சதுரகிரி ஹெர்பல்ஸ் கண்ணன் தயாரிப்புக்கள் ( பாகம் 8) ஓர் அரிய மூலிகை (கனையெருமை விருட்சம்)

July 12, 2013 by: machamuni

காய கற்ப மூலிகைகளென்று சொல்லும் போது அதற்குள்ள  ஒரு முக்கியத்துவத்தை இங்கே  குறிப்பிட விரும்புகிறோம்.அதாவது கழிவுகளின் பெருக்கமே அனைத்து நோய்களும் .நோய்களின் தொகுப்பு மரணம் .எனவே கழிவுகளை அகற்றினால் நோய்கள் அனைத்துமே அகலும். நோய்களும்  அகன்றால் மரணமும் அகலும்.எனவே ஒரு குறிப்பிட்ட வியாதியை இந்த காய கற்ப மூலிகைகள் கண்டிக்கும் என்றால் அந்தக் குறிப்பிட்ட வியாதியுடன் உடலில் உள்ள கழிவுகளை நீக்குவதால் உடலில் உள்ள மற்ற வியாதிகளையும் கண்டிக்கும் என்பதோடு ஆயுளையும் விருத்தி செய்யும்  என்று பொருள்.

இப்போது சென்ற பதிவில் பார்த்தது போல ஒரு கற்ப மூலிகையைப் பற்றிப் பார்க்கலாம்.சதுரகிரி ஹெர்பல்ஸ் கண்ணன் தயாரிப்புக்கள் ( பாகம் 8) ஓர் அரிய மூலிகை (கனையெருமை விருட்சம்) என்ற தலைப்பில் இது வெளியிடப்பட்டாலும் இது தயாரிக்கப்படுவதல்ல. இதற்கு முன்னிருக்கும்  இரு கட்டுரைகளும் அது போலத்தான் என்பதால் இவற்றிற்கு கிடைக்கும் மாதங்களும் கால வரையரை உண்டு என்பதாலும் இதற்கு திரு கண்ணனிடம் அவசரம் என்று  கோர வேண்டாம்.

இதே விடயங்கள்தான் கீழ்க்கண்ட  காயகற்ப பதிவுகளுக்கும் சேர்த்துத்தான்.

சதுரகிரி ஹெர்பல்ஸ் கண்ணன் தயாரிப்புக்கள் ( பாகம் 7) ஓர் அரிய மூலிகை ( முடவாட்டுக்கால் )

சதுரகிரி ஹெர்பல்ஸ் கண்ணன் தயாரிப்புக்கள்( பாகம் 6)ஓர் அரிய மூலிகை ( சர்க்கரை வில்வம் )

கீழ்க்கண்ட நூல்களில் கனை யெருமை விருட்ச கற்பம் பற்றி சில நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களை கீழே கொடுத்துள்ளோம்.

kana erumai virutcham1_mini

kana erumai virutcham3_mini

kana erumai virutcham4_mini

kana erumai virutcham5_mini

நன்றி:-

காலாங்கிநாதர் கொல்லிமலை ரகசியம் என்னும் மரணம் மாற்றும் மூலிகைகள்
ஆசிரியர் என், பாலகுருசாமி , (சித்த வைத்தியர் ), கோட்டாத்தூர்.
ஸ்ரீதேவி புத்தக நிலையம்,1,ஆண்டியப்பன் தெரு , சூளை , சென்னை-3,
M.பூபதி , 219, அல்லிக்குளம் புதிய வளாகம், மூர் மார்க்கெட் சென்னை-3

கீழ்க்கண்ட இரு காணொளிக் காட்சிகளையும் படம் பிடித்தவர் திரு சதுரகிரி ஹெர்பல்ஸ் கண்ணன் அவர்களே.எனவே அது சம்பந்தமான அனைத்து பாராட்டும் அவரைச் சேர்ந்ததே!!

பழங்குடியினர் காட்டிற்குள் செல்லும் போது தன் இனத்தாருக்கு தான் சென்றிருக்கும் திசை மற்றும் இடத்தை அடையாளம் சொல்ல கீழ்க்கண்ட வகையில்  அடையாளம் சொல்லுதலை இன்று வரை கடைப்பிடித்து வைத்துள்ளதை காணொளிக்காட்சியாக கீழே கொடுத்திருக்கிறோம்.

[tube]http://www.youtube.com/watch?v=s2f8_cHRWU8 [/tube]]

காட்டில் உள்ள மலைவாழ் மக்கள் தங்களுக்கு தேவைப்படும் முக்கிய விடயங்களுக்கு மட்டும் இந்த கனையெருமை விருட்சம் போன்ற காய கற்ப மூலிகைகளை உபயோகித்து வந்துள்ளார்கள் .இந்த படத்தில் வரும்  மலைவாழ் மக்களுள் ஒருவரான வேலு என்பவர் 70 வயதானவர். இவருக்கு மூன்று மனைவிகள். மூவரும் இறந்துவிட்டனர். இவருக்குள்ள குழந்தைக்கு திரு சதுரகிரி ஹெர்பல்ஸ் கண்ணன் வாங்கிக் கொடுத்துள்ள மிக்ஸர் பாக்கெட்டை அந்த பையன் விடாமல் சாப்பிட்டுக் கொண்டிருப்பதை காணொளிக்காட்சியில் காணுங்கள். இது போன்ற பழங்குடியினருக்கு உதவி செய்ய பண உதவி செய்வதாக இருந்தால் திரு சதுரகிரி  ஹெர்பல்ஸ் கண்ணன் அவர்களிடம் தொடர்பு கொள்ளவும்.மேலும் கனையெருமை விருட்ச பால் ஆண்மையை விருத்தி  செய்யும் என்பதை அவர்கள் அவர்கள் சொல்லும் விதம் தெரியாமல் வெளிப்படுத்தி இருப்பதையும் , அவர்களது  அப்பாவித்தனமான தன்மையையும் ( INNOCENCE )காணுங்கள்.

இதில் காட்டப்பட்டுள்ள கனையெருமை விருட்சம் மேலே மின்சாரக் கம்பிகள் செல்வதால் அதில் உரசாமல் இருக்க அன்றுதான் வெட்டப்பட்ட மரம் எனவே பால் மிகக் குறைவாக வந்தது , கனையெருமை விருட்சம் மற்றும் அதன் தன்மைகளை இந்த காணொளிக்காட்சியில் காணுங்கள்.

[tube]http://www.youtube.com/watch?v=NkiReZQ7s4c&[/tube]]

எங்களது சபையில் அஞ்சாம்படை சாமி என்பவர் நயினார் கோவில் என்ற இடத்தில் இருந்தார்.அவர் தனது தொண்ணூற்றைந்து வயதிலும் நன்றாக முதுகுத் தண்டு நிமிர்ந்து உட்கார்ந்திருப்பார்(அவருக்கு 35 வயதில் மனைவியும் அந்த மனைவிக்கு இரு குழந்தைகளும் உண்டு ) அவரிடம் நாம் எப்படி இந்த வயதிலும் இப்படி தளராத உடலுடன் இருக்கிறீர்கள் என்று கேட்டதற்கு எனது ஐம்பத்து ஐந்தாம் வயதில் கனை யெருமை விருட்சப் பால் கால்படி அருந்ததினால் இந்த தளராத தேகம் கிடைத்தது என்றார்.அவர் தனது நூற்றைந்தாவது வயதில் அடங்கினார்.அவர் தமது வாழவின் கடைசி வரை உடல் தளராது இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இவர்கள் உரையாடலில் கனையெருமை விருட்சம் இருப்பதாகக் கூறும் இடம் யமபுரக் கானல் என சித்தர்கள் தங்களது மலை வாகடங்களில் கூறப்படும் இடமே.இந்த இடம் மிகவும் கொடும் வன விலங்குகள் உலாவும் இடம்.எனவே உயிர்களை வாங்கும் யமன் உறையும் (வாழும் ) இடமாகக் கூறப்படுகிறது.அங்கே உள்ள மரத்தில் இருந்து பால் எடுக்கும் காணொளிக்காட்சி பின்னால் வலையேற்றப்படும்.அதில் கல்லால் தட்டினவுடன்  பைப்பில் இருந்து தண்ணீர் பீறிட்டுக் கொட்டுவது போல் பால் கொட்டும்.அந்தக் காட்சியும் நம் வலைத் தள அன்பர்களுக்காக காட்சிக்கு தரப்படும்.

நாமும் இந்த கனையெருமை விருட்சப் பாலை தேன் சேர்த்து அருந்தும் பாக்கியம் கிடைத்தது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.கீழுள்ள புகைப்படங்களில் காணப்படுவது கணையெருமை விருட்சப் பால்தான். பல நாட்கள் ஆனாலும் இது கெட்டுப் போகாமல் இருக்கிறது  என்பது இதன் சிறப்பு.எது தான் அழிந்து போகாமலும் , கெட்டுப் போகாமலும் இருக்கிறதோ அது நம் உடலையும் கெட்டுப் போகாமல் வைத்திருக்கும்.கீழே கனையெருமை விருட்சப் பால் படங்கள்.

kanaiyerumai virutsam 1_mini

kanaiyerumai virutsam 2_minikanaiyerumai virutsam 4_mini

kanaiyerumai virutsam 5_mini

kanaiyerumai virutsam 7_mini

kanaiyerumai virutsam 9_mini

இந்தக் கனையெருமை விருட்சப் பாலை தேன் நாம் அருந்தும் போது கண்ணாடிக் குவளையில் இருக்கும் காட்சி.இது போன்ற பல காய கற்ப மூலிகைகளை நமது பயன் பாட்டில் உபயோகிக்கும்போது உடல் நன்றாக வளம் பெறும் முதுமை அகன்று இளமைத் தன்மை நம் உடலுக்கு கிடைக்கும்.

கோடிக் கற்பம் உண்டவர் சிவன், 10 லட்சம் கற்பம் உண்டவர் மஹாவிஷ்ணு , லட்சம் கற்பம் உண்டவர் பிரம்மா, 10,000 கற்பம் உண்டவர்கள் ஒரு கோடி உருத்திரர்கள், 1000 கற்பம் உண்டவர்கள் இந்திரன் முதலான தேவாதி தேவர்கள், 100 கற்பம் உண்டவர்கள் ரிஷிகள் , முனிவர்கள் , ஞானிகள், சித்தர்கள் ஆகலாம் என சதுரகிரித் தல புராணம் கூறுகிறது.

kana erumai virutcham 9_mini

சதுரகிரி ஹெர்பல்ஸ் திரு கண்ணன் அவர்கள் தற்போதைய புதுப்பிக்கப்பட்ட முகவரி மற்றும் அலைபேசி எண் மற்றும் அவரது தொலைபேசி எண்கள் ஆகியவற்றை கீழே காண்க.

+919943205566

+914563282222

அவரது முகவரி:-

திரு பெ.கண்ணன்,சதுரகிரி ஹெர்பல்ஸ்,

2/159, மங்கம்மாள் கோவில் தெரு,கான்சாபுரம்,(P-O)

திரு வில்லிபுத்தூர் தாலுகா,விருதுநகர் மாவட்டம்

மின்னஞ்சல் முகவரி

herbalkannan@gmail.com

72 responses to “சதுரகிரி ஹெர்பல்ஸ் கண்ணன் தயாரிப்புக்கள் ( பாகம் 8) ஓர் அரிய மூலிகை (கனையெருமை விருட்சம்)”

 1. shareef says:

  அருமை ஜி

  அடுத்த காணொளியை காண ஆவலுடன்

  நன்றி ஜி
  ஷரீப்

  • machamuni says:

   அன்புள்ள திரு ஷரீப் அவர்களே ,
   உங்களது கருத்துரைக்கு நன்றி.
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 2. ஆ.கோ.சம்பத்குமார் says:

  ஐயா , வணக்கம்,
  அருமையான பதிவு.

  • machamuni says:

   அன்புள்ள திரு ஆ.கோ.சம்பத்குமார் அவர்களே ,
   உங்களது கருத்துரைக்கு நன்றி.
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 3. கஜபதி says:

  அற்புதமான பதிவு அய்யா. நன்றி.

  இது போன்ற மூலிகைகளை வீட்டிலோ அல்லது தோட்டத்திலோ வளர்க்க முடியாதா?

  அல்லது ஏதெனும் வரைமுறை இருக்கிறதா?

  தெரிந்து கொள்ளவே கேட்கிறேன்.

  கஜபதி

  • machamuni says:

   அன்புள்ள திரு கஜபதி அவர்களே ,
   உங்களது கருத்துரைக்கு நன்றி.
   இதைப் போன்ற மூலிகைகளுக்கென பல வரைமுறைகள் உண்டு.மாதாந்திர விலக்காயிருக்கும் பெண்கள் அருகில் வந்தால் இது போன்ற தெய்வீகத் தன்மை உள்ள மூலிகைகள் துளசி உட்பட கருகிவிடும்.இதை எமது வீட்டுப் பெண்களிடம் சொல்லி வைத்துள்ளேன். அவர்கள் சரியாகத்தான் இருந்தார்கள் .தொழுகண்ணி என்ற மூலிகையை எமது வீட்டில் வளர்த்து வந்தேன்.அது ஆட்கள் அருகே வரும் போது இரு கை கூப்பி நாம் தொழுவது போல அது இலைகளை கூப்பி தொழுவதால் இதற்கு தொழுகண்ணி என்று பெயர்.மிகக் கஷ்டப்பட்டு வளர்த்ததில் நான்கடி உயரம் வளர்ந்தது.என் இரண்டாவது மகள் அந்தச் செடியை தனது பள்ளி நண்பிகளை அழைத்து வந்து காண்பித்துக் கொண்டே இருந்தார். ஒரு நாள் அந்த நண்பிகளில் ஒருவர் மாதாந்திர விலக்காயிருந்த பெண் அருகில் வந்ததால் அந்தச் செடி இரண்டே நாளில் கருகிவிட்டது.இப்போது மிக சிரமப்பட்டு ஒரு செடியை மீண்டும் வளர்த்து வருகிறோம்.இது போன்ற சில விடயங்களை நம்மால் தவிர்க்க முடியுமானால் வளர்க்கலாம்.
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 4. இந்த கணையெருமை விருட்சத்தின் பாலை தரிசிப்பதே பெரும் பாக்கியமாகவும் ., பெருமையாகவும் கருதுகிறோம் ., அனைவருக்கும் பாரபட்சமின்றி பகிர்ந்துளீர்கள் ., நன்றிகள் பல கற்ப கோடிகள் ஐயா

  • machamuni says:

   அன்புள்ள திரு புலிப்பாணி சித்தர் அடிமை அவர்களே ,
   உங்களது கருத்துரைக்கு நன்றி.
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 5. m.saravanan says:

  அய்யா

  மிக மிக பயனுள்ள பதிவுகள் அய்யா பெண்கள் மட்டும் தான் அருந்த வேண்டும் என்று கூறுகிறார் ஆண்களும் அருந்தினால் என்ன பயன் என்று திரு.கண்ணன் சார் அருமையாக கூறினார்கள் அய்யா உங்களுக்கும் கண்ணன் சார் அவர்களுக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன் அய்யா அந்த மலைவாழ் மக்களுக்கு என்னால் முடிந்த உதவியை செய்ய நான் கடமை பட்டுள்ளேன் நன்றி அய்யா

  சரவணன்
  திருச்சி

  • machamuni says:

   அன்புள்ள திரு சரவணன் அவர்களே ,
   உங்களது கருத்துரைக்கு நன்றி.
   அந்த மலைவாழ் மக்களுக்கு உதவ சதுரகிரி ஹெர்பல்ஸ் கண்ணனைத் தொடர்பு கொள்ளுங்கள்.
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 6. நரேந்திரன் says:

  ஐயா

  நான் நீண்ட நாட்களாக உங்கள் வலை தளத்தை படித்துவருகிறேன். கற்ப மூலிகைகள் 108
  யும் பெயர்கள் அடங்கிய புத்தகம் எதாவது உண்டா. உண்டு எனில் அதை தயவு கூர்ந்து தெரிய படுத்தவும். மிக்க நன்றி

  இப்படிக்கு
  நரேந்திரன்

  • machamuni says:

   அன்புள்ள திரு நரேந்திரன் அவர்களே ,
   உங்களது கருத்துரைக்கு நன்றி.
   போகர் கற்பம் – 100 , கொங்கணவர் கற்பம் – 100 , திருவள்ளுவ நாயனார் கற்பம் – 100 போன்ற பல நூல்கள் பல சித்தர்களால் அவரவரது காய கற்ப பிரயோகம் பற்றி எழுதியுள்ளார்கள். மேலும் காய கற்ப மூலிகைகள் பற்றியும், அவை கிடைக்கும் இடங்கள் பற்றியும் போகர் மலை வாகடம் , கோரக்கர் மலைவாகடம் காலாங்கி நாதர் மலை வாகடம் போன்ற நூல்களில் குறிப்பிட்டுள்ள இடங்களை மலைகள் தோறும் தேடி உங்களுக்கு காணக் கிடைக்குமாறு செய்து வருகிறோம்.
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 7. ஜெ .செந்தில்குமார் .பி.இ says:

  அன்புள்ள ஐயா
  உங்களது புதிய பதிவு மிகவும் அருமை தெளிவான காணொளிக்காட்சி உங்களின் அற்புதமான சேவை தொடரட்டும்

  இப்படிக்கு என்றும் அன்புடன்
  ஜெ .செந்தில்குமார் .பி.இ
  இலண்டன்

  • machamuni says:

   அன்புள்ள திரு ஜெ .செந்தில்குமார் .பி.இ அவர்களே ,
   உங்களது கருத்துரைக்கு நன்றி.
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 8. shareef says:

  சதுரகிரியில் நந்தீஸ்வரர் வனத்தில் கனையெருமை
  விருட்சம் என்றொரு மரமுண்டு. அம்மரத்தினடியில் யாராவது
  ஆட்கள் போர் நின்றால் அம்மரம் எருமை போல் கனைக்கும்.

  true sami ji ?

  • machamuni says:

   அன்புள்ள திரு ஷெரீஃப் அவர்களே ,
   உங்களது கருத்துரைக்கு நன்றி.
   ஆம். இது நள்ளிரவில் எருமை போல் கனைப்பதாக பலர் கூறியுள்ளனர் .பல நூல்களில் குறிப்பிடப்பட்டு இருந்தாலும் ,இதை நேரடியாக நிரூபிக்க எமக்கு ஆதாரம் இல்லாததால் குறிப்பிடவில்லை.
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 9. அன்புள்ள சாமிஜி,

  அருமையான பதிவு

  இந்த மரத்தின் கன்றுகள் வளர்ப்பதற்கு கிடைக்குமா? கிடைக்குமெனில் அதைப்பெறுவதற்கான வழிவகைகளை தயவுசெய்து தெரிவிக்கவும்.

  அன்புடன்,

  சி.சீனிவாசன்

  • machamuni says:

   அன்புள்ள திரு சி.சீனிவாசன் அவர்களே ,
   உங்களது கருத்துரைக்கு நன்றி.
   கிடைப்பது அரிது.அப்படி கிடைத்தாலும் விருட்ஷ சாஸ்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அமைப்பு இருந்தால்தான் வளரும்.மேலும் இதைப் போன்ற மூலிகைகளுக்கென பல வரைமுறைகள் உண்டு.மாதாந்திர விலக்காயிருக்கும் பெண்கள் அருகில் வந்தால் இது போன்ற தெய்வீகத் தன்மை உள்ள மூலிகைகள் துளசி உட்பட கருகிவிடும்.இதை எமது வீட்டுப் பெண்களிடம் சொல்லி வைத்துள்ளேன். அவர்கள் சரியாகத்தான் இருந்தார்கள் .தொழுகண்ணி என்ற மூலிகையை எமது வீட்டில் வளர்த்து வந்தேன்.அது ஆட்கள் அருகே வரும் போது இரு கை கூப்பி நாம் தொழுவது போல அது இலைகளை கூப்பி தொழுவதால் இதற்கு தொழுகண்ணி என்று பெயர்.மிகக் கஷ்டப்பட்டு வளர்த்ததில் நான்கடி உயரம் வளர்ந்தது.என் இரண்டாவது மகள் அந்தச் செடியை தனது பள்ளி நண்பிகளை அழைத்து வந்து காண்பித்துக் கொண்டே இருந்தார். ஒரு நாள் அந்த நண்பிகளில் ஒருவர் மாதாந்திர விலக்காயிருந்த பெண் அருகில் வந்ததால் அந்தச் செடி இரண்டே நாளில் கருகிவிட்டது.இப்போது மிக சிரமப்பட்டு ஒரு செடியை மீண்டும் வளர்த்து வருகிறோம்.இது போன்ற சில விடயங்களை நம்மால் தவிர்க்க முடியுமானால் வளர்க்கலாம்.
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 10. ம. சரவணன் says:

  அய்யா வணக்கம்,
  கனையெருமை விருட்சம் கோவில்களில் பார்த்த நினைவுக்கு வருகிறது.
  பயனுள்ள பதிவுக்கு நன்றி.

  எனக்கு சில வாரங்களாக ஒரு பிரச்சனை இரவு தூங்கும் பொழுது எதோ எதோ பேசுகிறேன் என்று என் மனைவி கூறுகிறாள். ஆனால் எனக்கு ஒன்றும் தெரிவது இல்லை, (ஆனால் எனக்கு மனம் நிம்மதி இல்லாமல் இருபது எனக்கு தெரிகிறது). ஏதானும் வழி சொல்லுங்கள்.

  நன்றி

  இப்படிக்கு
  உண்மையுள்ள
  ம. சரவணன்

  • machamuni says:

   அன்புள்ள திரு ம.சரவணன் அவர்களே ,
   உங்களது கருத்துரைக்கு நன்றி.
   சில கோவில்களில் இது தல விருட்சமாக உண்மைப் பெயர் தெரியாமல் பல நூற்றாண்டுகளாக பராமரிக்கப்பட்டு வருகின்றன.இடங்களைச் சொன்னால் அந்த மரங்களுக்கு ஆபத்து.
   சலனமில்லாத கனவில்லாத தூக்கத்திற்கு மிக எளிதான ஒரு வழியை சொல்கிறோம்.முதலில் சிறு படிகாரக் கட்டியை (சவரம் செய்த பின்னர் உபயோகிக்கும் கட்டியும் இதுதான், கண் திருஷ்டிக்காக வாசலில் கட்டுவதும் இதுதான்) வாங்கி வந்து இரவில் படுக்கும் தலையணையின் கீழ் வைத்து படுத்துத் தூங்குங்கள்.ஒரு பிரச்சினையும் இல்லாத நிம்மதியான தூக்கம் வரும்.சாரஸ்வாத அரிஷ்டம் என்னும் மருந்தை 15 மிலி 15 மிலி தண்ணீரில் கலந்து சாப்பிட நரம்புகள் சாந்தப்பட்டு வலுப்படும். ஜெ & ஜெ டீஷேன் மருந்துகளில் வைட்டெஸ்ஸான் என்ற மாத்திரைகள் உண்டு அதை வாங்கி இரு மாத்திரைகள் வீதம் சாப்பிட்டு வர இந்தப் பிரச்சினையிலிருந்து விடுபடலாம்.
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 11. senthilkumar says:

  ஐயா , வணக்கம்,

  அருமையான பதிவு.
  ஐயா குரட்டை விடுவது எதனால் ஏற்படுகிறது, அதை தவிர்க்க நமது சித்த மருத்துவத்தில் வழிவகை உள்ளதா?

  • machamuni says:

   அன்புள்ள திரு செந்தில் குமார் அவர்களே ,
   உங்களது கருத்துரைக்கு நன்றி.
   குறட்டை என்பது நம் தளர்ந்து போன தசைகளினால் ஏற்படுகிறது .இது பருமனான உடல் வாகு உள்ளவர்களுக்கும் வரும்.ஒல்லியான உடல் வாகுள்ளவர்களுக்கும் வரும். உடலின் உள்ளுறுப்புக்களில் குறிப்பாக மண்ணீரலும் கல்லீரலும் தளர்வடையும் போது, நமது தசைகளில் தேங்கும் கழிவுகளால் தசைகளும் தளர்ந்து போகின்றன,இந்த தளர்ந்து போன தசைகள் மூச்சுக் குழாய் பாதையில் தொங்குவதாலோ , மறிப்பதாலோதான் உள்ளே செல்லும் காற்றாலோ அல்லது வெளியே வரும் காற்றாலோ ஏற்படும் போராட்டமே இந்தக் குறட்டை. குறட்டை விடுவதால் ஹார்ட் அட்டாக் வரும் சர்க்கரை நோய் வரும் என்று பலர் கருதுகிறார்கள்.மேற்கண்ட நோய்கள் மண்ணீரலும் கல்லீரலும் தளர்வடையும் போதும் , நமது தசைகளில் தேங்கும் கழிவுகளால் தசைகளும் தளர்ந்து போவதாலும் (இதயத் தசை உள்பட) வருவதே மேற்கண்ட நோய்கள்.
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

   • இளங்குமரன் says:

    அய்யா, வணக்கம்,

    திரு செந்தில்குமார் அவர்கள் குறட்டைச்சத்தம் நீக்க நமது சித்த மருத்துவத்தில் தீர்வு உள்ளத என்று கேட்டிருக்கிறார் . அய்யாவின் பதில்…………………..

    நன்றி.

    • machamuni says:

     அன்புள்ள திரு இளங்குமரன் அவர்களே ,
     உங்களது கருத்துரைக்கு நன்றி,
     குறட்டைசத்தம் என்பது தொண்டைச் சதைகள் தளர்ந்து மூச்சுக் காற்று வரும் பாதையை அடைப்பதனால் வரும் சத்தமே.தொண்டைச் சதைகளின் தளர்ச்சியை சரி செய்தாலே சரியாகிவிடும்.இதற்கு பிரணாயாமப் பயிற்சியே போதுமானது .
     மிக்க நன்றி
     என்றென்றும் பேரன்பினால்
     சாமீ அழகப்பன்

 12. ஐயா , வணக்கம்,
  அருமையான பதிவு.

  • machamuni says:

   அன்புள்ள திரு கே பாலச்சந்தர் அவர்களே ,
   உங்களது கருத்துரைக்கு நன்றி.
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 13. ஜெகதீசன் says:

  அன்புள்ள அழகப்பன் அண்ணா அவர்களுக்கு

  //சில கோவில்களில் இது தல விருட்சமாக உண்மைப் பெயர் தெரியாமல் பல நூற்றாண்டுகளாக பராமரிக்கப்பட்டு வருகின்றன.இடங்களைச் சொன்னால் அந்த மரங்களுக்கு ஆபத்து.//
  இப்படி ஆபத்துள்ள நமது மூலிகை செல்வங்களை நாம் ஏன் பாதுகாக்க கூடாது . அதை பெருக்க நாம் தனியாக மூலிகை தோட்டங்கள் அமைத்து அதை பரவச் செய்தால் நம் நாட்டு மூலிகைகளை அழியாமல் பாதுகாக்கலாம் இல்லையா. இப்படி சேலத்தில் ஒருவர் 2500 க்கும் மேற்பட்ட மூலிகைகளை பாதுகாத்து வருகிறார்

  நன்றி
  ஜெகதீசன்

  • machamuni says:

   அன்புள்ள திரு ஜெகதீசன் அவர்களே ,
   உங்களது கருத்துரைக்கு நன்றி.
   எம்மால் ஆனதைச் செய்து வருகிறோம்.உங்களால் ஆனதையும் செய்து வாருங்கள்.ஒவ்வோருவரும் இப்படி செய்தால் நாட்டில் கோடிக்கணக்கான மரங்கள் பாதுகாக்கப்படுவதுடன் மரங்களின் உற்பத்தியும் அதிகரிக்கும்.குறிப்பிட்ட சில மரங்களை குறிப்பிட்ட சில நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் நட்டு வளர்த்து வந்தால் அவர்களது பொருள் நலம் , மன நலம் , உடல் நலம் , ஆகியவை கூடும் ஆயுள் நீளும் என விருட்ச சாஸ்திரம் என்னும் நூல் விவரிக்கின்றது .அதே போல் மரங்களை அழிப்பவருக்கும் கெடு பலன்களும் நேரும் என்றும் விருட்ச சாஸ்திரம் விவரிக்கின்றது.எடுத்துக் காட்டாக ஒரு இடத்தில் அரச மரத்தை அழிப்பவருக்கு குழந்தைப் பாக்கியம் கிடைக்காது என்றும் அதைத் தவிர்க்க பல இடங்களில் பத்து அரச மரங்களை நட்டு வளர்க்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

  • Dr.ANAND says:

   Dear Jagadeesh,
   I am intrested in siddha herbs. Can I get the person’s name and address from salem who has a collection of 2500 herbs? I too want to setup a herbal garden in my native place,Trichy. I would be very grateful if you could help me.

   Thanks&regards,
   Dr.ANAND

   • machamuni says:

    அன்புள்ள திரு மருத்துவர் ஆனந்த் அவர்களே ,
    உங்களது கருத்துரைக்கு நன்றி,
    ஜெகதீசனின் மின்னஞ்சல் முகவரிக்கே நீங்கள் இது போன்ற விடயங்களுக்கு தொடர்பு கொள்ளலாம்.கீழே அதைக் கொடுத்துள்ளோம்.
    vasankcs@yahoo.com
    அவரது வலைத் தள முகவரி
    http://www.paranjothi.org
    மிக்க நன்றி
    என்றென்றும் பேரன்பினால்
    சாமீ அழகப்பன்

 14. க.சுந்தரவடிவேல் says:

  ஐயா , வணக்கம்,
  அருமையான பதிவு ஐயா…

  எனது குருவும், தந்தையும்,தாயுமான எல்லம்வல்ல ஈசனின் வடிவம்(பாம்பு,புலித்தோல்,கங்கை,பிறை நிலவு………..) உணர்த்தும் தத்துவத்தை விளக்கவும் ஐயா.

  மிக்க நன்றி
  க.சுந்தரவடிவேல்

  • machamuni says:

   அன்புள்ள திரு க.சுந்தரவடிவேல் அவர்களே ,
   உங்களது கருத்துரைக்கு நன்றி.
   இதற்கு பதில் எமது மச்ச முனிவரின் சித்த ஞான சபையில் விளக்கம் கிடைக்கும்.எமக்கு இதை பொதுவில் சொல்ல அதிகாரம் வழங்கப்படவில்லை.
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 15. அகிலன் says:

  அன்புள்ள ஐயா
  எனது மனைவி கருப்பை நீர் கட்டிகளால் பாதிக்க பட்டு இருக்கிரார்
  தயவுடன் தாங்கள்தான் இதற்கு சித்தமருத்துவ தீர்வு வழங்க வேண்டும். மேலும் இதனால் உடல் பருமன் மாதவிலக்கு போன்ற பிரச்சனைகள் உருவாகி விட்டது.

  மிக்க நன்றி ஐயா,
  ம.அகிலன்

  • machamuni says:

   அன்புள்ள திரு அகிலன் அவர்களே ,
   உங்களது கருத்துரைக்கு நன்றி.
   கருப்பை நீர்க்கட்டிகளுக்கு, விழுதி என்ற மூலிகை நல்ல பயன் தரும்.விழுதி இலைகளை நிழலில் உணர்த்தி வைத்திருந்து , சூரணமாக்கி அத்துடன் வறுத்த அரைத்த சீரகம் சம அளவு சேர்த்துத் தயிரில் கலக்கி காலை வெறும் வயிற்றில் , மாத விலக்கான நாள் முதலாக, மாதம் 10 நாள் வீதம் 3 மாதம் கொடுக்க கர்ப்பப்பைக் கட்டிகள் கரைந்துவிடும்.
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

   • அகிலன் says:

    மிக்க நன்றி ஐயா,
    மன்னிக்கவும் தாங்கள் எவ்வளவு சூரணம் ஒரு நாளைக்கு எடுத்து கொள்ள வேண்டும் என்று கூறினால் மிகவும் பயனாக இருக்கும்

    மிக்க நன்றி ஐயா,
    ம.அகிலன்

    • machamuni says:

     அன்புள்ள திரு அகிலன் அவர்களே ,
     உங்களது கருத்துரைக்கு நன்றி.
     காலை வெறும் வயிற்றில் ஒரு டீஸ்பூன் அளவு தயிரில் கலக்கி கொடுக்க வேண்டும்.இது சாப்பிடும்போது காபி , டீ , போன்றவை சாப்பிடக் கூடாது.
     மிக்க நன்றி
     என்றென்றும் பேரன்பினால்
     சாமீ அழகப்பன்

 16. Muthu Murugan says:

  AAyya enathu oor ilyankudi arugil kannamamgalam.Ayya en mobile no 9944466761. Thangalai neril kaanum paakiyathirku anumathi kidaikkuma ayya?Vanakkam ayya, en peyar Muthu murugan, ungal sevai vaayaal solla koodiyathu alla. Enakku Thikku vaai pirachanai irukkirathu. Itharkku marunthu koorungal ayya.
  Nanri….

  • machamuni says:

   அன்புள்ள திரு முத்து முருகன் அவர்களே ,
   உங்களது கருத்துரைக்கு நன்றி.
   திக்கு வாய்ப் பிரச்சினை மனம் சார்ந்ததே!!இதற்கு பல முறை வல்லாரைச் சாற்றில் ஊற வைத்து காய வைத்த அரிசித் திப்பிலியை தினமும் சுவைத்துச் சாப்பிட்டு வர மனம் வலுப்பட்டு திக்கு வாய்ப் பிரச்சினை தீரும்.நாம் சந்திக்க வேண்டும் என்பது இறை விருப்பம் என்றால் அது நடக்கும்.
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

   • Muthu Murugan says:

    Ayya Thangal maruthuvathuku mikka Nandri. naan indru PAANDIYUR vanthu irunthen. Anaal thangalai kana iyala villain.

    • machamuni says:

     அன்புள்ள திரு முத்து முருகன் அவர்களே ,
     உங்களது கருத்துரைக்கு நன்றி.
     பாண்டியூருக்கு பௌர்ணமி சமயங்களில் மட்டுமே வருவோம் .எல்லா நாட்களிலும் வருவதில்லை, அங்கேயே இருப்பதும் இல்லை.
     மிக்க நன்றி
     என்றென்றும் பேரன்பினால்
     சாமீ அழகப்பன்

   • Muthu Murugan says:

    Ayya Thangal pathil pathivil ‘ pala murai vallarai saaril oora vaitha’ enbathu ethanai murai endrum? Evalavu neram oora vaikka vendum endrum eppothu sappida vendum endrum koorungal Ayya. Thangal pathivai ethir nokki…..

    Nandri…….

    • machamuni says:

     அன்புள்ள திரு முத்து முருகன் அவர்களே ,
     உங்களது கருத்துரைக்கு நன்றி.
     அரிசித்திப்பிலி 200 கிராம் வாங்கி ஒவ்வோர் நாளும் புதிதாகத் தயாரிக்கப்பட்ட வல்லாரைச் சாற்றில் இரவில் ஊற வைத்து பகலில் அப்படியே வெயிலில் வைக்க வல்லாரைச்சாறு அரிசித் திப்பிலியால் உள்ளிழுக்கப்பட்டு பக்குவமாகும். இதை 10 முதல் 15 நாட்கள் வரை செய்த பின்பு உபயோகிக்கலாம்.இதை உளவியல் சார்ந்த திக்குவாய் , போதை வஸ்துக்கள் உப்யோகிப்போர், மன நலமில்லாதவர்கள், உளவியல் சார்ந்த எல்லா நரம்புப் பிரச்சினைகள் , ஞாபக மறதி இவைகளுக்கு சிறு துண்டெடுத்து வாயிலிட்டு சுவைத்து வர நலம் பிறக்கும்.
     மிக்க நன்றி
     என்றென்றும் பேரன்பினால்
     சாமீ அழகப்பன்

     • Muthu Murugan says:

      Thangal pathil pathivukku mikka nandrj ayya… Ayya naan en mobile moolamaga type seivathanaal tamillil anuppa iyalavillai ayya.

     • machamuni says:

      அன்புள்ள திரு முத்து முருகன் அவர்களே ,
      உங்களது கருத்துரைக்கு நன்றி.
      பரவாயில்லை.இருப்பினும் தமிழில் எழுத முயற்சி செய்யுங்கள்.
      மிக்க நன்றி
      என்றென்றும் பேரன்பினால்
      சாமீ அழகப்பன்

 17. அகிலன் says:

  மிகவும் பயனுள்ள தகவல்

  மிக்க நன்றி ஐயா,
  ம.அகிலன்

  • machamuni says:

   அன்புள்ள திரு ம.அகிலன் அவர்களே ,
   உங்களது கருத்துரைக்கு நன்றி.
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 18. ramanathan says:

  Iyya,

  Can you show me the picture of “Karunelli” in future.

  regards
  Ramanathan U

  • machamuni says:

   அன்புள்ள திரு ராமனாதன் அவர்களே ,
   உங்களது கருத்துரைக்கு நன்றி,
   எதிர்காலத்தில் வெளியிடப்படும்.
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 19. m.saravanan says:

  திரு அய்யா .

  வணக்கம் அய்யா சர்க்கரை நோய் உடையவர்கள் இன்சுலின் ஊசி மாத்திரைகள் எடுத்துக்கொண்டு இருக்கும்பொழுது மாதம் இரண்டு முறை வயிற்றுபோக்கு எற்படுகிறது ஆங்கில மருத்துவர்களை கேட்கும் பொழுது சர்க்கரை நோய் உள்ளதால் தான் வயிற்றுபோக்கு ஏற்படுகின்றது என்று கூறுகிறார்கள் சற்று தெளிவாக விளக்கம் தரவும் அய்யா (குறிப்பு நான் பணிபுரியும் அலுவலகத்தில் மேலாளர் அவர்களின் மனைவிக்கு ஏற்படுகின்றது அவரும் சர்க்கரை நோயாளி தான் அய்யா உங்களின் கட்டுரைகளை அவருக்கு எடுத்து கூறுவேன் அவர் ஆங்கில மருந்துகளை விட்டு விட்டார் இப்பொழுது சித்த மருந்துகளை உட்கொள்கின்றார் அய்யா

  மு.சரவணன்
  திருச்சி

  • machamuni says:

   அன்புள்ள திரு ம சரவணன் அவர்களே,
   நீங்கள் குறிப்பிட்டுள்ள அத்தனை விளைவுகளும் சர்க்கரை நோயால் விளைபவை அல்ல.சர்க்கரை நோய்க்கு சாப்பிட்ட மருந்துகள் , நம் உடலில் உற்பத்தியான தரக் குறைவான சர்க்கரையை வலுவில் செல்களுக்குள் செலுத்தியதன் விளைவாக அந்த செல்கள் அழுக ஆரம்பித்துள்ளதன் விளைவே . எனவே நீங்கள் சர்க்கரையை கட்டுப்பாட்டுக்குள் வைக்கிறேன் என்று சாப்பிட்ட ஆங்கில அல்லோபதி மருந்துகள்தான்( விஷங்கள்தான் ) இப்போதைய இந்த வயிற்றுப் போக்கு ஏற்படும் நிலைக்குக் காரணம்.உடலில் தேங்கியுள்ள கெட்ட சர்க்கரை மற்றும் கழிவுகளை நீக்க உடல் எடுக்கும் முயற்சியே வயிற்றுப் போக்கு.கீழ்க் கண்ட இணைப்பில் கொடுத்துள்ள எமது பதிவுகளை முழுமையாகப் படித்துவிட்டு பின் கேள்விகளை கேளுங்கள்.இவற்றைப் படித்தாலே உங்கள் பிரச்சினைக்குத் தீர்வு கிடைக்கும்.
   http://machamuni.com/?p=2705
   http://machamuni.com/?p=1988
   http://machamuni.com/?p=2047
   http://machamuni.com/?p=2060
   http://machamuni.com/?p=2184
   http://machamuni.com/?p=2204
   http://machamuni.com/?p=2253
   http://machamuni.com/?p=2494
   http://machamuni.com/?p=2553
   http://machamuni.com/?p=2656
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 20. jagadeesan says:

  //கனையெருமை விருட்சப் பாலை தேன் நாம் அருந்தும் போது கண்ணாடிக் குவளையில் இருக்கும் காட்சி.இது போன்ற பல காய கற்ப மூலிகைகளை நமது பயன் பாட்டில் உபயோகிக்கும்போது உடல் நன்றாக வளம் பெறும் முதுமை அகன்று இளமைத் தன்மை நம் உடலுக்கு கிடைக்கும்.

  கோடிக் கற்பம் உண்டவர் சிவன், 10 லட்சம் கற்பம் உண்டவர் மஹாவிஷ்ணு , லட்சம் கற்பம் உண்டவர் பிரம்மா, 10,000 கற்பம் உண்டவர்கள் ஒரு கோடி உருத்திரர்கள், 1000 கற்பம் உண்டவர்கள் இந்திரன் முதலான தேவாதி தேவர்கள், 100 கற்பம் உண்டவர்கள் ரிஷிகள் , முனிவர்கள் , ஞானிகள், சித்தர்கள் ஆகலாம் என சதுரகிரித் தல புராணம் கூறுகிறது.//

  ஐயா
  உலகில் பிறந்த ஒவ்வொரு மனிதனுக்கும் தான் நீண்ட நாட்கள் நோயில்லாமல் வாழ ஆசை உண்டு. அதே போல் எனக்கும் காய கற்ப மூலிகைகளை மற்றும் மருந்துகளை எனது பயன் பாட்டிற்கு உபயோகிக்க விருபபடுகிறேன். இதில் எங்கு ஆரம்பிக்க வேண்டும் என்று நீங்கள் தான் உதவி புரிய வேண்டுகிறேன். இதில் தவறு இருந்தால் மன்னிக்கவும்.

  நன்றி
  ஜெகதீசன்

  • machamuni says:

   அன்புள்ள திரு ஜெகதீசன் அவர்களே ,
   உங்களது கருத்துரைக்கு நன்றி
   எமது அலைபேசி எண் உங்களுக்குத்தான் தெரியுமே!! தொடர்பில் வாருங்கள்.போகர் கற்பம் – 100 , கொங்கணவர் கற்பம் – 100 , திருவள்ளுவ நாயனார் கற்பம் – 100 போன்ற பல நூல்கள் பல சித்தர்களால் அவரவரது காய கற்ப பிரயோகம் பற்றி எழுதியுள்ளார்கள். மேலும் காய கற்ப மூலிகைகள் பற்றியும், அவை கிடைக்கும் இடங்கள் பற்றியும் போகர் மலை வாகடம் , கோரக்கர் மலைவாகடம் , காலாங்கி நாதர் மலை வாகடம் போன்ற நூல்களில் குறிப்பிட்டுள்ள இடங்களை மலைகள் தோறும் தேடி அந்த மூலிகைகளை உங்களுக்கு காணக் கிடைக்குமாறு செய்து வருகிறோம்.
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 21. Tharani says:

  திரு அய்யா,

  எனக்கு 29 வயதாகிறது. என் இடது கன்னத்தில் மட்டும் சிரிக்கும் போது நல்ல சுருக்கமும் வறண்டு இழுப்பது போல் வலிக்கிறது. ஆனால் வலது கன்னத்தில் அவ்வாறு பெரிய சுருக்கம் இல்லை.இதற்கு சீனா மருத்துவத்தில் இடது குடல் பலவீனம் அடைந்தது காரணம் என்று படித்தேன். விளகெண்ணை மட்டும் தடவுகிறேன். பெரிய பலன் இல்லை.தயவு செய்து வறட்சியை எவ்வாறு சரி செய்வ தென்றும், தேவையான உணவு பழக்கம்/சித்த மருந்து சொல்லுங்கள்.தோலை எவ்வாறு நன்றாக வெய் த்து கொள்வது? என் போன்ற பெண் களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
  தங்களின் மேலான பணி உலகம் முழுவதும் பரவ கடவுளை பிரார்த்தனை செய்கிறேன் .

  மிக்க நன்றி,
  தாரணி.

  • machamuni says:

   அன்புள்ள திரு தாரணி அவர்களே ,
   உங்களது கருத்துரைக்கு நன்றி.
   அக்கு பஞ்சரின் அடிப்படை முதலில் தோல் என்பது பிரபஞ்ச சக்தியை கடத்துதலின் தன்மை குறையும்போதும் , தடுக்கப்படும் போதும் நோய் உறுவாகிறது.எனவே என்றும் தோலில் ஈரப்பதமும் , எண்ணெய்த் தன்மையும் குறையாமல் பார்த்துக் கொண்டால்தான் அதன் பிரபஞ்ச சக்தியை உடல் உள்ளுறுப்புகளுக்கு கொண்டு செல்லும் ஆற்றல் இருக்கும். இதற்காகத்தான் நமது சித்த மருத்துவத்தில் எண்ணெய்க் குளியல் வாரமிரு முறை எடுக்க வேண்டும் என்று வைத்திருந்தார்கள் (பெண்களுக்கு செவ்வாய் வெள்ளியும் , ஆண்களுக்கு புதன் சனியும் ). நீங்கள் எண்ணெய் தேய்த்துக் குளிக்கும் பழக்கம் கைக்கொள்ளுங்கள். அது உங்களுக்கு நலம் பயக்கும்.மேலும் குங்குமாதி லேபம் என்ற முகத்துக்கு போடும் லேபம் I.M.P.C.O.P.S மருந்துக் கடைகளில் கிடைக்கும் .அதை இரவில் தடவி காலையில் வெறும் பாசிப்பருப்பு மாவு மட்டும் தேய்த்துக் குளித்து வாருங்கள். பச்சைத் தேங்காயை உணவில் அதிகம் சேருங்கள்.சோப்புப் போட்டுக் குளிப்பதை அறவே தவிருங்கள்.வீட்டிற்குள் கொசு மேட்டோ , திரவமோ உபயோகிக்காதீர்கள்.கொசு வலை உபயோகியுங்கள்.பகலில் முகத்துக்கு தேங்காயெண்ணெய் இரு பங்கு, விளக்கெண்ணெய் ஒரு பங்கு கலந்து தடவி வாருங்கள்.நலம் பெறுவீர்கள்.
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

   • Tharani says:

    மிக்க நன்றி ஐயா.

    பணிவுடன்,
    தாரணி.

    • machamuni says:

     அன்புள்ள திரு தாரணி அவர்களே ,
     உங்களது கருத்துரைக்கு நன்றி.
     மிக்க நன்றி
     என்றென்றும் பேரன்பினால்
     சாமீ அழகப்பன்

 22. Kamala says:

  ஐயா வணக்கம்
  என்னுடைய மகனைப் பற்றி உங்களுடன் கதைக்க வேண்டும். தொலைபேசி எண் தருவீர்களா.
  அன்புடன்
  கமலா

  • machamuni says:

   அன்புள்ள திரு கமலா அவர்களே ,
   உங்களது கருத்துரைக்கு நன்றி.
   உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு எமது அலைபேசி எண் அனுப்பப்பட்டுள்ளது.
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 23. ramanathan says:

  Sir,

  How to preserve these types of herbs and trees and what are the natural manures used to preserve it? How can we cultivate it? What are the plants we can grow in our home? And how to save the rare plants from animals and deforestation? Kindly list the preservation techniques for different medicinal plants so that we can save these plants in the earth for our upcoming generations.

  regards
  Ramanathan U

  • machamuni says:

   அன்புள்ள திரு Ramanathan U அவர்களே ,
   உங்களது கருத்துரைக்கு நன்றி.
   இவைகளை உண்டாக்கிய இறையே இவற்றைக் காக்க இயலும்.விதையில் உயிரையும் ,கருப்பையில் உயிரையும் , கல்லினுள் தேரைக்கும் போஷிக்கும் இறைவனே இவைகளையும் காக்க வல்லவன் . நாம் விதையை நடலாம் . முளைக்க வைப்பது இறைவன் கையில் உள்ளது . நாம் பத்து அத்தி மரக் கன்றுகளை கொண்டு வந்து பலரிடம் கொடுத்து நட்டு வைத்து பாது காத்து வைத்தோம் .ஆனால் ஒவ்வொன்றும் ஒரு காரணத்தால் அழிந்தது.நாம் செய்வதை செய்வோம் . நம் செயலாது ஏதுமில்லை .இறை சித்தம் , இறை விருப்பம் எப்படி உள்ளதோ அவ்வாறு நடக்கட்டும்.
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 24. vijay says:

  ஐயா , வணக்கம்.

  எனது உறவினருக்கு கருப்பையில் தசைநார்க்கட்டியும், சூலகத்தின் இருபுறமும் நீர்க்கட்டியும் ( 8 செ.மீ.) இருக்கிறது. அதைக் கரைப்பதற்கு மருத்துவமுறையைக் கூறுங்கள் ஐயா. நன்றி.

  அன்புடன்
  விஜய்

  • machamuni says:

   அன்புள்ள திரு விஜய் அவர்களே ,
   உங்களது கருத்துரைக்கு நன்றி.
   கருப்பை நீர்க்கட்டிகளுக்கு, விழுதி என்ற மூலிகை நல்ல பயன் தரும்.விழுதி இலைகளை நிழலில் உணர்த்தி வைத்திருந்து , சூரணமாக்கி அத்துடன் வறுத்த அரைத்த சீரகம் சம அளவு சேர்த்து காலை வெறும் வயிற்றில் ஒரு டீஸ்பூன் அளவு தயிரில் கலக்கி மாத விலக்கான நாள் முதலாக, மாதம் 10 நாள் வீதம் 3 மாதம் கொடுக்க கர்ப்பப்பைக் கட்டிகள் கரைந்துவிடும்.இது சாப்பிடும்போது காபி , டீ , போன்றவை சாப்பிடக் கூடாது.
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 25. Rajan says:

  Vanakkam Iyya.

  I am a 38 years male and diabetic for the past 8-9 years. Also i am yet to be blessed with a kid. When i checked i was told i have nil sperm count. Is there any medicine that cure me of diabetics as well as increase my sperm count and help me being blessed with a child

  • machamuni says:

   அன்புள்ள திரு Rajan அவர்களே ,
   உங்களது கருத்துரைக்கு நன்றி.
   உங்களது மின்னஞ்சலுக்கு எனது அலைபேசி எண் அனுப்பப்பட்டுள்ளது.தொடர்பு கொள்க.
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 26. Srinivasan says:

  Mathipirkuriya Iyya,
  Kadantha irandu varudangalagha Enathu valathu kai satru valuvizhandhu vullathagha unargiren. Doctor enakku entha problem illan endru solgirar. Itharku num sitha maruthuvathil marunthu kooravum.

  Mikka Nandri,
  Srinivasan (age 35).

  • machamuni says:

   அன்புள்ள திரு ஸ்ரீநிவாசன் அவர்களே ,
   உங்களது கருத்துரைக்கு நன்றி.
   முதலில் தமிழில் எழுதுங்கள். பொதுவாக தமிழில் கருத்துரை எழுதாத நபர்கள் மீது எமக்கு சரியான மரியாதை ஏற்படுவதில்லை.நமது மொழி தமிழ்.நமது தமிழ் நம் உயிர்.நாமே அதை உபயோகிக்காவிட்டால் தமிழ் எப்படி வாழும்.பழக்கத்தில் உள்ள மொழிதான் வாழும்.நாம் எழுதியதை தமிழை அறிந்ததால் நீங்கள் படித்தீர்கள். இனி ஆங்கிலத்தில் கருத்துரை எழுதினால் வெளியிட மாட்டோம் என மிகப் பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.“ தமிழ் எங்கள் உயிருக்கு நேர்” “ சாகும் வரை தமிழ் பயின்று சாக வேண்டும் .என் சாம்பலிலும் தமிழ் மணந்து வேக வேண்டும்” என்ற பாரதிதாசனின் வார்த்தைகள் எமக்கு உயிரான வார்த்தைகள்.எமது வலைத் தளத்தில் தமிழே முக்கியமானதாக இருக்க வேண்டும்.இருப்பினும் உங்கள் கேள்விக்கு பதில் கூறுகிறோம்.
   இது பின்னால் வரப்போகும் வாதத்திற்கு முன்னறி குறி .இதற்கு தலையில் உஷ்ணம் அதிகரித்து வருவதும் ஒரு காரணம் .தலையில் உள்ள உஷ்ணத்தை குறைக்க , பொன்னாங்கண்ணி , கரிசலாங்கண்ணித் தைலத்தை தலைக்கு தேய்த்து வர வேண்டும். கையில் அதிகரித்து வரும் வாதத்துக்கு வாத கேசரித் தைலம் தேய்த்து வெந்நீர் விட்டு வர வேண்டும்.உள்ளுக்கு சாப்பிட வாதமடக்கி (என்ற தழுதாழைப் பொடி) , வாத நாராயணன் (வாதாராசி என்று வழக்கத்தில் அழைப்பது ), முடக்கறுத்தான் (முடக்கத்தான் என்று வழக்கத்தில் அழைப்பது ) இந்த மூன்றையும் கலந்து மூன்று வேளையும் ஒரு கிராம் வீதம் வெந்நீரில் சாப்பிட்டு வர நல்லது .இந்த வியாதி முற்றாமல் குணமாகும் .
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 27. gunasekaran says:

  iyya enthu snehithi oruvarukku karuppapaiel pun vanthu avathipadukiraar ungal uthavi venndum.

  • machamuni says:

   அன்புள்ள திரு குணசேகரன் அவர்களே ,
   உங்களது கருத்துரைக்கு நன்றி.
   முதலில் தமிழில் எழுதுங்கள். பொதுவாக தமிழில் கருத்துரை எழுதாத நபர்கள் மீது எமக்கு சரியான மரியாதை ஏற்படுவதில்லை.நமது மொழி தமிழ்.நமது தமிழ் நம் உயிர்.நாமே அதை உபயோகிக்காவிட்டால் தமிழ் எப்படி வாழும்.பழக்கத்தில் உள்ள மொழிதான் வாழும்.நாம் எழுதியதை தமிழை அறிந்ததால் நீங்கள் படித்தீர்கள். இனி ஆங்கிலத்தில் கருத்துரை எழுதினால் வெளியிட மாட்டோம் என மிகப் பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.“ தமிழ் எங்கள் உயிருக்கு நேர்” “ சாகும் வரை தமிழ் பயின்று சாக வேண்டும் .என் சாம்பலிலும் தமிழ் மணந்து வேக வேண்டும்” என்ற பாரதிதாசனின் வார்த்தைகள் எமக்கு உயிரான வார்த்தைகள்.எமது வலைத் தளத்தில் தமிழே முக்கியமானதாக இருக்க வேண்டும்.இருப்பினும் உங்கள் கேள்விக்கு பதில் கூறுகிறோம்.

   கருப்பைப் புண் மற்றும் நீர்க்கட்டிகளுக்கு, விழுதி என்ற மூலிகை நல்ல பயன் தரும்.விழுதி இலைகளை நிழலில் உணர்த்தி வைத்திருந்து , சூரணமாக்கி அத்துடன் வறுத்த அரைத்த சீரகம் சம அளவு சேர்த்து காலை வெறும் வயிற்றில் ஒரு டீஸ்பூன் அளவு தயிரில் கலக்கி மாத விலக்கான நாள் முதலாக, மாதம் 10 நாள் வீதம் 3 மாதம் கொடுக்க கர்ப்பப்பைக் கட்டிகள் கரைந்துவிடும்.கர்ப்பப்பை புண்களை மட்டும் ஆற்ற அம்மான் பச்சரிசி செடியை பாலில் அரைத்து சாப்பிட நன்றாக குணமாகும் . இதே மருந்து பால் ஊறாத பெண்களுக்கும் பயனாகும் . இது சாப்பிடும்போது காபி , டீ , போன்றவை சாப்பிடக் கூடாது.
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 28. Banu says:

  Vanakkam aiyaa.esan arulal ungkal valaipakkam kaana mudinthathu. Aiyaa naan ungaludan thodarbu kolla mudiyumaa?

 29. Banu says:

  ஐயா வணக்கம். நான் உங்களுடன் தொடர்பு கொள்ள விரும்புகிறேன்.உங்களின் தொடர்பு எண் கிடைக்குமா?

 30. Sankarkumar says:

  மிக்க பயனுள்ள தகவல்கள் அனைத்தும் மிக்க நன்றி ஐயா

 31. sakthi says:

  THANKS

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 + 6 =