சதுரகிரி ஹெர்பல்ஸ் திரு கண்ணன் அவர்கள் தயாரிப்புக்கள் (பாகம் 5) மூலச் சூரணம் ( பாகம் 5)

April 11, 2013 by: machamuni

இந்தப் பாகத்தை படிப்பதற்கு முன் சதுரகிரி ஹெர்பல்ஸ் திரு கண்ணன் அவர்கள் தயாரிப்புக்கள் (பாகம் 5) மூலச் சூரணம் ( பாகம்4 ) ஐ படித்துவிட்டு இந்தப் பதிவைத் தொடரவும்.

5)வெண் துத்தி:- வெண்துத்திச் செடி என்பது  போகர் மலைவாகடம் , கோரக்கர் மலை வாகடம் , புலத்தியர் கற்பம் ஆகிய நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ள கற்ப மூலிகை ஆகும்.கற்பம் என்றால் ஆயுளை நீட்டித்து உடலை அழியாமல் வைப்பது.

சித்தர்கள் பல அரிய காய கல்ப மூலிகைகளை உபயோகித்து அழியாத உடலைப் பெற்றார்கள்.அவர்கள் இவ்வரிய மூலிகைகளை எவ்வாறு உபயோகித்து  அழியாத உடலைப் பெற்றார்கள் என்பதை புத்தகங்களாக எழுதி வைத்துள்ளார்கள்.இவர்கள் இத்துடனில்லாமல் அந்த மூலிகைகள் மலைகளில் எங்கெங்கெல்லாம் கிடைக்கும் என்பதையும் ,அதை மலைகளில் உள்ள இடங்களின் பெயர், மற்றும் அடையாளங்களை  மலை வாகடங்களில் வருணித்து சொல்லியுள்ளார்கள்.அந்த மலை வாகடங்களில் வெண்துத்தி பற்றி குறிப்பிட்டுள்ளவற்றை இங்கே கீழே கொடுத்துள்ளோம்.

மலை வள சாஸ்திரம் கோரக்கர் மலை வாகடம்

korakkar malai vakadam_mini

போகர் மலைவாகடம்

bokar malai vakadam _mini

 bokar malai vakadam 1_mini

bokar malai vakadam 2_mini

நன்றி :-தாமரை நூலகம்.

காலாங்கி நாதர் கொல்லி மலை ரகசியம் என்னும் மரணம் மாற்றும் மூலிகைகள்

kalangi nathar kolli malai ragasiyam_mini

kalangi nathar kolli malai ragasiyam 1_mini

kalangi nathar kolli malai ragasiyam 2_mini

நன்றி ,ஆசிரியர் என்.பாலகுருருசாமி,

ஸ்ரீதேவி புத்தக நிலையம்

புலஸ்தியர் கற்பம் 300

மூலிகைகளின் வகை

கருதுஞ் செந்திரு கற்றாழை யிற்செழும்

பெருதும் வெண்துத்தி  பின்னுங்கை யான்கரு

அருதும் நீலக்கொ டிவேலி சீந்தியுந்

துரிதம வெண்கண்டங் கத்திரி தோணுமே

( பாடல் 80 )

இப்படிப்பட்ட  பல அரிய மூலிகைகள் மூலச் சூரணத்தில் சேர்க்கப்பட்டுள்ளது .

6)மற்றும் கடைச்சரக்குகள்:-

மேலும் சில சித்த மருத்துவக் கடைச் சரக்குகள் இந்த மூலச் சூரணத்தில் சேர்க்கப்பட்டுள்ளது.

இவற்றை சேர்த்துச் செய்த சூரணம் மிக நன்றாக வேலை செய்து மூலத்தை மிக எளிதாகக் குணமாக்கும்.

16 responses to “சதுரகிரி ஹெர்பல்ஸ் திரு கண்ணன் அவர்கள் தயாரிப்புக்கள் (பாகம் 5) மூலச் சூரணம் ( பாகம் 5)”

 1. jmarimuthu says:

  அன்புமிக்க அய்யா,

  அருமையான அரிதான பதிவு,மிக்க நன்றி

  • machamuni says:

   அன்புள்ள திரு ஜே மாரி முத்து அவர்களே,
   கருத்துரைக்கு மிக்க நன்றி,
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 2. அய்யா வணக்கம்,

  இந்த மூலச்சூரணம் சாப்பிடும் முறை பற்றி தயவு செய்து விளக்கவும்.

  பால் அல்லது தேன் இரண்டில் இதற்கு அனுபானம் எது என்பதைப்பற்றியும் தெளிவு படுத்தவும்.

  அன்புடன்,

  சி.சீனிவாசன்

  • machamuni says:

   அன்புள்ள திரு சி.சீனிவாசன் அவர்களே,
   கருத்துரைக்கு மிக்க நன்றி,
   வெறும் வயிற்றில் காலை , மாலை இரு வேளைகள் மூலச் சூரணத்தை அப்படியே சிறு கரண்டியில் எடுத்து வாயிலிட்டு உமிழ் நீருடன் கலந்து சப்பி சாப்பிடுங்கள்.உமிழ் நீருடன் கலக்காத எந்த மருந்தும் சரியாக வேலை செய்யாது.
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 3. K.Selva Vinayagam says:

  அன்புள்ள ஐயா ,
  வணக்கம். நான் சமீப காலமாக உங்கள் தொடர்களை படித்து வருகிறேன்.
  எனக்கு இடது காலில் மேல் பகுதியில் அரிக்கும்,சொரிந்தால் கருப்பு திட்டு போல வரும்.இதற்கு streoid injection அந்த தோல் பகுதியில் போட்டால் அந்த
  கருப்பு திட்டு உதிர்ந்து விடும்.பிறகு கொஞ்சம் மாதம் சென்றபின் திரும்பவும் வரும்.இதற்கு impure blood காரணம் என்கிறார்கள்.
  இதற்கு நிரந்திர மருந்து தெரிவிக்கவும்.

  நன்றி,
  க.செல்வ விநாயகம்.

  • machamuni says:

   அன்புள்ள திரு கே செல்வ வினாயகம் அவர்களே,
   கருத்துரைக்கு மிக்க நன்றி,
   steroid injection என்பது கடும் விஷம்தான் .உங்கள் உடலில் உள்ள உள்ளுறுப்புக்களையும்,ராஜ கருவிகளியும் கெடுத்து நாசமாக்கி உயிரையும் வாங்கிவிடும்.அவ்வளவு மோசமானதை மருந்தென்று எண்ணி அடிக்கடி போட்டுக் கொண்டிருக்கும் உங்களை என்ன என்று சொல்ல.உங்களுக்கு இரத்தத்தை சுத்தம் செய்ய ,சொல்லிக் கொடுப்பதைவிட இரத்தத்தை கெடுக்கும் வேலைகளை விட வேண்டும். டீ , காபி , பொடி , புகையிலை , சிகரெட்டு, பீடி , புகையிலையுடன் கூடிய வெற்றிலை , புகையிலை சேர்ந்த பாக்கு, கோழி , மீன் , கருவாடு , முட்டை இவற்றை தவிர்க்க வேண்டும் முடியுமானால் மருந்து சொல்கிறோம்.
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 4. K.Selva Vinayagam says:

  அன்புள்ள ஐயா,
  வணக்கம்

  நான் எடுத்து கொண்ட மருந்தின் பெயர் Tricot 40ml injection.

  எனக்கு மேற் சொன்ன எந்த பழக்கமும் இல்லாததால்,நீங்கள் என்ன மருந்து என்று தயவு செய்து சொல்லவும்.

  நன்றி,
  க.செல்வ விநாயகம்.

  • machamuni says:

   அன்புள்ள திரு கே செல்வ வினாயகம் அவர்களே,
   கருத்துரைக்கு மிக்க நன்றி,
   முதலில் உங்கள் உடலில் உள்ள ஆங்கில மருந்தின் விஷ வேகத்தை முறிக்க,அருகம் புல்லின் இலைகளை மட்டும் எடுத்து(அருகம்புல்லின் கணுவில் அந்த மருந்துத்தன்மையை முறிக்கும் நஞ்சு இருக்கிறது)ஒரு கைப்பிடி எடுத்து , அத்துடன் பதினோரு மிளகு வைத்து அரைத்து காலையில் வெறும் வயிற்றில், மூன்று நாட்கள் சப்பி சாப்பிட இது வரை எடுத்த steroid injection நஞ்சு முறியும்.அதன் பின்னர் பரங்கிப் பட்டைச் சூரணம் ( IMP COPS ) 50 கிராம் , சங்கு பற்பம் ( IMP COPS ) 10 கிராம் , வெள்ளி பற்பம் ( IMP COPS ) 10 கிராம் விகிதத்தில் கலந்து வைத்ட்துக் கொண்டு மூன்று வேளையும் வெறும் வயிற்றில் (அதாவது சாப்பாட்டுக்கு அரை மணி முன்பாக ) வெறும் வாயில் போட்டு சப்பி சாப்பிட்டு வர , ஒரு நாள் கூட விடாமல் 48 நாள் சாப்பிட இரத்தம் சுத்தமாகி மேற்படி வியாதி குணமாகும்.
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

   • ஸஹதுல்லாஹ் says:

    அண்ணன் அவர்களுக்கு,
    நீங்கள் மேற்கூறிய அருகம் புல், மிளகு மருத்துவம் பொதுவாக எல்லோரும் பொது உடல் நலத்திற்கு தினம்(அல்லது வேறு கால இடைவெளிகளில்) பயன்படுத்தலாமா? நீங்கள் முன்பொரு முறை செய்து காட்டியிருந்த நஞ்சு முறிக்கும் கருப்பட்டி போல் தினம்(அல்லது வேறு கால இடைவெளிகளில்) இதை பயன்படுத்தலாமா?

    தங்களன்புள்ள,
    ஸஹதுல்லாஹ்

    • machamuni says:

     அன்புள்ள திரு ஸஹதுல்லாஹ் அவர்களே,
     கருத்துரைக்கு மிக்க நன்றி,
     இரு கேள்விகளுக்கும் பயன்படுத்தலாம் என்பதே எமது பதில்.
     மிக்க நன்றி
     என்றென்றும் பேரன்பினால்
     சாமீ அழகப்பன்.

 5. K.Selva Vinayagam says:

  அன்புள்ள ஐயா,
  வணக்கம்

  தங்கள் பரிந்துரைக்கு மிக்க நன்றி.

  மேற்கூரிய மருந்தை நான் எடுத்து கொள்கிறேன்.

  பொன் பருத்தியின் நடைமுறை(வழக்கத்தில் உள்ள) பெயரை கொஞ்சம் சொல்லவும்.

  நன்றி,
  க.செல்வ விநாயகம்.

  • machamuni says:

   அன்புள்ள திரு கே செல்வ வினாயகம் அவர்களே,
   கருத்துரைக்கு மிக்க நன்றி,
   இது வரை எந்த முக்கியக் கேள்விக்கும் பதிலளிக்க தாமதத்ததில்லை, தவறியதுமில்லை.இப்படி காரணமின்றி மூலிகைககளின் விபரங்களைக் கேட்காதீர்கள்.இது எமது நேரத்தை வீணடிப்பது மட்டுமன்றி, கேள்விகளுக்கு நாம் கொடுக்கும் முக்கியத்துவத்தையும் குறைத்துவிடும்.
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

   • K.Selva Vinayagam says:

    அன்புள்ள ஐயா,
    வணக்கம்

    தவறாக புறிந்து கொள்ளவேண்டாம்.

    இளநரைக்கு ஒரு வலைப்பதிவில் பார்த்தேன். பொன் பருத்தி பற்றி எனக்கு அறிமுகம் இல்லை.

    எனக்கு இளநரை இருக்கிறது. மருத்துவ குறிப்பு தயவு செய்து சொல்லவும்.

    நன்றி,
    க.செல்வ விநாயகம்

    • machamuni says:

     அன்புள்ள திரு கே செல்வ வினாயகம் அவர்களே,
     கருத்துரைக்கு மிக்க நன்றி,
     பொன்னிறமான பஞ்சை உடைய வேலிப் பருத்தி என்னும் உத்தாமணியே அது.இதன் பஞ்சு கண்ணில் பட்டாலோ , பால் கண்ணில் பட்டாலோ கண் தெரியாமல் போய்விடும்.எனவேதான் இதை சொல்லாமல் தவிர்த்தோம். எனவே சில சக்தியுள்ள மூலிகைகளைக் கையாள அதீதமான மூலிகை அறிவு அவசியம் தேவை .அப்படி இல்லாமல் இதை கையாண்டால் விளைவு மிக விபரீதமாக இருக்கும் .கவனம் ! கவனம் ! கவனம்!
     மிக்க நன்றி
     என்றென்றும் பேரன்பினால்
     சாமீ அழகப்பன்.

 6. s.Leelavathi says:

  Sir

  I Need medicine for mootuvali thailam, moola sooranam, kindly send the details how i purchase from you

  Thanking you
  leela

  • machamuni says:

   அன்புள்ள திருமதி லீலாவதி அவர்களே,
   உங்களது கருத்துரைக்கு நன்றி ,
   முதலில் தமிழில் எழுதுங்கள் . இந்த மருந்துகளுக்கு நீங்கள் நாட வேண்டிய மின்னஞ்சல் முகவரி
   திரு அமீர் சுல்தான்.
   மின்னஞ்சல் :-machamunimooligaiyagam@gmail.com
   அலைபேசி எண் :- 9597239953
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

41 − = 40