சித்தர்களின் விஞ்ஞானம்(பாகம் 47)வழுக்கைத் தலையில் தலைமுடி வளர

April 30, 2012 by: machamuni

 

இந்தக் கட்டுரை ஒரு மீள்பதிவு. எனது வலைப்பூவில் ஏற்கெனவே வெளியிடப்பட்டுள்ள கட்டுரையின் மீள்பதிவு.வலைப்பூ அன்பர்களின் வேண்டு கோளுக்கிணங்க சில முக்கியமான கட்டுரைகளை நான் மீண்டும் மீள்பதிவிட இருக்கிறேன்.ஏற்கெனவே படித்தவர்கள் மீண்டும் படிக்கலாம் எனெனில் இவற்றில் பல கூடுதல் தகவல்களும் இருக்கும்.

அன்புள்ள பதிவு வாசகர்களே,

எனது நண்பர் திரு கண்ணன் அவர்கள் பழங்குடியினர் மற்றும் மலையிலுள்ள ஆதி வாசிகள் என்னும் பழங்குடியினர்களுக்கு (பளியர் என்றும் அழைப்பார்கள்) நல்வாழ்வு அளிக்கும் முகமாக அவர்களை வைத்து சதுரகிரி மலையில் வளரும் மூலிகைகளினால் மருந்துகள் தயாரித்து சதுரகிரி ஹெர்பல்ஸ் என்ற பெயரில் சேவை மனப்பான்மையுடன் செய்து, பொது மக்களுக்கு வழங்கி வருகிறார்.

அவரின் அலைபேசி எண்கள்,

+919894912594

+919626418594

அவரது முகவரி:-

பெ.கண்ணன்.

சதுரகிரி ஹெர்பல்ஸ்,

2/147,மங்கம்மாள் கோவில் தெரு,

கான்சாபுரம்,(P-O)

திரு வில்லிபுத்தூர் தாலுகா,

விருதுநகர் மாவட்டம்.

அவர் தயாரித்தளிக்கும் மருந்துகளில் சில கீழே கொடுத்துள்ளேன்.

வழுக்கைத் தலையில் 20 நாட்களில் முடி வளரவும், பெண்களுக்கு முடி கொட்டாமல் பாதுகாக்கவும்:-

 சில மூலிகைகளைக் கலந்து(முதியார் கூந்தல், சவுரி , அழுகண்ணி, தொழுகண்ணி, திரிபலாதி {கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய்} , கரிசலாங்கண்ணி) மூலிகைப் பொடியாக தயாரித்தளிக்கிறார்.

இதனால் அடைபட்ட தலைமுடியின் வேர்க் கால்கள் திறந்து மீண்டும் முடி வளர துவங்குகிறது.ஆறு மாதங்களில் நன்றாக முடி வளர்ந்து தென்படுகிறது.

கீழே கொடுத்துள்ள தலைமுடிப் படம் சிகிச்சையை ஆரம்பிக்கும் முன்னர் உள்ள எனது நண்பரின் தலைமுடி.2011ம் ஆண்டு ஆகஸ்ட் 30 ந்தேதி இருந்த தலை முடி இவ்வளவுதான்.

இப்போதுள்ள எனது நண்பரின் தலைமுடிப் படம் இதோ கீழே கொடுத்துள்ளேன். 2011 ஆண்டு நவம்பர் 20 ம் தேதி நண்பரின் தலை முடி இவ்வளவு வளர்ந்துள்ளது!!!!!!!!

இதனால் ஏற்கெனவே காப்பி,டீ அருந்தியதால் பித்தம் அதிகரித்து தலையில் ஏற்பட்டுள்ள கடும் உஷ்ணமும் தணிக்கப்படுகிறது.இத்துடன் அயப்ருங்க ராஜ கற்பம்,தேனுடன் உண்ண நன்று.இது கரிசலாங்கண்ணி சேர்ந்தது.

முடி வளருவதற்கு தைலங்களும் பல சிறந்த மூலிகைகளைக் கொண்டு மருந்துகள் தயாரித்து சிறப்பு சிகிச்சைகள் அளிக்கிறார்.இதன் காரணமாக உடலின் உள்ளுறுப்புக்கள் பலம் பெருகின்றன. உடலின் ஆரோக்கியம் மேம்படுகின்றது. 

இதற்குக் கொடுக்கும் மருந்துகள் கீழே கொடுத்துள்ளேன்.கீழே கொடுத்துள்ள பொடியை தண்ணீரில் ஊற வைத்து குழைத்து முடி வளர வேண்டிய இடங்களில் இரவில் தடவி காலையில் கழுவிவிட வேண்டும்.இதனை இரண்டு நாட்களுக்கு ஒரு முறை செய்ய வேண்டும்.

சிறுநீரகத்தில் உள்ள வெப்பமே தலைமுடி குறைவிற்குக் காரணம்.ஏனெனில் தலைமுடி, எலும்புகள், எலும்பு மச்சை இவற்றை பார்த்துக் கொள்வது சிறுநீரகமே.ஏற்கெனவே உணவில் உள்ள பல விஷங்களினாலும், உரம் பூச்சி மருந்துகளாலும் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கும் சிறுநீரகம்,  தலைமுடி, எலும்புகள், எலும்பு மச்சை இவற்றை பார்த்துக் கொள்ளும் வேலையை விட்டு விடுவதால் இந்த உடல் உறுப்புக்கள் பாதிக்கப்படுகின்றன.

எனவே அதைச் சரி செய்ய ஒரு மாத்திரை வீதம் முப்பது நாட்களுக்கு சாப்பிட்டு வர வேண்டும்.அப்படி சாப்பிட்டு வர தலைமுடி மட்டுமல்ல சிறுநீரகம்,  தலைமுடி, எலும்புகள், எலும்பு மச்சை ஆகிய அனைத்தும் சரி செய்யப்படும்.சிறு நீரகம் சுத்தமாக கழுவப்பட்டு சிறு குழந்தைக்குள்ள சிறுநீரகம் போல ஆகிவிடும்.சிறுநீரகத்தின் வேலைப்பழுவும் குறையும்.அதனால் எலும்புகளும் எலும்பு மஜ்ஜையும்,எலும்பு மஜ்ஜையினால் உற்பத்தி செய்யப்படும் இரத்தமும் அற்புதமாக சரி செய்யப்படும்.இரத்தம் சரி செய்யப்பட்டால் பல நோய்கள் உடலை அண்டாது.

சிறுநீரகத்தை இன்னும் நன்றாக செயல்பட இத்துடன் கீழ்க்கண்ட இணைப்பையும் பார்க்கவும்.கீழ்க்கணட இணைப்பில் கண்ட விடயங்களை பலர் தாங்கள் எழுதிய கட்டுரை போல FACEBOOK, மற்றும் பல வலைப்பூவிலும் வெளியிட்டுள்ளதை கண்டிருக்கிறேன்.யார் வேண்டுமானாலும் வெளியிடட்டும் அத்துடன் என் வலைப்பூ இணப்பையும் சேர்த்து வெளியிட்டால் மற்றும் பல விடயங்களும் எல்லோருக்கும் போய்ச் சேருமல்லவா???

http://machamuni.blogspot.in/2011/01/8.html

அந்த மாத்திரைகள் கீழே படத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.

பகலில் தலைக்குத் தடவி வர சிறப்பு தைலம்.

இவற்றின் ஒரு மாதத்துக்கு தேவையான மருந்துகளின் மொத்த விலை ரூ 1000/=தபால் செலவு கூரியர் செலவு உட்பட.

அடுத்து ஒரு முக்கிய விஷயத்தோடு அடுத்த பதிவில் சந்திக்கிறேன்.

 மிக்க நன்றி

என்றென்றும் பேரன்பினால்

சாமீ அழகப்பன்

12 responses to “சித்தர்களின் விஞ்ஞானம்(பாகம் 47)வழுக்கைத் தலையில் தலைமுடி வளர”

 1. தயாளன் says:

  ஐயா , இக்கால சூழ்நிலையில் தங்களின் சேவை மிகவும் தேவை.
  சந்தர்பம் கிடைக்கும் போதெல்லாம் படித்துவருகிறேன் .. தங்களை சந்திக்க ஆவலாக உள்ளேன். கடவுளின் கருணையால் இது சாத்தியப்படும் என்று நம்புகிறேன். மிக்க நன்றி

 2. Mahesh Babu says:

  Hi,
  My name is mahesh babu. i have the hair loss problem…i came across your website…Please tell me the procedure to buy this.

  • machamuni says:

   அன்புள்ள திரு மஹேஷ் பாபுஅவர்களே ,
   முதலில் தமிழில் எழுதுங்கள். பொதுவாக தமிழில் கருத்துரை எழுதாத நபர்கள் மீது எமக்கு சரியான மரியாதை ஏற்படுவதில்லை.நமது மொழி தமிழ்.நமது தமிழ் நம் உயிர்.நாமே அதை உபயோகிக்காவிட்டால் தமிழ் எப்படி வாழும்.பழக்கத்தில் உள்ள மொழிதான் வாழும்.நாம் எழுதியதை தமிழை அறிந்ததால் நீங்கள் படித்தீர்கள்.தமிழை ஆழமாக அறிந்து உபயோகிக்க தெரியாவிட்டால் சித்த மருத்துவம் செய்ய இயலாது.சித்த மருத்துவம் அறிய , படிக்க இயலாது.தமிழும் சித்த மருத்துவமும் ஒன்றிணைந்தது.தமிழில் எழுதாதற்கு காரணமாக சொல்லிக் கொண்டே இருக்காதீர்கள்.“ தமிழ் எங்கள் உயிருக்கு நேர்” “ சாகும் வரை தமிழ் பயின்று சாக வேண்டும் .என் சாம்பலிலும் தமிழ் மணந்து வேக வேண்டும்” என்ற பாரதிதாசனின் வார்த்தைகள் எமக்கு உயிரான வார்த்தைகள்.எமது வலைத் தளத்தில் தமிழே முக்கியமானதாக இருக்க வேண்டும்.
   அந்தந்த பதிவிலேயே இது பற்றி எழுதி இருக்கிறேனே உண்மையிலேயே தெரியவில்லையா?????

   • Mahesh Babu says:

    mannikaum, tamil banpaduthamaiku…ingu yevvaru tamil banpaduthuvathu yendru villakaum….naan tamil lil vinavukirean

    • machamuni says:

     அன்புள்ள திரு மஹேஷ் பாபுஅவர்களே ,
     நமது மொழி தமிழ்.நமது தமிழ் நம் உயிர்.நாமே அதை உபயோகிக்காவிட்டால் தமிழ் எப்படி வாழும்.பழக்கத்தில் உள்ள மொழிதான் வாழும்.நாம் எழுதியதை தமிழை அறிந்ததால் நீங்கள் படித்தீர்கள்.தமிழை ஆழமாக அறிந்து உபயோகிக்க தெரியாவிட்டால் சித்த மருத்துவம் செய்ய இயலாது.சித்த மருத்துவம் அறிய , படிக்க இயலாது.தமிழும் சித்த மருத்துவமும் ஒன்றிணைந்தது.எங்கும் தமிழ், எதிலும் தமிழ், என்று எல்லா இடத்திலும் இணையத்திலும் வந்து விட்டது தமிழ் மொழி. நாம் தான் அதை தேடி பயன் படுத்துவது இல்லை. எனவே நாம் தமிழர்கள் இணையத்தில் தமிழை பயன்படுத்துவோம் வாருங்கள். வாழ்க தமிழ் வளர்க தமிழ் இதை சொடுக்கவும் http://www.google.com/transliterate/tamil இதில் நீங்கள் தமிழை எழுதி இதிலிருந்து பிரதி செய்துதான் வேறு ஒரு இடத்தில் பதிவு செய்ய வேண்டும். இதற்கு இணையம் (internet) தேவை. ஆனால் நீங்கள் நேரடியாகவே உங்கள் விசைப்பலகையில் (keyboard) தமிழில் எழுத வேண்டும் என்றால் http://www.google.com/inputtools/windows/index.html இதன் மேல் பகுதியில் டவுன்லோட் (download) என்று இருக்கும்.இதை பதிவிறக்கம் செய்து நிறுவிக்கொண்டால், உங்கள் கணணியின் விசைப்பலகையில் நேரடியாவே தமிழில் எழுதலாம். அதற்கு இணையம் (internet) தேவை இல்லை.ஆனால் உங்கள் கணனியில் நீங்கள் Internet Explorer பாவிக்கின்றவர்களாக இருந்தால். அதில் இந்த தமிழ் எழுத்து வராது அதில் எழுத முடியாது.. நீங்கள் Google Chrome பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள். http://support.google.com/chrome/bin/answer.py?hl=en&answer=95346 இதிலும் ஒபேரா விலும் மட்டும்தான் தமிழை எழுத முடியும்.. நன்றி இதை மறக்காமல் உங்கள் நண்பர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள்.
     எமது தனிப்பட்ட மின்னஞ்சலுக்கு வாருங்கள் . எமது மின்னஞ்சல் முகவரிகள் machamuni.com@gmail.com , sralaghappan007@gmail.com , sameealagappan@gmail.com , இவற்றில் ஏதாவது ஒன்றிற்கு தொடர்பு கொள்ளுங்கள்.
     மிக்க நன்றி
     என்றென்றும் பேரன்பினால்
     சாமீ அழகப்பன்

  • machamuni says:

   அன்புள்ள திரு மஹேஷ் பாபு அவர்களே ,
   கருத்துரைக்கு மிக்க நன்றி,
   ஐயா தயவு செய்து என் பொறுமையைச் சோதிக்காதீர்கள்.தலைமுடி உதிர்வதைத் தடுத்து தலைமுடியை நன்கு வளரச் செய்யத்தான் இந்தப் பதிவையே எழுதி உள்ளேன்.அந்தப் பதிவைப் படித்துவிட்டுத்தான் இந்தக் கேள்விகளைக் கேட்கிறீர்களா????தயவு செய்து சதுரகிரி ஹெர்பல்ஸ் கண்ணன் அவர்களிடம் தொடர்பு கொண்டு வாங்கிக் கொள்ளுங்கள்.உங்களை கும்பிட்டு கேட்டுக் கொள்ளுகிறேன்.
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 3. முகம்மது பாயிஸ்கான் says:

  ஐயா, தங்களின் பணி இனிதே தொடர வாழ்த்துக்கள்.
  எனக்கு வயது 38 ஆகிறது. என்னுடைய தலைமுடி 25 வயது முதலே நரைக்க ஆரம்பித்து தற்போது முழுக்க நரைத்து விட்டது. பலபேர் முன்னிலையில் மிகவும் கூச்சமாக உள்ளது. உங்களிடம் ஏதேனும் தீர்வு உள்ளதா என்று தெரியப்படுத்துமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். மேலும் கடுமையான பொடுகு பிரச்சினையும் உள்ளது. நன்றி ஐயா.

  • machamuni says:

   அன்புள்ள திரு முகம்மது பாயிஸ்கான் அவர்களே ,
   கருத்துரைக்கு மிக்க நன்றி,
   நீங்கள் இதற்கு நாட வேண்டிய இடம் சதுரகிரி ஹெர்பல்ஸ் கண்ணன் அவர்களையே!!!!
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 4. ma;ah/
  ehd; muR mYtyfj;jpy; ntiy bra;fpnwd; jw;brayhf jfpd; gjpit gof;f nehpl;lJ. kpf;f kfpH;r;rp mile;njd.; Vnddpy; rpy fhykhf Vd; ekJ ghuk;ghpa kUj;Jtijj; tpl;L tpl;L khw;W kUe;JfSf;F khwpbfhz;of;fpnwhk; vd;W. ehDk; ,Jehs; tiu FHe;ij nghpw;fhf mnyhgjp rpfpr;ir vLj;Jf;bfhz;oUe;njd; jw;nghJ ,iwtd; mUs; ,Ue;jhy; elg;gJ ele;nj jPUk; vd;W vz;zp rpfpr;iria bjhlutpy;iy. vdJ ez;gh;fSf;Fk; jfsJ jsj;ijg;gw;wp bry;yp tUfpnwd;. vd;d tUj;jk; vd;why; ahUk; ekJ itj;jpa Kiwfis bghpajhf vLj;Jf;bfhs;tjpy;iy vd;gJjhd;. ehd; Mh;tg;gl;L ePfSk; goa[fs; vd;W bjhptpj;jth;fspy; 10y; 2 ngh;Tl goj;jpUg;ghh;fsh vd;W bjhpatpy;iy. MdhYk; vdJ Kaw;rp bjhlUk;. kpf;f kfpH;r;rp ma;ah.

  • machamuni says:

   அன்புள்ள திரு ப்ரியா சுரேந்திரன் அவர்களே ,
   உங்களது கருத்துரைக்கு நன்றி.
   உங்கள் கருத்துரை எம்மால் படிக்க இயலவில்லை .இது என்ன எழுத்து முறை என்று தெரியாததால் , உங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு எமது அலைபேசி எண் அனுப்பப்பட்டுள்ளது.தொடர்பு கொள்ளுங்கள்.
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 5. ராகவேந்திரன் says:

  முதலில் உங்களுக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.நான் பல வகை எண்ணெய் பயன்படுத்தி பார்த்து விட்டேன்.ஆனால் பலனில்லை.இது சரியானதுதானா என்பதை எனக்கு விளக்கவும் .எனது மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  Raviragavendiran@gmail.com

  • machamuni says:

   அன்புள்ள திரு ராகவேந்திரன் அவர்களே,
   உங்களது கருத்துரைக்கு நன்றி ,
   நாம் வியாபாரியல்ல.உங்களை தொடர்பு கொண்டு வாங்கச் சொல்ல. தேவை இருந்தால் பயன்படுத்திப் பார்த்து பலனடையுங்கள்.
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

22 − 19 =