ஞானம் என்பது உடல் சார்ந்ததா ? உயிர் சார்ந்ததா ? பாகம் ( 6 )

August 20, 2012 by: machamuni

கண்ணுக்கு விட கண்ணுக்கு விளக்கெண்ணெயும் , ரோஜாத் தீநீரும் ( பன்னீர் )மிக நல்லது. கீழ்க்கண்ட படத்தில் கண்ணுக்கு விடும் விளக்கெண்ணெயும் ( விளக்கெண்ணெய் என்ற பெயரில்  கடையில் விற்கும்  மற்ற எண்ணெய்களை உபயோகிக்காதீர்கள் ).

கண்ணுக்கு விளக்கெண்ணெய் இடுதலையும் , கண்ணுக்கு பன்னீர் விடுதலையும் , கண்ணில் பன்னீரை நனைத்து பஞ்சு வைத்தலையும் கீழே காணொளிக் காட்சியாக வெளியிட்டுள்ளேன். இளவயதில் எமது தொழிற்பயிற்சியின் போது வெல்டிங் ஆர்க்கிலிருந்து தெரித்து விழுந்த இரும்புத் துகள்களால் கண் பாதிக்கப்பட்டு கண்ணாடி  ( power  – 1.5 )அணிந்திருந்தோம் . தற்போது கண் குணமாகி கண்ணாடி இல்லாமலும் , தற்போதுள்ள வயதுக்குள்ள சாளேச்சுரம் ( வெள்ளெழுத்து ) போன்ற பிரச்சினைகள் இல்லாமலும் தற்போது நன்றாக கண் உள்ளதையும்  கண்டு தெளியவும் .

[tube]http://www.youtube.com/watch?v=3bga4_m81gk[/tube]

மேலும் இந்த ஐம்மலம்  நீக்குதல் எப்படி என்று அடுத்த ஞானம் என்பது உடல் சார்ந்ததா ? உயிர் சார்ந்ததா ? பாகம் 7 ல் பார்க்கலாம்.

23 responses to “ஞானம் என்பது உடல் சார்ந்ததா ? உயிர் சார்ந்ததா ? பாகம் ( 6 )”

 1. R Gopinath says:

  Respected Sir

  What are the tablets or churanams available for தாது ஷீணரோதி.

  Dosage of the tablets please.

  R.Gopinath

 2. shareef says:

  thank u ji

  • machamuni says:

   அன்பு மிக்க திரு ஷெரீஃப் அவர்களே,
   கருத்துரைக்கு மிக்க நன்றி !!!!!
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 3. தேவன் says:

  கண்ணில் ஏற்படும் மருக்களுக்கு இவ்வழி சிறந்த தீர்வாக அமையுமா அய்யா . மேலும் கண் அதிக ஓய்வில்லாமல் ஏற்படும் வலிக்கும் இது நிவாரணமாகுமா?

  விளக்க வேண்டும் ஐயா

  நட்புடன்
  தேவன்

  • machamuni says:

   அன்பு மிக்க திரு ஷெரீஃப் அவர்களே,
   கருத்துரைக்கு மிக்க நன்றி !!!!!
   கண்ணில் ஏற்படும் மருக்களுக்கு மட்டுமல்ல மற்ற எல்லா கண் வியாதிகளையும் கூட குணமாக்கும்.கண் அதிக ஓய்வில்லாமல் ஏற்படும் வலிக்கும் இது நிவாரணமாகும்.மேலும் உங்கள் கேள்வியின் பின்னர் மீண்டும் கட்டுரையை கண்ணாடியுடன் இருக்கும் எமது இளவயதுப் படத்துடன் விரிவாக்கம் செய்து வெளியிட்டுள்ளேன்.
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 4. Vanavil says:

  Posting with proof, excellent Guruji.

  Anbudan,
  Vanavil

  • machamuni says:

   அன்பு மிக்க திரு எம் கோபி அவர்களே,
   கருத்துரைக்கு மிக்க நன்றி !!!!!
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 5. ms says:

  அய்யா,
  வணக்கம். எனக்கு மிகவும் பயனுள்ள பதிவு 🙂
  மிக்க நன்றி
  என்றும் அன்புடன்
  முத்துக்குமரன்

  • machamuni says:

   அன்பு மிக்க திரு முத்துக்குமரன் அவர்களே,
   கருத்துரைக்கு மிக்க நன்றி !!!!!
   உங்கள் உடல் நலம் எப்படி உள்ளது? தொடர்பு கொள்ளுங்கள்.
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 6. srinivasan says:

  அய்யா வணக்கம்,
  சிலருக்கு கண் பார்வை மிகவும் குறைந்திருக்கும்.
  உதாரணமாக, -10 க்கும் கீழ் இருக்கும். என்னுடை மனைவிக்கும் இருக்கிறது.
  அவர்கள் கண்பார்வை குணமாக ஏதாவது வழி இருக்கிறதா.
  அன்புடன்,
  சீனிவாசன்.

  • machamuni says:

   அன்பு மிக்க திரு ஸ்ரீநிவாசன் அவர்களே,
   கருத்துரைக்கு மிக்க நன்றி !!!!!
   உங்களைப் போன்றோருக்காகவே ஒரு பதிவு காத்திருக்கிறது. அண்டத் தைலம் செய்வதெப்படி??? தவற விட்டு விடாதீர்கள்.
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 7. R Gopinath (madurai) says:

  அருமை அருமை…

  • machamuni says:

   அன்பு மிக்க திரு ஆர் கோபினாத் அவர்களே,
   கருத்துரைக்கு மிக்க நன்றி!!!!
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 8. nalla vidayangal nalla padiyaka edthu sollukirikal

  • machamuni says:

   அன்பு மிக்க திரு மது என்ற பாலாத்திருமால் அவர்களே,
   கருத்துரைக்கு மிக்க நன்றி!!!!
   முதலில் தமிழில் எழுதுங்கள். பொதுவாக தமிழில் கருத்துரை எழுதாத நபர்கள் மீது எமக்கு சரியான மரியாதை ஏற்படுவதில்லை.நமது மொழி தமிழ்.நமது தமிழ் நம் உயிர்.நாமே அதை உபயோகிக்காவிட்டால் தமிழ் எப்படி வாழும்.பழக்கத்தில் உள்ள மொழிதான் வாழும்.நாம் எழுதியதை தமிழை அறிந்ததால் நீங்கள் படித்தீர்கள்.பதிலயும் தமிழில் எழுதுங்கள்.
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 9. அன்பு says:

  ஐயா,

  எனக்கு வயது 51 , வெள்ளெழுத்து பிரச்சனை உள்ளது இன்னும் கண்ணாடி அணியவில்லை , தங்கள் கட்டுரையில் குறிப்பிட்டுள்ள வைத்திய முறையை பாவிக்கலாமா.

  அன்புடன்
  அன்பு

  • machamuni says:

   அன்புள்ள திரு அன்பு அவர்களே ,
   கருத்துரைக்கு மிக்க நன்றி,
   தாராளமாகப் பாவிக்கலாம் .இது வைத்திய முறை மட்டுமல்ல . இது நோய்கள் வர விடாது தடுப்பதற்கும் உதவும் முறையாகும்.
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 10. அன்பு says:

  ஐயா,

  நன்றி .
  தங்கள் கட்டுரையில் இந்த வைத்திய முறையை தினமும் செய்ய வேண்டுமா அல்லது இடைவெளி விட்டு செய்ய வேண்டுமா என்று குறிப்பிடவில்லை, பத்தியம் ஏதாவது உண்டா?

  அன்புடன்
  அன்பு

  • machamuni says:

   அன்புள்ள திரு அன்பு அவர்களே ,
   கருத்துரைக்கு மிக்க நன்றி,
   குறைபாடு இருக்கும் கண்ணுக்கு ,இடை விடாமல் உபயோகிக்க வேண்டும்.நன்றாயிருக்கும் கண்ணுக்கு நல்ல தன்மையை பாதுகாக்க வாரம் இரு முறை உபயோகிக்க நன்று.
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 11. mahendran says:

  எனக்கு இருதயதில் படபடப்பு உல்லது ரத்த அலுத்தம் உல்லது இதை சரி செய்ய நல்ல மருத்துவம் குரவும் வயது 30

  • machamuni says:

   அன்புள்ள திரு மஹேந்திரன் அவர்களே
   கருத்துரைக்கு மிக்க நன்றி,
   தங்களுக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பி உள்ளோம்.நேரில் பேசுங்கள்.
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 12. anbu says:

  மதிப்பிற்குரிய அய்யா அவர்களுக்கு வணக்கம்.
  எனது மகள் 5 வயதாகிறது. டிவி ஐ ரொம்ப கிட்ட இருந்து பார்க்கிறாள். இதனால் கண் பார்வை கோளாறு வராமல் பாதுகாக்க என்ன முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுக்கலாம் என்று கூறினீர்கள் என்றால் மிகவும் பனுள்ளதாக இருக்கும். நன்றி அய்யா….

  • machamuni says:

   அன்புள்ள திரு அன்பு அவர்களே ,
   உங்களது கருத்துரைக்கு நன்றி.
   முடிந்த வரை தொலைக்காட்சிப் பெட்டியின் அருகில் இருந்து பார்ப்பதை தவிர்ப்பது நல்லது.தொலைக்காட்சிப் பெட்டியின் திரையிலிருந்து வெளிவரும் எக்ஸ் கதிர்கள் கண்ணின் பாப்பாவை எரிக்கும். எனவே கருப்பு வெள்ளைத் தொலைக்காட்சிக்கு 10 அடி இடை வெளிவிட்டும், கலர் தொலைக்காட்சிப் பெட்டிகளுக்கு 21 அடி தள்ளி இருந்தும் , எல் இ டி தொலைக்காட்சிப் பெட்டிக்கு 8 அடி தூரம் தள்ளி இருந்தும் , ஒளியூட்டப்பட்ட எல் சி டி தொலைக்காட்சிப் பெட்டிக்கு 5 அடி தொலைவில் இருந்தும் பார்க்க நன்று. இப்படி பாதிக்கப்பட்ட கண்ணை அண்டத் தைலம் குணமாக்கும் .கீழுள்ள இணைப்பைக் காணுங்கள்.
   http://machamuni.com/?p=1641
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

39 − 33 =