சதுரகிரி ஹெர்பல்ஸ் திரு கண்ணன் அவர்கள் தயாரிப்புக்கள் (பாகம் 3) தாது விருத்தி லேகியம்

January 17, 2013 by: machamuni

சதுரகிரி ஹெர்பல்ஸ் திரு கண்ணன் அவர்கள் தயாரிப்புக்கள் (பாகம் 2) தாது விருத்தி லேகியம் ஐ படித்துவிட்டு இந்த தொடரை படித்தால்தான் தொடர்பு விட்டுவிடாமல் புரியும்.

சதுரகிரி ஹெர்பல்ஸ் திரு கண்ணன் அவர்களின் மற்றொரு தயாரிப்பை உங்களுக்கு அறிமுகப்படுத்துவதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம்.

இந்த  சதுரகிரி ஹெர்பல்ஸ் திரு கண்ணன் அவர்களின் தாது விருத்தி லேகியம் ஆண்மையை விருத்தி செய்வதில் மிக வல்லமை மிக்கது.இது வெறும் ஆண்மை விருத்தி லேகியம் மட்டுமல்ல. நம் உடலில் உள்ள சப்த தாதுக்கள் நல்ல நிலையில் இருந்தால்தான் உடலின் ஆரோக்கியத்தன்மை நிலைநாட்டப்படும்.

சப்த தாதுக்கள் என்னும் ஏழு வகைத் தாதுக்களைப் பற்றி தெளிவாகத் தெரிந்து தெளியுங்கள்.இவை சரியாக இருந்தால் உங்கள் உடலில் நோய்கள் என்பதே இல்லை.மது மேகம் எனபது சப்த தாதுக்களின் குறைவால்தான் நேருகிறது .அதாவது சர்க்கரை வியாதியால் தாதுக்கள் நலிந்து, உடலுறவு என்பது வெறும் மனதின் ஆசையுடன் நின்று விடுகிறது,உடல் தன் இயலாமையால் ஒத்துழைப்பதில்லை.

இந்த உடல் உறவில் இயலாமை காரணமாக பல குடும்பங்கள் விவாக ரத்து வரை செல்லுகின்றன.அதை இந்த தாது விருத்தி லேகியம் 48 நாட்களில் சரி செய்யும். பல கூடாத பழக்க வழக்கங்களால்  (கைப்பழக்கம் , அதீத உடலுறவு , பர ஸ்திரீகளுடன்  அதீத பழக்கத்தினால் வாங்கிய வெட்டையினால் ஏற்பட்ட உடல் பாதிப்பு )  உடல் ரீதியாக பாதிப்புற்றவர்களையும் இது விரைவில் குணமாக்கும்.

சப்த தாதுக்கள் ஏழு வகைத் தாதுக்கள்

1. சாரம்: சுரப்பிகள் சுரக்கும் நீர்கள். இந் நிண நீர்கள் உடலையும் மனதையும் செம்மையாக வைத்திருக்க சுரப்பது.
2. இரத்தம்: உடல்முழுவதும் சத்துக்களையும் , பிராண வாயுவை எடுத்துச் சென்று வழங்கி, கழிவுகளை திரும்ப எடுத்து வருவது. அறிவு, வன்மை, ஒலி, ஒளி இவற்றை உடலில் நிலைத்திருக்க செய்வது.
3. தசை: உடலுக்கு உருவத்தையும்,அழகையும் , சரியான வடிவையும் , உடலியக்கத்திற்கும் எலும்புக்கும் ஆதரவாகவும் உள்ளது.
4.கொழுப்பு:உறுப்புக்களுக்கு சக்தியை வழங்கும் மிகு சேமிப்பு கிடங்கு இது,ஒரு வாரம் வரை உணவு வழங்கப்படாமல் இருந்தாலும் தான் கரைந்து  உடலை நன்றாக அப்படியே வாடாமல் பார்த்துக் கொள்ளும். ஒவ்வொரு உறுப்பும் தத்தம் வேலையை செய்யும்பொழுது சுலபமாக இயங்க அவற்றிற்கு நெய்ப்பசை ஊட்டி உதவுகின்றது.
5. எலும்பு: உடலை கட்டாக நிறுத்தி வைப்பது இந்த  எலும்புச் சட்டகம் தான் மென்மையான உறுப்புகளை பாதுகாத்தல் உடல் அசைவிற்கு அடிப்படையாக விளங்குதல் முதலிய செய்கைகளை செய்வது.
6. மஜ்ஜை: எலும்புக்குள் நிறைந்த இவைகள் இரத்தச் சிவப்பணுக்களை உற்பத்தி செய்வது , மற்றும் எலும்பை வளப்படுத்துவது ,அதன் மூலம் உடலை பாதுகாக்க செய்வது.
7. சுக்கிலம்/சுரோணிதம்: கருத் தோற்றத்திற்கு முக்கியமாக இருந்து உடலுக்கு வன்மையை தருவது.ஆண்களுக்கு விந்தணு எண்ணிக்கையைத் தீர்மானிப்பதும் , பெண்களுக்கு கரு முட்டையைத் தோற்றுவித்தலைத் தீர்மானிப்பதும் இந்தத் தாதுவே. ஆண்களுக்கு ஆண்மையையும் , பெண்களுக்கு பெண்மைத் தன்மையையும் தருவது இதுவே.
ஆண்பாகத்தில் கலை 3 ஆணிடத்தில் ஆகாசம், பிரகிருதி, ஆன்மவுணர்ச்சி – இம்மூன்றும் ஒருமித்துச் சுக்கிலமாய், அறிவு சத்தி வித்து என்னும் பாகத்தோடு தடித்து ஓர் மணியாம்,பெண்பாகத்தில் கலை 4 , பெண்ணிடத்தில் பிருதிவி, அப்பு, தேயு, வாயு என்னும் சூரியன், சந்திரன், அக்கினி, இயமன் என்னும் உயிர் ஆக நான்கும் சேர்ந்து சுரோணித மாயிற்று., ஆகக் கலை 7. ஒவ்வொரு கலையில் ஒவ்வொரு தாது அணுவாய்ச் சேர்ந்து 7-வது கலையில் கரு சம்பூரணமாய்ச் சப்த தாதுக்களும் கூடியபின் பிண்டமாகும் அதாவது உடலாகும்.
சூரியன் தலை, சந்திரன் நுரையீரல்& சிறு நீரகம் , செவ்வாய் எலும்பு மஜ்ஜை & ரத்தம், குரு என்ற வியாழன் என்ற தேவ குரு இதயம் &வயிறு, சனி  நரம்புகள்,புதன் அண்டம்& தோல் ,சுக்கிரன் என்ற அசுர குரு சஞ்சீவினி வித்தை {இறந்தவரை உயிர்ப்பிக்கும் வித்தை}தெரிந்த அசுர குரு  இனப் பெருக்க உறுப்புகளைப் பார்த்துக் கொள்ளுகிறார்.எனெனில் இறக்கும் பல உயிர்களுக்கு உடலை வேறொரு மனித உடலில் உருவாக்கி உயிர் பிறக்கக் காரணமாகிறார் அல்லவா????
நவ கிரகங்களில் ராகுவும் , கேதுவும் நிழல்களே , அவை தவிர மற்ற ஏழு கிரகங்களும்தான் சப்த தாதுக்களுடன் தொடர்புடையவை . இப்படி சப்த தாதுக்களும் சப்த கிரகங்களுடன் தொடர்பு கொண்டவை யாதலால்  இந்த சப்த தாதுக்களை சரி செய்தால் சப்த கிரகங்களும் சரியாகும். இவை ஒவ்வொன்றிற்கும் உள்ள மூலிகைகளைச் சேர்ப்பதால் உடலும் மனமும் , வாழ்வும் சரியாகும்.நமது ஜாதகம் , நமக்குச் சாதகமாகத் திரும்பும்.
உடல் ஆரோக்கியத்திற்கு உதவும் இந்த தாது விருத்தி லேகியத்தில் என்னென்ன மருந்துப் பொருட்கள் கலந்து இருக்கின்றன அவை உடலில் என்ன நலம் புரிகின்றன என்ற விவரத்தை கீழே கொடுத்துள்ளேன்.
1)பூனைக்காலி விதை:- இதை சப்த தாதுக்களையும் வளப்படுத்த உதவும் எல்லா லேகியங்களிலும் சேர்க்கும் அளவு வன்மை வாய்ந்தது.குறி விரைப்பில்லாமல் இருக்கும் நிலையைச் சரி செய்யும்.இரத்தத்தை பெருக்கி விந்தணு உற்பத்தியைத் தூண்டும்.உடலுறவில் தளரா நிலையைத் தரக் கூடையது .சாதாரணமாக ஏற்படும் உடற் தளர்ச்சியையும் போக்கி உடலை வளம் பெறச் செய்வது.கருமை நிற பூனைக்காலி விதையினால், கற்றாழை நாற்றமும் , இரத்தக் கிரகணியும் , கரப்பானும் நீங்கும், தாது புஷ்டியுண்டாகும்.
2)அமுக்கராக் கிழங்கு:- இது அசுவகந்தி என்று வடமொழியில் அழைக்கப்படுகிறது. அசுவம் என்றால் குதிரை . குதிரை போல் வலுவும் , அழகான சதையமைப்பும் , வலுவான உடலையும் , நரம்புகளுக்கு ஊக்கமும் , நரம்புகளை முறுக்கேற்றவும் உதவுகிறது . உடலுறவில் தளரா நிலையைத் தரக் கூடையது .சாதாரணமாக ஏற்படும் உடற் தளர்ச்சியையும் போக்கி உடலை வளம் பெறச் செய்வது.
இதை சீனர்கள் இந்திய ஜின்செங் என்றழைக்கும் அளவிற்கு மிக , மிக வலுவைக் கொடுக்கும். விளையாட்டு வீரர்களுக்கு சதை உடைவு , சவ்வுக் கிழிவு நேரிடும் போது இதைக் கொடுக்க உடனே அவை சரி செய்வதால்தான் இதை குணமனைத்தும் கொடுக்கும் அமுக்கினாங்கிழங்கென்றும் அழைக்கிறார்கள்.சிறிது துவர்ப்புச் சுவையுள்ள அசுவகந்திக் கிழங்கான அமுக்கராக் கிழங்கினால் ஷயம் , வாதசூலை ,  வாத கரப்பான் , பாண்டு ,சுரம் , வீக்கம் , துர்நீர் , மேக அழலை , வெட்டை , கட்டிகள் , சலதோஷம் இவைகள் போகும். வியதாபேதகாரி, பித்தகாரி,உதரவாதஹரகாரி , ஜடராக்கினிவர்த்தினி , காமவிர்த்தினி ,சமன காரி.மாதர்மேல் இச்சையும் பசியும் உண்டாகும்.
3)பூமிச்சக்கரைக் கிழங்கு:- உடலுக்கு வலுவான வலுவைத் தந்து இரத்தத்தை பெருக்கி விந்தணு உற்பத்தியைத் தூண்டும். உடலுறவில் தளரா நிலையைத் தரக் கூடையது .சாதாரணமாக ஏற்படும் உடற் தளர்ச்சியையும் போக்கி உடலை வளம் பெறச் செய்வது.மேலும் இதனால் பிரமேகம்,அதி உஷ்ணம் , வெள்ளை வீழல் , சுரம்  , மூலம் இவைகள் போகும்  .தேகம் பூரிக்கும்.
4) திரிகடுகு:-திரிகடுகுச் சூரணம் என்பது  சுக்கு , மிளகு , திப்பிலி மூன்றும் சேர்ந்த அற்புதக் கலவை .உடலுக்கு நல்ல பசியைக் கொடுத்து உடலை உரமாக்கும்.
5)திரிபலாதி:-திரிபலாதிச் சூரணம் என்பது  கடுக்காய் ,நெல்லி வற்றல்  , தான்றிக்காய்  மூன்றும் சேர்ந்த அற்புதக் கலவை .உடலுக்கு நல்ல உரத்தைக் கொடுத்து உடலை இறுக்கி இரும்பு போலாக்கும்.
6)விஷ்ணுகிராந்தி:-
விஷ்ணு கிராந்தியின் பெருமை பற்றி நாம் ஏற்கெனவே எழுதியுள்ள நமது வலைப்பூ  இணைப்பு  இதோ கீழே!இதனால் தேகத்தில் உள்ள பல பிணிகள் போகும்.உஷ்ண பேதி , சீத பேதி இவைகள் நீங்கும்.
http://machamuni.blogspot.in/2011/07/39_31.html
7)நிலப்பனங்கிழங்கு:-
நிலப் பனங்கிழங்கு உடலுக்கு வலுவான வலுவைத் தந்து இரத்தத்தை பெருக்கி விந்தணு உற்பத்தியைத் தூண்டும். உடலுறவில் தளரா நிலையைத் தரக் கூடையது .சாதாரணமாக ஏற்படும் உடற் தளர்ச்சியையும் போக்கி உடலை வளம் பெறச் செய்வது.மேலும் இதனால் பிரமேகம்,அதி உஷ்ணம் , வெள்ளை வீழல் , சுரம்  , மூலம் இவைகள் போகும் .
8)தண்ணீர் விட்டான் கிழங்கு:-
சதாவேரிக் கிழங்கு என்றழைக்கப்படும் தண்ணீர் விட்டான் கிழங்கு உடலுக்கு வலுவான வலுவைத் தந்து இரத்தத்தை பெருக்கி விந்தணு உற்பத்தியைத் தூண்டும். உடலுறவில் தளரா நிலையைத் தரக் கூடையது .சாதாரணமாக ஏற்படும் உடற் தளர்ச்சியையும் போக்கி உடலை வளம் பெறச் செய்வது.மேலும் இதனால் பிரமேகம்,அதி உஷ்ணம் , வெள்ளை வீழல் , சுரம்  , மூலம் இவைகள் போகும் .இளமையைத் தக்க வைக்கும் .தேகம் பூரிக்கும்.
9) ஒரிதழ்த்தாமரை:-
ஓரிதழ்த் தாமரை சுக்கிலத்தையும் , அழகையும் உண்ணாக்கும். மேக ரோகங்களையும் , கிரகணியையும் நீக்கும்.காமவிர்த்தினி , மூத்திரவர்த்தனகாரி .இதைத் தினம் உண்ண வெள்ளை , வெட்டை , நீர்ச்சுருக்கு , நீரெரிச்சல் முதலிய மேக சம்பந்தமான பிணிகள் நீங்கும். மோரில் கலக்கி உண்ண கிரகணி முதலிய நோய்கள் தீரும்.
10)நில ஆவாரை:-
பற்பல மூல வாயுக்கள் ,சுரம் , சீழ்ச்சிரங்குகள் , வயிற்று வலி , வயிற்றை உப்பச் செய்கின்ற மலக்கட்டை நீக்கும். இதனால் புரஸ்த கோளம் (  PROSTATE GLAND ENLARGEMENT )என்பதிலுண்டாகும் வீக்கம் வற்றும்.புரஸ்த கோளம் என்பது ஆண்குறியின் அஸ்திவாரம் போன்றது .இந்த சுரப்பியின் வழியாகத்தான் சிறு நீர்ப்பாதையும் , விந்து வெளியேற்றும் பாதையும் செல்கின்றன .  சிறுநீர் வெளியேற்றும் போது விந்து வரும் பாதையை மூடி வைக்கும் .அதே போல் விந்து வெளியேறும் போது சிறு நீர்ப்பாதையை மூடி வைக்கும். வயதாவதின் காரணமாக இந்தபுரஸ்த கோளம் என்பதிலுண்டாகும் வீக்கம்(  PROSTATE GLAND ENLARGEMENT ) காரணமாக சிறு நீர் வெளியாகும் பாதை நிரந்தரமாக அடைபடுவதால் கீழ்க்கண்ட பல துயர் உண்டாகும் .
Cross-section diagram of the prostate and nearby organs
Prostate gland enlargement is a common condition as men get older. Also called benign prostatic hyperplasia (BPH) and prostatic hypertrophy, prostate gland enlargement can cause bothersome urinary symptoms. Untreated prostate gland enlargement can block the flow of urine out of the bladder and can cause bladder, urinary tract or kidney problems.

Prostate gland enlargement varies in severity among men and tends to gradually worsen over time. Prostate gland enlargement symptoms include:

 • Weak urine stream
 • Difficulty starting urination
 • Stopping and starting while urinating
 • Dribbling at the end of urination
 • Frequent or urgent need to urinate
 • Increased frequency of urination at night (nocturia)
 • Straining while urinating
 • Not being able to completely empty the bladder
 • Urinary tract infection
 • Formation of stones in the bladder
 • Reduced kidney function
இதையும் பாருங்கள்.
http://en.wikipedia.org/wiki/Prostate
அதை இந்த தாது புஷ்டி லேகியத்தில் சேர்க்கப்படும் மருந்துகள்(நெருஞ்சில் , நீர்முள்ளி விதை , நிலாவரை , சதாவரிக் கிழங்கு ) நிரந்தரமாகத் தீர்க்கும்.
11)நெருஞ்சில் விதைகள்:-
நல்ல நெருஞ்சில் விதைக்கு மூத்திரக்கட்டு , சதையடைப்பு , கல்லடைப்பு முதலியவைகள் நீங்கும்.பொதுவாக நெருஞ்சில் விதைகள் சிறு நீரைப் பெருக்கும் .சிறு நீரைப் பெருக்கும் தன்மை உள்ள சித்த மருந்துகள் ஆண்மைத் தன்மையை பெருக்கும் . ஆனால் சிறு நீரைப் பெருக்கும் தன்மை உள்ள அலோபதி  மருந்துகள் ஆண்மைத் தன்மையை கெடுத்து அறவே இல்லாமலாக்கும்.
ஆண்குறி விரைப்புத் தன்மை  குறைபாடு பற்றி பலருக்கு அதிகம் தெரிவதில்லை. அந்த சந்தேகங்களைத் தீர்க்க கீழே உள்ள ஒளிப்பட தொடர் காட்சியை  ( SLIDE SHOW ) கீழே உள்ள இணைப்பை சொடுக்கி தெரிந்து கொள்ளுங்கள். http://www.emedicinehealth.com/slideshow_a_visual_guide_to_erectile_dysfunction/article_em.htm

Diagnosing ED(ERECTILE DYSFUNCTION): Lab Tests

Several lab tests can help diagnose male sexual problems. Measuring testosterone levels can determine whether there is a hormonal imbalance, which is often linked to decreased desire. Blood cell counts, cholesterol levels, and liver function tests can reveal medical conditions that may account for ED.
12) நீர்முள்ளி விதை:-
பொதுவாக நீர்முள்ளி விதைகள் சிறு நீரைப் பெருக்கும்.சப்த தாதுக்களையும் போஷிக்கும் .சிறு நீரைப் பெருக்கும் தன்மை உள்ள சித்த மருந்துகள் ஆண்மைத் தன்மையை பெருக்கும் .நீர்முள்ளி விதைக்கு பிரமேகம் , அதிசாரம் , சுபசோபை , ஆயாசம் இவைகள் நீங்கும்.சுக்கிலமும் சப்த தாதுக்களையும் விருத்தியாகும். அந்தர்ஸ்நிக்தகாரி , மூத்திரவர்த்தனகாரி , காம விர்த்தினி.
இந்த நீர்முள்ளி விதையின் சிறப்பை உணர்த்தும் இரு காணொளிக்காட்சிகளைக் கொடுத்துள்ளேன். பார்த்து அதன் சிறப்பை உணர்ந்து பயன் பெறுங்கள். இதை பல சித்த வைத்தியர்கள் டிவியில் செய்து காட்டி இருப்பதைப் பார்த்திருப்பீர்கள் .ஆனால் இதுதான் அந்த மூலிகை என்று கூற மாட்டார்கள். இதோ அதை வெளிப்படையாக நாம் காட்டியுள்ளோம் .
[tube]http://www.youtube.com/watch?v=eRwbR76zfXk[/tube]
[tube]http://www.youtube.com/watch?v=xd95Cfo5Mv8[/tube]

பதிவு பெரிதாகப் போவதால் இரண்டு பதிவுகளாக அடுத்தடுத்து வெளியிடுகிறோம்.இந்தப் பதிவின் தொடர்ச்சியை சதுரகிரி ஹெர்பல்ஸ்(திரு கண்ணன் அவர்கள்) தயாரிப்புக்கள் (பாகம் 4) ல் பார்க்கலாம்.

54 responses to “சதுரகிரி ஹெர்பல்ஸ் திரு கண்ணன் அவர்கள் தயாரிப்புக்கள் (பாகம் 3) தாது விருத்தி லேகியம்”

 1. ஸஹதுல்லாஹ் says:

  அண்ணன் அவர்களுக்கு,
  அருமையான பதிவு. …….

  தங்களன்புள்ள,
  ஸஹதுல்லாஹ்

  • machamuni says:

   அன்பு மிக்க திரு ஸஹதுல்லாஹ் அவர்களே,
   கருத்துரைக்கு மிக்க நன்றி!!!!
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 2. ராஜேஷ் கண்ணா says:

  மதிப்பிற்குரிய அய்யா வணக்கம்,

  அள்ள அள்ள குறையாத அமுத கடல் தாங்கள்.

  அடியேன்
  ராஜேஷ் கண்ணா

  • machamuni says:

   அன்பு மிக்க திரு ராஜேஷ் கண்ணா அவர்களே,
   கருத்துரைக்கு மிக்க நன்றி!!!!
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 3. s.venkat says:

  அருமையான, மிகவும் அவசியாமான பதிவு.இன்றைய கால கட்டத்தில் நிறைய பேருக்கு உதவக்கூடிய பதிவு.

  மற்றும் சர்க்கரை வியாதியை குணமாக்கலாம் – பாகம் 4 ஐ ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.

  மிகவும் நன்றி. நன்றி. நன்றி.

  அன்புடன்
  எஸ்.வெங்கட்

  • machamuni says:

   அன்பு மிக்க திரு எஸ்.வெங்கட் அவர்களே,
   கருத்துரைக்கு மிக்க நன்றி!!!!
   இன்னும் இந்தப் பதிவின் பிற்பகுதியே வெளியாகவில்லை .அது வெளியாகி முடிந்தவுடன் அடுத்தடுத்து சில பதிவுகள் ஏற்கெனவே வரிசையில் காத்திருக்கின்றன.அதன் பின்னர் சர்க்கரை வியாதியை குணமாக்கலாம் – பாகம் 4 வெளியாகும்.
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 4. sridhar says:

  அன்புமிக்க அய்யா,

  சப்த தாதுக்களை பற்றி கேள்விபட்டுள்ளேன் இப்பொழுதுதான் இதை பற்றிய விளக்கத்தை பார்க்கிறேன். மிக அருமையான பதிவு அய்யா. சப்த தாதுக்கள் சரியாக இருந்தால் வாழ்வு சரியாகும் என்ற கருத்து மிக அருமை. எங்களுக்கு அற்புதமான் பதிவுகளை கொடுத்துகொண்டிருக்கும் உங்களுக்கு எல்லாம் வல்ல இறைவன் மென்மேலும் சிறப்பை தர வேண்டிகொள்கிறேன். அடுத்த பாகத்திற்காக காத்திருக்கிறேன் அய்யா.

  • machamuni says:

   அன்பு மிக்க திரு ஸ்ரீதர் அவர்களே,
   கருத்துரைக்கு மிக்க நன்றி!!!!
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 5. k.Mohanraj Pammal+ says:

  Sir your explanation and demonstration of all kind of herbels are really wonderful and also very effective to the human beings those who are consume this. I am really attract your straight forward talks and helping tendency to sufferers as mankind is highly appreciated. For your direction I will contact Mr.saduragiri herbels kannan to order some remedy herbels medicines for the past 15days through my cellphone till on date I am unable to receive the same from him,if he is not intrested in his business I hope he can directly says it is not possible to supply at now instead of saying unusual reasons,any way I tried my level best to get back my ordered medicine after this comments please. I will expect somany articles about our Indian medicines in your blogspot highly welcomed by me as well as followers please. tks. regds.

  • machamuni says:

   அன்பு மிக்க திரு கே மோகன்ராஜ் , பம்மல் அவர்களே,
   கருத்துரைக்கு மிக்க நன்றி!!!!
   சதுரகிரி ஹெர்பல்ஸ் திரு கண்ணன் தற்போது வீடு மற்றும் அவரது மருந்து தயாரிப்புச் சாலை போன்றவற்றை இடம் மாற்றிக் கொண்டிருக்கிறார். எனவே இப்போது வரை மருந்துகள் தரும்படி கேட்டிருப்போர் அனைவரும் பொறுத்தருள்க.சிறப்பான ஒரு மருந்துக்கு காத்திருத்தல் தவறில்லை.இன்னும் ஒரு மாதத்திற்குள் அனைவருக்கும் மருந்துகள் வந்து சேர்ந்துவிடும்.இனி யாரும் அவரது வங்கிக் கணக்கில் பணம் போட வேண்டாம்.இனிமேல் அனைவரும் உங்கள் முகவரியுடன் வெறும் மருந்துகள் வேண்டி மட்டும் அவர் அலை பேசி எண்ணுக்கு குறுந்தகவல் அனுப்பினால் போதும் .உங்களுக்கு விபிபி பார்சலில் மருந்துகள் வந்து சேரும்போது பணம் செலுத்தினால் போதும்.எம்மால் ஏற்பட்ட இந்த இன்னல் இனி இருக்காது .
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 6. Raja says:

  ஐயா,
  திரு கண்ணன் அவர்களின், இந்த லேகியத்தை எவ்வாறு/எவ்வளவு உண்பது. உணவுக்கு முன்/பின்,காலை/மாலை போன்ற விவரங்கள் மிக்க உதவியாக இருக்கும்

  • machamuni says:

   அன்பு மிக்க திரு ராஜா அவர்களே,
   கருத்துரைக்கு மிக்க நன்றி!!!!
   இன்னும் இந்தப் பதிவின் பிற்பகுதியே வெளியாகவில்லை .அது வெளியாகும்போது உங்கள் கேள்விகளுக்கு பதில் அதில் இருக்கும் .பின் சந்தேகங்களைக் கேளுங்கள்.
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 7. ஆறுமுகம் says:

  வணக்கம் ஐயா. நல்ல அருமையான பதிவு.மேலும் உங்கள் நற்பணி சிறக்க வாழ்த்துக்கள்.

  • machamuni says:

   அன்பு மிக்க திரு ஆறுமுகம் அவர்களே,
   கருத்துரைக்கு மிக்க நன்றி!!!!
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 8. A.D.HEMANTH KUMAR says:

  திரு.சாமீ அழகப்பன், அவர்களுக்கு வணக்கம்,
  சதுரகிரி ஹெர்பல்ஸ் திரு கண்ணன் அவர்களின் பேனா மருந்து அடிபட்டவர்களுக்கு மிக விரைவாக பயன் அளிக்கிறது. நகசுத்தி போன்றவற்றுக்கும் சிறந்த குணமளிக்கிறது.
  நன்றி

  • machamuni says:

   அன்பு மிக்க திரு ஏ.டி.ஹேமந்த் குமார் அவர்களே,
   கருத்துரைக்கு மிக்க நன்றி!!!!
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 9. viraj says:

  Anna,

  Migha arumai.
  Ungal pani endrum thodara kadavul arul puriattum.

  Anna,

  Vadha odambhu(body) ellaikka enna seyya vendum.
  Pitha odambhu(body) ellaikka enna seyya vendum.

  Anbhudan,
  viraj

  • machamuni says:

   அன்பு மிக்க திரு விராஜ் அவர்களே,
   கருத்துரைக்கு மிக்க நன்றி!!!!
   நீங்கள் வெறும் தெரிந்து கொள்வதற்காக கேள்வி கேட்க வேண்டும் முகமாக என்று கேள்விகளாகக் கேட்டால் எம்மால் பதில் சொல்ல இயலாது . எமது குறைவான அதிக மதிப்புடைய எமது நேரத்தை தயவு செய்து வீணடிக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறோம்.உண்மையில் யாருக்கு என்ன பிரச்சினை .அது உண்மையில் வாத உடம்பு , பித்த உடம்பு என்பதை எப்படி கண்டு கொண்டீர்கள் .சித்த மருத்துவத்தில் உங்களுக்கு ஏதேனும் பரிச்சயமுண்டா???? இது இப்போது உங்களுக்கு அவசியமா???? என்று யோசித்து பின் கேள்விகளை கேளுங்கள். உங்கள் கருத்துரைக்கு வெகுவாக யோசித்தே ஒரு நாள் கழித்தே பதில் தருகிறேன்.
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

   • viraj says:

    Anna,

    I fully understand your concern. I am reading siddha notes, where ever available, as my personal interest. After retirement i want to do seva to society to live in Sithar way (vazhi). When i meet you personally, i want to discuss more about this to take your guidance. please see the notes below.

    சித்தர்கள் கண்ட சிறுநீர்ப் பரிசோதனை முறை :
    காலைச் சிறுநீரை ஒரு கண்ணாடிக் கிளாசில் எடுத்து அதில் இரண்டு சொட்டு நல்லெண்ணையை விட்டுவிட்டு உற்றுக்கவனியுங்கள். எண்ணெ
    ய்த்துளி பாம்புபோல ளைந்து காணப்பட்டால் உங்கள் உடலில் வாதம் மிகுந்துள்ளது. மோதிரம் போல வட்டமாக இருந்தால் உங்களுக்கு பித்த நோய், முத்துப்போல நின்றால் உங்களுக்கு கப நோய், எண்ணெய்த்துளி வேகமாக பரவினால் நோய் விரைவில் குணமாகும். எண்ணெய்த்துளி அப்படியே இருந்தால் நோய் குணமாகாது. எண்ணெய்த்துளி சிதறினாலோ அமிழ்ந்துவிட்டாலோ நோயை குணப்படுத்த இயலாது.

    I tested this for my sister and small Mother. Accordingly requested your further advice for weight reduction. If i would have did any mistake in the process, please forgive me as Guru.

    Anbhudan,
    Viraj

    • machamuni says:

     அன்பு மிக்க திரு விராஜ் அவர்களே,
     கருத்துரைக்கு மிக்க நன்றி!!!!
     இது நோயறிதல் முறைகளில் கண்குறி , முகக்குறி , நகக்குறி , கண்குறி , நாடிப்பரிசோதனை , உடற்குறி, நாக்குக் குறி , நீர்க்குறி என்னும் பரிசோதனை முறைகளில் ஒன்று .இதனடிபடையில் உடல் வகைகளை பிரித்து வகைப்படுத்த முடியாது .முதலில் நீங்களாக சித்தா கற்றுக் கொள்ளுவதை விட்டுவிட்டு நல்ல பரம்பரை சித்த வைத்திய பரம்பரையில் வந்த குரு ஒருவரிடம் சித்த வைத்தியம் கற்க முயற்சி செய்வது நல்லது.நீங்களாகக் கற்றுக் கொள்ளும் முயற்சி என்பது சற்றே யோசிக்க வேண்டிய விடயம் . கொம்பரக்குச் சூரணத்திற்கு மலை போல் பருத்த சரீரமும் பனி போல் கரையும் என்பார்கள் .நீங்கள் இம்ப்காப்ஸ் ல் கொம்பரக்குச் சூரணம் அல்லது லாஷா சூரணம் என்ற ஒன்று கிடைக்கும்.அதை வாங்கி அதில் திரிகடிப் பிரமாணம் கருங்குருவைக் காடி நீரில் 48 நாட்கள் சாப்பிட நல்ல விளைவு கிடைக்கும்.இளைச்சவனுக்கு எள்ளைக் கொடு .கொழுத்தவனுக்கு கொள்ளைக் கொடு என்பார்கள் . கொள்ளுக் கஷாயம் நாற்பத்தெட்டு நாட்கள் காலை வெறும் வயிற்றில் 50 முதல் 100 மிலி வரை 48 நாட்கள் சாப்பிட கொழுத்த தேகம் மெலியும்.
     மிக்க நன்றி
     என்றென்றும் பேரன்பினால்
     சாமீ அழகப்பன்

 10. வாழ்த்துக்கள் ஐயா. உங்கள் பணி மென்மேலும் தொடரட்டும்.பாமரனுக்கும் புரியும் படி ஒளி பட காட்சியுடன் விளக்கியது அருமையிலும் அருமை.

  • machamuni says:

   அன்பு மிக்க திரு ஆறுமுகம் அவர்களே,
   கருத்துரைக்கு மிக்க நன்றி!!!!!!!
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 11. rajasekar says:

  அய்யா
  திரு கண்ணன் அவர்களுக்கு வேலை பளு அதிகமாக இருப்பதால், டெங்கு மருந்தின் செய்முறை வெளியிட்டது போல் , இந்த லேகியத்தின் செய்முறையும் எப்படி என்பதை விளக்கமாக வெளியிட்டால் இன்னும் அனைவரும் பயன் பெறுவார்கள்
  நன்றி
  ராஜசேகர்

  • machamuni says:

   அன்பு மிக்க திரு ராஜசேகர் அவர்களே,
   கருத்துரைக்கு மிக்க நன்றி!!!!
   லேகியத்தின் செய்முறை சாதாரணமான ஆட்களால் செய்ய இயலாத செய்முறை.அந்த லேகியம் பல நாட்களுக்கு கெட்டுப் போகாமல் இருக்க கைபடாமல் சேர்க்க வேண்டிய பொருட்களை சேர்த்து கிண்டி பதமுடன் எடுக்க வேண்டும்.எனவே இதை விளக்க இயலாது.நேரடியான பயிற்சி இருந்தாலே தவறுகள் நேரலாம்.எனவே பொறுமையுடன் காத்திருந்து பெற்றுக் கொள்ளுங்கள்.
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 12. ஜெகதீசன் says:

  மதிப்பும் அன்பும் மிக்க சாமீ அழகப்பன் அவர்களே பதிவின் பிற்பகுதிக்காக ஆவலுடன் காத்திருக்கிறோம் மற்றும் நான் உங்களுக்கு ஈமெயில் அனுப்பிய புத்தகங்கள் உங்களுக்கு கிடைத்தனவா என தெரியபடுத்தவும் மீதி புத்தகங்களையும் அதே முறையில் அனுப்பிவைக்கிறேன்
  மிக்க நன்றி
  ஜெகதீசன்

  • machamuni says:

   அன்பு மிக்க திரு ஜெகதீசன் அவர்களே,
   கருத்துரைக்கு மிக்க நன்றி!!!!
   சரீர சாகாக் கலை தத்துவம் என்ற புத்தகத்தில் 55 ஆம் பக்கத்திற்கு மேல் இல்லை.சித்தர் மெய்ப்பொருள் 32 பக்கத்துக்கு மேல்தான் இருக்கிறது .இரண்டு புத்தகங்களும் பாதி மட்டும்தான் வந்து சேர்ந்துள்ளது .மீதியும் இருந்தால்தான் முழுமையடையும்.
   பரவாயில்லை.
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 13. ஜெகதீசன் says:

  அன்பு மிக்க சாமீ அழகப்பன் அவர்களே

  நான் தங்களுக்கு ஜனவரி 13 ஆம் தேதி அனுப்பிய இமெயிலில் மொத்தம் 4 பாகங்கள் உள்ளன. சரி பார்த்து பதில் அளிக்கவும்

  மிக்க நன்றி
  ஜெகதீசன்

  • machamuni says:

   அன்பு மிக்க திரு ஜெகதீசன் அவர்களே,
   கருத்துரைக்கு மிக்க நன்றி!!!!
   மீதமுள்ள இரு பகுதிகளும் கிடைத்தது.
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 14. ஜெகதீசன் says:

  அன்பு மிக்க சாமீ அழகப்பன் அவர்களே

  நான் தங்களுக்கு ஜனவரி 13 ஆம் தேதி அனுப்பிய இமெயிலில் மொத்தம் 4 பாகங்கள் உள்ளன. சரி பார்த்து பதில் அளிக்கவும். அந்த மெயிலில் இருந்து ஜனவரி 19 ஆம் தேதி வரை தான் டவுன்லோட் செய்ய முடியும். அதனால் மறுபடியும் லிங்க் அனுப்பி வைக்கிறேன்

  மிக்க நன்றி
  ஜெகதீசன்

  • machamuni says:

   அன்பு மிக்க திரு ஜெகதீசன் அவர்களே,
   கருத்துரைக்கு மிக்க நன்றி!!!!
   நாம் திறந்து பார்க்க தாமதம் ஆனதனால் கிடைடைக்காமல் போன மீதமுள்ள இரு பகுதிகளும் கிடைத்தது.
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 15. viraj says:

  Anna,

  Please also tell about Thetraan Kottai, mentioned by Kumbhamuni Agathiyar peruman.

  Anbhudan,
  Viraj

  • machamuni says:

   அன்பு மிக்க திரு விராஜ் அவர்களே,
   கருத்துரைக்கு மிக்க நன்றி!!!!
   முதலில் நீங்களாக சித்தா கற்றுக் கொள்ளுவதை விட்டுவிட்டு நல்ல பரம்பரை சித்த வைத்திய பரம்பரையில் வந்த குரு ஒருவரிடம் சித்த வைத்தியம் கற்க முயற்சி செய்வது நல்லது.நீங்களாகக் கற்றுக் கொள்ளும் முயற்சி என்பது சற்றே யோசிக்க வேண்டிய விடயம் . குண பாடம் என்று ஒரு நூல் உள்ளது அதில் நீங்கள் கேட்கும் எல்லா பொருட்களின் விளக்கம் , குணங்கள் ,தீரும் வியாதிகள் எல்லாம் விளக்கமாக இருக்கிறது .மருந்துகளை தெரிந்து கொள்ளும் முன் சத்துரு ,மித்துரு இவை பற்றி எல்லாம் தெரியாமல் இவற்றை கையாண்டு விபரீதமான விளைவு ஏற்பட்டால் நாம் பொறுப்பில்லை.
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 16. உமா பூவண்ணன் says:

  ஐயா வணக்கம்,

  தங்கள் பதிவுகளால் பல விஷயங்கள் தெரிய பெற்றேன். மிக்க நன்றி.

  திரிகடுகு பொடியை என் மகளுக்கு(7 வயது)தினமும் இரவு ஒரு சிட்டிகை , ஒரு தேக்கரண்டி தேனுடன் சேர்த்து இரவு உணவுக்கு பின் கொடுக்கிறேன். நானும் என் கணவரும் சிறிது பொடியை கருப்பட்டி கலந்து சுடு தண்ணீரில் கொதிக்க வைத்து சாப்பிடுகிறோம்.

  இது என் தந்தையிடம் இருந்து பழகியது.

  இவ்வாறு இரவு உணவிற்கு பின் சாப்பிடுவது சரிதானா?

  • machamuni says:

   அன்புள்ள திரு உமா பூவண்ணன் அவர்களே ,
   கருத்துரைக்கு மிக்க நன்றி,
   திரிகடுகு பொடியைகருப்பட்டி கலந்து சுடு தண்ணீரில் கொதிக்க வைத்து சாப்பிடுவது மிக நல்லது.இதுவே சுக்குக் காப்பி போன்றது.நமது வாத,பித்த ,கபத்தை சமப்படுத்த வல்லது.இவ்வாறு இரவு உணவிற்கு பின் சாப்பிடுவது மிக,மிக நல்லது.///திரிகடுகு பொடியை என் மகளுக்கு(7 வயது)தினமும் இரவு ஒரு சிட்டிகை , ஒரு தேக்கரண்டி தேனுடன் சேர்த்து இரவு உணவுக்கு பின் கொடுக்கிறேன்./// என்று சொல்லியிருக்கிறீர்கள் இதுவும் நல்லதே.ஆனால் மல இறுக்கம் இருந்தால் இப்படித் தருவதை தவிர்த்து நீங்கள் சாப்பிடுவது போல சாப்பிடத் தருவது நலம்.
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 17. sampathkumar says:

  sir good morning 12 05 2013 06 36hrs
  i am reading your works daily if new or old (blog ) its interesting and informative for the first time am writing to this because its more informative for those who interested to know about siddhamedicne and siddhars works . I am trying to learn to write in tamil through NHM writer next time .
  Many thanks to you sir
  Sampathkumar S
  sampathkumarsres@ gmail.com

  • machamuni says:

   அன்புள்ள திரு சம்பத் குமார் அவர்களே,
   கருத்துரைக்கு மிக்க நன்றி,
   தமிழில் இனிமேல் எழுதுகிறேன் உறுதி மொழிக்கு நன்றி.
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 18. manikandan says:

  அய்யா
  வணக்கம் நான் தாது புஷ்டி லேகியத்தை கடந்த ஒரு வாரமாக சாப்பிட்டு வருகிறேன்.அருமை ! சில சமயங்களில் ஏற்படும் இனம் புரியாத பயம் இப்பொழுது இல்லை. மனம் அமைதியாக உள்ளது.இந்த மாதிரி நான் உணர்ந்ததில்லை!
  நல்ல பொருளை அறிமுகப்படுத்திய தங்களுக்கும் மற்றும் கண்ணன் அவர்களுக்கும் நன்றி ! – மணிகண்டன், மதுரை

  • machamuni says:

   அன்புள்ள திரு மணிகண்டன் அவர்களே ,
   உங்களது கருத்துரைக்கு நன்றி.
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 19. thambi sankar says:

  Sir

  am suffering from male ness less……….i need this herbs for improving my health

  how can i buy

  how much it cost?

  can you give full details

  mano

  • machamuni says:

   அன்புள்ள திரு தம்பி ச்ங்கர் அவர்களே ,
   உங்களது கருத்துரைக்கு நன்றி.
   உங்களுக்காகவும் , உங்களைப் போன்ற ஆண்மைக் குறைவு துயரில் கஷ்டப்படுபவர்களுக்காகவும் விரைவில் ஒரு கட்டுரை வெளியாக இருக்கிறது. அது உங்கள் துயரைத் தீர்க்கும்.
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 20. balaji says:

  hello sir ur medicines are great i want to buy ur medicine what is the procedure for buying it

  • machamuni says:

   அன்புள்ள திரு பாலாஜி அவர்களே ,
   உங்களது கருத்துரைக்கு நன்றி.
   முதலில் தமிழில் எழுதுங்கள். பொதுவாக தமிழில் கருத்துரை எழுதாத நபர்கள் மீது எமக்கு சரியான மரியாதை ஏற்படுவதில்லை.நமது மொழி தமிழ்.நமது தமிழ் நம் உயிர்.நாமே அதை உபயோகிக்காவிட்டால் தமிழ் எப்படி வாழும்.பழக்கத்தில் உள்ள மொழிதான் வாழும்.நாம் எழுதியதை தமிழை அறிந்ததால் நீங்கள் படித்தீர்கள். இனி ஆங்கிலத்தில் கருத்துரை எழுதினால் வெளியிட மாட்டோம் என மிகப் பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.“ தமிழ் எங்கள் உயிருக்கு நேர்” “ சாகும் வரை தமிழ் பயின்று சாக வேண்டும் .என் சாம்பலிலும் தமிழ் மணந்து வேக வேண்டும்” என்ற பாரதிதாசனின் வார்த்தைகள் எமக்கு உயிரான வார்த்தைகள்.எமது வலைத் தளத்தில் தமிழே முக்கியமானதாக இருக்க வேண்டும்.இருப்பினும் உங்கள் கேள்விக்கு பதில் கூறுகிறோம்.
   திரு சதுரகிரி ஹெர்பல்ஸ் கண்ணன் அவர்களுக்கும் ,எமக்கும் நேரமின்மை காரணமாக எமது வலைத்தள அன்பர்கள் சரியான நேரத்தில் பயனுற வேண்டும் என்பதற்காக இரு வலைத்தள அன்பர்களையே இதற்காக மருந்துகள் செய்ய பயிற்சி அளித்து , அவர்களையே ஒரு சேவை மனப்பான்மையுடன் தயாரித்தளிக்க தயார் செய்தோம் . அவர்களாக மனப்பூர்வமாக செய்து வருகிறார்கள். அந்தந்த பதிவுகளிலேயே அவர்கள் தொடர்பு எண்ணையும் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துள்ளோம் .ஆனால் பலர் இதே போன்று கேள்விகள் மட்டுமே கேட்டு வருகிறார்கள்.அவர்களுக்காக மீண்டும் தொடர்பு கொள்ளும் மின்னஞ்சல் முகவரியும் , தொடர்பு எண்ணையும் கீழே கொடுத்துள்ளோம்.
   இந்த மருந்துகளுக்கு நீங்கள் நாட வேண்டிய மின்னஞ்சல் முகவரி

   திரு அமீர் சுல்தான்.

   மின்னஞ்சல் :-

   machamunimooligaiyagam@gmail.com

   அலைபேசி எண் :- 9597239953
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 21. arun says:

  அய்யா எனக்கு தங்கள் வலை பதிவு மூலம் பல அரிய தகவல்களை அறிந்தேன். என்னுடைய பிரச்சனை என்னவென்றால் எனது ஆண் குறி சிறிதாக உள்ளது மேலும் ஒரு பக்க விதை பை நாளுக்கு நாள் சிறிதாகி ஒரு விதை பை மட்டுமே உள்ளது போல் இருக்கிறது தூக்கத்தில் மட்டுமே விந்து வெளிப்படுகிறது இதை ஆங்கிலத்தில் anejaculation என்பார்கள் எனக்கு தற்போது திருமணம் செய்ய வீட்டில் பெண் பார்த்து கொண்டுள்ளனர்
  எனக்கு ஏதேனும் மூலிகை தீர்வு உள்ளதா?

  • machamuni says:

   அன்புள்ள திரு அருண் அவர்களே ,
   உங்களது கருத்துரைக்கு நன்றி,
   உங்களைப் போன்றோர் பிரச்சினைக்காக,விளக்கமாகவும் அவை தீரவும் , மச்ச முனி மூலிகையகம்(பாகம் 9) திருவள்ளுவநாயனார் ஞான வெட்டியான் மதன காமேஸ்வரத் தைலம் , ஆண்மை வீரியம் உண்டாக்கி(பாகம் 1) பதிவு வெளியாக உள்ளது.உங்கள் பிரச்சினை இதனால் தீரும்.
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 22. jeganth says:

  I want to reduce my wait and pls tell any medicine

  • machamuni says:

   அன்புள்ள திரு ஜெகநாத் அவர்களே,
   கருத்துரைக்கு மிக்க நன்றி,
   முதலில் தமிழில் எழுதுங்கள். பொதுவாக தமிழில் கருத்துரை எழுதாத நபர்கள் மீது எமக்கு சரியான மரியாதை ஏற்படுவதில்லை.நமது மொழி தமிழ்.நமது தமிழ் நம் உயிர்.நாமே அதை உபயோகிக்காவிட்டால் தமிழ் எப்படி வாழும்.பழக்கத்தில் உள்ள மொழிதான் வாழும்.நாம் எழுதியதை தமிழை அறிந்ததால் நீங்கள் படித்தீர்கள். இனி ஆங்கிலத்தில் கருத்துரை எழுதினால் வெளியிட மாட்டோம் என மிகப் பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.“ தமிழ் எங்கள் உயிருக்கு நேர்” “ சாகும் வரை தமிழ் பயின்று சாக வேண்டும் .என் சாம்பலிலும் தமிழ் மணந்து வேக வேண்டும்” என்ற பாரதிதாசனின் வார்த்தைகள் எமக்கு உயிரான வார்த்தைகள்.எமது வலைத் தளத்தில் தமிழே முக்கியமானதாக இருக்க வேண்டும்.
   கொம்பரக்குச் சூரணத்திற்கு மலை போல் பருத்த சரீரமும் பனி போல் கரையும் என்பார்கள் .நீங்கள் இம்ப்காப்ஸ் ல் கொம்பரக்குச் சூரணம் அல்லது லாஷா சூரணம் என்ற ஒன்று கிடைக்கும்.அதை வாங்கி அதில் திரிகடிப் பிரமாணம் கருங்குருவைக் காடி நீரில் 48 நாட்கள் சாப்பிட நல்ல விளைவு கிடைக்கும்.இளைச்சவனுக்கு எள்ளைக் கொடு .கொழுத்தவனுக்கு கொள்ளைக் கொடு என்பார்கள் . கொள்ளுக் கஷாயம் நாற்பத்தெட்டு நாட்கள் காலை வெறும் வயிற்றில் 50 முதல் 100 மிலி வரை 48 நாட்கள் சாப்பிட கொழுத்த தேகம் மெலியும்.இளைச்சவனுக்கு எள்ளைக் கொடு , கொழுத்தவனுக்கு கொள்ளைக் கொடு என்ற பழமொழியிலிருந்து நீங்களே தெரிந்து கொள்ளலாம். காலை ஆகாரத்துக்கு பதிலாக கொள்ளை 20 கிராம் வறுத்து ஒரு லிட்டர் தண்ணீரில் போட்டு கால் லிட்டராக வற்ற வைத்து வெறும் வயிற்றில் சுவைத்து குடிக்க உடல் மெலியும்.
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 23. MADURAIVEERAN P says:

  Dear Sir i want தாது விருத்தி லேகியம் please give your conduct number and address

  • machamuni says:

   அன்புள்ள திரு MADURAIVEERAN P அவர்களே,
   உங்களது கருத்துரைக்கு நன்றி,
   இந்த கீழுள்ள இணைப்பை பார்வையிடுங்கள்
   http://machamuni.com/?p=2149
   சதுரகிரி ஹெர்பல்ஸ் திரு கண்ணன் அவர்கள் தற்போதைய புதுப்பிக்கப்பட்ட முகவரி மற்றும் அலைபேசி எண் மற்றும் அவரது தொலைபேசி எண்கள் ஆகியவற்றை கீழே காண்க.
   +919943205566
   +914563282222
   அவரது முகவரி:-
   திரு பெ.கண்ணன்,சதுரகிரி ஹெர்பல்ஸ்,
   2/159, மங்கம்மாள் கோவில் தெரு,கான்சாபுரம்,(P-O)
   திரு வில்லிபுத்தூர் தாலுகா,விருதுநகர் மாவட்டம்.
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 24. abdul jabbar says:

  when you upload 5th part of thathu viruthi legiyam

  • machamuni says:

   அன்புள்ள திரு abdul jabbar அவர்களே,
   உங்களது கருத்துரைக்கு நன்றி,
   விரைவில் வெளியிடப்படும் .
   இப்படிக்கு
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 25. Vijay says:

  Dear Sir,

  Pls let me know whether you have any clinic or Medical store in Coimbatore.

  • machamuni says:

   அன்புள்ள திரு சரவணன் அவர்களே,
   உங்களது கருத்துரைக்கு நன்றி,
   கோவையில் இல்லை .ஆனால் உங்களுக்கு தேவையான மருந்துப் பொருட்களை கீழ்க்கண்ட மின்னஞ்சல் முகவரிக்கோ அல்லது தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளுங்கள்.

   சதுரகிரி ஹெர்பல்ஸ் திரு கண்ணன் அவர்கள் தற்போதைய புதுப்பிக்கப்பட்ட முகவரி மற்றும் அலைபேசி எண் மற்றும் அவரது தொலைபேசி எண்கள் ஆகியவற்றை கீழே காண்க.
   +919943205566
   +914563282222
   +919750806594
   +919894912594
   அவரது முகவரி:-
   திரு பெ.கண்ணன்,
   சதுரகிரி ஹெர்பல்ஸ்,
   2/159, மங்கம்மாள் கோவில் தெரு,கான்சாபுரம்,(P-O)
   திரு வில்லிபுத்தூர் தாலுகா,விருதுநகர் மாவட்டம்.
   மின்னஞ்சல் முகவரி
   herbalkannan@gmail.com
   இப்படிக்கு
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 26. Maharajam says:

  விந்தணுக்கள் குறைவாகவும்(10 Million) மற்றும் நகரும் தன்மை குறைவாகவும் உள்ளது. இதனால் திருமணம் ஆகி 8 வருடங்கள் ஆகியும்
  குழந்தைப் பேறு இல்லை. இந்நிலை சரியாக என்ன செய்வது. எனக்கு தங்களின் உதவி தேவை

  :

  • machamuni says:

   அன்புள்ள திரு Maharajam அவர்களே,
   உங்களது கருத்துரைக்கு நன்றி,

   “ விந்தணுக்கள் குறைவாகவும்(10 Million) மற்றும் நகரும் தன்மை குறைவாகவும் உள்ளது. இதனால் திருமணம் ஆகி 8 வருடங்கள் ஆகியும்
   குழந்தைப் பேறு இல்லை. இந்நிலை சரியாக என்ன செய்வது. எனக்கு தங்களின் உதவி தேவை ”

   இதற்கு தாது ஜீவ விருத்திச் சூரணம் தீர்வு ஆகும்.கீழுள்ள இணைப்புகளைப் பாருங்கள் .

   http://machamuni.com/?p=3973

   http://machamuni.com/?p=3965

   உங்களுக்குள்ள பிரச்சினைகளையும் , தேவையான மருந்துகளையும் திரு அமீர் சுல்தானிடம் வினவுங்கள்!அவர் தீர்வு தருவார்.தேவையான மருந்துகளையும் ஆலோசனைகளையும் தருவார்.திரு அமீர் சுல்தான் அவர்கள் ,தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர்,
   மச்சமுனி மூலிகையகம்( MACHAMUNI HERBALS )
   S.S.I NO: 330021189121
   எண்.1/17,5வது தெரு, நாராயணசாமி தோட்டம், சின்னகொடுங்கையூர், சென்னை-118.
   Cell: 9597239953
   மின் அஞ்சல் முகவரி.
   machamunimooligaiyagam@gmail.com
   இப்படிக்கு
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

+ 56 = 58