சதுரகிரி ஹெர்பல்ஸ் திரு கண்ணன் அவர்கள் தயாரிப்புக்கள் (பாகம் 4) தாது விருத்தி லேகியம்

January 20, 2013 by: machamuni
இந்தப் பதிவு சதுரகிரி ஹெர்பல்ஸ் திரு கண்ணன் அவர்கள் தயாரிப்புக்கள் (பாகம் 3) தாது விருத்தி லேகியம் ன் தொடர்ச்சியே , எனவே அதைப் படித்துவிட்டு இந்தப் பதிவிற்கு வந்து தொடரவும்.
13)ஜாதிக்காய்:-
இந்த ஜாதிக்காய் மட்டுமே உடலுறவிற்கும், ஆண்மை விருத்திக்கும், குறி விரைப்புக்கும் மிகப் பலமான பலம் அளிக்க வல்லது. ஒரு முருங்கை மரத்தில் சதுரமாக வெட்டி த் துளைத்து அதற்குள் ஒரு சாதிக்காயை வைத்து அதே முருங்கைக் கட்டையால் மூடி ஒரு துணியால் மூடி காற்றுப் புகாமல் கட்டி,  வைத்து 48 நாட்கள் கழித்து எடுத்து , அதில் ஒரு சிறு துண்டு எடுத்து 5 வெற்றிலை , சிறு துண்டு கொட்டைப் பாக்கு , தேவையான அளவில் சுண்ணாம்பு , ஒரு மொட்டு நீக்கிய கிராம்பு, சிறு துண்டு சாதிப் பத்திரி , வைத்து தாம்பூலம்  போட்ட பின் நன்கு சுண்டக் காய்ச்சிய பாலருந்தினால் அருமையான ஆண்மை எழுச்சியுண்டாக்கும்.இதையும் பார்த்து தாம்பூலம் போடுதல் பற்றி தெரிந்து தெளியுங்கள்.
http://machamuni.blogspot.in/2011/02/26.html
14) அதிமதுரம்:-அதிமதுரம் பெயரிலேயே மதுரம் கொண்டது. மதுரம் என்றால் இனிமையானது என்று பொருள்  அதி மதுரம் என்றால் அதீதமான இனிமையானது என்று பொருள்.இது உடலில் தனது மதுரத் தன்மையை பரவவிட்டு உடலை மிக,மிக இனிமையாகவும் வலுவாகவும் வைத்திருக்கும்.இந்த அதி மதுரம் ஆயுதங்களினால் உண்டான காயம் , வாதாதிகளாற் பிறந்த நிஜ விரணம் ,நாவறட்சி , வெண்குட்டம் , பயித்தியம் , நேத்திர நோய் , உன்மாதம் , விக்கல்  ஐந்து விதமான வலிகள் , பயித்தியம் ,எலும்புருக்கி , மூத்திர கிரிச்சரம் , கிரிச்சரம் , வெட்டை , மத மூர்ச்சை , பித்த விஷ பாகம் , சுரம் , வாத சோணிதம் , காமாலை , தாவர சங்கம விஷங்கள் , குய்ய ரோகம் , சுக்கில நஷ்டம் , புகையிருமல் ,முகவாதம்,சிர நோய் , ஓஷ்ட ரோகம் , சோம ரோகம் , ஸ்தன வித்திரிக் கட்டி (மார்பக புற்றுக்கட்டிகள் ) , இவைகள் போகும்.இது கபஹரகாரி , அந்தர்ஸ்நிக்தகாரி , இளகு மலகாரி , ரக்தஸ்தம்பனகாரி , ஸோணகாரி , பித்தகாரி , தாதுஷீணரோதி போன்ற செய்கைகள் கொண்டது .
15) பாதாம் பருப்பு:-
பொதுவாக விதைகள் , பருப்புக்கள், கொட்டைகள் ஆண்மை வீரியத்தைப்  பெருக்கும் .அதிலும் பாதாம் பருப்பு இதில் மிகச் சிறந்தது.இதை வாதுமைப்பருப்பு,அடப்பம் வித்து  என்றும் அழைப்பார்கள்.கலவியில் அதிக விருப்பம் உண்டாகும்.இது அந்தர்ஸ்நிக்தகாரி , காமவிர்த்தினி போன்ற செய்கைகள் கொண்டது .இரவில் தண்ணீரில் போட்டு ஊற வைத்து காலையில் 4 முதல் 6 பருப்புகள் வரை சாப்பிட்டு வர உடலிலும்  , இரத்தத்திலும் உள்ள அதீத கெட்ட கொழுப்பு குறையும்.உடல் உள்ளுறுப்புக்கள் சுத்தப்படுத்தப்படுவதுடன் , உள்ளழலையும் சாந்தப்படுத்தும் (உள் அழல் என்பது உள் உஷ்ணம் அதீதமான பெண் புணர்ச்சியால் வந்த வெட்டை , மற்றும் கட்டில்லாத கைப்பழக்கம் இவற்றால் அதிகப்பப்பட்டு உடலை சிதைக்கும் நிலையே இது ).தலை நரம்புகள் , மூளை , கண்கள் முதலியவை பலம் பெறும்.மார்பு எரிச்சல் , இருமல் , உள்வறட்சி , சுவாசம் , சூலை , உதிரச் சிக்கல் முதலியவை குணமாகும்.
16) பிஸ்தா பருப்பு:-
நீ பெரிய ஆளா?? என்று  கேட்பதற்கு பதிலாக  நீ பெரிய பிஸ்தாவா??? என்று கேட்பார்கள் .பருப்புக்களில் பிஸ்தா அவ்வளவுசிறப்பு வாய்ந்தது. இது பலகாரி , காமவிர்த்தினி . பிஸ்தாப் பருப்பை  உண்பவர்களுக்கு பலத்தையும் , விந்து கிளர்ச்சியும் ,காம விருத்தியை உண்டாக்கும்.
17) செம்பருத்திப் பூ:-செம்பருத்திப் பூ இதயத்துக்கு வலுவை ஊட்டி , உடலுறவின் போது இரத்த அழுத்தத்தை ஒரு நிலையில் வைத்து , உறுப்பின் விரைப்பை நிலைநாட்டுகிறது .பொதுவாக இதயத்தை சரி செய்யும் மருந்துகள் சப்த தாதுக்களையும் வளப்படுத்துகிறது .இதனால் உடலின் பொதுவான ஆரோக்கியம் மேம்படுகிறது.
18)வெண் தாமரை:-வெண்தாமரை பற்றி ஏற்கெனவே ஒரு பொதுப் பதிவு எழுதியுள்ளோம்.  கீழுள்ள இணைப்பைப் பாருங்கள்.
http://machamuni.com/?p=1756
19) வெளிமடக்கி:தொட்டாற் சுருங்கிச் செடியை உடலில் எந்த விதமாகவாவது சேர்த்துச் சாப்பிட்டுவிட்டால் அதன் பின்னர் ஆண்குறியின் விரிவடையும் தன்மை பாதிக்கப்பட்டே இருக்கும்.சில பர ஸ்திரீப் பெண்கள் தொட்டாற் சுருங்கியை சாப நிவர்த்தி எடுத்து அதன் வேரை செய்து இடுப்பில் கட்டி கொள்வார்கள் .அவர்களைத் தொட்டாலே  குறி விரைப்பிருக்காது.அவர்கள் உன்னால் இது கூட முடியவில்லையா என்று கூறிவிட்டு பணத்தை வாங்கிக் கொண்டு கம்பி நீட்டிவிடுவார்கள்.அவர்கள் உடல் நோகாமல் பணம் சம்பாதிக்க இப்படியும் காரியங்கள் செய்கிறார்கள்.இவர்களிடம் போய் உடலுறவிற்கு முயற்சி செய்பவர்கள் மன ரீதியாக ’’நமக்கு  பெரும் ஆண்மைக் குறைவு ஏற்பட்டுவிட்டதோ என்று எண்ணுவார்கள்”.இது மன ரீதியான பாதிப்பை ஏற்படுத்தும்.உண்மை அதுவல்ல .
இது போன்று சக்தியுள்ள தொட்டாற்சுருங்கியை எதிர்த்து நிற்பது இந்த வெளி மடக்கி .இது தொட்டாற் சுருங்கிக்கு நேர் எதிரான செயல்பாட்டை உடையது . தொட்டாற் சுருங்கி உள்பக்கம் சுருங்கும்  வெளிமடக்கி நேர் எதிராக வெளிப்பக்கம் மடங்கும்  செயல்பாட்டை உடையது . தொட்டாற்சுருங்கியை சாப்பிட்டதால் உண்டான குறி சுருங்கிய பாதிப்பை இது போக்குவதோடு , தொட்டாற் சுருங்கி வேரை காப்புக் கட்டி தாயத்தில் அடைத்து வைத்திருக்கும் பெண்களின் பாச்சாவும் இதனிடம் பலிக்காது , உடலுறவின் போது திடீரென குறி சுருங்கிப்  போகும் பாதிப்பையும் இது போக்கும்.இது என்னவென்று தெரியாதவர்களுக்கு படத்துடன் ஒரு பதிவு இனிமேல் வெளிவரும் பாருங்கள்.
20) அத்தி விதை:-பொதுவாக விதைகள் , பருப்புக்கள், கொட்டைகள் ஆண்மை வீரியத்தைப்  பெருக்கும் .அதிலும் அத்தி விதை இதில் மிகச் சிறந்தது.அத்தி என்றால் யானை . யானை போல பலமும், விந்து விருத்தியும் , போக சக்தியையும் தர வல்லது.
21)அரச விதை:-பொதுவாக விதைகள் , பருப்புக்கள், கொட்டைகள் ஆண்மை வீரியத்தைப்  பெருக்கும் .அதிலும் அரச  விதை இதில் மிகச் சிறந்தது.மரங்களின் அரசன் இது . இதன் விதை விந்து விருத்தியையும்  தந்து , விந்தணுப் பெருக்கத்தையும்,தந்து குழந்தைப் பேற்றையும் தர  வல்லது.”அரச மரத்தைச் சுற்றி வந்து அடி வயிற்றைத் தொட்டுப்பார்”  என்று பெண்களுக்குச் சொல்வார்கள். அரச மரக் காற்றே பெண்களின் கர்ப்பப் பையில் உள்ள நுண்கிருமிகளைக் கொன்று , கரு முட்டை நன்கு வளர்ச்சியுற உதவி , கரு முட்டையை வெளிப்படுத்தி கர்ப்பப் பையை தயார் நிலையில் வைத்து குழந்தைப் பேற்றைத் தர வல்லது .பொதுவாக இம்மரத்தை வளர்த்தாலே குழந்தைப் பேறு கிட்டும் என்று விருட்ச சாஸ்திரம் சொல்கிறது .இந்த மரத்தை வெட்டினால் குழந்தைப் பேறு இருக்காது என்றும் அது கூறுகிறது .இவ்வளவு பெருமை வாய்ந்த அரச விதை அற்புதமான ஆண்மை விருத்தியைத் தர வல்லது .

22) ஆலம் விதை:-பொதுவாக விதைகள் , பருப்புக்கள், கொட்டைகள் ஆண்மை வீரியத்தைப்  பெருக்கும் .அதிலும் ஆல  விதை இதில் மிகச் சிறந்தது.மரங்களின் பெரிய மரம் இது . இதன் விதை விந்து விருத்தியையும்  தந்து , விந்தணுப் பெருக்கத்தையும்,தந்து குழந்தைப் பேற்றையும் தர  வல்லது.பொதுவாக இம்மரத்தை வளர்த்தாலே குழந்தைப் பேறு கிட்டும் என்று விருட்ச சாஸ்திரம் சொல்கிறது .ஒரு படையையே இந்த மரம் தன்னுடைய நிழலில் காக்கும் அளவு பெரியதாக வளரும் தன்மை படைத்தது .தன் விழுதுகளால் எளிதில் விழாமல் அழியாமல் வெகுநாள் வாழும் தன்மை வாய்ந்தது. இவ்வளவு பெருமை வாய்ந்த ஆல  விதை அற்புதமான ஆண்மை விருத்தியைத் தர வல்லது .

23) முருங்கை விதை:-பொதுவாக விதைகள் , பருப்புக்கள், கொட்டைகள் ஆண்மை வீரியத்தைப்  பெருக்கும் .அதிலும் முருங்கை   விதை இதில் மிகச் சிறந்தது.இதை பாக்கியராஜ் ஏற்கெனவே மிகப்பிரபலப் படுத்திவிட்டார்.இவ்வளவு பெருமை வாய்ந்த முருங்கை விதை அற்புதமான ஆண்மை விருத்தியைத் தர வல்லது .
 24) முருங்கைப் பூ:-பொதுவாக முருங்கையின் அத்தனை பாகங்களும் ஆண்மை வீரியத்தைப்  பெருக்கும் .அதிலும் முருங்கைப் பூ இதில் மிகச் சிறந்தது.இதை பாக்கியராஜ் ஏற்கெனவே மிகப்பிரபலப் படுத்திவிட்டார்.இவ்வளவு பெருமை வாய்ந்த முருங்கைப் பூ அற்புதமான ஆண்மை விருத்தியைத் தர வல்லது .
25) மதன காமப் பூ:-பெயரிலேயே மன்மதன் பெயரை உடைய மதனகாமப் பூ மன்மதனை மிக எளிதாக துணைக்கு அழைக்கும்.அற்புதமான எழுச்சியையும் ,ஆண்மை விருத்தியையும்  தர வல்லது .
26) பசு நெய்:-பசு நெய் இந்த மருந்துப் பொருட்களின் மருந்துத் தன்மை கெடாமல் வைத்திருப்பதோடு , மருந்துகளின் வீரியத்தையும் அதிகரித்து , மருந்துகளை லேகிய பதமாக்கி வைக்கும்.
27) தேன்:-தேன் இந்த மருந்துப் பொருட்களின் மருந்துத் தன்மை கெடாமல் வைத்திருப்பதோடு , மருந்துகளின் வீரியத்தையும் அதிகரித்து , மருந்துகளை லேகிய பதமாக்கி வைக்கும்.
28) பனங் கருப்பட்டி:-பனங்கருப்பட்டி இந்த மருந்துப் பொருட்களின் மருந்துத் தன்மை கெடாமல் வைத்திருப்பதோடு , மருந்துகளின் வீரியத்தையும் அதிகரித்து , லேகிய பதமாக்கி வைக்கும்.
பனங்கருப்பட்டியின் பெருமையை இந்தக் காணொளியில் காணலாம்.
http://machamuni.com/?p=2060
29) பால் மற்றும் தேங்காய்ப் பால்:-பால் மற்றும் தேங்காய்ப்பால்  இந்த மருந்துப் பொருட்களின் மருந்துத் தன்மை கெடாமல் வைத்திருப்பதோடு , மருந்துகளின் வீரியத்தையும் அதிகரித்து , லேகிய பதமாக்கி வைக்கும்.குறிப்பாக தேங்காய்ப்பால் மிக சிறப்பானது .குதம்பைச் சித்தர் தனது  பாடலில் “ மாங்காய்ப் பாலுண்டு மலைமேல் இருப்போர்க்கு தேங்காய்ப்பால் ஏதுக்கடி குதம்பாய் தேங்காய்ப்பால் ஏதுக்கடி ” என்பார் .அவ்வளவு சிறப்பானது தேங்காய்.மேலும் தேங்காயின் சிறப்புக்களை அறிய கீழ்க் காணும் இணைப்புக்களைக் காணுங்கள்.
http://machamuni.blogspot.in/2011/03/6.html
http://machamuni.blogspot.in/2010/12/6.html

30)நத்தைச் சூரி:நத்தைச் சூரியின் பெருமை பற்றி ஏற்கெனவே ஐந்து பதிவுகள் எழுதி ஏற்கெனவே எழுதியுள்ள நமது வலைத்தள இணைப்புக்கள் இதோ கீழே!

href=”http://machamuni.com/?p=727″>
href=”http://machamuni.com/?p=741″>
href=”http://machamuni.com/?p=782″>
href=”http://machamuni.com/?p=793″>
href=”http://machamuni.com/?p=833″>
31)அயக்காந்த செந்தூரம்:-அயம் என்றால் இரும்பின் தாது , காந்தம் என்றால் இரும்பின் காந்த சக்தியுள்ள தாது , இது அளவில் மிக சிறிய அளவு இந்த லேகியத்தில் சேர்க்கப்படுகிறது கிலோவிற்கு 10 கிராம் என்ற அளவில் சேர்க்கப்படுகிறது .இது இரத்தத்தை விருத்தி செய்து உடலிலுள்ள சப்த தாதுக்களையும் போஷிக்கும்.ஏனெனில் இரும்புச் சத்தை அடிப்படையாக வைத்தே இரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் செயல்பாடு இருக்கிறது .
அதனடிப்படையில்தான் உடலுறுப்புக்களுக்கு பிராண வாயுவின் கடத்துதல் அமைகிறது. அயக்காந்தத்தை பலமுறை மூலிகைகளிலும் ( கரிசலங்கண்ணி , சீந்தில் கொடிச்சாறு ,சுத்த கங்கை இவற்றால் புடமிடப்படுகிறது ) இவற்றில் உலோகச் சத்து மட்டுமே உப்பாக மாற்றப்பட்டு இருக்குமே தவிர உலோகங்கள் இராது .இவை அற்புதமான உடல் பலத்தை வழங்க வல்லது .
32)சிறு செருப்படையில் செய்யப்பட்ட சிலாசத்து பற்பம்:- பொதுவாக  கிராமங்களில் “தேவடியாள் வீட்டிற்குப் போனவனை செருப்பாலடி” என்பார்கள் .அது செருப்பாலடிக்க வேண்டும் என்று பொருளல்ல. தேவடியாள் வீட்டிற்குப் போய் பால் வியாதிகளை (VENEREAL DISEASE  , V.D.R.L , SEXUALLY TRANSMITTED DISEASES ) வாங்கி வரும் இந்த நபர்களை சிறு செருப்படை என்னும் மூலிகையால் அடிக்க பால் வினை நோய்களெல்லாம் பறந்தோடும்.பொதுவாக பால் வினை நோய்கள் தவறு செய்தவர்களோடு போவதில்லை.
இதற்கு அலோபதியில் ஊசி மருந்தாக பெனாடியுர் – 6 லட்சம் , பெனாடியுர் – 10 லட்சம் ,பெனாடியுர் -20 லட்சம் , அமாக்சிலின் -500 போன்ற ஆண்டிபயாட்டிக் மருந்துகளில் ஏதாவதொன்றை கொடுத்து அறிகுறிகளை அடக்கிவிடுவார்கள் .ஆனால் அது அப்போதைக்கடங்கி இருந்து இரத்தத்தில் மேகமாக ஏறி விந்தில் சேர்ந்து 21 தலைமுறையை பாதிக்கும் .
எனவே சிறு செருப்படை அல்லது கடு புடு வாணம் (இது பற்றியும் ஏற்கெனவே எழுதியுள்ளோம் )என்ற மருந்தைக் கண்டிப்பாக இப்படி பாதிக்கப்பட்டவர்கள் எடுத்துக் கொள்ள வேண்டும்.இல்லாவிடில் அவர்கள் பரம்பரையே பாதிக்கப்படும்.இந்தச் சிறு செருப்படைச் சாற்றில் புடம் போடப்பட்ட சிலாசத்து (சிலா என்றால் மலை , மலையின் சத்து இது , இமய மலைப் பகுதிகளில் வெட்டி எடுக்கப்படுகிறது ) இந்தப் பால்வினை நோய்களை கதறி ஓடவைக்கும்.பால் வினை நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் திரு கண்ணனிடம் சொல்லி இதை அதிகம் சேர்த்துக் கொடுக்கச் சொல்லுங்கள் .இது அளவில் மிக சிறிய அளவு இந்த லேகியத்தில் சேர்க்கப்படுகிறது கிலோவிற்கு 100 கிராம் என்ற அளவில் சேர்க்கப்படுகிறது .
இது இரத்தத்தை விருத்தி செய்து உடலிலுள்ள சப்த தாதுக்களையும் போஷிக்கும்.இயற்கையாக வெட்டி எடுக்கப்படு சிலாசத்தை டாபரில் ரா ஷீலாஜித்( RAW SHILAJIT ) என்று மாத்திரையாக கொடுக்கிறார்கள் .அது அவ்வளவு சிறப்பானதல்ல. பக்குவப்படுத்தப்பட்ட மருந்தே சிறப்பானது .சிலாசத்து பற்பம் சோற்றுக் கற்றாழையில் புடமிடப்பட்டது டாம்ப்கால் ( TAMPCOL ) நிறுவனத்தின் தயாரிப்புக்கள் கடையில் கிடைக்கும் .இது மிகச் சிறப்பானது .
இது வெட்டையின் அறிகுறிகளான மூத்திர கிரிச்சரம் , கல்லடைப்பு ,  சதையடைப்பு , புரஸ்த கோள வீக்கம் , சிறுநீரக வீக்கம் , சிறு நீரகத் தொற்று , சிறு நீர்ப்பாதைத் தொற்று , வெட்டை , வெள்ளைப் பாடு , வெள்ளை வீழல் , விந்து சிறு நீரோடு போதல் , விதைகள் தொற்றால் பாதிக்கப்பட்டு வீங்குதல் , விந்துப் பாதையில் கிருமித் தொற்று போன்றவைகளை அழகாக தொந்தரவில்லாமல் குணமாக்கும்.
பால் வினை நோய்கள் பற்றித் தெரிந்து கொள்ள கீழ்க்கண்ட இணைப்புகளைப் பார்வையிடுங்கள்.
http://en.wikipedia.org/wiki/Sexually_transmitted_disease

http://www.medicinenet.com/sexually_transmitted_diseases_stds_in_women/article.htm

http://www.medicinenet.com/sexually_transmitted_diseases_stds_in_men/article.htm

http://www.nlm.nih.gov/medlineplus/sexuallytransmitteddiseases.html

http://www.cdc.gov/std/

http://www.news-medical.net/health/What-is-an-STD-(Sexually-Transmitted-Disease).aspx

33)சாரப்பருப்பு:-பொதுவாக விதைகள் , பருப்புக்கள், கொட்டைகள் ஆண்மை வீரியத்தைப்  பெருக்கும் .அதிலும் பாதாம் பருப்பு இதில் மிகச் சிறந்தது.சாரப் பருப்பு நல்ல சாரமுள்ள பருப்பு என்பதால்தான் இந்தப் பெயர் பெற்றுள்ளது .சாரப் பருப்பினால் சிறுநீரைப் பற்றிய கடுஞ்சுருக்கு , மூத்திரக் கடுப்பு , சலப் பிரமேகம் நீங்கும் , நீற்றுப் போன சுக்கிலம் (விந்து ) இறுகும்  , இரசகந்தகங்களைத் தின்றவர்களுக்கு அதன் அழலையை ஆற்றும் . மூத்திர வர்த்தனகாரி , காம விர்த்தினி , சமனகாரி போன்ற செய்கைகளை உடையது .
மேற்படி லேகியத்தை காலை மாலை வெறும் வயிற்றில் ஒரு பெரு நெல்லிக்காயளவு சுவைத்துச் சாப்பிட்டு , சுண்டக் காய்ச்சிய பாலை அருந்திவர மேலே கண்ட சுப பலன்கள் உண்டாகி நல்ல தாது விருத்தி உண்டாகும் . மேலான போக சக்தி தேவைப்படுபவர்கள் இரவு படுக்கப் போகும் முன் ஒரு பெரு நெல்லிக்காயளவு சாப்பிட்டு பேரீச்சம் பழம் , அத்திப்பழம் , கிஸ்மிஸ் பழம் ,அல்லது கருப்பு கிஸ்மிஸ் பழம்  (ஆங்கூர் திராட்சை ) பிய்த்துப் போட்டு சுண்டக் காய்ச்சிய பால் 100 மிலி குடிக்க அன்று மிகமிக நல்ல இரவாகும் .
சதுரகிரி ஹெர்பல்ஸ் திரு கண்ணன் அவர்கள் தற்போதைய புதுப்பிக்கப்பட்ட முகவரி மற்றும் அலைபேசி எண் மற்றும் அவரது தொலைபேசி எண்கள் ஆகியவற்றை கீழே காண்க.

+919943205566

+914563282222

அவரது முகவரி:-

திரு பெ.கண்ணன்,சதுரகிரி ஹெர்பல்ஸ்,

2/159, மங்கம்மாள் கோவில் தெரு,கான்சாபுரம்,(P-O)

திரு வில்லிபுத்தூர் தாலுகா,விருதுநகர் மாவட்டம்.

இது போல சதுரகிரி ஹெர்பல்ஸ் ன் மிக நல்ல மற்ற மூலிகை மருந்துகளைசதுரகிரி ஹெர்பல்ஸ் திரு கண்ணன் அவர்கள் தயாரிப்புக்கள் (பாகம் 5) ல் பார்க்கலாம்.

82 responses to “சதுரகிரி ஹெர்பல்ஸ் திரு கண்ணன் அவர்கள் தயாரிப்புக்கள் (பாகம் 4) தாது விருத்தி லேகியம்”

 1. shareef says:

  இறைவா எத்தனை விஷயங்கள்

  சாமி ஜி முதல்ல உங்க ஞாபக சக்தியை
  என்னவென்று சொல்வது
  கணிபொறி கூட தோற்று விடும் ஞாபக சக்தி முன்

  வெளிமடக்கி – புதிய மூலிகை
  கூகுளே தேடலே அறியாத மூலிகை

  நன்றிகள் பல கோடி

  • machamuni says:

   அன்பு மிக்க திரு ஷரீஃப் அவர்களே,
   கருத்துரைக்கு மிக்க நன்றி!!!!
   விரைவில் மேலதிக விவரங்களுடன் பதிவாக வெளிவரும்.
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 2. karuppiah kannan says:

  Arumayana matum alah
  Aarokyamana pathipum Nantrigal …

  • machamuni says:

   அன்பு மிக்க திரு கருப்பையா கண்ணன் அவர்களே,
   கருத்துரைக்கு மிக்க நன்றி!!!!
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 3. மணி says:

  அருந்தவப்பெருந்தகையீர்,

  தங்களின் பதிவுகள் எல்லாம் மிக மிக அருமை!

  தாங்கள் இப்பூவுலகில் நீண்ட நெடிய காலமிருந்து 200 ஆண்டு காலமே ஆன ஆங்கில மருத்துவம் என்னும் அரக்கனை வேரொடு நம் மண்ணை விட்டு அகற்ற எல்லாம்வல்ல ஏக இறைவனும் பதிணென் சித்தர்களும் அருள் பாலிப்பார்களாக.

  என்றும் தங்களின் நல்லாசிகளுடன்
  மணிவாசகா

  • machamuni says:

   அன்பு மிக்க திரு மணி அவர்களே,
   கருத்துரைக்கு மிக்க நன்றி!!!!
   இறைவன் சித்தம் எதுவோ அதன் படி நடக்கட்டும்.
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 4. ஸஹதுல்லாஹ் says:

  அண்ணன் அவர்களுக்கு,
  நண்பர் ஷரீப் அவர்கள் சொன்னது போல் இத்தனை விஷயங்கள் பிரமிப்பூட்டும் ஆச்சர்யம்.
  மிகச் சிறப்பானதொரு பதிவு.

  மட்டற்ற நன்றிகள்….

  தங்களன்புள்ள,
  ஸஹதுல்லாஹ்

  • machamuni says:

   அன்பு மிக்க திரு சதயத்துல்லாஹ் அவர்களே,
   கருத்துரைக்கு மிக்க நன்றி!!!!
   இந்தப் பதிவை ஆறு பதிவாக பிரித்து விளக்கி எழுத வேண்டும் என்று விண்மணி நாகமணி கூறினார்.ஆனால் ஒரு தயாரிப்பைப் பற்றி இவ்வளவு விரிவாக எழுதியதாக யாரும் கருதிவிடக் கூடாது என்பதற்காக இந்தப் பதிவை சுருக்கி எழுதியுள்ளோம். இதிலுள்ள மூலிகைகளைப் பின்னர் தனியாக விளக்கி எழுதலாம் என்று கருதியுள்ளோம்.
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 5. வணக்கம் ஐயா.நாம் நவீன மருந்துகளை உண்டு நம் உடலை கெடுத்து கொள்ளாமல் நம் பாரம்பரிய சித்த மருந்துகளை உண்டு நம் உடலையும் உயிரையும் பாதுகாப்போமாக.தமிழ் மக்கள் சார்பில் இந்த அருமையான பதிவுக்கு மிக்க நன்றி ஐயா.

  • machamuni says:

   அன்பு மிக்க திரு ஆறுமுகம் அவர்களே,
   கருத்துரைக்கு மிக்க நன்றி!!!!
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 6. sridhar says:

  அருமையான பதிவு அய்யா, மிக சிறந்த தொகுப்பு. ஒவ்வொரு மூலிகைக்கும் தாங்கள் கொடுக்கும் விளக்கம் மற்றும் இடைஇடையே தாங்கள் கொடுக்கும் பயன்பாட்டு குறிப்புகள் மிக அருமை. அய்யா அடுத்த பதிவிற்காக ஆவலுடன் காத்துள்ளேன்.

  • machamuni says:

   அன்பு மிக்க திரு ஸ்ரீதர் அவர்களே,
   கருத்துரைக்கு மிக்க நன்றி!!!!
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 7. Sachithanandam says:

  ஐயா.. தங்களின் பதிவுகள் மிக அருமை.. சில காலம் நான் தங்களை தொடர்பு கொள்ள முடியாமல் போனதற்கு மன்னிக்கவும்.. தங்களின் சேவையும் ஊக்கமும் நம் மக்களுக்கு எப்போதும் தேவை.. போலி லேகியங்கள் விற்கும் நயவஞ்சகர்களிடம் சிக்கி மன நிம்மதியை இழந்து ஆண்மையை இழந்து தவிக்கும் நம் இளைஞர்களுக்கு தங்களின் பதிவு ஒரு அருமையான வரபிரசாதம்…

  • machamuni says:

   அன்பு மிக்க திரு சச்சிதானந்தம் அவர்களே,
   கருத்துரைக்கு மிக்க நன்றி!!!!
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 8. la venkat says:

  அன்புள்ள அய்யா,
  தங்கள் பதிவு இன்றய தலைமுறைக்கு மட்டுமல்ல, வருங்கால தலைமுறையையும் காக்க வல்லது என்பதில் மாற்று கருத்து இல்லை.
  நன்றி.
  அன்புடன்,
  வெங்கட் லா.

  • machamuni says:

   அன்பு மிக்க திரு வெங்கட் லா அவர்களே,
   கருத்துரைக்கு மிக்க நன்றி!!!!
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 9. eshwar.ad bangalore says:

  orey vaarthai EXCELLENT

  • machamuni says:

   அன்பு மிக்க திரு ஈஸ்வர் அட் அவர்களே,
   கருத்துரைக்கு மிக்க நன்றி!!!!
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 10. shimbumathi says:

  ayya migavum payanulla pathivu veli madakki enbathu paarthal surungi thane

  • machamuni says:

   அன்பு மிக்க திரு ஷிம்புமதி அவர்களே,
   கருத்துரைக்கு மிக்க நன்றி!!!!
   வெளி மடக்கி பற்றி பதிவு வெளிவரும்போது தெளிவாக படம் , மற்றும் காணொளிக் காட்சியுடன் வெளியாகும் வரை பொறுத்திருங்கள்.
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 11. viraj says:

  Anna,

  i am having dandruff from last 15yrs. Scalp is little oily also.
  From last two years hair is also going grey and hair falls during bath.
  i have applied various oil but no use.
  from last six months applying gingerly oil (nalla yennai) and using shikakai powder for hair wash but no improvement.

  can i come out of this situation completely !!

  please help me.

  endrum anbhudan,
  viraj

  • machamuni says:

   அன்பு மிக்க திரு விராஜ் அவர்களே,
   கருத்துரைக்கு மிக்க நன்றி!!!!
   dandruff என்பதற்கு பொடுகு என்பார்கள் .இந்த பொடுகுத் தலையை போக்க (பொடுகுத் தலையைப் போக்குவதால் இதற்கு பொடு தலை என்று பெயர்)பொடுதலைத் தைலத்தை தலைக்குத் தேய்த்து அரை மணி நேரம் ஊற வைத்து குளித்து வர பொடுகுத் தலை போகும்.
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

   • viraj says:

    Anna,

    Mikka Nandri.

    Podudhalai thailam, Nan Kannan ayya vidam erundhu petru kolgiren.

    Melum 20 % Mudi (hair) narai (white) ulladhu.
    Narai neekka Sirandha vazi kooravum.

    Ungal aasirvadham pera virumbhum,
    Viraj

    • machamuni says:

     அன்பு மிக்க திரு விராஜ் அவர்களே,
     கருத்துரைக்கு மிக்க நன்றி!!!!
     முதலில் நீங்கள் தமிழில் எழுதுங்கள்.உங்களது தனிப்பட்ட நோய் (பல இருக்கும் போலத் தெரிகிறது ) விவரங்களை பொதுவில் கேட்பதும் தவறு .அதற்கு நாம் பதில் சொல்வதும் தவறு .இனிமேல் வலைத் தளத்தில் கேள்விகள் கேட்காதீர்கள் எமது தனிப்பட்ட மின்னஞ்சல் முகவரிக்கு வாருங்கள் .
     மிக்க நன்றி
     என்றென்றும் பேரன்பினால்
     சாமீ அழகப்பன்

 12. viraj says:

  Anna,

  1. En thandhai (father) kannil purai ulladhu.
  Aruvai sigichai (operation) seya vendum engirargal.
  Avarukku neerizhivu (diabetes) ulladhu.

  2. Melum eraichal noyinal (Asthma) migavum avadhipadugirar

  dhayai koorndhu theervu sollavum.

  Ungal aasirvadham pera virumbhum,
  Viraj

  • machamuni says:

   அன்பு மிக்க திரு விராஜ் அவர்களே,
   கருத்துரைக்கு மிக்க நன்றி!!!!
   முதலில் நீங்கள் தமிழில் எழுதுங்கள்.உங்களது தனிப்பட்ட நோய் விவரங்களை பொதுவில் கேட்பதும் தவறு .அதற்கு நாம் பதில் சொல்வதும் தவறு .இனிமேல் வலைத் தளத்தில் கேள்விகள் கேட்காதீர்கள் எமது தனிப்பட்ட மின்னஞ்சல் முகவரிக்கு வாருங்கள் .
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 13. shimbumathi says:

  ayya, thangalin intha pathivu migavum arumai velimadakki (*ninral surungi*ayya nan ithai vagadathil irunthu parthen ennudaiya intha pathivil ethavathu thavaru irunthal dhavu seithu ennai mannikkavum ennal velimadakkiyin aarvathai adakka mudiyavillai) pathivukkaga migavum aavaludan irukkiren

  • machamuni says:

   அன்பு மிக்க திரு சிம்பு மதி அவர்களே,
   கருத்துரைக்கு மிக்க நன்றி!!!!
   நல்ல விடயத்திற்கு காத்திருப்பு அவசியம்.விரைவில் வெளியாகும்.
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 14. கோ. வெங்கடேஷ் says:

  அய்யா,
  வணக்கம், நான் பல நாட்களாக உங்கள் பதிவுகளை படித்து வருகிறேன், மிகுந்த பயன் அளிக்கும் தளம் என்பதை ஆத்ம ரீதியாக உணர முடிகிறது. மிக்க நன்றி அய்யா.

  • machamuni says:

   அன்பு மிக்க திரு எம் கோ வெங்கடேஷ் அவர்களே,
   கருத்துரைக்கு மிக்க நன்றி!!!!
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 15. m koati says:

  ஐயா ,
  தங்களின் வலைதலத்தை பார்வையிட்ட பிறகு மீண்டும் சித்தர்கள் உங்கள் உருவில் அவதாரம் எடுத்திருப்பதை உணர்கிறேன் .

  நன்றி .

  • machamuni says:

   அன்பு மிக்க திரு எம் கோட்டி அவர்களே,
   கருத்துரைக்கு மிக்க நன்றி!!!!
   நாம் சித்தரல்ல. அவர்களைப் போல ஆக முயற்சித்துக் கொண்டிருப்பவன்.
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 16. மதிப்பிற்குரிய அய்யா, ஒவ்வொரு பதிவும் அற்புதம். உங்களிடம் தீர்வு நாடி வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது கண்டு மகிழ்ச்சியாக உள்ளது. இதை முறைப்படுத்த, தயவு செய்து உடனடியாக கேள்வி பதில் பகுதியை ஆரம்பிக்க வேண்டுமென கேட்டுக்கொள்கின்றேன். அப்போதுதான், தங்களிடம் தங்குதடையின்றி தக்க ஆலோசனையைப் பெறமுடியும் என்று நினைக்கின்றேன். நன்றி!.

  • machamuni says:

   அன்பு மிக்க திரு தி ஸ்ரீதர் அவர்களே,
   கருத்துரைக்கு மிக்க நன்றி!!!!
   அலை பேசியில் பேசும் போது இது பற்றி விளக்கமாக பேசி, பின் தீர்மானிப்போம்.
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 17. ஸஹதுல்லாஹ் says:

  அண்ணன் அவர்களுக்கு,
  நீரழிவு பற்றிய பதிவில், இந்த அலோபதியினர் தவறாக சர்க்கரை அளவை இரத்தத்தில் இருக்கும் அளவைக் கொண்டு கணிக்கிறார்கள் என்றிருந்தீர்கள். அடுத்த பதிவில் முறையாக எப்படி அறிந்து கொள்வது என்று தங்கள் விளக்கங்களுக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்.

  தவறுகள் இருப்பின் மன்னிக்கவும்.

  தங்களன்புள்ள,
  ஸஹதுல்லாஹ்

  • machamuni says:

   அன்பு மிக்க திரு ஸஹதுல்லாஹ் அவர்களே,
   கருத்துரைக்கு மிக்க நன்றி!!!!
   பொறுங்கள் நாம் சிறிது வேறு சில அலுவல் காரணமாக இரு வாரங்களாக பதிவிட முடியவில்லை.நாளை பதிவு வெளி வரும்.
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 18. balaji says:

  அன்புள்ளம் கொண்ட குருஜி அவர்களுக்கு,

  வணக்கம், நான் தங்களுடைய அனைத்து பதிவுகளையும் விரும்பி படித்து வருகிறேன்

  நான் உங்கள் சீடனாக இருந்து ஏழ்மையான மக்களுக்கு உதவ வேண்டும் என்ற ஆசையில் இருக்கிறேன், உங்கள் ஆசி கிடைத்தால் கண்டிப்பாக அதை நிறைவேற்றுவேன். ஆனால் எப்போது நான் சவுதி அரேபியாவில் இருக்கிறேன். என்னும் ஒன்றரை வருடத்திற்கு பிறகு கண்டிப்பாக நேரில் உங்களை சந்திப்பேன் அதுவரை உங்கள் சிஷ்யன்

  பாலாஜி

  • machamuni says:

   அன்பு மிக்க திரு பாலாஜி அவர்களே,
   கருத்துரைக்கு மிக்க நன்றி!!!!
   இறை என்னென்ன எண்ணி உள்ளதோ அதன்படி நம்மை கொண்டு செலுத்தும் .நடத்துவது அது .ஆடுபவர்கள் நாம்.இறை ஆசி என்றும் உள்ளதாய் கொட்டிக் கிடப்பதாய்தான் உள்ளது!!! சூத்திரப்பாவை கயிறற்று வீழுமுன் சூசுமக் கயிற்றைப் பாரடா!!!!அதி சூட்சுமக் கயிற்றைப் பாரடா!!!!!!
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 19. சேகர்ஜி says:

  அன்புள்ள சாமீ அழகப்பன் அவர்களுக்கு,
  வணக்கம்
  தாங்களும், தங்கள் குடும்பதினரும் நலமுடன், வளமுடன் நீடூழி வாழ இறைவனிடம் அடிபணிந்து வேண்டுகிறேன்.
  வியாபார, லாப நோக்கமின்றி- நேர்மையாய், நாணயமாய்
  கடுமையாக உழைத்து தயாரித்த மருந்தை குறித்த நேரத்தில்
  உரியவர்களிடம் சேர்த்து மனம் குளிர சிரித்துப்பேசும் சதுரகிரி ஹெர்பல்ஸ் திரு.கண்ணன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கும்
  எனது உளமார்ந்த நன்றிகள்.
  எனது 62-வது வயதில் வாழ்க்கையில் முதன்முறையாக
  அழகு தமிழில் என்னை கணிணி மூலம் எழுதப் பழக்கிய
  தங்களுக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்.
  சர்க்கரை நோய் பாதிப்பு, பிறகு கட்டுப்பாட்டுக்குள் உள்ளது
  என இரண்டு வருடங்களாக சோதனை அறிக்கையைப் பார்த்து மருத்துவர்கள் நிறைய மாத்திரைகளை எழுதித்தற
  (நான் மாத்திரைகளை வாங்காமல்) சாப்பிட்டதாக நடித்த கதை தெறியாமல் உளறிக்கொண்டிருந்தனர்.
  உண்மையில் நான் கடந்த பத்து வருடங்களாக காலையில் இஞ்சி-மதியம் சுக்கு – மாலையில் கடுக்காய் உண்டு வந்தேன், இனிப்பை தவிற்தேன் உணவில் கட்டுப்பாடு ஏதுமில்லை. இதை நான் அவர்களிடம் கூறவில்லை,கூறினாலும் மருத்துவர்கள் செவிமடுக்க தயாரில்லை.
  எனது எண்ணங்களுக்கு ஏற்றாற்போல் அமைந்த தங்களின்
  வலைப்பதிவை உள்வாங்கிக்கொண்டு பணம் அனுப்பி (வி.பி.பி கட்டணம் அதிகம் என்பதால்) சதுரகிரி ஹெர்பல்ஸில் சர்க்கரை பொடியினை பெற்று உபயோகித்து வருகிறேன்.
  சதுரகிரி ஹெர்பல்ஸ் திரு. கண்ணனை அறிமுகப்படுத்தி-யதற்கு மிக்க நன்றி.
  நமது மனமே நோய்களுக்கு காரணமாகிறது.
  மனமது செம்மையானால் மந்திரங்கள் ஜெபிக்கவேணடாம்
  என்பது முது மொழி-
  மனமது அமைதியானால் மருந்துகளில் மூழ்கவேண்டாம்
  என்பது புது மொழி.
  குறிப்பு: திரு. கண்ணனின் ஒரு அலைபேசி தொடர்பில்இல்லை. அவரது வங்கி ஐ.எப்.எஸ்.சி எண் தவறாக உள்ளது.இவற்றை சரிசெய்து தாங்கள் வலைப்பதிவில் வெளியிட்டால் அன்பர்கள் அவரிடம் சிரமமின்றி மருந்தினை பெற இயலும்.
  நன்றி.
  நெஞ்சம் நிறை அன்புடன்.
  சேகர்ஜி

  • machamuni says:

   அன்பு மிக்க திரு சேகர் ஜி அவர்களே,
   கருத்துரைக்கு மிக்க நன்றி!!!!
   நீங்கள் கூறியவற்றை சரி பார்க்கிறேன்.
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 20. ஸஹதுல்லாஹ் says:

  அண்ணன் அவர்களுக்கு,
  வியர்வை நாற்றம் நீங்க மருந்துகள் கிடைத்தால் மிக்க நலம்.

  தங்களன்புள்ள,
  ஸஹதுல்லாஹ்.

  • machamuni says:

   அன்பு மிக்க திரு ஸதயத்துல்லாஹ் அவர்களே,
   கருத்துரைக்கு மிக்க நன்றி!!!!
   கம்பங் கூட்டினுள் (கைக்கும் உடலுக்கும் இடையே உள்ள இடத்தில் விளக்கெண்ணெய்யை தடவி வர வியர்வை நாற்றம் போகும்.
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

   • ஸஹதுல்லாஹ் says:

    அண்ணன் அவர்களுக்கு,
    மட்டற்ற நன்றிகள்….

    தங்களன்புள்ள,
    ஸஹதுல்லாஹ்

 21. ஸஹதுல்லாஹ் says:

  அண்ணன் அவர்களுக்கு,
  நீங்கள் பின்னூட்டங்களில், பொடுகுக்கு பொடுதலை தைலம் சிறந்த மருந்து என்றிருந்தீர்கள். நான் பழனி மலையப்பசாமி வைத்தியசாலை அவர்களிடம் இருந்து பொடுதலை தைலம் கேட்டுப் பெற்றேன் இன்று. ஆனால் ஆடுதின்னாப் பாளை தைலம் என்பதை அனுப்பி இருக்கிறார்கள். நீங்கள் கூறியதும் இந்த மருந்தும் வேறானது போல் உள்ளது, இதை பயன்படுத்தலாமா ? தங்கள் பதில் கிடைத்தால் மிக்க நலம்.

  தவறுகள் இருப்பின் மன்னிக்கவும்.

  தங்களன்புள்ள,
  ஸஹதுல்லாஹ்

  • machamuni says:

   அன்பு மிக்க திரு சதயத்துல்லாஹ் அவர்களே,
   கருத்துரைக்கு மிக்க நன்றி!!!!
   தனிப்பட்ட மின்னஞ்சலில் கேட்க வேண்டியதை இங்கே கேட்காதீர்கள் என்று பல தடவை உங்களுக்குச் சொல்லிவிட்டேன். இனி இது போன்ற உங்கள் கேள்விகளை பிரசுரிக்கவும் மாட்டேன். பதிலளிக்கவும் மாட்டேன். உங்களிடம் எனது அலை பேசி எண்தான் உள்ளதே!!அதில் என்னிடம் நேரிடையாக கேட்டாலே சொல்லிவிடுவேனே!!!இவ்வளவு தட்டச்சு செய்ய வைத்து எனது நேரத்தை வீணாக்குவதே குறிக்கோளாய் செயல்படுவது போல உள்ளது .இனி இது தொடரக் கூடாது என்று கடைசியாக அறிவுறுத்துகிறேன்.
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 22. p.n.prathap says:

  Anbulla ayya sarkarai noyulla naan indha legiyathai unnlama thayay koorndhu ariviyungal

  • machamuni says:

   அன்பு மிக்க திரு பி என் பிரதாப் அவர்களே,
   கருத்துரைக்கு மிக்க நன்றி!!!!
   முதலில் தமிழில் எழுதுங்கள். பொதுவாக தமிழில் கருத்துரை எழுதாத நபர்கள் மீது எமக்கு சரியான மரியாதை ஏற்படுவதில்லை.நமது மொழி தமிழ்.நமது தமிழ் நம் உயிர்.நாமே அதை உபயோகிக்காவிட்டால் தமிழ் எப்படி வாழும்.பழக்கத்தில் உள்ள மொழிதான் வாழும்.நாம் எழுதியதை தமிழை அறிந்ததால் படித்தீர்கள்.பதிலையும் தமிழில் தயவு செய்து எழுதுங்கள்.இந்த முறை உங்களுக்கு பதிலளிக்கிறேன் .அடுத்த முறை இல்லை.லேகியத்தை சாப்பிடலாம்.
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 23. anbu says:

  மதிப்பிற்குரிய அய்யா
  இந்த மருந்து சாப்பிடும் போது இச்சா பத்தியம் இருக்க வேண்டுமா ?

  • machamuni says:

   அன்பு மிக்க திரு அன்பு அவர்களே,
   கருத்துரைக்கு மிக்க நன்றி!!!!
   இச்சா பத்தியம் என்றால் பலருக்கு புரியாது .உடலுறவில்லாமல் இருந்தால் நல்லது .எனில் இச்சா பத்தியம் இருந்தால் நல்லது, இருக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை.இருபதாயிரம் ரூபாயை நிலையான வைப்பீட்டில் போட்டால் அதிக வட்டி வரும் .இப்போது வரும் வட்டி போதும் என்றால் உடனுக்குடன் வந்த சக்தியை எடுத்து செலவிட்டுவிடலாம்.
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 24. கார்த்திகேயன் says:

  அண்ணன் அவர்களுக்கு,

  இந்த தாது விருத்தி லேகியம் பெண்கள் சாப்பிடலாமா என்று கூறவும்.

  • machamuni says:

   அன்பு மிக்க திரு கார்த்திகேயன் அவர்களே,
   கருத்துரைக்கு மிக்க நன்றி!!!!
   ஆண்கள் பெண்கள் அனைவரும் சப்த தாதுக்களால் ஆக்கப்பட்டவர்களே!!! தாராளமாக அனைவரும் உண்ணலாம்.
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 25. ravikumar says:

  ஐயா நான் தங்களுக்கு அனுப்பிய மின்னஞ்சல் கிடைத்ததா? உங்கள் பதிலை எதிர் பார்த்து காத்திருக்கிறேன் ….

  • machamuni says:

   அன்புள்ள திரு ரவி குமார் அவர்களே ,
   கருத்துரைக்கு மிக்க நன்றி,
   எந்த மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பினீர்கள்.என்ன விடயமாக கேள்விகள் கேட்டிருந்தீர்கள்.விபரமாக கூறினால் நலம்.
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 26. அன்பு அய்யா அவர்களுக்கு எனது சர்க்கரை அளவு 290 உணவுக்கு பின்பு நான் தாது விருத்தி லேகியம் சாப்பிடலாமா அதில் உள்ள தேன் , நாட்டு சர்க்கரை, பனங்கற்கண்டு ,நெய் இவைகளால் ஏதாவது பாதிப்புகள் ஏற்படுமா ? அருள் கூர்நது எனது ஐயம் தீர்க்கவும் .

  பொ .கி .சு.ஏகாம்பரம்
  பொதட்டூர்பேட்டை -631208
  9787406890

  • machamuni says:

   அன்புள்ள திரு திரு பொ .கி .சு . ஏகாம்பரம் அவர்களே ,
   கருத்துரைக்கு மிக்க நன்றி,
   ///அன்பு அய்யா அவர்களுக்கு எனது சர்க்கரை அளவு 290 உணவுக்கு பின்பு நான் தாது விருத்தி லேகியம் சாப்பிடலாமா அதில் உள்ள தேன் , நாட்டு சர்க்கரை, பனங்கற்கண்டு ,நெய் இவைகளால் ஏதாவது பாதிப்புகள் ஏற்படுமா ? அருள் கூர்நது எனது ஐயம் தீர்க்கவும்///
   கீழ்க்கண்ட பதிவுகளை நன்றாகப் படியுங்கள் .இந்தக் கேள்வி தேவையா என்று தெளிந்து பின் கேள்வி கேளுங்கள்.சர்க்கரை அதிகம் என்று கூறிக் கொண்டு ஆங்கில மருந்துகளை எடுத்துக் கொண்டு இருப்பது நீங்கள் உங்கள் உடலை இந்த மருந்துகளால் ( விஷங்களால் ) கெடுத்துக் கொண்டிருக்கிறீர்கள் என்பது புரிகிறதா ??இல்லயா??? நஞ்சுகளை சாப்பிட ஒரு கேள்வியும் கேட்காமல் இருந்துவிட்டு, தேன் , நாட்டு சர்க்கரை, பனங்கற்கண்டு ,நெய் போன்ற அமுதங்களை சாப்பிட இவ்வளவு கேள்விகளை ஏன் கேட்கிறீர்கள்.இந்த விடயத்தின் உண்மையில் படித்தவர்களுக்கு இருக்கும் முட்டாள்தனத்தைப் பார்த்து நாம் நொந்தே போகிறோம்.
   சர்க்கரை வியாதியை குணமாக்கலாம் ( பாகம் 6 ) http://machamuni.com/?p=2253
   சர்க்கரை வியாதியை குணமாக்கலாம் ( பாகம் 5 ) http://machamuni.com/?p=2204
   சர்க்கரை வியாதியை குணமாக்கலாம் ( பாகம் 4 ) http://machamuni.com/?p=2184
   சர்க்கரை வியாதியை குணமாக்கலாம் ( பாகம் 3 ) http://machamuni.com/?p=2060
   சர்க்கரை வியாதியை குணமாக்கலாம் ( பாகம் 2 ) http://machamuni.com/?p=2047
   சர்க்கரை வியாதியை குணமாக்கலாம் ( பாகம் 1 ) http://machamuni.com/?p=1988
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 27. அன்பு அய்யா அவர்களுக்கு எனது சர்க்கரை அளவு 290 (உணவுக்கு பின்பு) நான் நடைப்பயிற்சி உணவு கட்டுப்பாடு இவற்றுடன் ஆங்கில மருந்தும் எடுத்து வருகிறேன் ஆனால் சர்க்கரை அளவு குறைந்தபாடில்லை எனது உடல் தசைகள் தளர்வுற்று எடை குறைந்து சோர்வுடன் மெலிந்து காணப்படுகிறேன் அருள் கூர்நது எனது நோய் தீர்ந்து உடல் பழைய பொலிவுடன் வலிமை பெற வழி கூறுங்கள் தீர்க்கவும் .

  பொ .கி .சு.ஏகாம்பரம்
  பொதட்டூர்பேட்டை -631208
  9787406890

  • machamuni says:

   அன்புள்ள திரு திரு பொ .கி .சு . ஏகாம்பரம் அவர்களே ,
   கருத்துரைக்கு மிக்க நன்றி,
   /// எனது சர்க்கரை அளவு 290 (உணவுக்கு பின்பு) நான் நடைப்பயிற்சி உணவு கட்டுப்பாடு இவற்றுடன் ஆங்கில மருந்தும் எடுத்து வருகிறேன்.ஆனால் சர்க்கரை அளவு குறைந்தபாடில்லை எனது உடல் தசைகள் தளர்வுற்று எடை குறைந்து சோர்வுடன் மெலிந்து காணப்படுகிறேன் அருள் கூர்நது எனது நோய் தீர்ந்து உடல் பழைய பொலிவுடன் வலிமை பெற வழி கூறுங்கள் தீர்க்கவும்///
   முதலில் ஆங்கில மருந்துகள் என்ற பெயரில் விஷங்களை சாப்பிடுவதை முதலில் நிறுத்துங்கள்.இதனால் உங்கள் உடல் நலம் மேலும் மேலும் கெடுவதைத் தவிர வேறொன்றும் நிகழாது.சதுரகிரி ஹெர்பல்ஸ் கண்ணன் அவர்களிடம் உள்ள சர்க்கரைக் கொல்லிப் பொடியை வாங்கிச் சாப்பிட்டு வாருங்கள்.உடல் சரியாகும் .
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 28. செந்தில்குமார் says:

  அய்யா…!
  மிக்க நன்றி. இது போன்ற வலைதளத்தை கண்டதில்லை. திரு. கண்ணன் அவர்களின் மருந்துகள் விலைக்கு கிடைக்குமா? அவற்றை எவ்வாறு பெறுவது? தெரிவிக்க வேண்டுகிறேன். ஆண்குறி பெரிதாக ஏதாவது மருந்து இருக்கிறதா என்பதை தெரிவிக்க வேண்டுகிறேன்.

  என்றும் அன்புடன்

  செந்தில்குமார்.

  • machamuni says:

   அன்புள்ள திரு செந்தில் குமார் அவர்களே ,
   கருத்துரைக்கு மிக்க நன்றி,
   சதுரகிரி ஹெர்பல்ஸ் திரு கண்ணன் அவர்களின் முகவரியும் அலை பேசி எண்ணும் சதுரகிரி ஹெர்பல்ஸ் திரு கண்ணன் அவர்களின் தயாரிப்புகள் ஒவ்வொரு பதிவிலும் குறிப்பிட்டுள்ளேன் .அவரிடம் தொடர்பு கொண்டால் மருந்துகள் அனுப்பி வைப்பார்.ஆண்குறி பெரிதாக அமுக்கராக் கிழங்கை உரைத்து இரவு ஆண்குறியின் மீது பற்றிட்டு காலையில் கழுவிவிட வேண்டும். இவ்வாறு 48 நாட்கள் செய்ய ஆண்குறி பருக்கும்.
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

   • anbu says:

    // அமுக்கராக் கிழங்கை உரைத்து இரவு பற்றிட்டு காலையில் கழுவிவிட வேண்டும். //

    மதிப்பிற்குரிய அய்யா தண்ணீரில் உரைக்கவேண்டுமா பசும் பாலில் உரைக்க வேண்டுமா என்று
    கூறினால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
    நன்றி அய்யா.

    • machamuni says:

     அன்புள்ள திரு அன்பு அவர்களே ,
     கருத்துரைக்கு மிக்க நன்றி,
     அமுக்கராக் கிழங்கை மருத்துவ தரமுள்ள பன்னீரில் உரைத்து இரவு பற்றிட்டு காலையில் கழுவிவிட வேண்டும்.
     மிக்க நன்றி
     என்றென்றும் பேரன்பினால்
     சாமீ அழகப்பன்

 29. செந்தில்குமார் says:

  அய்யா…!
  மிக்க நன்றி. பத்தியம் ஏதாவது உளதா? என்பதை தெரிவிக்க வேண்டுகிறேன்.

  என்றும் அன்புடன்

  செந்தில்குமார்

  • machamuni says:

   அன்புள்ள செந்தில் குமார் அவர்களே,
   எந்த மருந்தை நீங்கள் வாங்குகிறீர்களோ அந்த மருந்துக்குள்ள பத்தியத்தை சதுரகிரி ஹெர்பல்ஸ் கண்ணனிடமே கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்.என்னிடம் வரும் கருத்துரைகள் அளவில்லாமல் வருகின்றன . இதில் முன் சொன்னதைத் தொடர்ந்து கேட்டாலே பதிலளிப்பது கடினம்.மொட்டைத் தலையன் குட்டையில் விழுந்தான் என்பது போலெல்லாம் கேட்பதைத் தவிருங்கள்.
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 30. அய்யா வணக்கம்,

  தாது விருத்தி லேகியத்துடன் அயகாந்த செந்தூரம் இரண்டு அரிசி எடை அளவு சாப்பிடுவதினால் நல்ல ரத்தம் உடலில் உற்பத்தியாகும் என்று கூறினார் திரு.சதுரகிரி கண்ணன் அவர்கள். தானே செய்திருந்தால் அயகாந்த செந்தூரத்தை இன்னும் சிறப்பாக செய்திருக்க முடியும் என்று வருத்தத்துடன் கூறினார். ஏற்கனவே நிறைய தாமதம் ஆகிவிட்டதால் வேறு தயாரிப்பு அனுப்பியிருப்பதாக சொன்னார் .

  நம்மை அண்டுபவர்கள் நலமுடனிருக்க வேண்டும் என்ற நல்ல உள்ளத்திலிருந்து மட்டுமே இது போன்ற வார்த்தைகள் வர இயலும் .
  அய்யா, ஒரு சந்தேகம் தயவு செய்து தெளிவு படுத்தவும்.
  அயகாந்த செந்தூரத்தை தாதுவிருத்தி லேகியத்துடன் மட்டும்தான் பயன்படுத்த இயலுமா அல்லது வேறு வகையிலும், வேறு உபாதைகளுக்கு பயன்படுத்த முடியுமா என்று தெரிவிக்கவும்

  அண்ட தைலமும், வல்லாரை திப்பிலியும் ,வல்லாரை சூரணமும் கேட்டுள்ளேன் . தருவதாக கூறியுள்ளார் . தங்கள் தயவும் மிகவும் தேவை.

  சந்தோசம்.

  அன்புடன்,

  செ.சீனிவாசன்

  • machamuni says:

   அன்புள்ள செ .சீனிவாசன் அவர்களே,
   ///அய்யா, ஒரு சந்தேகம் தயவு செய்து தெளிவு படுத்தவும்.அயகாந்த செந்தூரத்தை தாதுவிருத்தி லேகியத்துடன் மட்டும்தான் பயன்படுத்த இயலுமா அல்லது வேறு வகையிலும், வேறு உபாதைகளுக்கு பயன்படுத்த முடியுமா என்று தெரிவிக்கவும்.?///
   அயக்காந்த செந்தூரத்தை பாண்டு (இரத்தம் குறைவதால் வரும் தேக வெளுப்பு) ,இரத்த சோகை , உடல் சோர்வு,அன்னத் துவேஷம்(சாப்பாட்டைப் பார்த்தாலே பிடிக்காமலிருப்பது ),அருசி(எந்த உணவும் ருசிப்பதில்லை),இரத்தக் குறைவு ,இரத்தக்குறைவினால் வரும் கைகால் இழுப்பு ,இரத்தக்குறைவினால் வரும் கைகால்களில் ஏற்படும் குரக்கு வலிப்பு , நரம்பு சம்பந்தமான சில நோய்கள் இவற்றுக்கு தக்க அனுப்பானத்துடன் கொடுக்க நலம் பயக்கும்.பொதுவாக இது போன்ற மருந்து உபயோகங்களை இப்படி பொதுவில் நீங்கள் கேட்பதும் தவறு சொல்வதும் தவறு. யாராவது முறையின்றி மருந்துப் பிரயோகம் செய்ய நேரிட்டால் சித்த மருந்தின் பெயரும், சித்த வைத்தியத்தின் பெயரும் கெடும்.இது போல பலர் ஏற்கெனவே சித்த வைத்தியத்தின் பெயரை கெடுத்துவிட்டனர்.நாமும் அது போல செய்ய வேண்டாமே????எனென்றால் உங்களது அடுத்த கேள்வி அனுப்பானம் என்றால் என்ன என்பதாகத்தான் இருக்கும்.முறையாக சித்த மருத்துவம் பயின்றவர்களுக்குத்தான் இது பலனாகும்.உங்கள் தேவை என்னவாக இருந்தாலும் அதிக பொருட் செலவில்லாமல் நிறைவேற்றத்தான் நாங்கள் இருக்கிறோமே????பின் உங்களுக்கு ஏன் இந்தக் கவலை.
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

   • தக்க சமயத்தில் தவறை சுட்டிக்காட்டியமைக்கு மிக்க நன்றி அய்யா.
    தவறுக்கு வருந்துகிறேன். இனிமேல் இது போன்று தவறு நிகழா வண்ணம் கவனமுடனிருப்பேன்.

    சந்தோசம்,

    அன்புடன்,
    செ. சீனிவாசன்

    • machamuni says:

     அன்புள்ள செ .சீனிவாசன் அவர்களே,
     பரவாயில்லை.
     மிக்க நன்றி
     என்றென்றும் பேரன்பினால்
     சாமீ அழகப்பன்

 31. செந்தில்குமார் says:

  அன்புள்ள அய்யா,
  அமுக்குறா கிழங்கை பன்னீரில் அரைத்து பற்றிடுதல் என்ற முறையே சித்த மருத்துவத்தின் புற மருந்துகளில் ஒரு முறை தானே. அதனால் இதற்கு ஏதேனும் பத்தியம் இருக்கிறதா என்று கேட்டு விட்டேன். தவறுக்கு மன்னிக்கவும்.

  என்றும் அன்புடன்

  செந்தில்குமார்

  • machamuni says:

   அன்புள்ள திரு செந்தில்குமார் அவர்களே
   கருத்துரைக்கு மிக்க நன்றி,
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 32. வெளிமடக்கி enbadu enna… eppadi erukkum..pic.. other name of வெளிமடக்கி tell..

  • machamuni says:

   அன்புள்ள திரு மஹாராஜா அவர்களே,
   கருத்துரைக்கு மிக்க நன்றி,
   முதலில் தமிழில் எழுதுங்கள். பொதுவாக தமிழில் கருத்துரை எழுதாத நபர்கள் மீது எமக்கு சரியான மரியாதை ஏற்படுவதில்லை.நமது மொழி தமிழ்.நமது தமிழ் நம் உயிர்.நாமே அதை உபயோகிக்காவிட்டால் தமிழ் எப்படி வாழும்.பழக்கத்தில் உள்ள மொழிதான் வாழும்.நாம் எழுதியதை தமிழை அறிந்ததால் நீங்கள் படித்தீர்கள். முடியாது.இனிமேல் ஆங்கிலத்தில் கேள்வி கேட்டால் பதிலளிக்கக் கூடாது என்று முடிவு எடுத்துள்ளோம்.இனி ஆங்கிலத்தில் கருத்துரை எழுதினால் வெளியிட மாட்டோம் என மிகப் பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
   தமிழில் எழுதாதற்கு காரணமாக சொல்லிக் கொண்டே இருக்காதீர்கள்.“ தமிழ் எங்கள் உயிருக்கு நேர்” “ சாகும் வரை தமிழ் பயின்று சாக வேண்டும் .என் சாம்பலிலும் தமிழ் மணந்து வேக வேண்டும்” என்ற பாரதிதாசனின் வார்த்தைகள் எமக்கு உயிரான வார்த்தைகள்.எமது வலைத் தளத்தில் தமிழே முக்கியமானதாக இருக்க வேண்டும்.
   தமிழில் எப்படி கேட்க வேண்டும் என்பது தெரியாமல் நீங்கள் எப்படி சித்த வைத்தியம் கற்றுக் கொள்ளப்போகிறீர்கள்.
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 33. anbu says:

  மதிப்பிற்குரிய அய்யா அவர்களுக்கு,

  ஜீரண சக்தி குறைவாக உள்ளவர்கள் இந்த லேகியத்தை எப்படி பயன்படுத்துவது? எனக்கு, அல்சர் , வாய்வு தொந்தரவு, அஜீரண கோளறு உள்ளது. மேலும் எப்பொழுதும் சிறுநீர் கழிக்க வேண்டும் போலவே இருக்கும் . உறவில் சீக்கிரம் விந்து வெளிப்பட்டு விடுகிறது. இந்த லேகியத்தை வாங்கி ஒரு மாதம் சாப்பிட்டேன். அனால் பலன் எனக்கு தெரியவில்லை. ஒரு homeo pathy மருத்துவர் ஜீரணம் சரியாக இருந்தால் தான் இந்தமாதிரி லேகியங்கள் அற்புதமாக வேலை செய்யும் எண்டார். எனவே எனக்கு ஆலோசனை கூறுவீர்கள ? நன்றி.

  • anbu says:

   மேலும் எப்பொழுதும் உடல் சூடாகவே இருக்கும் கண் எரிச்சலும் உள்ளது. தூக்கம் முழுமையாக இல்லை. நடுவில் 2, 3 தடவை விழிப்பு வந்து திரும்ப உறங்க அரை மணிநேரம் ஆகும். எதாவது எண்ணம் வந்து எதையாவது மனதில் எண்ணி கொண்டே இருப்பேன். மனதில் எப்பொழுதும் எதிர்மறையான எண்ணங்களே வந்து கொண்டுள்ளது . மனதில் ஒரு பயம், பட படபாக இருப்பேன். கை கால் நடுக்கம். உடல் வலி. இதற்கு ஒரு தீர்வு கிடைக்குமா அய்யா?
   நன்றி அய்யா..

   • machamuni says:

    அன்புள்ள திரு அன்பு அவர்களே,
    கருத்துரைக்கு மிக்க நன்றி,
    நீங்கள் ஈரல் கெட்டுப் போன நிலையில் உள்ள மனிதர் . ஈரல் கெட்டுப் போனால்தான்,மனம் கவலைகள் பிறக்கும் இடமாகும். கவலை இல்லையே என்ற கவலைகள் கூட உண்டாகும் , ஈரலை சரி செய்ய ஆவாரைப் பூக் கஷாயம் சாப்பிட்டால் ஈரலைச் சரி செய்யலாம்.ஆவாரை பூத்திருக்க சாவாரைக் கண்டதுண்டோ, என்று குணபாடம் சொல்வதை இங்கு சொல்ல விரும்புகிறோம் . ஈரலைச் சரி செய்தால் எண்ணங்களையும் மனதையும் சரி செய்யலாம். தசைகளைப் பார்த்துக் கொள்வதும் ஈரலே!!! உடலில் தசைகளில் வலி என்றாலும் ஈரல் சரியில்லை என்றே பொருள்.
    மிக்க நன்றி
    என்றென்றும் பேரன்பினால்
    சாமீ அழகப்பன்.

  • machamuni says:

   அன்புள்ள திரு அன்பு அவர்களே,
   கருத்துரைக்கு மிக்க நன்றி,
   சீரண சக்திக் குறைபாடுதான் அனைத்து பிரச்சினைகளுக்கும் காரணம்.அது சரியானால்தான் அனைத்தும் சரியாகிவிடுமே .இத்தனை நாட்கள் எமது இணைய தளத்தைப் படித்தும் கூடவா இது கூடவா இது புரியவில்லை.சர்க்கரை நோயை குணமாக்கலாம் பாகங்கள் அனைத்துமே இந்த சீரண சக்திக் குறைபாட்டை சரி செய்வதைப் பற்றி விளக்குபவையே.சீரண சக்தி குறைபாடு சரியானால் அனைத்து வியாதிகளும் சரியாகும்.ஏனெனில் எல்லா வியாதிகளின் ஆரம்பமே சீரண சக்திக் குறைபாடே!!!!!
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்.

 34. r.vadivel says:

  அய்யா வணக்கம் எனக்கு தலை முடி அதிகமா கொட்டுகிறது
  இதற்க்கு ஒரு வலி சொல்லுங்க

  வடிவேல்
  மதுரை.

  • machamuni says:

   அன்புள்ள திரு ஆர் .வடிவேல் அவர்களே,
   கருத்துரைக்கு மிக்க நன்றி,
   தலைமுடி நன்கு வளரத்தான் முன்னரே பதிவு எழுதி உள்ளோமே!!!!கீழக்கண்ட இணைப்பை பாருங்கள்.
   http://machamuni.com/?p=632
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்.

 35. balaji says:

  அய்யா மிக்க நன்றி இனி நான் தமிழ் மொழியில் பதிவு செய்கிறேன் நீங்கள் சொன்ன மன்றி machamunimooligaiyagam@gmail.com
  இந்த இணையதளிதில் என் பதிவை கேட்டேன் இதுவரை எந்த பதிலும் இல்லை நீங்கள் தான் தையவு செய்து ஒரு பதில் சொல்லவும் இந்த லேகியம் வாங்க ”தாது விருத்தி லேகியம்”

  • machamuni says:

   அன்புள்ள திரு பாலாஜி அவர்களே ,
   உங்களது கருத்துரைக்கு நன்றி.
   அது இணைய தளம் அல்ல . மின்ன்ஞ்சல் முகவரி ஆகும்.பதில் வரும்.
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 36. சந்திரன் says:

  அய்யா ,கண் குழி கருவளையம் நீக்கும் மூலிகை பொடிகள் குறித்து கூரவும்

  • machamuni says:

   அன்புள்ள திரு சந்திரன் அவர்களே,
   உங்களது கருத்துரைக்கு நன்றி,
   உங்களுக்குள்ள பிரச்சினைகளையும் , தேவையான மருந்துகளையும் திரு அமீர் சுல்தானிடம் வினவுங்கள்!அவர் தீர்வு தருவார்.தேவையான மருந்துகளையும் ஆலோசனைகளையும் தருவார்.திரு அமீர் சுல்தான் அவர்கள் ,தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர்,
   மச்சமுனி மூலிகையகம்( MACHAMUNI HERBALS )
   S.S.I NO: 330021189121
   எண்.1/17,5வது தெரு, நாராயணசாமி தோட்டம், சின்னகொடுங்கையூர், சென்னை-118.
   Cell: 9597239953
   மின் அஞ்சல் முகவரி.
   machamunimooligaiyagam@gmail.com
   இப்படிக்கு
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

Leave a Reply to machamuni Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

4 + 5 =