ஒரு மஹா மூலிகை ( நத்தைச் சூரி) பாகம் 3

May 26, 2012 by: machamuni

இன்று காலையில் நமது  சபையைச் சார்ந்த  நண்பர் திரு சங்கர நாராயணன் என்பவர் அலைபேசியில் தொடர்பு கொண்டார். அவர் அய்யா படத்தில் உள்ள நபரின் கண்கள் நன்றாக உள்ளதா வேறு ஏதேனும் பிரச்சினைகள் இல்லையல்லவா ???? மூலிகைகளின் சக்தியை நிரூபிக்க இது போல அதிகமாக தீச் சோதனை முயற்சியில் ஈடுபட வேண்டுமா ??? என்று கேட்டார்.

முதலில் இது போன்ற கேள்விகளை எனக்கு நெருக்கமான நபர்களிடம் இருந்து வருவதை நான் அறவே விரும்பவில்லை. எனக்கு தெரியும் மூலிகைகளின் சக்தி என்ன என்று . முடிந்தால் நம்புங்கள் .உங்களை சோதித்து பார்க்க சொல்லவில்லை. மேலும்  இந்த பரிசோதனைகளினால் ஏதும் பிரச்சினைகள் வரவில்லை என்றாலும், உங்களின் இது போன்ற எண்ணங்கள் எதிர் மறையான விளைவுகளை ஏற்படுத்தும் வல்லமை உடையவை என்பது நீங்கள் அறியாதது. எனவே இது போல தீய எண்ணங்களை தவிருங்கள்.

நாங்கள் கெடுதலுக்காகவா சொல்கிறோம் .  நன்றாக இருக்கவே இதைக் கூறுகிறோம் என்று சொல்லாதீர்கள் . தீயதை நினைக்கவே நினைக்காதீர்கள் என்று நாம் சொல்கிறோம். பின் தீயதை கூறும் வரை வருவது தவறல்லவா ???? எண்ணமே அன்னம் என்பதை உணருங்கள் . எண்ணங்களின் வலிமையை உணருங்கள்.நல்லெண்ணங்களையே எண்ணுங்கள் .

அலோபதி மருத்துவர்கள் தங்களிடம் வரும் நோயாளர்களை இவ்வாறே அவர்கள் குறை அறிவினால் பயமுறுத்தி , அரை உயிராக்கி தங்கள் அறிவுக் குறைவான அறிவினால் அவர்களையும் முட்டாளாக்கி ஒரு வியாதிக்கு மருந்து கொடுக்கிறேன் பேர்வழி, என்று அந்த மருந்தின் ( மருந்து என்ற பெயரில் விஷங்களைக் கொடுத்து,முக்கால்வாசி பெட்ரோலியம் சார்ந்த பொருட்களே மருந்துகள் என்ற பெயரில் விற்கப்படுகின்றன் ) பக்க விளைவுகளால் , பல வியாதிகளாக உரு மாற்றம் பெற்று,  அது இந்த அலோபதி மருந்துகளால்தான் உருவானது என்ற அறிவே இல்லாமல் நோயாளர்கள் பாவம் அறியாமையால் அவல நிலையில் அலைந்து முடிவில் இறந்தே போகிறார்கள்.

இதில் பெரும் அதிர்ச்சி என்னவென்றால் , யார் சித்த மருத்துவம் பார்க்க போகிறேன் என்றாலும் இந்த அலோபதி மருத்துவர்கள்“ சித்த மருந்துகளில் பாதரசம் கலந்திருக்கும் . பாதரசம் சிறு நீரகச் செயலிழப்புக்கு ( KIDNEY FAILURE ) காரணம் ஆகும்.“ என்று கூறுவது கேலிக் கூத்திலும், கேலிக் கூத்து . அதிகம் படித்த நோயாளிகள் நம்புவதும் , அதை நம்பி எங்களைப் போன்றவர்களிடம் கேள்வி கேட்பதும் அதை விடக் கொடுமை . இது வரை நாம் எழுதிய மருந்துகளில் எதில் பாதரசம் சேர்ந்திருந்தது . இதையாவது யோசிக்க வேண்டாமா ??? அட முட்டாள்தனத்தின் திலகங்களே ???  உங்களை எண்ணி அழுவதா ? சிரிப்பதா ? என்றே தெரியவில்லை !!!!!!!!

இவர்கள் இப்படி அப்பாவிகளாக இருக்கிறார்களே என்று காப்பாற்ற நாம் எடுக்கும் முயற்சிகளைப் பார்த்து இறைவன் நகைக்கிறார் என்று எண்ணத் தோன்றுகிறது.என்னைவிடவா நீங்கள் இவர்களிடம் அன்பு வைத்துவிடப் போகிறாய் ??? இறைவனே இவர்கள் அறியாமையை விட்டு விட்டு என்று என்னிடம் வரப் போகிறார்கள் என்று காத்துக் கொண்டிருக்கிறேன் என்று கேட்பது போல உள்ளது இந்த சூழ்நிலை???

மற்றவை இருக்கட்டும் நத்தைச் சூரியைப் பற்றி மூலிகைக் குணபாடம் கூறுவதைப் பாருங்கள்.

ஒரு நூற்றாண்டுக்கு முன்பு நமது கிராமங்களில் நத்தைச் சூரி கருப்பட்டி தேத் தண்ணீர்தான் குடிக்கப்பட்டு,விருந்தாளிகளுக்கு வழங்கப்பட்டு வந்தது.தேத்தண்ணீர் என்றால் தற்போது தேயிலைத் தண்ணீர் என்ற அர்த்தத்தில் வழங்கப்பட்டு வருகிறது . ஆனால் தேத்தண்ணீர் என்றால் உடலைத் தேற்றும் தண்ணீர் என்ற அர்த்தத்தில் வழங்கப்பட்டு வந்துள்ளது இப்போது அனர்த்தமாய் வழங்கப்பட்டு வருகிறது.

இதில் ஒரு தேயிலை விளம்பரத்தில் தேயிலை உடலுக்கு கெட்டது என்றது யார் சொன்னது ??? என்று கேள்வி வேறு . அதில் தேயிலையுடன் கலப்பதாக கூறும் சித்த மருந்துப் பொருட்களை தனியே உபயோகித்தால் கிடைக்கும் பலன்கள் தேயிலையுடன் கலந்து உபயோகிக்க கொடுக்கும் போது அதன் நற்பலன்கள் அனைத்தும் கெட்டுவிடும் .

தேயிலை என்று இப்போது கொடுக்கப்படும் டஸ்ட் டீ முழுக்க தேயிலைத் தூசியில் நிறம் , மணம் , திடம் போன்றவற்றுக்கு பல பொருட்கள் சேர்க்கப்பட்டு குப்பையாக தரப்படுகிறது . இந்தத் தொல்லை குக் கிராமங்களையும் பாழாக்கி வருவதுதான் வேதனையிலும் வேதனை .

முன்பு கிராமங்களில் இருந்து வந்த காலையில் நீராகாரம் பருகும் பழக்கம் பித்தத்தை தணிக்கும் . ஆனால் இப்போது குடிக்கும் டீயினால் பித்தம் அதிகரித்து பல வியாதிக்கு ஆட்பட்டு குற்றுயிரும் குலை உயிருமாக வாழ்க்கையை ஓட்டி வருகிறார்கள் . இந்த நிலைக்கு காரணம் தங்களது பழக்க வழக்க மாற்றமே காரணமே !!! , என்பதும் புரியாத நிலைமையில் இருப்பதுதான் கொடுமையிலும் கொடுமை.

ஆற்று நீர் வாதம் போக்கும் 

அருவி நீர் பித்தம் போக்கும்

சோற்று நீர் இரண்டும் போக்கும்.

என்பதை மறந்து போய் பல ஆண்டுகள் ஆகிவிட்டன. இது நோயணுகா விதிகளில் உள்ள முக்கிய விடயம்.

நத்தைச் சூரி விதை நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும்.கருப்பாக எள் நிறத்தில் கோதுமையில் உள்ளது போல ஒரு கோடும் இருக்கும். இதனைப் பொன் வருவலாக வறுத்துப் பொடி செய்து வைத்துக் கொண்டு வெந்நீர் கருப்பட்டி சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி உபயோகிக்க உடல் ரீதியாக பல பிரச்சினைகளை வர வொட்டாமல் தவிர்க்கலாம்.

பதிவின் நீளம் கருதி இதன் பாகம் நான்கை அடுத்த ஓரிரு நாட்களில் பதிவிடுகிறேன்.

மற்றவை ஒரு மஹா மூலிகை ( நத்தைச் சூரி) பாகம் 4 ல் காண்க.

43 responses to “ஒரு மஹா மூலிகை ( நத்தைச் சூரி) பாகம் 3”

 1. rachinnaththurai says:

  nanaru.armai ayyaa!!!

  • machamuni says:

   அன்பு மிக்க திரு ரா.சின்ன துரை ஐயா அவர்களே,
   கருத்துரைக்கு மிக்க நன்றி!!!!!அதிக நாட்கள் ஆகிவிட்டது உங்களுடன் பேசி.உங்கள் அலைபேசி எண் தற்போது இல்லை.எனது அலைபேசி தொலந்த போது அந்த எண் இல்லாமல் போய்விட்டது .முடிந்தால் தொடர்பு கொள்ளுங்கள்.
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 2. Shiva says:

  iyya vanakkam,

  Thangal pathivugal anaithum arumai,
  Nan oru iyarkai aarvalan. enavae, adutha iyarkai maruthuva mugaam eppozhudhu nadaiperugiradhu enbathai dhayavu seidhu theriya paduthavum.

  Nandri

  Ippadikku

  Shiva shailesh

  • machamuni says:

   அன்பு மிக்க திரு சிவா அவர்களே,
   கருத்துரைக்கு மிக்க நன்றி!!!!!இயற்கை மருத்துவ முகாம் என்ற ஒன்று தனியே நாங்கள் நடத்துவதில்லை.வாழ்க்கையே இயற்கை மருத்துவ வாழ்க்கையே!!!!
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 3. shanthi says:

  Naan machamuni.com thalathai thodarnthu padithu varugiren. Ungal sevaiku migavum nanri. Thodarnthu pathividavum. Ennai pol ethanayo pergal payan adaivaargal. Nandringa.

  • machamuni says:

   அன்பு மிக்க திரு சாந்தி அவர்களே,
   கருத்துரைக்கு மிக்க நன்றி!!!!!தொடர்ந்து படித்து வாருங்கள்.எல்லா நலமும் , வளமும் பெற்று வாழலாம்.
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 4. Yahaventhan says:

  Ayya nathai soori mooligaiku veru peyar ullatha therivikavum

  • machamuni says:

   அன்பு மிக்க திரு யாகவேந்தன் அவர்களே,
   கருத்துரைக்கு மிக்க நன்றி!!!!!அதற்கு குழி மீட்டான் என்றொரு பெயர் உண்டு.
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 5. suresh v says:

  anbare

  This natthi suri will cure sugar problem?

  • machamuni says:

   அன்பு மிக்க திரு வி சுரேஷ் அவர்களே,
   கருத்துரைக்கு மிக்க நன்றி!!!!!நத்தைச் சூரி தாதுக்களை விருத்தி செய்யும் அதன் மூலம், பல வியாதிகளை குணமாக்கும் . எனது கட்டுரைகளை தொடர்ந்து படித்து வாருங்கள் .
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 6. naren says:

  Dear sir,
  I need nathai soori vidhai. In salem this is not available anywhere. Can you help me Pl?

  Also , I need Karunotchi.

  • machamuni says:

   அன்பு மிக்க திரு கே நரேன் அவர்களே,
   கருத்துரைக்கு மிக்க நன்றி !!!!! சதுரகிரி ஹெர்பல்ஸ் கண்ணனிடம் கிடைக்கும்.
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 7. Srinivasan says:

  அன்புள்ள திரு சாமி அழகப்பன் அவர்களுக்கு ,
  வணக்கம்.என்னிடம் நத்தைச்சூரி விதை உள்ளது.அதை எப்படி பக்குவப்படுத்தி
  உண்ண வேண்டும்( நெய்யில் வருத்தா? அல்லது வெறுமனே வருத்தா? பிறகு போடி
  பண்ண வேண்டுமா ?) எந்த அளவு சாப்பிடலாம் எப்போது சாப்பிட வேண்டும் ( காலை அல்லது மாலை )
  நாள் கணக்கு,பத்தியம் ஆகியவற்றை விளக்கினால் மிகவும் உதவியாக இருக்கும்.
  என்றும் அன்புடன்,
  சீனி

  • machamuni says:

   அன்பு மிக்க திரு ஸ்ரீனிவாசன் அவர்களே,
   கருத்துரைக்கு மிக்க நன்றி !!!!! இதை பல விடயங்களுக்கு உபயோகிக்கலாம் .பொதுவாக உடல் நலம் பேண உபயோகிக்கலாம். நத்தைச் சூரி தேத் தண்ணீர் ,நத்தைச் சூரி விதைப் பொடியை காலை வெறும் வயிற்றில் 48 நாட்கள் சாப்பிட்டு வர தேகம் இறுகி காயம் சித்தியாகும் .காய சித்திக்கு உபயோகிக்கும் போது இச்சா பத்தியமாயிருக்க வேண்டும்.
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

   • Mohan Dass says:

    இச்சா பத்தியம் என்றல் என்ன ? சிறுது விளக்கமாக கூறவும்.

    • machamuni says:

     அன்பு மிக்க திரு மோகன்தாஸ் அவர்களே,
     கருத்துரைக்கு மிக்க நன்றி !!!!!
     இச்சை கொள்ள வைப்பதை துறப்பதே இச்சா பத்தியம். அதாவது உடலுறவு வைத்துக் கொள்ளக் கூடாது. உடலுறவைத் தூண்டும் பொருள்களை தவிர்க்க வேண்டும்.
     மிக்க நன்றி
     என்றென்றும் பேரன்பினால்
     சாமீ அழகப்பன்

 8. A. Sankaran says:

  Anbumika Thiru. Samee Alagappan Avarkalae!

  Vanakam. Thankalin Iraipani thodara Yellam valla Isan Arul puriattum!
  Nathai churi-n 4-M baagam link & Sathurakiri Herbals Kannan avarkall mugavari yum anupi vaika vendukiran.

  Nanri pala pala.

  Anban
  A. Sankaran
  Navi Mumbai.

  • machamuni says:

   அன்பு மிக்க திரு சங்கரன் அவர்களே,
   கருத்துரைக்கு மிக்க நன்றி !!!!!
   நத்தைச் சூரி பாகம் 4 எனது வலைத் தளத்தில் பார்த்தாலே தெரியுமே!! பின் ஏன் இணைப்பை கேட்கிறீர்கள் . இருந்தாலும் கொடுத்துள்ளேன்.
   http://machamuni.com/?p=793
   திரு சதுரகிரி ஹெர்பல்ஸ் கண்ணன் அலைபேசி எண்கள்
   +919894912594
   +919943205566
   அவரது முகவரி:-
   பெ.கண்ணன்.
   சதுரகிரி ஹெர்பல்ஸ்,
   2/147,மங்கம்மாள் கோவில் தெரு,
   கான்சாபுரம்,(P-O)
   திரு வில்லிபுத்தூர் தாலுகா,
   விருதுநகர் மாவட்டம்.
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 9. ayya vanakkam….

  Thangal pathivugal anaithum arumaiyaga ullathu….ungalai santhikavum innum pala unmayai therinthukolla asai padukiran …..enaku kadavul nambikai kuraivu anal sithargal nanigal methu oru irupu ……………vaipukudugal
  thank u

  • machamuni says:

   அன்புள்ள திரு அர்விந்த் குமார் அவர்களே!!!
   தங்களின் கருத்துரைக்கு நன்றி,
   விரைவில் வாய்ப்பு வரும் .பேசுங்கள்.உங்களின் மின்னஞ்சல் முகவரிக்கு ஒரு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 10. bhuvan.R says:

  naan indha talathirkku pudhiyavan .migavum payanulla thagavalgalai iduvadharkku mikka nandri ungal seavai thodara vazhthukkal. nathai soori enum peyar kelvi pattu irukkirean anaal idhu than indha sedi endru ippodhu than purigirathu . nandrigal pala

  • machamuni says:

   அன்பு மிக்க திரு புவன் அவர்களே,
   கருத்துரைக்கு மிக்க நன்றி !!!!!
   முடிந்த வரை மூலிகை மர்மங்களை வெளிப்படுத்த முயற்சி செய்கிறேன்.
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 11. Mohan Dass says:

  நத்தை சூரி விதையை சூரணமாக்கி சாப்பிடும்போது எதாவது பத்தியம் இருக்க வேண்டுமா ? எவை எல்லாம் தவிர்க்கவேண்டும் ?

  • machamuni says:

   அன்பு மிக்க திரு மோகன்தாஸ் அவர்களே,
   கருத்துரைக்கு மிக்க நன்றி !!!!!
   நத்தைச் சூரி விதையை சூரணமாக்கி சாப்பிட பத்தியம் ஏதும் கைக்கொள்ளத் தேவையில்லை.ஆனால் கற்பமாக எந்த மூலிகையைச் சாப்பிட்டாலும் பாசிப் பருப்பும் , சோறும் மட்டும் மூலிகை சாப்பிடும் ஒரு மண்டலம் முழுவதும் (48 நாட்களுக்கு ) சாப்பிட வேண்டும் .மற்றவை தவிர்த்திட வேண்டும்.
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 12. prawin says:

  iyya ungal pathipirku nanri ethu ponra muligaigalin padagal(picture) thavai engu parkalam

  • machamuni says:

   அன்பு மிக்க திரு பிராவின் அவர்களே,
   கருத்துரைக்கு மிக்க நன்றி !!!!!
   தமிழில் எழுதுங்கள் .தாய்த் தமிழை வாழ வையுங்கள்.நமக்கிடையே வேற்று மொழி ஏன் ??? நீங்கள் இதை செய்தால் உங்கள் எதிர்கால வாரிசுகள் நாம் என்ன எழுதியுள்ளோம் என புரிந்து கொள்ள வரலாற்று ஆய்வாளர்களை நாட வேண்டிய அவசியம் இருக்காது.மூலிகை வளம் கந்தசாமி அவர்களின் வலைப் பூவைப் பாருங்கள்.
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 13. sundar says:

  அய்யா வணக்கம்,
  அடுத்த பதிவு எப்பொழுது வரும்? மிக ஆவலாக உள்ளது.சர்க்கரை நோய் பற்றிய அடுத்த பதிவு இந்த வாரம் வருமா?
  நீங்கள் எவ்வளவு வேண்டி கேட்டு கொண்டாலும் நிறைய வாசகர்கள் தமிழில் எழுத ஏன் தயங்குகிறார்கள் என்று தெரியவில்லை.
  நன்றி,
  கு. சுந்தர்

  • machamuni says:

   அன்புள்ள திரு சுந்தர் அவர்களே ,
   கருத்துரைக்கு மிக்க நன்றி,
   இல்லை, இந்த வாரம் சர்க்கரை நோயை குணமாக்கலாம் பற்றிய பதிவு இல்லை.அடுத்த வாரம் சர்க்கரை நோயை குணமாக்கலாம் பதிவு தொடரும்.தமிழை நம் உயிருக்கு சமமாக கருத வேண்டும் சிலர் அதை வேறு விதமாக நினைப்பதனால் வந்த விளைவு.
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 14. Aanand k says:

  அய்யா வணக்கம்.
  தங்களின் பதிவுகள் அனைத்தும் மிகவும் பயனுள்ள அருமையான கருத்துக்கள். நன்றி.ஆனால் யாரேனும் கேள்விகள் கேட்டால் அறிவிலிகள் என்று கருதாமல் தெளிவு படுத்தினால் இன்னும் நன்றாக இருக்கும். சாதாரண, எளிமையான விசயமாக தங்களுக்கு படும் விஷயங்கள் மற்றவர்களுக்கு புரியாமல் இருக்கும். ஆகவே வருத்தபடாமல் தெளிவு படுத்தினால் அருமை. உங்களின் சேவை கண்டிப்பாக அனைவருக்கும் தேவை. நன்றி அய்யா.

  • machamuni says:

   அன்புள்ள திரு கே ஆனந்த் அவர்களே
   கருத்துரைக்கு மிக்க நன்றி,
   எல்லோருக்கும் என்னால் முடிந்த வரை விளக்கம் அளித்துவிடுகிறோம்.அறிவிலிகள் என்று யாரையும் கருதுவதில்லை.ஆனால் அந்தக் கேள்விகள் பதிவுகள் சம்பந்தமாகவோ, அவர்கள் உடல் நிலை சம்பந்தமாகவோ இருந்தால் உடனே பதிலளித்துவிடுவோம்.ஆனால் சம்பந்தா சம்பந்தம் இல்லாமல் வரும் கேள்விகள் எம்முடைய நேரத்தை விரயம் செய்கின்றன. இது வரை கேள்விகளுக்குத்தான் பதிலளித்துக் கொண்டிருக்கிறோம்.கட்டுரை எழுத முடியாத அளவிற்கு கேள்விகள் தினமும் 10 முதல் 15 வரை வந்தால் நாம் என்ன செய்வது.எப்படி பதிவுகள் வெளியிடுவது.
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 15. தங்களின் பதிவுகள் அருமை மிகவும் பயனுள்ளதாகவும் உள்ளது மிக்க நன்றி மச்சமுனி அவர்களே…

  • machamuni says:

   அன்புள்ள திரு ஆறுமுகம் அவர்களே ,
   உங்களது கருத்துரைக்கு நன்றி,
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 16. Satya says:

  Dear sir
  We are planning to take nathai suri powder to reduce weight and to resolve fertility related problems for my wife…and to increase the semen count for me.

  We just purchased the seeds and plannign to make powder..

  Is there any restriction or process to be adopted during the period and for how long we should take this power ?
  Thanks

  • machamuni says:

   அன்புள்ள திரு சத்யா அவர்களே,
   உங்களது கருத்துரைக்கு நன்றி ,
   முதலில் தமிழில் எழுதுங்கள். நீங்கள் சொன்ன குறைபாட்டுக்கு அது மட்டும் போதாது .நீங்கள் அமீர் சுல்தானை தொடர்பு கொள்ளுங்கள்.அவர் உங்களுக்கு வழி காட்டுவார்.
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 17. sk sekar says:

  ayya avarkalukku puthandu vazhthukkal, nathai soori mooligai karuppa samy koil kadu yenral athu entha ariya enru therinthal mikka nalamaha irukkum, nanri ayya, sekar.

  • machamuni says:

   அன்புள்ள திரு எஸ் கே சேகர் அவர்களே,
   உங்களது கருத்துரைக்கு நன்றி ,
   முதலில் தமிழில் எழுதுங்கள்.கான்சாபுரம் ஊருக்கு அருகே உள்ள மலைக்காட்டின் நடுவே உள்ளது.
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 18. T.Sathishkumar says:

  T.SATHISH KUMAR
  9787400902

  SIR
  Ungal valaithalam padithen migavum pramippaga irunthu acharyamaga irunthathu
  Pazhangala tamilargal pala namba mudiyatha ariya sathanaigal seithullanar
  Maruthuva thuraiyulum avargalin sathanaiyai ubgal moolamaga padithen mikka nanri
  Antha ariyavagai mooligaiyai kannal kana punniyam seithirukka vendum
  SADURAKIRI HERBALS KANNAN
  Avargalai thodarpu kolla mugavari allathu cell vendum sir . mikka nanri

  • machamuni says:

   அன்புள்ள திரு டி சதீஷ் குமார் அவர்களே,
   உங்களது கருத்துரைக்கு நன்றி,
   சதுரகிரி ஹெர்பல்ஸ் கண்ணன் அவர்களது முகவரி , பல இடங்களில் அளிக்கப்பட்டுள்ளது.அதை கொஞ்சம் தேடினால் கிடைக்கும். அப்போது இன்னும் பல விடயங்களை படித்தும் , கொள்ளலாம்.
   இப்படிக்கு
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 19. prasanth says:

  AWESOME ARTICLES…I NEVER SEEN LIKE THIS IN MY LIFE….

  PLZ KEEP IT UP…

 20. C. Deepa says:

  i would like to say thanks for this article… bcoz i earn information, it may help to my project….
  any herbs are available to cure or treat the scalp psoriasis….. can you halp me….
  thank you.
  regards,
  C.Deepa

 21. Venkatesh says:

  மதிப்பிற்குரிய ஐயா, எனக்கு இரசமணி கிடைக்குமா?

  • machamuni says:

   அன்புள்ள திரு Venkatesh அவர்களே,
   உங்களது கருத்துரைக்கு நன்றி,
   நீங்கள் யார் என்பதை நாம் அறிவோம்
   கிடைக்காது
   இப்படிக்கு
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 22. Chandhra Mouleeswaran - MK says:

  சந்திர மௌலீஸ்வரன் – மகி/
  02 அக்டோபர் 2017- திங்கள்.
  பொங்கலூர்.

  வணக்கம்.
  உங்களது வலைத்தளத்தை அவ்வப்போது பார்த்து வநதிருக்கிறேன். எனினும் வேலைப் பளுவின் காரணத்தால் தொடர்பில் வர இயலவில்லை.
  என் நண்பர் ஒருவர் உங்களது வளைக்கண்ணீயை அனுப்பி உதவியுள்ளார்.

  நமது பண்டைத் தமிழ் ம்ருத்துவ்ம், வர்ம மருத்துவம், இய’ற்கை மருத்துவம், தமிழ் உண்வு முறை, உடல் மன நலம், இயற்கை உணவு ம்ற்றும் தமிழகக்;க்லாச்சாரம் ஆகியவற்றின் மீது உள்ள உங்களுடைய பார்வைகளும் கருத்துக்களும் எங்களுடன் மிகவும் இசைந்துள்ளன.
  எனவே உங்களுடன் தொடர்பு கொள்கிறேன்.
  நாங்கள் எமது பேராசானிடம் குருகுல முறையில் மிக நீண்ட காலமாகத் தமிழ் மருத்துவம் பயின்று வருவதால் மச்ச முனி தளத்தில் உறுப்பினராக இயலாது. எனினும் தொடர்பு கொள்ள விரும்புகிறேன்.
  உங்களது வலைத்தளத்தில் சிறிது காலமாகப் புதிய பதிவுகளும் கருத்துரைகளும் மிகவும் குறைவாகவே வருவதால் வேறு தளத்தில் உங்களைப் பற்றித் தேடிக் கொண்டுள்ளேன். அப்படி, வேறு தளம் இருப்பின் எனக்குத் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
  மிக்க நன்றி.
  வண்க்கம்.
  இவ்வண்ணம்,
  சந்திர மௌலீஸ்வரன் – மகி
  auztrapriyaa@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 + 5 =