ஒரு மஹா மூலிகை ( நத்தைச் சூரி) பாகம் 5

June 1, 2012 by: machamuni

உடல் பாதி உயிர் பாதி என்ற வர்ம நூல் மிகப் பழைமையான நூல்.சிவன் பார்வதிக்குச் சொல்லி அதன் மூலம் உலகுயிர்கட்கு கிடைத்ததே இந்நூல்.இந்நூலில் பல விடயங்கள் பட்ட வர்த்தனமாக தெரிவிக்கப்பட்டுள்ளன. இந்த நூலில் நத்தைச் சூரியின் உபயோகம் பற்றி குறிப்பிட்டு உள்ள விடயங்களை மட்டும் இங்கே அறியத் தருகிறேன்.

இப்படி நத்தைச் சூரியை பயன் படுத்தி செய்யப்படும் மருந்துகள் உடலை வளமாக வைத்திருந்து மரணத்தை தள்ளிப் போடும் .

ஒரு மஹா மூலிகை ( நத்தைச் சூரி) பாகம் 5  முற்றிற்று.

அடுத்து ஒரு மஹா மூலிகையின் செயல்பாட்டு விளக்க ஒளிப்படக் காட்சியுடன் அடுத்த பதிவில் சந்திப்போம்.

18 responses to “ஒரு மஹா மூலிகை ( நத்தைச் சூரி) பாகம் 5”

 1. shareef says:

  super sami ji

  nanri

  adutha pathivu eppo enru
  avalaaga ullathu

  • machamuni says:

   அன்பு மிக்க திரு ஷெரீஃப் அவர்களே,
   கருத்துரைக்கு மிக்க நன்றி !!!!!இன்னும் நிறைய ஒளிப்படக் காட்சிகளும் மூலிகைகளின் செயல்பாட்டு விளக்கங்களும் பதிவில் தொடர்ந்து வரும்.யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்.
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 2. kannan says:

  தங்கள் பகிர்வுக்கு நன்றி . நான் உங்கள் தளத்தை தினமும் பார்ப்பேன் ஏதாவது புதிதாக வந்து உள்ளதா என்று !. அந்த அளவுக்கு ஆசை உங்கள் தளத்தை படிப்பதற்கு. எனக்கு அதிகமான சந்தேகங்கள் உள்ளது அதை மெயில் -இல் தொடர்பு கொள்ள ஆசை படுகிறேன் . ஐயா ! தாங்கள் கூறும் மூலிகை பொருட்கள் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்குமா ? அல்லது எங்கு கிடைக்கும் என்று சொன்னால் நன்றாக இருக்கும். அடுத்த பதிவு எப்போது என்று மிக ஆர்வமாக உள்ளேன் !

  • machamuni says:

   அன்பு மிக்க திரு கண்ணன் அவர்களே,
   கருத்துரைக்கு மிக்க நன்றி !!!!!சந்தேகங்களை மின்னஞ்சலில் தொடர்பு கொண்டால் நானும் பதில் தருகிறேன்.நான் கூறும் மூலிகைகளில் பல சதுரகிரி ஹெர்பல்ஸ் திரு கண்ணன் அவர்களிடம் கிடைக்கும்.அவரிடம் இல்லாத சில மருந்துகள் நாட்டு மருந்துக் கடையில் கிடைக்கும்.
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 3. Ramesh Babu R says:

  அன்பிற்கு உண்டாம் அடைக்கும் தாழ்….. என்பதற்கு முகவரியாக விளங்கும் எங்கள் அண்ணன் திரு. அழகப்பன் அண்ணன் அவர்களுக்கு….

  இன்று உங்கள் பதிவினை நீண்ட நாட்களுக்கு பிறகு பார்த்தேன்…. மகா மூலிகை பற்றிய தெளிவுரை மிகவும் பயனுள்ளதாக அமைந்து இருந்தது….

  உங்களின் வேலை பளுவுக்கு மத்தியில் இந்த சேவையை மிகவும் நேர்த்தியாக செய்யும் உங்களை பார்த்தால், நாங்கள் செய்யும் வேலை சுமை, மன உளைச்சல் எல்லாம் சூரியனை கண்ட பனி நீர் போல பறந்து விடுகிறது…..

  நன்றிகள் பற்பல…. என்றும் அன்புடன் உங்கள் தம்பிகளில் ஒருவன் ரமேஷ்பாபு, லாகோஸ், ஆப்ரிக்கா…..

  • machamuni says:

   அன்பு மிக்க திரு ரமேஷ் பாபு அவர்களே,
   கருத்துரைக்கு மிக்க நன்றி !!!!!உங்கள் தொடர்பு எமது மகிழ்ச்சியில் ஒன்று.
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 4. Karthick says:

  Vanakam Ayya,

  Arumai Yana Pathivu.

  Nandrikal palla!!

  Thangal panee Seraka

  ellam Valla erai vanai
  Vanaeku Keran…

  Karthick
  Mumbai

  • machamuni says:

   அன்பு மிக்க திரு கார்த்திக் அவர்களே,
   கருத்துரைக்கு மிக்க நன்றி !!!!!இறை அருள் எல்லாருக்கும் கிடைக்கட்டும்.எல்லா வளமும் நலமும் பெற்று அனைவரும் வாழட்டும்.
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 5. Vijay says:

  Ayya

  Thanks for sharing this wonderful knowledge. I heard that there are different types of nathai choori is it right? Is it true that Nathai choori plant will dry when a women in her period time touches the plant? It is heard that it is wonderful vaasyam moolikai, how is it used.

  Sir, you are doing a great service. Wishing you to continue and give us the rare knowledge.

  Anbudan

  Vijay

  • machamuni says:

   அன்பு மிக்க திரு விஜய் அவர்களே,
   கருத்துரைகளுக்கு மிக்க நன்றி !!!!! நீங்கள் கேள்விப்பட்டதாக கூறியது அனைத்தும் உண்மை.
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

  • machamuni says:

   அன்பு மிக்க திரு விஜய் அவர்களே,
   கருத்துரைகளுக்கு மிக்க நன்றி !!!!!நீங்கள் கூறியது அனைத்தும் உண்மை.பொதுவாக அஷ்ட கர்ம மூலிகைகள் அனைத்தும் பெண்ணின் மாதாந்திர விலக்கு வாடை பட்டாலே கருகிவிடும்.
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 6. hari says:

  அன்புள்ள சாமிஜி
  ///நத்தைசூரியை தேத்தண்ணீர் /// ஆக செய்து சாப்பிடுவது என்றால் என்ன ?தண்ணீரில் போட்டு கொதிக்கவிட்டு குடிகவேண்டுமா ?தவிர இம்மாதிரி கல்ப மருந்துகளை இரவு எத்தனை மணி வரை
  சாப்பிடலாம்
  நற்பவி ஹரி

  • machamuni says:

   அன்பு மிக்க திரு ஹரி அவர்களே,
   கருத்துரைக்கு மிக்க நன்றி !!!!!
   நத்தைசூரியை தேத்தண்ணீர் என்றால் நத்தைச் சூரி விதையை சிதைத்து தண்ணீரில் போட்டு கொதிக்கவிட்டு குடிப்பதுவே!!!கல்ப மருந்துகளைச் சாப்பிடும் போது அந்தந்த கற்ப மருந்துகளுக்கு என்று சில கட்டுப்பாடுகள் உண்டு , அதைக் கடைப்பிடிக்க வேண்டும்.எடுத்துக் காட்டாக சர்க்கரை வேம்புக் கற்பம் சாப்பிடும்போது மிளகு சாப்பிடக் கூடாது என்பார்கள் சித்தர்கள் .மிளகு சாப்பிடக் கூடாது என்ற நிபந்தனை மற்ற கற்பங்களுக்கு ஏற்புடையதாகாது.எனவே என்ன கற்பம் சாப்பிடப் போகிறோம் , அதனை எத்தனை நாள் சாப்பிடப் போகிறோம் , எப்படி சாப்பிட வேண்டும் , உங்கள் வயது என்ன ,அந்தக் கற்பம் சாப்பிடும் போது உடலில் ஏற்படும் விளைவுகள் என்ன என்பதை தெரிந்து தீர்மானித்து சாப்பிட வேண்டும்.அதற்கு முதலில் 1) திரு வள்ளுவ நாயனார் கற்பம் 2) போகர் கற்பம் 3) கோரக்கர் கற்பம் 4) கொங்கணவர் கற்பம் போன்ற நூல்களைப் படியுங்கள் . நீங்கள் கற்பம் சாப்பிட விரும்பும்போது கேட்க வேண்டிய கேள்வி இது.இப்போதே கேட்டு செய்யப் போவதுதான் என்ன? .இருந்தாலும் பதிலளித்திருக்கிறேன் உங்கள் ஆர்வத்துக்காக !!!!!!
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 7. hari says:

  அன்புள்ள சாமிஜி
  /////நீங்கள் கற்பம் சாப்பிட விரும்பும்போது கேட்க வேண்டிய கேள்வி இது.இப்போதே கேட்டு செய்யப் போவதுதான் என்ன? .இருந்தாலும் பதிலளித்திருக்கிறேன் உங்கள் ஆர்வத்துக்காக !!!!!!////////////
  அப்போதைக்கு இப்போதே சொல்லிவைத்தேன் அரங்கத் தரவணைப்பள்ளியானே! என்று பெரியாழ்வார் சொன்னதை போல இப்போது சிறிது சிறிதாக தங்களிடம் தெரிந்து கொண்டால் மற்றும் ஆண்டவன் அனுகிரகமும் கிடைத்தால் பின்னர் உதவுமே என்று கேட்கிறேன்.
  நன்றி ,நற்பவி என்றும் அன்புடன் ஹரி

  • machamuni says:

   அன்பு மிக்க திரு ஹரி அவர்களே,
   கருத்துரைக்கு மிக்க நன்றி !!!!!
   நல்ல பதில்.எல்லா வளமும் நலமும் கிடைத் தோங்கி வளர்க!!!!!
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 8. அய்யா வணக்கம்

  நத்தைசூரி எங்கு கிடைக்கும் நான் வேலூர் மாவட்டம், அரக்கோணதில் வசிக்கிறேன்

  நான் அதை பெற எனக்கு உதவி செய்யுங்கள்

  மிக்க நன்றி
  புருசோத்தமன்

  • machamuni says:

   அன்புள்ள திரு K.PURUSHOTHAMAN அவர்களே!!!
   தங்களின் கருத்துரைக்கு நன்றி,
   சதுரகிரி ஹெர்பல்ஸ் திரு கண்ணனை நாடினால் நத்தைச்சூரி கிடைக்கும்.திரு சதுரகிரி ஹெர்பல்ஸ் கண்ணன் அலைபேசி எண்கள்
   +919894912594
   +919943205566
   அவரது முகவரி:-
   பெ.கண்ணன்.
   சதுரகிரி ஹெர்பல்ஸ்,
   2/147,மங்கம்மாள் கோவில் தெரு,
   கான்சாபுரம்,(P-O)
   திரு வில்லிபுத்தூர் தாலுகா,
   விருதுநகர் மாவட்டம்.
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 9. அண்ணாமலை-அ says:

  அய்யா நான் உங்கள் பதிவுகளை படித்து மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன்.அதனால் மேலும் நான் உங்கள் பதிவுகளை படிக்க ஆவலுடன் உள்ளேன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

84 − = 83