சர்க்கரை வியாதியை குணமாக்கலாம்(பாகம் 1)

December 23, 2012 by: machamuni

சர்க்கரை வியாதி என்றவுடன் அனைவருக்கும் பொதுவாக பயம் தோன்றிவிடுகிறது.இது ஏதோ குணப்படுத்த முடியாத வியாதி என்று. ஆனால் இவ்வளவு பயம் கொள்ளுமளவிற்கு சர்க்கரை வியாதி ஒரு கொடும் வியாதியா?? என்றால் இல்லை என்று நான் உறுதிபடச் சொல்வேன்.அது மட்டுமல்ல பல சர்க்கரை வியாதியஸ்தர்களை நான் குணப்படுத்தியும் இருக்கிறோம்.சிறு வயதினருக்கு வரும் சர்க்கரை வியாதியையும்   (JUVENILE  SUGAR COMPLAINT ) குணப்படுத்தலாம்.எமது அனுபவத்திலேயே இது பார்த்தது.

சர்க்கரை வியாதி என்றால் ஆங்கில மருத்துவம் என்ன கூறுகிறது . இரத்தத்தில் சர்க்கரையின் அளவு 90 -140 வரை (நம் நாட்டு உணவுப்பழக்க வழக்கங்களுக்கு) எப்போதும் இருந்தால் சர்க்கரை நோய் இல்லை என்று கூறுகிறது . ஆனால்  இதே அளவு இரத்தத்தில் சரியாக இருந்தும் , சர்க்கரை சிறுநீரில் வெளியேறினால் அதை சர்க்கரை வியாதி என்று எடுத்துக் கொள்வதில்லை.

சித்த மருத்துவமும் அக்கு பஞ்சரும் சர்க்கரை  நோயைப் பற்றி என்ன கூறுகிறது .அதை எப்படி குணப்படுத்தலாம். ஆங்கில மருந்துகளை உட் கொண்டு வந்தாலும் சர்க்கரை நோயின் தாக்கத்திலிருந்து நோயாளர் தப்பிப்பது இல்லையே ???ஆங்கில மருந்துகளின் துணையோடு சர்க்கரையின் அளவு கட்டுப்பாட்டில் இருந்தாலும், உள்ளுறுப்புக்கள் பாதிக்கப்படுவதோடு , இரத்த அழுத்தம் ,இரத்தத்தில் கொழுப்பின் அளவு கூடுவது , விளைவாக இருதயம் அதிக வேலைப்  பழுவின் காரணமாக , இதயத் தாக்குதலுக்கு உள்ளாவது , போன்ற பிரச்சினைகள் ஏன் ஏற்படுகின்றன. முதலில் ஓரிரண்டு மாத்திரைகளில் ஆரம்பிக்கும் ,ஆங்கில மருந்துகள் , அடுத்தடுத்து பெருகி ஒரு டிபன் பாக்ஸ் ல் மாத்திரைகள் வைத்து சாப்பிடும் அளவிற்கு போவது ஏன்?????

முதலில் சர்க்கரை நோயைப் புரிந்து கொண்டால் இந்த நோயை குணமாக்குவதும் எளிது . முதலில் சர்க்கரை நோய் என்பது மேகங்கள் 21 றனுள் ஒன்றான மது மேகம் என்று சித்த வைத்தியத்தில் அழைக்கப்படுகிறது . மேகங்கள் வானத்தில் ஒரு இடத்தில்  நில்லாமல்  எப்படி நிலையில்லாது அலைகிறதோ அதே போல சர்க்கரை வியாதியும்  உடலில் பல இடங்களில் பல விதமான பிரச்சினையான குறி குணங்களை வெளிப்படுத்தும்.

சிறு நீரில் சர்க்கரை வெளியேறுவதால் ,சிறு நீர்ப் புற வழிகளில் கிருமித் தொற்று , ஆண்குறி , பெண்குறிகளில் அரிப்பு , மற்றும் சிவந்து போதல் , எரிச்சல் , போன்றவை உண்டாகும். கால்களில் நமைச்சல் , ஊசி வைத்து குத்துவது போல சுரீர் , சுரீர் என்ற வலிகள் , கால்களில் உணர்வு குன்றுவது ,பெரு விரல்களில் ஆறாத புண் , கால் பாதம் முழுவதும் ஆறாத ரணம் ( காங்கரீன் என்று ஆங்கில வைத்தியத்தில் அழைப்பார்கள் )  சிறு நீரக செயலிளப்பு , மண்ணீரல் கல்லீரல் கேடடைதல் , இரத்தம் சர்க்கரை போன்ற பொருட்களால் சாக்கடையாக ஆவதால் இரத்தம் கெட்டிப்பட்டு இதயம் அந்தக் கெட்டியான சாக்கடை இரத்தத்தை உடலுக்கு அனுப்ப மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகுவதால் இரத்த அழுத்தம் அதிகரிப்பது .

இதனால் இரத்தக் குழாய்கள் மூளையில் வெடிப்பதால் பக்க வாதம் வருதல் , அதீத வேலையினால் இதயத் தாக்கு (HEART ATTACK ) நேரிடுவது, கண்களில் இரத்தக் கசிவு , கண்களில் அழுத்தம் அதிகரித்தல் , குளுக்கோமா,காதுகளின் கேட்கும் திறன் பாதிக்கப்படுதல் , அதீத சர்க்கரை இரத்தத்தில் இருப்பதால் உடல் எப்போதும் சூடாகுதல் ,அந்தச் சூட்டைத் தணிக்க உடல் சேர்த்து வைக்கும் சளியால் சைனஸ் , பாரா சைனஸ் பள்ளங்களில் சளி நிறைதல் , விளைவாக முன்பக்க பின்பக்க தலைவலி கழுத்து வலி ,செர்விகல் ஸ்பாண்டிலோசிஸ் என்னும் கழுத்து எலும்புத் தேய்வு , அதன் விளைவாக தலைச் சுற்றல், அதிக தாகம் , அதிக பசி , அதிக சிறு நீர் கழித்தல் , உடலெங்கும் சொல்ல முடியாத அளவு வலி, உடலில் எங்கு காயம் பட்டாலும் ஆறாத நிலை ,  இவை போல இன்னும் பல நேரிடும்.

நம் உடலில் உள்ள இரத்தச் சிவப்பணுக்களில் உள்ள ஹீமோ குளோபின் , நுரையீரல்களுக்குச் சென்று ஆக்ஸிஜனை எடுத்துக் கொண்டு ஆக்ஸி – ஹீமோகுளோபின் ஆக மாறி  மீண்டும் நம் தசையில் , உடலில் உள்ள செல்களுக்கு ஆக்ஸிஜனை கொடுத்துவிட்டு  மீண்டும் ஹீமோகுளோபின் ஆக மாற வேண்டும் . ஆனால் சர்க்கரையின் அளவு அதிகரிப்பால் இந்த ஹீமோ குளோபினைச் சுற்றி சர்க்கரை ஒட்டி பிடித்துக் கொள்வதால் நுரையீரல்களுக்குச் சென்று ஆக்ஸிஜனை எடுத்துக் கொண்டு ஆக்ஸி – ஹீமோ குளோபின் ஆக மாறுவதைத் இந்தச் சர்க்கரை தடுத்துவிடுகிறது .

எனவே இரத்தம் நுரையீரல்களுக்கு போனாலும், பிறகு  அங்கிருந்து உடலெங்கும் பரப்பப்பட்டாலும் பிராண வாயுவான ஆக்ஸிஜனை நுரையீரலில் இருந்து  எடுக்கும் , பின் உடல் அணுக்களுக்கு  கொடுக்கும் பணியைச் செய்யாமல் ஒப்புக்கு சப்பாணியாக ஓடிக் கொண்டேயிருக்கும் . விளைவு உடலெங்கும் உள்ள  செல் அணுக்களுக்கு சரியாக ஆக்ஸிஜன் கிடைக்காமல் செல்கள் சாகும் .இதனால்தான் சர்க்கரை வியாதிக் காரர்கள் உடல் மெலிந்து போவது நிகழ்கிறது . (There are a number of different human hemoglobin (Hb) variants the most prevalent being HbA1, HbS and HbC.   HbA1 is the most common variant making up approximately 97% of the total hemoglobin in normal adult red blood cells.   HbS is a hemoglobin variant associated with sickle cell anemia which occurs predominantly in African Americans.   HbC is another hemoglobin variant found in people of African ancestry including African Americans and West Indians. ) 

பொதுவாக சர்க்கரை வியாதி முற்றி மோசமாக இருப்பவர்களுக்கு இந்த (HbA1 )சர்க்கரை ஒட்டிக் கொண்டுள்ள ஹீமோ குளோபின் அளவு 14 % அளவில் இருக்கும். சித்த வைத்தியத்தில் இந்த வியாதியஸ்தர்களைக் குணமாக்கும் போது 5 லிட்டர் இரத்தத்தில் 900 மில்லிகிராம் சர்க்கரை இருக்கும் .ஹீமோ குளோபினில் ஒட்டிக் கொண்டுள்ள சர்க்கரையை சித்த மருந்துகள் உரிக்கும் போது அவை இரத்தத்தில் இருப்பதாகக் காட்டும்.சித்த மருந்துகள் சாப்பிட்டேன் சர்க்கரை அளவு கூடிவிட்டது என்று எண்ணி பயப்படுவார்கள்.  இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை வைத்து சர்க்கரை நோயைக் கணிப்பதே தவறான முறையாகும்.

இது ஏன் என்று அடுத்த கட்டுரைகளில் பார்க்கலாம் .அந்த விடயங்களுக்குப் போகுமுன்னர் ஆங்கில வைத்தியர்கள் உங்களிடம் கூறியுள்ள விடயங்கள் , உங்களை சர்க்கரை நோய் பற்றிய தெளிவான அறிவில்லாத முட்டாள்களாகவும்  , அதன் மூலமாக சர்க்கரை நோயாளிகளாக உங்களை வைத்திருப்பதிலும் வெற்றி பெற்றுள்ளது என்பதைப் புரிந்து கொண்டு .அந்த முட்டாள்தனமான  ஆங்கில வைத்திய முறை சொல்லும் பல விடயங்களை குப்பைத் தொட்டியில் வீசிவிட்டு காலிக் கோப்பையாக வந்தால் மட்டுமே  மேலும் நாம் கூறும் விடயங்கள்  புரியும்.

இந்த தொடரைப் படித்து அதிலுள்ள சில விடயங்களைக் கடைப்பிடித்தாலேயே சர்க்கரை நோயைக்  குணமாக்கிவிடலாம்.மற்ற விடயங்களை சர்க்கரை வியாதியை குணமாக்கலாம்(பாகம் 2) ல் பார்க்கலாம்.

82 responses to “சர்க்கரை வியாதியை குணமாக்கலாம்(பாகம் 1)”

 1. karuppiah kannan says:

  Arumayana pathivu…
  Vazhthi vanangukirean.

  • machamuni says:

   அன்பு மிக்க திரு கருப்பையா கண்ணன் அவர்களே,
   கருத்துரைக்கு மிக்க நன்றி !!!!!!
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 2. ramesh says:

  திரு.அழகப்பன் அவர்களே, மிகவும் அருமையான பதிவு . இன்றைய காலத்திற்கு அனைவருக்கும் தேவையான விடயம்.தங்கள் பணி மேலும் தொடர இறைஅருள் துணை இருக்க பிரார்த்திக்கிறேன். நன்றி …….

  • machamuni says:

   அன்பு மிக்க திரு ரமேஷ் அவர்களே,
   கருத்துரைக்கு மிக்க நன்றி !!!!!!
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 3. மகேஷ் says:

  திரு சாமீ அழகப்பன்,

  இத்தொடர் மூலம் நீங்கள் தரும் அறிவு பலருக்கு நலம் பயக்கட்டும் என்று இறையை இறைஞ்சுகிறேன்.

  நன்றியுடன்
  மகேஷ்

  • machamuni says:

   அன்பு மிக்க திரு மகேஷ் அவர்களே,
   கருத்துரைக்கு மிக்க நன்றி !!!!!!
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 4. nitingeetam says:

  ஐயா வணக்கம்..

  கண்ட்ரோல் ல இருக்கு இருக்கனு சொல்லியே ஆங்கில மருந்து உடம்பை கூறு போட்டு கொன்று விடுகிறது…….

  எனக்கு தெரிந்து என் நண்பரின் மனைவி கை விரலை வெட்டி விட்டார்கள்…….என்ன கொடுமை ஐயா….இந்த செய்தி கேட்டால் எப்படி
  ஐயா நம் மனம் இருக்கும்?????
  சிவ சிவ!!

  • machamuni says:

   அன்பு மிக்க திரு நிட்டிகீதம் அவர்களே,
   கருத்துரைக்கு மிக்க நன்றி !!!!!!
   எம்மிடம் அரியலூரில் பணி செய்து கொண்டிருக்கும் போது திரு விஜய ராகவன் என்று ஒரு உடன் பணி புரியும் நண்பர் வந்தார்.அவருடைய தந்தைக்கு (முசிறி பேங்கர் ராமகிருஷ்ணம் பிள்ளை) ஒரு காலை எடுத்துவிட்ட நிலையில், திரு ஆனந்தன் என்பவரின் பரிந்துரையோடு வந்தார்.அவர் என்னிடம் வரும் போது அவருக்கு மூன்று வேளையும் 30 பாயிண்ட் இன்சுலின் போட்டுக் கொண்டிருந்தாலும்(அவர் கை கால்களெல்லாம் ஊசி குத்திக் குத்தி ரணமாக மாறிவிட்டிருந்தது) , சிறு நீரில் கருஞ்சிவப்பு (4+) நிறம்தான் வரும்.அவர் என்னிடம் வரும் போது அவருடைய மற்றோர் காலும் கருப்பாக மாறி ,அந்தக் காலையும் வெட்டி எடுக்க வேண்டிய நிலையில் வந்தார்கள்.அவருக்காக ஒரு மருந்தை தயாரித்து கொடுத்தோம் .ஒரு சிட்டிகை அளவு மருந்து மட்டுமே , போதுமானதாக இருந்தது .அவருக்கு இன்சுலின் தேவை இல்லை .காலில் வெடுக் , வெடுக்கென்ற பிடுங்கல் இல்லை .அபரிமிதமான சிறு நீர்ப் போக்கு இல்லை .மொத்தத்தில் அவருக்கு மது மேகத்தின் அறிகுறிகள் அனைத்துமே இல்லை .கருப்பான கால் மீண்டும் தன்னிறத்துக்கு திரும்பி வந்தது . அவ்வளவு சிறப்புடையது நமது சித்த மருந்துகள்.
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

   • ஸஹதுல்லாஹ் says:

    அண்ணன் அவர்களுக்கு,
    இது போன்ற நிகழ்வுகளை படிக்க கிடைப்பது நாங்கள் செய்த பாக்கியம். இதன் மூலம் எமது சித்த மருத்துவத்தின் நம்பிக்கைகள் மிகவும் பலப்படுகின்றன. தங்களின் ஆழ்ந்த விளக்கங்களின் முடிச்சுக்கள் ஒவ்வொரு பதிவின் மூலம் ஒவ்வொரு முடிச்சாக அவிழ ஆச்சர்யமும், சுவாரசியமும், உண்மைத் தன்மையும் மேலோங்குகின்றன. அந்த ஹீமோகுளோபின் சார்ந்த விளக்கம் அருமை. மேலும் உங்கள் பதிவுகளை காண ஆவலோடு எதிர்நோக்கியிருக்கிறேன்.

    சில மாதங்களாக, எனது வலது கால் பெருவிரல் நுனியில் மத மதப்பாக உணர்வின்றி , உறங்கியது போல் உள்ளது. மற்றும் சில வருடங்களாக நீண்ட நேரம் குறிப்பாக ஒரு பதினைந்து நிமிடத்திற்கு மேல் நின்று கொண்டிருந்தாலே இடுப்பின் அடிப்பகுதி முழுதும் ரணமாய் வலிக்கிறது, ஒரு வேலையும் செய்ய முடிவதில்லை, சொல்லப் போனால் நிற்க்கக் கூட முடியவில்லை. கீழே எங்கும் விழுந்த ஞாபகம் இல்லை. இந்த இரண்டு விசயங்களுக்கும் மருந்துகள் சொன்னால் மிக்க நலம்.

    தவறுகள் இருப்பின் மன்னிக்கவும்.

    தங்களன்புள்ள,
    ஸஹதுல்லாஹ்

    • machamuni says:

     அன்பு மிக்க திரு ஸஹதுல்லாஹ் அவர்களே,
     கருத்துரைக்கு மிக்க நன்றி !!!!!
     இந்தக் கட்டுரையின் பதிவுகள் முடியும்போது உங்கள் கேள்விகளுக்கு பதிலும் கிடைத்துவிடும்.கால் பெருவிரல்களில் மதமதப்பு என்றால் அது மண்ணீரல் , கல்லீரலும் பலவீனமடைந்து வருவதைக் காட்டுகிறது.இடுப்பு வலி என்பதும் கீழ் முதுகு வலி என்பதும் சிறு நீரக பலவீனத்தைக் காட்டும்.
     மிக்க நன்றி
     என்றென்றும் பேரன்பினால்
     சாமீ அழகப்பன்

     • ஸஹதுல்லாஹ் says:

      அண்ணன் அவர்களுக்கு,
      மட்டற்ற நன்றிகள்….. காத்திருக்கிறேன் பதிவுகளுக்காகவும் மற்றும் அதிலுள்ள பதில்களுக்காகவும்…

      தங்களன்புள்ள,
      ஸஹதுல்லாஹ்

     • machamuni says:

      அன்பு மிக்க திரு ஸஹதுல்லாஹ் அவர்களே,
      கருத்துரைக்கு மிக்க நன்றி !!!!!
      மிக்க நன்றி
      என்றென்றும் பேரன்பினால்
      சாமீ அழகப்பன்

   • nitingeetam says:

    ஐயா வணக்கம்,

    சுகரினால் உறுப்புக்கள் பாதிப்பினால்,வெட்டி எடுக்கும் நிலையை எவ்வாறு தவிர்ப்பது?இதற்கு ஓரு வழி சொல்லவும்?

    சிவ சிவ!!!

    • machamuni says:

     அன்பு மிக்க திரு நிட்டிகீதம் அவர்களே,
     கருத்துரைக்கு மிக்க நன்றி!!!!
     எல்லாம் திருவாளர் அல்லோபதி மருத்துவத்தின் மகாத்மியம்.அடுத்தடுத்து விளக்கங்கள் எழுதும் போது என்னவென்று புரியும்.
     மிக்க நன்றி
     என்றென்றும் பேரன்பினால்
     சாமீ அழகப்பன்

 5. ராஜேஷ் கண்ணா says:

  மதிப்பிற்குரிய அய்யா வணக்கம்,

  மிக அருமையான பதிவு. பயனுள்ள கருத்துகள். புதிய விளக்கங்கள். மேலும் விளக்கங்களை எதிர்பார்த்து கொண்டிருக்கிறோம்.

  அடியேன்,
  ராஜேஷ் கண்ணா

  • machamuni says:

   அன்பு மிக்க திரு ராஜேஷ் கண்ணா அவர்களே,
   கருத்துரைக்கு மிக்க நன்றி !!!!!!
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 6. shareef says:

  அருமை சாமி ஜி
  சர்க்கரை யினால் பாதிக்க பட்ட
  அனைவரும் நிச்சயம் பயனடைவர்
  நன்றி ஜி

  • machamuni says:

   அன்பு மிக்க திரு ஷெரீஃப் அவர்களே,
   கருத்துரைக்கு மிக்க நன்றி !!!!!!
   இறைவன் எல்லா இடங்களிலும் நிறைந்துள்ளான்.அதிலும் மானிட தேகத்தில் சிறப்புடன் இருப்பதால்தான் . மானிட தேகத்திலிருந்து இறை நிலை அடைய முடிகிறது . தேவர்களாகப் பிறந்தாலும் மானிடரல்லால் ஞானம் அடைய முடியாது .அந்த மானிட தேகத்தில் இருக்கும் இறைக்கு எம்மாலாகிய பணி .
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 7. s.venkat says:

  அன்புடையீர்,

  வணக்கம். மிகவும் பயனுள்ள, கட்டுரை. இறைவன் அருளால் அந்த
  பாக்கியம் எங்களுக்கு, தங்கள் மூலம் கிடைத்துள்ளது.

  இதற்கு கருத்துரை எழுதி, தங்களின் பொன்னான நேரத்தினை விரையமாக்க
  வேண்டாம் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

  காரணம், மின்சார தட்டுப்பாடு மற்றும் சென்ற பதிவில் அதிக கருத்துரைகள்
  இருந்ததால், இந்த பதிவு மிகவும் தாமதம்.

  என்றும் அன்புடன்
  வெங்கட்
  9865824794

  • machamuni says:

   அன்பு மிக்க திரு எஸ்.வெங்கட் அவர்களே,
   கருத்துரைக்கு மிக்க நன்றி !!!!!!
   இருந்தாலும் பதிலளிக்க வேண்டியது எம் கடமையல்லவா????எவ்வளவோ சிரமத்திலிருக்கும் நோயாளர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதிலளிக்காமல் போனால் நாம் கட்டுரை எழுதுவதின் பயன்தான் என்ன???நேரம் இது எடுத்தாலும் பதிலளிக்கிறோம்.
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 8. s.venkat says:

  அன்புடையீர்,

  எல்லாம் அவன் செயல். மிக்க நன்றி.நன்றி. நன்றி

  அன்புடன்
  வெங்கட்

  • machamuni says:

   அன்பு மிக்க திரு எஸ்.வெங்கட் அவர்களே,
   கருத்துரைக்கு மிக்க நன்றி !!!!!!
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 9. Saravanan.M says:

  வணக்கம் அய்யா,
  பல நாள் வாசகன் நான்.
  இதுவரை உங்களுக்கு கருத்துரை இடவில்லை.
  இன்று ஒரு விண்ணப்பத்துடன் வந்திருக்கிறேன்.

  தயவு செய்து தொந்தரவிற்கு மன்னிக்கவும்.

  1. சர்க்கரை நோய் – பன்னெடுங்காலமாக பலரால் பலவிதமாக விளக்கம்
  கொடுக்கப்பட்டு அவரவர் தனக்கான விளக்கத்தை தாங்களாகவே அனுமானித்துக்கொண்டு தங்கள் வாழ்கையை ஆங்கில மருத்துவரிடம் அடகு வைக்கும் ஒரு புரியாத புதிர். இதன் விளைவை எங்கள் குடும்ப உறுப்பினர்களின் அவர்களின், இறுதி வரை உடனிருந்து பார்த்தும் நமக்கென வரும்போது மீண்டும்
  புதிராக தோன்றுகிறது. உங்கள் தொடர் – அவசியமான பதிவு. நன்றிகள். ஆனால் ஒரு வேண்டுகோள் : தயவு செய்து இந்த தொடரை வேகமாக வெளியிடவும் – காரணம் – இந்த புதிருக்கு விளக்கம் தேடி பலர் அலையும் நேரத்தில் சமய சஞ்சீவினியக இந்த தொடர் வேகமாக வருவது – அவர்கள் வாழ்கையில் ஒவ்வொரு நாளையும் சந்தோஷத்துடன் அனுபவிக்கலாம் என்பது எனது வேண்டுகோள் . (நேரமிருப்பின்)

  2. அய்யா, மனித உடலில் ஒவ்வோர் உறுப்பும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் அந்த பணியை செய்யுமென்றும்
  அந்த நேரத்தில் அதற்குண்டான பயிற்சியை (எடுத்துக்காட்டாக மலையில் நடை பயிற்சி) மேற்கொண்டால் நலம் என்றும் தங்கள் பதிவொன்றில் படித்தேன்.
  அந்த பதிவின் தலைப்பு மறந்து விட்டது. தயவு செய்து மீண்டும் குறிப்பிடவும்.

  நன்றிகள் பல – உங்கள் அனைத்து பதிவிற்கும்.

  சரவணன் – திருப்பூர்.

  • machamuni says:

   அன்பு மிக்க திரு எம் . சரவணன் அவர்களே,
   கருத்துரைக்கு மிக்க நன்றி !!!!!
   முதல் கேள்விக்கு முடிந்த வரை விரைவில் முடிக்கப் பார்க்கிறேன்.இரண்டாவது கேள்விக்கு விரைவில் பதிலளிக்கிறேன்.
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 10. arul says:

  எக்காலத்திலும் அனைவருக்கும் தேவையான அருமையான பதிவு . சிறுவலிப்பு (13yr boy wt 50kg) குணமாகுமா? Taking Sangu parpam, annabedhi, brahmi. (National sidda tambaram) kindly reply. Attack is frequent nowadays- 3wk once.

  • machamuni says:

   அன்பு மிக்க திரு அருள் அவர்களே,
   கருத்துரைக்கு மிக்க நன்றி !!!!!
   இவற்றைவிட கருப்பு விஷ்ணு சக்கரம் என்ற மாத்திரையை உபயோகிக்க நலம் பயக்கும்.உடல் முழுவதும் காயத்திருமேனி எண்ணெயை பூசி வர்ம அடங்கல் முறைகளைக் கையாண்டால் மிக்க நலம் உண்டாகும்.
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 11. Saravanan.M says:

  // Re sending for the correction made – ( மா ) – மாலையில்
  2. அய்யா, மனித உடலில் ஒவ்வோர் உறுப்பும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் அந்த பணியை செய்யுமென்றும்
  அந்த நேரத்தில் அதற்குண்டான பயிற்சியை (எடுத்துக்காட்டாக மாலையில் நடை பயிற்சி) மேற்கொண்டால் நலம் என்றும் தங்கள் பதிவொன்றில் படித்தேன்.
  அந்த பதிவின் தலைப்பு மறந்து விட்டது. தயவு செய்து மீண்டும் குறிப்பிடவும்.
  //

  • machamuni says:

   அன்பு மிக்க திரு எம் . சரவணன் அவர்களே,
   கருத்துரைக்கு மிக்க நன்றி !!!!!
   உங்களால் தேட முடியவில்லை என்று எமது பொன்னான நேரத்தை வீணாக்கலாமா ???முயன்று பாருங்கள்.
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 12. eshwar.ad bangalore says:

  thankaludaya sarkarai noi katturai patithen viyanthen MBBS MD paditha doctorgal kooda ivvalavu thulliayamaaga noiai patri thella thelivaaga ezhuthamudiyaathu aanaal neengal ezhudhiya katturai ennai vyakka vaikirathu nandri . diabetis pattri thaangal ezhuthiyathu 100kku 100 unmai ungalin adutha pathivirkaaga aavaludan kaathirukireyen . sarkarai noi theerkum marunthai patri thaangal therivithaal indha manithakulam ungalai endrendrum pottrum andha punyam ungal serum nandri

  ESHWAR.AD BANGALORE

  • machamuni says:

   அன்பு மிக்க திரு ஈஸ்வர் அவர்களே,
   கருத்துரைக்கு மிக்க நன்றி !!!!!
   தெரிந்து கொள்ள வைத்த இறைவனுக்குத்தான் முதல் நன்றி.
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 13. ஸஹதுல்லாஹ் says:

  அனைவருக்கும் கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்..!!!!!!!!!!!

  • machamuni says:

   அன்பு மிக்க திரு ஸஹதுல்லாஹ் அவர்களே,
   கருத்துரைக்கு மிக்க நன்றி !!!!!
   அனைவருக்கும் எமது கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்!!!!!!!!!
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 14. S.Manivannan says:

  Dear MR.Alagappan ,

  Please Save Indians from SUGAR problems in world we are in 1 st place for Sugar Patients.

  For Continue your Social Service i pray GOD to gave for your LONG LIVE AND GOOD HEALTH.

  THANKS & REGARDS,
  S.MANIVANNAN

  • machamuni says:

   அன்பு மிக்க திரு எஸ்.மணிவண்ணன் அவர்களே,
   கருத்துரைக்கு மிக்க நன்றி !!!!!
   /// Please Save Indians from SUGAR problems in world we are in 1 st place for Sugar Patients///
   ஒன்று சொன்னால் மிகக் கோபித்துக் கொள்ள மாட்டீர்கள் என்று நினைக்கிறேன்.நமது வெளிநாட்டு மோகம் நம்மை எங்கே தள்ளியிருக்கிறது என்றால் தான் ஒரு நிமிடம் அழகாகத் தெரிய,(அழகு சாதனப் பொருள்களில் டாக்சிக்ஸ் ) உயிரைப் பணயம் வைக்கக் கூடிய அளவில்தான் இருக்கிறார்கள்.கண்ணிரண்டையும் விற்றுச் சித்திரம் வாங்கினால் கை கொட்டிச் சிரியாரோ!!!!! இவர்கள் காய்ச்சல் , தலைவலி ,உடல் வலிக்கு ஆங்கில மருந்துகள் என்ற பெயரில் ( விஷங்கள் ) எடுத்துக் கொள்ளும் நஞ்சுகள் ,பின்னர் அவர்களது வாழ்நாளில் வரும் 90 % நோய்களுக்கு காரணம் என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா????நமது இந்திய மக்கள் முட்டாள்களாய் இருப்பதால்தான் அமெரிக்காவில் தடை செய்யப்பட்ட மருந்துகளை ,அமெரிக்காவிலேயே விற்காத மருந்துக் கம்பெனிகள் அமெரிக்காவில் மருந்துகள் தயாரிக்கின்றன,எதற்கு ??? இந்திய மக்கள் என்னும் சிந்திக்காத ஜென்மங்களுக்கு, நம் நாட்டைச் சுற்றி 27 நாடுகளில் தடை செய்யப்பட்ட மருந்தான பாராசிட்டமால் மருந்தை குழந்தைகளுக்கு (பீடியாட்ரிக் ட்ராப்ஸ் ) ஆக வேளை தவறாமல் தரும் தாய்மார்கள் பிள்ளைகளுக்கு பின்னாளில் பெட்டி பெட்டியாய் வியாதியைத் தர அச்சாரம் போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.இது போல பல நஞ்சுகளை எடுத்து , எடுத்து மண்ணீரலும் , கல்லீரலும் பழுதடைந்து ,கடைசியில் சிறு நீரகமும் செயலிளந்து ,இருதயத்தாக்கு வந்து நோயாளர் மாண்டு போனால், டாக்டர் என்ன செய்வார் அவர் நன்றாகத்தான் பார்த்தார், ஹார்ட் அட்டாக் வந்துவிட்டதால் ஒன்றும் செய்ய முடியவில்லை என்பார்கள் .அந்த ஆங்கில மருத்துவர் கொடுத்த ஆங்கில மருந்துகள்தான் கொஞ்சம் கொஞ்சமாக நோயாளர் இறக்கக் காரணம் என்பதையே அறியாத இந்த இந்திய முட்டாள்தனத்தின் அடித்தளத்தில் கட்டப்பட்டுள்ள ஆங்கில மருந்துக் கம்பெனிகள் மொத்த வருடாந்திர பணச் சுழற்சி பல்லாயிரம் கோடி.இதற்கு பல அரசியல் பெரு முதலைகளும் காரணம் .எவன் உயிருடன் இருந்தால் என்ன செத்தால் என்ன என்ற இந்தப் போக்கு மக்களின் தலையில் வந்து விடிகிறது.என்டோ சல்பான் என்ற உடல் உறுப்புக்களை கபளீகரகம் செய்யும்,கேன்சரைத் தோற்றுவிக்கும் ,கல்லீரல் மண்ணீரலை உயிரோடு கொல்லும் பூச்சி மருந்தைத் தடை செய்யச் சொல்லி G8 உச்சி மாநாட்டில் உலக நாடுகள் கேட்டுக் கொண்டதற்கு , நம் நாட்டைச் சுற்றியுள்ள 37 நாடுகள் சரி என்று சொல்ல நம் நாட்டின் சார்பாக மாநாட்டுக்குச் சென்ற முழு முட்டாள்கள் இந்த பூச்சி மருந்துக்கு மாற்றாக இன்னொரு பூச்சி மருந்தைக் கண்டுபிடித்தபின் இதைத் தடைசெய்து கொள்ளலாம் என்று பேசி இருக்கிறார்கள் என்றால் நம் நாட்டில் இருக்கும் இந்தியர்கள் முட்டாள்கள் என்றால் , நம்மை ஆள்பவர்கள் முழு முட்டாள்கள். இந்த மருந்தால் அத்தனை பேரும் செத்த பிறகு அவர்கள் என்ன சுடுகாட்டையா ஆட்சி செய்யப் போகிறார்கள்.
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 15. kandhaswamy says:

  ஓரு வேண்டுகோள். Please visit http://www.anatomictherapy.org and view all the videos. கடந்த 2 மாதங்களாக பின்பற்றுகிறேன். முன்பை விட ஆரோக்கியமாக இருக்கிறேன். இந்த தளத்தை பற்றியும் நீங்கள் எழுதினால் மேலும் பலர் பயன் அடைவார்கள் என நம்புகிறேன்.

  உங்களை போன்ற சித்தர்களின் ஆசி பெற்ற சித்த வைத்தியர்களை காண்பது அரிது.

  “சுப கிரகங்கள் பலம் பெற்றால் மட்டுமே மார்க்க வைத்திய முறைகள் பலனளிக்கும் ஆனால் அந்த பாக்கியம் உமக்கு இல்லை” என்று எனக்கு நாடி சோதிடத்தில் வந்தது. என்னை போன்றவர்களுக்கு தஙகளின் வழி காட்டுதலை அறிய விரும்புகிறேன்.
  தற்சமயம் பெரிய நோய் எதுவும் எனக்கு இல்லை. -7 பவரில் கண்ணாடி அனிந்துள்ளேன். 100 சதவீத முழுமையான ஆரோக்கியத்தை விரும்புகிறேன்.

  Thanks

  • machamuni says:

   திரு கந்தசாமி ஐயா அவர்களே ,
   நீங்கள் மிகத் தாமதமாகக் கூறுகிறீர்கள்.இது ஹீலர் பாஸ்கர் அவர்களது இணைய தளம் .இவரைப்பற்றியும் இவர் கையாளும் முறைகள் பற்றியும் ஒரு வருத்திற்கு முன்னரே FRIDAY, OCTOBER 7, 2011 எழுதிவிட்டேனே !!!!! எனது தளம் வலைப்பூவாக இருந்தபோதே எழுதியிருக்கிறேன்.
   http://machamuni.blogspot.in/2011/10/45.html
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 16. arul says:

  மிக்க நன்றி அய்யா! கருப்பு விஷ்ணு சக்கரம், காயத்திருமேனி எண்ணெய வாங்கி விட்டோம். 13 வயது பையனுக்கு கருப்பு விஷ்ணு சக்கரம் மாத்திரைகள் அளவு, sangu, abc tab சேர்த்து தரலாமா? தங்களின் பொன்னான நேரத்தினில் வழிகாட்டியமைக்கு மிக்க நன்றி அய்யா!

  • machamuni says:

   அன்பு மிக்க திரு அருள் அவர்களே,
   கருத்துரைக்கு மிக்க நன்றி !!!!!
   தினம் ஒரு மாத்திரை போதுமானது .நீங்கள் கொடுத்து வரும் மருந்துகளுடனேயே கொடுத்து வரலாம்.உங்களுக்கு மருந்துகள் அளித்து வரும் சித்த மருத்துவரிடம் இதைச் சொல்லியே பயன் படுத்துங்கள்.ஆங்கில மருத்துவர்கள்தான் முட்டாள்தனமாக (தன் ஒன்றும் இல்லாத தன்மை வெளியே தெரிந்து விடக் கூடாது என்பதற்காக) “நீ டாக்டரா ??? நான் டாக்டரா???” என்று கேட்பார்கள்!!! ஆனால் சித்த மருத்துவர்கள் அப்படி கேட்க மாட்டார்கள் பொறுமையாக பதில் சொல்வார்கள்.அவர்கள் கொடுத்துள்ள மருந்துகளும் இலேசானவை அல்ல.ஆனால் இதற்கென்றே உள்ள தனிப்பட்ட கருப்பு விஷ்ணு சக்கரம் என்ற மருந்து டாம்ப்கால் ல் இல்லை National sidda tambaram த்தில் டாம்ப்கால் மருந்துகளே பெரிதும் பயன் படுத்தப்படுகின்றன.அவர்கள் சேவை மிகப் பாராட்டத் தக்கது.
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 17. இளமதி says:

  அய்யா எனக்கு 23 வயது ஆகிறது. சித்தர் நூல்களிலும் சித்த மருத்துவத்திலும் ஆர்வம் அதிகம் உண்டு. சித்த மருத்துவத்தை படிப்பத்தோடு அல்லாமல் கற்கவும் விரும்புகிறேன் அதற்கு என்னை அடிப்படையாக தயார் படுத்தி கொள்ள என்னவெல்லாம் செய்ய வேண்டும். உங்கள் பதிலை எதிர்பார்கிறேன்

  • machamuni says:

   அன்பு மிக்க திரு இளமதி அவர்களே,
   கருத்துரைக்கு மிக்க நன்றி !!!!!
   படிக்க வேண்டியதும் , கற்க வேண்டியதும் கடல் போல இருக்கிறது.23 வயது வரை ஆரம்பிக்கவே இல்லை என்றால் , நீங்கள் ஆரம்ப கட்டத்திற்கு தயாராகவே இன்னும் இருபது வருடம் ஆகிவிடுமல்லவா????பரவாயில்லை . முயலுங்கள் , உங்கள் ஆர்வம் உங்களைக் கரை சேர்க்கட்டும்.
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 18. சிவகுரு says:

  வணக்கம் அய்யா,
  நான் உங்களது வலைத்தலத்தை நான்கு மாதங்களாக பார்த்து வருகிறேன்,
  எனக்கு எண்ணை பண்டங்கள் உண்ணும் போது வலது பக்கம் கடவு எழும்பிற்கு கீழ், வயிற்றிற்கு மேல் வலி தோன்றுகின்றது. இந்த பாதிப்பு மூன்று வருடங்களுக்கு முன் (இரண்டு வருடத்தில் மூன்று முறை) மலேரியாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு பின் ( ஆங்கில மருத்துவம்) இருந்து ஏற்படுகிறது. ஆங்கில மருத்துவர்கள் கல்லீரல் வீக்கம் அடைந்து உள்ளது என்று கூறி அதற்கான மருந்துகளை உட்கொண்டேன். கடந்த இரண்டு வருடங்களாக எந்த ஆங்கில மருந்தும் உண்பதில்லை. தயை கூர்ந்து உபாயம் கூறுங்கள்.

  நன்றி,
  சிவகுரு

  • machamuni says:

   அன்பு மிக்க திரு சிவகுரு அவர்களே,
   கருத்துரைக்கு மிக்க நன்றி !!!!!
   உங்களுக்கு ஈரலில் பாதிப்பு வந்ததே இந்த ஆங்கில மருத்துவர்களாலும் , அவர்கள் கொடுத்த மருந்துகளாலும்தான். ///ஆங்கில மருத்துவர்கள் கல்லீரல் வீக்கம் அடைந்து உள்ளது என்று கூறி அதற்கான மருந்துகளை உட்கொண்டேன்./// இதில் கல்லீரல் வீக்கத்தைச் சரி செய்ய அவர்கள் மருந்து கொடுத்தார்களா?????? நல்ல கூத்து இது.///கடந்த இரண்டு வருடங்களாக எந்த ஆங்கில மருந்தும் உண்பதில்லை./// இனி உருப்படியில்லாமல் செய்ய உங்கள் உடலில் ஒன்றும் இல்லை தெரிந்து போயிருக்கும் . பாவம் என்று விட்டுவிட்டார்கள்.இதற்கு மேல் உபாயம் எதைக் கூற .மேல்விவரங்களுக்கு எனது தனிப்பட்ட மின்னஞ்சலுக்கு வாருங்கள்.
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 19. sridhar says:

  மதிப்பிற்குரிய அய்யா,

  இதே பிரச்சனை கல்லீரல் வீக்கம் எனக்கும் இருந்தது. ஒரு இரு சக்கர வாகன விபத்தில் (டிசம்பர் 2011) சிகிச்சையில் ஆங்கில மருந்துகளை அதிகம் உட்கொண்டதால் எனக்கு இந்த பிரச்சனை ஏற்பட்டது என்பதை அறிந்தேன். அதன் பின்னர் சித்த மருந்துகளை உட்கொண்டு ஒரளவு குறைத்தேன். இதில் மிக முக்கியமானது உணவு பழக்கமுறைகளை முற்றிலும் மாற்றியது. தினம் ஒரு நெல்லிகாய் வெறும் வயிற்றில் உண்பது, நடை பயிற்சி, யோகா போன்ற விசயங்கள் இதில் எனக்கு பெரிதும் உதவியது. எனது எடை 85 kg இருந்ததை 69 kg வரை குறைத்தேன். தற்போது சதுரகிரி கண்ணன் அவர்களின் வெண் தாமரை கற்பத்தை உபயோகிக்கலாம் என்றிருக்கிறேன். எனக்கு ரத்தத்தில் கெட்ட கொழுப்பு அதிகம் உள்ளது என்கிறார்கள். மேலும் கல்லீரலை பலப்படுத்த ஏதேனும் மருந்துகள் கூறவேண்டுமாய் கேட்டுக் கொள்கிறேன்.

  • machamuni says:

   அன்பு மிக்க திரு ஸ்ரீதர் அவர்களே,
   கருத்துரைக்கு மிக்க நன்றி !!!!
   ///தற்போது சதுரகிரி கண்ணன் அவர்களின் வெண் தாமரை கற்பத்தை உபயோகிக்கலாம் என்றிருக்கிறேன். எனக்கு ரத்தத்தில் கெட்ட கொழுப்பு அதிகம் உள்ளது என்கிறார்கள்/// தாராளமாக வாங்கி உபயோகியுங்கள்.
   கல்லீரலும் , வயிறும் பலமாக வாரம் ஒரு முறை இளநீர் பட்டினி இருத்தல் மிகமிக நல்லது.
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

   • ஸஹதுல்லாஹ் says:

    அண்ணன் அவர்களுக்கு,

    //இளநீர் பட்டினி இருத்தல் // குறித்து நான் அறியாதவனாக உள்ளேன், அது பற்றி தெரிந்து கொள்ள ஆர்வம், தெரிவித்தால் நலம்.

    மற்றும் கந்தையா அவர்கள் இங்கிலாந்திலிருந்து பின்னூட்டம் அனுப்பியது, உங்கள் சேவை வெளிநாட்டிலுள்ள மக்களுக்கும் போய்ச் சேர்வதில் மிக்க மகிழ்ச்சி.

    தங்களுக்கும், குடும்பத்தினருக்கும் மற்றும் உள்ள அனைத்து இணைய நண்பர்களுக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் …!!!!

    தவறுகள் இருப்பின் மன்னிக்கவும்.

    தங்களன்புள்ள,
    ஸஹதுல்லாஹ்

    • machamuni says:

     அன்பு மிக்க திரு ஸஹதுல்லாஹ் அவர்களே,
     கருத்துரைக்கு மிக்க நன்றி !!!!
     ///இளநீர் பட்டினி இருத்தல் ///பற்றி பின்னால் வரும் தொடர்களில் பார்க்கலாம் .தங்களுக்கும், குடும்பத்தினருக்கும் மற்றும் உள்ள அனைத்து இணைய நண்பர்களுக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் …!!!!
     மிக்க நன்றி
     என்றென்றும் பேரன்பினால்
     சாமீ அழகப்பன்

   • sridhar says:

    நன்றி அய்யா! ஓவ்வொறு வியாழக்கிழமையும் இதை செய்யலாம் என்று இருக்கிறேன். உங்களது புத்தாண்டு வாழ்த்துக்களுக்கு நன்றி. தங்களுக்கும் சதுரகிரி ஹெர்பல்ஸ் கண்ணன் அவர்களுக்கும் மற்றும் வலைத்தள நண்பர்களுக்கும் எமது புத்தாண்டு வாழ்த்துக்கள். இந்த புது வருடத்தில் மேலும் அருமையான் பதிவுகளை எங்களுக்கு கொடுக்க இறையருள் உங்களை வழிநடத்த வேண்டுமாய் பிரார்த்திக்கிறோம்.

    • machamuni says:

     அன்பு மிக்க திரு ஸ்ரீதர் அவர்களே,
     கருத்துரைக்கு மிக்க நன்றி!!!!
     ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் செய்வதைவிட, தினமும் மலம் கழிக்கும் முன்னும் பின்னும்,செய்வது மிக மிக நல்லது.
     மிக்க நன்றி
     என்றென்றும் பேரன்பினால்
     சாமீ அழகப்பன்

     • sridhar says:

      அன்புமிக்க அய்யா, இளநீர் பட்டினி – நான் புரிந்து கொண்டது – நாள் முழுக்க ஆகாரத்திற்கு பதில் இளநீர் மட்டும் அருந்தி விரதம் போல் இருப்பது. தயவு செய்து தெளிவுபடுத்துமாறு கேட்டு கொள்கிறேன்.

     • machamuni says:

      அன்பு மிக்க திரு ஸ்ரீதர் அவர்களே,
      கருத்துரைக்கு மிக்க நன்றி!!!!
      ///அன்புமிக்க அய்யா, இளநீர் பட்டினி – நான் புரிந்து கொண்டது – நாள் முழுக்க ஆகாரத்திற்கு பதில் இளநீர் மட்டும் அருந்தி விரதம் போல் இருப்பது./// ஆம் மிகச் சரியாக இதேதான். ஆனால் இளநீர்க் காயில் உள்ள வழுக்கையை சாப்பிடக் கூடாது . இந்த இளநீர் மட்டும் அருந்தி பட்டினி இருந்தால் உடலில் உள்ள அனைத்து கழிவுகளும் நீங்கி உடல் நலம் பெறும்.
      மிக்க நன்றி
      என்றென்றும் பேரன்பினால்
      சாமீ அழகப்பன்

 20. kandiah says:

  பெருமதிப்பிற்குரிய சாமீ அழகப்பன் ஐயா

  தங்கள் பதிவுகளை பலகாலமாக பார்த்து வந்தும் எது வித கருத்தும் இது வரை நாம் தெரிவிக்கவில்லை. எம்மால் தமிழில் தொடர்பு கொள்ள முடியாது போனது தான் காரணம். ஆனால் இப்போ தமிழில் கணனியில் பதிவு செய்யலாம்.

  சர்க்கரை வியாதியை பற்றி நீங்கள் எழுதியிருப்பது ஒரு வரபிரசாதமாகும். கோடிக்கணக்கான நோயாளிகளுக்கும் அதனால் பாதிக்கப்படும் குடும்பங்களுக்கும் பல நன்மையை கொடுக்கும். மேலும் பலருக்கு வியாதி வராமல் தடுக்கும். உங்களுக்கு ஆண்டவன் சகல நன்மைகளையும் பாக்கியங்களையும் தரட்டும்.

  எமது புது வருட வாழ்த்துக்கள் உங்களுக்கும், உங்கள் குடும்பம், நண்பர்கள், நலம்விரும்பிகள் மற்றும் தொடர்புடைய அனைவருக்கும்.

  கந்தையா இங்கிலாந்து.

  • machamuni says:

   அன்பு மிக்க திரு கந்தையா அவர்களே,
   கருத்துரைக்கு மிக்க நன்றி !!!!
   உங்கள் வாழ்த்துக்களுக்கு எமது மனமார்ந்த நன்றிகள்.தங்களுக்கும் நமது வலைத் தள வாசகர்களுக்கும் எமது புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 21. hari says:

  அன்புள்ள சாமிஜி அவர்களுக்கும் நமது வலைத்தள நண்பர்கள் அனைவருக்கும்
  இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்
  என்றும் அன்புடன் ஹரி

  • machamuni says:

   அன்பு மிக்க திரு ஹரி அவர்களே,
   கருத்துரைக்கு மிக்க நன்றி!!!!
   நமது வலைத்தள நண்பர்கள் அனைவருக்கும்,இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 22. Hari says:

  அன்புள்ள சாமிஜி அவர்களுக்கு,
  வணக்கம் தாங்கள் பதிவில் குறிப்பிட்டுள்ளபடி
  ////காலிக் கோப்பையாக வந்தால் மட்டுமே மேலும் நாம் கூறும் விடயங்கள் புரியும்.///
  என்பது தங்களின் அனைத்து பதிவுகளுக்குமே பொருந்தும்.மேலும் ஏன் சர்க்கரை
  வியாதிக்காரர்களின் உடல் மெலிந்து போகிறது என்பதற்கான விளக்கமும்
  மற்ற அனைத்து அறிவியல்பூர்வமான விளக்கங்களும் இது வரை யாராலும் வெளிப்படுத்தாதவை.
  இதே போல் மூட்டு வலி தைலம் பற்றிய பதிவில் எலும்புகள் மற்றும் கார/ அமிலத்தன்மைகள் மற்றும் அதற்கும் சிறுநீரகத்திற்கும் உண்டான தொடர்பு
  -ஆஹா படித்ததும் மிகவும் பிரமிப்பாக உள்ளது.
  நானோ / டி என் ஏ ஆராய்ச்சியில் கூட இம்மாதிரி வெளிப்பட தெரிவிக்க மாட்டார்கள்
  என்றால் மிகையில்லை
  தங்களின் அரும் பணிக்கு எனது சிரம் தாழ்ந்த வணக்கங்கள்

  • machamuni says:

   அன்பு மிக்க திரு ஹரி அவர்களே,
   கருத்துரைக்கு மிக்க நன்றி!!!!
   தெரிய வைத்த இறைவனுக்கு நன்றி .தெரிந்ததைச் சொல்ல சந்தர்ப்பம் கொடுத்த இறைவனுக்கு நன்றி.கேட்பதற்கு வந்த இறை சொரூபங்களுக்கு நன்றி.
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 23. venkat La says:

  அன்புள்ள சாமீ அழகப்பன் அவர்களே,

  இந்த பொன்னான 2012 ஆம் ஆண்டுமுடிந்து, இன்னுமொரு மகத்தான 2013 ஆம் ஆண்டு பிறக்கும் இந்த இனிமையான தருணத்தில் என் வாழ்வில் தென்றலாய், மின்னலாய், அன்பாய், அறிவாய், குருவாய், கிடைத்த தங்களுக்கும், திரு கண்ணன் அவர்களுக்கும் மற்றும் நமது வலைத் தள அன்பர்களுக்கும் இனிய புத்தாண்டு நாள் வாழ்த்துகள்.

  என்றும் அன்புடன்.
  வெங்கட் லா.

  • machamuni says:

   அன்பு மிக்க திரு வெங்கட் லா அவர்களே,
   கருத்துரைக்கு மிக்க நன்றி !!!!!
   ஆண்டொன்று போனால் நமது வயதொன்று போகும் .நமது வலைத்தள அன்பர்களான நாமெல்லோரும் மரணமில்லாப் பெருவாழ்வில் அடியெடுத்து வைத்து இன்புறும் நாள் அதி தொலைவில் இல்லை என்று இப்புத்தாண்டில் கூறி வாழ்த்துகிறோம்.
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 24. அன்பு சாமீ அழகப்பன் அவர்களுக்கு இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.தங்கள் வலை தளத்தை இந்த புத்தாண்டு தினத்தில் எனக்கு கான்பித்து கொடுத்த அந்த எம்பெருமனார்க்கு என் முதல் வணக்கம்.இந்தக்கடலில் அள்ள அள்ள முத்துக்கள். நன்றி அய்யா.

  • machamuni says:

   அன்பு மிக்க திரு பாலாஜி கண்ணன் அவர்களே,
   கருத்துரைக்கு மிக்க நன்றி !!!!!
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 25. sridhar says:

  விளக்கத்திற்கு நன்றி அய்யா.

  • machamuni says:

   அன்பு மிக்க திரு ஸ்ரீதர் அவர்களே,
   கருத்துரைக்கு மிக்க நன்றி!!!!
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 26. G PRABAKARAN says:

  IYYA AVARHALUKKU,

  THANGALAI KATHANTHA 6 MATHANGALAHA NANBAR MUTHUPILLAIMANDAPAM MURUGAN

  VAYILAHA ARIYAPETTREN.THANGALIN POORANA AACHIRVATHANGAL YENAKKU

  KIDAIKKAPETTRAL MIHAVUM MAHILVEN.

  IYYAH

  , KATHANTHA 2 VARUDANGALAHA CHAKKRAI VIYATHIYINAL CHIRAMAPADUKIREN,

  THANGALUDAIYA YIERANDAMPAHAM KATTURAIKKAHA AVALUDAN YETHIRNOKKUKINREN,

  THANGALAI NERIL KANUM VAIPPAYUM NANBAR MURUGAN MULAMA AMAYPERIN

  PAKKIYAVANAVEN. NANDRIYUM VANAKKATHUDANUM ANBAN,

  PRABAKARAN. sINGAPORE.

  • machamuni says:

   அன்பு மிக்க திரு பிரபாகரன் அவர்களே,
   கருத்துரைக்கு மிக்க நன்றி!!!!
   முத்துப்பிள்ளை மண்டபம் முருகனும் நீங்களும் எம்மைச் சந்திக்க வரலாம்.எங்கே பணிவு இருக்கிறதோ அங்கே நாம் முன்னே உம்மைத் தொழுது நிற்போம்.உங்களுக்கு எமது அலைபேசி எண் அறிவிக்கப்படும்.
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 27. eshwar.ad bangalore says:

  sarkarai noi patriya erandaam baagathai aavaludun ethirparthu kondu irukireyen

  WISH YOU AND MR KANNAN A VERY HAPPY NEW YEAR . AND A HAPPY PONGAL

  ESHWAR.AD

  BANGALORE

  • machamuni says:

   அன்பு மிக்க திரு ஈஸ்வர் அவர்களே,
   கருத்துரைக்கு மிக்க நன்றி!!!!
   சர்க்கரை நோயை குணமாக்கலாம் பாகம் 2 இன்று வெளியாகும்.
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 28. SAMPATHKUMAR says:

  அய்யா வணக்கம்,
  தங்கள் பதிவுகள பலவற்றை படித்தேன். இன்னும் பல அரிய சித்த ரகசியங்களை உங்கள் வழியாய் அறிய விரும்புகிறேன்.
  உங்கள் பணி தொடர வேண்டும்.
  என்றும் உண்மையுள்ள,
  ஆ. கோ. சம்பத்குமார்

  • machamuni says:

   அன்பு மிக்க திரு ஆ .கோ . சம்பத் குமார் அவர்களே,
   கருத்துரைக்கு மிக்க நன்றி!!!!
   எமது அறிவு எல்லாவற்றையும் வெளிப்படத் தெளிவாக அனைவருக்கும் வெளிப்படும் வண்ணம் திறந்த புத்தகமாகவே இருக்கும் . மற்றபடி நம் பணி தொடரும் வரை தொடரும்.
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 29. manikandan says:

  திரு சாமீ அழகப்பன்,

  எனது நண்பருக்கு கால் புண் கடந்த ஒன்ரரை வருடமாக உள்ளது.தயவு செய்து மருந்து கூரவும்.

  • machamuni says:

   அன்புள்ள திரு மணிகண்டன் அவர்களே,
   கருத்துரைக்கு மிக்க நன்றி,
   அன்புள்ள திரு கே பி ஸ்ரீனிவாசன் அவர்களே ,
   கருத்துரைக்கு மிக்க நன்றி,
   நீங்கள் இதற்கு நாட வேண்டிய இடம் சதுரகிரி ஹெர்பல்ஸ் கண்ணன் அவர்களையே!!!!அவர்களது மின்னஞ்சல் முகவரி மற்றும் அலை பேசி மற்றும் தொலைபேசி எண்கள் நமது வலைத் தளத்தில் ஏற்கெனவே பலமுறை வெளியிடப்பட்டுவிட்டது.
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 30. zakeer says:

  payanulla katturai..nandry

  • machamuni says:

   அன்புள்ள திரு ஸகீர் அவர்களே,
   கருத்துரைக்கு மிக்க நன்றி,
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்.

 31. sivakumar says:

  Dear Sir,

  Vanakkam, Ungalukku neenda aauil aandavar kodukkanum,
  Enekku uthattil tharpoluthuthan thalumbu vara aarampithu ullathu.

  I am getting resantly small Thalumbu is showing on both end of the lips.
  please give me solution to remove sir.

  Thanking you very much

  • machamuni says:

   அன்புள்ள திரு சிவ குமார் அவர்களே ,
   உங்களது கருத்துரைக்கு நன்றி
   உங்கள் உதட்டில் உள்ள தழும்பு வெள்ளையாக உள்ளதா???கருப்பாக உள்ளதா??? தீச்சுட்ட புண் போல உள்ளதா??? விபரம் அல்லது புகைப்படத்துடன் எமது மின்னஞ்சலுக்கு வாருங்கள் !!!
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 32. sivakumar says:

  Dear sir, Sorry for English typing, because i am also Very sincire tamilan, But i could’t type in tamil due to system here.

  Ennakku Thalumbu Vellaiyaga ullathu athuvum keil uthadu mattum ullathu.

  Rompa Roma Nandringa Iyya, for your immediate response sir.

  Thanking you very much
  Sivakumar

  • machamuni says:

   அன்புள்ள திரு சிவ குமார் அவர்களே ,
   உங்களது கருத்துரைக்கு நன்றி
   உங்கள் உதட்டில் உள்ள தழும்பு வெள்ளையாக இருந்தால் உடலில் மெலனின் சத்து குறைவாக உள்ளது என்று பொருள் !!!
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 33. sivakumar says:

  Dear sir, Vanakkam.

  Intha thalumbirku enna muraiyana acupressure vaithiyam appuram mutrilum varamal urrukka enna marunthu ungalidam ullathu, eppadi thangali dorapu gondu money kodupathu,

  after 10 days only i am coming to india sir, i came for 2 months work for Abudhabi.
  why this white thalumbu came, how to remove it ? please give solution for that.

  Thanking you very much

  Regards
  sivakumar

  • machamuni says:

   அன்புள்ள திரு சிவ குமார் அவர்களே ,
   உங்களது கருத்துரைக்கு நன்றி
   உங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு எமது அலைபேசி எண் அனுப்பப்பட்டுள்ளது.இந்தியா வந்த பின் தொடர்பு கொள்க .
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 34. sivakumar says:

  Dear sir,

  I am sivakumar, i am now india. Please give contact number..regarding about Ven pulligal at Uthattil.

  Thanks & Reards
  sivakumar.T

  • machamuni says:

   அன்புள்ள திரு டி.சிவக்குமார் அவர்களே ,
   உங்களது கருத்துரைக்கு நன்றி
   உங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு எமது அலைபேசி எண் அனுப்பப்பட்டுள்ளது.தொடர்பு கொள்க.
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 35. ராகவன் says:

  அன்புள்ள அய்யா

  எனக்கு 38 வயது. எனக்கு இப்போது சர்க்கரை அளவு 190 உள்ளதாக டெஸ்ட் மூலம் அறிகிறேன். நான் குழந்தை பெற்று கொள்ள முடியுமா? என் மனைவி வயது 33. எனக்கு ஆன்குறி விறைப்பதில்லை.

  ராகவன்

  • machamuni says:

   அன்புள்ள திரு ராகவன் அவர்களே,
   உங்களது கருத்துரைக்கு நன்றி ,
   சர்க்கரை அளவிற்கும் , ஆண்மைக் குறைவிற்கும் சம்பந்தம் உண்டென்றாலும் நீங்கள் கூறுவது போல குழந்தை பெற்றுக் கொள்ள முடியாத அளவிற்கு அது ஆக்காது. குறி விறைப்பை உண்டாக்கவும் உங்கள் பிரச்சினை தீரவும் திரு அமீர் சுல்தான் அவர்களிடம் தொடர்பு கொண்டு , சர்க்கரையைக் கட்டுப்படுத்த அப்ரேக பற்பம் 100 புடம் இருபது கிராம் சேர்க்கப்பட்ட சிறப்பு மது மேகச் சூரணம் , மற்றும் ஆண்மைக் குறைவிற்கான மருந்துகளையும் கேட்டு வாங்கி உபயோகியுங்கள் .நலம் பிறக்கும்.
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

76 − 71 =