சதுரகிரி ஹெர்பல்ஸ் கண்ணன் தயாரிப்புக்கள்( பாகம் 6)ஓர் அரிய மூலிகை ( சர்க்கரை வில்வம் )

July 2, 2013 by: machamuni

இந்த சர்க்கரை வில்வம் என்ற பதிவை சர்க்கரை நோயை குணமாக்கலாம் ( பாகம் 10 ) ஆக போடலாமா ??அல்லது சதுரகிரி ஹெர்பல்ஸ் கண்ணன் அவர்களின் தயாரிப்புக்கள் ( பாகம் 6) ஆக போடலாமா ???என்று ஒரு சிறு சிந்தனை கிளம்பியது .பிறகு சதுரகிரி ஹெர்பல்ஸ் கண்ணன் அவர்களின் தயாரிப்புக்கள் ( பாகம் 6) ஆக வெளியிட முடிவு செய்து வெளியிட்டுவிட்டோம்.

ஏனெனில் இதன் சிறப்புக்களை வெளியிட்ட பின் எங்கே கிடைக்கும் என்ற கேள்வி பிறக்கும் .அதற்கு இடமளிக்காமல் இப்படியே திரு சதுரகிரி ஹெர்பல்ஸ் கண்ணன் முகவரியுடன் வெளியிட்டுவிட்டோம். தேவையானவர்கள் பயன்படுத்திக் கொள்க!!!!

சர்க்கரை நோய் என்பது பொதுவாக செரிமான உறுப்புக்கள் சரியாக செரிக்காமல் தங்கள் நிலையில் இருந்து பிறழ்வதால் உண்டாகும் நோயாகும். இது பொதுவில் அதீத சூட்டை உடலில் உண்டாக்கும்.பொதுவாக சிவனுக்கு உகந்த வில்வமே இந்த உடற்சூட்டை தணித்து சர்க்கரை நோயை கண்டிக்க வல்லது.அதிலும் மேன்மையானது சர்க்கரை வில்வம்.

இது சதுரகிரி மலையிலும்.அதை ஒட்டிய மலைச் சாரல்களிலும் கிடைக்கிறது.இதற்கு இனிப்போடு கூடிய துவர்ப்புச் சுவையுடன் இருக்கிறது.இந்தச் சர்க்கரை வில்வ இலைகள் மரத்திலிருந்து பறித்து சில வாரங்கள் ஆனாலும் வாடுவதில்லை.மரத்தில் பறித்தது போலவே உள்ளது. ( இந்தக் குணம் சோற்றுக் கற்றாழை , மற்றும் ஆகாச கருடன் கிழங்கை ஒத்ததாய் இருக்கிறது ) .

இது இதைச் சாப்பிட்டு வரும் மலைவாழ் மக்களான பளியர் இன மக்களை இளமையோடும், வலிவோடும் வாழ வைக்கும் கற்ப மூலிகையாகவும் உள்ளது.

பொதுவாக எந்த மூலிகைகள் எளிதில் சாகாமல் , வாடாமல் இருக்கின்றனவோ அவை தன்னைக் காத்துக் கொள்வது போலவே , அது சேர்ந்த உடலையும் காக்கின்றது.அது போலவே இந்தச் சர்க்கரை வில்வம் 48 நாட்கள் காலை , மதியம் , மாலை , இரவு சாப்பாட்டிற்கு முன்பு பாதித் தேக்கரண்டி அளவு சுவைத்துச் சாப்பிட்டு வர சர்க்கரையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருகிறது.

பொதுவாக இதைச் சாப்பிட்டு வரும் மலைவாழ் மக்களான பளியர் இன மக்களுக்கு சர்க்கரை நோயே வருவதில்லை.இத்துடன் கிழங்கு ஒன்றும் சாப்பிட்டு வருகிறார்கள்.அதை அடுத்த பதிவில் பார்க்கலாம்.

sarkkarai vilvam1_mini

sarkkarai vilvam2_mini

சர்க்கரை நோயால் அவதிப்படுபவர்கள் இந்த சர்க்கரை வில்வத்தை சாப்பிட்டு வர ,சர்க்கரை நோயின் தொல்லைகளில் இருந்து விடுபட்டு நீளாயுள் பெறுவர்.

சதுரகிரி ஹெர்பல்ஸ் கண்ணன் அவர்கள் தனது தயாரிப்புக்களுக்கென தனியாக ஒரு  வலைப் பூவும் (அதன் இணைப்பை கீழே கொடுத்துள்ளோம் )தமிழில் வாசிக்க.

http://sathuragiriherbals.blogspot.in/

ஆங்கிலத்தில் வாசிக்க.

http://srisathuragiriherbals.blogspot.in/

தனியாக ஒரு  வலைத்தளமும் (அதன் இணைப்பை கீழே கொடுத்துள்ளோம் )

http://sathuragiriherbals.com/

ஆரம்பித்துள்ளார்.அவருக்கு தங்களது மேலான ஆதவை நல்குமாறு வேண்டுகிறோம்.

சதுரகிரி ஹெர்பல்ஸ் திரு கண்ணன் அவர்கள் தற்போதைய புதுப்பிக்கப்பட்ட முகவரி மற்றும் அலைபேசி எண் மற்றும் அவரது தொலைபேசி எண்கள் ஆகியவற்றை கீழே காண்க.

+919943205566

+914563282222

அவரது முகவரி:-

திரு பெ.கண்ணன்,சதுரகிரி ஹெர்பல்ஸ்,

2/159, மங்கம்மாள் கோவில் தெரு,கான்சாபுரம்,(P-O)

திரு வில்லிபுத்தூர் தாலுகா,விருதுநகர் மாவட்டம்

மின்னஞ்சல் முகவரி

herbalkannan@gmail.com

17 responses to “சதுரகிரி ஹெர்பல்ஸ் கண்ணன் தயாரிப்புக்கள்( பாகம் 6)ஓர் அரிய மூலிகை ( சர்க்கரை வில்வம் )”

 1. சதீஷ்ஞானகுமாரன் says:

  ஐயா!
  சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கும் , இல்லாதவர்களுக்கும், இனிப்பான ஒரு நல்ல தீர்வு தந்திருக்கிறீர்கள். இந்த இனிப்பான செய்தியால் , அவர்கள் மனங்குளிரச்செய்திருக்கிறீர்கள்.
  மிக்க நன்றி ஐயா!
  அன்புடன்,
  சதீஷ்ஞானகுமாரன்,
  கும்பகோணம்.

  • machamuni says:

   அன்புள்ள திரு சதீஷ் ஞானக் குமரன் அவர்களே,
   கருத்துரைக்கு மிக்க நன்றி,
   இன்னும் இது போன்ற பல மூலிகைகள் நோய் போக்கவும் , ஆயுளை விருத்தி செய்யவும் காணொளிக் காட்சியுடன் தொடராக வர இருக்கின்றன.
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 2. m.saravanan says:

  மதிப்பிற்குரிய அய்யா

  சர்க்கரை நோயாளிகளுக்கு மிக மிக அற்புதமான பதிவுகள் அய்யா என்னால் முடிந்த அளவு அனைவரிடத்திலும் இந்த விடயத்தை கொண்டு சேர்க்கின்றேன் நன்றி அய்யா

  சரவணன்
  திருச்சி

  • machamuni says:

   அன்புள்ள திரு சரவணன் அவர்களே,
   கருத்துரைக்கு மிக்க நன்றி,
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 3. ஐயா,
  கடலின் ஆழம் அளவிட முடிவதில்லை; கடலின் அலையும் ஓய்வதில்லை; அதுபோல்
  உங்களின் பதிவும் !

  என்றென்றும் உங்களின் பேரன்பினால்,
  ஜெ.ஹரிகிருஷ்னன்.
  பெங்களூரு.

  • machamuni says:

   அன்புள்ள திரு ஜெ.ஹரிகிருஷ்ணன் அவர்களே ,
   உங்களது கருத்துரைக்கு நன்றி.
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 4. uday says:

  Respected sir,

  I am having eye stye problem once in 10 days for past 3 months…Kindly suggest me a medicine..Please also give your phone number sir..My email id udayshanker1986@gmail.com

  • machamuni says:

   அன்புள்ள திரு அவர்களே ,
   உங்களது கருத்துரைக்கு நன்றி.கீழ்க்கண்ட இணைப்புக்களைப் பாருங்கள்.அவற்றைக் கடைப் பிடியுங்கள்.பார்வை சரியாகும்.
   http://machamuni.com/?p=1220
   http://machamuni.com/?p=1086
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 5. P.N.PRATHAP says:

  அன்புள்ள அய்யா அவர்களுக்கு ,

  எனது மகன் வயது 2.உடலில் பல இடங்களில் கொப்புளம் போல் தோன்றி பின்னர் புண்ணாக மாரி விடுகிறது .அந்த புண்ணில் இருந்து வடியும் நீர் படும் இடமெல்லாம் புதிய புண் உருவாகிறது .தையை கூர்ந்து ஒரு உபயம் கூறவும்

  நன்றியுடன்

  பூ.நா .பிரதாப்

  • machamuni says:

   அன்புள்ள திரு பூ.நா .பிரதாப் அவர்களே ,
   உங்களது கருத்துரைக்கு நன்றி.
   இரத்தம் கெட்டுப் போயுள்ள நிலைதாம் இது .தாங்கள் செய்ய வேண்டியதெல்லாம் இரத்தத்தை சுத்தப்படுத்துவதுதாகும்.முதலில் மலையப்பசாமி வைத்தியசாலை, பழனி , அவர்களால் தயாரிக்கப்படும் ராஜாங்க எண்ணெய் இரு நாட்களுக்கொரு முறை அதில் குறிப்பிட்ட அளவு சாப்பிட வேண்டும். இது சாப்பிடும் நாட்களில் கீழக்கண்ட மருந்தை சாப்பிடக்கூடாது.மேற்படி மருந்து சாப்பிடாத நாட்களில் மூன்று வேளையும் , பரங்கிப்பட்டைச் சூரணம் ( IMPCOPS ) 50 கிராம் , சங்கு பற்பம் ( IMPCOPS ) 10 கிராம் , வெள்ளி பற்பம் ( IMPCOPS ) 2 கிராம் கலந்து சாப்பிட்டு வர 48 நாட்களில் குணம் கிடைக்கும்.இதை சாப்பிடும் போது பாசிப்பருப்பு சோறு , மிளகு சாதம் நெய் மட்டும் சாப்பிட்டு வர வேண்டும்.வேறு எந்த உணவும் உட்கொள்ள வேண்டாம்.
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

   • prathap says:

    அன்புள்ள அய்யா மிக்க நன்றி தாங்கள் கூறியவாறே பின்பற்றுகிறேன்

    • machamuni says:

     அன்புள்ள திரு prathap அவர்களே ,
     உங்களது கருத்துரைக்கு நன்றி.
     மிக்க நன்றி
     என்றென்றும் பேரன்பினால்
     சாமீ அழகப்பன்

    • machamuni says:

     அன்புள்ள திரு prathap அவர்களே ,
     உங்களது கருத்துரைக்கு நன்றி .
     மிக்க நன்றி
     என்றென்றும் பேரன்பினால்
     சாமீ அழகப்பன்

 6. k.s.venkatramanan says:

  அன்புள்ள மச்சமுனி ஆசிரியர்க்கு எனது நெஞ்சார்ந்த வணக்கங்கள்.

  எனது தம்பிக்கு கழுத்தில் ஆபரேசன் செய்த தழும்பு (விபத்தில் அடிபட்ட போது ) அப்படியே உள்ளது. இதை காரணம் காட்டி பெண் கொடுக்க மறுக்கிறார்கள். இந்த தழும்பு மறைய ஏதாவது மருந்து இருந்தால் தயவு செய்து கூறவும்.

  நன்றியுடன்
  கு. செ. வெங்கட்டரமணன்
  பவானி

  • machamuni says:

   அன்புள்ள திரு கு. செ. வெங்கட்டரமணன் பவானி அவர்களே,
   உங்களது கருத்துரைக்கு நன்றி ,
   வேப்பம் பட்டையை தண்ணீரில் கொதிக்க வைத்து அதில் மத்தை வைத்து கடைந்து, கடையும்போது எழும் நுரையை எடுத்து , தழும்பின் மீது தடவி வர தழும்பு மறையும் .
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 7. Uma Shankari says:

  வணக்கங்கள். எனக்கு சர்க்கரை வில்வம் செடி தேவைப்படுகிறது. அதை உங்கள் மூலமாக பெற முடியுமா? முடியுமானால் எப்படி பெறுவது, நேரில் வந்து பெற வேண்டுமா — இது போன்ற விவரங்களுக்கு பதில் போடவும்.

  • machamuni says:

   அன்புள்ள திரு உமா சங்கரி அவர்களே,
   உங்களது கருத்துரைக்கு நன்றி,
   உங்களது வலைபூவைப் பார்வையிட்டோம் .மிக நன்றாக இருக்கிறது .சர்க்கரை வில்வம் செடி தேவையெனில் கீழ்க்கண்ட மின்னஞ்சல் முகவரிக்கோ அல்லது தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளுங்கள்.

   சதுரகிரி ஹெர்பல்ஸ் திரு கண்ணன் அவர்கள் தற்போதைய புதுப்பிக்கப்பட்ட முகவரி மற்றும் அலைபேசி எண் மற்றும் அவரது தொலைபேசி எண்கள் ஆகியவற்றை கீழே காண்க.
   +919943205566
   +914563282222
   +919750806594
   +919894912594
   அவரது முகவரி:-
   திரு பெ.கண்ணன்,
   சதுரகிரி ஹெர்பல்ஸ்,
   2/159, மங்கம்மாள் கோவில் தெரு,கான்சாபுரம்,(P-O)
   திரு வில்லிபுத்தூர் தாலுகா,விருதுநகர் மாவட்டம்.
   மின்னஞ்சல் முகவரி
   herbalkannan@gmail.com
   இப்படிக்கு
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

96 − 93 =