தலைச்சன் பிள்ளை மண்டையோடு ( சித்தர் விஞ்ஞானம் )பாகம் 1

November 10, 2012 by: machamuni

சுண்ணாம்புச் சத்துள்ள ஏதும் முப்பூ அல்ல என்று முப்பூ வழலைச் சுண்ணத்தில் அகஸ்தியர் சொல்லி இருப்பது கவனிக்கத் தக்கது.சாறிப் போவார்கள் சவடுகள் வண்ணார்கள் என்று சொன்னதிலிருந்து சவட்டுப்பான உவருப்பை (பூநீறை ) முப்பு என்றெண்ணி பலர் களர் நிலத்தில் விளைந்துள்ள உப்பை முப்பு என்றெண்ணி அவ்வழியே செல்பவர்கள் வண்ணார்கள் என்கிறார்.

சில மதி கெட்ட வீணர்கள்  தலைச்சன் பிள்ளை மண்டை ஓடு என்று சொன்னதை தலைப்பிள்ளைகளின் மண்டை ஓடு என்றெண்ணி , புதைக்கப்பட்ட சிறு பிறந்த குழந்தைகளில் தலைச்சன் பிள்ளைகளின் மண்டை ஓட்டை ,  எடுத்து  அதைப் புடம் போட்டு அதை வைத்து ஆராய்ச்சி செய்து வருகிறார்கள் . இன்னும் சிலர் உயிரோடு  இருக்கும்  தலைச்சன் பிள்ளைகளைக் கடத்தி உயிரோடு காளிக்குப் பலி கொடுத்து அந்த தலைச்சன் பிள்ளை மண்டை ஓட்டை எடுத்து மை , மற்றும் அந்த ஓட்டை  பற்பம் செய்து அதை முப்பு  என்று ஆராய்ச்சி செய்பவர்களும் பெரும் பாவம் செய்து வருகிறார்கள் .

தலைச்சன் பிள்ளை மண்டையோட்டை படாத் பாடு பட்டு கொண்டு வந்து உரலில் போட்டு  இடித்து  தண்ணீரில் கலக்கி சூரிய ஒளியில் காய்ச்சி எடுத்து அதை முப்பு என்று சொல்லித் திரிபவர்கள் பலர் கொடும் பாவம் செய்து வருகிறார்கள். அதற்கான் விடயங்களை கீழே காணுங்கள்.முப்பு என்பது மண்டையோடு அல்ல என்று குறிப்பிட்டிருப்பதிலிருந்து இது தெளிவாகும்.

 

நன்றி முப்பூ குரு ,ஆசிரியர், நீதியரசர் திரு பலராமையா அவர்கள்

தலைச்சன் பிள்ளை மண்டையோடு என்பது என்ன என்று இதோ கீழே கொடுத்துள்ளதை கவனியுங்கள் .யாம் இப்போது வெளிப்படுத்தப் புகுந்துள்ளது பல்லாண்டுகளாக ரகசியமாக வைக்கப்பட்டுள்ள பல சித்த ரகசியங்களை வெளிப்படுத்தும் முயற்சி இது.

இந்த விடயங்களை வெளிப்படுத்தும் போது , இந்த அளவிற்கு மன முதிர்ச்சி அடையாத   சிலர் இந்த விடயங்களை புரியாததோடு , வாய்க்கு வந்ததையெல்லாம்  கருத்துரை என்ற பெயரில் எழுதி வருகின்றனர்.அவற்றால் எமக்கோ உங்களுக்கோ மற்றவர்களுக்கோ பயன் இல்லை. இனி இவற்றை தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளுகிறேன்.எழுதினாலும் பிரசுரிக்க மாட்டடோம் என்றும் தெரிவித்துக் கொள்கிறேன்.

கும்ப கோணம் இப்போது ஒரு சம்பவத்தைக் குறிப்பிட விரும்புகிறேன் . சித்தர்  பாடல்களை ஒரு அச்சகத்தில் பதிப்பிட முயற்சி மேற்கொண்டிருப்பதை தெரிந்து கொண்ட சில சாதாரண அறிவிலிகள், நாத்திக வாதப் புத்தகம் அச்சிடுகிறார்கள் என்று கருதி அந்த அச்சகத்தை சிதைத்து , அடித்து நொறுக்கி எறிந்தனர் . இப்படிப்பட்ட அறிவிலிகளும் இந்த ஞானம் சிறந்த தமிழ் நாட்டில் இருக்கிறார்கள் .

இப்போது விடயத்துக்கு வருவோம் . கீழே கொடுத்திருப்பதுதான் தலைச்சன் பிள்ளை மண்டை ஓடு .அது மண்டை ஓடு போல காட்சி தருகிறதா???? இதுதான் சிவனின் கபாலம் என்றழைக்கப்படுவதும். இதை சுண்ணமாக்கினால் அதுவே கபாலச் சுண்ணம். இது பல ரச வாத வேதி வினைகளுக்கு பயனாகும்.

இன்னொரு கல் மூளை போல தோற்றம் அளிக்கும் இதுதான் தலைச்சன் பிள்ளை மூளை .இதை சுண்ணம் செய்வதுதான் தலைச்சன் பிள்ளை மூளைச் சுண்ணம்.இதுவும் பல ரச வாத வேதி வினைகளுக்கு பயனாகும்.

மேலும் தலைச்சன் பிள்ளை மண்டை ஓடு பற்றியும் ,  தலைச்சன் பிள்ளை மூளை பற்றியும் அவற்றை  சுண்ணம் செய்தால் என்ன செய்யலாம் என்பது பற்றி எம் குருநாதர் கூறுவதைக் காணொளிக்காட்சியில் காணுங்கள்.

[tube]http://www.youtube.com/watch?v=t_pbMfwSsyA[/tube]

9 responses to “தலைச்சன் பிள்ளை மண்டையோடு ( சித்தர் விஞ்ஞானம் )பாகம் 1”

 1. Engr.Fisal khan says:

  பெருமதிப்பிற்குரிய எம்குருநாதர் அவர்களுக்கு,
  வணக்கம் ஐயா.காலத்தின் அவசியம் கருதி தாங்கள் வெளியிட்டுள்ள இந்த பரிபாடை பொருள்ரகசியமானது,தலைச்சன் பிள்ளைகளை தேடி மயானத்திற்கு ஓடும் மதியீனரின்விழி திறப்பிக்கட்டும்.
  அள்ளஅள்ளக் குறையாத அமுதசுரபியின்,சிறுதுளி கண்டும் வியந்துபோகின்றேன்.அருமை.
  என்றும் தங்கள்மாணவன்
  மு.பைசல் கான்

  • machamuni says:

   அன்பு மிக்க திரு மு.பைசல் கான் அவர்களே,
   கருத்துரைக்கு மிக்க நன்றி !!!!!
   நமது சித்தர் சொத்துக்களை நாம் பொதுவில் வைத்திருக்கிறோம். தங்களுக்கும் நமது வலை வாசக அன்பர்களுக்கும் தீப ஒளித் திருநாள் வாழ்த்துக்கள்.
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 2. Vanavil says:

  //அவற்றை சுண்ணம் செய்தால் என்ன செய்யலாம்//

  Guruji,

  Could you please explain the medicinal & other applicable usage of this sunnam?

  Anbudan,

 3. hari says:

  அன்புள்ள சாமிஜி அவர்களுக்கு
  வணக்கம்.தலைச்சன் பிள்ளை மண்டையோடு பற்றிய விஷயங்கள் இதுவரை
  யாரும் இவளவு சிறப்பாக வெளியிட்டதில்லை.மிக்க நன்றி.
  வணக்கம்

  • machamuni says:

   அன்பு மிக்க திரு ஹரி அவர்களே,
   கருத்துரைக்கு மிக்க நன்றி !!!!!
   ஹரி கேள்விகளில் இன்னும் நுணுக்கம் வேண்டும்.
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 4. hari says:

  பெருமதிப்பிற்குரிய ஐயா சாமிஜி அவர்களுக்கும் நமது வலைப்பூ
  நண்பர்கள் அனைவருக்கும் அடியேனது உளம் கனிந்த தீப ஒளி திருநாள்
  நல்வாழ்த்துக்கள்.

  • machamuni says:

   அன்பு மிக்க திரு ஹரி அவர்களே,
   கருத்துரைக்கு மிக்க நன்றி !!!!!
   தங்களுக்கும் நமது வலை வாசக அன்பர்களுக்கும் தீப ஒளித் திருநாள் வாழ்த்துக்கள்.
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 5. தேவன் கேசவன் says:

  பெரியோர்களின் அறிவு வீச்சும், மதி கெட்டோரின் அறிவீனமும்,…

  தெளிவு எப்பிறப்பிலோ எப்பிறப்பில் இறையடிப் பற்றற பற்றி நிற்பதோ?

  இதன் மொத்தப் பெயர்கள்தான் எத்தனையோ?

  (அண்டக்கல்) தலைச்சன் பிள்ளை மண்டையோடு பற்றிய செய்தி புதுமை. பஞ்சபூதங்களில் ஒன்று, பூமாதேவி பெற்றெடுக்கிறாள். கடையன் எனக்கு பார்க்க கிட்டியது எப்பிறவிப்பயனோ? இறையடி போற்றி போற்றி…

  • machamuni says:

   அன்பு மிக்க திரு தேவன் கேசவன் அவர்களே,
   கருத்துரைக்கு மிக்க நன்றி !!!!!
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

88 − 85 =