ஞானம் என்பது உடல் சார்ந்ததா ? உயிர் சார்ந்ததா ? பாகம் ( 7 )

December 31, 2012 by: machamuni

இதற்கு முன்னர் ஞானம் உடல் சார்ந்ததா?உயிர் சார்ந்ததா? பாகம் 6 ஐ படித்த பின்னர் இந்தப் பதிவைப் படியுங்கள் .நன்கு புரியும் .

குதத்தில் உள்ள மலம் நாம் பொதுவில் மலம் என்றழைப்பது .அது மஞ்சள் மலம்.எதை சாப்பிட்டாலும் மலம் மஞ்சள் நிறத்தை அடைகிறது. இந்த மலமான மஞ்சள் மலத்தை நீக்குதல் எல்லா சித்த வைத்தியர்களும் கையாளும் யுக்தி.பொதுவாக எந்த சித்த வைத்தியரும் மருந்து கொடுக்கும் முன்னர் பெருமலம் போக்கிகளை கொடுத்து பின் தான் வியாதிக்கு உள்ள மருந்துகளைக் கொடுப்பார்கள்.இவை சில சமயம் , மூல நோய்த் தொந்தரவு உள்ளவர்களுக்கோ ,அல்லது பவுத்திர ரோகம் உள்ளவர்களுக்கோ , அல்சர் என்ற வயிற்றுப் புண் உள்ளவர்களுக்கோ தொந்தரவு தரலாம். எனவே அதற்கு எளிய முறை மலம் போக்க வழி உள்ளது .இது மலக்குடலில் உள்ள மலத்தைப் போக்கும்.

பழைய இறுகிப் போன மலம் குடலில் இருந்து கொண்டு குடல் இயக்கத்தை தடுப்பதுடன் , குடலில் சூட்டையும் உண்டாக்கி கண்ணைச் சுற்றி கருவளையம் உண்டாக்கி ,கண் பார்வைக் குறைவையும் உண்டாக்கும். கண்ணில் அனலைக் கூட்டும். இந்த பழைய மலத்தை இந்த சாதாரண எனிமா சரி செய்து வெளியே தூக்கி எறியும். இதை பொதுவாக இயற்கை வைத்திய முறைகளிலும் ,யோகாப்பியாச முறைகளிலும் பயன் படுத்துகிறார்கள்.

வெகு காலமாக சித்தர்களும் ஞானிகளும் ரிஷிகளும், குண்டலியாம் மூலக்கனலை எழுப்பும் போது , அபான வாயு சூடேறி மலத்துடன் பந்தப்பட்டு மலம் இறுகி சூடாகி மூலாதாரம் சூடாகாமல் இருக்க மூங்கில் குழாய்களை ஆசன வாயிற் சொருகி, இடுப்பளவு தண்ணீரில்  மூல பந்தம் செய்வதன் மூலம் சுத்தமான குளிர்ந்த தண்ணீரை குத வாயின் மூலம் உறுஞ்சி பெருங்குடல் முதலான , வயிற்றுப் பகுதிகளில் சுழற்றி வெளியேற்றுவார்கள் .இது மிகக் கடினமான பயிற்சி .

ஆனால் இந்தக் கடினமான பயிற்சியான , இதையே இப்போதுள்ள இயற்கை நல வாழ்வு பயிற்சிகள் கீழ்க் கண்டவாறு எளிமைப்படுத்தி உள்ளனர்.இதை அஹிம்சை இனிமா என்று அழைக்கின்றனர்.இதையே பெண்கள் பிறப்புறுப்புப் பாதையில் திரிபலாதிச் சூரணத்தைக் கொதிக்க வைத்து ஆற வைத்து கொடுப்பதன் மூலம்  {பிறப்புறுப்பு எனிமா (douche wash  ) } வெள்ளைப்படுதல் , அதிக மாதாந்திர இரத்தப் போக்கு , மாதாந்திர இரத்தப் போக்கின் போது  வயிறு  வலித்தல் ஆகிய பிரச்சினைகளும் தீரும். கீழே இனிமா கொடுக்கும்  வழி முறைகள் கொடுக்கப்பட்டுள்ளன.பயன்படுத்தி  இன்புறுங்கள். 

 இது வயிறு சம்மந்தமான பிரச்சினைகளுக்கு மட்டும் என்று எண்ணாதீர்கள் .கழிவுகளின் பெருக்கம் நோய்கள் !!!நோய்களின் தொகுப்பு மரணம் .கழிவுகளின் நீக்கம் , நோய்களின் முடிவு . நோய்களின் முடிவு மரணத்தின் முடிவு . நோய்களையும் , மரணத்தையும் தள்ளிப் போடவும் போக்கடிக்கவும் இந்த சாத்வீக எனிமா போதும் . புற்று நோயாளர்களும் கழிவு நீக்கத்துக்கு  இந்த சாத்வீக எனிமா உபயோகிக்கலாம்  .

மேலும் இந்த ஐம்மலம்  நீக்குதல் எப்படி என்று அடுத்த ஞானம் என்பது உடல் சார்ந்ததா ? உயிர் சார்ந்ததா ? பாகம் 8 ல் பார்க்கலாம்.

42 responses to “ஞானம் என்பது உடல் சார்ந்ததா ? உயிர் சார்ந்ததா ? பாகம் ( 7 )”

 1. shimbumathi says:

  migavum arumai sir, pachai karpoorathai mooligai marunthu porutkaludan kalanthu ullukku sappidalama

  • machamuni says:

   அன்பு மிக்க திரு ஷிம்புமதி அவர்களே,
   கருத்துரைக்கு மிக்க நன்றி !!!!
   ///pachai karpoorathai mooligai marunthu porutkaludan kalanthu ullukku sappidalama///ஏன் சாப்பிட விரும்புகிறீர்கள் .காரணமில்லாமல் ஏதும் செய்ய வேண்டாம்.
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 2. ராஜேஷ் கண்ணா says:

  மதிப்பிற்குரிய அய்யா வணக்கம்,

  இனிமா பற்றிய அருமையான விளக்கம்.
  நன்றி. தங்களுக்கும் நமது வளை தள அன்பர்களுக்கும் இனிய புத்தாண்டு நாள் வாழ்த்துகள்.

  அடியேன்,
  ராஜேஷ் கண்ணா

  • machamuni says:

   அன்பு மிக்க திரு ராஜேஷ் கண்ணா அவர்களே,
   கருத்துரைக்கு மிக்க நன்றி!!!!
   தங்களுக்கும் நமது வலைத் தள அன்பர்களுக்கும் இனிய புத்தாண்டு நாள் வாழ்த்துகள்.
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 3. anbu says:

  மதிப்பிற்குரிய அய்யா
  அருமையான பதிவு.
  சர்க்கரை வியாதியை குணமாக்கலாம்(பாகம் 2) ஐ
  மிகவும் ஆவலாக எதிர்பார்க்கின்றோம்.
  நன்றி.

  • machamuni says:

   அன்பு மிக்க திரு அன்பு அவர்களே,
   கருத்துரைக்கு மிக்க நன்றி!!!!
   மிக விரைவில் வெளியிடப்படும்.
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 4. ஸஹதுல்லாஹ் says:

  அண்ணன் அவர்களுக்கு,
  வயிறு சம்பந்தமான பிரச்சனை உள்ளவர்களுக்கு தேவையான பதிவு.

  மட்டற்ற நன்றிகள்.

  தங்களன்புள்ள,
  ஸஹதுல்லாஹ்

  • machamuni says:

   அன்பு மிக்க திரு ஸஹதுல்லாஹ் அவர்களே,
   கருத்துரைக்கு மிக்க நன்றி!!!!
   வயிறு வலி உள்ளவர்களுக்கு மட்டுமல்ல இது சகல வியாதிகளுக்கும் செய்யலாம்.உங்கள் கருத்துரை பார்த்த பின்னர் மீண்டும் கட்டுரையை விரிவாக்கம் செய்து , பல விடயங்களை சேர்த்து மீண்டும் வெளியிட்டுள்ளேன்.பாருங்கள் .
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 5. சதீஷ் says:

  ஐயா,
  douche wash – இந்த கருவியை எங்கு வாங்க வேண்டும். இதன் தமிழ் பெயர் என்ன ஐயா ?
  தங்கள் உதவிக்கு நன்றி .

  • machamuni says:

   அன்பு மிக்க திரு ஹரி அவர்களே,
   கருத்துரைக்கு மிக்க நன்றி!!!!
   ///douche wash– இந்த கருவியை எங்கு வாங்க வேண்டும். இதன் தமிழ் பெயர் என்ன ஐயா?///douche wash என்பது கருவியல்ல .இதே எனிமா குவளையை வைத்து பெண்ணின் பிறப்புறுப்புப் பாதையில் இந்தச் செயலைச் செய்வதற்கு இந்தப் பெயர் .தவறாகப் புரிந்து கொள்ளாதீர்கள். உங்கள் கருத்துரை பார்த்த பின்னர் மீண்டும் கட்டுரையை விரிவாக்கம் செய்து , பல விடயங்களை சேர்த்து மீண்டும் வெளியிட்டுள்ளேன்.பாருங்கள் .
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 6. ஜெகதீசன் says:

  ஐயா,

  தங்களுக்கும் வலைத்தள நண்பர்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்

  நன்றி
  ஜெகதீசன்

  • machamuni says:

   அன்பு மிக்க திரு ஜெகதீசன் அவர்களே,
   கருத்துரைக்கு மிக்க நன்றி !!!!!
   இப்புத்தாண்டில் தங்களுக்கும் வலைத்தள நண்பர்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகளை கூறி வாழ்த்துகிறோம்.
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 7. shareef says:

  இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் SAMI JI

  • machamuni says:

   அன்பு மிக்க திரு ஷரீஃப் அவர்களே,
   கருத்துரைக்கு மிக்க நன்றி !!!!!
   இப்புத்தாண்டில் தங்களுக்கும் வலைத்தள நண்பர்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகளை கூறி வாழ்த்துகிறோம்.
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 8. lenin says:

  ஐய்யா,
  தினமும் அஹிம்சை இனிமா உபயோகிக்கலாமா? இதனால் உடலின் அடி பாகத்தில் இயற்கையாக உள்ள அபான வாய்வு குறைவு ஏற்பட வாய்புள்ளதா?
  அல்சர் நோய் உள்ளவர்களுக்கு இனிமா உபயோகிக்களாமா? தயவு செய்து தங்களது கருத்து தெரிந்தால் நன்றாக இருக்கும்.

  மிக்க நன்றி.
  லெனின்

  • machamuni says:

   அன்பு மிக்க திரு லெனின் அவர்களே,
   கருத்துரைக்கு மிக்க நன்றி !!!!!
   அபான வாயு குறைவுபட எந்த வாய்ப்புமில்லை.உடலில் இயற்கையாக உள்ள தச வாயுக்களை குறைக்கவும் முடியாது.ஆனால் தச வாயுக்களின் செயல்பாட்டை இந்த அஹிம்சை இனிமா சரி செய்யும்.
   ///அல்சர் நோய் உள்ளவர்களுக்கு இனிமா உபயோகிக்களாமா? தயவு செய்து தங்களது கருத்து தெரிந்தால் நன்றாக இருக்கும்.///
   அல்சர் நோய் உள்ளவர்கள் மட்டுமல்ல .எந்த வியாதியுள்ளவர்களும் இதை உபயோகிக்கலாம். நோயின் தன்மை குறைவதுடன் மற்ற உறுப்புக்களின் ஆரோக்கியம் மேம்படுவதுடன்,உடலின் மொத்த ஆரோக்கியமும் மேம்படும்.
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 9. செந்தில் கணேசன் says:

  அய்யா வணக்கம்,

  சித்த மருத்துவத்தில் எந்த பாசாணத்தையும்,உலோகத்தையும் சுத்தி செய்து பின்னர்தான் உபயோகிக்க வேண்டும் என்று என் நண்பர் கூறுகிறார்.
  அப்படி சுத்தி செய்வதை பற்றி தெரிந்துகொள்ள ஏதெனும் புத்தகம் உள்ளதா?

  நன்றி அய்யா…

  • machamuni says:

   அன்பு மிக்க திரு செந்தில் கணேசன் அவர்களே,
   கருத்துரைக்கு மிக்க நன்றி!!!!
   ஆம் சித்த மருத்துவத்தில் எந்த பாசாணத்தையும்,உலோகத்தையும் சுத்தி செய்து பின்னர்தான் உபயோகிக்க வேண்டும். இதைத் தெரிந்து கொள்ள இரத்தின நாயக்கர் & சன்ஸ் வெளியிட்டுள்ள குணபாடம் -தாது வர்க்கம் (பாகம் 1) , குணபாடம் -ஜீவ வர்க்கம் (பாகம் 2) புத்தகங்களை வாங்கிப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 10. A.D.HEMANTH KUMAR says:

  திரு.சாமீ அழகப்பன் அவர்களுக்கு வணக்கம்,
  தங்கள் வலைப்பதிவை தொடர்ந்து படித்துவருகிறென். தாங்கள் மருந்து வாங்குவதற்கு திரு.சதரகிரி கண்ணன் அவர்களை தொடர்பு கொண்டு மருந்து வாங்கி கொள்ளுமாறு அறிவுறுத்தி இருந்திர்கள். நானும் இரண்டு முறை பணம் செலுத்தி பெற்று வந்தென். ஆனால் கடந்த டிசம்பர் மாதம் 21ந்த் தேதி மருந்து வேண்டி அவருடைய வங்கி கணக்கு ரூபாய் 1,500/- செலுத்தினென். ஆனால் இது வரை மருந்து வந்து செரவில்லை. கடந்த சில நாட்களாக தொடர்பு கொண்ட பொது மறுநாள் வந்து விடும் என்று கூறினார். ஆனால் இது வரை மருந்து வந்து செரவில்லை என்பதை கனிவுடன் தெரிவித்துகொள்கிறென்.

  • machamuni says:

   அன்பு மிக்க திரு A.D.HEMANTH KUMAR அவர்களே,
   கருத்துரைக்கு மிக்க நன்றி!!!!
   முதலில் நாம் ஒரு வியாபாரி அல்ல.ஒரு செய்தி அறிவிப்பவன் தவிர வேறில்லை .நமது வலைத் தள அன்பர்களுக்காக , சதுரகிரி ஹெர்பல்ஸ் திரு கண்ணன் அவரது வீடு மற்றும் அவரது மருந்து தயாரிப்பு சாலை , ஆகியவ்ற்றை விரிவாக்கம் செய்து வருகிறார்.எனவே தற்போது அவரிடம் மருந்துகள் கோரியுள்ளவர்கள் சற்றே பொறுத்திருந்து ஐந்தாறு நாட்களில் இருந்து ஒரு மாதம் வரை காத்திருந்து பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளுகிறேன்.இது வரை இரு முறை வாங்கி உபயோகித்திருக்கும் நீங்கள் அதன் சிறப்பு பற்றியோ , இது வரை எனது கட்டுரைகளுக்கு கருத்துரையோ எழுதி அறியாத நீங்கள் இப்போது இதற்கு மட்டும் என்னிடம் நேரிடையாக புகாரிடும் அளவுக்கு வருகிறீர்கள் அல்லவா???? உங்களைப் போன்ற சுயநலம் பிடித்த ஆட்கள் இருப்பதால்தான் சேவை என்பதன் அர்த்தம் புரியாமல் போகிறது .அனேகமாக முப்புகுரு முடிக்கும் நிலையில் உங்களைப் போன்ற ஆட்களை நான் முற்றிலுமாக தவிர்த்துவிடுவேன் என்று கருதுகிறேன்.இந்த அளவு கூட பொறுமை காக்க வேண்டாதவர்கள் அவர்களது ( மருந்துகள் அல்ல )பணத்தை திரும்பப் பெற ஆவன செய்யப்படுமென தெரிவித்துக் கொள்ளுகிறேன்.பின்பு இந்தப் பெயரில் உள்ளவர்கள் மீண்டும் மருந்துகள் பெறவே முடியாது என்பதையும் பணிவோடு தெரிவித்துக் கொள்கிறோம்.
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 11. ஸஹதுல்லாஹ் says:

  அண்ணன் அவர்களுக்கு,
  நண்பரிடம் பேசிக் கொண்டிருந்தபோது ஆலிவ் ஆயில் தலைக்கு தேய்த்தால் போடுகுக்கும் தலை முடிக்கும் நல்லது என்றார். அவ்வாறு இடலாமா, தங்கள் மேலான பதிலை எதிர்நோக்கியவனாய்.

  தங்களன்புள்ள,
  ஸஹதுல்லாஹ்

  • machamuni says:

   அன்பு மிக்க திரு ஸஹதுல்லாஹ் அவர்களே,
   கருத்துரைக்கு மிக்க நன்றி!!!!
   உங்களுக்கு இன்றிலிருந்து ஒரு கட்டுப்பாடு விதிக்கிறோம் . யாரோ சொன்ன குப்பைகளை என்னிடம் தயவு செய்து கேள்விகளாகக் கேட்காதீர்கள்.நீங்கள் கேட்கும் கேள்விகள் ஆரம்ப கட்ட நிலையில் இருப்பவை .அவை புல்டோசரைக் கொண்டு தாடியை சிரைக்க முற்படுவது போல இருக்கிறது .நாம் எழுதிய கட்டுரைகள் சம்பந்தமான கேள்விகள் தவிர வேறு கேள்விகள் கேட்டால் அவை குப்பைக்குத்தான் செல்லும் என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.இது மிகக் கடுமையானதுதான் .ஆனால் அதற்கு நீங்கள் இந்த நிலைக்கு எம்மைத் தள்ளிவிட்டுவிட்டீர்கள்.எம்மிடமே சரியாக ஒத்திசைவாக உங்களால் நடக்க இயலவில்லை என்றால் ஆரம்ப கட்ட ஞான நிலையில் உள்ள சித்தர்களைக் கூட நீங்கள் நெருங்க முடியாது.நாமும் மிகச் சிறிய காலமே உலகத் தொடர்பில் இருக்கப் போகிறோம் .அந்த எல்லையை மேலும் குறுகச் செய்து விடாதீர்கள்.
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

   • ஸஹதுல்லாஹ் says:

    அண்ணன் அவர்களுக்கு,

    இந்த சிறுவனை மன்னித்து விடுங்கள்…
    இனிமேல் இதுபோல் தேவையற்ற தவறான கேள்விகளை என் எண்ணத்திலிருந்து தவிர்த்துக் கொள்கிறேன்.

    தங்களன்புள்ள,
    ஸஹதுல்லாஹ்

    • machamuni says:

     அன்பு மிக்க திரு ஸஹதுல்லாஹ் அவர்களே,
     கருத்துரைக்கு மிக்க நன்றி!!!!
     நாமும் மிகச் சிறிய காலமே இந்த வலை உலகத் தொடர்பில் இருக்கப் போகிறோம் .அந்த எல்லையை மேலும் குறுகச் செய்து விடாதீர்கள்.ஏற்கெனவே நாம் எமது மச்ச முனிவரின் சித்த ஞான சபைக்குச் செல்வதை விட்டு விட்டோம்.எமக்குக் காத்திருக்கும் பணிகள் பல.மனித சமுதாயத்திற்கு நாம் ஆற்ற வேண்டிய கடமைகளை எவ்வளவு சித்தர்கள் ஆற்ற பணித்திருக்கிறார்களோ அவ்வளவோடு எம் பணி நின்றேவிடும்.இப்போதே எமது வலைத் தளம் ,உலகில் பல அன்பர்கள் அதிகம் வாசிக்கும் தளமாக ஆகிவிட்டதை WORDPRESS தெரிவித்துக் கொள்ளும் அதே வேளையில் இந்த தளம் தொடர்ந்து செயல்பட தன்னிச்சையான பரிவர்த்தகம்(DEDICATED SERVER) தேவை எனக் கூறியுள்ளதாக எமக்குத் தகவல் வந்துள்ளது.இதன் காரணமாக எமது வலைத் தளத்திற்கு மாதத்திற்கு 75$ தேவை. அது எம்மால் செலவிட முடியாத தொகை .அது வரை எமது வலைத் தளம் இயங்கும்.வலைத் தளம் இயங்க முடியாத அளவு போக்குவரத்து (TRAFIC) இருக்குமானால் எம் வலைத் தளத்தை நாம் இயக்க இயலாது போகும் என்பதையும் தெரிவித்துக் கொள்ளுகிறேன்.
     மிக்க நன்றி
     என்றென்றும் பேரன்பினால்
     சாமீ அழகப்பன்

     • ஸஹதுல்லாஹ் says:

      அண்ணன் அவர்களுக்கு,

      நேரம் வரும் போது நீங்கள் எங்களை விட்டு நீங்குவது ஒரு பக்கம் மிகுந்த வருத்தம் , மறுபக்கம் அதற்கு இசைவாக செர்வர் ட்ராபிக் பிரச்சனை. எல்லாம் இறைவன் செயல் என்ன செய்வது நடப்புகள் அதன் போக்கிலே போவதைத் தவிர வேறில்லை.
      சகோதரர் ஜி.ஸ்ரீமாரிசெல்வம் அவர்கள் மூலம் எங்களனைவருக்கும் நீங்கள் அளித்திருக்கும் பதில் பக்குவம் பெறாத எங்களுக்கு ஓரளவு வருத்தம் குறைக்கும் மருந்து.

      தவறுகள் இருப்பின் மன்னிக்கவும்.

      தங்களன்புள்ள,
      ஸஹதுல்லாஹ்

     • machamuni says:

      அன்பு மிக்க திரு ஸதயத்துல்லா அவர்களே,
      கருத்துரைக்கு மிக்க நன்றி!!!!
      நாம் வாழ்க்கையில் முக்கியம் கொடுத்து வைத்திருக்கும் விடயங்கள் சித்தர்கள் உலகில் சல்லிக் காசு பெறாத விடயங்கள்.ஒரு சிலர் வியாதிக்கு மருந்து கேட்டு சதுரகிரி ஹெர்பல்ஸ் கண்ணன் அவர்களின் கணக்கில் அவருக்கே தெரியாமல் பணம் செலுத்திவிட்டு,அதை அவரிடமும் சொல்லாமலும் , மருந்து தேவையைக் கேட்காமலும் எனது தனிப்பட்ட மின்னஞ்சலுக்கும் வராமல்,நமது வலைத் தளத்திலேயே கருத்துரை எழுதுவதைப் பார்க்கும் போது அவர்கள் தரும் அந்த சொற்ப பணத்திலேயே , எல்லோரையும் விலைக்கு வாங்கிவிட்ட அகந்தை தெரிகிறது.பல லட்ச ரூபாய் கொடுத்தாலும் மருந்துகளை தர மறுத்துவிட்டால் என்ன செய்வார்கள் . பலநாட்களுக்கு முன்னரே திரு சதுரகிரி ஹெர்பல்ஸ் கண்ணன் அவர்கள் பல வேலை நிமித்தமாக அலைந்து கொண்டிருக்கிறார்கள் என்று தெரிவித்திருந்தும் .இதை நமது வலைத் தளத்திலேயே கருத்துரை எழுதி அவர் நல்ல குணத்திற்கு களங்கம் கற்பிக்கும் முகமாக செயல்பட்டுவிட்டு,நான் என்ன செய்தேன் என்று கூறும் சுயநலம் பிடித்த நபர்களைப் பார்க்கும் எனக்கு, இந்த வேலை நமக்கு எதற்கு ??என்று எண்ணம் எழுவதோடு, நமது இந்த சேவை எண்ணம் இவர்களால் மேன்மேலும் சிதைவதைத் தடுக்க எம்மால் முடியவில்லை.இனி திரு சதுரகிரி ஹெர்பல்ஸ் கண்ணன் அவர்கள் வங்கிக் கணக்கிற்கு யாரும் பணப் பரிமாற்றம் செய்ய வேண்டாம் என்பதோடு இனி ,மருந்து வேண்டுபவர்கள் அலைபேசியில் அவரிடம் சொன்னால் போதும் , அவர்கள் முகவரிக்கு பணம் செலுத்திப் பார்சலை பெற்றுக் கொள்ளும் திட்டத்தில் வந்து சேரும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
      மிக்க நன்றி
      என்றென்றும் பேரன்பினால்
      சாமீ அழகப்பன்

 12. ஜி.ஸ்ரீமாரிசெல்வம் says:

  அன்பு அண்ணாவுக்கு,

  சகோதரர் ஸஹதுல்லாவுக்கு நீங்கள் அளித்துள்ள பதில் மிகவும் வருத்தம் அளிக்கிறது. பலகற்றும் கல்லாதவர்களாக இருக்கும் நண்பர்களுக்கு கலங்கரை விளக்காக நீங்கள் இருந்து வருகிறீர்கள். உங்கள் அன்பும்கூட சிலகாலம் என்பது கஷ்டமளிப்பதாக உள்ளது. சாமீமீமீயாக நீநீநீண்டகாலம் எங்களுடன் இருந்து வழிகாட்ட குருவருளை வேண்டுகிறோம்.

  • machamuni says:

   அன்பு மிக்க திரு ஜி.மாரி செல்வம் அவர்களே,
   கருத்துரைக்கு மிக்க நன்றி!!!!
   வாழ்க்கை என்பதும் பயணம் போன்றதே!! பயண இடம் வந்ததும் இறங்கிச் செல்ல வேண்டியதே .இது இயல்பானதே.ஒரு மொட்டு பூவாகி , பூ பிஞ்சாகி , பிஞ்சு காயாகி , காய் கனியாகி ஒரு நாள் உதிர்ந்துவிடும்.ஒரு கனி கிடைத்தால் சந்தோஷப்படும் நாம்,அதே போல ஒரு மனிதன் குழந்தை நிலையில் இருந்து முதிர்ந்து வயதாகி உதிரும் நிலை வரும் போது நாம் வருந்துகிறோம் . இரண்டையும் சமமாக பாவிக்க நமக்கு மனம் இடம் தருகிறதோ அன்றுதான் நாம் பரிபக்குவம் பெற்றுவிட்டோம் என்று பொருள்.புதிய சட்டை போட்டாலே நம்மைச் சுற்றிச் சுற்றி பார்த்து அழகு பார்க்கும் நாம் புதியதான உடலே எடுக்கப் போகும் உயிரையும் மகிழ்ச்சியோடு அனுப்பவும் பழக வேண்டும்.இந்த மன நிலை பெற்றுவிட்டால் இந்த பிறவியிலேயே அடுத்த உடலில் தன்னுயிரை செலுத்தும் பரகாயப் பிரவேசம் என்னும் பிரகாமியம் என்ற சித்து கைவசமாகும்.
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 13. ஐயா வணக்கம் ,உங்கள் சேவை எங்களுக்கு எப்பொழுதும் தேவை.

  • machamuni says:

   அன்பு மிக்க திரு ஆறுமுகம் அவர்களே,
   கருத்துரைக்கு மிக்க நன்றி!!!!
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 14. hari says:

  அன்புள்ள சாமிஜி அவர்களுக்கு வணக்கம்
  கோவையில் பவித்ரா இயற்கை மருத்துவமனை,சிவசக்தி இயற்கை
  விளைபொருள் அங்காடி போன்றவற்றிலும் இந்த கருவி கிடைக்கிறது.

  இந்த பின்னூட்டத்தை வேண்டாம் என்றால் தயவு செய்து நிராகரித்து
  விடுமாறு கேட்டுகொள்கிறேன் .நன்றி

  • machamuni says:

   அன்பு மிக்க திரு ஹரி அவர்களே,
   கருத்துரைக்கு மிக்க நன்றி!!!!
   தேவையான விடயங்களை எழுத நாம் என்றுமே தடையாய் இருந்ததில்லை. அன்பான வலைத்தள நேயர்களே மேற்கண்ட இடத்தில் எனிமாக் குவளையை வாங்கிக் கொள்ளலாம்.
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 15. மணி says:

  அருந்தவப் பெருந்தகையீர், வணக்கம்.

  தாங்கள் இடும் பதிவுகள் எல்லாம் ஏகஇறை யின் சித்தம்.

  தங்களை நேரில் காணும் பாக்கியத்தை இறைஞ்சுகிறேன்.

  மனித இனத்திற்கு மட்டுமே ஆன்மாவை வைத்துப் படைத்த இறைவன்

  எனது வேண்டுதலை மறுப்பானா என்ன?

  தங்களின் பேராசியுடன்
  மணி
  manivasaga@yahoo.co.in

  • machamuni says:

   அன்பு மிக்க திரு மணி அவர்களே,
   கருத்துரைக்கு மிக்க நன்றி!!!!
   இறை கூட்டுவித்தால் எதுவும் நடக்கும்.அவனன்றி ஓரணுவும் அசையாது.
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 16. மணி says:

  “நாமும் மிகச் சிறிய காலமே இந்த வலை உலகத் தொடர்பில் இருக்கப் போகிறோம் .அந்த எல்லையை மேலும் குறுகச் செய்து விடாதீர்கள்.ஏற்கெனவே நாம் எமது மச்ச முனிவரின் சித்த ஞான சபைக்குச் செல்வதை விட்டு விட்டோம்.எமக்குக் காத்திருக்கும் பணிகள் பல.மனித சமுதாயத்திற்கு நாம் ஆற்ற வேண்டிய கடமைகளை எவ்வளவு சித்தர்கள் ஆற்ற பணித்திருக்கிறார்களோ அவ்வளவோடு எம் பணி நின்றேவிடும்.”

  அருந்தவப் பெருந்தகையீர், வணக்கம்.

  தங்களின் பணி மிகப்பெரியளவில் தொடரும்.

  தங்களின் பேராசியுடன்
  மணி

  • machamuni says:

   அன்பு மிக்க திரு மணி அவர்களே,
   கருத்துரைக்கு மிக்க நன்றி!!!!
   இறை விட்ட வழி நம் வழி.
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 17. viraj says:

  Dear SIr,

  Sorry, i am not allowed to install tamil editor in office.

  while get up in morning, i get very bitter salaiva in mouth every day.

  please suggest me what to do.

  regards,
  viraj

  • machamuni says:

   அன்புள்ள திரு விராஜ் அவர்களே ,
   கருத்துரைக்கு மிக்க நன்றி,
   தமிழில் எழுதாதற்கு காரணமாக சொல்லிக் கொண்டே இருக்காதீர்கள்.“ தமிழ் எங்கள் உயிருக்கு நேர்” “ சாகும் வரை தமிழ் பயின்று சாக வேண்டும் .என் சாம்பலிலும் தமிழ் மணந்து வேக வேண்டும்” என்ற பாரதிதாசனின் வார்த்தைகள் எமக்கு உயிரான வார்த்தைகள்.எமது வலைத் தளத்தில் தமிழே முக்கியமானதாக இருக்க வேண்டும்.
   இப்போது உங்கள் கேள்விக்கு பதில்:- இரவு உணவை முடித்து ஒரு மணி நேரத்துக்குள் பல்லை வெறும் கையால் துலக்கிவிடுங்கள்.வெள்ளைச் சர்க்கரையை அறவே தவிர்த்துவிடுங்கள்.வெள்ளைச் சர்க்கரை சேர்ந்த இனிப்புக்களையும் அறவே தவிர்த்துவிடுங்கள்.சதுரகிரி ஹெர்பல்ஸ் கண்ணனிடம் பல்பொடி உள்ளது.அதை வாங்கி தினம் பல்துலக்கி வாருங்கள்.நலம் கிடைக்கும்.
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 18. anbu says:

  \\ இந்த ஐம்மலம் நீக்குதல் எப்படி என்று அடுத்த ஞானம் என்பது உடல் சார்ந்ததா ? உயிர் சார்ந்ததா ? பாகம் 8 ல் பார்க்கலாம். \\
  இந்த பதிவை மிகவும் ஆவலுடன் எதிர் பார்க்கின்றோம்.. நன்றி.

  • machamuni says:

   அன்புள்ள திரு அன்பு அவர்களே ,
   உங்களது கருத்துரைக்கு நன்றி.
   விரைவில் வெளியாகும்.
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 19. பேரன்பினை பெற்றவரே,
  அகத்தை ஈவதில் நீரும் அகத்தியரே
  ( அகத்தை ஈசனிடம் ஈந்தவர் )
  நீங்களும் எணக்கு இன்னொரு அகத்தியரே
  அவரைக் காண வரம் வேண்டும்
  அதையும் நீரே தந்தருள வேண்டும் – வழி
  நீர் அந்த வழியில் ஆதலினால்
  உயிரெழுத்தை கற்றவர் அதனால்
  உயரியதை எழுத கற்றிர் எழுதுகின்றிர்
  மானிடம் உயர உயிரையும் எழுதகற்றீர்
  மெய்எழுத்தை கற்றிர் மெய்யையும் எழுத கற்றீர்
  யாம் உயர அதை எழுதுகின்றிர்
  மெய்உயிர் எழுத கற்பீர் கற்பிப்பீர் எமக்கு
  உம்மின் மென் எழுத்துக்களில் இருந்து
  ஒவ்வொன்றாய் பொருக்கி நான்
  சேர்த்து வடித்தேன் உமக்காய் – யாம்
  இறை அருள் பெற இறை நீர் எமக்கு –
  உம் அருள்பாக பூமி(யை)யில் உழுதே உழன்றே
  பெற்றிடுவேன் உம் அருளை – ஆசை
  அந்தணனாய் உயிர்திடவே அல்லேல்
  அந்த நந்தனாய் உயர்ந்திடவே ஆசை
  ஆயிணும் ஆ னந்தனாய் உழலுவதேன் யான்
  நடனஈசன் நடேசனின் மகனே நானும்
  நண்றிகளுடன் நடேசன் ஆனந்தன் உம்திருபதம் போற்றி
  (அம்பத்துர்ரிலிருந்து, சென்னை).
  இப்பெயர் இன்னொருவர் பெற்று இருப்பதால்

 20. பேரன்பினை பெற்றவரே,

  பரமகுடி என்ன பரமன்குடியோ சாமிபத்திலேயே சாமீ அழகப்பன்
  அந்த சிவன் இருக்கும் இடத்தருகில் உம் (நீர்) வாசம்
  இந்த திசை நோக்கி வணங்குகிறேன் உமையும்
  சாமீ நீர் இருப்பத்னால் என் தாகம் தீரும்
  உன் அருள் உண்டானால் எனக்கு பசி தீரும்
  உம் அருளை உண்டேணானால் புசிக்காமலே உயிர்திருப்பேன்
  பகலவனின் பாதத்தில் பணிந்திடல் வேண்டும்
  வேண்டுவோர்க்கு வேண்டியதை ஈதல் வேண்டும்
  இனி எப்போதும் உண்ணாமல் யான் உயிர்திருக்க வேண்டும்
  எணக்கு ஏதும் திண்ணாமல் பிணியாவும் நீங்கவேண்டும்
  நிறைவாய் எணக்கு யாதும் வேண்டாமை வேண்டும்
  அதுவும் உமை(யை)பூசித்து யாசகமாய் பெறவேண்டும்
  நீர் இருக்கும் இடத்திலே என் தாகம் தீரும்
  ஞானமும் கிட்டும் சித்தியும் கிடைக்கும்
  என் பெண்மெய்யின் மோகம் தனிந்தே போகும்
  தீயின் அழலை என் ஊணுடல் உன்னும்
  ஏக கலைகள் கற்றவரே எகலைவானய் நான்
  ஆனமட்டும் வேணுமடும் உமைவணங்கி கற்றிடல் வேண்டும்
  கற்றிடுவேன் உம் ஞானத்தால், நீர் ஆசித்தால் எனை ( ஆசீ ஈந்தால் எமக்கு)
  படியளக்கும் பரமனின் ஆணைபடி, ஞானத்தை அளிக்கும் படி நீர்
  மானுடம் உயர உயர்த்திடும் வழியில் நீரும் எமக்கு படியே
  பசித்தோர்க்கு புசிக்க ஈகின்றிர் நித்தமும் அங்கே,
  மச்சமுனியக்த்தில் ஈசனின் கை ஈகையுடன் சாமீ அழகப்பன், (சாமீக்கே அழகு)
  ஈயியும் கை நீர் திரு மச்சமுனி சித்தஞானத் திருசபையில்
  என்சுயம்(பு)பாய் நானே
  வளமான வறுமையிலே பிறப்பித்தேன்
  பசுமையன பஞ்சத்திலே வளர்ப்பித்தேன்
  மொழிவளமும் கனிவளமும் தாங்கதமண் வாடிய வடஆற்காடு
  நான்னொரு நாவித்தகன் அல்ல நாவிதன், ஐயனே
  தேர்வில் தமிழில் 1 மதிபெண் கிட்டவில்லை எணக்கு
  வாழ்வில் மதி(மிக்க)பெண் கிட்டவில்லை
  அது என் கல்வியின் தரம்(ச்)சான்று ,
  இது எண் தாரத்தின் நிறைந்த நிரந்தர தரம் இதுவும் அவன் சித்தமே
  அரத்தால் தேய்த்தே உருமாற்றினேன் உலோகத்தை ( தொழிலாகையால் )
  நல்லறத்தால் சாமீ நீர் உலகமானுட்த்தையே நன்னெறிக்கு மாற்றுகின்றிர்

  நண்றிகளுடன் நடேசன் ஆனந்தன் உம்திருபதம் போற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

17 + = 19