சர்க்கரை வியாதியை குணமாக்கலாம் ( பாகம் 6 )

February 24, 2013 by: machamuni

சர்க்கரை வியாதியை குணமாக்கலாம்(பாகம் 5) ஐ படித்த பின்னர் இந்தப் பதிவைப் படிக்கவும்.என்றால்தான் தொடர்பு விட்டுப் போகாமல் புரியும்.

மூலிகை மணி என்ற மூலிகை மருத்துவம் மற்றும் சித்த மருத்துவம் சம்பந்தமான இதழ்கள் அப்போது தொடர்ந்து வந்து கொண்டிருந்தன.அவற்றுக்கு எமது சித்தப்பாவான திரு இராமையா அவர்கள் (எலும்பு முறிவிற்குப் பற்றிடலில் உள்ள நோயாளர் இவரே ) ஆயுள் சந்தாதாரராகச் சேர்ந்து அது வரை வெளி வந்த பல ஆண்டுகள் இதழ்களை வாங்கி வைத்திருந்தார் .அவற்றை சிறு வயது முதலே படித்து வந்ததாலேயே சித்த மருத்துவத்தில் எமக்கு இவ்வளவு ஈடுபாடு ஏற்பட்டது(பரம்பரை என்பது வேறு சேர்ந்து கொண்டது).

அந்த மூலிகை மணி இதழில் 1971 ஆம் ஆண்டு ஜூன் மாத இதழில் வெளியான கார்ட்டூனை இங்கே உங்கள் பார்வைக்குத் தருகிறோம்.

நன்றி :-மூலிகை மணி

முதன் முதலில் செயற்கை இன்சுலின் கண்டுபிடிக்கப்பட்டது எதற்காக என்று தெரியுமா????சர்க்கரை நோயாளிகளுக்கு சர்க்கரையை கட்டுப்பாட்டில் வைப்பதற்காக அல்ல!!!ஆங்கில வைத்தியத்தில் ஒரு அரை நூற்றாண்டுக்கு முன்பு மனித உடலில் ஒரு  சத்திர சிகிச்சை ( OPERATION ) செய்ய வேண்டும் என்றால் அதற்கு நிறைய முன்னேற்பாடுகள் செய்யப்பட வேண்டும்.அதில் முக்கியமான ஒன்று உடம்பில் கத்தியால் கீரி காயம் உண்டாகி இரத்தம் வெளிப்பட்ட அடுத்த வினாடி உடலில் உள்ள இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு வினாடிக்கு வினாடி ஏறி அளவு கடந்த மிக அதீதமான நிலையை எட்டிவிடும்.எடுத்துக்காட்டாக 600 மிகி முதல் 900 மிகி வரை எட்டும்.இது ஏன் நிகழ்கிறது.

உடல் கிழிக்கப்பட்டு திறந்த நிலையில் , கிருமிகள் உடலின் உள்ளே   நுழையாமல் இருக்கவும் ,காயம் ஆறப் போராடவும் உடல் தயாராகும் நிலைதான் இந்த சர்க்கரை அளவு அதிகரித்தல்.இது போன்ற சத்திர சிகிச்சை ( OPERATION ) செய்ய இயற்கையாக உயரும்  சர்க்கரையை கட்டுப்பாட்டில் வைக்கத்தான் முதன் முதலில் இன்சுலின் பயன்பட்டது .

ஒரு நாய் உங்களை விரட்டுகிறது.அந்த பயத்தில் உடனே உங்களால் தாவிக் குதிக்க முடியாத உயரத்தை நீங்கள் சர்வ சாதாரணமாகத் தாவுவீர்கள்.ஓட்டமோ ஒரு குதிரை  ஓடும் வேகத்தைவிட அதிக வேகமாக ஓடுவீர்கள்.இந்த மாயா ஜாலக் காரியங்களையும் செய்வது நம் உடலில் சிறு நீரகத்தின் உச்சியில் உள்ள தொப்பிச் சுரப்பி,  என்ற அட்ரீனலீன் சுரப்பிதான் அது.

நாய் விரட்ட ஆரம்பித்தவுடன் அட்ரீனல் சுரப்பி அட்ரீனலீனை சுரப்பதால் ,உடலில் இது வரை சேர்த்து வைக்கப்பட்ட செறிவூட்டப்பட்ட சர்க்கரை அனைத்தையும் அவிழ்த்து இரத்தத்தில் கொட்ட ஆரம்பிக்கிறது .எடுத்துக்காட்டாக 600 மிகி முதல் 900 மிகி வரை எட்டும்.இதயம் அட்ரீனலீன் உதவியினால் இந்தச் சர்க்கரையை உபயோகித்து தன் வேகத்தை அதிகரித்து,(இதயம் தான் இயங்க இரத்தத்தில் இருக்கும் சர்க்கரையில் இருந்தே தனக்கு சக்தியை பெறுகிறது) ,இரத்த ஓட்ட வேகத்தை அதிகரிக்கிறது .உடலில் உள்ள தசைகள் அனைத்தும் , இந்த அதிகரிக்கப்பட்ட சர்க்கரையினால் மிக வேகமாக செயல்பட்டு ஆபத்திலிருந்து தப்பிக்கிறது.இந்த உடலின் அதீத செயல்பாட்டை உபயோகித்துத்தான் ஓட்டப் பந்தய விளையாட்டுக்களில் , ஊக்க மருந்தால், தட கள வீரர்கள் வெல்ல முயற்சிப்பதும்.

இரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தி வைத்துள்ளவர்களுக்கு ஆபத்து சமயத்தில் மேற்கண்ட எதுவும் நிகழாது.உதாரணமாக இரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தி வைத்துள்ளவர் கடுமையான விபத்தில் சிக்கி அதிக இரத்தப் போக்கில் இருப்பவருக்கு அவரது உடலில் சர்க்கரை அளவு அதிகரிக்காததால், இரத்தப் போக்கு தடுக்கப்படாது விடப்படும் , அதனால் அதிக இரத்தப் போக்கினாலேயே அவர் உயிரிழக்கலாம்.

எனவே மேற்கண்ட இரு உதாரணங்களில் இருந்து இரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்தி வைத்தல் என்பதே கேலிக் கூத்து என்பதையும் , இதனால் அந்த நபர் உயிரிழக்கும் ,சாத்தியக் கூறுகள்தான் அதிகம் ஆகின்றன. இத்தனையிலும் இரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தி வைத்துள்ள அவர் பிழைத்திருந்தாலும் ,  உடலின் இயக்க வேகத்தை அதிகரிக்க , அதிகரிக்கும் இதயத்துடிப்பால் இதயத்துக்கு சக்தியளிக்கும் சர்க்கரை இரத்தத்தில் உயராததால்  இதயம் சக்தியிழந்து (இதயம் தான் இயங்க சக்தியை  இரத்தத்தில் இருக்கும் சர்க்கரையில் இருந்தே பெறுகிறது, உடலின் வேகம் அதிகரிக்கும் போது உடலில் உள்ள மற்ற உறுப்புக்களும் சர்க்கரையை எடுத்துக் கொள்ளுவதால்) , இரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தி வைத்துள்ள நபரின் இதயம் இயங்க இயலாத அளவில் இரத்தத்தில் சர்க்கரை இருக்கும்  நிலையில் இதயம் தன் இயக்கத்தை நிறுத்தும் போது இதயத்  தாக்கு ( HEART  ATTACK )நேரிடுகிறது.

ஆங்கில  மருத்துவர் சொல்வார் “நானும் எவ்வளவோ போராடிப் பார்த்துவிட்டேன்.கடைசியில் இதயத்தாக்குதல் வந்ததால் நோயாளர் இறந்துவிட்டார். கடவுள் அவருக்கிட்ட ஆயுள் அவ்வளவுதான் ” என்பார். ஆங்கில மருத்துவம் சர்க்கரையை கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறேன் பேர்வழி என்று கடைப்பிடித்த வைத்திய முறைதான் இந்த இறப்புக்கு காரணம் என்று உணராமல் ,நாமும்  “இதயத்  தாக்கு ( HEART  ATTACK ) வந்துவிட்டால் அவ்வளவுதான் ஒன்றும் செய்ய இயலாது ”என்று சொல்லிக் கொண்டே உச்சுக் கொட்டிக் கொண்டே போய் அவரை சுடு காட்டில் அடக்கம் செய்துவிட்டு அத்துடன் அவரை மறந்துவிடுவோம்.நமக்கும் ஒரு நாள் இந்த நிலைதான் என்பதை அடியோடு மறந்துவிடுவோம் .என்னே நமது அறிவீனம்.

தரமில்லாத சர்க்கரைக்கு கணையம் இன்சுலின் தராது .இன்சுலின் தரப்படாத சர்க்கரை உடலைவிட்டு வெளியேறியே தீரும்.அவையத்தனையும் வீணான சர்க்கரயே. ஆங்கில மருத்துவம் உடலில் சுற்றும் தரமற்ற சர்க்கரைக்கு  தரும் , தன்னிச்சையான இன்சுலினால் தரமற்ற சர்க்கரை உடலின் செல்களுக்குள் நுழையும். விளைவு செல்கள் அனைத்தும் அழுகிச் சாகும்.உடலின் பல பகுதிகளிலும் , ஏற்கெனவே இரத்தத்தில் சர்க்கரையினால் சூழப்பட்ட ஹீமோகுளோபினால் உடலின் செல்களுக்கு சரியாக ஆக்ஸிஜன் கிடைக்காமல் சாகும் செல்களோடு , தரமற்ற சர்க்கரை உள்ளே நுழைவதால் அழுகி இறக்கும் செல்களும்  சேர உடலின் பல பாகங்களிலும் பல குறைபாடுகள் நிகழ்கின்றன.

சிலர் கேள்வி கேட்பார்கள் “ நான் ஆங்கில மருந்துகள் எடுத்துக் கொண்டே , இரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொண்டே , சித்த மருந்துகளை சாப்பிடுகிறேன்” என்பார்கள். அவர்களைப் பார்த்தால் அழுவதா சிரிப்பதா என்றே தெரியவில்லை. உடலில் கெட்டுப் போன சர்க்கரையை செல்களுக்குள் தள்ளும் வேலையைச் செய்து கொண்டே செல்களை எந்த விதத்தில் சரி செய்ய இயலும்.அல்லோபதி மருந்துகளை (அவற்றை மருந்துகள் என்று சொல்வதே தவறு , விஷங்கள் என்றுதான் சொல்ல வேண்டும் ) எடுப்பதே தவறு என்று நான் மீண்டும், மீண்டும்  நிரூபணங்களோஒடு சொல்லி வரும் வேளையில் இது போன்ற கேள்விகள்  கேலிக் கூத்துதான்.

கீழுள்ள காணொளிக் காட்சியைக் காணுங்கள். அதில் உடலில் உள்ள செரிக்கப்படும் பொருட்களுக்கு ஏற்ற வகையில் செரிமானத்திற்கு உதவும் , பித்த நீர் ( BILE ), பாங்க்ரியானிக் செரிமான நீர்களை(PANCREANTIC JUICES  ) அசினார் செல்கள்  (ACINAR CELLS ) சுரந்து டியோடினம் வழியாக நுழைவதை சுட்டிக் காட்டுவதைப் பாருங்கள்.உடலில் சர்க்கரை அளவு குறைவானால் அதிகமாக்க உடலின் கணையத்தில் உள்ள பாங்கிரியாட்டிக் ஐலெட்ஸ் (PANCREATIC AISLETS ) என்ற இடங்களில் உள்ள ஆல்பா செல்கள் (ALPHA CELLS ) குளூகோகான் (GLUCAGON )என்ற நீரைச் சுரந்து உடலில் உள்ள சேமிப்பு சர்க்கரையை எடுத்து  இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை அதிகமாக்கும்.

உடலில் சர்க்கரை அளவு  அதிகமானால் குறைக்க (PANCREATIC AISLETS ) என்ற இடங்களில் உள்ள பீட்டா செல்கள் (BETA CELLS )இன்சுலினை (INSULIN ) சுரந்து உடலில் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை குறைக்க, செல்களுக்குள் சர்க்கரை உள்ளே நுழைய அனுமதி கொடுத்து இரத்தத்தில் இருந்து செல்களுக்குள் சர்க்கரையை அனுப்புகின்றது .

இந்த இரண்டு செயல்களையும் கட்டுப்படுத்த டெல்டா செல்களில் ( DELTA CELLS ) உள்ள சோமாட்டோஸ்டேட்டின் ( SOMATOSTATIN) சுரந்து சமிக்கைகளைப் (SIGNALS ) புரிகிறது.இப்படி சர்க்கரை அளவு கூடினாலும் குறைந்தாலும் , கெட்ட சர்க்கரை இருந்தால் வெளியேற்றவும்,நல்ல சர்க்கரையை வீணாக்காமல் சேமித்து வைக்கவும் நம்முடலிலேயே சகல வசதிகளுடன் அமைப்புகள் இருக்க, இவற்றை சரியாக செயல்பட வழி செய்தால் போதாதா??? ஆங்கில மருத்துவம் இந்த நாளமில்லாச் சுரப்பிகளின் இடையில் புகுந்து குழப்பங்கள் விளைவிப்பதால்தான் உடல் நலிந்து , ஆங்கில மருந்துகளால் படாத பாடுபட்டு , உள்ளுறுப்புக்களும் முழுவதும் கெட்டு நோயாளர் படாத பாடுபட்டு முடிவில் அத்தனை பொறிகளும் , புலன்களும் கெட்டு இறந்தே போகிறார்.

http://www.youtube.com/watch?v=jOH2MU00g1M

பதிவு பெரிதாகப் போவதால் அடுத்த பதிவான  சர்க்கரை வியாதியை குணமாக்கலாம்(பாகம்7) ல் தொடரலாம்.

84 responses to “சர்க்கரை வியாதியை குணமாக்கலாம் ( பாகம் 6 )”

 1. Ravi says:

  ஐயா,
  மிகவும் விளக்கமான, அருமையான பதிவு.

  • machamuni says:

   அன்புள்ள திரு ரவி அவர்களே ,
   கருத்துரைக்கு மிக்க நன்றி,
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 2. sriram says:

  ஐயா,

  பதிவு பயனுள்ளதாகவும் கருத்து செறிந்ததாகவும் உள்ளது,

  • machamuni says:

   அன்புள்ள திரு ஸ்ரீராம் அவர்களே ,
   கருத்துரைக்கு மிக்க நன்றி,
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 3. R Gopinath says:

  மிகவும் அருமையான பதிவு…. உங்கள் முயற்சிக்கு வாழ்த்துகள். ஆங்கில மருத்துவம் எவ்வளவு தீங்கானது…

  • machamuni says:

   அன்புள்ள திரு கோபினாத் அவர்களே ,
   கருத்துரைக்கு மிக்க நன்றி,
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 4. வெங்கட் says:

  அன்புடையீர்,

  மிகத்தெளிவான பதிவு. கடவுள் சித்தம். மிக்க நன்றி.

  அன்புடன்
  வெங்கட்
  சங்ககிரி

  • machamuni says:

   அன்புள்ள திரு வெங்கட் அவர்களே ,
   கருத்துரைக்கு மிக்க நன்றி,
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 5. shareef says:

  மிகவும் அருமையான பதிவு ஜி
  அந்த கார்ட்டூன் சூப்பர்

  42 ஆண்டுகளுக்கு மேலாக இந்த புத்தகத்தை
  பாதுகாப்பதே பெரிய செயல்

  மிக்க நன்றி ஜி

  • machamuni says:

   அன்புள்ள திரு ஷெரீஃப் அவர்களே ,
   கருத்துரைக்கு மிக்க நன்றி,
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 6. m.manohar says:

  வணக்கம் குருஜி அவர்களே

  சமீப காலமாக நான் உங்களது பதிவை படித்து வருகிறேன் . மிகவும் அருமையான தங்களது பணி தொடர இறைவன் அருள் புரியட்டும். மிகவும் இரஹசியம் என்று பாதுகாக்கப்பட்ட பல மூலிகை ரகசியங்களை இன்றைய உலகியல் வாழ்வியலுக்கு எது தேவை என உணர்ந்து செயல்படும் தங்களது பணிக்கு எனது பணிவான வாழ்த்துக்கள்.. அன்புடன் மு.மனோகர் …திருச்சி .

  • machamuni says:

   அன்புள்ள திரு மு மனோகர் அவர்களே ,
   கருத்துரைக்கு மிக்க நன்றி,
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 7. senthil kumar says:

  ஐயா,
  வணக்கம், தங்களது ஒவ்வொரு பதிவும் அனைவருக்கும் பயனுள்ளது, ஆங்கில மருத்துவ தீய விளைவை மக்கள் அனைவரும் முதலில் அறிய வேண்டும். எனது சந்தேகம் என்னவென்றால் எங்கே நமது சித்த மருத்துவர்கள், தங்களை போன்ற அனுபவம் நிறைந்தவர்கள் எங்கே சென்றுவிட்டார்கள், மூலைக்கு மூலை ஆங்கில மருத்துவர்களும், ஆங்கில மருந்து கடையும் குவிந்து கிடக்கிறது. ஆனால் நமது சித்த மருத்துவம், சித்த மருத்துவர்களும் எங்கே- நாடெங்கும் சித்த மருத்துவ வகுப்புகள் தங்களை போன்றவர்களால் நடத்தப்படவேண்டும், கற்ற வித்தையை முழுவதும் கற்றுத்தர வேண்டும், அப்போது தான் நமது சித்த மருத்துவம் மக்களை சென்று அடையும் என நான் நம்புகிறேன்.

  • machamuni says:

   அன்புள்ள திரு கோபினாத் அவர்களே ,
   கருத்துரைக்கு மிக்க நன்றி,
   இறை சித்தம் எல்லாவற்றையும் நடத்துகிறது. இவற்றையும் நடத்த எண்ணியிருந்தால் நடக்கட்டும்.
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 8. ரிஷி says:

  ஐயா, மிகவும் விளக்கமான பதிவு. மிக்க நன்றி.
  http://rishiraveendran.blogspot.com/2013/01/manthenas-natural-living-style.html

  இந்தப் பதிவில் இருக்கும்படி நம் வாழ்க்கை முறை அமைந்தால் நோய்கள் எதுவும் நம்மை அண்டாது எனவும் வந்த நோய்களை படிப்படியாக(நீரிழிவு உட்பட ) குணப்படுத்திக்கொள்ளலாம் எனவும் ஒரு நம்பிக்கை. டாக்டர் மந்தேனா சத்யநாராயண ராஜு என்பவரின் பரிந்துரை இது. காலையில் எழுந்ததும் 1.25 லிட்டர் நீர் அருந்தவேண்டும். பின்னர் ஒரு நாளைக்கு ஏறக்குறைய 3 டூ 5 லிட்டர் வரை நீர் அருந்த வேண்டும் என்கின்றார். இது பற்றி உங்களின் கருத்து என்ன ?

  • machamuni says:

   அன்புள்ள திரு ரிஷி அவர்களே ,
   கருத்துரைக்கு மிக்க நன்றி,
   தங்கள் கட்டுரையைப் பார்த்தேன்.படித்தேன்.உள்ளவைகள் அனைத்தும் நல்லவையே .சிலவற்றைத் தவிர.இந்த முறையில் காலையில் தண்ணீர் அருந்தும் ஒரு இயற்கை நல வாழ்வு அமைப்பின் உறுப்பினர்களை ஒரு முறை நாடிப் பரிசோதனையில் ஆழத்தியதில் அனைவருக்குமே , சிலேத்தும தொந்தம் இருந்தது.அவர்கள் அனைவருக்கும் நாம் கூறியது இதுதான்.மிகினும் குறையினும் நோய் செய்யும் நூலோர் வழி முதலாவெண்ணிய மூன்று.இதன் அடிப்படையில் தண்ணீர் தாகம் என்று உடல் கேட்டால் மட்டுமே கொடுத்தல் நலம்.அப்படியல்லாமல் தண்ணீரை வலுக்கட்டாயமாக திணித்து உள்ளே அனுப்பி வைப்பது தேவையற்றது.
   தக்காளி நாவிற்கு ருசியைக் கொடுத்து உடலெங்கும் வியாதியை உண்டாக்கும் என்று குணபாடம் கூறுகிறது.எனவே அது என்றும் நமக்கு தீங்கே தரும் . மற்றவை நல்லதே.கடைப்பிடிக்கலாம்.
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 9. varadharajan says:

  மிகவும் அருமையான பயனுள்ள தொடர். மிக்க நன்றி சுவாமி…

  • machamuni says:

   அன்புள்ள திரு வரதராஜன் அவர்களே ,
   கருத்துரைக்கு மிக்க நன்றி,
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 10. balajikannan says:

  வணக்கம் அய்யா, சர்க்கரை வியாதிக்குள் இத்தனை ஆச்சரியங்கள்.தொடரட்டும் உங்கள் சேவை.வாழட்டும் மனித குலம்.

  • machamuni says:

   அன்புள்ள திரு பாலாஜி கண்ணன் அவர்களே ,
   கருத்துரைக்கு மிக்க நன்றி,
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 11. Thirunavukarasu says:

  Dear swami Iyya
  The above mentioned news are 100% real. In case of allopathy they don’t HOW TO CURE NATURALLY?.Paracelsus says”DOCTOR DOES NOT CURE ANY DISEASE, ONLY THE NATURE DOES IT. THE ONLY THING OF DOCTOR IS TO WORK IN OPEN MINDEDLY. THIS IS THE SECRET FACT”. We should remember abt Edward jenner, In order to cure small pox he take over the cow pox as a medicine. It is like a pain for pain.

  NANDRI IYYA.

  • machamuni says:

   அன்புள்ள திரு திருநாவுக்கரசு அவர்களே ,
   கருத்துரைக்கு மிக்க நன்றி,
   பல கருத்துரைகளை ஆங்கிலத்தில் எழுதிவிட்டீர்கள்.இனி தமிழில் எழுதுங்கள்.நல்ல கருத்துக்களை வரவேற்கிறேன்.
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 12. saran says:

  where is சர்க்கரை வியாதியை குணமாக்கலாம்(பாகம்7)?

  • machamuni says:

   அன்புள்ள திரு சரண் அவர்களே ,
   கருத்துரைக்கு மிக்க நன்றி,
   எத்தனை நாட்களாக எமது வலைத் தளத்தை படித்து வருகிறீர்கள்.பாகம் ஆறு வெளியானது பிப் 24 அதற்குள் பாகம் ஏழை கேட்கிறீர்களே .மிக மிக அவசரமோ? எமது வலைத் தளத்தில் உள்ள எல்லாக் கட்டுரைகளையும் படித்தாலே ஒரு வியாதியும் வர வொட்டாமல் செய்து கொள்ளலாமே!!!முழுவதையும் படியுங்கள்.
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 13. பரமசிவம், மலேசியா says:

  அய்யா வணக்கம். சர்க்கரை வியாதியை குணமாக்கலாம் என்று பல அறிய கருத்துக்களை கூறுகிறீர்கள்.நானும் பல விஷயங்களை தெரிந்து கொண்டேன். எனக்கு ஒன்று மட்டும் புரியவில்லை. தமிழர்களின் சமையல் அறை ஒரு மூலிகை பண்ணை. அன்றாடம் ஏதாவது ஒரு மூலிகை நிச்சயம் உட்கொள்வோம். மற்ற இனம் அப்படி அல்ல. ஆனால் வியாதிகள் மட்டும், மற்ற இனத்துக்கு சரி சமமாக வருகிறதே. இது எதனால்.

  நன்றி

  • machamuni says:

   அன்புள்ள திரு பரமசிவம் அவர்களே ,
   கருத்துரைக்கு மிக்க நன்றி,
   சமையலை நாகரீகப்படுத்துகிறோம் என்று மிக்ஸியை (அனைத்து துவையல் மற்றும் பாதி வேக வைத்து சாப்பிட வேண்டிய பொருட்களை முழுதுமாக அரைக்கும் போடு வெளியாகும் சூட்டில் முழுவதும் வெந்து போக வைக்கிறது)கொண்டு வந்து அம்மிக் கல்லை ஓரங்கட்டியது .கெட்டுப் போகாமல் வைத்திருக்க ஃப்ரிட்ஜ் {என்ற சவப் பெட்டியை சமையலறைக்கு கொண்டு வந்தது}.இன்னும் இது போல பல விடயங்களை சர்க்கரை நோயை குணமாக்கலாம் தொடரில் காணுங்கள்.
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 14. உங்கள் பணி இவ்வுலக மக்கள் அனைவரையும் போய் சேர வேண்டும் என்ற அக்கறையில் வாடும் உங்களை மானசீகமாக குருவாக ஏற்றுக்கொண்ட சிறியோன்;பாலாஜி கண்ணன்.

  • machamuni says:

   அன்புள்ள திரு பாலாஜி கண்ணன் அவர்களே ,
   கருத்துரைக்கு மிக்க நன்றி,
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 15. anand says:

  ஐயா,
  நான் 14 வருடங்களாக புகை பிடித்து வந்தேன். தற்போது நிறுத்தி விட்டேன். என்னுடைய நுரையீரல் பழைய நிலையை அடைய எவ்வளவு நாட்கள் ஆகும். நுரையீரல் புகைபிடிக்காததற்கு முன்பு எப்படி இருந்ததோ அப்படி அடைய நான் என்ன செய்ய வேண்டும்? அதற்கு எதாவது மூச்சு பயிற்சி, மூலிகை வைத்தியம் உள்ளதா?

  • machamuni says:

   அன்புள்ள திரு ஆனந்த் அவர்களே ,
   கருத்துரைக்கு மிக்க நன்றி,
   வாய் வழி செல்லும் எந்த அசுத்தங்களையும் வாய்வழியே மருந்துகள் கொடுத்து குணப்படுத்தலாம்.மூக்கின் வழியே இழுக்கும் புகையில் உள்ள நச்சுக்களை மூக்கின் வழியே வெளியேற்றுதல் கடினம்.இரத்தத்தின் மூலம் கொண்டு வந்துதான் வெளியேற்ற வேண்டும். எனவே இதைச் செய்ய உங்களுக்கு மிகப் பொறுமையும் மனக் கட்டுப்பாடும் அவசியம்.அது முதலில் சாத்தியமா என்று யோசித்துக் கொள்ளுங்கள்.அந்த மனோதிடம் இல்லையென்றால் இதிலிருந்து மீள்வது கடினம்.ஏனெனில் உங்கள் உடலில் உள்ள நிகோடின் இன்னும் நிகோடினை உடலுக்குள் தரச் சொல்லி கட்டளையிட்ட வண்ணம் இருக்கும்.இப்போது உங்கள் மனம் கட்டுப்பாட்டில் இருந்தாலும் மிச்ச சொச்சம் இருக்கும் விஷங்கள் உங்களை சிகரெட்டை பற்ற வைக்கத் தூண்டிய வண்ணம் இருக்கும்.பிரணாயாமப் பயிற்சியை நல்ல பயிற்சியுள்ள முன்னனுபவமுள்ள யோகா ஆசிரியரை வைத்து பயிலவும். வல்லாரைச் சாற்றில் ஊற வைத்த திப்பிலியை , சிகரெட்டு பிடிக்கும் எண்ணம் எழும்போது வாயிலிட்டு சுவைத்து வர, நுரையீரலில் சேர்ந்த அத்தனை அழுக்குகளும் வெளியேறி இத்துயரத்திலிருந்து மீளலாம்.
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 16. ஸஹதுல்லாஹ் says:

  அண்ணன் அவர்களுக்கு,
  மருத்துவ விசயத்தில் இந்த அலோபதியினருக்கு முற்றிலும் அறியாமையில் அடிமைப் பட்டுக் கிடந்த எங்களைப் போன்ற சாதாரண மக்களை இது போன்ற அழகான தொடர்களால் விழித்து எழச் செய்யும் தங்கள் பணி மென்மேலும் சிறக்க எனது பிரார்த்தனைகள்.

  தங்களன்புள்ள,
  ஸஹதுல்லாஹ்

  • machamuni says:

   அன்புள்ள திரு சஹதுல்லாஹ் அவர்களே ,
   கருத்துரைக்கு மிக்க நன்றி,
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 17. Manevasaka.T. says:

  அருந்தவப்பெருந்தகையீர்,

  அருமை!!!!!!!!!!!!!!!!!

  முதலில் மிக்க நன்றி இறைக்கும் உமக்கும்

  என்னை முதலில் மன்னித்துவிடுங்கள்

  இந்த வலைப்பதிவுகளால் பயனடையும் அணைவருடைய சார்பாகவும் நான் ஒன்று சொல்லுவேன் தயவுசெய்து எம்மை கோபிக்காதீரும்.

  இறைவன் சித்தம் தான் உம்மை உருவாக்கி செதுக்கி மெருகூட்டி உலகுக்கு அளித்திருக்கிறது. எம்அனைய பதர்கள் விதைகளாக வினைத்திறன் பெற்றுய்ய தங்களைப் போன்றோர் (அனுபவம் நிறைந்தவர்கள் ) கடை விரிக்கதான் வேண்டும். வள்ளல் இராமலிங்க அடிகளே” கடைவிரித்தேன்” என்றபோது

  தங்களை போன்றோர் அவசியம் நாடெங்கும் சித்த மருத்துவ விழிப்புணர்வு வகுப்புகளை நடாத்திட வேண்டும் என்பது எமைப் போன்றோரின் பேரவா

  இறைவன் சித்தத்தையும் உமது ஆன்மாவையும் இறைஞ்சும்

  தங்கள் அன்புள்ள
  மணிவாசகா

  • machamuni says:

   அன்புள்ள திரு மணிவாசகா அவர்களே ,
   கருத்துரைக்கு மிக்க நன்றி,
   ///இறைவன் சித்தம் தான் உம்மை உருவாக்கி செதுக்கி மெருகூட்டி உலகுக்கு அளித்திருக்கிறது. எம்அனைய பதர்கள் விதைகளாக வினைத்திறன் பெற்றுய்ய தங்களைப் போன்றோர் (அனுபவம் நிறைந்தவர்கள் ) கடை விரிக்கதான் வேண்டும்///
   இறைவன்தான் எம்மை ஆட்டுவிக்கிறான்.இந்த உலகையும் உலகிலுள்ள அனைத்தையும் ஆட்டுவிக்கிறான்.அந்த இறையாற்றலுக்குத் தெரியாதா எம்மை என்ன செய்ய வேண்டும் என்று????. எம் செயலாவது யாதொன்றுமில்லை!!!இனித் தெய்வமே!! உன் செயலேயென்று உணரப் பெற்றேன்!!!!.
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 18. வெங்கட் says:

  அன்புடையீர்,

  வணக்கம். கடந்த 3 வார காலமாம எனது இடது கண் இமை அடிக்கடி துடிக்கிறது. விரலை வைத்து அழுத்தினால் நின்று விடுகிறது.

  இது பயப்படும்படியான விஷயமா அல்லது சரி செய்து விடலாமா என்று கூறினால் மிகவும் உதவியாக இருக்கும்.

  அன்புடன்
  வெங்கட்
  சங்ககிரி

  • machamuni says:

   அன்புள்ள திரு வெங்கட் அவர்களே ,
   கருத்துரைக்கு மிக்க நன்றி,
   பொதுவாக ஆண்களுக்கு இடது கண் துடிப்பது நல்ல சகுனம் அல்ல என்று சகுன சாஸ்திரம் சொல்கிறது.உடல் ஆரோக்கியத்திற்கும் இது உகந்தது அல்ல.கூர்மன் என்ற வாயுதான் கண்ணிமைகளில் இயங்குகின்றது.கூர்மன் சரி இல்லை என்றால்,உடலில் சரம் சரியாக இயங்காததால்தான் இது போன்ற பிரச்சினைகள் ஏற்படும்.இதை சரி செய்ய மூச்சு எந்த நாசித் துவாரத்தில் ஓடுகிறதோ அந்த நாசித் துவாரத்தில் மூச்சை இழுத்து அழுத்தி கும்பகம் செய்து அடுத்த நாசித் துவாரத்தில் மூச்சை நன்கு அழுத்தி வெளியே விட வேண்டும் .பின் மறு நாசித் துவாரத்தில் மூச்சை இழுத்து அழுத்தி கும்பகம் செய்து அடுத்த நாசித் துவாரத்தில் மூச்சை நன்கு அழுத்தி வெளியே விட வேண்டும்.இது போல் பல முறை செய்ய சரம் சரியாகும்.
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 19. ம . சரவணன் says:

  வணக்கம் அய்யா,
  உங்களது பதிவுகள் அனைத்தும் படிக்க படிக்க தூண்டுகிறது. சர்க்கரை வியாதியை அனைத்து பாகங்களை புத்தகமாக வெளி இடலாம் என்னும், அனைவருக்கும் பயன் தரும் என்று நினைக்கிறேன்……..
  நன்றி
  ம.சரவணன்

  • machamuni says:

   அன்புள்ள திரு திரு ம.சரவணன் அவர்களே ,
   கருத்துரைக்கு மிக்க நன்றி,
   இணையத்தில் உள்ள பல விடயங்களை (காணொளிக் காட்சிகள். புகைப்படங்கள்) புத்தகத்தில் கொண்டு வர இயலாது.மேலும் அதற்கு நிறைய செலவாகும்.அதுவெல்லாம் தாமாக நடக்க வேண்டும்.நடக்கும்.பிறகு பார்க்கலாம்.
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 20. M.SARAVANAN says:

  அய்யா வணக்கம் ,
  மிகவும் அருமையான பதிவுகள் அய்யா ஆங்கில மருத்துவம் எப்படி பட்டது அதனால் என்ன விளைவுகள் வரும் என்று கூறினீர்கள் நன்றி.அய்யா பொதுவாக காய்ச்சல், தலைவலி, உடல்வலி ,சளி தொல்லைகள் வீசிங் வருகின்றதே அதற்கு ஆங்கில மருந்துகள் ஒரு சில வேளை நாம் உட்கொள்கிறோம் அதற்கு மாற்றாக வைத்தியம் உண்டா கூறவும் அய்யா????
  சரவணன்
  திருச்சி

  • machamuni says:

   அன்புள்ள திரு திரு சரவணன் அவர்களே ,
   கருத்துரைக்கு மிக்க நன்றி,
   எமது வலைத் தளத்தில் உள்ள அத்தனை கட்டுரைகளையும் படித்து முடியுங்கள்.அதில் உள்ள விடயங்களில் இவையெல்லாம் ஏற்கெனவே பலமுறை எழுதிவிட்டோம்.அதில் உள்ள கருத்துரைகள் அத்தனையும் படியுங்கள்.பல கருத்துரைகள் ஒரு பதிவு எழுதும் அளவிற்கு விளக்கியுள்ளோம்.எமது வலை பூவில் காய்ச்சல் பற்றிய சில உண்மைகள் என்ற தலைப்பில் பல விடயங்களைத் தெளிவாக்கியுள்ளேன்.அதில் உள்ளவற்றையும் படியுங்கள்.
   கீழ்க்காணும் இணைப்பைச் சொடுக்கித் தெரிந்து கொள்ளுங்கள்.
   http://machamuni.blogspot.in/2010/09/1_16.html
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 21. M.SARAVANAN says:

  சரவணன்

  அய்யா என்னுடன் வேலை பார்க்கும் நபருக்கு கால் பாதத்தில் வியர்வை வருகின்றது அப்படி வருவதினால் என்ன செய்வது அய்யா தயவு செய்து சற்று கூறவும் அய்யா

  • machamuni says:

   அன்புள்ள திரு திரு சரவணன் அவர்களே ,
   கருத்துரைக்கு மிக்க நன்றி,
   உடலில் இருக்கும் அழுக்குகள் அதிகரிக்கும் போது அவை அனைத்தும் காலுக்குத்தான் அதிகம் வரும்.இதனால்தான் துர் நீர்கள் குதிகால் வாதமாகும் , பித்த வெடிப்பை அதிகம் காலில் உண்டாக்கும் பித்த நீர்களும் காலில் அதிகம் பாதிப்பை உண்டாக்கி பித்த வெடிப்பை உண்டாக்குகின்றன.அது போலத்தான் இதுவும்.அதிகாலையில் தினமும் காலி 6 மணி முதல் 6.30 வரை ஒரு தட்டில் நல்லெண்ணெயை ஊற்றி அதில் இரண்டு காலையும் வைத்திருங்கள்.கண்களில் இந்த நல்லெண்ணெய் பசபசப்புத் தட்டும்போது காலை எடுத்துவிட்டு பின் குளிக்கச் சொல்லுங்கள்.இந்தப் பிரச்சினை ஒரு வாரத்திலேயே கட்டுப்பாட்டுக்கு வரும்.
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 22. மணி says:

  அருந்தவப்பெருந்தகையீர்

  வணக்கம்

  /////இறைவன்தான் எம்மை ஆட்டுவிக்கிறான்.இந்த உலகையும் உலகிலுள்ள அனைத்தையும் ஆட்டுவிக்கிறான்.அந்த இறையாற்றலுக்குத் தெரியாதா
  எம்மை என்ன செய்ய வேண்டும் என்று????.//////

  எமக்கிருந்த பேராசையினால் இப்படி எழுதிவிட்டேன் மன்னித்துவிடுங்கள்.

  ”ஆசைமிகைப்படும் எண்ணம் ஆத்ம கிலேசத்தை உண்டாக்கும்” என்பதை உண்ர்த்திய இறை சித்தத்திற்கும் உமக்கும் நன்றிகள் பலப்பல

  தங்கள் அன்புள்ள
  மணிவாசகா

  • machamuni says:

   அன்புள்ள திரு மணிவாசகா அவர்களே ,
   கருத்துரைக்கு மிக்க நன்றி,
   ///”ஆசைமிகைப்படும் எண்ணம் ஆத்ம கிலேசத்தை உண்டாக்கும்” என்பதை உண்ர்த்திய இறை சித்தத்திற்கும் உமக்கும் நன்றிகள் ///
   எமக்கு இந்த விடயங்களைத் தெரிவித்ததும் இறை.வெளிப்படுத்துவதும் இறைதான். தெரிந்த அனைத்தையும் பயன் பெற நோயாளர்களையும் , பயனாளர்களையும் அனுப்புவதும் இறைதான்.அவனன்றி ஓரணுவும் அசையாது.
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 23. பிரெம் குமார் says:

  அய்யா என் வலது கால் முட்டிக்கு அடியில் ஒரு நரம்பு சுருக் சுருக் என மின்சாரம் தாக்கியது போல வலிக்கிறது . அதற்கு என்ன செய்வது?

  • machamuni says:

   அன்புள்ள திரு பிரேம் குமார் அவர்களே ,
   கருத்துரைக்கு மிக்க நன்றி,
   வாத வலியின் துவக்கம்.முதலில் தக்காளியை உணவிலிருந்து அறவே நீக்குங்கள்.சதுரகிரி ஹெர்பல்ஸ் கண்ணன் அவர்களிடம் மூட்டு வலித் தைலம் என்ற தைலம் கிடைக்கும். இதை ஒவ்வொரு நாள் மாலையிலும் வெளிப்பக்கமாக பூசி ஒரு மணி நேரத்துக்கு குறையாமல் ஊற விட்டுப் பின் வெந்நீர் ஊற்றிய பின் அப்படியே விட்டுவிடுங்கள்.சோப்பை பயன்படுத்தாதீர்கள்.மறுநாள் காலையில் குளிக்கும் போதும் சோப்பை பயன்படுத்தாதீர்கள் ,கண்டிப்பாக சீயக்காய் உபயோகியுங்கள்.சதுரகிரி ஹெர்பல்ஸ் கண்ணன் அவர்கள் பல இயற்கை வாசனைப் பொருட்களையும், உடலின் ஆரோக்கியத்தை பேணிக் காக்கும் பொருட்களையும் (இவை அந்தக் கால அரசர்களும், ஜமீந்தார்களும் உபயோகித்து வந்தவை) கலந்து தயாரித்துள்ள சீயக்காய் பொடியையும் உபயோகித்து நலம் பெறுக.
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 24. hari says:

  அன்புள்ள சாமிஜி அவர்களுக்கு,
  வணக்கம்.சர்க்கரை வியாதி சம்பந்தமான பதிவுகள் மூலம் அதன் நுணுக்கமான பல்வேறு பரிமாணங்களையும்,வேறு முக்கியமான விஷயங்களையும் தங்கள் மூலம்
  தெரிந்து கொண்டிருக்கிறேன். மிக்க நன்றி .
  மூலிகைமணி இதழ் பற்றி இப்பதிவில் குறிப்பிட்டு இருப்பது சிறப்பாக உள்ளது.
  இவ்வளவு பழமையான இதழ்களும் தங்கள் நூலகத்தில் இருக்கிறதா அய்யா ?
  அதன் நிறுவனர் திரு கண்ணப்பர் மற்றும்திரு வெங்கடாசலம் ஆகியோருடன் தங்களுக்கு நட்பு -தொடர்பு உள்ளதா அய்யா ?
  நன்றி ,என்றும் அன்புடன் ஹரி

  • machamuni says:

   அன்புள்ள திரு ஹரி அவர்களே ,
   கருத்துரைக்கு மிக்க நன்றி,
   எமது நூலகத்தில் 5,000 புத்தகங்களுக்கு மேல் உள்ளது.அவற்றில் அவசியம் ஏற்படும் போது சிலவற்றில் உள்ளவற்றை மட்டுமே வெளியிட்டு வருகிறேன்.எமக்கு நேரமும் பொருளாதார ரீதியாகவும் ,தொழில் ரீதியாகவும் நிம்மதியான சூழலும் ஏற்பட்டால் எழுதிக் குவிக்க எத்தனையோ இருக்கிறது.திரு கண்ணப்பர் தற்போது இறைவனடி சேர்ந்துவிட்டார்.அவரது மகன் திரு க .வேங்கடேசன் மட்டும்தான் (வெங்கடாசலம் இல்லை ) இருக்கிறார்.ஆனால் அவர் தந்தை வழியை விட்டு,வேறெங்கோ போய்க் கொண்டிருக்கிறார்.அல்லோ சித்தா என்று ஒன்றைச் சொல்லிக் கொண்டு ஆங்கில அல்லோபதியும் சித்த மருந்துகளும் சேர்த்து நோய்களை குணமாக்கலாம் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்.விஷமும் அமுதமும் சேர்ந்து எப்படி அமுதமாக முடியும்.அது நமக்குத் தேவை இல்லை.எனவே தொடர்பும் இல்லை.
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 25. shareef says:

  அன்பு சாமி ஜி

  வெரிகோஸ் வெயின் நோயை பற்றி பதிவு எதிர்பார்க்கிறேன்
  இந்த நோய்க்கு உடனடி தீர்வு உண்டா ஜி

  உறவினர் ஒருவருக்கு வெரிகோஸ் வெயின்நோய்
  முற்றிய நிலையில் (கால்கள் இரண்டும் மிகவும் கருப்பாக )இருக்கிறார்

  தங்களது உதவி தேவை சாமி ஜி

  அன்புடன்
  ஷரீப்

  • machamuni says:

   அன்புள்ள திரு ஷெரீஃப் அவர்களே ,
   கருத்துரைக்கு மிக்க நன்றி,
   வெரிகோஸ் வெயின் பற்றித் தவறான பல கருத்துக்கள் உள்ளன.அது பற்றித் தனிப்பதிவு ஒன்று எழுதுகிறோம்.
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 26. p.n.prathap says:

  மதிப்பிற்குரிய அய்யா அவர்களுக்கு ,

  எனக்கு உணவு உண்ட சிறிது நேரத்தில் எனது இடது மார்பு மற்றும் தோல் பட்டை கழுத்து பின்னர் தலையின் பின் பகுதி வலிக்க ஆரம்பிகிறது .அது மட்டும் இல்லாமல் இது போன்று சில சமயம் திடீரென்று அதே வலி வருகிறது கடந்த மூன்று வருடங்களாக இந்த பிரச்சனை உள்ளது தகுந்ததொரு உபயம் சொல்லவும் நன்றிகளுடன் .

  குறிப்பு: குறிப்பு: அய்யா எனக்கு வயது 31 ,சர்க்கரை , ரத்த கொதிப்பு மற்றும் கொழுப்பு உள்ளது

  பு.நா .பிரதாப்

  • machamuni says:

   அன்புள்ள திரு பு .நா பிரதாப் அவர்களே ,
   கருத்துரைக்கு மிக்க நன்றி,
   பசியாமல் உண்ணாதீர்கள். சர்க்கரை நோயை குணமாக்கலாம் பாகங்களில் சொல்லி இருப்பனவற்றை கடைப்பிடியுங்கள்.இனி வரும் பதிவுகளைப் படித்துப் பாருங்கள்.ஒவ்வொரு வேளை உணவிலும் முதல் கவளம் உணவை அஷ்ட சூரணத்துடன் கலந்து உண்ணுங்கள்.பொறித்த வறுத்த பொருட்களை தவிருங்கள். வயிறு உணவை ஜீரணம் செய்யாமல் இருக்கும் போது உணவை மேலும் உள்ளே போடாதீர்கள்.அவைதாம் இப்படி தொல்லை தருகின்றன.
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

   • p.n.prathap says:

    மதிப்பிற்குரிய அய்யா அவர்களுக்கு ,

    மிக்க நன்றி தாங்கள் சொன்னது போல் நடந்துகொள்கிறேன்

    நன்றிகளுடன் .
    பு.நா.பிரதாப்

    • machamuni says:

     அன்புள்ள திரு பு .நா பிரதாப் அவர்களே ,
     கருத்துரைக்கு மிக்க நன்றி,
     மிக்க நன்றி
     என்றென்றும் பேரன்பினால்
     சாமீ அழகப்பன்

 27. kapil says:

  வகை 1 நீரிழிவு நோய்க்கு என்ன சிகிச்சை, தயவு செய்து சொல்லுங்கள்

  • machamuni says:

   அன்புள்ள திரு கபில் அவர்களே
   கருத்துரைக்கு மிக்க நன்றி,
   நீங்கள் ஆங்கில மருத்துவத்தில் உள்ளது போல ஒரு மருந்தைத் தின்றவுடன்(அறிகுறிகள் மட்டும் மறைந்து) குணம்(ஏற்படுவது போன்ற தோற்றம்) ஏற்படும் என்று நினைத்தீர்களானால் அது தவறு.சித்த மருத்துவம் என்பது ஒரு வாழ்க்கை முறை அதையே நாம் சர்க்கரை நோயை குணமாக்கலாம் பாகங்களில் வருணித்து எழுதி வருகிறோம்.நன்றாக படித்து தெளிந்து பின் கடைப்பிடியுங்கள்.
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 28. kapil says:

  என் சகோதரி (26 வயது ) வகை 1 நீரிழிவு நோய் கடந்த இரண்டு வருடங்களாக உள்ளது , இந்த நீரிழிவு குணப்படுத்த மருந்து வேண்டும்

  • machamuni says:

   அன்புள்ள திரு கபில் அவர்களே
   கருத்துரைக்கு மிக்க நன்றி,
   நாம் போட்டிருக்கும் காணொளிக்காட்சியை கண்ட பிறகுமா இன்னும் புரியவில்லை.
   http://machamuni.com/?p=2253
   டைப் 1 அல்லது டைப் 2 என்று நீரிழிவில் வகைப்படுத்தி வைத்திருக்கும் முட்டாள்தனமான ஆங்கில வைத்தியம் இன்னும் எத்தனை நாட்களுக்கு உங்களைப் போன்றோரை ஏமாற்றி வரப் போகிறதோ புரியவில்லை.நீங்களும் அதில் ஏமாந்து போகத் தயாராக இருக்கும் போது ஆங்கில வைத்தியர்களுக்கு என்ன குறை.”juvenile sugar” என்ற வியாதியையே குணமாக்கியிருக்கிறோம்.அப்படி யெனில் இதைக் குணப்படுத்தவா முடியாது உங்களுக்கு புரிந்தால் சரி.
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 29. sundar says:

  respected sir ,
  marvelous about the way your explanation on diabetic , we pray the god to lead service still fine tuned .

  • machamuni says:

   அன்புள்ள திரு சுந்தர் அவர்களே
   கருத்துரைக்கு மிக்க நன்றி,
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 30. Thiruj says:

  Dear sir,
  When stopped Insulin, When sugar going up, i am having a problem UTI. My penis foreskin is swelling and some white powder like materials are deposit around the penis front side. IF i start Insulin, sugar is control and this problem will disappear. I understand bad glucose should not use in cells . it should be out through urine. I want to be without using insulin Injection. I dont have any fear about raising sugar. But my penis having UTI problem. Could you please give a solution for that? And what is that white martial? Why its coming ?

  • machamuni says:

   அன்புள்ள திரு திருஜி அவர்களே
   கருத்துரைக்கு மிக்க நன்றி,
   கழிவுச் சர்க்கரையை சிறு நீரகம் வெளியேற்றும் போதே, சிறு நீரகமும் துன்புறும்.சிறு நீர்ப் புற வழியில் இந்தச் ச்ர்க்கரையால் தொற்று உண்டாகும் அதுவே சிறுநீரக மொட்டுப் பகுதியில் மாவு போன்ற பொருள் படிவதனால் அதில் உண்டாகும் கிருமிகளால் அரிப்பும்,சிறு நீர்ப் புற வழியில் ஆண்குறித் தோலில் வெடிப்பும் உண்டாகும்.இதற்கு நல்ல மருந்து கற்றாழை சோற்றையும்(கழுவாமல் எடுத்துக் கொண்டு) வேப்பெண்ணெயும் விளக்கெண்ணெயையும் கலந்து காய்ச்சி எடுத்து போட்டு வர இந்தகுறி மொட்டில் உண்டாகும் பிரச்சினைகள் தீரும். கற்றாழையை உள்ளுக்கு, தினமும் சாப்பிடும் சாப்பாடு மூன்று வேளையில் ஏதாவது ஒரு வேளை (மதிய வேளை உத்தமம்) சாப்பாட்டுக்குப் பதில் சோற்றுக் கற்றாழையை (நடுவில் உள்ள சோற்றை மட்டும் எடுத்து துண்டு செய்து நன்றாக ஏழு முறை கழுவிய பின் சாப்பிட வேண்டும்) சாப்பிட நீங்கள் மேலே குறிப்பிட்டுள்ள வியாதிகள் அத்தனையும் தணியும்.இத்துடன் சதுரகிரி ஹெர்பல்ஸ் கண்ணன் அவர்களின் சர்க்கரைக் கொல்லிப் பொடியையும் வாங்கிச் சாப்பிட்டு வர சர்க்கரை நோயிலிருந்தும் இன்சுலின் போடுவதிலிருந்தும் தப்பலாம்.
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 31. Thiruji says:

  Thank you very much sir. my long time problem solved.

  Could you please explain , how will works sugar killing powder in our body. Is it removes bad sugars through urine? or Is it burn sugar in blood ? or Will it works in pancreas to secrete insulin?.

  my sugar problem cause is Liver and digestion problem in inner organs. I am going motion 4 , 5 times in a day and it goes black and like paste semi solid. If stop insulin motion changes little bit yellow. (I heard if motion blacks means cells are dead. or Liver problem or kidney problem. what is true)

  Sugar killing powder will help to cure the sugar?

  • machamuni says:

   அன்புள்ள திரு திருஜி அவர்களே
   கருத்துரைக்கு மிக்க நன்றி,
   வயிறு,மற்றும் ,கல்லீரல் , மண்ணீரல் இவைகளில் ஒத்தியைவு இல்லாத்தால்தான்,சீரண சக்தி குறைந்து சர்க்கரை நோய் என்ற மதுமேகம் உருவாகிறது.சீரண சக்தியை அதிகரித்தால் அனைத்தும் சரியாகும்.சர்க்கரைக் கொல்லிச் சூரணம் இதையும்,அதிலுள்ள ப்ருட்கள் இன்னும் பல செயல்கள் புரிவதையும்தான் தனித் தனியாக அந்தப் பதிவிலேயே விளக்கி உள்ளேனே.மீண்டும் அதையே கேட்டுள்ளீர்கள்.
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 32. yuvarajs says:

  migavum thevaiyaana vilakkangal kidaikindrathu nandri

  • machamuni says:

   அன்புள்ள திரு யுவராஜ் அவர்களே,
   கருத்துரைக்கு மிக்க நன்றி,
   முதலில் தமிழில் எழுதுங்கள். பொதுவாக தமிழில் கருத்துரை எழுதாத நபர்கள் மீது எமக்கு சரியான மரியாதை ஏற்படுவதில்லை.நமது மொழி தமிழ்.நமது தமிழ் நம் உயிர்.நாமே அதை உபயோகிக்காவிட்டால் தமிழ் எப்படி வாழும்.பழக்கத்தில் உள்ள மொழிதான் வாழும்.நாம் எழுதியதை தமிழை அறிந்ததால் நீங்கள் படித்தீர்கள். முடியாது.இனிமேல் ஆங்கிலத்தில் கேள்வி கேட்டால் பதிலளிக்கக் கூடாது என்று முடிவு எடுத்துள்ளோம்.இனி ஆங்கிலத்தில் கருத்துரை எழுதினால் வெளியிட மாட்டோம் என மிகப் பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
   தமிழில் எழுதாதற்கு காரணமாக சொல்லிக் கொண்டே இருக்காதீர்கள்.“ தமிழ் எங்கள் உயிருக்கு நேர்” “ சாகும் வரை தமிழ் பயின்று சாக வேண்டும் .என் சாம்பலிலும் தமிழ் மணந்து வேக வேண்டும்” என்ற பாரதிதாசனின் வார்த்தைகள் எமக்கு உயிரான வார்த்தைகள்.எமது வலைத் தளத்தில் தமிழே முக்கியமானதாக இருக்க வேண்டும்.
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 33. yuvarajs says:

  மிக்க நன்றி தாங்கள் சொன்னது போல் நடந்துகொள்கிறேன்

  • machamuni says:

   அன்புள்ள திரு யுவராஜ் அவர்களே,
   கருத்துரைக்கு மிக்க நன்றி,
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 34. ஸஹதுல்லாஹ் says:

  அண்ணன் அவர்களுக்கு,
  ஒரு விடயம் கேட்க வேண்டும், இந்த சர்க்கரை குறைபாடுள்ளவர்கள் காலங் காலமாக உணவு உட்கொள்ளும் விசயத்தில் மிகப் பெரும் கட்டுப்பாட்டைச் சொல்வார்கள், அது தவறாக இருக்கும் என்று தோன்றுகிறது. என்னவென்றால் இனிப்பான பழங்களோ அல்லது இனிப்பு சார்ந்த எந்தப் பதார்த்தமோ கூடாது என்பார்கள். மற்றும் உணவும் மிகக் குறைந்த அளவில் எண்ணி வைத்துக் கொண்டு சாப்பிடுவார்கள், அதிகம் உண்டால் சர்க்கரை கூடிடும் என்று சொல்வார்கள். மற்றும் இதயப் பிரச்சனை உள்ளவர்கள் கொழுப்பு உள்ள ஆட்டு இறைச்சி அல்லது நெய் போன்றவைகள் எடுத்துக் கொள்ளலாமா.
  மற்றுமொரு சின்ன விண்ணப்பம் சர்க்கரைக் குறைபாட்டின் தாக்கம் மிக அதிகம் அல்லது சரியாக உள்ளது அல்லது குறைவு என்று எந்த முறையில் அறிந்து கொள்வது.
  இதற்கான பதில் பலருக்கு உபயோகமாக இருக்கும் என நம்புகிறேன்.

  என் கேள்விகளில் தவறுகள் இருப்பின் மன்னிக்கவும்.

  தங்களன்புள்ள,
  ஸஹதுல்லாஹ்

  • machamuni says:

   அன்புள்ள திரு ஸஹதுல்லாஹ் அவர்களே,
   கருத்துரைக்கு மிக்க நன்றி,
   உங்கள் கேள்விக்கு சர்க்கரை நோயைக் குணமாக்கலாம் பாகங்களில் விடை வரும்.இதற்கு நான் விடை சொல்லப் போனால் ஒரு பதிவே எழுத வேண்டும்.அது வாசகர்களுக்கு கிடைக்காமல் போகலாம்.பலர் கருத்துரைகளையே படிப்பதில்லை.மின்னஞ்சலில் வரும் பதிவை மட்டும் படித்துவிட்டு அப்படியே சென்றுவிடுகின்றனர்.
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 35. Krishna says:

  Vanakkam, sir please don’t mistake me, I am sending this from mobile, not able to installs Tamil fonts, my father Is having sugar 396 mg/dl, I just want to speak with you about that, could you please give me your contact number, forgive me if I am wrong, thanks a lot

  • machamuni says:

   அன்புள்ள திரு கிருஷ்ணா அவர்களே ,
   உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு எமது அலைபேசி எண் அனுப்பப்பட்டுள்ளது.தொடர்பு கொள்ளவும்.
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 36. Sathish says:

  I need பஷ்லூர் ரஹ்மான் ‘s book.
  How to get this?
  Please help me.

  • machamuni says:

   அன்புள்ள திரு சதீஷ் அவர்களே ,
   உங்களது கருத்துரைக்கு நன்றி,
   அந்தப் புத்தகங்கள் கீழ்க்கண்ட முகவரியில் கிடைக்கும்.
   ஹெல்த் டைம் பப்ளிகேஷன்ஸ்,
   17,(பழைய எண்) கஸ்டியன் பீச் ரோடு,
   சாந்தோம் , சென்னை-600 004.
   தொலை பேசி-044-24983534,24641333,]
   அலை பேசி :- 98404 98898
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 37. Sathish says:

  Please send your contact details to my mail.

  • machamuni says:

   அன்புள்ள திரு சதீஷ் அவர்களே ,
   உங்களது கருத்துரைக்கு நன்றி,
   எமது தனிப்பட்ட மின்னஞ்சல் முகவரிக்கு, எம்மைத் தொடர்பு கொள்வதற்கு சரியான காரணத்துடன் வாருங்கள்.தொடர்பு கிடைக்கும்.
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 38. இர்ஷாத் says:

  அய்யா இளம் சர்க்கரை நோயளிகள் காலையில் கருஞ்சீரகம் சாப்பிடுவதினால் சர்க்கரை நோய் தீர வாய்ப்புள்ளதா?

  • machamuni says:

   அன்புள்ள திரு பிரேமானந்த் அவர்களே ,
   உங்களது கருத்துரைக்கு நன்றி,
   மூளைச்சாவு என்பது ஆங்கில மருத்துவத்தின் மற்றொரு முட்டாள்தனமான கொள்கைகளில் ஒன்று . உடலில் உயிர் இருக்கும் வரையும் உடலின் ஒவ்வொரு செல்லிலும் உயிர் சக்தி இருக்கும்.எனில் பகுதிச் சாவு என்பது சாத்தியமில்லாத ஒன்று . எனில் பிரம்மத்தின் நிலைப்பாடுகளை அறியாத ஆங்கில மருத்துவத்தின் அறிவு கெட்டத்தனமான முட்டாள்தனமான கொள்கைகள் பலரை பரலோகத்திற்கு அனுப்பி வருகிறது.மூளைச்சாவு பெற்ற உடலின் உடல் உறுப்புக்கள் மறு உடலில் பொருத்த முடியும் என்றால் உடலில் உயிர் இல்லாத பிணத்தின் உடல் உறுப்புக்களை ஏன் பொருத்த முடியவில்லை ?மூளைசெத்தால் உயிர் உடலில் இல்லை என்றால் உடலில் உள்ள உடலுறுப்புகள் வேலை செய்யுமா? எனில் பிணத்தின் உடல் உறுப்புக்களை ஏன் பொருத்த முடியவில்லை?
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

   • Ramanathan says:

    அய்யா
    அப்படி என்றால் அவரை சுய நினைவுக்கு கொண்டு வருவது எப்படி?

    • machamuni says:

     அன்புள்ள திரு ராமநாதன் அவர்களே ,
     உங்களது கருத்துரைக்கு நன்றி,
     நானும் எனது அக்கு பஞ்சர் குருநாதருமான திரு எம் என் சங்கர் அவர்களுடன், அவருடைய சீடர் ஒருவரின் தாயார் மூன்று வருடங்களாக கோமாவில் இருக்கும் அவருடைய தாயாரை பார்க்கச் சென்றோம் .எனது அக்கு பஞ்சர் குருநாதர் திரு எம் என் சங்கர் அவர்கள் அந்த கோமாவில் இருக்கும் நோயாளருக்கு சில வர்ம இளக்கு முறைகளை செய்த பின் , சுக்கை வாயில் போட்டு மென்று நோயாளரின் காதில் , மற்றும் கண்களில் வெறும் காற்றை மட்டும் ஊதினார். சில நிமிடங்களில் அந்த மூன்று வருட கோமா நோயாளி எழுந்த அதிசயத்தை முதன் முதலாகக் கண்டேன் நான்.அப்படிப்பட்ட அற்புதக் கலை நம் வர்மக்கலை .அதை தக்க நபரைக் கொண்டு பிரயோகம் செய்தாலே போதும்.
     மிக்க நன்றி
     என்றென்றும் பேரன்பினால்
     சாமீ அழகப்பன்

 39. வெங்கட் says:

  அன்புடையீர், வணக்கம்.

  சின்ன விண்ணப்பம் சர்க்கரைக் குறைபாட்டின் தாக்கம் மிக அதிகம் அல்லது சரியாக உள்ளது அல்லது குறைவு என்று எந்த முறையில் அறிந்து கொள்வது.
  இதற்கான பதில் பலருக்கு உபயோகமாக இருக்கும் என நம்புகிறேன்.

  என் கேள்விகளில் தவறுகள் இருப்பின் மன்னிக்கவும்.

  அன்புடன்
  வெங்கட்

  • machamuni says:

   அன்புள்ள திரு வெங்கட் அவர்களே,
   கருத்துரைக்கு மிக்க நன்றி,
   பொதுவாக நோயறிதல் என்பனவற்றை நாடி பார்த்தல் ,முகக்குறி , நகக்குறி , நீர்க்குறி,கண்குறி , மேனி குறி காட்டல் , போன்றவற்றை வைத்து கணிப்பது சித்த வைத்தியத்தில் வழக்கம் . வயிறு மற்றும் கல்லீரல் , மண்ணீறல் செயல்பாட்டுக் குறைபாடுதான் சர்க்கரை நோய். முதலில் கால் பெருவிரல் நகங்கலில் கோடுகள் மற்றும் கருமை , நகக்கண்களில் கருமை மற்றும் கண் பார்வைக்குறைபாடும்தான் முதல் அறிகுறிகள்.ஏனெனில் கல்லீரல் , மண்ணீறல் சக்தியோட்டப் பாதைகள் பெருவிரலில்தான் தொடங்குகின்றன . ” LIVER OPENS IN EYE ” என்பார்கள் .எனவே ஈரலில் ஏற்படும் குறைபாடுகள் கண்களிலும் கண்பார்வையிலும் தெரிகின்றன.
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 40. மோகன் says:

  ஐயா டைப் 1 சர்க்கரை நோயை சித்த வைத்தியத்தில் குணப்படுத்த முடியுமா????

  • machamuni says:

   அன்புள்ள திரு மோகன் அவர்களே,
   உங்களது கருத்துரைக்கு நன்றி,
   டைப் 1 சர்க்கரை நோயை சித்த வைத்தியத்தில் குணப்படுத்த முடியும்.எந்த வியாதியையும் சித்த வைத்தியத்தில் குணப்படுத்த முடியும்.
   இப்படிக்கு
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

11 − 3 =