ஞானம் என்பது உடல் சார்ந்ததா ? உயிர் சார்ந்ததா ? பாகம் 1

May 14, 2012 by: machamuni

அன்பான வாசக அன்பர்கள் பலர் நீங்கள் ஞானம் பற்றி தற்போது எழுதுவதில்லையே?மருத்துவம் பற்றி மட்டும் எழுதுகிறீர்களே?ஞானம் பற்றி எழுதுங்கள் என பலமுறை கேட்டதற்கிணங்க இந்தத் தலைப்பில் பல விடயங்களை இங்கே விளக்க இருக்கிறேன்.ஒரு நபர் கருத்துரையில் பல நாட்களுக்கு முன்பு மச்சமுனிவரின் சித்த ஞான சபை என்று பெயர் வைத்துக் கொண்டு மூலிகைககளைப் பற்றி எழுதிக் கொண்டிருக்கிறாயே பொறம் போக்கு என்று அன்பாக?????  வேறு எழுதி இருந்தார்.

புறம் போகுபவனல்ல நான் அகம் போகின்றதால்தான் என்னுடைய வலைத்தளம் பலரால் பார்க்கும் படி இருக்கின்றது.இது எனது அகங்காரமல்ல.பொதுவாக எல்லோருக்குள்ளும் மறைந்து இருக்கும் அக அறிவு இந்த வலைத்தளத்தை விரும்பி பார்க்க வைக்கிறது .அப்போது ஏற்படும் நல்லுணர்வு நல்ல சொற்களையும் நல்ல சிந்தனைகளையும் தூண்டுகிறது.அது வெளிப்படும் விதமும் அந்தந்த உடல் சார்ந்ததாக இருக்கிறது. உயிரோடு கூடியிருக்கும் அறிவு சுத்த அறிவு .

பொதுவாக உடல் அசுத்த உடலாகத்தான் இருக்கிறது .இது காரண தேகத்தால் உண்டாவது . இது அறிவில்லாதது .இந்தக் காரண தேகம் எப்படி உண்டாகிறது.எடுத்துக்காட்டாக பெருங்காயம் வைத்த பாத்திரம் பெருங்காயம் காலி ஆனாலும் வாசனை போவதில்லை அல்லவா??அது போல போன பிறவியில் உடல் செய்த தீய நல்ல காரியங்கள் உடலும் உயிரும் பிரியும் மரணம் என்ற காரியத்திற்கு பின் உயிருடன் தொடரும் வாசனையே இந்த காரண உடல்.அந்த காரண தேகம் சேர்ந்த உயிரும்,நம் இந்த அசுத்த உடலும் சேர்ந்த பிறவியில்,உடலின் அறிவில்லாத தன்மையும் உயிரின் அறிவுள்ள தன்மையும் சேர்ந்து உடலில் அறிவில்லாததாகவும் , அறிவுள்ளதாகவும் சிற்சில நேரங்களில் வெளிப்படுகின்றது.

புலன்களின் வழியே மட்டுமே செயல்படும் மனம்,சித்தம்,புத்தி இவைகளின் ஒரு செயல்பாட்டை கவனித்தால் உங்களுக்கு இது புரியும்.ஒரு பஸ் உங்களை மோத வருகிறது.நீங்கள் அதைப் பார்க்கும் திசையில் இல்லை,பயங்கர திருவிழா ரேடியோ சத்தத்தில் உள்ளீர்கள் ,காதும் பஸ் வரும் ஓசையை கேட்கவில்லை.ஆனால் நீங்கள் திடீரென ஒதுங்கி விலகிவிட்டு அப்பப்பா நல்ல வேளை பஸ் மோதாமல் தப்பிவிட்டேன் என்று நினைத்திருப்பீர்கள்.

இது போன்ற சம்பவங்கள் உங்கள் வாழ்வில் நிகழ்ந்திருக்கலாம். அந்த சந்தர்ப்பத்தை எண்ணிப் பார்த்தீர்களானால்,உங்களுக்கே ஆச்சரியமாக இருக்கும்.கண்ணோ பார்க்கவில்லை , காதோ கேட்கவில்லை.புலன்களின் வழியே சென்று செயல்படும் மனம் இந்தப் புலன்களின் வழியே உணரவில்லை.அதை புத்தியில் ஒப்பிட்டு பார்த்து கால்களுக்கு ஒதுங்கு என்று கட்டளையிடவில்லை. ஆனால் எப்படி உடல் ஒதுங்கித் தப்பித்தது.

அதற்குக் காரணம் உள்ளே இருக்கும் எல்லா பேரறிவிற் சிறந்த உயிர் சித்தத்தின் வழியே செயல்பட்டு ஒதுங்கு என்று கட்டளையிடுகிறது . இது எப்படி நிகழ்கிறது.உடலும் உயிரும் பிரிய வேண்டிய சூழல் உருவாகும் போது உயிர் அதை விரும்பாவிட்டால்,தான் பெற வேண்டிய அனுபவங்கள் இன்னும் இந்த உலகில் இருக்கிறது என்றால் , தன் பேரறிவினால் உடலை நகரச் சொல்லி சித்தத்தினால் கட்டளையிடுகிறது.இல்லையெனில் இதையே விபத்தாக்கி உடலைப் பிரிந்து உயிர் பறந்துவிடும்.

இந்த ஒரு வினாடி சித்தத்தின் மூலம் செயல்படும் உயிரை,எல்லா நாளும் சித்தத்தின் மூலம் செயல்பட வைத்தால் நீங்கள் சித்தர்.இல்லையானால் தினம் நாய் போல் நம்மை அலைக்கழிக்கும் மனதால் செயல்படும் சாதாரண மனிதர்.

இந்த காரண தேகமான வாசனை நம் உடலில் இருக்கும் வரை நம் உடல் சுத்த தேகமாகாது.உடல் சுத்த தேகமாகவில்லை என்றால் சித்தம் சுத்த சக்தியுடன் செயல்படாது. சித்தம் சுத்த சக்தியுடன் செயல்படாவிட்டால் நீங்கள் ஞானத்திலும் தெளிய இயலாது.காயமும் சித்தியாகாது.முக்தியும் கிட்டாது.

எனவே உடலை முதலில் நோயில்லாமல் ஆக்கவேண்டும் .பிறகு அசுத்த தேகத்தை சுத்த தேகமாக ஆக்க வேண்டும்.நோயணுகாத வஜ்ர தேகமான பின் காயத்தை சித்தியாக்கி சித்தத்தின் வழியே செயல்கள் புரிந்து சித்தராக வேண்டும்.பின் முக்தி அடைய வேண்டும்.

இதற்கு சித்தர் விஞ்ஞானத்தின் முக்கிய அங்கங்களான வைத்தியமும், மருந்துகளின் அறிவும் , காய கற்பங்கள் முடிப்பதும் , பற்ப, செந்தூரங்கள் , சுண்ணம் முடிப்பதும் வான சாத்திர அறிவும் அடிப்படைத் தேவைகள்.இரத்தம் கடுங்காரமாக வேண்டும்.இப்படி ஆனால்தான் சுண்ணாம்பால் ஆன நம் எலும்புச் சட்டகம் , இரத்தம் ( URIC ACID ) யூரிக் அமிலம் போன்ற அமிலங்களால் அமிலத் தன்மையாகாமலும் , அதன் விளைவாக எலும்புச் சட்டகம் அரிக்கப்படாமல் காக்கப்படும் .அப்படி எலும்புச் சட்டகம் அரிக்கப்படாமல் காக்கப்பட்டால்தான் உடல் அழியாது . இவை எல்லாம் தெரியாமல் , ஒருவன் ஒரே பிறவியில் ஞானியாகவே இயலாது .

உடம்பார் அழியின் உயிரார் அழிவார்

திடம்பட மெய்ஞானம் சேரவும் மாட்டார்

உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே

உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே!!!

— திரு மூலர் —

உடம்பு அழிந்தால் உயிர் அழியும். உயிர் அழிந்தால் மெய்ஞ்ஞானம் கிடைக்காது . எனவே உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்து உடம்பையும் வளர்க்கலாம் , விளைவாக உயிரையும் வளர்க்கலாம் . உயிரை வளர்த்தால் சீவன், சிவமாகும். ஞானம் சித்திக்கும் .

முதலில் ஒரு விடயத்தை தெளிவாக்குகிறேன்.உலகில் உள்ள அனைத்துக் அறிவு சார்ந்த கலைகளையும் 64 கலைகளாக பிரித்துள்ளனர் நம் முன்னோர்கள்.அந்த கலைகள் அனைத்தையும் படிப்பறிவு என்று கொண்டால் நம் பட்டு அனுபவித்து தெரிந்து கொள்ளும் அறிவு பட்டறிவு,அடுத்தவர் அனுபவத்தின் மூலம் தெரிந்து கொள்வது அனுபவ அறிவு ( இதில் அடுத்த நபரின் படிப்பறிவும் , பட்டறிவும் அடக்கம் ) . சித்தர்களின் ஞானமும் , மருத்துவமும் , கற்ப சூத்திரங்களும் இந்த அனுபவ அறிவின் பால் பட்டவை.நாம் அனுபவித்துத்தான் தெரிய வேண்டும் என்றால் பல பிறவிகள் தேவை . சித்தர்கள் பெருங்கருணையினால் இவற்றை நமக்காக எழுதி வைத்துச் சென்றுள்ளனர் . இவை நமக்கு கிடைத்தற்கரிய பொக்கிஷங்கள்.

முதலில் ஆன்மா கொண்ட சிற்றறிவு பேரறிவாகப் பரிணமிக்க வேண்டும் .பின் இந்த பேரறிவு “தான் “ என்ற எண்ணத்தினால் வளர்ந்தது. அதனால் பேரறிவாக வளர்ந்த பின் “தான் “ என்ற அகங்காரத்தை விட வேண்டும் விட்டால் . ஜீவன் முக்தியடைய முடியும் . தேகத்தோடு காயசித்தியடையும் மார்க்கத்தையும் இந்தப் பேரறிவால் நிகழ்த்த முடியும் . இப்பிறவித் துன்பம் எல்லாம் இன்றோடே போச்சு என்றும் ,செத்தவரும் எழுவார் என்றும் வள்ளலார் கூறுகிறார் .

இந்த பேரறிவே திங்களூரில்  பாம்பு கடித்து இறந்து போன அப்பூதியடிகளின் குழந்தையை திருநாவுக்கரசரால் உயிர்ப்பித்து தர அறிவு போதித்தது . இந்த நிகழ்ச்சியிலாவது உடல் இருந்தது . அவினாசியில் பல ஆண்டுகளுக்கு முன் ஆற்றில் வந்த முதலை ஒன்று சிறுவனை விழுங்கியது.திருஞான சம்பந்தர் அவினாசி சென்ற போது ஆற்றில் தண்ணீரே இல்லை.முதலில் ஆற்றில் தண்ணீரை வரவழைத்தார். பின் முதலையையும் வரவழைத்து  அதன் வாயில் இருந்து விழுங்கப்பட்ட சிறுவனையும் வரவழைத்தார் . திரு ஞான சம்பந்தருக்கு மண முடிப்பதற்காக இருந்த பூம்பாவை இறந்துவிட்டாள் .அவள் உடலை எரித்து சாம்பலாக்கி குடத்துள் வைத்திருந்தார்கள்.அந்த அஸ்தியில் இருந்து உடலும் உயிரும் உள்ள பெண்ணாக்கினார் . இவை யாவும் இந்தப் பேரறிவால் இப்போதும் நிகழ்த்தலாம் .இது நம் செந்தமிழ் மொழிப் பாடல்களில் இப்போதும் மறைவாகப் புதைத்து வைக்கப்பட்டுள்ளது . இதையே வள்ளலார் கீழ்க்கண்ட பாடலில் பாடுகிறார் . கேட்டு இன்புறுங்கள் .

vallalar

கீழ்க்கண்ட தளங்களில் ஒரு சமயம் வள்ளலார் பாடல்களை திறந்த தரவிறக்கமாக வைத்திருந்தார்கள்.தற்போது அந்த வாய்ப்பை எடுத்துவிட்டார்கள்.அது ஏன் என்று கேட்ட போது எல்லோரும் தரவிறக்கம் செய்துவிட்டு போய்விடுகிறார்கள்.மேலும் வள்ளலார் பாடல்களுக்கு சிங்கப்பூரில் இசை அமைத்து வெளியட பொருளுதவி செய்வதேயில்லை.எனவே திறந்த தரவிறக்க வாய்ப்பை எடுத்துவிட்டோம் என்றார்கள்.தமிழால் ஞானம் வளர்த்த நிலை மாறி எப்படி ஆகிவிட்டது பார்த்தீர்களா. ஆனால் நான் இந்தக் குறுந்தகட்டை வாங்கியது எனது தந்தையின் நண்பர் ஜோதி முருகன் ,என்பவரிடம்  இராமனாதபுரத்தில் வாங்கினேன் . அவர்களிடம் இந்த பாடலை வெளியிட அனுமதி கோரும் போதுதான் அவர் தற்போது சிவனடி சேர்ந்துவிட்டார் என்று தெரிந்தது.அவரது புதல்வர் திரு ராஜ வீர் அவர்களிடம்தான் அனுமதி கோரி அவரது அலை பேசியில் தொடர்பு கொண்டேன் .

குறுந்தகடுகள் வேண்டுவோர் அவரைத் தொடர்பு கொள்க.

அவரது அலைபேசி எண் :-+919443121368

அவரது தொலைபேசி எண் :- 04567- 220278

அவர் மின்னஞ்சலில் சிங்கப்பூருக்கு கேட்ட பின் அனுமதி அளித்தார் .பூட்டப்பட்ட குறுந்தகடுகள் வெளிவரும் இக்காலத்தில் எவ்வளவு வேண்டுமானாலும் பிரதிகள் எடுத்துக் கொள்ளுங்கள் என்ற அறிவிப்போடு பூட்டப்படாத குறுந்தகடுகள் வெளியிட்டு எத்தனை பிரதி வேண்டுமானாலும் எடுத்து எல்லோருக்கும் கொடுங்கள் என்று அறிவித்தவர்களுக்கு நன்கொடையே கிடைக்காதது மிக வருந்தத் தக்கதாயிருக்கிறது .   ’’என்ன செய்வது பணம் இருக்கும் மனிதனிடம் மனம் இருப்பதில்லை.மனம் இருக்கும் மனிதனிடம் பணம் இருப்பதில்லை’’. ஆன்மீகமும் ஞானமும் உண்மையில் செழிக்க பாடுபடுபவர்கள் நிலை இவ்வாறுதான் உள்ளது.எனவேதான் நான் அவர்கள் அனுமதி பெற்ற பின்னரே இந்தப் பாடல் வெளியிடுகிறேன்.

அந்த வலைத் தளங்களும் அவர்களைத் தொடர்பு கொள்ளவும் கீழ்க்கண்ட இணைப்புகளைப் பார்வையிடுங்கள்.

http://www.vallalar.org/ArticlesEnglish/35

http://www.vallalar.org/Contactus

38 responses to “ஞானம் என்பது உடல் சார்ந்ததா ? உயிர் சார்ந்ததா ? பாகம் 1”

 1. nanthakumar says:

  ………………….இந்த ஒரு வினாடி சித்தத்தின் மூலம் செயல்படும் உயிரை,எல்லா நாளும் சித்தத்தின் மூலம் செயல்பட வைத்தால் நீங்கள் சித்தர்

  Real challenge

  Thanks,
  Nanthakumar
  Chennai

 2. nalla thagaval,thangal pani sirakka irai arul puriyattum.

 3. ms says:

  “இரத்தம் கடுங்காரமாக வேண்டும்.இப்படி ஆனால்தான் சுண்ணாம்பால் ஆன நம் எலும்புச் சட்டகம் , இரத்தம் ( URIC ACID ) யூரிக் அமிலம் போன்ற அமிலங்களால் அமிலத் தன்மையாகாமலும் , அதன் விளைவாக எலும்புச் சட்டகம் அரிக்கப்படாமல் காக்கப்படும் .அப்படி எலும்புச் சட்டகம் அரிக்கப்படாமல் காக்கப்பட்டால்தான் உடல் அழியாது”

  அற்புதமான விளக்கம்!!
  ஈடு இணையற்ற சேவை!!
  தங்கள் பணி தொடரட்டும்..

  • machamuni says:

   அன்பு மிக்க திரு முத்துக் குமரன் அவர்களே,
   கருத்துரைக்கு மிக்க நன்றி !!!!!
   சித்த மருத்துவ அடிப்படைகளை என்னால் முடிந்த அளவு எளிமையாக விளக்க முயற்சி செய்கிறேன்.
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 4. hari says:

  .////ஆன்மீகமும் ஞானமும் உண்மையில் செழிக்க
  பாடுபடுபவர்கள் நிலை இவ்வாறுதான் உள்ளது/// என்பது
  முற்றிலும் உண்மையே.எத்தனையோ சிவன் கோயில்கள்
  விளக்கு எரியக்கூட வழியில்லாத நிலையில் உள்ளது
  பொருளுதவி செய்ய நினைபவரிடம் பணம் இல்லை
  கோடிஸ்வர மக்களுக்கு அதனை சரி செய்யக்கூடிய
  வாய்ப்பு இருந்தும் செய்வதில்லை

  • machamuni says:

   அன்பு மிக்க திரு ஹரி அவர்களே,
   கருத்துரைக்கு மிக்க நன்றி !!!!!
   கண்ணனும் அருச்சுனனும் உஞ்ச விருத்திக்காக பிச்சை எடுத்துச் சென்று கொண்டிருக்கும் போது ஒரு ஏழை தன் பசு மாட்டின் மூலம் வரும் வருமானத்தின் மூலம் அந்தக் குடும்பமும் சாப்பிட்டு ,இவர்களுக்கும் உணவு வழங்கி வந்தது.இதே போல ஒரு பணக்காரன் இவர்கள் பிச்சை கேட்கும் போது அடித்து துரத்திவிடுவான்.உஞ்ச விருத்திக்கான காலம் முடிந்தவுடன்,கண்ணன் ஏழையை ஆசீர்வதிக்க,“ ஏழையின் வருமானத்துக்காக இருக்கும் ஒரு பசு மாடும் இறந்து போகட்டும் ” என்று ஆசீர்வதித்தான்.பணக்காரனை கண்ணன் “ இன்னும் பெரும் செல்வம் பெற்று பூமியில் நீடூழி வாழ்க ”என்று ஆசீர்வதித்தான்.அருச்சுனனுக்கோ கடும் கோபம் வந்தது.எனக்கும் உங்களுக்கும் அது போலத்தான் கோபம் வரும்.அருச்சுனன் கண்ணனைப் பார்த்துக் கோபத்துடன் “ ஈயாத உலோபிக்கு இன்னும் பெரும் செல்வம் பெற்று பூமியில் நீடூழி வாழ்க என்றும் ,ஏழ்மை நிலையிலும் நம்மை நன்றாக உணவு கொடுத்து கவனித்த ஏழையின் வருமானத்துக்காக இருக்கும் ஒரு பசு மாடும் இறந்து போகட்டும்.என்று ஆசீர்வதிக்கிறாயே உனக்கு ஈவு இரக்கமே இல்லையா?நல்லது செய்பவர்களுக்கு நல்லதே நடத்த வேண்டிய நீ இவ்வாறு செய்யலாமா ”என்று கேட்டான்.அதற்கு கண்ணன் “ ஈயாத உலோபிக்கு இன்னும் பெரும் செல்வம் பெற்று பூமியில் நீடூழி வாழ்க என்று வாழ்த்தினேன் .ஏனென்றால் இன்னும் பல காலம் இந்த உலகாயத இன்பம் என்று நினைத்துக் கொண்டு துன்பங்களில் உழன்று நெடுங்காலம் அவஸ்தைப்பட்டு ,இன்னும் பல பிறவி எடுத்து உழல ஆசீர்வதித்தேன்.ஆனால் ஏழையான எனது பக்தன் இன்னும் பல காலம் இந்தப் பூமியில் அவஸ்தைப் பட வேண்டாம் என்று அவனுக்கிருக்கும் ஒரே பிடிப்பான அந்தப் பசுவை இறந்து போக ஆசீர்வதித்து ,எனது வைகுந்தத்திற்கு அவர்களை குடும்பத்தோடு அனுப்பி வைத்தேன்.இது தவறா??? என்று கேட்டான். எனவே உலகாயத நியதிகள் வேறு .அவன் பிழைக்கத் தெரியாதவனாக இருக்கிறான் என்று சொல்கிறார்கள். பிழைத்தல் என்றால் தவறு செய்தல் என்று பொருள் .உலகாதய விஷயங்களில் தவறு செய்பவனே நல்லவன். ஆனால் பர உலக விடயங்கள் அப்படி அல்ல.அங்கே எல்லாமே வேறு அர்த்தங்கள்.
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 5. sinna says:

  அன்புள்ள அய்யா
  ////வைத்தியமும், மருந்துகளின் அறிவும் ,
  காய கற்பங்கள் முடிப்பதும் , பற்ப, செந்தூரங்கள் , சுண்ணம்
  முடிப்பதும் வான சாத்திர அறிவும் அடிப்படைத் தேவைகள்/////
  /////இவை எல்லாம் தெரியாமல் , ஒருவன் ஒரே பிறவியில்
  ஞானியாகவே இயலாது//// ரெண்டு வரில இரத்தின சுருக்கமா
  அருமையா எழுதிடீங்க.உண்மை தான். எப்படி ஒருவருக்கு
  அத்தனையும் ஒரே பிறவியில் வாய்க்கும்?அதற்கு வரம்
  வாங்கிக்கொண்டு வந்திருக்க வேண்டுமோ?

  இளம் வயதிலிருந்தே இத்தகைய சுய தூண்டுதல்/அறிவு இருக்க
  வேண்டும்.வசதியும் வேண்டும், அதிக பணம்/வசதி இருந்தால்
  இதில் அறிவு போகாது.இந்த அறிவு இருபவரிடம் பணம்
  இருக்காது அதனாலேயே பல விஷயங்களை செய்வது இயலாது.
  பணம்+ அறிவு இருந்தாலும் உடம்பு நன்றாக இருக்கணும்.
  கெட்ட பழக்க வழக்கங்கள் அறவே இருக்க கூடாது
  காமம் மற்றும் புலன்கள் தன் வசம் இருக்க வேண்டும்.
  நல்ல குருநாதர் அமைய வேண்டும்.சாதனை முயற்சிக்கு
  இடையில் வினைவசத்தாலோ விதிவசத்தாலோ கொடும்
  துன்பங்கள் /நோய்கள்/மரணம் தாக்காமல் இருக்க வேண்டும்.
  தற்கால குடும்பம்/சூழ்நிலை ஒத்துழைக்கவும் வேண்டும்.
  இது அத்தனையும் இருந்தால் மட்டுமே ஒருவர் தாங்கள்
  குறிப்பிட்டது போல் சித்தர்/ஞானி ஆகமுடியும்.
  சமுதாயம் அவரை கொடுமை/வஞ்சகம் செய்யாமல்
  வழி விடவேண்டும்.
  எல்லாத்துக்கும் மேல தலைவர் அருள் கண்டிப்பா
  வேண்டும்.
  “எல்லாம் செயல் கூடும் என் ஆணை அம்பலத்தே
  எல்லாம் வல்லான் தனையே ஏத்து
  “இன்று வருமோ நாளைக்கு வருமோ -அல்லது
  மற்றென்று வருமோ அறியேன் எம்கோவே”
  என்று பாடினார் வள்ளலார் பெருமான்.
  என்றும் அன்புடன்
  (அதிகப்ரசங்கியா ஏதாவது எழுதியிருந்தால்
  மன்னிக்கவும்.இது பலர் சொல்லக்கேட்டது)

  • machamuni says:

   அன்பு மிக்க திரு சின்னா அவர்களே,
   கருத்துரைக்கு மிக்க நன்றி !!!!!
   கிராமத்தில் நான் வாங்கி வந்த வரம் அவ்வளவுதான் என்பார்கள்.மொத்தத்தில் உங்களுக்கு பதில் கூற நான் யோசித்துப் பார்த்ததில் எனக்கு நிகழப்போவது அத்தனையும் முன்னரே எனக்கு சொல்லப்பட்ட போது , நான் அதை சாதாரணமாகவே எடுத்துக் கொண்டேன்.பின்னால் அவை அத்தனையும் நடக்க ,நடக்க என் செயல் ஏதும் இல்லை , என்பதும் அத்தனையும் தீர்மானிக்கப்பட்டு நடந்து வருகின்றன , என்றும் மொத்தத்தில் நான் என்னை ஒரு பொம்மை போல உணர்கிறேன்.என் செயலாவது யாதொன்றுமில்லை. இறைவன் அருட்கருணை என்னை வழி நடத்துகிறது ,செலுத்துகிறது.நான் என்ன கேட்க வேண்டும் என்று அந்த இறையருட் கருணை தீர்மானிக்கிறது. அதையே என்னை கேட்க வைக்கிறது.கேட்பதை கொடுக்கிறது.இதையேதான் வள்ளலாரும் “எல்லாம் செயல் கூடும் என் ஆணை அம்பலத்தே எல்லாம் வல்லான் தனையே ஏத்து”.“இன்று வருமோ நாளைக்கு வருமோ அல்லது மற்றென்று வருமோ அறியேன் எம்கோவே” கூறுகிறார்.
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 6. chinna says:

  அன்புள்ள அய்யா
  வணக்கம்.தங்கள் பதிலின் படி பார்த்தால் விதி
  இருந்தால் தான் மதியே வேலை செய்யும்.அப்படியா?
  விதி இருந்தால் தான் மேற்கண்ட அனைத்தும் கை
  கூடுமா?
  என்று தெரிவிக்க வேண்டுகிறேன்.
  நன்றி சின்னா

  • machamuni says:

   அன்பு மிக்க திரு சின்னா அவர்களே,
   கருத்துரைக்கு மிக்க நன்றி !!!!!
   எனக்கு விதிக்கப்பட்ட விதியை,என் வாழ்வில் இன்னின்னவை நடக்கும் என்பதை முன்னரே சொன்னார் ஒரு சித்தர். இவ்வளவையும் தெரிந்து சொல்ல வேண்டும் எழுதப்பட்ட விதியை படிக்கும் ஆற்றல் அவருக்கு இருக்கிறது.மேலும் விதியை மாற்றும் வல்லமையும் அவர்களுக்கு இருக்கிறது என்று எனக்குத் தோன்றுகிறது.
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 7. hari says:

  அன்புள்ள சாமிஜி
  வணக்கம்./////உலகாதய விஷயங்களில் தவறு செய்பவனே
  நல்லவன். ஆனால் பர உலக விடயங்கள் அப்படி அல்ல.
  அங்கே எல்லாமே வேறு அர்த்தங்கள்//// தங்களது மிகவும்
  சிறப்பான பதிவுக்கு சிரம்தாழ்த்தி வணங்குகிறேன்.இதை
  சாதாரணமாக புரிந்து கொள்ள முடியாது.
  ரிபு கீதையில் அஷ்டவக்ரர் “உருவுற்றதெல்லாம் பொய்,
  ,உருவற்றதே மெய் “என்று ஜனகருக்கு சொல்வார்.
  தங்களது பதிவுகள் அனைத்தும் ஆத்மார்த்தமான கருத்துக்கள்
  என்பது முற்றிலும் உண்மை.
  நற்பவி என்றும் அன்புடன் ஹரி

  • machamuni says:

   அன்பு மிக்க திரு ஹரி அவர்களே,
   கருத்துரைக்கு மிக்க நன்றி !!!!!
   தங்கள் கருத்து ஏற்கெனவே கீதையிலும் ,பாரதியார் பாடலிலும் ( நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே நீங்களெல்லாம் சொப்பனந்தானோ வெறும் தோற்ற மயக்கங்களோ!கற்பதுவே கேட்பதுவே கருதுவதே நீங்களெல்லாம் அற்ப மாயைகளோ உம்முள் ஆழ்ந்த பொருளில்லையோ!!)விரிவாக கூறியிருப்பதுதான்.அந்தக் கருத்துக்களை ஏற்கெனவே எனது வலைப்பூவில் விரிவாக எழுதியுள்ளேன்.
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 8. chinna says:

  அன்புள்ள அய்யா
  வணக்கம்.கரிசாலைநெய் யாரிடம் கிடைக்கும்,நன்றி அன்புடன் சின்னா

  • machamuni says:

   அன்பு மிக்க திரு சின்னா அவர்களே,
   கருத்துரைக்கு மிக்க நன்றி !!!!!
   கரிசாலை நெய் கடையில் கிடைக்கும்.IMPCOS,ADAYR,சென்னை தயாரிப்பில் கிடைக்கும்.
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 9. chinna says:

  அன்புள்ள அய்யா
  வணக்கம்.rice bran oil சமையலுக்கு உபயோகப்படுத்தலாமா?
  அன்புடன் சின்னா

  • machamuni says:

   அன்பு மிக்க திரு சின்னா அவர்களே,
   கருத்துரைக்கு மிக்க நன்றி !!!!!
   தவிட்டு எண்ணெய் ஜப்பான் நாட்டில் அதிகமாக உபயோகித்து வருகிறார்கள் .அங்கு உடல் நலம் இதனால் பேணப்படுகிறது என்று புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.எனவே நாமும் உபயோகிக்கலாம்.இந்த எண்ணெயில் உடலுக்கு நலம் புரியும் பல விடயங்கள் உள்ளன.
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 10. chinna says:

  அன்புள்ள அய்யா
  இந்த கரிசாலை உள்நாக்கில் தடவலாமா?
  சளி மற்றும் கபம் நீங்குமா?
  அன்புள்ள சின்னா

  • machamuni says:

   அன்பு மிக்க திரு சின்னா அவர்களே,
   கருத்துரைக்கு மிக்க நன்றி !!!!!
   கரிசாலை நெய் கற்பங்களில் ஒன்று.உயிரைக் கொல்லும் சளியை உடலில் இருந்து நீக்குவதில் தலையாயது.அண்ணாக்கில் இதை கட்டை விரலால் தேய்த்துக் கொடுக்க தலையில் உள்ள கபம் ( சளி ) சங்கிலி போலக் கொட்டும் என்று திருவள்ளுவ நாயனார் கற்பத்தில் கூறுகிறார்.வள்ளலார் கற்பத்துக்கு உபயோகித்த மூலிகைகளில் பொற்றலைக்கையான் என்னும் மஞ்சள் கரிசலாங்கண்ணியின் பங்கு தலையாயது.தலையில் கபம் குறையும் போது தலையில் நெருப்பறை திறக்கும்.///நெருப்பறை திறந்தபின் நீயும் நானும் ஈசனே- சிவவாக்கியர்/// எனில் எவ்வளவு முக்கியத்துவம் பெற்றதென்பது தெரிகிறதா??
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 11. chinna says:

  அன்புள்ள அய்யா ,
  நன்றி.கரிசாலை நெய் தடவும் போது பதியம் தேவையா?
  பொற்றலைக்கையான்,மஞ்சள் கரிசலாங்கண்ணி,கருங்கையான்
  எல்லாம் ஒன்றா அல்லது வேறு வேறா
  அன்புடன் சின்னா

  • machamuni says:

   அன்பு மிக்க திரு சின்னா அவர்களே,
   கருத்துரைக்கு மிக்க நன்றி !!!!!
   கரிசாலை நெய் தடவும் போது கரப்பான் பதார்த்தங்களை தவிர்த்தால் நல்லது.மஞ்சள் கரிசலாங்கண்ணி ( பொற்றலைக் கையான் )வேறு, வெள்ளைக் கரிசலாங்கண்ணி என்று அழைக்கப்படும் செடியை கையில் தேய்த்தால் கருப்பாக மாறும் ( அவ்வளவு இரும்புச்சத்து உள்ளது ) ,இதை கரிப்பான் என்று கிராமங்களில் அழைப்பர்.
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 12. hari says:

  அன்புள்ள சாமிஜி
  ///ஏழையான எனது பக்தன் இன்னும் பல காலம் இந்தப் பூமியில் அவஸ்தைப்
  பட வேண்டாம் என்று அவனுக்கிருக்கும் ஒரே பிடிப்பான அந்தப் பசுவை
  இறந்து போக ஆசீர்வதித்து ,எனது வைகுந்தத்திற்கு அவர்களை குடும்பத்தோடு
  அனுப்பி வைத்தேன்/// அருமை சாமிஜி
  “கடலளவு கிடைத்தாலும் மயங்க மாட்டேன்
  அது கையளவே ஆனாலும் கலங்க மாட்டேன்
  உள்ளத்திலே உள்ளது தான் உலகம் கண்ணா
  இதை உணர்ந்து கொண்டால் துன்பமெல்லாம் விளகும் கண்ணா”
  பாடல் உதவி கண்ணதாசன்
  நற்பவி ஹரி

  • machamuni says:

   அன்பு மிக்க திரு ஹரி அவர்களே,
   கருத்துரைக்கு மிக்க நன்றி !!!!!
   கண்ணதாசன் பாடல்கள் அற்புதமானவை.புரிந்தால் உலகம் விளங்கும்.
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 13. chinna says:

  அன்புள்ள அய்யா,
  சித்தர்கள் சொன்ன குறிப்பாக வாலாம்பிகை ,மனோன்மணி தாயின்
  மந்திர யந்திரங்கள் பற்றி தெரிவித்தால் பயனுள்ளதாக இருக்கும்
  நன்றி சின்னா

  • machamuni says:

   அன்பு மிக்க திரு சின்னா அவர்களே,
   கருத்துரைக்கு மிக்க நன்றி !!!!!
   சித்தர்கள் சொன்ன குறிப்பாக வாலாம்பிகை , மனோன்மணி தாயின் மந்திர யந்திரங்கள் பற்றி தெரியப்படுத்துவது இது போன்று வலைத் தளத்தில் இயலாது.நீங்கள் எங்கள் மச்ச முனிவரின் சித்த ஞான சபைக்கு இரு பவுர்ணமிக்கு வருகை தந்து உபதேசம் பெற்றால் தெரிந்து கொள்ளப் போகிறீர்கள்.அவ்வளவுதான்.
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 14. chinna says:

  அன்புள்ள அய்யா,
  சித்தர்கள்,மந்திரங்களை ஒருலட்சம் முறை ஜெபிக்கசொல்வதால் அதற்கு நீண்ட காலம் ஆகும்.மறைபொருளாக இதையும் சொல்லி இருகிறார்களா?அதற்கான உண்மை விளக்கம் என்ன என்று அறிய விரும்புகிறேன்
  (1)ஒரு லக்ஷம் முறை ஜெபிக்க எந்த முறையை கைக்கொள்ள வேண்டும்
  (2)சித்தர்களின் மந்திரங்களுக்கு உபதேசம் பெறுதல் அவசியமா?
  (3)அல்லது எப்படி தொடங்குவது அய்யா .வழி காட்டவும்
  நன்றி சின்னா

  • machamuni says:

   அன்பு மிக்க திரு சின்னா அவர்களே,
   கருத்துரைக்கு மிக்க நன்றி !!!!!
   சித்தர்களின் மந்திரங்களுக்கு உபதேசம் பெறுதல் அவசியம் .அதற்குள்ளும் சூட்சுமம் இருக்கிறது . நீங்கள் எங்கள் மச்ச முனிவரின் சித்த ஞான சபைக்கு இரு பவுர்ணமிக்கு வருகை தந்து உபதேசம் பெற்றால் தெரிந்து கொள்ளப் போகிறீர்கள்.அவ்வளவுதான்.
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 15. chinna says:

  அன்புள்ள அய்யா,
  குளிப்பதற்கு ( பூலங்கிழங்கு/வங்காளப்பச்சை/விளமிசை) பொடி
  செய்ய வங்காளப்பச்சை கோவையில் எங்கும் கிடைக்கவில்லை
  .வருவதே இல்லை என்று நாட்டுமருந்து கடையில் சொல்கிறார்கள்.
  அல்லது அதற்கு மாற்றாக என்ன சேர்க்கலாம்.
  அல்லது வேறு எங்கு கிடைக்கும் அய்யா.
  நன்றி சின்னா

  • machamuni says:

   அன்பு மிக்க திரு சின்னா அவர்களே,
   கருத்துரைக்கு மிக்க நன்றி !!!!!
   குளிப்பதற்கு பொடி திரு கண்ணன் சதுரகிரி ஹெர்பல்ஸ் அவர்களிடம் கிடைக்கும் . இயற்கையான கடையில் கிடைக்காத மூலிகைகளையும் கலந்து தயாரிக்கிறார் . குளித்துப் பாருங்கள் . அதன் சுகம் தனி .
   அவரது முகவரி மற்றும் அலை பேசி எண்கள் கீழே கொடுத்துள்ளேன் .
   திரு சதுரகிரி ஹெர்பல்ஸ் கண்ணன் அலைபேசி எண்கள்
   +919894912594
   +919943205566
   அவரது முகவரி:-
   பெ.கண்ணன்.
   சதுரகிரி ஹெர்பல்ஸ்,
   2/147,மங்கம்மாள் கோவில் தெரு,
   கான்சாபுரம்,(P-O)
   திரு வில்லிபுத்தூர் தாலுகா,
   விருதுநகர் மாவட்டம்.
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 16. hari says:

  /////சித்தர்களின் மந்திரங்களுக்கு உபதேசம் பெறுதல் அவசியம் .அதற்குள்ளும் சூட்சுமம் இருக்கிறது . நீங்கள் எங்கள் மச்ச முனிவரின் சித்த ஞான சபைக்கு இரு பவுர்ணமிக்கு வருகை தந்து உபதேசம் பெற்றால் தெரிந்து கொள்ளப் போகிறீர்கள்.அவ்வளவுதான்.////
  அன்புள்ள சாமிஜி
  அதற்கு ஆண்டவர் உத்தரவு கிடைத்தால் உடனே தவறாமல்
  வருகிறேன்
  நற்பவி ,என்றும் அன்புடன் ஹரி

  • machamuni says:

   அன்பு மிக்க திரு ஹரி அவர்களே,
   கருத்துரைக்கு மிக்க நன்றி !!!!!
   முன்னர்க் கூறியது போல இறைவனை அறியாமல் இறை விதிகள் வசப்படாது.இறைவன் இருக்கும் தன்மை ,இடம் அறிய உபதேசம் அவசியம்.
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 17. china says:

  உடம்பினை முன்னம் இழுக்கென் றிருந்தேன்
  உடம்பினுக் குள்ளே யுறுபொருள் கண்டேன்
  உடம்புளே உத்தமன் கோயில்கொண் டான் என்று
  உடம்பினை யானிருந் தோம்புகின் றேனே

  • machamuni says:

   அன்பு மிக்க திரு சின்னா அவர்களே,
   கருத்துரைக்கு மிக்க நன்றி !!!!!
   யாம் தமிழ் முதுகலை சைவ சித்தாந்தம் பயிலும்போது தேர்வில் ஒரு கேள்வி கேட்டிருந்தது.அது/// உடம்பு மெய் என்பதனை ஆதாரங்களுடன் விளக்குக????/// .எனது சக நண்பர் ///காயமே இது பொய்யடா வெறும் காற்றடைத்த பையடா //// என்று எழுதி விளக்கிவிட்டு வந்தேன், என்றார் . யாம் அது உடம்பு பொய் என்பதற்கான விளக்கம் என்றோம் . அப்படியானால் உடம்பு மெய் என்பதனை எப்படி விளக்குவது என்று கேட்டார் .அதற்கு நாம் அப்போதைக்கு 65 பாடல்களை எடுத்துக் கூறி விளக்கினோம். இவ்வளவு பாடல்கள் இருக்கிறதா??? நமது பாடப் பகுதியில் இவை இல்லையே என்றார் . இது போன்ற கேள்விகளை முதுகலை பட்டப் படிப்பில் கேட்டு நமது ஆழ்ந்த நூலாய்ச்சியை சோதிப்பார்கள் என்று கூறினோம்.அந்த 65 பாடல்களில் மேலே உள்ளதும் ஒன்று.
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 18. suban says:

  can you tell us about pineal gland and its activation. and what practice needed to activate. please

  thanks anna

  • machamuni says:

   அன்பு மிக்க திரு சுபன் அவர்களே,
   கருத்துரைக்கு மிக்க நன்றி !!!!!
   பீனியல் சுரப்பி என்னும் ஞானச் சுரப்பியில் சுரக்கும் திரவத்தை இறக்கிச் சாப்பிடத்தான் இத்தனை யோக சாதனை முறைகள் , ஞான உபதேச முறைகள் , ஆன்மீகம் என்பதே இதுதான். இதற்கு இந்தியாவில் ஒரு நல்ல குருநாதரை அணுகுங்கள். இதை வெளிப்படையாகக் கூற முடியாது.
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 19. THANGAL PATHIVIL MUNBEY PADITHA NIYABAKAM .மச்ச முனிவரின் சித்த ஞான சபைக்கு

  VARUVATHU ENDRAL THIRUMANAM AAKI ERUKKA VENDUM ENDRU SOLLI ERUNTHIRKAL.

  ANAAL ENAKU ENNUM VAYATHU 22 THAN ENNAL ANGU VARA MUDIYUMA ELLAI VITHI VITTA VALI THANA ETHARKU ETHUM VALI ERUNTHAAL SOLLUNGAL

  • machamuni says:

   அன்பு மிக்க திரு மது என்ற பாலாத் திருமால் அவர்களே,
   கருத்துரைக்கு மிக்க நன்றி !!!!
   இந்தக் கேள்விக்கு நாம் பல முறை பதிலளித்திருக்கிறோம் .இருந்தாலும் இப்போது ஒன்று கூறுகிறோம் . வாழ்நாள் முழுதும் ஞானத்தின் வாசனை கூடப் பெறாமல் இருக்கும் ஜென்மங்களைவிட சில நாட்கள் பொறுத்திருந்து திருமணம் முடித்த பின்னர் உபதேசம் வாங்கிக் கொள்ளலாமே???அதற்கு முன்னர் சபைக் கூட்டங்களுக்கு வரலாம் .அதற்குத் தடை இல்லை .அதில் கூறப்படும் விளக்கங்கள் புரிந்தால் உபதேசமே தேவையில்லாமல் ஞானம் உங்களுக்கு கை வந்துவிடலாம்.முயல்க!!!!
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 20. NP Sathiamurthy says:

  Thevareer Ayyavukku, vanakkam. ithu thaan enathu muthal muyarchi. Thamizhil type sey thean. Aanal payirchi illathathinal neenda neeram agugirathu. Manikkavum. Ungalin valaipoo, migavum elimayagavum aarvathai thoonduvathagavum amainthullathu. Ungal eraippani thodara vedugiren.

  • machamuni says:

   அன்புள்ள திரு என் பி சத்தியமூர்த்தி அவர்களே ,
   கருத்துரைக்கு மிக்க நன்றி,
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

75 + = 76