடுதலைப் பொடியை,உள்ளுக்கு சாப்பிடவும் செய்யலாம்,பொடுதலையை கீரையாக கடைந்தும்,துவையலாக அரைத்தும் சாப்பிடலாம்.பொடுதலைத் தைலத்தை மட்டும் தலைக்கு தேய்க்கலாம்.
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

  • machamuni says:

   கருத்துரைக்கு நன்றி திரு ஷெரீஃப் அவர்களே,
   பட ஒளி இணைப்புக் காட்சியைப் பார்த்தேன் இது போன்ற பல விடயங்களை பல சமயம் தேடி சிலவற்றை கண்டிருக்கிறோம்.அதில் சிலவற்றை அவ்வப்போது உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 7. mohanvels says:

  valka valmudan

  • machamuni says:

   கருத்துரைக்கு நன்றி திரு மோஹன் வேல் அவர்களே,
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 8. அஜய் says:

  ஐயா, என் கால்கள் போலியோவால் 2 வயதில் பாதிப்பு அடைந்தது.கால்கள் சூம்பிபோய் உள்ளது .கால்கள் சக்தி பெற மூலிகையால் முடியுமா?????

  • machamuni says:

   அன்பு மிக்க திரு அஜய் அவர்களே,
   கருத்துரைக்கு மிக்க நன்றி !!!!!
   மூலிகைகளால் முடியாது . ஆனால் இதற்கென்று முப்பு குருவால் தயாரிக்கப்பட்ட மருந்துகள் வேலை செய்யும்.எம் குருநாதர் வெங்கடாசலம் ஐயா அவர்களை அணுகுங்கள் .
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 9. madhu says:

  ungal thalam miga arumaiyaka ullathu melum neengal enn mulihai pattri athan seyal murai pattrium neradi class nadattha kudathu ?

  ethu pol sethal ennum muligai kurittha vilippu unarvu valarum thane

  • machamuni says:

   அன்பு மிக்க திரு மது அவர்களே,
   கருத்துரைக்கு மிக்க நன்றி !!!!!
   இப்போது செய்து கொண்டிருப்பது அதுதானே .என்னால் நேரடியாக செய்ய முடியாது என்பதால்தான் இந்த தளம். இது போல் செத்தால் ///sethal/// என்று எழுதியிருக்கின்றீர்கள். நான் சாக விரும்பாத சாவை மீறிய சாமீ அழகப்பன் .
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 10. Sridhar says:

  அய்யா இந்த பதிவு மிக அற்புதமானது. சந்தானகரணி போன்ற அற்புத மூலிகைகளை விற்று வரும் திரு.கண்ணன் அவர்களின் சேவை மகத்தானது. இதைப் போன்ற அரிய தகவல்களை தொகுத்து தரும் தங்கள் பணி மேலும் தொடர எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறோம்.

  • machamuni says:

   அன்பு மிக்க திரு ஸ்ரீதர் அவர்களே,
   கருத்துரைக்கு மிக்க நன்றி !!!!!
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 11. saravanan says:

  very very useful tips

  • machamuni says:

   அன்புள்ள திரு சரவணன் அவர்களே,
   கருத்துரைக்கு மிக்க நன்றி,
   முதலில் தமிழில் எழுதுங்கள். பொதுவாக தமிழில் கருத்துரை எழுதாத நபர்கள் மீது எமக்கு சரியான மரியாதை ஏற்படுவதில்லை.நமது மொழி தமிழ்.நமது தமிழ் நம் உயிர்.நாமே அதை உபயோகிக்காவிட்டால் தமிழ் எப்படி வாழும்.பழக்கத்தில் உள்ள மொழிதான் வாழும்.நாம் எழுதியதை தமிழை அறிந்ததால் நீங்கள் படித்தீர்கள். முடியாது.ஆங்கிலத்தில் கேள்வி கேட்டால் பதிலளிக்கக் கூடாது என்று முடிவு எடுத்துள்ளோம்.இனி ஆங்கிலத்தில் கேள்விகள் கேட்டால் அது வெளியிடப்படவும் மாட்டாது என்பதை மிகப் பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

   • ravichandran says:

    உங்கள் தமிழ்பற்றுக்கு தலை வணங்குகிறேன் சாமி அழகப்பன்அவர்களே.இந்த சந்தானகரணி வைத்தியத்தை 40 வருடங்களுக்கு முன் ஓரு வைத்தியர்செய்வதைப் பார்த்து இந்த மூலிகை விதையை கொடுங்கள் ஏக்கர் கணக்கில் பயிர் செய்து அனைவர்க்கும் இலவசமாக கொடுப்போம் என்று சொன்னேன் சரி என்றுசொன்னவர் வரவே இல்லை .தங்களின் சநதானகரணி பற்றிய பதிவு கண்டேன் .நாற்றோ,விதையோ கிடைத்தால் பயிர் செய்து அனைவர்க்கும் இலவசமாக தர தயாராக இருக்கிறேன்.
    தங்கள் சேவைக்கு நன்றி.பல்லாண்டு வாழ வாழ்த்தும்
    ரவிச்சந்திரன்.

 12. S. Giri Kumar says:

  அன்பார்ந்த அய்யா

  வணக்கம் . என் உறவினர் ஒருவர் momo என சொல்லப்படும் அபூர்வ நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார் .இந்நோய்க்கு சித்த மருத்துவத்தில் சிகிச்சை உள்ளதா என அறிந்து கொள்ள ஆவலாய் உள்ளேன்.

  அலைபேசி எண் > 8807439169

  மின்னஞ்சல் :rdpgiri @gmail .com

  என்றும் நட்புடன்

  கிரி

  • machamuni says:

   அன்புள்ள திரு க.சுந்தரவடிவேல் அவர்களே ,
   கருத்துரைக்கு மிக்க நன்றி,
   உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு எமது அலைபேசி எண் அனுப்பப்பட்டுள்ளது.தொடர்பு கொள்ளவும்.
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 13. vignesh says:

  ayya santhana karaniyin botanical name koora mudiyuma..

  • machamuni says:

   அன்புள்ள திரு விக்னேஷ் அவர்களே,
   உங்களது கருத்துரைக்கு நன்றி,
   முதலில் தமிழில் எழுதுங்கள்.பொதுவாக தமிழில் எழுதாதவர்கள் மேல் எமக்கு மரியாதை ஏற்படுவதில்லை.
   இதைவிட எம்மிடம் மூலிகைகளின் பெயர்களை (நம் சித்தர்கள் முயற்சியில் தெரிவித்த மூலிகைகளின் பெயர்கள் ) அயல்நாட்டுப் பெயர்களில் தெரிவிப்பது , நம் சொத்துக்களை நாமே அடுத்தவர்களுக்கு தருவது போல ஆகும். எனவே நாமாகத் தெரிவிக்காத ( இது போன்ற ) விடயங்களை கேட்காதீர்கள் . இதை இணையத்தில் தேடி தெரிந்து கொள்ளுங்கள் .
   இப்படிக்கு
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 14. jayaraj says:

  அய்யா உங்கள் பணி கண்டு வியந்து கண் கலங்குகிறது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

6 + 2 =