சதுரகிரி ஹெர்பல்ஸ் திரு கண்ணன் அவர்கள் தயாரிப்புக்கள் (பாகம் 5) மூலச் சூரணம் ( பாகம் 4)
April 7, 2013 by: machamuniஇந்தப் பாகத்தை படிப்பதற்கு முன் சதுரகிரி ஹெர்பல்ஸ் திரு கண்ணன் அவர்கள் தயாரிப்புக்கள் (பாகம் 5) மூலச் சூரணம் ( பாகம் 3 )ஐ படித்துவிட்டு இந்தப் பதிவைத் தொடரவும்.
இப்போது கற்றாழையின் சக்தியை மேலும் ஒரு சில காணொளிக் காட்சிகளைக் கொண்டு விளக்க இருக்கிறோம். கற்றாழை ஒரு அற்புத மூலிகை. இதன் சக்தியையும் புகழையும் ஒரு வருடம் முழுவதும் புகழ்ந்தாலும் புகழ்ந்து முடியாது.
சோற்றுக் கற்றாழைச் சோற்றுச் சாறும் , துத்தி இலைச் சாறும் , வல்லாரை இலைச் சாறும் கலந்து கையில் நன்றாக ஐந்தாறு முறைக்குக் குறையாமல் கையில் தழுக்கற பூசி வெய்யிலில் காய வைத்து பின் இந்த கீழ்க்கண்ட வேலைகளை செய்ய வேண்டும்.ஆனால் வல்லாரை அந்த சமயத்தில் கிடைக்கவில்லை.கொண்டு வருவதாகச் சொன்ன சதுரகிரி ஹெர்பல்ஸ் கண்ணன் அன்று வரவேயில்லை.அதனாலும் இந்த காணொளிக் காட்சி எடுக்கப்பட்ட வேளை இரவு.எனவே சாற்றை கையில் பூசி காய வைக்க இயலவில்லை.
எனவே கீழே உள்ள காணொளிக் காட்சிகள் நான் எதிர்பார்த்த அளவிற்கு , அவ்வளவு சிறப்பாக இல்லாவிட்டாலும் நமது வலைத் தள அன்பர்கள் இப்படி சில விடயங்கள் இருப்பதை தெரிந்து கொள்ள இந்த காணொளிக் காட்சிகளை அப்படியே தந்துள்ளேன்.
கற்றாழைச் சாற்றையும் ,துத்தி இலைச் சாற்றையும்,வல்லாரைச் சாற்றையும் ஐந்தாறு முறை கையில் நன்றாகப் பூசி வெய்யிலில் காய வைத்து நெருப்புக் கங்குகளை அள்ளலாம்.வல்லாரைச் சாறு சேர்க்காததாலும் , சாறு சரியாகக் காயாத காரணத்தால் கையில் நெருப்பை அள்ளும் போது கங்குகள் கையில் ஒட்டுவதை காணலாம்.அவ்வாறு ஒட்டினால் அங்கு நெருப்பு சுடும்.அப்போது கற்றாழைச் சாற்றை தேங்காயெண்ணையில் கலந்து போட பொக்களம் ஆகாமலும் புண்ணாகாமலும் தடுக்கப்பட்டு சரியாகும். இதோ காணொளிக் காட்சி.
[tube]http://www.youtube.com/watch?v=LZzttP1sbmw[/tube]
கற்றாழைச் சாற்றையும் ,துத்தி இலைச் சாற்றையும்,வல்லாரைச் சாற்றையும் ஐந்தாறு முறை கையில் நன்றாகப் பூசி வெய்யிலில் காய வைத்த அதன் பின்னர் நன்றாகக் காயும் வெறும் கையால் எண்ணெயில் வடை சுட்டு எடுக்கலாம்.இதை சிலர் தெய்வம் எனக்கு வசியமாயிற்று அதனால்தான் எம்மால் இதெல்லாம் செய்ய முடிகிறது என்பார்கள்.எனக்கு வசியமான இந்த கடவுளின் வசிய சக்தியால் நான் அதிச் செய்கிறேன் ,இதைச் செய்கிறேன் என்று பணம் வசூல் செய்வார்கள் .இந்த காணொளிக் காட்சியை வெளியிட்ட எம்மால் அவர்கள் பிழைப்பில் மண்.
[tube]http://www.youtube.com/watch?v=NsITzzdoXu8[/tube]
இந்த காணொளிக் காட்சியில் சாறு சரியாகக் காயாத காரணத்தால் அதுவும் பொரிந்து போய்விடுவதைக் காணுங்கள்.
இத்துடன் கற்றாழையின் புராணத்தை முடிப்போம்.
சதுரகிரி ஹெர்பல்ஸ் திரு கண்ணன் அவர்கள் மூலச் சூரணத்தில் உள்ள மற்ற பொருட்களையும் அவற்றின் சக்தியையும் பார்ப்போம்.
3)கடுக்காய்ப் பூ( கர்க்கடக சிங்கி ):-
முக்கலையங் காசகய மூடு கிராணிமுளை
சுக்கிரத் பித்தங் கறைப் பேதி -யுட் குடலிற்
றங்கொலி நீர்ப் புண் சுரஞ்ச மீரம்விட வெப்பிவைபோஞ்
சிங்கியினாற் போகமுந் தேர்.
(குணபாடம்)
கர்க்கடக சிங்கி என்றழைக்கப்படும் கடுக்காய்ப் பூவினால் முக்கல் , ஆமம் , இருமல், ஷயம் , கிறு கிறுக்க வைக்கும் கிரகணி நோய் , மூல முளை , ரத்த பித்தம் ( டீ , காபி , மூக்குப் பொடி ,புகையிலை , சாராயம் இவை உட்கொள்ளுவதால் இரத்தத்தில் பித்தம் அதிகரித்தல், இரத்தம் சாக்கடையாகிப் போனதால் விளைவு இரத்த அழுத்தம், நரம்புகள் வெடித்தல், இதயத்தாக்கு இவைதாம் ),ரத்த பேதி, குடலிரைச்சல் , மேக விரணம் (பால் வில்னை நோயால் வரும் புண்கள், சர்க்கரை வியாதியால் வரும் புண்கள் (ஆண்குறியில் வரும் நமைச்சல் மற்றும் புண் ,கால்களில் வரும் காங்கரீன் புண்கள் )) , சுரம் , விஷ சுரம் ஆகிய இவைகள் போகும்.
கிரகணி நோயை அல்லோபதி மருத்துவ முறையில் IRRITABLE BOWEL SYNDROME என்றழைப்பார்கள்.இது ஒன்றும் இல்லை . இயற்கையாக குடலில் உணவு செரிக்கப்பட்டு அதுவாகவே மலமாக வெளியேறாமல், சாப்பிட்டவுடன் குடலில் சாப்பாடு விழுந்தவுடன், அதனால் தள்ளப்பட்டு வெளியேறுவதே இந்த கிரகணி என்றழைக்கப்படும் I B S .கிராமத்தில் ஒரு சொலவடை சொல்வார்கள். ” கடன் வாங்கி கடன் கொடுத்தவனும் தின்னுட்டு தின்னுட்டு பேண்டவனும் உருப்பட முடியாது ” என்பார்கள் . அதாவது ஒரு கடனை அடைக்க இன்னோர் கடன் வாங்குபவனும், சாப்பிட்ட உடனேயே மலம் கழிக்க ஓடுபவனும் தேற மாட்டார்கள் என்று பொருள். உணவில் உள்ள சத்துக்கள் குடலாலும் க்டல் இயக்கத்தாலும் , உறிஞ்சப்படாமல் மேலே விழும் உணவால் தள்ளப்பட்டு வெளியேறுவதால் உடல் சத்துக்கள் குறைந்து தலை கிறுகிறுக்கும். அப்படிப்பட்ட தலை கிறு கிறுக்க வைக்கும் கிரகணி நோயைப் போக்க வல்லது இந்த கடுக்காய்ப் பூ.
நீரிழிவு நோயாளியின் அழுகி வரும் கால்கள்
மேக விரணம் (பால் வினை நோயால் வரும் புண்கள், சர்க்கரை வியாதியால் வரும் புண்கள் (ஆண்குறியில் வரும் நமைச்சல் மற்றும் புண் ,கால்களில் வரும் காங்கரீன் புண்கள் ))
பால் வினை நோயால் வரும் பெண்குறிப் புண்
பால் வினை நோயால் ( கோனேரியா ) வரும் ஆண்குறிப் புண்கள்
பால் வினை நோயால்(சிபிலிஸ்) வரும் ஆண்குறிப் புண்கள்
மேற்குறிப்பிட்ட இப்படிப்பட்ட புண்களையும் ஆற்றும் வல்லமை உள்ளது இந்த கர்க்கடக சிங்கி என்னும் கடுக்காய்ப் பூ.உடலின் அழியும் சத்துக்களை ( தாதுக்களை அழியாமல் தடுக்கும் ஆற்றல் இந்த கர்க்கடக சிங்கிக்கு உண்டு).
பலர் வியாதி ஓரிடத்தில் இருக்கிறது என்று அலோபதி மருத்துவம் கூறினால் அந்த மருத்துவம் சொல்வதைக் கேட்டுக் கொண்டு அந்த இடத்தில் இருக்கும் வியாதியைக் குணப்படுத்த மருந்து கேட்கிறார்கள்.உண்மையில் வியாதியின் அறிகுறி தோலில் இருக்கிறது என்றால் வியாதியின் வேர் நுரையீரலில் இருக்கிறது என்று பொருள். உண்மையில் வியாதியின் அறிகுறி எலும்பிலும் , சிறுநீர்ப் பாதையிலும் பிறப்புறுப்பிலும் இருக்கிறது என்றால் வியாதியின் வேர் சிறு நீரகத்தில் இருக்கிறதுஎன்று பொருள். உண்மையில் வியாதியின் அறிகுறி சதையில் இருக்கிறது என்றால் வியாதியின் வேர் கல்லீரலிலும், மண்ணீரலிலும் , வயிற்றிலும் இருக்கிறதுஎன்று பொருள்.
இதையே வள்ளுவர் இப்படிச் சொல்கிறார்.
நோய் நாடி நோய்முதல் நாடி அது தணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்.
எனவே வியாதி ஓரிடத்தில் இருக்கிறது என்றால் அங்கேயே அந்த வியாதியின் வேர் இருக்கிறது என்று முட்டாள்தனமான அல்லோபதி வைத்தியம் போல எண்ணாதீர்கள்.சித்தர்கள் வைத்தியமான புத்திசாலியான வைத்தியம் சொல்வதை புரிந்து நடக்கப் பார்வையை மாற்றுங்கள்.
4)மாதுளம் பூ:-
வாந்திபித்த தோடமோடு மாறாக் கடுப்பனலஞ்
சேர்ந்து நின்ற மூலரத்தந் தீர்க்குங்காண் – மாந்தளிர்க்கை
மாதே! கரைப்புஷ்டி வல்லபல னுண்டாக்கும்
பூதலத் துண் மாதுளையின் பூ
(குணபாடம்)
மாதுளம்பூ , பித்த வாந்தி , வயிறுழைதல் , வெப்பம், ரத்த மூலம் இவைகளைப் போக்கும்.
மாதுளம்பூ , மாதுளம்பிஞ்சு, மாதுளம் துளிர் தனித் தனியாகவாது , அல்லது ஒருமிக்க சேர்த்தாவது அரைத்துத் தயிரில் கலக்கிக் கொடுக்க ரத்த பேதி , சீத பேதி முதலியவை போகும்.
பதிவு பெரிதாய்ப் போவதால் மற்றவற்றை சதுரகிரி ஹெர்பல்ஸ் திரு கண்ணன் அவர்கள் தயாரிப்புக்கள் (பாகம் 5) மூலச் சூரணம்( பாகம் 5 ) ல் படித்துத் தெரிந்து கொள்ளலாம்.
அய்யா
மிக மிக பயனுள்ள பதிவுகள் அய்யா.அய்யா நீங்கள் செய்து காட்டியது போல கலைஞர் தொலை காட்சியிலும் ஒருவர் இப்படி தான் செய்து காட்டி உள்ளார். இப்பொழுது தான் தெரிகின்றது.உங்களால் பல விடயங்களை தெளிவாக புரிந்தும் கற்று கொண்டு உள்ளோம்.அய்யா!
அன்புள்ள திரு எம் சரவணன் அவர்களே
கருத்துரைக்கு மிக்க நன்றி,
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்
SIR MR.KANNAN JEE I STUDIED THE ABOVE MESSAGE FULLY AND GET VERY FEAR
BECAUSE I ALREADY TOLD THAT I HAVE GOT URINARY INVECTION PROBLEMS ENLARGED
PROSTAT AND GETTING PAIN IN ABCOM AND BACK SIDE OF THE KNEE ,SO I THINK IF I TAKE
MEDICINE FOR THE SAID PROBLEM I WILL BE HAPPY SO KINDLY REPLY ME I AM READY TO
GO THRU THIS .
THANKING YOU
D.VENKATESH BROTHER OF MR.SARAVANAN TRICHIRAPALLI MOBILE 7373736736
அன்புள்ள திரு வெங்கடேஷ் அவர்களே
கருத்துரைக்கு மிக்க நன்றி,
இது எமக்கு வர வேண்டிய தகவல் அல்ல .இது சதுரகிரி ஹெர்பல்ஸ் கண்ணன் அவர்களுக்கு போக வேண்டிய தகவல்.அவரிடம் உங்கள் பிரச்சினையைச் சொல்லிக் கேளுங்கள்.அவர் மருந்துகளை அனுப்புவார்.
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்
நல்ல முயற்சி. சதுரகிரி கண்ணன் ஏன் இவ்வாறு செய்கிறார். வல்லாரை இலையை கொண்டுவந்து கலவை செய்து கையில் காயவைத்து பின் எடுத்து இருந்தால் மிக நன்றாக இருக்கும். முழுமையான காணொளி காட்சியாக இருக்கும்.மூட நம்பிக்கையை உடைத்து உண்மையை வெளிபடுத்துவதில் மற்றவர்கள் பொழைப்பில் மண் விழுந்தால் மக்களுக்கு நல்லதே.
கடுக்காய் பூவின் அருமையை தெரியப்படுத்தியதற்கு நன்றி. அல்லோபதியின் தவறான அணுகுமுறையை சிறப்பாக வெளிப்படுத்தியது அருமை. மக்கள் பயன் பெறவேண்டும் என்ற நல்ல எண்ணம் உள்ளது. ஆனால் இது அல்லோபதி மருத்துவர்களின் கோபத்தை தூண்டும். சட்டமும் அல்லோபதி மருத்துவர்களுக்கு துணை போகும். ஏனென்றால் நம்மை அடிமை படுத்த ஆட்சியாளர்கள் விரும்பி உண்மையை வெளிப்படுத்த தடை செய்வார்கள்.
கடுக்காய் செடியின் பூவை படம் எடுத்து வெளிஇடுங்கள். மேலும் உங்கள் பணி சிறக்கட்டும்.
நன்றி.
அன்புள்ள திரு கே ஆனந்தன் அவர்களே
கருத்துரைக்கு மிக்க நன்றி,
சித்தர்கள் அருள் எம்மை பூரணமாய் காத்து இருப்பதை நாம் பல சந்தர்ப்பங்களில் உணர்ந்திருக்கிறோம்.சகல சக்தியும் பெற்ற சித்தர்களை எம்மை எத்துன்பத்திலிருந்தும் காப்பார்கள்.கடுக்காய்ச் செடியல்ல அது சிறு மர வகுப்பைச் சேர்ந்தது.
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்
அன்புள்ள அய்யா,
கற்றாளை நல்லது என்று ஏற்கனவே நிறைய கேள்விப்பட்டு இருந்தாலும், தங்களின் பதிவை படித்துவிட்டு C.P. PLANTATIONS, Kottampatty, மதுரை தயாரித்த Alloe HEALTH DRINK
1 litre bottle வாங்கி குடித்து வருகிறேன்.ஏற்கனவே 4 வருடங்களுக்கு முன் வாங்கியது குடிக்காமல் வீணடித்தேன்.ஆனால் தற்போது அவ்வாறு செய்ய மாட்டேன்.
நன்றி.
அன்புள்ள திரு கே ஆனந்தன் அவர்களே
கருத்துரைக்கு மிக்க நன்றி,
இப்படிப் பதப்படுத்தப்பட்ட பொருள்களைவிட இயற்கையாக உள்ள சோற்றுக் கற்றாழை பல மடங்கு சக்தி வாய்ந்தது.எனவே இயற்கையாக உள்ள சோற்றுக் கற்றாழையை சாப்பிட தொடங்குங்கள்.அல்லது கற்றாழை ஜாம் என்ற பெயரில் அரவிந்த் ஹெர்பல்ஸ் ல் தயாரிப்பில் உள்ள தேனில் பதப்படுத்தப்பட்ட சோற்றுக் கற்றாழையை உபயோகியுங்கள்.இதே தயாரிப்பை சதுரகிரி ஹெர்பல்ஸ் கண்ணன் தயாரிக்க இருக்கிறார்.கேட்டு வாங்கிச் சாப்பிடுங்கள்.
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்
அன்புள்ள அய்யா,
தங்களின் பதிவை படித்துவிட்டு இணையத்தில் கீழ்க்கண்ட வற்றை அறிந்தேன்.
திருக்குறுக்கைவீரட்டம் திருத்தலத்தின் தலமரமாக விளங்குவது கடுக்காய் மரமாகும். இஃது தமிழக காடுகளில் தானே வளரும் மர வகையைச் சார்ந்தது. சித்த மருத்துவத்தில் மிகச் சிறந்த மருந்துப் பொருள்களில் இதுவும் ஒன்று.
நன்றி.
அன்புள்ள திரு கே ஆனந்தன் அவர்களே
கருத்துரைக்கு மிக்க நன்றி,
திருக்குறுக்கை வீரட்டம் அட்ட வீரட்ட தலங்களுள் ஒன்று.சிவனின் வீரம் வெளிப்பட்ட தலங்கள் எட்டு .அவை எட்டு தலங்கள் .இவற்றுள் இந்தத் தலம் காமனை எரித்த தலம்.
ஆதியிற் பிரம னார்தா மர்ச்சித்தா ரடியி ணைக்கீழ்
ஓதிய வேத நாவ ருணருமா றுணர லுற்றார்
சோதியுட் சுடராய்த் தோன்றிச் சொல்லினை யிறந்தார் பல்பூக்
கோதிவண் டறையுஞ்சோலைக் குறுக்கைவீ ரட்ட னாரே.
தலச் சிறப்பு: கடுக்காய்மரம் தல விருட்சமாதலின் கடுவனம் எனவும், இறைவர் அம்மையாரைப் பிரிந்து யோகஞ் செய்த இடமாதலின் யோகீசபுரம் எனவும், காமனைத் தகித்த இடமாதலின் காமதகனபுரம் எனவும், இலக்குமியினது கம்பத் (நடுக்கத்) தைப் போக்கியதாகலின் கம்பகரபுரம் எனவும், தீர்க்கவாகு முனிவர் இத்தலத்து வந்து இறைவனை அபிடேகித்தற்குக் கங்கா நீரினை விரும்பித் தமது கரங்களை நீட்டக் கரங்கள் நீளாது குறுகினமையால் குறுக்கை எனவும் பெயர்கள் வழங்கப்படுகின்றன.
பல வியாதிகளால் மிகுந்த காமம் கடுக்காய் உபயோகிக்க தணிவதால் காமனை எரித்த தலவிருட்சம் கடுக்காயாக வைக்கப்பட்டது.
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்
ஐயா வணக்கம், நான் தங்கள் நுண்ட நாள் வாசகன் ,ஐயா என் கால் பெரு விரல் 1 ஆண்டாக வலி எரிச்சல் ஆக உள்ளது ,தயவு செய்து நல்ல ஆலோசனை வழங்கவும், நன்றி!
அன்புள்ள திரு சாதிக் அவர்களே,
இது கல்லீரல் மற்றும் மண்ணீரல் பலவீனத்தைக் காட்டுகிறது . இது சர்க்கரை நோய் வருமுன்னர் வரும் எச்சரிக்கை குறிப்பு .கவலை கொள்ள வேண்டாம்.எமது அலைபேசி எண்ணை உங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பியுள்ளேன்.
இப்படிக்கு
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்
Dear swami iyya
How r u. I am drinking kadukai water for past 6 months. But there is increase in pitham and my teeths are black in colour. My foots gets infected on pitha vedipu. I don’t no which causes this problem. as wake up in morning my foot become very hot. please kindly give your solutions.
NANDRI IYYA
அன்புள்ள திரு திருநாவுக்கரசு அவர்களே,
கருத்துரைக்கு மிக்க நன்றி,
முதலில் தமிழில் எழுதுங்கள். பொதுவாக தமிழில் கருத்துரை எழுதாத நபர்கள் மீது எமக்கு சரியான மரியாதை ஏற்படுவதில்லை.நமது மொழி தமிழ்.நமது தமிழ் நம் உயிர்.நாமே அதை உபயோகிக்காவிட்டால் தமிழ் எப்படி வாழும்.பழக்கத்தில் உள்ள மொழிதான் வாழும்.நாம் எழுதியதை தமிழை அறிந்ததால் நீங்கள் படித்தீர்கள். முடியாது.ஆங்கிலத்தில் கேள்வி கேட்டால் பதிலளிக்கக் கூடாது என்று முடிவு எடுத்துள்ளோம்.இனி ஆங்கிலத்தில் கேள்விகள் கேட்டால் அது வெளியிடப்படவும் மாட்டாது என்பதை மிகப் பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்
கடந்த இரண்டு வருடங்களாக எனது இரு அக்குளில் அடிக்கடி கட்டி வருகிறது.
இது எதனால் ஏற்படுகிறது.
அன்புள்ள திரு கபில் அவர்களே,
கருத்துரைக்கு மிக்க நன்றி,
என்ன காரணம் என்று தெரிந்தால் போதுமா???உங்கள் மண்ணீரல் பலவீனமடைந்துள்ளது என்பதையே இது காட்டுகிறது.இன்னும் விபரம் தெரிய இந்த இணைப்பைப் பார்வையிடுங்கள்.
http://vidhai2virutcham.wordpress.com/2011/06/13/%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4-%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5/#more-12648
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்
மிகவும் நன்றி ஐயா .. நான் இரண்டு ஆண்டுகளுக்கு முன் உடற்பயிற்சி செய்து வந்தேன்.என் உடல் அதிகமான சூடு அடைந்த போது உடல் முழுவதும் வீக்கம் ஆனது.என்னால் மூச்சு விட முடியாமல் போனது.
பின்னர் அவசர தீவிர சிகிச்சை அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றேன். பின்னர் மருத்துவர்கள் உடற்பயிற்சி கூடத்துக்கு போக கூடாது என சொன்னார்.
நான் இப்போது மிகவும் குண்டாக உள்ளேன்.ஜிம் செல்ல பயமாக இருக்கிறது.
உங்கள் ஆலோசனை தேவை ஐயா
அன்புள்ள திரு கபில் அவர்களே,
கருத்துரைக்கு மிக்க நன்றி,
காலை முளை கட்டிய பாசிப் பயறும், மதியம் சோற்றுக் கற்றாழையும்,மாலை சாறுள்ள பழங்களும் சாப்ட்டு வர உடற் பருமன் குறையும்.
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்
மிகவும் நன்றி ஐயா …
அன்புள்ள திரு கபில் அவர்களே,
கருத்துரைக்கு மிக்க நன்றி,
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்
மதிப்பிற்குரிய சாமி ஐய்யா
தங்கள் நலம் நலமறிய ஆவல். நான் கடந்த 6 மாத காலமாக கடுக்காய் தூளை வென்னீரில் கலக்கி மாலையில் குடித்து வருகிறேன். மேற்படி உடலில் உஷ்ணம் அதிகரித்து பாதங்கள்லில் வெடிப்பு வந்துள்ளது, தாங்கள் தயவுசெய்து இதற்கு தீர்வு அளிக்கும்படி பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.
நன்றி
தமிழில் எழுதிவிட்டேன் சரியாக உள்ளதா?
அன்புள்ள திரு திருநாவுக்கரசு அவர்களே,
கருத்துரைக்கு மிக்க நன்றி,
முதலில் கடுக்காயை எப்படி பிரயோகம் செய்ய வேண்டும் என்பதைத் தெரிந்து கொள்ள எமது வலைப் பூ பதிவுகளான கடுக்காய்ப் பிரபாவ போதினி பாகங்களைப் படியுங்கள்.
http://machamuni.blogspot.in/2011/02/5.html
http://machamuni.blogspot.in/2011/02/6-2.html
http://machamuni.blogspot.in/2011/03/6-3.html
http://machamuni.blogspot.in/2011/03/6-4.html
http://machamuni.blogspot.in/2011/03/6-5.html
http://machamuni.blogspot.in/2011/05/6.html
http://machamuni.blogspot.in/2011/06/7.html
பின் தெரிந்து தெளியுங்கள்.
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்
the above news is very useful for our people.
Thank you very much….
We are waiting for your valiable update..
Regards,
MohideenThasthahir
அன்புள்ள திரு மொகைதீன் தஸ்தகீர் அவர்களே,
கருத்துரைக்கு மிக்க நன்றி,
முதலில் தமிழில் எழுதுங்கள். பொதுவாக தமிழில் கருத்துரை எழுதாத நபர்கள் மீது எமக்கு சரியான மரியாதை ஏற்படுவதில்லை.நமது மொழி தமிழ்.நமது தமிழ் நம் உயிர்.நாமே அதை உபயோகிக்காவிட்டால் தமிழ் எப்படி வாழும்.பழக்கத்தில் உள்ள மொழிதான் வாழும்.நாம் எழுதியதை தமிழை அறிந்ததால் நீங்கள் படித்தீர்கள். முடியாது.இனிமேல் ஆங்கிலத்தில் கேள்வி கேட்டால் பதிலளிக்கக் கூடாது என்று முடிவு எடுத்துள்ளோம்.இனி ஆங்கிலத்தில் கருத்துரை எழுதினால் வெளியிட மாட்டோம் என மிகப் பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
தமிழில் எழுதாதற்கு காரணமாக சொல்லிக் கொண்டே இருக்காதீர்கள்.“ தமிழ் எங்கள் உயிருக்கு நேர்” “ சாகும் வரை தமிழ் பயின்று சாக வேண்டும் .என் சாம்பலிலும் தமிழ் மணந்து வேக வேண்டும்” என்ற பாரதிதாசனின் வார்த்தைகள் எமக்கு உயிரான வார்த்தைகள்.எமது வலைத் தளத்தில் தமிழே முக்கியமானதாக இருக்க வேண்டும்.நேற்று ஒரு பதிவு இட்டிருக்கிறோம்.பார்க்கவில்லையா???
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்
Arumaiyana vilakkam nandry aiya
அன்புள்ள திரு ஸகீர் அவர்களே,
கருத்துரைக்கு மிக்க நன்றி,
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்.