ஞானம் என்பது உடல் சார்ந்ததா ? உயிர் சார்ந்ததா ? பாகம் ( 5 )

August 16, 2012 by: machamuni

இந்தப் பதிவைப் படிக்கும் முன்னர் ஞானம் என்பது உடல் சார்ந்ததா ? உயிர் சார்ந்ததா ? பாகம் 4 ஐ படித்துவிட்டுத் தொடர்ந்தால் நன்கு புரியும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

கண்ணில் சேரும் மலம் பீழை எனப்படுகிறது,கண் என்பது ஒரு சிறப்பு உறுப்பு,காற்றிலுள்ள ஆக்சிஜனை தானே நேரடியாக காற்றிலிருந்து எடுக்கும் சக்தி பெற்ற உறுப்பு. மேலும் வயிற்றில் ஒரு ஆப்பரேஷன் பண்ணினால் கண்ணில் வயிறு உறுப்புக்கு என்று உள்ள பகுதியில் ஒரு கோடு விழுந்துவிடும் .அந்தளவுக்கு உடலில் உள்ள அனைத்து விடயங்களும் கண்ணில் அடக்கம்.கீழுள்ள எமது வலைப்பூவில் ஏற்கெனவே நான் விளக்கியுள்ள விடயங்களை இணைப்பில் பாருங்கள்.

http://machamuni.blogspot.in/2010/12/8.html

எனவே கண்ணில் உள்ள அழுக்குகளை களைவது முக்கியம். கண்ணில் உள்ள அழுக்குகளை களைந்தால் உடலில் உள்ள அனைத்து அழுக்குகளும் களையப்பட்டு உடல் சுத்தமாகும்.

கண்குவளையின் படம்

கீழே உள்ள அரவிந்த் ஹெர்பல் லேப்ஸ் பிரைவேட் லிமிடெட் ன் கண் குவளை உபயோகக் குறிப்பும் கிடைக்கும் இடம் முகவரியுடன் உள்ள ஒளி நகல் கொடுக்கப்பட்டுள்ளது.

 கண்ணை கழுவ படத்தில் கண்ட கண்குவளை என்பதில்  காய்ச்சி ஆறவைத்து தெளிய வைத்து வெறும் தண்ணீரை மண்பானையில் ஊற்றி  3 மணி நேரம் குளிர வைத்த தண்ணீரை ஊற்றி உபயோகித்தால் போதும் . இன்னும் மிக நன்றாக இருக்க வேண்டும் என்றால் IMP-COPS , ADYAR  அவர்களால் தயாரிக்கப்படும் ரோஜாத் தீ நீர் ( பன்னீர் ), சித்தா அல்லது யூனானியில் (இதன் பெயர் அர்க் எ குலாப் ) வாங்கி தண்ணீருக்கு பதில் உபயோகிக்கலாம்.

கண் குவளையில் மண்பாத்திரத்தில் வைக்கப்பட்டுள்ள தண்ணீரை நிரப்பி கண்ணைக் கழுவும் ஒளிப்படக் காட்சி.

  [tube]http://www.youtube.com/watch?v=Db4T-DIivn8[/tube]

கண் குவளையில் பன்னீரை  நிரப்பி கண்ணைக் கழுவும் ஒளிப்படக் காட்சி.

[tube]http://www.youtube.com/watch?v=PkgBeMFkbR0[/tube]

மேலும் இந்த ஐம்மலம்  நீக்குதல் எப்படி என்று அடுத்த ஞானம் என்பது உடல் சார்ந்ததா ? உயிர் சார்ந்ததா ? பாகம் 6 ல் பார்க்கலாம்.

10 responses to “ஞானம் என்பது உடல் சார்ந்ததா ? உயிர் சார்ந்ததா ? பாகம் ( 5 )”

 1. வேதநாயகம் says:

  சாமி , எனது அம்மா தற்போது தான் கண் அறுவை சிகிச்சை செய்து உள்ளார்கள். அவர்களுக்கு வயது 60 . அவர்கள் எப்போது இந்த பயிற்சியை செய்யலாம் சாமி.நன்றி

  • machamuni says:

   அன்பு மிக்க திரு வேத நாயகம் அவர்களே,
   கருத்துரைக்கு மிக்க நன்றி !!!!!
   கண் அறுவை சிகிச்சை என்பதே ஆயுளைக் குறைக்கும்.பிரம்மம் நிலை கொண்டிருக்கும் பகுதிகளை ஆங்கில மருத்துவ முறை அறியாது .அது ஒரு முட்டாள் வைத்திய முறை .இந்த பயிற்சிகள் கண் கெட்டுப் போவதற்கு முன்னும் , கண் கெட்ட நிலையிலும் செய்யலாம். ஆனால் கண்ணில் உள்ள உயிர்ப் பொருட்களை எடுத்துவிட்டு , செயற்கைப் பொருட்களை வைத்த பின்னர் இதனால் பயனில்லை. கண்ணில் உள்ள இயற்கைப் பொருட்கள் இருக்கும் போதுதான். அதற்கு உயிரூட்ட வேண்டும், முடியும். கண் அறுவை சிகிச்சை செய்தவர்கள் இதை செய்யக் கூடாது.
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 2. raman says:

  அன்புள்ள அய்யா
  ///பிரம்மம் நிலை கொண்டிருக்கும் பகுதிகளை ஆங்கில மருத்துவ முறை அறியாது///
  சரியான விளக்கம்.ஒரு பெருத்த சந்தேகம்.இங்கு ஒரு தியானம் பயிற்றுவிப்பவர்,
  நம்பமுடியாத விஷயத்தை நம்பும்படி விளக்கினார் .இது பற்றி தங்கள் கருத்து என்ன அய்யா
  நன்றி- ராமன்

  • machamuni says:

   அன்பு மிக்க திரு ராமன் அவர்களே,
   கருத்துரைக்கு மிக்க நன்றி !!!!!
   உங்களது கருத்துரையில் சில ரகசிய விடயங்களை மட்டும் நீக்கி மற்றவற்றை வெளியிட்டுள்ளேன். பொறுத்தருள்க!!!உங்கள் முழுக் கேள்வியின் விளக்கங்களை எங்களது சித்த ஞான சபையில் உபதேசம் பெற்றவர்களுக்கு மட்டுமே விளக்க முடியும் . எங்களுக்கு அப்படி ஒரு கட்டுப்பாடான சத்தியம் உள்ளது .எனவே அதற்கும் பொறுத்தருள்க!!!!
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 3. சித்த நேசன் says:

  அன்புள்ள ஐயா அவர்களே,

  ஆதளை மூலிகை என்றால் என்ன ஐயா. தயவு செய்து தெரிவிக்குமாறு அன்புடன் கேட்டுகொள்கிறேன்.

  சித்த நேசன்

  • machamuni says:

   அன்பு மிக்க திரு சித்த நேசன் அவர்களே,
   கருத்துரைக்கு மிக்க நன்றி !!!!!
   ஆதாளை என்பது ஆமணக்கிலை போல இருக்கும் .இதில் சிவப்பு ஆதாளை , பச்சை ஆதாளை என்று இரு வகை உண்டு.ஆதாளம் பால் கொப்பளிக்க ஒரே நாளில் வாய்ப்புண் ஆறும்.
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 4. Yahaventhan says:

  Ayya,kansikichaikaka ungalai santhikavendum entha mugavariyil santhikalam

  • machamuni says:

   அன்பு மிக்க திரு யாகவேந்தன் அவர்களே,
   கருத்துரைக்கு மிக்க நன்றி !!!!!
   எனது முகவரி மறைமுகமாக ஏற்கெனவே அளிக்கப்பட்டுள்ளது.முஸ்லீம் அன்பர்களுக்கு ஒரு அன்புப் பரிசு (பாகம் 2 ) உள்ளது .பார்த்து உபயோகித்துக் கொள்ளவும்.
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 5. V.C.VELUSAMY says:

  Sir, instead of doing lasix what should be done to restore normal eyesight (-6 power) for my +2 studying eye straining daughter? Diet, medicine? We need ur advice.

  • machamuni says:

   அன்பு மிக்க திரு வி .சி . வேலுச்சாமி அவர்களே,
   கருத்துரைக்கு மிக்க நன்றி !!!!!
   உங்களுக்கு தனி மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது .படித்துப் பார்த்து பின் கருத்துரையை தெரிவியுங்கள்.
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

68 + = 69