ஒளி உருவச் சித்தர்கள் (பாகம் 4)

June 29, 2012 by: machamuni

எனது வாழ்வில் கண்ட , காணக் கிடைக்காத அற்புத விடயங்களை நமது வலை வாசக அன்பர்களுக்காக , சித்தர்களின் பேரன்பினால் அளிப்பதில் பெரு மகிழ்வு கொள்கிறோம்.

வள்ளலார் தன் உடலை ஒளி உருவமாக ஆக்கிக் கொண்டதால் அவர் உடலின் பின் புறம் உள்ளவை எல்லாம் தெரியும் வண்ணம் ஆனது. எனவேதான் அவர் வெள்ளை உடையை உடல் முழுவதும் சுற்றி வைத்துக் கொண்டார்.அவர் நிழல் தரையில் விழாது. எனில் ஒளி ஊடுருவும் புகை வடிவமாகவே அவர் உடல் இருந்தது. அதே போல இந்தச் சித்தரும் ஒளி உருவமாக கடந்து செல்வதைப் பாருங்கள்.

இன்று வெளியிடப்படும் ஒரு ஒளிப்படக்காட்சி சித்தர்கள் ஒளி உருவமாக சதுரகிரியில் நடமாடும் ஒளிப் படக்காட்சி இதோ கீழே.அவர்கள் சந்தன மஹாலிங்கத்தையும் , சுந்தர மஹாலிங்கத்தையும் தரிசிக்க இங்கு வந்து செல்கிறார்கள். இது தந்திரக் காட்சியோ வேறு ஏதாவது என்று கூறுபவர்கள் இருக்கிறார்கள்.அவர்கள் என்னிடம் இது பொய்யென்றும் போலி என்றும் ,கேள்விகள் கேட்ட அனுபவம் ஏற்கெனவே எனக்கு உண்டு.அவர்கள் இந்த ஒளிப்படக்காட்சியை தரவிறக்கி பரிசோதித்து பார்த்துக் கொள்ளுங்கள்.

[tube]http://www.youtube.com/watch?v=oG0RZ9rO0AM[/tube]

சித்தர்கள் அருள் ஓங்கி நமக்கெல்லாம் கிடைக்கட்டும்.

ஓம் அகத்தீசாய நமஹ !சித்தர்கள் அனைவரையும் தலைதாழ்த்தி வணங்குகிறோம்.

35 responses to “ஒளி உருவச் சித்தர்கள் (பாகம் 4)”

 1. Winmani says:

  ஓம் அகத்தீசாய நம !
  குருவடி சரணம் திருவடி சரணம்

  • machamuni says:

   அன்பு மிக்க திரு விண்மணி அவர்களே,
   கருத்துரைக்கு மிக்க நன்றி !!!!!
   அகத்தியர் எல்லோருக்கும் நல்லருள் புரியட்டும்.இது உங்கள் இடம் அடிக்கடி எழுதுங்கள்.
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

  • machamuni says:

   அன்பு மிக்க திரு விண்மணி அவர்களே,
   கருத்துரைக்கு மிக்க நன்றி !!!!!
   அகத்தியர் எல்லோருக்கும் நல்லருள் புரியட்டும்.இது உங்கள் இடம் அடிக்கடி எழுதுங்கள்.
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 2. hari says:

  அன்புள்ள சாமிஜி
  அய்யா தங்களின் காணொளி கண்டேன்
  மிகவும் அருமை.இது தாங்களே எடுத்த
  காணொளியா? இதே போல மேலும்
  ஆவிகள் பற்றியும் ஜோதிப்புல் போன்ற
  அரிய வகைகளின் தன்மைகள் பற்றியும்
  புழுவிலிருந்து குளவி போன்ற காணொளிகள்
  கிடைத்தால் வெளியிடவும்.
  என்றும் அன்புடன் ஹரி

  • machamuni says:

   அன்பு மிக்க திரு ஹரி அவர்களே,
   கருத்துரைக்கு மிக்க நன்றி !!!!!
   உங்கள் ஆர்வம் புரிகிறது. உங்கள் கேள்விகளே அதிகம் இடம் பெறுவதில் இருந்து தெரிகிறது.எனக்குத் தெரிந்த விடயங்களைப் பற்றி, மட்டும் நான் எழுதுவதில்லை.அந்த விடயங்கள் ஒவ்வொன்றும் நடப்பில் ,அனுபவ நடப்பில் அனுபவதித்து பார்த்து நான் வெற்றி கண்ட விடயங்கள் ஒவ்வொன்றையும் விவரித்து ஒளிப்படக் காட்சியாகவோ ,அல்லது புகைப்படக் காட்சியாகவோதான் வெளியிடுகிறேன்.இதில் பல விபரீதமான பரிசோதனைகளிலும் பயம் கொள்ளாமல் ஈடுபடுவேன்.சித்தர்களின் மேல் உள்ள என் அனுபவங்கள் அப்படி.அவர்கள் என்னை ஒவ்வொரு வினாடியிலும் வழி நடத்துவதை உணர்கிறேன்.எனவே என் ஒவ்வொரு அனுபவங்கள் பற்றியும் விரிவாக நான் எழுதுகிறேன்.பதிவுகளைப் பார்த்து வாருங்கள்.
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 3. hari says:

  அன்புள்ள சாமிஜி
  அய்யா.
  //சித்தர்கள் அருள் ஓங்கி நமக்கெல்லாம் கிடைக்கட்டும்.
  ஓம் அகத்தீசாய நமஹ !சித்தர்கள் அனைவரையும் தலைதாழ்த்தி வணங்குகிறோம்//

  சதுரகிரி மலையில் நடு இரவில் சித்தர்கள் பூஜை
  செய்வதாக ஒரு நூலில் இருந்தது.உருவத்துடன் அவர்களை
  கண்டதாகவும் நல்ல தெய்வீக மணம் கமழ பஜனை
  பாடல்களை வாத்தியங்கள் இசைத்து பாடியதாகவும் .
  பின்னர் திடீர் என அனைத்தும் மறைந்து விட்டதாகவும்
  அதில் நடுநாயகமாக தேஜசுடன் இருந்தவர் சிவபெருமானாக
  இருக்ககூடும் என்று அந்த நூலில் ஆசிரியர் தெரிவித்து
  இருந்தார்.
  எனது நண்பர் ஒருவர் 3 முறை கைலாயம் சென்று வந்தவர்.
  அவர்கள் எடுத்த ஒரு கானொளியில் அதிகாலை சுமார் 3 மணி
  அளவில் அனேக ஒளி உருவங்கள் வானிலிருந்து கீழ்நோக்கி
  மானசரோவர் ஏரியில் மூழ்கி எழுந்தது பதிவாகி உள்ளது.

  “சித்தர் இங்கிருந்தபோது பித்தர் என்று எண்ணுவீர்”
  என்பது சித்தர் சிவவாக்கியரின் நெத்தியடியான உண்மை.
  எல்லா சித்த,முனி,ரிஷி கணங்கள் திருவடிகள் போற்றி.
  நற்பவி
  என்றும் அன்புடன் ஹரி

 4. மோகன்ராஜ். மு says:

  அன்புள்ள திரு. அழகப்பன் அய்யா அவர்களுக்கு,

  தங்களின் கண்ணொளி கண்டேன். குருவடிக்கும், திருவடிக்கும் சரணம்.

  தங்களின் அடுத்த பதிவை எதிர் நோக்கி,

  மு.மோகன்ராஜ்.

  • machamuni says:

   அன்பு மிக்க திரு மோகன்ராஜ் அவர்களே,
   கருத்துரைக்கு மிக்க நன்றி !!!!!
   மூலிகைகளின் சக்தியும் அவற்றின் பலன்களும் அடுத்து வரும் பதிவுகளில் ஒளிப்படக் காட்சிகளாக வெளியிட இருக்கிறேன். பதிவுகளைப் பார்த்து பயன் பெறுங்கள்.
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 5. MANIKANDAN-KOVAI says:

  Anbulla sagotharare,
  Thangalin kanoli moolam Siththarhalai dharisanam seiya yedhuvahiyadhu. Idhai kanpatharke nangal perum punniyam seithirukka vendum. Siththar vakkum sivan vakkum ondru enbathu pola siththarhalum sivamum ordru than. Enave indha kanoli katchiyal siva dharisananthai alithamaikku mikka nandri sagotharare.

  Nandri
  MANIKANDAN-KOVAI

  • machamuni says:

   அன்பு மிக்க திரு மணி கண்டன் அவர்களே,
   கருத்துரைக்கு மிக்க நன்றி !!!!!
   எனக்கு எத்தனை நாளுக்கு இந்த பணி இடப்பட்டிருக்கிறதோ அறியேன்.இறைவன் என்னை முடுக்கிவிடுகிறான் . இறைவனே என்னில் காரியமாற்றுகிறான்.http://software.nhm.in/products/writer/
   https://www.nhm.in/downloads/NHMWriterSetup1511.exe
   மேற்கண்ட இணைப்புகளில் இரண்டாவது இணைப்பு என் ஹைச் எம் தமிழ் எழுத்து எழுதியை உங்கள் கணிணியில் நிறுவிக் கொண்டு. ஆல்ட் + 2 அழுத்தினால் தமிழில் உச்சரிப்பு எழுத்து முறையில் யூனி கோட் ல் தட்டச்சு செய்யலாம்.அதாவது amma என்று தட்டச்சினால் அம்மா என்று தமிழ் எழுத்தில் வரும்.மீண்டும் ஆல்ட் + 0 அழுத்த உங்கள் விசைப்பலகை ஆங்கில முறைக்கு மாறிக் கொள்ளும்.இதை நிறுவிக் கொண்டால் எனது வலைத் தளத்தை நன்றாக வாசிக்க முடியும். கருத்துரைகளும் நீங்கள் எழுதியது போல எழுதினால் ஆங்கிலத்தில் தட்டச்சினால் அதுவே தமிழில் எழுதும்.
   பதிவுகளைப் பார்த்து பயன் பெறுங்கள்.
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 6. Ramesh Babu says:

  It is really Good Catch…. In fact, I too strongly believe if we have fate then only we can catch this type of Pictures from the Siddargal. Thanks Brother to sharing your collections and experiences with us. – Ramesh Babu R – Lagos.

  • machamuni says:

   அன்பு மிக்க திரு மணி கண்டன் அவர்களே,
   கருத்துரைக்கு மிக்க நன்றி !!!!!
   என் செயலாவது யாதொன்றுமில்லை.
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 7. MANIKANDAN-KOVAI says:

  அன்புள்ள சகோதரரே,
  மிகவும் நன்றி.தாங்கள் குறிப்பிட்டுள்ள மென்பொருள் எனக்கு மட்டுமல்ல என்னை போல பலருக்கும் பயனுள்ளதாக அமையும் என்பதில் ஐயமில்லை.இனி எனது கருத்துரைகள் தமிழிலேயே தொடரும்..

  நன்றி
  மணிகண்டன்-கோவை

  • machamuni says:

   அன்பு மிக்க திரு மணி கண்டன் அவர்களே,
   கருத்துரைக்கு மிக்க நன்றி !!!!!
   இனி தமிழிலேயே கருத்துரை எழுதுங்கள்.
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 8. drbaskar says:

  ஐயா,வரும் ப்வுர்ணமி அன்று பாண்டியுர் சிதத ஞானசபை கூட்ட்த்தில் கலந்து கொள்ள மிகவும் ஆர்வமாக உள்ளேன்.சித்தர்கள் ஆசி வேண்டுகிறேன்

  • machamuni says:

   அன்பு மிக்க திரு மருத்துவர் பாஸ்கர் அவர்களே,
   கருத்துரைக்கு மிக்க நன்றி !!!!!
   வாருங்கள்.நாடி வருபவர்களுக்குசித்தர்கள் ஆசி என்றும் உண்டு .
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

   • drbaskar says:

    நனறி ஐயா,இன்று திரு.கண்ணண் அவர்களுடன் தொலைபெசியில் பேசினேன்.உஙகள் அனைவரையும் வரும் பவுர்ணமி அன்று நேரில் சந்திகிறேன்.

    • machamuni says:

     அன்பு மிக்க திரு மருத்துவர் பாஸ்கர் அவர்களே,
     கருத்துரைக்கு மிக்க நன்றி !!!!!
     சந்திக்கலாம்.
     மிக்க நன்றி
     என்றென்றும் பேரன்பினால்
     சாமீ அழகப்பன்

 9. K.ANANDAN says:

  SIR,
  VANAKKAM
  OM NAMASHIVAYA

  PLEASE HELP ME TO KNOW GOD AND WHAT I HAVE TO DO AND HELP ME FOR DEEP MEDITATION .

  THANKS SIR,
  K.ANANDAN

  • machamuni says:

   அன்பு மிக்க திரு கே.ஆனந்தன் அவர்களே,
   கருத்துரைக்கு மிக்க நன்றி !!!!!
   நாம் சொல்லி ஏதுமில்லை.உங்களின் ஆன்மாவின் தேடல்,உங்களைக் கொண்டு சேர்க்கும்.தட்டுங்கள் திறக்கப்படும் என்ற வார்த்தைக்கே இடமில்லாமல் கதவுகள் திறந்தே இருக்கின்றன.நீங்கள் வரத்தான் வேண்டும்.தடையேதும் இருந்தாலல்லவோ கேட்க வேண்டும். தடைகளே இல்லை.
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 10. ms says:

  அய்யா அவர்களுக்கு,

  கேட்டறியா செய்திகள்..
  “வள்ளலார் தன் உடலை ஒளி உருவமாக ஆக்கிக் கொண்டதால் அவர் உடலின் பின் புறம் உள்ளவை எல்லாம் தெரியும் வண்ணம் ஆனது. எனவேதான் அவர் வெள்ளை உடையை உடல் முழுவதும் சுற்றி வைத்துக் கொண்டார்.அவர் நிழல் தரையில் விழாது. எனில் ஒளி ஊடுருவும் புகை வடிவமாகவே அவர் உடல் இருந்தது. அதே போல இந்தச் சித்தரும் ஒளி உருவமாக கடந்து செல்வதைப் பாருங்கள்”

  காணக்கிடைக்கா நிகழ்வுகளின் பதிவுகள்..

  என் நம்பிக்கை துளிர்விடுகின்றது..

  நன்றிகள் பல..
  என்றும் அன்புடன்,
  முத்துக்குமரன்

 11. Balaji says:

  இந்த படத்தை பார்த்து மெய் சிலிர்த்து போனேன் . இந்த படத்தை பகிர்ந்ததுக்கு என்னுடைய மனமாரத நன்றியை தெரிவித்து கொள்கிறேன் . வாசி யோகமும் சித்தர் தியான முறைகளையும் உங்களிடம் இருந்து பயில விரும்புகிறேன். குருவாய் என்னை வழி நடத்துங்கள் அய்யனே

  • machamuni says:

   அன்பு மிக்க திரு பாலாஜி அவர்களே,
   கருத்துரைக்கு மிக்க நன்றி !!!!!
   இறை இடம் கொடுத்தால் எல்லாம் நடக்கும்.
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 12. Sridhar says:

  அருமையான அதிசயமான பதிவு எனது சதுரகிரி பயண ஆசையை இன்னும் அதிகபடுத்தி இருக்கிற்து. நன்றி

  • machamuni says:

   அன்பு மிக்க திரு ஸ்ரீதர் அவர்களே,
   கருத்துரைக்கு மிக்க நன்றி !!!!!
   சித்த புருஷர்களின் அனுமதி பெற்ற ஒளிப்படங்கள் மட்டுமே நமது வலைத்தளத்தில் வெளியிடப்படுகின்றன! வெளியிட அனுமதி இல்லாத ஒளிப்படங்கள் நிறைய எம்மிடம் உள்ளன.
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 13. nitingeetam says:

  ஐயா,வணக்கம்.

  மிகவும் அற்புதம்…

  இந்த நிலையை அடைய என்னை போன்ற அடியார்கள் அடைய என்ன செய்ய வேண்டும்?????இந்த கலையை தாங்கள் கற்று கொடுக்கிறார்களா?????

  • machamuni says:

   அன்பு மிக்க திரு நிடிங்கீதம் அவர்களே,
   கருத்துரைக்கு மிக்க நன்றி !!!!!
   பாண்டியூர் மச்ச முனிவரின் சித்த ஞான சபையில் இதற்கான அடிப்படைகளை கற்றுத் தருவார்கள்.
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 14. purushothaman says:

  If anybody is lucky enough to watch the night sky during 1980–1982 between sunset and midnight starlike objects were flying from north to south and then from south to north. These were the invisible light body of Divine Humans functioned at that time.

  • machamuni says:

   அன்புள்ள திரு ராஜா அவர்களே ,
   கருத்துரைக்கு மிக்க நன்றி,
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 15. M.GUHAN says:

  ஒளி உருவச் சித்தர்கள் (பாகம் 3), ஒளி உருவச் சித்தர்கள் (பாகம் 2), ஒளி உருவச் சித்தர்கள் (பாகம் 1) இந்த மூன்று பகுதிகளையும் பார்க்க முடியுமானால் தெரிவிக்கவும்.
  பகுதி நான்கு மிகவும் சித்தர்கள் ஒளியுடலுடன் உலவி வருகிறார்கள் என்பதற்கு அருமையான சான்று. நன்றி

  • machamuni says:

   அன்புள்ள திரு எம் குகன் அவர்களே,
   உங்களது கருத்துரைக்கு நன்றி,
   ஒளி உருவச் சித்தர்கள் (பாகம் 1) http://machamuni.com/?p=35
   ஒளி உருவச் சித்தர்கள் (பாகம் 2 & 3 ) http://machamuni.blogspot.in/2010/07/blog-post_24.html
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 16. M.GUHAN says:

  இனியவரே,
  ம்ரு மனிதன் ஒளியுடல் பெற சாதாரணமாக என்ன சாதனை தொடர்ந்து செய்ய வேண்டும். தயவு செய்து தெரிவிக்கவும். நான் அடைய விரும்புகிறேன்.

  • machamuni says:

   அன்புள்ள திரு எம் குகன் அவர்களே,
   உங்களது கருத்துரைக்கு நன்றி,
   சாதாரண விடயமல்ல இது .கடும் மன உறுதி தேவையான தொடர்ந்த முயற்சி .விட்ட குறை தொட்ட குறை இருந்தால் மட்டுமே பலிதமாகும் .
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

   • M.GUHAN says:

    தங்கள் இனிய வழிகாட்டுதலுக்கு நன்றி. தங்கள் போன்றவர்களின் வழிகாட்டுதலாலும் இறைவனின் அருளாலும் முயற்சியாலும் ஒளி உடல் பெற இயலும் என்று நம்புகிறேன்.
    பகுதி 4 மற்றும் இது தொடர்பான விவரங்கள் இருப்பின் கொடுத்து உதவவும். தேவையெனில் நேரில் வந்து சந்திக்கிறேன்.
    நம்பிக்கையுடன்,
    மு.குகன்.
    12-3-14

    • machamuni says:

     அன்புள்ள திரு மு.குகன். அவர்களே,
     உங்களது கருத்துரைக்கு நன்றி ,
     இறையாற்றல் நமது முறையான ஆசைகளை நிறைவேற்ற பக்கத்திலேயே காத்துக் கொண்டிருக்கின்றார் . நாம்தான் அதை கவனிக்கக்கூட நேரமின்றி அலைகிறோம்.கவனியுங்கள் உங்கள் பக்கமாகக் கூட அப்படி ஒரு நபர் இருக்கலாம்.
     மிக்க நன்றி
     என்றென்றும் பேரன்பினால்
     சாமீ அழகப்பன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

9 + 1 =