சதுரகிரி ஹெர்பல்ஸ் திரு கண்ணன் அவர்கள் தயாரிப்புக்கள் (பாகம் 5) மூலச் சூரணம் ( பாகம் 2)
March 19, 2013 by: machamuniசதுரகிரி ஹெர்பல்ஸ் திரு கண்ணன் அவர்கள் தயாரிப்புக்கள் (பாகம் 5) மூலச் சூரணம்( பாகம் 1 ) ஐ படித்துவிட்டு இந்த சதுரகிரி ஹெர்பல்ஸ் திரு கண்ணன் அவர்கள் தயாரிப்புக்கள் (பாகம் 5) மூலச் சூரணம்( பாகம் 2 ) ஐ தொடரவும்.
இது வரை நாம் வெளியிட்ட பதிவுகளில் கற்றாழையைப் பற்றிய இந்தப் பதிவை வெளியிடுவதில் மிகப் பெருமை அடைகிறோம் .
இந்த மருந்து கலவையில் சேரும் இரண்டாவது பொருளான சோற்றுக் கற்றாழைக்கே ஒரு தனிப்பதிவு எழுத வேண்டும்.அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த மூலிகை இது.
சோற்றுக் கற்றாழை என்றழைக்கப்படும் குமரி ஒரு மகா மூலிகை ஆகும்.இந்தக் குமரியின் படத்தை இம்ப்காப்ஸ் ன் சித்த மருந்து செய்முறைகள் புத்தகத்திலும், ஆயுர்வேத மருந்து செய்முறைகள் புத்தகத்திலும்,யூனானி மருந்து செய்முறைகள் புத்தகத்திலும் முதல் பக்கத்தில் போட்டிருப்பதில் இருந்து இதன் முக்கியத்துவம் உங்களுக்கு புரியும் என்றே நினைக்கிறேன் .
எந்த வைத்திய முறையிலும் கையாளப்படும் அற்புத மூலிகை.இந்த சோற்றுக் கற்றாழை அயல்நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு பொடியாக மாற்றப்பட்டு மீண்டும் நம் நாட்டிற்கே இறக்குமதி செய்யப்பட்டு அல்சருக்கான அல்லோபதி மாத்திரைகளிலும், சித்த, ஆயுர்வேத, யூனானி மருந்துகளுக்கும் உபயோகிக்கப்படுகின்றன.
சோற்றுக் கற்றாழையை உணவே மருந்தாக தயாரிக்கப்படும் சோற்றுக் கற்றாழைப் பாயசம் செய்யும் முறைகளை இங்கே விவரிக்கிறோம்.
சோற்றுக்கற்றாழையின்
உள்ளே இருக்கும் சதை பாகம் – 2 கப்,
பால் – 2 கப்,
பனங்கருப்பட்டி – தேவைக்கேற்ப,
முந்திரி, திராட்சை – ஒவ்வொன்றும் 10 எண்ணம்,
ஏலக்காய் – 2,
நெய் – 1 டீஸ்பூன்.
சோற்றுக் கற்றாழைப் பாயசம் எப்படிச் செய்வது?
சோற்றுக்கற்றாழையின் இலையைக் கீறினால் உள்ளே சோறு போன்ற வெள்ளையான சதைப்பற்றான பாகத்தை எடுத்து வைத்துக் கொள்ளவும் . அதை சிறிய துண்டுகளாக வெட்டி, சுமார் பத்து முறை தண்ணீரில் நன்கு அலசவும். காய்ச்சிய பாலில் அதைச் சேர்த்துக் கொதிக்க விட்டு ஆறவிடவும். பனங்கருப்பட்டியில் தண்ணீர் விட்டு பாகு காய்ச்சி, வடிகட்டவும்.
பால் – கற்றாழை கலவையில் விட்டு, ஏலப்பொடி சேர்த்துக் கலக்கவும். நெய்யில் முந்திரி, திராட்சை வறுத்துச் சேர்த்துப் பரிமாறவும். உடல் சூட்டைத் தணிக்கும். வெள்ளைப் படுதலை சரியாக்கும். மகப்பேறு பெறும் வாய்ப்பினை அதிகரித்து, கருப்பை வளர்ச்சிக்கும் உதவும்.கீழ்க் கண்ட பல பிரச்சினைகளை சரியாக்கும்.
உணவே மருந்து மருந்தே உணவு என்ற ரீதியில் கொடுக்கப்பட்ட உணவுக்குறிப்பு இது.
2)சோற்றுக் கற்றாழை:-
சோற்றுக்கற்றாழை குமரி என்றழைக்கப்படுவது ஏனெனில் எந்தக் குமரியையும் காமத்தில் அடக்கும் வல்லமையை இந்தக சோற்றுக் கற்றாழைக்கு உண்டு.விந்து நீக்கம் (சுய இன்பம் செய்வதனாலும், அதீதமான உடலுறவு கொள்வதனாலும்{ஒரு நாளுக்கு பல முறை உடலுறவு கொள்வது }) ஆனதால் ஏற்பட்ட மூலச் சூட்டின் காரணமாகவே மலக்கட்டு ஏற்பட்டு மூலமும் , பவுத்திரமும் உண்டாகின்றன.ஆனால் இதனால் ஏற்பட்ட தாது நஷ்டத்தையும் ,அதனால் ஏற்பட்ட சப்த தாதுக்களில் ஏற்பட்ட குறைபாடுகள்,ஆகிய இவற்றைக் கூண்டோடு தொலைக்கும் வல்லமை உள்ளது இந்த சோற்றுக்கற்றாழை.
சோற்றுக் கற்றாழையில் பல வகைகள் உள்ளன .சிறு கற்றாழை , செங்கற்றாழை , நறுங் கற்றாழை ,யானைக் கற்றாழை ,யானைக் கற்றாழை என பல பெயரிட்டு அழைத்தாலும் இந்த சோறுள்ள வகைக் கற்றாழைகள் அனைத்தும் ஒரே மருந்துத் தன்மை உள்ளதே.அவற்றின் மருந்துத் தன்மைகளில் சிறு சிறு மாறுபாடுகள் இருக்கலாம்.நார்க் கற்றாழை என்ற வகை இவைகளில் இருந்து மாறுபட்டது.நார்க் கற்றாழை சதை சோற்றுக் கற்றாழை சதை போன்று மருந்துக்குப் பயன்படாது.
அதனால் பல தீய பழக்க வழக்கங்களினால் இழந்த தாது நஷ்டத்தை ஈடு செய்து உடலை குமரனாக்குவதால் இதற்கு ஈடு இணை எந்த மூலிகையையும் சொல்ல முடியாது.அவ்வளவு சிறப்பு வாய்ந்த மூலிகை.மேலும் மூட்டு வலிகள், வெட்டையினால் உண்டான கைகால் மூட்டுக்கள் அசையாத தன்மைகள் இவற்றையெல்லாம் யாரும் கற்பனை செய்து பார்க்காத அளவில் தொலைத்து நாசமாக்கும்.
நாம் இந்த வலைத் தளத்தை உங்களுக்கு கொண்டு வருவதில் பெருமை கொள்ள மருந்துகளில் ஏதேனும் உண்டென்றால் அது இந்த சோற்றுக்கற்றாழையேதான்.அதென்ன இது அவ்வளவு பெருமை உடையதா?? என்று நீங்கள் கேட்டால் இதைவிட பெருமை உடையது எமக்குத் தெரிந்த வரை வெறொன்றில்லை!!!!!!!!!
சோற்றுக் கற்றாழை முடி உதிர்வதைத் தடுப்பதோடு, சிறுநீரகம் மற்றும் மண்ணீரல் , கல்லீரல் ஆகியவற்றில் உள்ள விஷங்களை நீக்குகிறது.எயிட்ஸ் ஐயும் குணமாக்கும் வல்லமை உள்ளது.கேன்சர் என்னும் புற்று நோயை குணப்படுத்தும் வல்லமை வாய்ந்தது.
பொல்லாமே கங்க பம்பு ழுச்சூலை குஷ்டரச
மல்லார்மத் தம்பகந்த ரங் குன்ம-மெல்லாம்விட்
டேகு மரிக்கு மெரிச்சற் கிரிச்சமு
மாகு மரிக்கு மருண்டு.
நறுங் கற்றாழைக்கு வாத மேகம் , கப கோபம் , கிருமிக் குத்தல் (மூலக் குத்தல் ), பெரு வியாதி ( குஷ்டம் , பால்வினை நோய்கள் ) , மூலம் , உன்மத்தம் , பகந்தரம் , வயிற்று நோய் , தினவுள்ள பித்த கிரிச்சரம் ( அரிப்பும் , பின் கடுப்பும் உள்ள மூத்திரக் கடுப்பு ) ஆகிய வியாதிகள் மருண்டு ஓடும் என்று பொருள்.மேலும் மது மேகத்தால் ( சர்க்கரை வியாதியில் ) அவதிப்படுபவர்களுக்கு 48 நாட்கள் இந்த சோற்றுக் கற்றாழையை எடுத்து அதனுள் இருக்கும் சதையை மட்டும் எடுத்து சிறு துண்டுகளாக வெட்டி 7 தடவைக்குக் குறையாமல் தண்ணீரில் கழுவி சீனாக் கற்கண்டோடு கூட்டிச் சாப்பிட மதுமேகம் ஓடியே போகும்.
இந்த சோற்றுக் கற்றாழைச் சோற்றை திரிபலாதிச் சூரணத்துடன் கலந்து கட்டித் தோலாந்தரமாக தொங்கவிட்டு ,அதிலிருந்து வடியும் நீர் குமரிச் செய நீர் என்றழைக்கப்படும்.அது பல மருந்துகள் தயாரிக்க முக்கிய பொருளாகும்.மேலும் அயக்காந்தம், மண்டூரம் முதலியவற்றைச் செந்தூரமாக்குவற்கு இதைவிடச் சிறந்த மூலிகை இல்லை.
சோற்றுக் கற்றாழை இராஜ கருவிகளில் உண்டாகும் பல குறைபாடுகளை நீக்குவதில் இதற்கு இணை இதுதான். அதீத சர்க்கரையா??குறைந்த சர்க்கரையா???உயர் இரத்த அழுத்தமா???குறைந்த இரத்த அழுத்தமா???அதீத உடல் எடையா ???குறைந்த உடல் எடையா??அதிக உடல் எடையா???அதிக கொழுப்பா???குறைந்த உடல் கொழுப்பா???அதீத உடல் எடையா??? குறைந்த உடல் எடையா???அதீத உணர்ச்சிகளால் உடலில் பல தொல்லைகளா????(அல்சர்,ஆஸ்துமா, பைத்தியம், ஹிஸ்டீரியா, அதீத உணர்ச்சி ஆனால் குறி எழும்பாமை, சர்க்கரை வியாதி , இரத்த அழுத்தம் , கை கால்களில் வலிகள், மூட்டு வலிகள், கீழ்முதுகு வலிகள்)ஏன் மதி மயங்கி பைத்தியமாகி உள்ளனரா???அனைத்திற்கும் தீர்வாக இந்த சோற்றுக் கற்றாழை செயல்படும்.
அப்படிப்பட்ட சோற்றுக் கற்றாழையை சூரணமாக்கி இந்த சூரணத்தில் கலந்திருக்கிறார்.மேலும் வர்மம் கற்க ஒரு வாய்ப்பை இம்மாதம் 23 மற்றும் 24 தேதிக்குப் பின்னர் 6 மாதங்கள் கழித்தே திரு மோகன ராஜ் அவர்கள் வழங்க இருக்கிறார்கள் எனபதை இங்கே ஞாபகப்படுத்த விரும்புகிறேன்.இணைப்பைக் காணுங்கள்
வர்மம் கற்க விரும்புபவர்களுக்கு ( மருத்துவத்திற்காக மட்டுமே )பாகம் 2
இந்த சீடன் வகுப்பிற்குப் பின்னரே வர்மத் தடவல் வகுப்புப் பயிற்சிகள்(VARMA MASSAGE CLASS ) எடுக்கலாம்.
இந்த வர்ம வகுப்புகள் உங்களின் பார்வைக்கு காணொளிக்காட்சியாக
[tube]http://www.youtube.com/watch?v=L7NDdgsvSEI[/tube]
இப்படி ஒரு தயாரிப்பை சதுரகிரி ஹெர்பல்ஸ் திரு கண்ணன் அவர்கள் தயார் செய்திருப்பது உண்மையில் மனித குலத்திற்கு அவர் செய்திருக்கும் மாபெரும் தொண்டு என்று கூறி இந்தப் பதிவை நிறைவு செய்கிறேன்.
சதுரகிரி ஹெர்பல்ஸ் திரு கண்ணன் அவர்கள் தற்போதைய புதுப்பிக்கப்பட்ட முகவரி மற்றும் அலைபேசி எண் மற்றும் அவரது தொலைபேசி எண்கள் ஆகியவற்றை கீழே காண்க.
+919943205566
+914563282222
அவரது முகவரி:-
திரு பெ.கண்ணன்,சதுரகிரி ஹெர்பல்ஸ்,
2/159, மங்கம்மாள் கோவில் தெரு,கான்சாபுரம்,(P-O)
திரு வில்லிபுத்தூர் தாலுகா,விருதுநகர் மாவட்டம்
மின்னஞ்சல் முகவரி
herbalkannan@gmail.com
இந்த பதிவில் வெளியாக இருந்த கற்றாழையின் பெருமை பற்றிய காணொளிக்காட்சி அடுத்த பதிவில் வெளியாகும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
பதிவு பெரிதாய்ப் போவதால் மற்றவற்றை சதுரகிரி ஹெர்பல்ஸ் திரு கண்ணன் அவர்கள் தயாரிப்புக்கள் (பாகம் 5) மூலச் சூரணம் ( பாகம் 3)ல் படித்துத் தெரிந்து கொள்ளலாம்.
அய்யா வணக்கம் ,
மிகப்பயனுள்ள பதிவு இது . இதுவரை கேள்விப்பட்டிராத விஷயங்கள் . மிக்க நன்றி .
சிறு வயதில் உறவினர் ஒருவரை பாம்பு கடித்துவிட்டது . அதற்கு சோற்று கற்றாழையை கடிவாயில் வைத்துக்கட்டினார்கள் . அவரும் குணமானார் .
அன்புடன்
செ.சீனிவாசன்
அன்புள்ள திரு செ.சீனிவாசன் அவர்களே ,
கருத்துரைக்கு மிக்க நன்றி,
சோற்றுக் கற்றாழை நல்ல நஞ்சு நீக்கி.சாதாரணமாக இதை உண்டு வந்தாலேயே கடி விஷங்கள் ஏறாது.எனவே இதை புற்று நோய்க்கும், எயிட்ஸ்க்கும் உள்ளே சாப்பிடும் மருந்தாக உபயோகிக்கலாம்.
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்
அய்யா வணக்கம் ,
கடுகுரோணி மற்றும் மூக்குரட்டை கீரை பற்றிய உங்கள் பதிவை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.
அன்புடன் ,
செ .சீனிவாசன்
அன்புள்ள திரு செ.சீனிவாசன் அவர்களே ,
கருத்துரைக்கு மிக்க நன்றி,
உங்கள் கேள்வி ஹரியை ஞாபகப்படுத்துகிறது.கடுகுரோணி மற்றும் மூக்கிரட்டை கீரை பற்றிய எமது பதிவை எதிர் பாருங்கள்.
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்
“அனைத்து இனிப்பு வகைகளுக்கும் இனி சீனியைத் (அஸ்கா சர்க்கரையை) தவிர்த்து கருப்பட்டியை உபயோகித்தால் இந்த அபாயத்தில் இருந்து முற்றிலும் தப்பிக்கலாம் . கருப்பட்டி அத்தனை நஞ்சையும் முறித்து நம்மைக் காக்கும் என்பதை மிக உறுதியாகக் கொள்ளலாம்.”
ஐயா! இது இலங்கையில் தாராளமாக கிடைக்கும் “கித்துள் கருப்பட்டிக்கும்” பொருந்துமா?. ஏனென்றால் இங்கு தரமான பனங்கருப்பட்டி கிடைப்பது கடினம், கலப்படங்களும் உண்டு.
இங்கு சிங்கள சித்த ஆயுர்வேத வைத்தியர்கள் கித்துள் கருப்பட்டியை மருத்துவத்தில் பாவிக்கின்றனர்.
http://en.wikipedia.org/wiki/Caryota_urens
http://www.serendib.btoptions.lk/article.php?id=790&issueId=31
நன்றி
அன்புள்ள திரு சந்துரு அவர்களே ,
கருத்துரைக்கு மிக்க நன்றி,
“கித்துள் கருப்பட்டி” என்பது கூந்தல் பனை என்னும் பனை வகையைச் சேர்ந்தது.கூந்தல் பனங்கல் கண்டு , என்றும் , கூந்தல் பனங்கருப்பட்டி எனவும் வகைகள் தயாரிக்கப்படுகின்றன.பரவாயில்லை இதையும் சாப்பிட மற்றும் மருந்துக்காக பாவிக்கலாம்.
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்
மதிப்பிற்குரிய அய்யா..
சென்ற பதிவிற்கு பின் தங்களின் இந்த பதிவிற்காக ஆவலுடன் காத்திருந்தேன்..சாதாரணமாக எல்லா இடங்களிலும் தென்படும் சோற்றுக்கற்றாழைக்கு இவ்வளவு மகத்துவமா..? தங்களின் பதிவினையும் சோற்றுக்கற்றாழை மீதான தங்களின் புகழுரையையும் படித்த பிறகு சோற்றுக்கற்றாழை மீது ஒரு தனி மதிப்பே வந்துவிட்டது. இது பற்றிய காணொளிக்காட்சிக்காகவும் மிக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்.
அன்புள்ள திரு ரவி அவர்களே ,
கருத்துரைக்கு மிக்க நன்றி,
காணொளி அடுத்த பதிவில் வருகிறது காணுங்கள்.
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்
ஐயா வணக்கம் !
நான் தங்களின் மூல சூரணம் பாகம் 5 ஐ பார்த்தேன்
மிக்க நன்றி . தாங்கள் கூறியிருந்த திரு கண்ணன் அவர்களிடம்
கேட்டிருந்தேன் அவரும் அனுப்புவதாக கூறியுள்ளார்
தங்களுக்கு மறுபடியும் என் நன்றியை தெரிவித்துகொள்கிறேன் !
—
THANKS & REGARDS,
K. JANARDANAN.
அன்புள்ள திரு கே ஜனார்த்தனன் அவர்களே ,
கருத்துரைக்கு மிக்க நன்றி,
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்
சாமீ அழகப்பன் அய்யா அவர்களுக்கு வணக்கம்.
மிக நல்ல பதிவு அய்யா.
ஒரு சந்தேகம். சோற்று கற்றாழை – சோற்று பகுதியை சிறு துண்டுகளாக வெட்டி தண்ணீரில் 10 நிமிடம் ஊறவைத்து அந்த தண்ணீரை குடிக்கலாமா ( ஜெல்) அய்யா ?? அல்லது நீங்கள் சொன்னதுபோல் 10 நிமிடம் நன்றாக அலசி பின் பயன்படுத்தலாமா ??
பணிவன்புடன்
மோகன்குமார்
அன்புள்ள திரு மோஹன் குமார் அவர்களே ,
கருத்துரைக்கு மிக்க நன்றி,
///சோற்று கற்றாழை – சோற்று பகுதியை சிறு துண்டுகளாக வெட்டி தண்ணீரில் 10 நிமிடம் ஊறவைத்து அந்த தண்ணீரை குடிக்கலாமா ( ஜெல்) அய்யா ??/// இது கூடாது.
///அல்லது நீங்கள் சொன்னதுபோல் 10 நிமிடம் நன்றாக அலசி பின் பயன்படுத்தலாமா???/// 10 நிமிடம் அல்ல, நாம் சொன்னது போல சிறு துண்டுகளாக வெட்டி 7 தடவைக்கு குறையாமல் அலசியபின் அதை சாப்பிடவும்.
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்
அய்யா, மிகவும் அருமையான பதிவு.
அன்புள்ள திரு கே ஜனார்த்தனன் அவர்களே ,
கருத்துரைக்கு மிக்க நன்றி,
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்
அய்யா, பாகம் 3 எதிர் பார்கிரேன்…….
அன்புள்ள திரு சந்திரன் அவர்களே ,
கருத்துரைக்கு மிக்க நன்றி,
பாகம் 3 விரைவில் வரும்.
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்
மஹா மூலிகைகளை பற்றி எழுதியபோது கூட தாங்கள் அந்த மூலிகைகளை பற்றி இவ்வாறு புகழவில்லை. இதிலிருந்தே இதன் மகத்துவம் தெரிகிறது.நான் கற்றாழையை வெறுமனே முகப்பூச்சாகவும்,சவரம் செய்ய உயவுப் பொருளாகவுமே பயன்படுத்தி வந்தேன் இன்றுதான் சோற்று கற்றாழையை பற்றி இவ்வளவு உண்மைகளை தெரிந்து கொண்டேன்
இந்த நேரத்தில் திரு கண்ணன் அவர்களைப்பற்றியும் இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.கடந்த டிசம்பர் அன்று சதுரகிரி மலை வந்தபோது திரு கண்ணன் அவர்களை நேரில் சந்தித்து பழகியுள்ளேன்.மிக நல்ல மனிதர்.அருமையாக உபசரித்து அனுப்பினார். மறக்க முடியாத பயணமாக இருந்தது.மூட்டு வலி தைலம் மற்றும் இன்ன பிற சில மருந்துகளை இலவசமாகவே பயன்படுத்தி பார்க்கும்படி அவராகவே முன்வந்து அளித்தார்.அவர் வேலைப்பளுவை பார்த்தபிறகுதான் தாமதத்திற்கான எதார்த்தத்தை புரிந்து கொண்டேன்.
நன்றியுடன்
ராஜா
அன்புள்ள திரு ராஜா அவர்களே ,
கருத்துரைக்கு மிக்க நன்றி,
சோற்றுக் கற்றாழையை முகப்பூச்சாகவும்,சவரம் செய்ய உயவுப் பொருளாகவும் பயன் படுத்தினால் அது பயன்படுத்தப்படும் இடங்களில் முடி நரைக்காது.சதுரகிரி ஹெர்பல்ஸ் கண்ணன் அவர்கள் மிக இனிமையானவராதலால்தான் நாம் அவருக்கு இவ்வளவு முக்கியத்துவம் தருகிறோம்.
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்
சரவணன்
திருச்சி
அய்யா வணக்கம் சோற்று கற்றாழை மருத்துவம் மற்றும் மகிமை தெரிந்து கொண்டேன்.எனக்கும் வயிற்றில் சில தொந்தரவுகள் இருந்தன நான் திரு.சதுரகிரி ஹெர்பல்ஸ் கண்ணன் அவர்களிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டேன் அவர்கள் சோற்று கற்றாழையை காலை சாப்பிட்டு வர சொன்னார் இப்பொழுது எனக்கு நன்றாக உள்ளது .எனக்கு வயிறு தொல்லை சுமார் ஏழு எட்டு வருடமாக இருந்தது.திரு.சாமீ அழகப்பன் அய்யா அவர்களுக்கும் .திரு.சதுரகிரி ஹெர்பல்ஸ் கண்ணன் அவர்களுக்கும் என்னுடைய நன்றியை மனமார செலுத்துகிறேன் .
அன்புள்ள திரு எம் சரவணன் அவர்களே ,
கருத்துரைக்கு மிக்க நன்றி,
சோற்றுக் கற்றாழை பலவிதமான இயற்கையான சத்துக்கள் நிறைந்தது.ந்ம் உடலுக்கு மிகவும் இன்றியமையாத சத்துக்கள் பல அதில் உள்ளன.இன்னும் சொல்லப் போனால் நாம் அந்தக் கட்டுரையில் குறிப்பிட்டுள்ள மற்றும் குறிப்பிடாத பல வியாதிகளைத் தீர்க்கும்(சீதள வியாதிகள் தவிர{எ.கா ,ஆஸ்துமா, இரைப்பு , சளி}).நீங்கள் நன்றி செலுத்த வேண்டியது சோற்றுக் கற்றாழைக்குத்தான்.
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்
அண்ணன் அவர்களுக்கு,
தாங்கள் இரண்டு மூன்று முறை அடிக்கோடிட்டு காட்டியதில் இருந்து இதன் மேலான முக்கியத்துவம் எங்களுக்கு நன்கு மனதில் பதிந்தது.கற்றாழை பற்றி நான் அவ்வளவு பயனுள்ள செடி வகை அல்ல என்று தவறாக நினைத்திருந்தேன். தெளிவுபடுத்திய தங்களுக்கு நன்றிகள்.
தங்களன்புள்ள,
ஸஹதுல்லாஹ்
அன்புள்ள திரு சதயத்துல்லாஹ் அவர்களே ,
கருத்துரைக்கு மிக்க நன்றி,
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்
Anbulla ayya,
Kattralai payasam is very useful tips. can we eat this monthly once?
அன்புள்ள திரு ஆனந்த் அவர்களே ,
கருத்துரைக்கு மிக்க நன்றி,
சோற்றுக் கற்றாழைப் பாயசம் வெயில் காலத்தில் வாரம் ஒரு முறை சாப்பிடலாம், மழை மற்றும் பனிக்காலத்தில் 15 நாட்களுக்கு ஒரு முறை சாப்பிடலாம்.
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்
அய்யா பதிவு அருமை
உங்களுடைய சித்த மருத்துவ ஆலோசனைகள் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டியது
அவசியம். அய்யா மன்னிக்கவும் ஒரு சந்தேகம் , சீனாக் கற்கண்டு என்றால் என்ன???
நன்றியுடன்
ராஜா பாதமுத்து
மதுரை
அன்புள்ள திரு ராஜா பாதமுத்து அவர்களே ,
கருத்துரைக்கு மிக்க நன்றி,
சித்தர்கள் குறிப்பிடும் கற்கண்டு , சீனாக் கற்கண்டு என அழைக்கப்படுவது கட்டி,கட்டியாக கல்போன்று ஒழுங்கற்ற வடிவமைப்பில் இருப்பது மட்டுமே!!!!இதை ஏற்கெனவே பலமுறை விளக்கி இருக்கிறோம்.
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்
அன்புள்ள திரு வெங்கட் அவர்களே ,
கருத்துரைக்கு மிக்க நன்றி,
சோற்றுக் கற்றாழை பலவிதமான இயற்கையான சத்துக்கள் நிறைந்தது.ந்ம் உடலுக்கு மிகவும் இன்றியமையாத சத்துக்கள் பல அதில் உள்ளன.இன்னும் சொல்லப் போனால் நாம் அந்தக் கட்டுரையில் குறிப்பிட்டுள்ள மற்றும் குறிப்பிடாத பல வியாதிகளைத் தீர்க்கும்(சீதள வியாதிகள் தவிர{எ.கா ,ஆஸ்துமா, இரைப்பு , சளி}).
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்
அன்புள்ள திரு சாமீ அழகப்பன் அவர்களே,
தங்களுடன் உரையாடியததில் மிக்க மகிழ்ச்சி. ஒவ்வொரு பதிவும் கண்களை திறக்கிறது.
தாங்கள் குறிப்பிட்டது போல காலில் நல்லெண்னை வைத்தால் 10 நிமிடத்தில் கண்களில் உணரமுடிகிறது (எரிகிறது). பின்பு சீயக்காய் தேய்த்து குளிக்க எரிச்சல் போகிறது.
எண்ணை தேய்த்து குளிக்கும் முறை, எண்ணை தயாரிக்கும் முறை, அன்று மற்றும் மறுநாள் உண்ணும் முறை, உண்ண கூடிய உணவு, செய்ய கூடியவை, செய்யக்கூடாதவை என்று சற்று விளக்கி கூறினால் மிக்க உதவியாக இருக்கும்.
இதை கேட்கும் முன் என் முயற்சியில் தங்கள் வலையை தேடிவிட்டேன்.
தாங்கள் கூறியது போல திரு கண்ணன் அவர்களிடம், தேவையானவற்றை கேட்டு உள்ளேன். உபயோகித்து பலனையும் இங்கே பகிர்வேன்.
என் மகள் வயது இரண்டு அரை. புழு குடைவது போன்று மல துவாரத்தில் விரலால் குடைகிறாள். என்ன மருந்து கொடுக்கலாம். என்ன தவறு நான் செய்கிறேன். தயவு செய்து வேண்டுகிறேன்.
தங்களை சந்திக்கும் நாளுக்காக காத்திருக்கிறேன்.
என்றும் அன்புடன்,
வெங்கட் லா.
அன்புள்ள திரு வெங்கட் லா அவர்களே
கருத்துரைக்கு மிக்க நன்றி,
///என் மகள் வயது இரண்டு அரை. புழு குடைவது போன்று மல துவாரத்தில் விரலால் குடைகிறாள். என்ன மருந்து கொடுக்கலாம். என்ன தவறு நான் செய்கிறேன். தயவு செய்து வேண்டுகிறேன்./// நாம் இனிப்பு தின்பதற்கு நமது குழந்தைகளைப் பழக்குவது போல கசப்பு உண்ணவும் பழக்க வேண்டும்.நல்ல கசப்பு சுண்டை வற்றல்.இதை தவறாது உணவில் சேர்க்க புழுக்கள் உடலில் சேராது.உடலில் இருக்கும் புழுக்கள் வெளியேற குப்பை மேனியின் வேர் இரண்டை சிதைத்து ஒரு டம்ளர் தண்ணீரை ஊற்றி அரை டம்ளராகச் சுருங்கும் வரை காய்ச்சி காலையில் வெறும் வயிற்றில் மூன்று நாட்கள் கொடுக்க கிருமிகள்,மற்றும் புழுக்கள் கூண்டோடு விழுந்து அழியும்.
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்
ஐயா வணக்கம்,
மிகவும் பயனுள்ள பதிவு. பல கருத்துக்கள் தெரியப்பெற்றேன் . மிக்க நன்றி ஐயா.
இங்கு (ஆஸ்திரேலியா) ‘aloe vera’ என்ற செடி கிடைக்கிறது. இது நம் சோற்று கற்றாழை செடி தானா ? அல்லது இதில் ஏதும் வகைகள் உள்ளனவா?
எதனால் சோற்று கற்றாழை சதையை 10 முறை கழுவ வேண்டும்?
அப்படி கழுவி விட்டு சமைக்காமல் அப்படியே சாப்பிடலாமா?
என் தந்தை ஒரு தடவை கழுவி விட்டு அப்படியே சாப்பிடுவதை பார்த்துள்ளேன் .. இது சரியானது தானா ?
முகத்திற்க்கோ தலைக்கோ பூசுவதனால் கூட இவ்வாறு கழுவி தன உபயோகிக்க வேண்டுமா ?
அன்புள்ள உமா பூவண்ணன் அவர்களே,
(அலோயி வீரா) ‘aloe vera’ என்ற சோற்றுக் கற்றாழையி ,சாதாரண சோற்றுக் கற்றாழை , சிறு கற்றாழை , செங்கற்றாழை , வரிக் கற்றாழை எனப் பல வகைகள் இருப்பினும் எல்லாவற்றுக்கும் பொது மருத்துவ குணங்கள் ஒன்றே.இது தவிர சிறப்பு மருத்துவ குணங்கள் பல உண்டு .எனவே ‘aloe vera’ என்ற செடி வகைகளையே மிக நன்றாக பயன்படுத்தலாம். பல முறை கழுவினால்தான் (ஏழு முறை)அதில் உள்ள பால் சத்து போகும் .அது கொஞ்சம் வீரியம் மிக்கது .பொதுவாக ஒவ்வொரு சித்த மருந்திற்கும் சுத்தி முறை உண்டு.அதை சுத்தி செய்து சாப்பிட்டால்தான் நலம்.
அப்படி கழுவிவிட்டு சமைக்காமல் சாப்பிடலாம்.
///என் தந்தை ஒரு தடவை கழுவி விட்டு அப்படியே சாப்பிடுவதை பார்த்துள்ளேன்.இது சரியானது தானா?
முகத்திற்கோ தலைக்கோ பூசுவதனால் கூட இவ்வாறு கழுவி தன உபயோகிக்க வேண்டுமா ?///
ஒரே ஒரு முறை கழுவிவிட்டு அப்படியே சாப்பிடுவது தவறு.அதில் உள்ள பால் சத்து சிலருக்கு வாய் வேக்காட்டை, உண்டாக்கும்.முகத்திற்க்கோ,தலைக்கோ பூசுவதனால் கூட இவ்வாறு கழுவ தேவையில்லை.
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்
அன்புள்ள குருவே,
உடனே பதில் அருளியதியர்க்கு மிக்க நன்றி. தாங்கள் கூறியது போல கசப்பு உண்ணவும் பழக்குகிறேன் குருவே. குப்பை மேனியின் வேரை தாங்கள் கூறியது போல் 3 நாட்கள் கொடுக்கிறேன். தங்கள் அனுமதி கிடைத்தால் அதன் பலனையும் அனைவருக்காக பகிர முயற்சிக்கிறேன்.
தங்களை சந்திக்கும் நாளுக்காக காத்திருக்கும்
என்றும் அன்புடன்,
வெங்கட் லா.
அன்புள்ள திரு வெங்கட் லா அவர்களே
கருத்துரைக்கு மிக்க நன்றி,
இறை அருள் இருந்தால் சந்திக்கலாம்.
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்
அன்புள்ள குருவே,
உடனே பதில் அருளியதியர்க்கு மிக்க நன்றி. என் மகள் (3 வயது), எண்ணை தேய்த்து குளிக்க செய்ததால், (எண்ணை தேய்த்த உடன் வெந்நரில் குளிப்பாட்டி விட்டேன்.) காய்ச்சல் வந்து விட்டது.
உடனே தங்களை தொடர்புகொண்டு, தாங்கள் கூறியது போல (சூடு கிளம்பி விட்டது.) மருந்து எதுவும் கொடுக்கவில்லை. பச்சை தண்ணீரில் உடல் துடைத்து, போதுமான மெல்லிய ஆகாரம் (அரிசி கஞ்சி) கொடுத்து வந்தேன். இரண்டு முறை வாந்தி எடுத்தாள். ஒரு முறை, 2 நாள் கழித்து மலம் கழித்தபின் காய்ச்சல் குறைந்தது. மிக்க நன்றி குருவே.
தங்களின் அயராத வேலை பளுவிர்கு இடையில் என்னை தொடர்பு கொண்டு என் மகளை நலம் விசாரித்தது வியப்பை ஏற்படுத்தியது. உண்மயில் இதுதான் மருத்துவம் என்பதோ!!!
எல்லாம் வல்ல இறைவன் அருளால், இந்த புண்ணியம் ஏழு தலைமுறைக்கும் காத்து நிற்கும்.
என்றும் அன்புடன்,
வெங்கட் லா.
(இதற்கிடையில் என்னால் குப்பை மேனி கொடுக்க முடியவில்லை. மன்னிக்கவும்.)
அன்புள்ள திரு வெங்கட் லா அவர்களே
கருத்துரைக்கு மிக்க நன்றி,
பரவாயில்லை.இதைவிட பல நற்காரியங்களைச் செய்யும் சித்தர்கள் முன் நாம் ஒன்றுமில்லாதரே ???முதலில் மனிதனுக்கு மனிதன் இரங்கும் மனோ நிலை பெறுவோம்.பிறகு வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடும் மனோ நிலை பெறுவோம்.உலகு உய்ய பாடுபடுவோம்.
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்
அய்யா வணக்கம்!
சிறு வயதில் கிராமத்தில் சில வீடுகளில் சோற்று கற்றாழையை வேருடன் கட்டி தொங்க விட்டிருப்பதைப் பார்த்திருக்கிறேன். கண்திருஷ்டிக்காகவா அல்லது வேறு காரணங்களுக்காகவா இவ்வாறு செய்யப்படுவது என்று தயவுசெய்து விளக்கவும் .
சந்தோசம்,
அன்புடன்,
செ .சீனிவாசன் .
அன்புள்ள திரு செ .சீனிவாசன் அவர்களே
கருத்துரைக்கு மிக்க நன்றி,
தரையில் இல்லாவிட்டாலும் அழியாமல் இருக்கும் மூலிகை சோற்றுக் கற்றாழை.தரையில் இல்லாவிட்டாலும் தான் அழியாமல் அழியாமல் இருக்கும் மூலிகைகள் ஆகாயக் கூற்றை உடலில் அதிகமாக்க வல்லவை.பொதுவாக இவை கசப்புச் சுவை உள்ளவைகளாகவும், மனிதனுக்கு தீங்கு செய்யும் கிருமிகளை அழிப்பவைகளாகவும்,கண்ணேறு ,ஏவல் ,பில்லி சூனியம் போன்றவற்றை தடுக்கும் வல்லமை உள்ள அஷ்ட கர்ம மூலிகைகளாகவும் இருப்பதால், கற்றாழை , ஆகாச கருடன் போன்ற மூலிகைகளை வீட்டு வாசலில் கட்டி வைக்கவும் , வீட்டிற்குள்ளும் கட்டியும் வைக்கிறார்கள்.மேலும் நம்முடலில் ஆகாயக் கூறு மிகக் குறைவாக உள்ளது.இயற்கையில் ஆகாயம்தான் அதிகமாக இருந்து அத்தனை அண்ட , பேரண்டங்களையும் , கோள்களையும் தாங்குகின்றது. உடலை விட்டு உயிருடன் முதலில் வெளியேறுவது ஆகாயமே,ஆகாயம் நம்முடலில் இருக்கும் வரை உயிர் நம்முடலில் இருக்கும். இந்த இரண்டு மூலிகைகளும் நம்மை சுற்றியும் நம்முள்ளும் ஆகாய பூதக் கூற்றை அதிகரிக்க வல்லன.இதனால் உடலில் உயிர் தங்கும் நாட்கள் அதிகரிக்கப்படுகிறது.வியாதிகளும் அவற்றின் வேகங்களும் குறைக்கப்படுகின்றன,உடல் ஆரோக்கியமடைகிறது.நாம் நலம் பெறவே நம்முன்னோர்கள் இது போன்ற பழக்க வழக்கங்களை ஏற்படுத்தியுள்ளனர்.
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்
அன்புள்ள சாமீ
தங்கள் பதிவிற்கு நன்றி, மிகவும் பயன் தரும் விடயம்.
உமா பூவண்ணன் கூறியது போல இங்கு ஆஸ்திரேலியாவில் ALOEVERA கிடைக்கிறது.எனினும் என் வீட்டில் உள்ளது சிறியதாகவே இருக்கிறது. எப்படி வளர்க்க வேண்டும் என எனக்கு தெரியவில்லை.
அன்புடன்
ஜெய் மணிகா
அன்புள்ள திரு ஜெய் மாணிக்கா அவர்களே,
கருத்துரைக்கு மிக்க நன்றி,
அந்தந்த இடங்களுக்கு ஏற்றவாறு ,அந்தந்த தட்ப வெப்ப நிலைக்கேற்றவாறு இந்த சோற்றுக் கற்றாழையின் வடிவம் மாறுபடுகிறது.ஆனாலும் ஏறக்குறைய எல்லாக் கற்றாழையும் ஓரளவு ஒத்த குணங்களை உடையவையே.நன்றாக தண்ணீர் ஊற்றி வளப்பமாக வளர்க்கப்பட்டால் கற்றாழை மிக நன்றாக வளரும்.தினமும் அதற்கு தண்ணீர் ஊற்ற வேண்டிய அவசியம் இல்லை.
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்
வணக்கம் அய்யா, நலமே விளைவிக்கும் நாதனடி பற்றியிருப்பீர் குறையில்லை ஒருபோதும் … (நன்றி சொல்லியே அதன் அர்த்தம் அறியாமல் போகிறேன்(றோம்), அதனால் இப்படி ஒரு சங்கதி)
என்ன அளவு ஒரு நபர் உட்கொள்ளலாம?
மாதத்திற்கு இரண்டு முறை சாப்பிடலாமா?
பெண்களுக்கு கொடுக்கலாமா அய்யா…
அன்புள்ள திரு தேவன் கேசவன் அவர்களே
கருத்துரைக்கு மிக்க நன்றி,
நீங்கள் கேட்பது மூலச்சூரணம் சாப்பிடும் அளவைப் பற்றி என்று கருதி இந்தப் பதிலைக் கூறுகிறேன். மூலம் இருப்பவர்கள் தினமும் இந்த மூலச் சூரணத்தை வெறும் வயிற்றில் (அதாவது சாப்பிடும் முன்பு )மூன்று வேளையும் சாப்பிட வேண்டும்.
கற்றாழை சாப்பிடுவது பற்றி உங்கள் கேள்வி இருக்குமானால், வியாதியின் பிடியில் இருப்பவர்கள் தினமும் சாப்பிடும் சாப்பாடு மூன்று வேளையில் ஏதாவது ஒரு வேளை (மதிய வேளை உத்தமம்) சாப்பாட்டுக்குப் பதில் சோற்றுக் கற்றாழையை (நடுவில் உள்ள சோற்றை மட்டும் எடுத்து துண்டு செய்து நன்றாக ஏழு முறை கழுவிய பின் சாப்பிட வேண்டும்) சாப்பிட கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள வியாதிகள் அத்தனையும் தணியும்
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்
பெண்களுக்கு அதே அளவு கொடுக்கலாமா அய்யா…
அன்புள்ள திரு தேவன் கேசவன் அவர்களே
கருத்துரைக்கு மிக்க நன்றி,
பெண்களுக்கும் ஆண்களுக்கும் ஒரே விதம்தான், ஒரே அளவுகள்தான்.
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்
சாமீ அழகப்பன் அய்யா அவர்களுக்கு வணக்கம்.
தாங்கள் கூறியபடி கற்றாழை பாயசம் சமைத்தோம்
மிகவும் சுவையாகவும் மற்றும் பிள்ளைகளும் விரும்பி குடித்தனர்
என்னுடைய மூலமும் நோயும் இபொழுது சற்று குறைந்துள்ளது
தங்களின் இப்பதிவிற்கு ஆயிரம் கோடி நன்றிகள் .
இதை நங்கள் வாரம் ஒரு முறை பின்பற்றலாம் என்று உள்ளோம் .
k janardanan
அன்புள்ள திரு கே ஜனார்தனன் அவர்களே
கருத்துரைக்கு மிக்க நன்றி,
வாரம் ஒரு முறை தாராளமாகச் சாப்பிடலாம்.
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்
அன்புள்ள அய்யா அவர்களே,
கடந்த 19/03/13 அன்று வந்த உங்களின் பதிவிற்கு பின் உங்கள் பதிவை ஆவலுடன் எதிர் பார்க்கிறோம். ஏழு நாட்களுக்கு ஒருமுறை பதிவு தந்தால் நன்றாக இருக்கும். தங்களின் வேலை பளு காரணமாக என் போன்றவர்கள் காத்திருக்கிறோம்.
தற்பொழுது நம் தமிழ் நாட்டில் ஒழுக்கும் குறைந்து பல குடும்பங்கள் சிதைந்து வருகின்றன. இது போன்று குடும்பங்கள் சிதைவது குழந்தைகளின் எதிர்காலத்தை பாதிக்கும் காரணியாக அமையும்.
ஆகவே தாங்கள் நல்ல குடும்பம் அமைய என்ன செய்யவேண்டும். ரகசியமாக செய்யும் செயல்களால் குடும்பம் கெடுவது போன்றவைகளை எவ்வாறு தடுப்பது ஆகியவற்றின் மேல் அக்கறை கொண்டு உள்ளவர்கள் உங்களுக்கு யாரேனும் தெரிந்தால் தெரியபடுத்துங்கள். என் போன்று இனியும் எந்த குடும்பமும் பாதிக்காமல் நல்ல குழந்தைகளை இந்த சமுதாயத்திற்கு தந்து மக்கள் மகிழ்சியாக வாழவேண்டும்.
அன்புள்ள திரு கே ஆனந்த் அவர்களே
கருத்துரைக்கு மிக்க நன்றி,
இது வரை கேள்விகளுக்குத்தான் பதிலளித்துக் கொண்டிருக்கிறோம்.கட்டுரை எழுத முடியாத அளவிற்கு கேள்விகள் தினமும் 10 முதல் 15 வரை வந்தால் நாம் என்ன செய்வது.எப்படி பதிவுகள் வெளியிடுவது.உங்கள் ஆதங்கம் புரிகிறது .ஆல கால விஷத்தையும் முறிக்கும் சக்தி நம் சித்த மருத்துவத்துக்கு உண்டு.இடுமருந்துக்கும் வைத்தியம் உண்டு.கட்டுரையும் விரைவில் உண்டு.
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்
அன்புள்ள அய்யா அவாகளே, வணக்கம்…. .31.3.2013 அன்று நானும் எனது நன்பா்களும் சில மருந்து வகைகளை வாங்கி சென்றோம். திரு கண்ணனம அவா்கள் எளிமையான மனிதா். ஏற்கனவே சா்க்கரை சுரணம் மற்றும் பல்பொடி ஆகியவற்றை பலருக்கு பயன்படுத்த கொடு்த்துள்ளேன். நன்றாக உள்ளதாக கூறியுள்ளனா். தொடரட்டும் இந்த அாிய சேவை… சித்த மருத்துவத்தின் பயன் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்பதே எனது ஆவல். நன்றி…
அன்புள்ள திரு வி பூபதி அவர்களே,
கருத்துரைக்கு மிக்க நன்றி,
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்
ஐயா
தங்களின் பதிவின் மூலம் சோற்றுக்கற்றாழையின மகத்துவம் அறிந்தேன்.
செஞ்சோற்றுக் கற்றாழை என்று ஒன்று உண்டா? அது எங்கு கிடைக்கும்.
அன்புள்ள திரு Anbu அவர்களே,
உங்களது கருத்துரைக்கு நன்றி,
ஆம் .செஞ்சோற்றுக் கற்றாழை என்று ஒன்று உண்டு .அதன் பெயர் செங்கற்றாழை .
இப்படிக்கு
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்
மதிப்பிற்குரிய ஐயா!
தலைக்கு தேய்க்கும் கற்றாழை ஜெல் கடைகளில் உள்ளது போல் வீட்டில் தயாரிக்கலாமா? எப்படி? தயவு செய்து விளக்கவும். நன்றி!.
அன்புள்ள திரு Manimohan அவர்களே,
உங்களது கருத்துரைக்கு நன்றி,
திரு அமீர் சுல்த்தான் அவர்களை தொடர்பு கொள்ளவும்.
இப்படிக்கு
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்
மதிப்பிற்குரிய ஐயா!
தங்களது பதிலுக்கு மிக்க நன்றி! திரு அமீர் சுல்த்தான் அவர்களை எவ்வாறு தொடர்பு கொள்வது? அன்னாரின் மின்னஞ்சல் முகவரி, தொலைபேசி எண் ஏதாவது தந்தால் மிகவும் உதவியாக இருக்கும். நன்றி!
அன்புள்ள திரு Manimohan அவர்களே,
உங்களது கருத்துரைக்கு நன்றி,
கீழ்க்கண்ட இந்த இணைப்பில் மச்சமுனி மூலிகையகம் சம்பந்தமான மருந்துகளுக்கு இந்த இணைப்பை பார்க்கவும்.
http://machamuni.com/?p=3512
கீழ்க்கண்ட இந்த இணைப்பில் சதுரகிரி ஹெர்பல்ஸ் சம்பந்தமான மருந்துகளுக்கு இந்த இணைப்பை பார்க்கவும்.
http://machamuni.com/?p=3226
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்
ஐயா சோற்றுகற்றாழையை என் தந்தைக்கு கேன்சருக்காக கொடுத்தோம் ஆனால் சளி பிடித்து விட்டது
அன்புள்ள திரு ஜேகே அவர்களே,
உங்களது கருத்துரைக்கு நன்றி,
சோற்றுகற்றாழையை திரிகடுகுச் சூரணத்துடன் கலந்து கொடுக்க வேண்டும்.
இப்படிக்கு
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்