சர்க்கரை வியாதியை குணமாக்கலாம்(பாகம் 3)

January 10, 2013 by: machamuni

சர்க்கரை வியாதியை குணமாக்கலாம்(பாகம் 2) ஐ படித்த பின்னர் இந்தப் பதிவைப் படிக்கவும்.என்றால்தான் தொடர்பு விட்டுப் போகாமல் புரியும்.

நீங்கள்பாட்டுக்கு நல்ல சர்க்கரை , கெட்ட சர்க்கரை என்று சொல்லுகிறீர்கள் , அலோபதி மருத்துவர் இவையெல்லாம் சுத்த ஹம்பக் என்று சொல்கிறார்கள் என்று நீங்கள் கேட்பது புரிகிறது .நல்ல சர்க்கரையின் செயல்பாடுகள் பற்றியும் , கெட்ட சர்க்கரையின் செயல்பாட்டைப் பற்றியும் இதோ கீழே காணொளிப்படக் காட்சியாகத்  தந்துள்ளேன்.கண்டு தெளியுங்கள்.

இந்த சோதனையில் உபயோகிக்கப்படும் கந்தகத்தின் தன்மைகளை முதலில் பார்க்கலாம்.

பொதுவாக கந்தகம் என்ற சல்பர் ( SULFUR  ) , சித்த மருத்துவத்தில் கெந்தி , என்றும் சுரோணிதம் என்றும் சக்தி என்றும் பொன்வர்ணகாரி என்றும் நாறும் பூபதி என்றும் காரிழைநாதம் என்றும் அழைக்கப்படும். பாஷாணங்களில்  கடும் விஷம் கொண்டது . கந்தகம்  எரியும் போது கந்தக டை ஆக்ஸைடை வெளியிடும் .அந்த கந்தக டை ஆக்ஸைடு தண்ணீரில் கரையும் போது கந்தக அமிலமாக மாறும். இது உயிரினங்களுக்கு பலத்த  சேதாரத்தை ஏற்படுத்த வல்லது. அமெரிக்காவில் பல இடங்களில் இந்த  சுற்றுச் சூழல் சீர்கேட்டினால் அமில மழை  பொழிகிறது.அப்படிப்பட்ட கந்தகத்தின் குணங்களை கீழ்க்கண்ட இணப்புகளில் பாருங்கள்.

http://www.lenntech.com/periodic/elements/s.htm

http://en.wikipedia.org/wiki/Sulfur

இநதக் கந்தகத்தை புகை போடும் போது உற்பத்தியாகும் கந்தக டை ஆக்ஸைடால் (SULFUR  DI OXIDE ) இந்தச் சோதனையில் உபயோகிக்கப்படும் சிவப்பு ரோஜப்பூ வெளுத்துப் போவதைப் பாருங்கள். மீண்டும் நாம் சாதாரணமாக எண்ணும் கருப்பட்டியை புகை போட்டு அதைல்  மீண்டும் ரோஜப்பூவைக் காட்ட , கந்தகத்தின் நஞ்சை கருப்பட்டி புகை முறித்து ,நஞ்சு நீங்கியதால்  ரோஜாப்பூ தன்னுடைய இயல்பான நிறத்தை அடைவதைப் பாருங்கள்.

 ரோஜாப் பூக்கள்

கந்தகம்

கருப்பட்டி

உடைத்த கருப்பட்டி

[tube]http://www.youtube.com/watch?v=G6cXNFM7ysU[/tube]

இந்த கந்தகத்தை வைத்து உற்பத்தி செய்யப்படும் என்டோ சல்பான் ( Endosulfan ) (வேதியியல் அணுப் பெயர் C9H6Cl6O3S ) (வேறு  வேதிப் பெயர்கள் Benzoepin, Endocel, Parrysulfan, Phaser, Thiodan, Thionex )பூச்சி மருந்தை கேரளாவில் உள்ள காசர் கோடு என்ற இடத்தில் தெளித்ததால் மனிதனுக்கு விளைந்த விளைவுகளை இந்த இணைப்புகளில் காணலாம்.

href=”http://en.wikipedia.org/wiki/Endosulfan”>http://en.wikipedia.org/wiki/Endosulfan

href=”http://arunobsarathy.blogspot.in/2011/04/endosulfan.html”>http://arunobsarathy.blogspot.in/2011/04/endosulfan.html

href=”http://www.patientsville.com/toxic/endosulfan.htm”>http://www.patientsville.com/toxic/endosulfan.htm

href=”http://newszone4u.blogspot.in/2010/09/hell-in-kerala-gods-own-country.html”>http://newszone4u.blogspot.in/2010/09/hell-in-kerala-gods-own-country.html

http://www.spiderkerala.net/resources/6940-Endosulfan-Effects-Endosulfan-Human-Health.aspx

href=”http://vakkomsen.blogspot.in/2011/04/effects-of-endosulfan-in-human-body.html”>http://vakkomsen.blogspot.in/2011/04/effects-of-endosulfan-in-human-body.html

href=”http://godsowncountrys.wordpress.com/endosulfan-tragedy-in-kerala/”>http://godsowncountrys.wordpress.com/endosulfan-tragedy-in-kerala/

இந்தத் தொடரில் ஏன் இந்த என்டோ சல்பான் நுழைகிறது என்று உங்களால் புரிந்து கொள்ள முடிகிறதா???நமது  நாளமில்லாச் சுரப்பிகளில் பல கேடுகளை விளைவிக்க வல்ல என்டோ சல்பான் {endocrine disruptor }நாளமில்லாச் சுரப்பியான கணையத்தின் மீதும் தன் தாக்குதல்களைத் தொடுக்கிறது .அதன் விளைவுதான் இத்தனை சர்க்கரை வியாதிக்காரர்கள் .அப்படிப்பட்ட  என்டோ சல்பான் நஞ்சையும் நீக்க வல்லது கருப்பட்டி என்றழைக்கப்படும் நம் பனங்கருப்பட்டி (பனை வெல்லம்).என்டோ சல்பான் விஷத்தால் பீடிக்கப்பட்டு சர்க்கரை வியாதிக்காளான  நோயாளர்கள்  கருப்பட்டியை சாப்பிட்டால் சர்க்கரை வியாதியில் இருந்து குணமாகலாம் .

எண்டோ சல்பான் பற்றி ஏற்கெனவே நமது மச்சமுனி வலைப்பூ இணப்பையும் கீழே கொடுத்துள்ளேன். பார்த்து தெளியவும்.

http://machamuni.blogspot.in/2011/08/blog-post.html

http://machamuni.blogspot.in/2011/07/blog-post.html

என்டோ சல்பானின் மேலும் பல தீங்குகள் பற்றி ஆங்கிலக் கட்டுரையின் சிறு பகுதி.

{Endosulfan is one of the most toxic pesticides on the market today, responsible for many fatal pesticide poisoning incidents around the world.[37] Endosulfan is also a xenoestrogen—a synthetic substance that imitates or enhances the effect of estrogens—and it can act as an endocrine disruptor , causing reproductive and developmental damage in both animals and humans. Whether endosulfan can cause cancer is debated. With regard to consumers’ intake of endosulfan from residues on food, the Food and Agriculture Organization of United Nations has concluded that long-term exposure from food is unlikely to present a public health concern, but short-term exposure can exceed acute reference doses.}

The World Health Organization estimated worldwide annual production to be about 9,000 metric tonnes (t) in the early 1980s.[13] From 1980 to 1989, worldwide consumption averaged 10,500 t per year, and for the 1990s use increased to 12,800 t per year.

சென்ற ஆண்டு  தமிழ் நாட்டிலுள்ள தஞ்சை காவிரி டெல்டாப் பகுதியில் பயிரிட்ட நெல்லில் மட்டும் சில லட்சம் லிட்டர்கள் எண்டோ சல்பான் தெளிக்கப்பட்டுள்ளது.எனில் அதைச் சாப்பிடும் அனைவரும் சர்க்கரை நோயாளிகள் (அது மட்டுமல்ல புற்று நோய் முதலான பெருங் கேடுகளையும் விளைவிக்க வல்லது ) ஆவது உறுதி . இதைத் தவிர்க்க அனைத்து இனிப்பு வகைகளுக்கும் இனி சீனியைத் (அஸ்கா சர்க்கரையை) தவிர்த்து  கருப்பட்டியை  உபயோகித்தால் இந்த அபாயத்தில் இருந்து முற்றிலும்  தப்பிக்கலாம்  . கருப்பட்டி அத்தனை நஞ்சையும் முறித்து நம்மைக் காக்கும் என்பதை மிக உறுதியாகக் கொள்ளலாம்.

கல்லீரலிலும் , மண்ணீரலிலும் சேரும் அலோபதி மருந்தெனும்  நஞ்சுகள் , உரம் மற்றும் பூச்சிக் கொல்லி மருந்துகளால் விளைவிக்கப்படும் உணவினால் ஏற்படும் நஞ்சுகளால் கல்லீரலும் , மண்ணீரலும் தள்ளாடுகின்றன. எனவே அவற்றால் ஜீரணத்திற்கு உதவும் பணியை செய்ய இயலாமல் இருக்கும் நிலையே சர்க்கரை வியாதி.கல்லீரலிலும் , மண்ணீரலிலும் இருக்கும் நஞ்சுகளை கருப்பட்டி முறித்து எறியும் .எனவே கல்லீரலும் ,மண்ணீரலும் முழு உயிரோட்டத்திற்குத் திரும்பும். அத்துடன் கருப்பட்டியானது  சர்க்கரை நோயயையும் வர விடாமல் தடுக்கும் வல்லமை கொண்டது.

அஸ்கா சர்க்கரையான சீனியும் இந்த கந்தகத்தைப் போலவே கடும் விஷத்தன்மை கொண்டது . 45 வகையான வேதிப் பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்பட்டு கடும் உஷ்ணக் கட்டமைப்போடு வருகிறது .சுடுகாட்டில் மழை நேரத்தில் பிணத்தை எரிக்க சீனியைத்தான் உபயோகிக்கிறார்கள் எனில் அதன் உஷ்ணத்தன்மையை உணர முடிகிறதா????சீனி உடல் உள்ளுறுப்புக்களை சூடாக்கி அதன் செயல்பாட்டைப் பாழாக்குகிறது.

கீழ்க் கண்ட காணொளிக் காட்சியில் இந்த சீனியின் புகையும் ,கந்தகப் புகை போலவே ரோஜாப் பூவின் நிறத்தையும் , வளத்தையும் குறைக்கிறது.மீண்டும் கருப்பட்டிப் புகை அந்த ரோஜாப்பூவின் நிறத்தையும் வளத்தையும் திரும்பக் கொடுக்கிறது.

[tube]http://www.youtube.com/watch?v=L2r8EPAuhCw[/tube]

இந்த இடத்தில் ஒரு முக்கிய விடயத்தை பதிவு செய்ய விரும்புகிறோம் .நல்ல அமுதமான உணவைக் கொடுக்க வேண்டிய விவசாயிகள் நஞ்சான உணவைக் கொடுத்து நமது மனித சமுதாயத்தை பாழ்படுத்தி வருகிறார்கள் .அதற்கு அரசாங்கமும் ஒரு முக்கிய காரணம் .

ஆனால் அதே வேளையில் இந்தக் கருப்பட்டியை பல்லாயிரம் வருடங்களாக நஞ்சாகாமல் அமுதமாக இன்றளவும் வைத்திருக்கும் இரு சமுதாயத்தை இங்கே பாராட்டாமல் இருக்க முடியாது .அவர்கள்தான் பனையேறி நாடார்கள், மற்றும் கோனார்கள் என்னும் அற்புத மனிதர்கள்.இந்த வியாபார சந்தையில் இன்றளவும் விலைபோகாமல் கருப்பட்டி என்னும் கருப்புத் தங்கத்தை காப்பாற்றி வைத்திருக்கும் தேவதூதர்கள் இவர்கள் என்றும் கூறலாம்.

பதிவு பெரிதாகப் போவதால் அடுத்த பதிவான  சர்க்கரை வியாதியை குணமாக்கலாம்(பாகம்4) ல் தொடரலாம்.

52 responses to “சர்க்கரை வியாதியை குணமாக்கலாம்(பாகம் 3)”

 1. ஸஹதுல்லாஹ் says:

  அண்ணன் அவர்களுக்கு,
  கருப்பட்டி விஷம் முறிக்கும் அதி சிறந்த உணவு போன்ற இந்த அற்புதமான கருத்துக்கள் ( காணொளிக் காட்சி அருமையான விளக்கமாய் அமைந்துள்ளது), அரிதான பொக்கிஷம். உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.

  தங்களன்புள்ள,
  ஸஹதுல்லாஹ்

  • machamuni says:

   அன்பு மிக்க திரு ஸஹதுல்லாஹ் அவர்களே,
   கருத்துரைக்கு மிக்க நன்றி!!!!
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 2. Raja says:

  தங்கள் பணி வார்த்தைகளால் விவரிக்க இயலாத மகத்தான பணி.கருப்பட்டிய கருப்புதங்கம்னு நீங்க சொன்னது நூற்றுக்கு நூறு உண்மை. காணொளியை கண்டு பிரம்மிச்சு போய்விட்டேன் .

  காணொளியை பதிவில் இருந்து பார்க்க முடியவில்லை. அதன் லிங்க்கை வைத்து நேரடியாக youtube ல் பார்க்கவேண்டி உள்ளது.

  மிக்க நன்றி அய்யா

  ராஜா

  • machamuni says:

   அன்பு மிக்க திரு ராஜா அவர்களே,
   கருத்துரைக்கு மிக்க நன்றி!!!!
   யூ டுயூப் தனது தளத்தை மேம்படுத்தி உள்ளதால் அதில் படம் தெரியவில்லை.அதை சரி செய்ய வழி இன்னும் அரை மணி நேரத்தில் கிடைக்கும்.
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 3. ராஜேஷ் கண்ணா says:

  மதிப்பிற்குரிய அய்யா வணக்கம்,

  தங்களின் பதிவுகளுக்கு கருத்துரை இட வார்த்தைகளே இல்லை. மிகவும் பிரமிப்பாக உள்ளது. மிக்க நன்றி.

  அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

  அடியேன்,
  ராஜேஷ் கண்ணா

  • machamuni says:

   அன்பு மிக்க திரு ராஜேஷ் கண்ணா அவர்களே,
   கருத்துரைக்கு மிக்க நன்றி!!!!
   பல்லாயிரம் குடிக்கும் பகுத்தறிவு உரைக்கும் தமிழரினம் வாழ்க!!!!
   அனைவருக்கும் இனிய தமிழர் திருநாள் நல்வாழ்த்துக்கள்.
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 4. la venkat says:

  அன்புள்ள சாமீ அழகப்பன் அவர்களே,

  தங்கள் பணி இந்த மனித சமுதாயததிற்கு அளப்பரியது. கருப்பட்டி நல்லது என்று தெரியும், ஆனால் இவ்வளவு நல்லது என்றும், அதன் பயன் என்ன என்றும், அது என்ன செய்ய வல்லது என்றும் பாமரனுக்கும் புரியும் படி ஒளி பட காட்சியுடன் விளக்கியது அருமையிலும் அருமை.
  இப்போது வலை பதிவு அன்பர்கள் அனைவருக்கும் புரிந்திருக்கும் தங்கள் பதிவு ஏன் சில சமயங்களில் சற்று நேரம் கொள்கிறது என்று. காத்திருத்தலே வைரத்தின் மதிப்பு.
  ஒவ்வொரு வைரத்திற்கும் காத்திருக்கும்,

  என்றும் அன்புடன்,
  வெங்கட் லா.

  • machamuni says:

   அன்பு மிக்க திரு வெங்கட் லா அவர்களே,
   கருத்துரைக்கு மிக்க நன்றி!!!!
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 5. sridhar says:

  அருமையான பதிவு கருப்பட்டி மிக சிறந்த மருந்து என்று தெரியும் ஆனால் இது சர்க்கரை வியாதிக்கு அருமருந்து என்பதை இப்பொழுது தான் தெரிந்து கொண்டேன். நன்றி அய்யா. சமீபத்தில் டேபிள் சால்ட் மற்றும் அயோடின் சால்ட் மிக பெரிய உடல் நலக்கேடு விளைவிக்கும் என்று இணையத்தில்அறிந்தேன். இதற்கு ஏதேனும் மாற்று இருந்தால் கூறி தெளிவிக்கும்மாறு தங்களை கேட்டு கொள்கிறேன்.

  • machamuni says:

   அன்பு மிக்க திரு ஸ்ரீதர் அவர்களே,
   கருத்துரைக்கு மிக்க நன்றி!!!!
   ///சமீபத்தில் டேபிள் சால்ட் மற்றும் அயோடின் சால்ட் மிக பெரிய உடல் நலக்கேடு விளைவிக்கும் என்று இணையத்தில்அறிந்தேன். இதற்கு ஏதேனும் மாற்று இருந்தால் கூறி தெளிவிக்கும்மாறு தங்களை கேட்டு கொள்கிறேன்.///
   ஏற்கெனவே எழுதப்பட்டுவிட்டது .இதோ கீழே இணைப்பு .
   http://machamuni.com/?p=539
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

   • sridhar says:

    அன்புமிக்க அய்யா, உப்பு பற்றிய பதிவை பார்த்தேன். இனி இந்துப்புக்கு இன்றிலிருந்து மாறி விடுகிறேன். நன்றி அய்யா.

    • machamuni says:

     அன்பு மிக்க திரு ஸ்ரீதர் அவர்களே,
     கருத்துரைக்கு மிக்க நன்றி!!!!
     மிக்க நன்றி
     என்றென்றும் பேரன்பினால்
     சாமீ அழகப்பன்

 6. manoharan says:

  அரிதான பொக்கிஷம்.

  உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.
  thanks.
  manoharan.R

  • machamuni says:

   அன்பு மிக்க திரு மனோகரன் அவர்களே,
   கருத்துரைக்கு மிக்க நன்றி!!!!
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 7. வணக்கம் ஐயா. நீங்கள் மருத்துவம் பேசுகிறீர்கள் ,வேதியல் பேசுகிறீர்கள்,நரம்பியல் பேசுகிறீர்கள்,விஞ்ஞானம் பேசுகிறீர்கள்,தற்காப்பு பேசுகிறீர்கள், மற்றும் பல அறிய தகவல்களை சொல்கிறீர்கள்.பன்முகம் கொண்ட சமூக சேவகராக உள்ளீர்.வாழ்த்துக்கள் ஐயா. உங்கள் பணி மென்மேலும் தொடரட்டும்.

  • machamuni says:

   அன்பு மிக்க திரு ஆறுமுகம் அவர்களே,
   கருத்துரைக்கு மிக்க நன்றி!!!!
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 8. ஆனந்தவேல் says:

  மதிப்பிற்குரிய ஐயா அவர்களுக்கு ,

  தங்களின் கட்டுரை மற்றும் காணொளி விளக்கம் அருமையிலும் அருமை. இன்றைய நவீன கால மருத்துவர்களாக உள்ள மண்ணின் மைந்தர்களையும் நமது பாரம்பரியத்தை பற்றி பற்றி சிந்திக்க வைக்கும்.

  ஆனந்தவேல்

  • machamuni says:

   அன்பு மிக்க திரு ஆனந்தவேல் அவர்களே,
   கருத்துரைக்கு மிக்க நன்றி!!!!
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 9. Mohankumar says:

  பேரன்பிற்குரிய சாமீ அழகப்பன் அய்யா அவர்களுக்கு வணக்கம்.
  அருமையான பதிவு. முளைகட்டிய பாசிபயிருடன் வெல்லம் சேர்த்து சாப்பிட்டு வந்தேன். தங்கள் பதிவை பார்த்தவுடன் இனி கருப்பட்டிக்கு மாறப்போகிறேன்.
  கடையில் போய் வாங்கி வந்துவிட்டேன். கடையில் அஸ்கா சர்க்கரையில் செய்த கருப்பட்டி வேறு விற்பனைக்கு இருக்கிறது !!!! அதைதான் விரும்பி வாங்குகிறார்களாம் !!!. அனால் கடைக்காரர் விளக்கம் சொல்லி எனக்கு பனங்கருப்பட்டியை தான் கொடுத்தார் !!. ( என்ன கொடுமை !!!)

  நன்றி.

  பணிவன்புடன்
  மோகன்குமார்.

  • machamuni says:

   அன்பு மிக்க திரு மோகன்குமார் அவர்களே,
   கருத்துரைக்கு மிக்க நன்றி!!!!
   அஸ்கா சர்க்கரையில் செய்த கருப்பட்டியா????? இப்படி ஒன்று இருக்கிறதா???நமது ஆட்களின் முட்டாள்தனத்துக்கு எல்லையே இல்லை????தயவு செய்து இதை எழுதியதற்கு மிக மிக நன்றி!!!!
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 10. eshwar.ad bangalore says:

  ungalin 3aam pathivu arumai nandri

  ESHWAR

  BANGALORE

  • machamuni says:

   அன்பு மிக்க திரு ஈஸ்வர் ஏ டி அவர்களே,
   கருத்துரைக்கு மிக்க நன்றி!!!!
   தமிழில் கருத்துரை எழுதுங்கள்.
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 11. viraj says:

  Dear Sir,

  I feel like crying by looking at your research.
  seeing first doctor in my life, in a way i imagined a doctor ( maruthuvar).

  yendrum neengal vaza vazthum,
  viraj

  • machamuni says:

   அன்பு மிக்க திரு விராஜ் அவர்களே,
   கருத்துரைக்கு மிக்க நன்றி!!!!
   தமிழில் கருத்துரை எழுதுங்கள்.
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 12. nitingeetam says:

  ஐயா வணக்கம்..

  மிக அற்புதம் …நன்றி..

  இந்து உப்பு மற்றும் கருப்பட்டி ஒரிஜினல் எங்கு கிடைக்கும் ஐயா????

  • machamuni says:

   அன்பு மிக்க திரு ராமச்சந்திரன் அவர்களே,
   கருத்துரைக்கு மிக்க நன்றி!!!!
   நாட்டு மருந்துக் கடைகளிலும், பல்பொருள் அங்காடிகளிலும் கிடைக்கும்.
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 13. ஸஹதுல்லாஹ் says:

  அண்ணன் அவர்களுக்கு,
  தங்களுக்கும், குடும்பத்தினருக்கும் மற்றும் நமது மச்சமுனி வலைத்தள நண்பர்களுக்கும் எனது இனிய தைத் திருநாள் நல்வாழ்த்துக்கள் ..!!!!!

  தங்களன்புள்ள,
  ஸஹதுல்லாஹ்

  • machamuni says:

   அன்பு மிக்க திரு ஸஹதுல்லாஹ் அவர்களே,
   கருத்துரைக்கு மிக்க நன்றி!!!!
   தங்களுக்கும், குடும்பத்தினருக்கும் மற்றும் நமது மச்சமுனி வலைத்தள நண்பர்களுக்கும் நமது இனிய தமிழர் திருநாள் நல்வாழ்த்துக்கள் ..!!!!!
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 14. மகேஷ் says:

  நீங்கள் இன்னும் பல்லாண்டு வாழ்ந்து இந்த சேவையை தொடர இறைவன் அருள் புரியட்டும் .

  • machamuni says:

   அன்பு மிக்க திரு மகேஷ் அவர்களே,
   கருத்துரைக்கு மிக்க நன்றி!!!!
   தங்களுக்கும், குடும்பத்தினருக்கும் மற்றும் நமது மச்சமுனி வலைத்தள நண்பர்களுக்கும் நமது இனிய தமிழர் திருநாள் நல்வாழ்த்துக்கள் ..!!!!!
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 15. ஆனந்தவேல் says:

  மதிப்பிற்குரிய ஐயா அவர்களுக்கு

  அமெரிக்காவில் சர்க்கரையை கட்டுப்படுத்த ஆரம்பித்துவிட்டார்கள்

  http://www.csmonitor.com/USA/Latest-News-Wires/2012/0914/New-York-sugary-drinks-ban-goes-into-effect

  வெளி நாட்டவர்கள் நாகரிகமாக நமக்கு இதுபோன்ற சங்கதிகளை அறிமுக படுத்துவதும் பிறகு அதற்கு ஆட்சேபித்து பின்வாங்குவதும் தொடர் கதை ஆகிறது.

  ஆனந்தவேல்

  • machamuni says:

   அன்பு மிக்க திரு ஆனந்தவேல் அவர்களே,
   கருத்துரைக்கு மிக்க நன்றி!!!!
   ///வெளி நாட்டவர்கள் நாகரிகமாக நமக்கு இதுபோன்ற சங்கதிகளை அறிமுக படுத்துவதும் பிறகு அதற்கு ஆட்சேபித்து பின்வாங்குவதும் தொடர் கதை ஆகிறது///
   முதலில் உடலின் செயல்பாடுகளை புரிந்து கொள்ளாமல் எடுக்கும் எந்த முடிவும் பயன் தராது.
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 16. shareef says:

  தை மாதத்தின் திருநாளாம்
  தை திருநாள்.
  தரணியெங்கும் பொங்கிடும்
  தமிழர்களின் திருநாளாம்
  தை திருநாள்.

  புதுவருடம் மலர்ந்ததும்
  புன்னகைக்கும் முதல் நன்நாளாம்
  தை திருநாள்.

  ஆதவன் உதயமாக
  புதுப்பானையில் பொங்களிட்டு
  அயலவர் ஆனந்தமாய் வர
  அன்புடன் உபசரிக்கும் நன்நாளாம்
  தை திருநாள்.

  தாய் மண்ணில் நாம் இல்லையெனிலும்
  தாய் மண்ணின் நினைவுகளோடு
  தை திருநாளை நாம் மறவோம்
  எம் நெஞ்சில்….

  தைப்பொங்கள் வாழ்த்துக்களை
  என் இதயத்தால் அர்ப்பணிக்கின்றேன்
  உலகமெங்கும் வாழும்
  எம் உறவுகளுக்கு……….

  • machamuni says:

   அன்பு மிக்க திரு ஷெரீஃப் அவர்களே,
   கருத்துரைக்கு மிக்க நன்றி!!!!
   தங்களுக்கும், குடும்பத்தினருக்கும் மற்றும் நமது மச்சமுனி வலைத்தள நண்பர்களுக்கும் நமது இனிய தமிழர் திருநாள் நல்வாழ்த்துக்கள் ..!!!!!
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 17. saravanana.m says:

  ஐயா ,

  நன்றி என்ற வார்த்தைகளை உங்கள் காலடியில் சமர்ப்பிக்கின்றேன்.

  சரவணன் – திருப்பூர்

  • machamuni says:

   அன்பு மிக்க திரு சரவணன் அவர்களே,
   நன்றியுரைக்கு மிக்க நன்றி!!!!
   ///நன்றி என்ற வார்த்தைகளை உங்கள் காலடியில் சமர்ப்பிக்கின்றேன்/// இது எதற்கென்று தெரியவில்லை.
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 18. SAMPATHKUMAR says:

  அய்யா வணக்கம்.

  அருமையான செயல் விளக்கம்.

  உங்கள் பணி தொடர வேண்டும்.

  என்றும் உண்மையுள்ள,
  ஆ. கோ. சம்பத்குமார்

  • machamuni says:

   அன்பு மிக்க திரு ஆ .கோ . சம்பத் குமார் அவர்களே,
   கருத்துரைக்கு மிக்க நன்றி!!!!!!!
   நம் பணி தொடரும் வரை தொடரும்.
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 19. viraj says:

  Anna,

  Both my father & mother has diabaties.
  i have got (pana vellam) from store and gave it to my parents.
  my father conveyed his regards to you.

  i am not getting proper sleep in night and if i get up in early morning ( around 3am or 5am), i am not able to sleep back. please suggest me some medicine.

  yendrum anbhudan,
  viraj

  • machamuni says:

   அன்பு மிக்க திரு விராஜ் அவர்களே,
   கருத்துரைக்கு மிக்க நன்றி!!!!
   கருப்பட்டியை சேர்த்துக் கொள்வது மட்டுமல்ல. வெள்ளை சர்க்கரையை தவிர்ப்பதும் அவசியம் .கடைகளில் விற்கும் அத்தனை இனிப்புக்களிலும் சீனி என்ற அஸ்கா சர்க்கரைதான் சேர்த்து செய்யப்பட்டுள்ளது , எனவே அவற்றைத் தவிர்ப்பதும் அவசியம் .உணவு உண்ணும் முறையை நான் விளக்கியிருப்பது போல செய்ய வேண்டும்.மேலும் சர்க்கரை நோயைக் குணப்படுத்தலாம் பாகங்கள் அனைத்தையும் படித்துப் பாருங்கள் .அவர்கள் சர்க்கரை நோய் உறுதியாக குணமாகும் .
   (இம்சோம்னியா OR IMSOMNIA ) என்ற தூக்கமின்மை வியாதிக்கு சாரஸ்வாத அரிஷ்டம் என்ற மருந்து டாபர் மருந்து தயாரிப்புக் கம்பெனியில் கிடைக்கும். இதை வாங்கி 15 மிலி அரிஷ்டத்துடன் 15 மிலி தண்ணீர் சேர்த்து இரவு தூங்கப் போகும் முன்னர் மெதுவாக சப்பிச் சாப்பிடவும் . தூக்கமின்மை தொலையும் .உங்கள் நண்பர் தூக்க மருந்துகளை உட்கொண்டிருப்பதால் அதற்கு உடல் அடிமை ஆகியிருக்கும் . எனவே முழுப் பலன் கிடைக்க நாலைந்து நாட்களாவது ஆகலாம்.எனவே பொறுமை அவசியம் .இத்துடன் J & J DECHANE MEDICINE (ஒரு ஆங்கில மருத்துவர் இந்தியாவிற்கு வந்து இந்திய மூலிகைகளை ஆராய்ச்சி செய்து பல மூலிகைக் கலவைகளை கண்டறிந்து அவை ஏழை எளிய மக்களுக்குப் போய்ச் சேர வேண்டும் என்ற நல் நோக்கத்தில் மிக மிகக் குறைந்த எளிய விலையில் 99 வருடங்களுக்கு J & J DECHANE MEDICINE என்ற பெயரில் விற்க வேண்டும் என்ற நிபந்தனையில் இந்த மருந்துகள் இன்றும் மிக மலிவான விலையில் கிடைக்கின்றன.இவற்றில் ஊசி மருந்துகளும் அடங்கும் .பல அல்லோபதி மருத்துவர்கள் இந்த மருந்துகளில் மூட்டு வலிக்குள்ள RHEMORIN என்ற ஊசி மருந்தால் ராசியான மருத்துவர்கள் எனப் பெயர் எடுத்துள்ளார்கள். புண்ணியம் மருத்துவர் DECHANE அவர்களுக்கே .எனக்கு விவரம் தெரிய அந்த மாத்திரைகள் 1/4 பைசா விலையில் இருந்து தற்போது 25 பைசா விலையில்தான் இருக்கின்றன.பலரும் பயன் பெற இவ்விபரத்தை தெரிவிக்கிறோம்.) ல் VAITESSAN என்ற மருந்து மூலிகைகளால் செய்யப்பட்டு மாத்திரை வடிவில் கிடைக்கும் .இதைச் சேர்த்து இரவில் இரு மாத்திரைகள் சாப்பிட்டு வர நரம்புத் தளர்ச்சி நீங்கி தூக்கம் நன்றாக வர நல்ல பலன் கிடைக்கும்.மன அழுத்தம்,
   மன இறுக்கம் ஆகியவற்றால் துன்புறுபவர்களும் இதை உபயோகித்து பலன் பெறலாம்.
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 20. P.N.Prathap says:

  Dear Sir,

  i am Prathap and i am suffering from diabetes for the last three years and i am taking alopathy medicines for the same . But i want a remedy for that i want a treatment which can cure the diabetes and it’s side effects naturally without tablets or other side effect giving medicines ,Kindly guide me for a better treatment and cure

  Regards,
  Prathap

  • machamuni says:

   அன்பு மிக்க திரு பி என் பிரதாப் அவர்களே,
   கருத்துரைக்கு மிக்க நன்றி!!!!
   முதலில் நீங்கள் தமிழில் எழுதுங்கள்.நீங்கள் சர்க்கரை நோயை குணமாக்கலாம் பாகங்களை முழுவதுமாக படித்து முடியுங்கள்.அதை படித்து முடிக்கும் போது உங்கள் சர்க்கரை நோய் முடிவுக்கு வந்திருக்கும்.அது வரை சதுரகிரி ஹெர்பல்ஸ் கண்ணன் அவர்களின் சர்க்கரைக் கொல்லிப் பொடியை சாப்பிட்டு வாருங்கள்.
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 21. P.N.Prathap says:

  Mikka nandri ayya

  Enaku tamil thatezhutthu theriyadhu aagiayal thaan nan thamizhil ezhudha mudiyavillai

  Ennaku ippozhudhu 30vayadhu aagirathu .thirumanam aagi 3 kuzhainthakal ulladhu

  marundilla illamaruthuva murai alladhu iyarkai maruthuva muraiyalenadhu madhu megathai
  ozhika aasaipadugiraen

  Thayavu seidhu ennaku vazhi kaatungal

  Ipddadiku endrum nandriyulla

  P.N.Prathap

  Appadiyae sarkarai kolli podi engu kidaikum enbadhaiyu ariyapaduthavum

  • machamuni says:

   அன்பு மிக்க திரு பி என் பிரதாப் அவர்களே,
   கருத்துரைக்கு மிக்க நன்றி!!!!
   முதலில் தமிழில் எழுதுங்கள். பொதுவாக தமிழில் கேள்விகள் கேட்காத நபர்கள் மீது எமக்கு சரியான மரியாதை ஏற்படுவதில்லை.நமது மொழி தமிழ் .நாமே அதை உபயோகிக்காவிட்டால் தமிழ் எப்படி வாழும்.பழக்கத்தில் உள்ள மொழிதான் வாழும்.எம்முடைய வலைத் தளத்தையும், வலைப் பூவையும் அதிலுள்ள பதிவுகளையும் முழுமையாகப் படித்துவிட்டு கேள்விகள் கேளுங்கள்.சர்க்கரைக் கொல்லிப் பொடி எங்கே கிடைக்கும் என்பதையும், சதுரகிரி ஹெர்பல்ஸ் திரு கண்ணன் அவர்களின் முகவரி மற்றும் அவரது அலை பேசி எண் போன்ற அத்தனை விவரங்களையும் அந்தந்தப் பதிவிலேயே கொடுத்துள்ளேனே . மீண்டும் மீண்டும் ஏன் இது போன்ற வீணான கேள்விகள்.இவை எனது நேரத்தை மிகவும் வீணடிக்கின்றன . சொன்னதையே மீண்டும் மீண்டும் சொல்வது எமக்கு சலிப்பை அளிக்கிறது.மருந்து இல்லா மருத்துவ முறையைக் கொண்டு பல நோய்களை குணமாக்கும் விதங்களை பல கட்டுரைகளில் எழுதி இருக்கிறோம்.அத்தனையும் படித்துப் பார்த்துவிட்டு பின் கேள்விகள் எழுப்புங்கள்.உங்கள் கேள்வி முதல் கேள்வியின் ரீதியிலேயே இருந்ததால்தான் தாமதமாக பதிலளிக்கிறேன்.
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 22. balaji says:

  அன்புள்ளம் கொண்ட குருஜி அவர்களுக்கு,

  வணக்கம் மிகவும் அருமையாக இருக்கிறது, தேடி அலையும் ஒரு பொருள் மனிதனுக்கு கிடைப்பதில்லை ஆனால் உங்கள் வார்த்தையின் பொருள் தேடாமலேயே கிடைக்கிறது என்றால் சொல்லுவதற்கு ஒன்றும் இல்லை

  தங்கள் உண்மையுள்ள
  பாலாஜி

  • machamuni says:

   அன்பு மிக்க திரு பாலாஜி அவர்களே,
   கருத்துரைக்கு மிக்க நன்றி!!!!
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 23. Maheswari says:

  அருமையான பதிவு (சாட்சியாக படக்காட்சிகளுடன்). எவ்வளவு தான் எழுதினாலும் தாங்கள் அளிப்பது போல ஒரு வீடியோ பதிவுக்கு இணையாகாது…சர்க்கரை நோய் என நினைத்து மருந்து சாப்பிட்டு வரும் பல நண்பர்களுக்கு பகிர்கிறேன்….நன்றி…

  • machamuni says:

   அன்புள்ள திரு மஹேஸ்வரி அவர்களே,
   கருத்துரைக்கு மிக்க நன்றி,
   உங்களது நம் உடலை நாமறிவோம் கட்டுரை மிக நன்றாக உள்ளது.தொடருக உங்கள் பணி.
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 24. ramanathan says:

  how many times per day we should intake karupatti. Before or after food. In how many days blood sugar will get reduced? Sorry for posting in english since i am not having tamil font enabled.

  • machamuni says:

   அன்புள்ள திரு ராமனாதன் அவர்களே ,
   உங்களது கருத்துரைக்கு நன்றி.
   முதலில் தமிழில் எழுதுங்கள். பொதுவாக தமிழில் கருத்துரை எழுதாத நபர்கள் மீது எமக்கு சரியான மரியாதை ஏற்படுவதில்லை.நமது மொழி தமிழ்.நமது தமிழ் நம் உயிர்.நாமே அதை உபயோகிக்காவிட்டால் தமிழ் எப்படி வாழும்.பழக்கத்தில் உள்ள மொழிதான் வாழும்.நாம் எழுதியதை தமிழை அறிந்ததால் நீங்கள் படித்தீர்கள். இனி ஆங்கிலத்தில் கருத்துரை எழுதினால் வெளியிட மாட்டோம் என மிகப் பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.“ தமிழ் எங்கள் உயிருக்கு நேர்” “ சாகும் வரை தமிழ் பயின்று சாக வேண்டும் .என் சாம்பலிலும் தமிழ் மணந்து வேக வேண்டும்” என்ற பாரதிதாசனின் வார்த்தைகள் எமக்கு உயிரான வார்த்தைகள்.எமது வலைத் தளத்தில் தமிழே முக்கியமானதாக இருக்க வேண்டும்.இருப்பினும் உங்கள் கேள்விக்கு பதில் கூறுகிறோம்.

   ஒவ்வொரு வேளை உணவிலும் முதலில் கருப்பட்டி சேர்க்க நன்று.
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 25. dr.m.kanakaraj says:

  வணக்கம்
  தங்களை இனி கருப்பட்டியப்பன் என்றே அழைக்கலாம் என நினைக்கிறேன்

  • machamuni says:

   அன்புள்ள திரு dr.m.kanakaraj அவர்களே,
   உங்களது கருத்துரைக்கு நன்றி,
   அழையுங்களேன்.
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

97 − = 87