ஒரு சிறந்த ரசவாதி( பாகம் 3 )

June 28, 2012 by: machamuni

நான் ஆரம்ப காலகட்டங்களில் வலைப்பூவில் எழுதிய பதிவுகளில் ,இந்த முப்பூ குருவைப் பற்றி எழுதியிருந்தேன்.அதில் இருந்து படித்து யாராவது இந்தப் பதிவில், ஏற்கெனவே நான் எழுதியது இதுதானா என்று யாராவது கேட்பார்களா என்று எதிர் பார்த்தேன் .ஒருவரும் எழுதவில்லை.அந்தப் பதிவின் இணைப்பு இதோ.

http://machamuni.blogspot.in/2010/08/blog-post_25.html

அந்தப்பதிவில் குறிப்பிட்டிருந்த எனது தாத்தாவின் கையெழுத்துப் பிரதியிலிருந்து எடுக்கப்பட்ட பாடல் இதோ!!!

அந்தப்பதிவைப் படித்துவிட்டு வந்தால், இனிமேல் சிறிது புரியும் என்று நினைக்கிறேன் .எனென்றால் இது வரை வெகு சிலரே இது என்ன என்று லேசாகப் புரிந்து கேட்டார்கள். இதை என்னவென்று சொல்வது,எல்லா நோய்களையும் போக்கும் அற்புத மருந்து என்று வேண்டுமானால் இப்போதைக்குப் புரிந்து கொள்ளுங்கள்.

இந்த துறையில் நம் நாட்டில் இருந்து பிரிட்டிஷ்காரர்களாலும் பிரெஞ்சுக்காரர்களாலும் கொண்டு போன ஓலைச் சுவடிகளை வைத்து பல்கலைக் கழகமே நடத்தி வருகிறார்கள். பாராசெல்ஸ் போன்ற வெளி நாட்டுச் சித்தர்களும் இதை மறை பொருளாகச் சொல்லி வருகிறார்கள். இதை மறை பொருளாகச் சொல்வதால்தான் வேதங்களுக்கு மறை என்று பெயர்.இந்தத் தளத்தைப் பாருங்கள்.
http://www.levity.com

நானும் இந்த விடயத்தை அளவோடுதான் வெளியிடுகிறேன். பல்லாண்டுகள் இதைத் தேடி காடு மேடெல்லாம் அலைந்து திரிந்துள்ளோம்.  சித்தர்களின் பரி பாஷை புரியாமல் அல்லாடி இருக்கிறோம். பல தவறான செய்முறைகளைச் செய்து பார்த்து தோல்வி அடைந்திருக்கிறோம். இதை வெளியிடுவதன் மூலம் பல நோயாளிகள் பயன் பெறுவார்கள். பலர் தவறான ஆட்களிடம் சிக்கிச் சீரழிய மாட்டார்கள். ஆங்கில மருத்துவம் என்பது ஒரு வியாதிக்கும் மருந்தில்லாமலும், பல வியாதிகளைக் குணப்படுத்துவதாக பறை சாற்றுகிறது. இதை நான் இந்த பதிவிலேயே ஆதார பூர்வமாக வெளியிட்டிருக்கிறேன். இப்படிப்பட்ட உயர்ந்த நோக்கங்களுக்காகவே இது வெளியிடப்படுகிறது.

அகார,உகார ,மகார ,சிகாரம் நம்முள்ளும் உள்ளது பரத்திலும் உள்ளது.அண்டத்திலுள்ளது பிண்டத்தில் உள்ளது. பரத்தில் உள்ளதை பரம ரகசியத்தை அறிவது கடினம். நமக்கு உள்ளே உள்ளதை உணர்ந்தாலும் அது பரத்தில் உள்ளதைக் காட்டினால்தான் , அதை நமக்குள்ளே உண்டால் காயம் சித்தியாகும். நமக்குள் உள்ள அகார,உகார ,மகார ,சிகாரத்தை உபதேசிப்பதே எமது மச்ச முனிவரின் சித்த ஞான சபை .

பரத்தில் உள்ள அகார,உகார ,மகார ,சிகாரத்தைப் பற்றி வெளியிடுவதே இந்தக் கட்டுரை.மேலும் வெறும் கையில் ரசத்தை,சூட்சும சவுக்காரத்தை ( முப்பூ குரு ) வைத்து குழைத்து ரசத்தை மடியச் செய்து ,மீண்டும் அதே மடிந்த ரசத்தை வெறும் ஸ்பூனில் சாதாரண கேஸ் அடுப்பில் , 10 நிமிடங்களில் செய்த அற்புதமான ரசச் சுண்ணம்.உடனே நாங்கள் அதைச் சாப்பிட்டோம். இவை அத்தனையும் ஒளிப்படக் காட்சியாக.

[tube]http://www.youtube.com/watch?v=WJ5xluh6Z_M[/tube]

இந்த ரசச் சுண்ணத்தை தாமிரத் தகட்டுக்கு பூசி புடமிட வெள்ளியாகும். இந்த ரச வாத விடயங்களைக் கூறுவது நீங்கள் சாதாரண பொருள்களுக்கு ஆசைப்பட அல்ல. ரச வாதத்திற்கு ஆசைப் பட்டால் அதன் பலன் கேடானது.அதை மேலும் விவரிக்க விரும்பவில்லை.ஒரு தாழ்ந்த உலோகத்தை உயர்ந்த உலோகமாக மாற்ற வல்ல ஒரு பொருள் ( அதாவது தாமிரத்திலுள்ள களிம்பை அகற்றி அதை வெள்ளி ஆக்குவது போல) , நமது உடலில் உள்ள களிம்பை அகற்றி நம் உடலை நோயிலிருந்தும் விடுவித்து,நோயற்ற அற்புத அழியாத தேகத்தை கொடுக்கும்.

எனவே அக ஞானம் மட்டுமே தேவை என்று எண்ணி சும்மா இருக்காதீர்கள். விரைந்து செயல்படுங்கள்.அண்ட பகிரண்டங்களைப் பற்றிய புற ஞானமும் தேவை.ஒரு இளநீர் தேவை என்றால், நானே மரத்தை நட்டு நானே பயிர் செய்து நானே மரம் ஏறி நானே பறித்துச் சாப்பிடுவேன் என்றால் தடுப்பவர் யாருமில்லை.காலம் அதற்கு இடம் தருமா? என்றும் யோசியுங்கள்.விடயங்களைத் தெரிந்து தெளிந்து செய்து சாப்பிட எத்தனை பிறவிகள் ஆகுமோ???எனவே இது எப்படி? ஏன்? என்ன ? என்பன போன்ற கேள்விகளை விட்டு விட்டு கடைத்தேற வழி காணுங்கள்.

23 responses to “ஒரு சிறந்த ரசவாதி( பாகம் 3 )”

 1. பரமசிவம், மலேசியா says:

  அய்யா வணக்கம்.
  இந்த மாபெரும் ரகசியத்தை சர்வ சாதாரணமாக சொல்லி விட்டீர்கள் விட்டீர்கள். ஆச்சரியமாக இருக்கிறது. ஏனெனில் இந்நாட்டிற்கு வரும் ஒரு சில தமிழக சித்த மருத்துவர்கள், சாதாரண சிகிச்சைக்கூட label கிழித்துவிட்டு மருந்து கொடுப்பார்கள். வளர்க உங்கள் சித்தர் தொண்டு.

  • machamuni says:

   அன்பு மிக்க திரு பரம சிவம், மலேசியா அவர்களே,
   கருத்துரைக்கு மிக்க நன்றி !!!!!
   நாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்.எனக்கு தெரிந்த , உண்மை என்று கண்ட அற்புதமான சித்தர்கள் பற்றிய விடயங்களை மட்டும் பகிருகிறேன்.கற்பனையான அல்லது ஊகித்துக் கொள்ளுங்கள் என்று சொல்லத் கூடிய விடயங்களை எழுதுவதுமில்லை சொல்வதுமில்லை.
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

   • drbaskar says:

    ஐயா,தாங்கள் என்னையும் சித்த ஞானசபையில் என்னையும் உறுப்பினராக சேர்த்து,என்னையும் கடைத்தேற செய்ய வேண்டும்,வரும் பவுர்ணமி அன்று சித்தர் அருளுடன் உஙகளை சந்திகிறேன்.
    Dr.J.Baskar,Bangalore

    • machamuni says:

     அன்பு மிக்க திரு Dr.J.Baskar,Bangalore அவர்களே,
     கருத்துரைக்கு மிக்க நன்றி !!!!!
     வரும் பவுர்ணமி நாளைதான் . இரவு 9 மணிக்கு சபைக் கூட்டம் ஆரம்பிக்கும் . அங்கே நான் ஒரு சாதாரண உறுப்பினர்தான் . குருநாதர் அருள்மிகு பார்த்த சாரதி ஐயா அவர்கள்தான் எல்லாம் .எனவே அவரைத் தொடர்பு கொள்ளுங்கள் . நான் சில காரணங்களால் நாளை வர இயலாத சூழலில் உள்ளேன். ஆனால் தாங்கள் செல்லுங்கள்.குறைந்தது இரு கூட்டங்களுக்கு வந்திருந்தால்தான் உபதேசம் என்ற நிபந்தனை உள்ளது .எனவே போய்வருக!!!!
     மிக்க நன்றி
     என்றென்றும் பேரன்பினால்
     சாமீ அழகப்பன்

 2. தேவன் says:

  /// அண்ட பகிரண்டங்களைப் பற்றிய புற ஞானமும் ///

  மரம் நட்டு வளர்க்க உங்களை போன்றோர் துணையிருந்தால் நலம்.

  ஏனைய விடயங்களை தெளிவாக கண்டேன். எனக்கு மகிழ்வாக இருக்கிறது. சித்த மருத்துவம் ஸ்திரமாக இருக்கிறது தமிழ்நாடு இனி பழந்தமிழ் நாடாக மாற வேண்டும். இது என் அவா.

  • machamuni says:

   அன்பு மிக்க திரு தேவன் அவர்களே,
   கருத்துரைக்கு மிக்க நன்றி !!!!!
   நினைத்த மாத்திரத்தில் சாதிக்கும் வல்லமை உள்ளவர்கள் சித்தர்கள்.அவர்கள் கண்ட விஞ்ஞானம் இலேசாக இருக்குமா?
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 3. hari says:

  அன்புள்ள சாமிஜி
  சிறப்பான பதிவு.இதன் மூலம்
  ரசம் எளிதில் பஸ்மம் ஆவது
  அதிசயம்.
  ரசத்துடன் கலப்பது முப்புகுருவா
  பச்சை சிங்கம் ஜெயநீரா
  என தெரிவிக்க வேண்டுகிறேன்
  ssetex@gmail.com
  அன்புடன் ஹரி

  • machamuni says:

   அன்பு மிக்க திரு ஹரி அவர்களே,
   கருத்துரைக்கு மிக்க நன்றி !!!!!
   அவசரம் வேண்டாம்.ஆரம்ப வகுப்புகளிலேயே தாங்கள் முனைவர் பட்டம் பெற்றுவிட துடிக்கிறீர்கள்.படிப்படியாக பலப்பல விடயங்கள் வெளியாகும்.உங்கள் அனைத்து சந்தேகங்களுக்கு விடையும் கிடைக்கும்.பதிவுகளைப் பார்த்து வாருங்கள்.
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 4. hari says:

  அன்புள்ள சாமிஜி
  வணக்கம்.ஜின்செங் என்ற கொரிய நாட்டு
  மூலிகை பற்றி தெரிவிக்கவும்.
  என்றும் அன்புடன் ஹரி

  • machamuni says:

   அன்பு மிக்க திரு ஹரி அவர்களே,
   கருத்துரைக்கு மிக்க நன்றி !!!!!
   ///அன்புள்ள சாமிஜி வணக்கம்.ஜின்செங் என்ற கொரிய நாட்டு மூலிகை பற்றி தெரிவிக்கவும்.
   என்றும் அன்புடன் ஹரி///
   ”ஜின்செங்”என்ற சீன வார்த்தைக்கு ”CURE ALL”என்று பொருள்.உடலில் ஏற்படும் எல்லா வியாதிகளையும் குணப்படுத்துவதால் இந்தப் பெயர்.இது பற்றி பின்னர் விரிவாக நான் எழுதுகிறேன்.
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 5. hari says:

  அன்புள்ள சாமிஜி
  அய்யா ,இதில் உள்ள ரசம் சுத்தி
  ( ஏழு சட்டை உள்ளது என்று முன்பு
  தெரிவித்து இருந்தீர்கள் )
  செய்து பிறகு கலக்கப்படுகிறதா ?
  இரசகந்தி என்பது என்ன என்றும்
  தெரிவிக்க வேண்டுகிறேன் அதனால்
  புற்றுநோய் தீரும் என்று விஜய் டிவியில்
  ஒரு பேட்டி பார்த்தேன்
  என்றும் அன்புடன் ஹரி

 6. hari says:

  அய்யா
  “அடுக்குநிலை போதம்”பாடல்கள் முழுவதையும்
  அர்த்தத்துடன் விளக்கம் அளிக்குமாறு (பிறிதொரு சமயம் )
  கேட்டு கொள்கிறேன்.
  என்றும் அன்புடன் ஹரி

  • machamuni says:

   அன்பு மிக்க திரு ஹரி அவர்களே,
   கருத்துரைக்கு மிக்க நன்றி !!!!!
   அவசரம் வேண்டாம்.அடுக்கு நிலைப் போதம் பற்றி என்னால் வெளியில் விளக்க இயலாது.எங்கள் சபையில் வைத்து , சபையில் உபதேசம் உறுப்பினர்களிடம் மட்டுமே என்னால் ஞான விடயங்களைப் பற்றி திறப்பாக எதுவும் என்னால் விளக்கிச் சொல்ல முடியும். எனக்கும் சில கட்டுப்பாடுகள் உண்டு.அதை நான் அனுசரித்தே ஆக வேண்டும்.“மச்ச முனிவரின் ஏழாம் பேரரிடம் நான் தெரிந்து கொண்ட பொருள் விடயத்தை எக்காரணத்தை முன்னிட்டும் யாரிடத்தும் சொல்வதில்லை.இது சத்தியம்.இது சத்தியம் . இது சத்தியம் . என்று சபை அன்பர்கள் அனைவருமே சத்தியம் செய்துள்ளோம் “ எனவே அச்சத்தியத்தை மீற இயலாது.
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 7. hari says:

  அன்புள்ள அய்யா
  இந்த முறையில் கலந்தால் மற்ற உலோகங்களும்
  (அய,செம்பு,காந்தம் போன்ற எந்த)மடியுமா?விளக்கம்
  தருமாறு கேட்டு கொள்கிறேன்.நற்பவி
  என்றும் அன்புடன் ஹரி

  • machamuni says:

   அன்பு மிக்க திரு ஹரி அவர்களே,
   கருத்துரைக்கு மிக்க நன்றி !!!!!
   அவசரம் வேண்டாம்.அனைத்தும் முப்பூ குருவில் மடியும்.இதை அடுத்து வரும் ஒளிப்படக் காட்சிகளில் வரும் பதிவுகளில் வெளியிட இருக்கிறேன். பதிவுகளைப் பார்த்து வாருங்கள்.
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 8. hari says:

  அன்புள்ள சாமிஜி
  தங்கள் பழைய பதிவு ஒன்றில் தாங்கள் குறிப்பிட்டது
  ////மூதேவியின் வாகனம் கழுதை என்பதற்கு ஆதாரமாக
  எனது தாத்தா காலத்து தமிழ் அகராதியில் இருந்து நகல்
  எடுத்து பிரசுரித்துள்ளேன்./////போகர் சித்தர் நூல்களிலும்
  புலிப்பாணி சித்தர் நூல்களிலும் கழுதை ஒரு அற்புதமான
  பிறவி என்றும் தற்காலத்தில்கூட வீடு கட்டும் முன்
  கழுதையை அந்த இடத்தில கட்டிப்போட்டால் தோஷம்
  நீங்கிவிடும் என்ற நம்புகிறார்கள்.இதை பற்றி விளக்குங்கள்

  • machamuni says:

   அன்பு மிக்க திரு ஹரி அவர்களே,
   கருத்துரைக்கு மிக்க நன்றி !!!!!
   கழுதையின் மூத்திரம், பால் அதன் முடி ஆகிய அனைத்துமே பலவிதமான மருந்துகளுக்காகும் சிறு குழந்தைகளுக்கு சீர் அடிக்காமல் இருக்க கழுதைப் பாலை , குழந்தை பிறந்த மூன்று நாட்களுக்குள் கறந்த உடன் (கறந்து அதிக நேரம் வைக்கக் கூடாது .வைத்தால் அதில் புழு வந்துவிடும் என்பார்கள் ) கொடுத்தால் மிக மிக நன்று . குழந்தை ஊரையே சுற்றி வந்தாலும் குழந்தைக்கு ஒன்றும் ஆகாது என்பதால் இதை ஊர் சுற்றிப் பால் என்று அழைப்பார்கள்.
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 9. ms says:

  “அக ஞானம் மட்டுமே தேவை என்று எண்ணி சும்மா இருக்காதீர்கள். விரைந்து செயல்படுங்கள்.அண்ட பகிரண்டங்களைப் பற்றிய புற ஞானமும் தேவை.என்னிடமோ குருநாதரிடமோ வீண் விவாதங்களில் ஈடுபடாதீர்கள்?ஒரு இளநீர் தேவை என்றால், நானே மரத்தை நட்டு நானே பயிர் செய்து நானே மரம் ஏறி நானே பறித்துச் சாப்பிடுவேன் என்றால் தடுப்பவர் யாருமில்லை.காலம் அதற்கு இடம் தருமா? என்றும் யோசியுங்கள்.விடயங்களைத் தெரிந்து தெளிந்து செய்து சாப்பிட எத்தனை பிறவிகள் ஆகுமோ???எனவே இது எப்படி? ஏன்? என்ன ? என்பன போன்ற கேள்விகளை விட்டு விட்டு கடைத்தேற வழி காணுங்கள்” – எனக்கு பிடித்த சொற்கள்… தங்களின் உதவி, தயவு எப்பொழுதும் வேண்டும். சேவை தொடரட்டும்…

  • machamuni says:

   அன்பு மிக்க திரு முத்துக் குமரன் அவர்களே,
   கருத்துரைக்கு மிக்க நன்றி !!!!!
   இறைவன் எமக்கு உதவுகிறான்.எம்மை எல்லாருக்கும் உதவும்படிக்கு இறைவன் சங்கல்பித்து இருக்கிறான்.பின் எதற்கு கவலை.சிவனே என்று இருங்கள்.இறைவன் உங்களை கவனித்து உதவவே இருக்கிறான்.எமது வலைத்தளத்திற்கு வருபவர்கள் அனைவரும் பாக்கியவான்கள்.இறைவனால் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் .இல்லையென்றால் எம்மை இறைவன் இப்படி ஏவுவானா????
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 10. hari says:

  அன்புள்ள சாமிஜி
  ///அனைத்தும் முப்பூ குருவில் மடியும்///.எனக்கு முப்புகுரு கிடைக்குமா?
  நன்றி அன்புடன் ஹரி

  • machamuni says:

   அன்பு மிக்க திரு ஹரி அவர்களே,
   கருத்துரைக்கு மிக்க நன்றி !!!!!
   முதலில் முப்பு என்றால் என்ன.அதை எப்படிக் கையாளுவது போன்ற விடயங்களை விளக்க இருக்கிறேன்.அதை தெரிந்து கொள்ளுங்கள்.அதை வைத்து என்ன செய்ய முடியும் என்பதை கற்றுக் கொள்ளுங்கள்.இது சித்தர்களின் உயரிய விஞ்ஞானம்.இதை சற்று சாக்கிரதையாகவே அணுக வேண்டும் .ஒன்றும் தெரியாமல் இதில் கால் வைக்க கூடாது.அகஸ்தியர் கற்ப முப்பு நூல் சூத்திரம் படியுங்கள்.முப்பூ குரு பற்றிய சித்தர் நூல்களைப் படியுங்கள்.பிறகு கேளுங்கள்.அப்போதுதான் எதற்காக கேட்கிறீர்கள் என்று உங்களுக்கு புரியும்.
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 11. swami says:

  கொரியா ginseng பத்தி ஹரி அவர்கள் கேட்டு இருந்தாங்க…அதை பற்றிய தகவலை பெற ஆவலா இருக்கேன்..தயவு செய்து தாருங்கள். அதனுடைய பயன் மற்றும் எவ்வாறு பயன்படுத்துவது போன்ற தகவல்களை தருமாறு தாழ்மையுடன் கேட்டுக்கு கொள்ளகிறேன். நன்றி ஐயா

  • machamuni says:

   அன்பு மிக்க திரு ஸ்வாமி அவர்களே,
   கருத்துரைக்கு மிக்க நன்றி !!!!!
   உங்கள் வேண்டுகோளுக்கு இணங்கி இது பற்றி விரைவில் ஒரு பதிவு இருக்கும்.ஆனால் நான் ஏற்கெனவே எனது வலைப்பூவில் உள்ளவற்றைப் படித்துவிட்டு இந்த கோரிக்கையை வைத்தால் நன்றாக இருக்கும் என்று எண்ணுகிறோம்.
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

30 + = 37