இசுலாமிய அன்பர்களுக்கு ஒரு அன்பு ஆன்மீகப் பரிசு ( பாகம் 3 )

January 13, 2013 by: machamuni

எங்களது சித்த ஞான சபையைப் போலவே குர்ரான் கூறியிருக்கும் ஞான வழியை உபதேசமாகக் கொடுக்கும் சபை ஒன்று தவநெறிக்கோட்டம் என்ற பெயரில் இருக்கிறது. அந்தத் தெய்வீக திருத்தலம் இருக்குமிடம் மதுரை இராமநாதபுரம் நெடுஞ்சாலையில் திருப்புவனத்திற்கும் மானா மதுரைக்கும் இடையே உள்ள இராஜ கம்பீரம் என்ற ஊரில் உள்ளது.

இங்கு கொடுக்கப்படும் உபதேசமும் எங்களது மச்ச முனிவரின் சித்த ஞான சபையில் கொடுக்கப்படும் உபதேசமும் ஒன்றே.அங்கிருந்து எனக்கு இப்போது வந்திருக்கும்  பேரின்பப் பொங்கல் திரு விழா அழைப்பை இங்கே ஒளி நகலாகத் தந்துள்ளேன்.மேற்படி அழைப்பை உங்கள் எல்லோருக்குமான அழைப்பாக இங்கே வழங்குவதில் பெருமகிழ்வு கொள்கிறேன். முஸ்லீம் அன்பர்கள் குர்ரான் என்ன சொல்லியுள்ளது என்பதை தெளிவாக பாவாவிடம் அறிந்து கொண்டு பிறவிப்பயன் அடைந்து ஞானத்தில் திளையுங்கள். இது முஸ்லீம் அன்பர்களுக்கு எனது தமிழர் திருநாள்  நல்வாழ்த்துக்களுடன் கூடிய அன்புப் பரிசு.

அருட் திரு காமில் ஸ்ரீ இப்ராஹிம், கூத்தாநல்லூர் அவர்களின் அலை பேசி எண்  +919486309686 தொடர்பு கொள்ள விரும்பும் ஆன்மீக அன்பர்கள் பணிவுடன் தொடர்பு கொள்ளலாம் .

தங்களிடம் உள்ள அதைத் தாங்களே தெரிந்து தெளிய வாருங்கள்.அங்குமிங்கும் தேடி அலையாதீர்கள், தங்கு தடையின்றி தாங்கள் பெற எல்லா இடங்களிலும் நிறைந்துள்ள (அல்லாவான ) பெரும் பரமனுடைய அருள்  பாரினில் உள்ளதாகவே இருக்கிறது.

எல்லாப் புகழும் இறைவனுக்கே!!!!
பிஸ்மில்லாஹிர்ரஹிமான் ஹிர்ரஹீம்.இந்த பிஸ்மில் குறத்தைத் தெரிந்து கொள்ளுங்கள்.இறைவன் கலீமாவாக இருக்கிறான்.அந்தக் கலீமாவைத் தெரிந்து கொள்ள ராஜ கம்பீரம் பாவாவிடம் வாருங்கள்.

10 responses to “இசுலாமிய அன்பர்களுக்கு ஒரு அன்பு ஆன்மீகப் பரிசு ( பாகம் 3 )”

 1. balajikannan says:

  எல்லா மதமும் என் மதமே, இஸ்லாம் எனக்கு சம்மதமே,நன்றியுடன் பாலாஜி கண்ணன்.

  • machamuni says:

   அன்பு மிக்க திரு பாலாஜி கண்ணன் அவர்களே,
   கருத்துரைக்கு மிக்க நன்றி!!!!
   ஏற்கெனவே வலைப் பூவில் எல்லா மதமும் ஓர் மதமே என்று உணரும் வண்ணம் எழுதிய கட்டுரைகளின் இணைப்பை இங்கே கீழே கொடுத்துள்ளேன். படித்துப் பார்த்து தெளிவு பெற்று இன்புறுங்கள்.
   http://machamuni.blogspot.in/2010/08/3.html
   http://machamuni.blogspot.in/2010/08/7.html
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 2. s.venkat says:

  அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

  பொங்கல் பொங்குவது போல அனைவரது உள்ளங்களிலும் மகிழ்ச்சி பொங்கட்டும்

  அன்புடன்
  எஸ். வெங்கட்

  • machamuni says:

   அன்பு மிக்க திரு எஸ். வெங்கட் அவர்களே,
   வாழ்த்துரைக்கு மிக்க நன்றி!!!!
   இரு முறை வாழ்த்தியிருந்தீர்கள் . ஒன்றை மட்டும் பதிப்பித்து இருக்கிறோம்.
   தங்களுக்கும், குடும்பத்தினருக்கும் மற்றும் நமது மச்சமுனி வலைத்தள நண்பர்களுக்கும் நமது இனிய தமிழர் திருநாள் நல்வாழ்த்துக்கள் ..!!!!!
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 3. வணக்கம் ஐயா.உங்களுக்கும் மற்றும் அனைத்து தமிழ் மக்களுக்கும் என் இதயம் கனிந்த பொங்கள் மற்றும் தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் .

  • machamuni says:

   அன்பு மிக்க திரு ஆறுமுகம் அவர்களே,
   வாழ்த்துரைக்கு மிக்க நன்றி!!!!
   தங்களுக்கும், குடும்பத்தினருக்கும் மற்றும் நமது மச்சமுனி வலைத்தள நண்பர்களுக்கும், அனைத்துலக தமிழ் மக்களுக்கும் நமது இனிய தமிழர் திருநாள் நல்வாழ்த்துக்கள் !!!!!
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 4. saraswathimadhavan says:
  Your comment is awaiting moderation.

  January 16, 2013 at 2:38 pm

  sir,
  please sent your mobile number, we need your help

  • machamuni says:

   அன்பு மிக்க திரு சரஸ்வதி மாதவன் அவர்களே,
   கருத்துரைக்கு மிக்க நன்றி!!!!
   உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு எமது தொடர்பு எண் அனுப்பப்பட்டுள்ளது.குறிப்பிட்ட நேரத்தில் தொடர்பு கொள்ளவும்.
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 5. ஸஹதுல்லாஹ் says:

  அண்ணன் அவர்களுக்கு,
  தங்களுக்கும், குடும்பத்தினருக்கும் மற்றும் அனைத்து உலக மக்களுக்கும் புனித நபிகள் நாயகம் அவர்கள் இப்பூவுலகிற்கு வருகை தந்த( புனித பிறந்த தின) மீலாதுன் நபி பெருநாள் வாழ்த்துக்கள் …!!!!

  தங்களன்புள்ள,
  ஸஹதுல்லாஹ்

  • machamuni says:

   அன்பு மிக்க திரு ஸஹதுல்லாஹ் அவர்களே,
   கருத்துரைக்கு மிக்க நன்றி!!!!
   மீலாதுன் நபி( புனித பிறந்த தின) பெருநாள் வாழ்த்துக்கள் .!!!!
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 + 4 =