ஒரு மஹா மூலிகை ( மார்ச்சால மூலி) பாகம் 2

September 6, 2012 by: machamuni

மார்ச்சால மூலி என்ற இந்த பதிவிலேயே மூலிகையின் விவரங்களின் விவரங்களை முதலில் தெரிவித்த பின்னர் இந்த மூலிகையின் பெயரை குறிப்பிடப் போகிறேன். இதுதானா என்று எண்ணிவிடாதீர்கள்.இதன் பெருமையை நானே பல முறை அனுபவத்தில் உணர்ந்திருக்கிறேன்.

இந்த மார்ச்சால மூலிகையை உப்புடன் மட்டும் வைத்து  ( மை இல்லாமல் ) அரைத்து இதே போன்று கன்னத்தில் தடவிய காணொளிக்காட்சிகளை  இதோ கீழே கொடுத்துள்ளேன்.இதற்கும் பூச்சிகள் பார்த்து தெரிந்து தெளியுங்கள்.

[tube]http://www.youtube.com/watch?v=e_P_svtYlvo[/tube]

[tube]http://www.youtube.com/watch?v=x3Rh3hTMgWI[/tube]

[tube]http://www.youtube.com/watch?v=qrS5_cMVAOY[/tube]

சுத்தி செய்த பாதரசத்தை மார்ச்சால மூலியை வைத்து ஒரு குகை செய்து அந்தக் குகையை மார்ச்சால மூலியாலேயே மூடி ( ஒரு தேங்காய்ப் பிரமாணம் இருக்கும்படி செய்து ஒரு மண்ணால் ஆன அகலில் வைத்து அதே போல ஒரு அகல் வைத்து மூடி ஏழு சீலை மண் செய்து முப்பது விராட்டியில் புடமிட உருகிக் கட்டி ரச மணியாகும்.

முழங்கால் வலிக்கு இந்த மார்ச்சால மூலியை அரைத்து சம அளவு வெற்றிலைக்குப் போடும் சுண்ணாம்பு சம அளவு கலந்து போட மூட்டு வலிகள் எல்லாம் பறந்தோடும்.இத்துடன் கருப்பட்டியையும் , வசம்பையும் , கரிய போளம் சேர்த்துப் பற்றிடலாம்.இது இதன் வேகமான செயல்பாட்டை தொந்தரவில்லாமல் ஊக்குவிக்கும்.

தொண்டைக் கட்டுக்கு மார்ச்சால மூலியின் சாற்றை சுண்ணாம்பு மற்றும் தேன் கலந்து மெலே பற்றாகப் போட உடனே வாய் திறந்து பாடலாம்.

மூலத் தொந்திரவு அதிகம் உள்ளவர்களுக்கு இந்த மார்ச்சால மூலிகையின் சமூலத்துடன் அதாவது மொத்தச் செடியை வேருடன் 11 மிளகுடன் , அரைத்து நெல்லிக்காய் அளவு வெறும் வயிற்றில் மூன்று நாள் உண்ண மூலம் அற்றுப் போகும். இதே மருந்தை பௌத்திரத்திற்கும் , கொடி பௌத்திரத்திற்கும் {(இது கொடிய பௌத்திரம் )குதம் முழுதும் ஓட்டை , ஓட்டையாக ஆகி அத்துணை ஓட்டைகளிலும் சீழ் ஒழுகும்}இதே மருந்தை பத்து நாள் உண்ண மிக நன்றாக குணமாகும் .

படை ,பத்து, செம்மேகப்படை , படர் தாமரை , சிரங்கு போன்ற தோல் வியாதிகள் பலவற்றிற்கு மேல் மருந்தை உள்ளுக்கு கொடுத்து , மேலுக்கும் தடவ பறந்தோடும்.

மார்ச்சாலம் என்றால் பூனை , மார்ச்சால மூலி என்றால் பூனையின் மூலிகை என்று பொருள் .இன்னும் இது மார்ச்சால மோகினி என்றும் , பூனை வணங்கி என்றும் , குப்பை மேனி என்றும் , மேனியிலை என்றும் வெவ்வேறு பெயர்களில் வழங்கப்படுகிறது.

மார்ச்சால மூலி என்னும் குப்பை மேனி

மார்ச்சால மூலிகை குப்பை போன்ற மேனியை பொன் மேனியாக்கும் , எனவே இதன் பெயர் குப்பை மேனி.

46 responses to “ஒரு மஹா மூலிகை ( மார்ச்சால மூலி) பாகம் 2”

 1. hari says:

  அன்புள்ள சாமிஜி
  வணக்கம்.மார்ச்சாலமூலியின் செயல்பாடு மற்றும் ஆற்றல் அதிசயமாக
  உள்ளது.மிக்க நன்றி.என்றும் அன்புடன் ஹரி

  • machamuni says:

   அன்பு மிக்க திரு ஹரி அவர்களே,
   கருத்துரைக்கு மிக்க நன்றி !!!!!
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 2. sankar says:

  நன்றி ஐயா,
  உங்களது பதிவு மிகவும் பயன் உள்ளதாக இருக்கிறது
  இதில் தாங்கள் சுத்தி செய்த பாதரசம் என்று கூறினீர்கள் பாதரசத்தை சுத்தி செய்ய எளிமையான வழி இருந்தால் கூறுங்களேன்

  • machamuni says:

   அன்பு மிக்க திரு சங்கர் அவர்களே,
   கருத்துரைக்கு மிக்க நன்றி !!!!!
   பாதரசத்தின் ஏழு சட்டையையும் கழற்ற நல்ல உத்திகள் உள்ளன. செங்கற் பொடியில் 24 நிமிடம்,வீதம் ஏழுதரம் அரைக்க வேண்டும்,சிலந்தியின் நூலாம்படையில் ஏழுதரம்,எலுமிச்சை ரசத்தில் ஏழு தரம், கரும்புச் சாற்றில் ஏழு தரம், பிரண்டைச் சாறும் நல்லெண்ணெயும் கலந்ததில் ஏழு தரம் , திரி கடுகு மற்றும் திரிபலாதிச் சூரணத்தில் ஏழு தரம் அரைக்கச் சுத்தி .இத்துடன் வெள்ளெருக்கம் பாலில் ஒரு நாள் ஊற வைக்க நல்ல சுத்தி ஆகும்.எளிமையான வழிகளில் இந்த ஏழு சட்டையையும் கழற்ற இயலாது.
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 3. shareef says:

  இரண்டாம் பாகம் அருமை சாமி ஜி
  தங்களிடம் உள்ள உயரிய மூலிகை பற்றிய
  ஞானத்தை எங்களுக்கு அறிய தந்தமைக்கு மிக்க நன்றி

  • machamuni says:

   அன்பு மிக்க திரு ஷரீஃப் அவர்களே,
   கருத்துரைக்கு மிக்க நன்றி !!!!!
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 4. drbaskar says:

  ஐயா எல்லா இடங்களிலும் எளிதாக கிடைக்கும் குப்பைமேனியின் பயன் பற்றி இதுவரை அறியாத தகவல்.குப்பைமேனி,தைவாலை,முருங்கை மூன்றின் இலைகலை அரைத்து கொடுத்து மூலவியாதியை குணப்படுத்துவதை பார்த்திருக்கிறேன்.நன்றி ஐயா.

  • machamuni says:

   அன்பு மிக்க திரு மருத்துவர் பாஸ்கர் அவர்களே,
   கருத்துரைக்கு மிக்க நன்றி !!!!!
   தைவாலை இல்லை அது தைவேளை அல்லது நல்வேளை என்றழைக்கப்படுகிறது.அது நம் வீட்டுக்கு வருவது நல்ல வேளை என்பதால் இது அவ்வாறு அழைக்கப்படுகிறது.
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

   • drbaskar says:

    நன்றி ஐயா,மூல வியாதி மற்றும் சிறுநீரக கல்லுக்கு எளிய மருந்து சொன்னால் மிகவும் நன்றி உடையவனாக இருப்பேன்.இப்பகுதியில் மிகஅதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

    • machamuni says:

     அன்பு மிக்க திரு மருத்துவர் பாஸ்கர் அவர்களே,
     கருத்துரைக்கு மிக்க நன்றி !!!!!
     மூல வியாதிக்கு மேற்கண்ட குப்பை மேனி அதி அற்புதமாக வேலை செய்கிறது .வெறும் மூன்று நாட்கள் போதும்.அசைவ உணவும் பரோட்டாவும் சாப்பிடுபவர்களுக்கு இது குணமானாலும் திரும்ப வரும்.எனவே இந்த இரண்டையும் தவிர்க்கச் சொல்லுங்கள்.இவைகள் குடலின் இயக்கங்களை பாதிக்கும் மைதாவில் தயாராகிறது.இதை வட இந்தியாவில் யாரும் உபயோகிப்பது இல்லை. குப்பைமேனி கிடைக்காத இடங்களில் அஷ்ட சூரணம் 50 கி, சுண்டை வற்றல் சூரணம் 50 கி , பலகரை பற்பம் 10 கி, நத்தை பற்பம் 10 கி , நாக பற்பம் 10 கி , முத்துச் சிப்பி பற்பம் 10 கி கலந்து வைத்துக் கொண்டு ஒரு உப்புக் கரண்டி அளவில் 48 நாட்கள் சாப்பிட்டு வர நவமூலமும் தீரும்.பௌத்திரத்துக்கும் கொடி பௌத்திரத்துக்கும் கூட இதைக் கொடுக்கலாம் .கொடி பௌத்திரத்திற்கு சிறிது அதிக நாட்கள் கொடுக்க வேண்டி வரும்.சிறு நீரகக் கல் என்பது, 10 க்கு 10 க்கு அறையில் மூடிக்கொண்டு தூங்கினால் கண்டிப்பாக வரும் .எனவே அதைத் தவிர்க்க சொல்லுங்கள்.இந்த இணைப்பைப் பாருங்கள்
     http://machamuni.blogspot.in/2011/01/8.html
     சிறு நீரகக் கல்லுக்கு யானை நெருஞ்சில் பொடி 50 கி , கூரைப்பூ என்றழைக்கப்படும் சிறுகண் பீழைப் பொடி 50 கி , செறு நெருஞ்சில் அல்லது செப்பு நெருஞ்சில் 50 கி , கல்நார் பற்பம் 10 கி , படிகார பற்பம் 10 கி , சிலாசத்து பற்பம் 10 கி , ஆமையோட்டு பற்பம் 1 கி ,சிருங்கி பற்பம் 10 கி கலந்து வைத்துக் கொண்டு கடுமையானவர்களுக்கு இளநீரிலும் , சாதாரணமானவர்களுக்கு தண்ணீரிலும் மூன்று நாட்கள் கொடுக்க கல் உடைந்து தெரித்து விழும்.இந்த பிரச்சினைக்கு வாழைத்தண்டு கொடுத்தால் நல்லது என்று பலர் வாழைத்தண்டாகத் தின்பார்கள், அது எலும்பில் சேரும் சுண்ணாம்புச் சத்தையும் சேரவிடாமல் ஆக்கிவிடும்.எனவே இந்தப் பிரச்சினக்கு வாழைத் தண்டு தீர்வல்ல.வாழைத் தண்டை மதம் பிடித்த யானைக்குக் கொடுப்பார்கள் .அது தன் பலமத்தனையும் இழந்து படுத்துவிடும்.அவ்வளவு பலவீனம் செய்யும் என்பது பல மருத்துவர்களுக்கே தெரியாது.
     மிக்க நன்றி
     என்றென்றும் பேரன்பினால்
     சாமீ அழகப்பன்

     • drbaskar says:

      மிக்க நன்றி ஐயா,சோரியாசிஸ் நோய் சிகிச்சை பற்றி கொஞசம் சொல்லுங்கள்

     • machamuni says:

      அன்பு மிக்க திரு மருத்துவர் பாஸ்கர் அவர்களே,
      கருத்துரைக்கு மிக்க நன்றி !!!!!
      இரு முறை உங்களுக்கு பதிலிட முயன்றபோது தடை ஏற்பட்டது.இது போன்ற விடயங்கள் இரு சித்த மருத்துவர்களின் கலந்துரையாடலை பளிச்சென்று பொதுவில் கூறக்கூடாது என்றே இந்தத் தடை வந்ததாகக் கருதுகிறேன்.எனவே இது போன்ற கேள்விகளை எனது அலைபேசியில் நேரில் அழைத்துப் பேசுங்கள் அல்லது எனது தனிப்பட்ட மின்னஞ்சல் முகவரிக்கு வருகை தாருங்கள்.
      மிக்க நன்றி
      என்றென்றும் பேரன்பினால்
      சாமீ அழகப்பன்

     • drbaskar says:

      ஐயா ஒரு வேளை எத்தனை கிராம் மருந்து கொடுக்கவேண்டும்?தினமும் 3 வேளையும் மருந்து கொடுக்க வேண்டுமா?

     • machamuni says:

      அன்பு மிக்க திரு மருத்துவர் பாஸ்கர் அவர்களே,
      கருத்துரைக்கு மிக்க நன்றி !!!!!
      இரு மருந்துகள் கூறியுள்ளேன் எந்த மருந்துக்கு அளவு கூறுமாறு கேட்டிருக்கிறீர்கள் என்று தெரியவில்லை மீண்டும் இது போன்ற கேள்விகள் அனைத்தும் எனது தனிப்பட்ட மின்னஞ்சலுக்கு எழுதுங்கள்.
      மிக்க நன்றி
      என்றென்றும் பேரன்பினால்
      சாமீ அழகப்பன்

 5. மோகன்ராஜ். மு says:

  மதிப்புக்குரிய திரு. சாமி அழகப்பன் அய்யா அவர்களுக்கு,

  தங்களின் இந்த பதிவின் மூலம், குப்பை மேனியின் மகத்துவம் அறிந்தோம். குப்பையில் தானே இது வளர்கிறது என்று நினைத்து இருந்த எங்களுக்கு, இதன் இமாலய மகத்துவத்தை தெரிவித்த தங்களுக்கு எங்களின் நன்றிகள்.

  தங்களின் இப்பணித் தொடர எல்லாம் வல்ல குருவருளையும், திருவருளையும் வேண்டுகிறோம்.

  அன்புடன்,

  மு. மோகன்ராஜ்,

  • machamuni says:

   அன்பு மிக்க திரு மோகன்ராஜ் அவர்களே,
   கருத்துரைக்கு மிக்க நன்றி !!!!!
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 6. MANIKANDAN-KOVAI says:

  அன்புள்ள சகோதரரே
  வணக்கம். பதிவு மிகவும் அற்புதம். கன்னத்தில் பூச்சிகளை எடுக்க மார்ச்சால மூலிகைக்கு பதிலாக நாயுருவி செடியை பயன்படுத்தி பார்த்திருக்கிறேன். குப்பைமேனிக்கு இவ்வளவு மகத்துவம் இருப்பது இப்பொழுதுதான் தெரிந்துகொண்டேன். நெடுநாள் கழித்து கருத்துரை இடுவதில் மிக்க மகிழ்ச்சியடைகின்றேன்.

  நன்றி
  மணிகண்டன்-கோவை

  • machamuni says:

   அன்பு மிக்க திரு மணிகண்டன் அவர்களே,
   கருத்துரைக்கு மிக்க நன்றி !!!!!
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 7. Makesh says:

  மிக அருமையான தகவல் – இந்த தகவல்கள் தங்களை போல உள்ள நல்ல ஆத்மாக்களால் எங்களுக்கு தெரியவருகிறது. மிக்க நன்றி.

  • machamuni says:

   அன்பு மிக்க திரு மகேஷ் அவர்களே,
   கருத்துரைக்கு மிக்க நன்றி !!!!!
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 8. MANOHARAN.R says:

  நன்றி ஐயா,
  உங்களது பதிவு மிகவும் பயன் உள்ளதாக இருக்கிறது.குப்பைமேனிக்கு இவ்வளவு மகத்துவம் இருப்பது இப்பொழுதுதான் தெரிந்துகொண்டேன்.

  அன்புடன்,
  manoharan.R

  • machamuni says:

   அன்பு மிக்க திரு மனோகரன் அவர்களே,
   கருத்துரைக்கு மிக்க நன்றி !!!!!
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 9. senthil kumar says:

  iya, siruneeraga kal andhiravil ulla oru uril idathu iduppin mel venai(butter) thadavi mel puramagave edukirargal nan ithai kan kudagave parthen.mooligai ethuvum payanpaduthavillai appadi panna mudiuma iya. oru nimidathil eduthu vidugirargal. en appavukum angu sendru than eduthu vanthen. erandu matham agirathu indru varai vali illai.

  • machamuni says:

   அன்பு மிக்க திரு செந்தில் குமார் அவர்களே,
   கருத்துரைக்கு மிக்க நன்றி !!!!!
   இதே போல கல் எடுப்பதை நானும் பார்த்திருக்கிறேன் .இறைவன் அருளிருந்தால் அனைத்தும் நடக்கும்.இதுவும் சாத்தியமே.
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 10. neelamegam says:

  அன்பு மிக்க திரு ஹரி அவர்களே,
  கருத்துரைக்கு மிக்க நன்றி !!!!!
  மிக்க நன்றி

 11. ஐயா நான் வேளாண்மை பட்ட படிப்பு முடித்துவிட்டு இப்போது சென்னையில் ஒரு பெரிய பன்னாட்டு நிறுவனத்தில் நல்ல பதவியில் வேலை பார்த்து வருகிறேன்.. நான் கிராம பின்னணியில் இருந்து வந்தவன்.எங்கள் ஊரில் நான் வெறும் குப்பை செடி என்று நினைத்தவை எல்லாம் இப்போது தங்களின் வலை பகுதிகள் மற்றும் இன்னும் பல வலைதளத்தை பார்த்து அவை எல்லாம் அறிய காயகற்ப மூலிகைகள் என்று தெரிந்து கொண்டேன்.. நான் அவற்றை பற்றி இப்போதுதான் உணர்ந்துகொண்டேன்..அவற்றை பாதுகாக்க நான் பங்காற்ற வேண்டும் என விரும்புகிறேன்.. எனக்கு நீங்கள் எனக்கு வழி காட்டவும்

  • machamuni says:

   அன்பு மிக்க திரு சச்சிதானந்தம் அவர்களே,
   கருத்துரைக்கு மிக்க நன்றி !!!!!
   நான் கொடுப்பது என்று ஒன்றும் இல்லை .அனைத்தும் இறைவனால் இந்த நம் தாய்த்திருநாட்டில் சிவனருளால் மூலிகைகள் அனைத்தும் படைக்கப்பட்டு அவனாலேயே காக்கப்பட்டும் வருகிறது .தென்னாடுடைய சிவனே போற்றி !!! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி. இறைவன் அருளிருந்தால் அனைத்தும் தானே நடக்கும் .
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 12. ஆகவே ஐயா தாங்கள் எனக்கு அறிய மூலிகைகள் பற்றிய தகவல்களை வழங்கினால் நான் அவற்றை அழிவின் விளிம்பில் இருந்து காக்க பாடுபடுவேன்.

 13. Poovai says:

  Ayya you are doing excellent job, keep it up. i want to know more about mooligaigal .

  Thank you,
  Poovai.

  • machamuni says:

   அன்பு மிக்க திரு பூவை அவர்களே,
   கருத்துரைக்கு மிக்க நன்றி !!!!!
   மூலிகைகள் பற்றிய பதிவுகளும் இடை இடையே இருக்கும்.
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 14. Engr.Fisal khan says:

  சித்தர்ஐயா அவர்களுக்கு வணக்கம்,
  பூனைவணங்கி மேனியை குறிப்பதுபோல்,யானை வணங்கியென்பது எந்தமூலி ஐயா
  குமரியில் “யானைசுவட்டடி” எனும் தரையுடன் ஒட்டிச்சேர்ந்திருக்கும் செடியொன்றுண்டு.எம் குருநாதரவர்கள் ஐயம்களைய வேண்டுகிறேன்.

  தங்கள் மாணவன்
  மு.பைசல் கான்

 15. anbu says:

  // வாழைத் தண்டை மதம் பிடித்த யானைக்குக் கொடுப்பார்கள் .அது தன் பலமத்தனையும் இழந்து படுத்துவிடும்.அவ்வளவு பலவீனம் செய்யும் என்பது பல மருத்துவர்களுக்கே தெரியாது. //

  மதிப்பிற்குரிய அய்யா
  நாங்கள் எங்கள் குடும்பத்தில் வாழை தண்டு நல்லது என்று வாரம் ஒரு நாள் பாசி பருப்புடன் கூட்டு வைத்து உண்கிறோம். அது தவறா ? மேலும் வாழை பூவையும் அடிகடி உணவில் சேர்கிறோம். இது பற்றி உங்கள் கருத்தை சொன்னால் நன்றாக இருக்கும். !!

  • machamuni says:

   அன்பு மிக்க திரு அன்பு அவர்களே,
   கருத்துரைக்கு மிக்க நன்றி!!!!!!
   எப்போதாவது உபயோகிக்கும் போது எதுவும் தீங்கில்லை. “மிகினும் குறையினும் நோய் செய்யும் நூலோர் வளி முதலாவெண்ணிய மூன்று ” . வாழைத் தண்டு நல்லதென்று மூன்று வேளையும் சாப்பிடுவதும் தீது . கெடுதல் என்று அறவே ஒதுக்குவதும் தீது .
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

   • Uma says:

    Ayya,
    Vannakkam! arumaiyana thagaval & arputhamana mooligai .Intha mooligai ella vagai (soriasis) skin disease kum upayoga paduthalama?

    • machamuni says:

     அன்பு மிக்க திரு உமா அவர்களே,
     கருத்துரைக்கு மிக்க நன்றி!!!!
     சொரியாசிஸ் என்பது மிகக் கடுமையான நோய் .இப்போதைக்கு அதைக் கட்டுப்படுத்த மருந்து சொல்கிறேன்.சங்கு பற்பம் 10 கிராம் , வெள்ளி பற்பம் 10 கிராம் , பறங்கிப் பட்டைச் சூரணம் 50 கிராம் என்ற அளவில் கலந்து வைத்துக் கொண்டு மூன்று வேளையும் சாப்பாட்டிற்கு முன்னர் வெறும் வயிற்றில் பாலில் உண்டு வர கட்டுப்பாட்டுக்குள் வரும்.வெளியில் பூச தோல் நோய்களுக்கு என்று சில மூலிகைகளும் ,வெட்பாலையிலும் செய்த எண்ணெய் கலவையும் திரு சதுரகிரி ஹெர்பல்ஸ் கண்ணனிடம் கிடைக்கும்.உபயோகித்து பயன் பெறவும்.
     மிக்க நன்றி
     என்றென்றும் பேரன்பினால்
     சாமீ அழகப்பன்

     • Dr.Arul says:

      sir, i am suffering from psoriasis. Is there any medicine in tamil (tamil maruthuvam). Please help me. I am suffering more.

      Thank you.

     • machamuni says:

      அன்புள்ள திரு அருள் அவர்களே,
      கருத்துரைக்கு மிக்க நன்றி,
      சொரியாசிஸ் என்பது மிகக் கடுமையான நோய் .இப்போதைக்கு அதைக் கட்டுப்படுத்த மருந்து சொல்கிறேன்.சங்கு பற்பம் 10 கிராம் , வெள்ளி பற்பம் 10 கிராம் (IMPCOPS) , பறங்கிப் பட்டைச் சூரணம் 50 கிராம் என்ற அளவில் கலந்து வைத்துக் கொண்டு மூன்று வேளையும் சாப்பாட்டிற்கு முன்னர் வெறும் வயிற்றில் பாலில் உண்டு வர கட்டுப்பாட்டுக்குள் வரும்.வெளியில் பூச தோல் நோய்களுக்கு என்று சில மூலிகைகளும் ,வெட்பாலையிலும் செய்த எண்ணெய் கலவையும் திரு சதுரகிரி ஹெர்பல்ஸ் கண்ணனிடம் கிடைக்கும்.உபயோகித்து பயன் பெறவும்..
      மிக்க நன்றி
      என்றென்றும் பேரன்பினால்
      சாமீ அழகப்பன்.

 16. அப்துல் காதர் says:

  எனக்கு ஆசன வாய் அருகே சிறிய பரு போல்உள்ளது ரத்தமோ வலியோ இல்லை.அரிப்பு உள்ளது.மலச்சிக்கல் உள்ளது இது பவுத்திரமா என்று தெரியவில்லை.தெளிவு படுத்தவும் நன்றி

  • machamuni says:

   அன்புள்ள திரு அப்துல் காதர் அவர்களே ,
   கருத்துரைக்கு மிக்க நன்றி,
   தங்கள் பிரச்சினைக்குப் பெயர்தான் ஆரம்ப நிலையில் உள்ள மூல ரோகம்.இதற்குத்தான் பல முறை மருந்துகள் சொல்லியுள்ளோமே.
   கீழ்க்கண்ட மருந்துகளைச் சாப்பிட்டால் நலம் கிடைக்கும் .
   1)அஷ்ட சூரணம் (IMP COPS) – 50 கி
   2)சுண்டை வற்றல் சூரணம் (IMP COPS) – 50 கி
   3)நாக பற்பம் (IMP COPS) -10 கி
   4)நத்தை பற்பம் (IMP COPS) – 10 கி
   5)முத்துச் சிப்பி பற்பம் (IMP COPS) – 10 கி
   6)பலகரை பற்பம் (IMP COPS) – 10 கி
   இவற்றைக் ஒன்றாக கலந்து வைத்துக் கொண்டு ஒரு உப்புக் கரண்டி(SALT SPOON) அளவு சாப்பாட்டுக்கு அரை மணி நேரம் முன்னர் மூன்று வேளையும் சாப்பிட்டு வர மூல ரோகம் தணியும்.
   இத்துடன் SBL கம்பெனியின் ஹோமியோ மருந்துகளில் FP TABS ( FISHER PILES TABS ) கடுமையான நிலையில் 4 மாத்திரைகளும் , சாதாரண நிலையில் 2 அல்லது மூன்று மாத்திரைகளும் சாப்பாட்டுக்கு அரை மணி நேரம் முன்னர் மூன்று வேளையும் சப்பி உமிழ் நீரொடு கந்து சாப்பிட்டு வர மூல ரோகம் தணியும்.

   குப்பை மேனியை , பதினோரு மிளகுடன் அரைத்து எலுமிச்சைக் காயளவு காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர மூல ரோகம் அழிந்தொழியும்.மூலத்தைக் கிருமிக் கூட்டம் என்று சொல்வார்கள்.எங்கே அதிக உஷ்ணமும் நீரும் ஒன்றாக இருக்கிறதோ அங்கே கிருமிகள் வளர்ந்து பெருகும் .அதைக் குப்பை மேனி அழித்தொழிக்கும்.
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 17. அப்துல் காதர் says:

  மிகவும் நன்றி தங்கள் அளித்த ஆலோசனை மிகவும் உபயோகமானது,எந்த வகை உணவை உண்ணவேண்டும்,எதை தவிர்க்க வேண்டும் கூறினால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் நன்றிகள் பல

  • machamuni says:

   அன்புள்ள திரு அப்துல் காதர் அவர்களே ,
   கருத்துரைக்கு மிக்க நன்றி,
   அவற்றையும் இந்த கட்டுரைகளில் விளக்கி வருவோம்.தொடர்ந்து வருக.பயன் பெறுக.
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 18. இர்ஷாத் says:

  அய்யா குப்பை மேனி மற்றும் உப்பை எவ்வளவு எடுத்துக்கொள்ளவது

  • machamuni says:

   அன்புள்ள திரு இர்ஷாத் அவர்களே,
   உங்களது கருத்துரைக்கு நன்றி,
   குப்பை மேனியில் சாறு வரும் அளவிற்கு எடுத்துக்கொண்டால் போதுமானது.
   இப்படிக்கு
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 19. krishnamoorthi says:

  ஐயா
  எனக்கு கடந்த 7 ஆண்டு காலமாக தோல் நோய் இருந்து வந்தது. எத்தனையோ தோல் மருத்துவரிடம் காண்பித்தும் பலனில்லை. 3 வாரத்திற்கு முன்பு வைத்தியர் ஒருவர் அரிவுரையின் பேரில் கருஞ்சீரகமும் கோவ இலை சாறையும் தடவ சொன்னார். அதன்படி செய்தால் நோய் குறைந்தது. பின்பு நான் இணையதளத்தில் பார்த்த போது அது படை நோய்க்கான மருந்து என்று தெரிந்தது..ஆனால் மேற்பூச்சாக மட்டுமே இதை பயன்படுத்துகிறேன். இதுவும் பயனில்லை என்று பின்பு தெரிந்தது.. மார்ச்சால மூலி என்னும் குப்பை மேனியை படை ,பத்து, செம்மேகப்படை , படர் தாமரை , சிரங்கு போன்ற தோல் வியாதிகள் பலவற்றிற்கு மேல் மருந்தை உள்ளுக்கு கொடுத்து , மேலுக்கும் தடவ பறந்தோடும் என்று சொல்லி உள்ளீர்கள்..அதை எப்படி தயாரிப்பது? எப்படி சாப்பிடுவது? பத்தியம் இருக்க வேண்டுமா? தயவு செய்து விளக்கவும்.. என்னுடைய mail ID க்கு பதில் அனுப்பவும் mail ID krishnamoorthy1010@gmail.com

  • machamuni says:

   அன்புள்ள திரு சிவா அவர்களே,
   உங்களது கருத்துரைக்கு நன்றி,
   கருத்துரைக்கு வந்தால் கருத்துரையில் பதிலளிப்போம் . மின்னஞ்சலில் வந்தால் மின்னஞ்சலில் பதிலளிப்போம் . விரண சஞ்சீவித் தைலம் என்ற மருந்து மேல் தடவி வரவும் , உள்ளே சாப்பிட தோல் நோய் நிவாரணி உபயோகிக்கவும்,மருந்துகளைப் பிரயொகிக்கும் விவரங்களை அமீர் சுல்த்தானிடம் தெரிந்து கொள்ளவும்.அதற்கும் எம்மிடம் வர வேண்டாம் .
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 20. சேகர் says:

  குப்பை மேனி பற்றிய தகவல் அற்புதம்.
  தொடரட்டும் உங்கள் சேவை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

29 − 23 =