சித்தர்களைக் காண ஒரு மந்திரம்! ( காகபுசுண்டர் பெரு நூல் காவியம் )

August 5, 2013 by: machamuni

meditation

பதிணெண் சித்தர்களைக் காண ஒரு அருமையான மந்திரம் உள்ளது.இது சித்தர்கள் பெரிய ஞானக்கோவை ( ரத்தின நாயக்கர் அண்டு சன்ஸ் ) நிஜானந்த போதத்தில் வெளியிடப்பட்டு மிக சிறப்பாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த மந்திரம் இதோ…

TO SEE SITHTHARKAL_mini

சித்தர்கள்  பாடி வைத்த ( செய்த ) தமிழ்ப் பாடல்களின் உண்மைப் பொருள் உணர்ந்துஅனுபவத்தைப் பெறாமல் , உணராமல் இருந்தால் அகங்காரமாய்ப் பேசினால் சிறுகுடலும் , பெருங்குடலும் புரண்டு  பெரும் துன்மடைவார்கள்.

சித்தர்கள்  பாடி வைத்த ( செய்த ) தமிழ்ப் பாடல்களின் உண்மைப் பொருள் உணர்ந்து அறிந்து கொள்ளவும் , சித்தர்களைக் காண்பதற்கு ஒரு மூலமான மந்திரம் உள்ளது.சைதன்யமான இறையைப் போற்றி எந்நேரமும்  ஓம் சிங் ரங் அங் சிங் என்று ஒரு ( பூரணம் ) கோடித் தடவை வேறு சிந்தனையில்லாமல்  உருவேற்றினால், வேதாந்த சித்தர்களை வசமாய்க் காணலாம் .அவர்களை வசமாய்க் கண்டால் சகல சித்துக் குதவியாகும் , என்று கூறுகிறார்.எனவே அவர்களை வசமாய்க் காண இந்த மந்திரத்தை  உபயோகித்து பயன் பெறுவீர்களாக!!!

காயத்திரி மந்திரத்தை எல்லாப் பிராமணர்களும் மூச்சுப் பயிற்சியுடன்  கூடிய பயிற்சியை  சங்கற்பம் என்பார்கள் .அது விசுவாமித்திரரால் உருவாக்கப்பட்டது.விசு என்றால் ஆகாயம் .ஆகாயத்துக்கு மித்திரன் என்றால் நண்பன் என்று பொருள்.ஆகாயக் கூறான உயிர்க் கூறு இயற்கையில் உள்ளது போல் நம்முடலில் மிகுமானால் நம்முடலும் இயற்கை போல் அழியாமல் இருக்கும்.

அதாவது ஐந்துக்கு இரண்டு பழுதில்லாமல் செய்ய வேண்டும் என்பார்கள்.ஐந்துக்கு இரண்டு பழுதில்லாமல்தான் இருக்கிறது.அதாவது உயிர் பிரிந்த போது பழுதுள்ள மூன்று பூதங்களான ஆகாயம் உயிருடன் ஓடிவிடும் , வாசித்துக் கொண்டிருக்கும் காற்று பின்னால் ஓடிவிடும் ,  காற்றில்லாவிட்டால் நெருப்பு அணைந்துவிடும் , மண்ணும் , நீரும் மட்டும் பிணமாகக் கிடக்கும்.

இயறகையில் விண்தான் இந்த பூமி , முதலான அனைத்துக் கோள்களையும் , அண்ட பேரண்டங்களையும் தாங்கி சரியான விதியில் சுழற்றுகின்றது. நம்மால் இரண்டு பந்துகளை ஒரு குடத்தில் போட்டு ஒன்றுடன் ஒன்று மோதாமல் சுழற்ற முடியுமா ? இத்தனை கோடி அண்டங்களையும் , பல கோடி பிரபஞ்சங்களையும் , பற்பல கோடிக் கோடி சூரியன்களையும்  அத்துடன் சேர்ந்த  பல கிரகங்களையும் ஒன்றுடன் ஒன்று மோதாமல் சுழற்றும் இந்த விண் என்ற பூதம் எவ்வளவு ஆற்றல் பெற்று மற்ற பூதங்களைவிட அளவில் பெரிதாய்த் திகழ்கிறது .

எனவே விண் பூதத்தை இயற்கையில் உள்ளது போல உடலில் அதிகரித்தால் நம்  உடலும் இயற்கையைப் போல அழிவற்றதாய்த் திகழும் .அப்படிப்பட்ட சாகாக் கலையை ஓதுவிக்கும் நம் தமிழ் மொழி எப்பேர்ப்பட்ட மொழி.நாம் எப்படிப்பட்ட ஞான நாட்டில் , ஞான பூமியில் பிறந்திருக்கிறோம்.அப்படிப்பட்ட ஆகாயக் கூற்றை உடலில் அதிகரிக்க இந்த மந்திரம் உதவும்.

அதே போல இந்த மந்திரத்தை  ஓம் என்று மூச்சை உள்ளிழுக்கவும் , பின் சிங் என்று வெளியில்  விடவும் , ரங் என்று மூச்சை உள்ளிழுக்கவும் , பின் அங் என்று வெளியில்  விடவும், மீண்டும் சிங் என்று மூச்சை உள்ளிழுத்து கடைசியா மூச்சை ஏதும் சொல்லாமல் வெளியில்  விடவும் , மீண்டும் மேற்படி மந்திர சங்கல்பத்தை தொடரவும்  இவ்வாறு செய்தால் 48 நாளில் நினைத்த சித்தரைக் காணலாம்.

இதை சங்கற்ப தரிசனம் என்று சொல்லலாம்.நாம் எந்த ரகசியத்தை கொண்டு செல்லவில்லை.சித்தர்கள் சொன்ன ரகசியத்தை சொல்லியே செல்கிறோம் .நீங்களும் சித்தர்களை தரிசனம் செய்து  இறையை தரிசிக்கலாம்.மேலான ஞான ரகசியத்தையும்  அடையலாம்.எம்மிடம் ஏதும் ரகசியம் இல்லை.

69 responses to “சித்தர்களைக் காண ஒரு மந்திரம்! ( காகபுசுண்டர் பெரு நூல் காவியம் )”

 1. amanulla says:

  sir i am happy to read all your articles ,I want to talk with you mobile please send me your number in my email id

  • machamuni says:

   அன்புள்ள திரு அமானுல்லா அவர்களே ,
   உங்களது கருத்துரைக்கு நன்றி.
   உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு எமது அலை பேசி எண் அனுப்பப்பட்டுள்ளது.
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 2. jagadeesan says:

  //பின் அங் என்று வெளியில் விடவும், மீண்டும் சிங் என்று வெளியில் விடவும் , //

  ஐயா
  உங்கள் பார்வைக்கு – இந்த வாக்கியத்தில் இரண்டு முறை வெளியில் விடவும் என உள்ளது அது சரியா.

  நன்றிகள்
  ஜெகதீசன்

  • machamuni says:

   அன்புள்ள திரு ஜெகதீசன் அவர்களே ,
   உங்களது கருத்துரைக்கு நன்றி.
   மன்னிக்கவும்.உங்கள் கருத்து சரியானது .அந்த தவறு சரி செய்யப்பட்டுள்ளது.
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 3. சக்திய உண்மை அய்யா …, மெய்யாக உணர்ந்து ஆழ்ந்த நம்பிக்கையோடு பயன்படுத்துவோர் யாரோ அவர் தாமே உத்தம பாக்கியசாலிகள் ..

  • machamuni says:

   அன்புள்ள திரு புலிப்பாணி சித்தர் அடிமை அவர்களே ,
   உங்களது கருத்துரைக்கு நன்றி.
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 4. NP Sathiamurthy says:

  Ayya, Vanakkam. Intha thagavalai oru peria parisaga karuthugiraen. Indhru muthal thiyanam aarambikka irukkiren. Nandri.

  • machamuni says:

   அன்புள்ள திரு NP Sathiamurthy அவர்களே ,
   உங்களது கருத்துரைக்கு நன்றி.
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 5. இராஜன் says:

  /*இந்த மந்திரத்தை ஓம் என்று மூச்சை உள்ளிளுக்கவும் , பின் சிங் என்று வெளியில் விடவும் , ரங் என்று மூச்சை உள்ளிளுக்கவும் , பின் அங் என்று வெளியில் விடவும், மீண்டும் சிங் என்று வெளியில் விடவும் ,*/.
  இதில் கடைசியில் இருமுறை மூச்சை வெளிவிட கூறியுள்ளீர்கள். அந்த இரண்டுக்கும் இடையே மூச்சை இழுக்கும் போது என்ன செய்வது?

  • machamuni says:

   அன்புள்ள திரு இராஜன் அவர்களே ,
   உங்களது கருத்துரைக்கு நன்றி.
   மன்னிக்கவும்.உங்கள் கருத்து சரியானது .அந்த தவறு சரி செய்யப்பட்டுள்ளது.
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 6. Sudhagar says:

  சாமீ அழகப்பன் ஐயா அவர்களுக்கு வணக்கம்!
  இம்மந்திரத்தினை ஒரு நாளைக்கு எத்தனை முறை உரு செய்ய வேண்டும். எந்த நேரங்களில் எல்லாம் செய்யலாம்?

  • machamuni says:

   அன்புள்ள திரு சுதாகர் அவர்களே ,
   உங்களது கருத்துரைக்கு நன்றி.
   எத்தனை தடவை முடியுமோ அத்தனை தடவை உருவேற்றி வரலாம்.சதா சர்வ காலமும் உருவேற்றலாம்.
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 7. VARADHARAJAN says:

  மதிப்புமிகு சுவாமி அவர்களுக்கு

  கோடானு கோடி நன்றி ! தங்களை தரிசித்தாலே சித்தர்களை கண்ட பாக்கியத்தை பெற்ற அனுபவம் கிடைக்கும்.. மேலும் மேலும் இது போல் மந்திர தகவல்கள் தங்களை மேலும் மெருகேற்றுகிறது..

  நன்றி சுவாமிகளே !
  வரதராஜன்

  • machamuni says:

   அன்புள்ள திரு வரதராஜன் அவர்களே ,
   உங்களது கருத்துரைக்கு நன்றி.
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 8. zakeer says:

  Aiya nandry ungal padipirku ungal pani sirakka valthukkal..

  • machamuni says:

   அன்புள்ள திரு ஸகீர் அவர்களே ,
   உங்களது கருத்துரைக்கு நன்றி.
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 9. Chandrasekar says:

  ஏறக்குறைய இதே செய்தியை அகஸ்தியரும் போகரும் கூறி உள்ளார்கள். எந்த சித்தரை தரிசிக்க வேண்டுமோ அவர் பெயரை அவர்கள் சொன்ன ஒரு மந்திரத்தின் இறுதியில் சேர்த்துச்சொல்லி உருவேற்றி ஜெபித்தால் நேரில் வருவார்கள் என்று சொல்லியுள்ளர்கள். பகுத்தறிவும் குதர்க்கமும் பேசும் நபர்களுக்கு இதை விளக்க முயலவேண்டாம்.

  நான் எழுதிய ‘அதிசய சித்தர் போகர்’ என்ற நூலை இந்த வாரம் கற்பகம் புத்தகாலயம் (தி.நகர், சென்னை) வெளியிடுகிறது என்பதை பணிவுடன் கூறிக்கொள்கிறேன்.

  • machamuni says:

   அன்புள்ள திரு Chandrasekar அவர்களே ,
   உங்களது கருத்துரைக்கு நன்றி.
   நீங்கள் எழுதிய ‘அதிசய சித்தர் போகர்’ என்ற நூலை நேரம் கிடைக்கும் போது வாங்கி படிக்கிறேன்.உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 10. rocky says:

  really very usefull thank you very much

  • machamuni says:

   அன்புள்ள திரு ராக்கி அவர்களே ,
   உங்களது கருத்துரைக்கு நன்றி.
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 11. நமசிவாயம் ராஜசேகர் says:

  எமக்கு என்றும் வழிகாட்டியாக வாழ்ந்துகொண்டிருக்கும் ஆசான் சாமிஅழகப்பன் அவர்களுக்கு தாங்கள் அடிமையின் அனேக நன்றிகள்,

  குருவடிமை,
  நமசிவாயம் ராஜசேகர்
  மூவரைவென்றன்

  • machamuni says:

   அன்புள்ள திரு நமசிவாயம் ராஜசேகர்
   மூவரைவென்றான் அவர்களே ,
   நன்றாக இருக்கிறீர்கள் அல்லவா?இறையருள் உங்களுக்கு பூரணமாகக் கிடைக்கட்டும்.உங்களது கருத்துரைக்கு நன்றி.
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 12. shimbumathi says:

  ayya thangalin pathivugal anaithum arumai ayya nan thiruvannamalai enakku old siddha books vendum engu kidaikkum ayya dhayavu seithu en mail id kku reply seiyungal ayya mikka nanri

  • machamuni says:

   அன்புள்ள திரு சிம்புமதி அவர்களே ,
   உங்களது கருத்துரைக்கு நன்றி.புத்தகங்கள் வாங்க கீழ்க் கண்ட இணைப்புகளைப் பாருங்கள்.
   http://machamuni.com/?p=1895
   http://machamuni.com/?p=2332
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 13. ramanathan says:

  Sir,

  One doubt. Is it possible to see sidhar with out chanting any mantras or meditation? Suppose if a person has very good character, kindness and other good qualities can see siddha? What will happen if the evil people chant these mantras?

  regards
  Ramanathan U

  • machamuni says:

   அன்புள்ள திரு ராமனாதன் அவர்களே ,
   உங்களது கருத்துரைக்கு நன்றி.
   பிராரத்த கர்மா (பிராப்தம் ) சரியாக உங்களை வழி நடத்துமானால் (விட்ட குறை , தொட்ட குறை இருந்தால் மட்டுமே ) சுத்த தேகியாக இருந்தாலும் சித்த தரிசனம் கிட்டும் .கொடு மனம் , மற்றும் கெடு மனம் படைத்தவர்கள் இது போன்ற விடயங்களில் ஈடுபட அவர்கள் மனம் இடங்கொடுக்காது.
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

  • S.Chandrasekar says:

   திரு ராமநாதன் அவர்களே.

   உங்கள் கேள்வி நியாயமானதுதான். சித்தர்கள் விருப்பபட்டால்தான் அவர்கள் நமக்கு காட்சி தருவார்கள். மனம் செம்மைப்பாட்டால் மந்திரம் ஜெபிக்க வேண்டாம், நம் உள்ளத்தில் மெய்ஞானம் தோன்றும்.

   அதுமட்டுமல்ல, அவர்கள் சமாதிக்கு நம்மை அழைத்துபோய் தரிசனம் தந்து மீண்டும் இருக்கும் இடத்தில் விட்டுவிடுவர் (pickup/drop). அவர்கள் நம் கண் எதிரில் ஸ்தூல உடலோடு வந்து காட்சிதந்து நமக்கு கட்டளைகளும் இடுவர். அவர்களின் மூச்சு ஓட்டத்தை விளக்குகிறார்கள், தங்க ஜாலம் செய்து காட்டுகின்றனர். இதுபோல் இன்னும் பல உள்ளது.

   இந்த தரிசன பாக்கியம் நம்முடைய கடந்த பிறவியின் தொடர்ச்சியாக இருக்காலாம், அல்லது இந்த பிறவியில் கலியுகத்தில் ஓரளவுக்கு மற்றவர்களுக்கு துன்பம் தராமல் இருக்கும் நெறிகளின் விளைவாகவும் இருக்கலாம் அல்லது இந்தப் பிறவியோடு விடுதலைகிட்டும் கட்டமாகவும் இருக்கலாம்.

   இதுபோன்ற என் அனுபவத்தை ‘அதிசய சித்தர் போகர்’ என்ற நூலில் சொல்லியுள்ளேன். கற்பகம் புத்தகாலயம், சுந்தரம் தெரு, (நடேசன் பூங்கா அருகில்) தி.நகர், இதை இந்தவாரம் வெளியிடுகிறது.

   என் வலது உள்ளங்கையை இருமுறை தேய்த்து இப்புத்தகத்தை எழுதப் பணித்ததே சித்தர் போகர்தான். அவர் சீன உருவில் எப்படி இருந்தார் என்பதை புத்தக முகப்பில் வரைந்துள்ளேன். அவர் உணர்த்தி வழிகாட்டியபடி நூலை எழுதினேன். அவ்வப்போது பாடல்களை என் கண்ணில் காட்டி நான் எழுதவேண்டியதை அறியவைத்தார். இல்லாவிட்டால் கணக்கிடமுடியாத சித்தர் பாடல்களில் குதித்து நீந்தி எங்கே முத்து எடுப்பது? குரு பாதம் போற்றி!

   அன்புடன்.
   சந்திரசேகர்

   • machamuni says:

    அன்புள்ள திரு சந்திரசேகர் அவர்களே ,
    உங்களது கருத்துரைக்கு நன்றி.
    உங்கள் அனுபவத்தைப் பகிர்ந்ததற்கு நன்றி .
    மிக்க நன்றி
    என்றென்றும் பேரன்பினால்
    சாமீ அழகப்பன்

 14. sk sekar says:

  ayya avarkale thangal sevai payanathin paathangalaiil pnikiren, nanum kadantha sila varudangalaha siddharkalin muppu { meiporul } aaraaichi { reserch } seidhu kondirukkiren, atharkku ungal valaithalam pala uthavikalai seithirukkirathu,, antha ragasiya vazikal yengiruntho yaro enakku solvathupol therikirathu, !!!!,,,, antha iraiporul itho enru therikirathu,,,aanaal ennaal seyalpadamudiyavillai,,atharkku thangalthan thangalin anubava mikka arivuraikalai enakku thayavu seidhu arulavendum ayya, thevaipattal enakku mail anuppalam , nanriyudan sk sekar.

  • machamuni says:

   அன்புள்ள திரு எஸ் கே சேகர் அவர்களே ,
   உங்களது கருத்துரைக்கு நன்றி.
   இறையருள் உங்களுக்கு பூரணமாகக் கிடைக்கட்டும்.இறையருள் பெற்றால் எல்லாம் கைகூடும் என்னாணை அம்பலத்தே!உங்களுக்கு கொடுப்பினை இருந்தால் எதுவும் பலிதமாகும் .கிடைக்கும்.
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 15. ம. சரவணன் says:

  அய்யா வணக்கம்,
  சில நாட்களுக்கு முன்பு தூக்கதிற்கு படிகாரத்தை பயன் படுத்த சொன்னீர்கள், பயன்படுத்தினோம் நிம்மதியான தூக்கத்தை கிடைத்தது. இதை என் தந்தைக்கும் பரிந்துரைத்தேன். இப்பொழுது தான் புரிகிறது அந்த காலத்தில் வீடு முன் திரிஷ்டி என்று தொங்கவிடுவார்கள் என்று…….
  மிக மிக நன்றி…………. அய்யா
  என் தந்தைக்கு (வயது 69) இருதய அடைப்பு உள்ளது, (2 வருடங்களுக்கு முன்னால் இருந்து (சித்த மருத்துவரிடம் ஆலோசித்து 6 மாதம் மருந்து சாப்பிட்டார் இருந்தும் சரிவரவில்லை மார்பு அழுத்தம் உள்ளது என்கிறார் )) சதுரகிரி ஹெர்பல்ஸ் கண்ணன் (நான் பழகியதில் கண்ணன் அவர்கள் போல் யாரும் இல்லை பணம் பெரும் பொருட்டாகவே எடுத்து கொள்வது இல்லை அவருடைய நட்பு கிடைக்க உதவியதிற்கு நன்றி)அவரிடம் வெண் தாமரை பஸ்பம் மற்றும் மருதம் பட்டை பொடி வாங்கி கொடுத்து சாப்பிடுகிறார்(2 வாரங்கள் ஆகுகிறது) முன்புக்கு இப்போது பரவயில்லை என்று கூறினார். நடக்கும் பொழுது மார்பு அழுத்தம் உள்ளது என்கிறார். சளித்தொல்லை மற்றும் இருமல் அதிகம் உள்ளது இரவு துங்கும் பொழுது இருமல் அதிகம் உள்ளது…. தங்களின் ஆலோசனை வேண்டும்.

  இப்படிக்கு
  உண்மையுள்ள
  ம.சரவணன்

  • machamuni says:

   அன்புள்ள திரு ம.சரவணன் அவர்களே ,
   உங்களது கருத்துரைக்கு நன்றி.
   ///என் தந்தைக்கு (வயது 69) இருதய அடைப்பு உள்ளது, (2 வருடங்களுக்கு முன்னால் இருந்து (சித்த மருத்துவரிடம் ஆலோசித்து 6 மாதம் மருந்து சாப்பிட்டார் இருந்தும் சரிவரவில்லை மார்பு அழுத்தம் உள்ளது என்கிறார் )/// பவள பற்பம் (ஸ்பெஷல்) ( IMP COPS ) , சிருங்கி பற்பம் SKM PHARMA , கஸ்தூரி கருப்பு ( IMP COPS ) ஒவ்வொன்றிலும் 10 கிராம் எடுத்து கலந்து கொண்டு , காலையில் சாப்பாட்டிற்கு அரை மணி பின்னர் பின்னர் மேற்படி பஸ்மக் கலவையை இரண்டு கிராம் எடுத்து வாயில் போட்டு சப்பிச் சாப்பிட்ட பின்னர் தசமூலாரிஷ்டத்தில் ( IMP COPS OR DABAR ) 15 மிலி எடுத்துக் கொண்டு 15 மி.லி தண்ணீர் கலந்து சப்பிச் சாப்பிட்டு வர சளி குறையும்.இரவு சாப்பாட்டிற்கு அரை மணி பின்னர் பின்னர் மேற்படி பஸ்மக் கலவையை இரண்டு கிராம் எடுத்து வாயில் போட்டு சப்பிச் சாப்பிட்ட பின்னர் அர்ஜூனாரிஷ்டத்தில் ( IMP COPS OR DABAR ) 15 மிலி எடுத்துக் கொண்டு 15 மி.லி தண்ணீர் கலந்து சப்பிச் சாப்பிட்டு வர இதய அழுத்தம் குறையும்.
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

   • ம. சரவணன் says:

    அய்யா வணக்கம்,
    பதில் அளித்தமைக்கு நன்றி. நான் நீங்கள் கூறிய மருந்துகளில் சிருங்கி பற்பம் தற்போது சந்தைகளில் இல்லை
    என்றும் தடை செய்யப்பட்டதாக கூறினார்கள். அதற்கு மாற்றாக என்ன உபயோகபடுத்தலாம் அய்யா…
    வெண் தாமரை பொடி தொடரலாமா….
    நன்றி
    இப்படிக்கு
    உண்மையுள்ள
    ம.சரவணன்

    • machamuni says:

     அன்பு மிக்க திரு ம.சரவணன் அவர்களே,
     கருத்துரைக்கு மிக்க நன்றி !!!!!
     வெண் தாமரை பொடி தொடரலாம்.///சிருங்கி பற்பம் தற்போது சந்தைகளில் இல்லை என்றும் தடை செய்யப்பட்டதாக கூறினார்கள்.///அதனால்தான் அதை மட்டும் S.K.M சித்தா மருந்துகளில் மட்டுமே, கிடைக்கும் என்று கூறியிருந்தோமே கவனிக்கவில்லையா???
     மிக்க நன்றி
     என்றென்றும் பேரன்பினால்
     சாமீ அழகப்பன்

 16. sk sekar says:

  mikka nanri ayya , thangal aaseervathathaal manam niraivanathu,,melum sila thakavalhalukkaha,,,,
  thangal amaippil membaraha servatharkku thirumanam aahiirukkavendum enru kooriiruntheerkal, naan manam mudithu irandu penkulandhaihalukku thanthaiyanavan , naan thangal amaippil servatharkku ennenna muraikalai kad aipidikkavendum, naan kumbakonam aruhe iruppavan, ,,makkalukku psipini pokkum sevai seyyavendum enru aasaipadupavan,,,ohvvoru powernamiyilum angu dhyanam ponra nikalvukal unda?,,enakku angu varavendum enra aasai niraiya ullathu, thangal vazhikattuthalal antha vaippu enakku kittum ena ninaikkiren, ungal sevai thodara andavanai prarthikkiren nanri vanakkam ayya,,,thangal vazhikattuthaludan sekar sk.

  • machamuni says:

   அன்புள்ள திரு எஸ் .கே .சேகர் அவர்களே ,
   உங்களது கருத்துரைக்கு நன்றி,
   கீழ்க்கண்ட இணைப்புக்களில் போய் எமது குரு நாதரைச் சந்தியுங்கள்.அவர் உங்கள் ஞானத்திற்கு வழி காட்டுவார். எமக்கு உபதேசம் செய்யும் அதிகாரம் வழங்கப்படவில்லை.
   http://machamuni.com/?p=518
   http://machamuni.com/?page_id=24
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 17. Aruna says:

  /*இந்த மந்திரத்தை ஓம் என்று மூச்சை உள்ளிளுக்கவும் , பின் சிங் என்று வெளியில் விடவும் , ரங் என்று மூச்சை உள்ளிளுக்கவும் , பின் அங் என்று வெளியில் விடவும், மீண்டும் சிங் என்று வெளியில் விடவும் ,*/.
  இதில் கடைசியில் இருமுறை மூச்சை வெளிவிட கூறியுள்ளீர்கள். அந்த இரண்டுக்கும் இடையே மூச்சை இழுக்கும் போது என்ன செய்வது?
  –Enakkum Thayavu seydhu solveerkala ?

  • machamuni says:

   அன்புள்ள திரு அருணா அவர்களே ,
   உங்களது கருத்துரைக்கு நன்றி,
   மன்னிக்கவும்.உங்கள் கருத்து சரியானது .இதை சரி செய்து நான் ஏற்கெனவே சரி செய்து வெளியிட்டது பிரசுரமாகவில்லை.
   ///அன்புள்ள திரு இராஜன் அவர்களே ,
   உங்களது கருத்துரைக்கு நன்றி.
   மன்னிக்கவும்.உங்கள் கருத்து சரியானது .அந்த தவறு சரி செய்யப்பட்டுள்ளது.
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்///
   ளது கருத்துரைக்கு நன்றி.
   இப்போது மேலதிக விபரங்களுடன் கட்டுரை பிரசுரமாகியிருக்கிறது .
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 18. Valli says:

  Vanakkam ayya.. Alughani,thozhughani chedi kidaikuma?

  • machamuni says:

   அன்புள்ள திரு வள்ளி அவர்களே,
   அழுகண்ணி செடியல்ல . அது காளான் வகையைச் சேர்ந்தது .அதை வீட்டில் வளர்க்க இயலாது.மிகக் குளிர்ச்சியான மற்றும் ஈரமான சூழ்நிலையில்தான் உயிர் வாழும்.தொழுகண்ணி என்பது சிறு மர வகுப்பைச் சேர்ந்தது . இது நல்ல குளிர்ச்சியான சூழ்நிலையில் வளரும் . எமது வீட்டின் மாடித் தொட்டியிலேயே இதை வளர்த்து வருகிறோம் . காணொளிக் காட்சியாக இனி வரும் கட்டுரைகளில் வெளிவரும்.
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 19. manikandan says:

  அய்யா வணக்கம்,

  தங்களுக்கு கிடைத்ததெய்வீக அனுபவங்களை பகிர்ந்து கொள்ளலாமே!

  பணிவன்புடன்

  மணிகண்டன்,மதுரை

  • machamuni says:

   அன்புள்ள திரு மணிகண்டன் அவர்களே ,
   உங்களது கருத்துரைக்கு நன்றி.
   எதிர்காலத்தில் எழுத இருக்கிறோம்.
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 20. //இந்த மந்திரத்தை ஓம் என்று மூச்சை உள்ளிழுக்கவும் , பின் சிங் என்று வெளியில் விடவும் , ரங் என்று மூச்சை உள்ளிழுக்கவும் , பின் அங் என்று வெளியில் விடவும், மீண்டும் சிங் என்று மூச்சை உள்ளிழுத்து கடைசியா மூச்சை ஏதும் சொல்லாமல் வெளியில் விடவும் , மீண்டும் மேற்படி மந்திர சங்கல்பத்தை தொடரவும் இவ்வாறு செய்தால் 48 நாளில் நினைத்த சித்தரைக் காணலாம்.// தினம் எவ்வளவு நேரம் இந்த தியானத்தை செய்ய வேண்டும்

  • machamuni says:

   அன்புள்ள திரு சந்திர சேகரன் அவர்களே ,
   உங்களது கருத்துரைக்கு நன்றி,
   தினமும் 108 முறை இந்த முறையில் சங்கல்பம் செய்து வந்தால் 48 நாளில் பலிதமாகும்.
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 21. T.Rajamuthu says:

  Respected sir I read this manthra unexpected and I think it is a GOD’s gift to me.
  I want to speak with you, please send your contact number to my mail id.
  Thanking you.

  • machamuni says:

   அன்புள்ள திரு டி.ராஜமுத்து அவர்களே ,
   உங்களது கருத்துரைக்கு நன்றி
   உங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு எமது அலைபேசி எண் அனுப்பப்பட்டுள்ளது.
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 22. Bhaskar C D says:

  வணக்கம் நண்பரே

  வணங்கிடுவேன் போகர் அவர் பாதம் சிரசில் கொண்டு !
  குரு அவராம் என்றென்றும் சிந்தையுள் கொண்டு !
  படித்திட்டேன் நிஜானந்த போதம் குரு அவரின் பாதம் பணிந்தே !

  சித்தர் அவர் மூலம் அது “கிங் ரங் அங் சிங் ” !

  என் குருவாம் நீலமேகம் அவர் தம் பாதம் பணிந்தே செப்பிட்டார் !

  ஐயம் அது எனக்கு என்ன வென்றால் சிங் ரங் அங் சிங் என்றா அல்லது !

  கிங் ரங் அங் சிங் என்றா!

  அன்புடன்
  பாஸ்கர்

  • machamuni says:

   அன்புள்ள திரு பாஸ்கர் அவர்களே,
   கருத்துரைக்கு மிக்க நன்றி,
   ஓம்சிங்ரங் அங்சிங்என்று சொல்ல வேண்டும் என்று புத்தகத்தின் பக்கத்தினையும் பிரதி எடுத்துக் கொடுத்துள்ளோம் இன்னும் சந்தேகமா???
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 23. Ganapathy says:

  Enakku pala varudamaga KAAL AANI ulladu, idarku oru vazhi sollungalen.

  Nandri;

 24. த.வெங்கடேசன் says:

  மதிப்பிற்குரிய ஐயா அவர்களுக்கு என் இதயம் கலந்த இனிய மாலைவணக்கங்கள்,
  ஐயா எனக்கு சிறு வயது முதல் கடவுளின் மீது அதீத நம்பிக்கை உண்டு,அதனாலோ என்னவோ தெரியவில்லை எனக்கு சிறு வயதில் இருந்து கடவுளை காண வேண்டும் என்ற ஆசை அதிகம் இருந்தது,ஆனால் என்னால் காணமுடியவில்லை,இது சாத்தியமல்ல என்பதை கால போக்கில் உணர்ந்தேன்,ஆனாலும் என்னால் விட முடியவில்லை,தற்போது சித்தர்களை காணமுடியும் என்ற தகவலை படித்தவுடன் எல்லையில்லா மகிழ்ச்சியுடன் உள்ளேன்,அதற்கான முயற்சியில் ஈடுபட உள்ளேன்,அதற்கு முன் உங்களிடம் ஒரு கேள்வி கேட்க விரும்புகிறேன் ஐயா, அதாவது இந்த மந்திரத்தை உச்சரித்து எவரேனும் அந்த மகா புருஷர்களை கண்டுள்ளார்களா என்பது தான்,மேலும் தங்களுடைய அனுபவங்களையும் அறிய ஆவலாக உள்ளேன்,
  இப்படிக்கு
  உங்கள் மாணவன் த.வெங்கடேசன்்

  • machamuni says:

   அன்புள்ள திரு த.வெங்கடேசன் அவர்களே,
   உங்களது கருத்துரைக்கு நன்றி,
   ஆராய்ந்து அறிந்து அனுபவிக்காத எதையும் , ஆராய்ச்சிக்கு உட்படுத்த வேண்டிய எதையும் நாம் கூறுவது இல்லை . உங்களை பரிசோதித்துக் கொள்ள இதைக் கூறவில்லை . இது சோதித்து முடிந்த நல்லனுபவம் நிறைந்த யோகிகள் மற்றும் ஞானிகள் ஆகியோரின் ஆசிகளுடன் பலருக்கும் , எமக்கும் தனிப்பட்ட முறையில் உபதேசிக்கப்பட்டது . நாம் மச்சமுனிவரின் சித்த ஞான சபையைச் சேர்ந்தவராக இருப்பதால் பலரும் அறிந்து பலனடைய பொதுவில் தெரிவித்து இருக்கிறோம் . எளிதில் மனிதனுக்கு எது கிடைத்தாலும் அதன் பேரில் சந்தேகம் கொள்வது இயல்பு .அதற்கு நீங்களும் விதி விலக்கல்ல .
   இப்படிக்கு
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 25. ரிஷி says:

  அன்புள்ள அய்யாவுக்கு,
  தங்களிடம் தொலை பேச ஆவலாக​ உள்ளது. தயவு செய்து தங்கள் எண் தந்து அடியேனுக்கு உதவவும்.

  இப்படிக்கு
  ரிஷி

  • machamuni says:

   அன்புள்ள திரு ரிஷி அவர்களே,
   உங்களது கருத்துரைக்கு நன்றி,
   உங்களுக்கு தங்களது மின்னஞ்சலில் எமது அலைபேசி எண் அனுப்பப்பட்டுள்ளது.
   இப்படிக்கு
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 26. sivashanmugham.v says:

  useful info. thank you sir

 27. அருண் says:

  அய்யா வணக்கம்,
  என் தம்பிக்கு முட்டியல் உள்ள சவ்வு கிழிந்து விட்டதாகவும் அது மறுபடியும் ஒட்டுவதற்கு அறுவை சிகிச்சைதான் செய்ய வேண்டுமென மருத்துவர் கூறுகின்றனர். சித்த வைத்தியம் மூலம் இதை சரி செய்ய இயலுமா?

 28. AYYA mikka nantri ,,nalla thakaval ,yan pontra erai thetum paktharkalukku vuthaviyaka vullathu ethu pontra nalla thakavalkalai anuppunkal ,nantri ,,OM NAMASIVAYA

 29. perumatha says:

  very happy to know the mantra

 30. perumatha says:

  very happy and tq very much ayya….

 31. Raghu kadambavanam says:

  அய்யா அவர்களுக்கு வணக்கம்…
  எனக்கு வயது 29 நான் அனைத்து கம்பெனிகள்
  ஏறி இறங்கி விட்டேன்.வேலை கிடைக்கவில்லை ஒரு நல்ல வேலை கிடைக்க
  ஒரு அறிவுரை சொல்லுங்கள் அய்யா……

  • machamuni says:

   அன்புள்ள திரு Raghu kadambavanam அவர்களே,
   உங்களது கருத்துரைக்கு நன்றி,
   கீழே உள்ள இணைப்பைக் கண்டு உய்வதற்கான வழி தேடுங்கள்.
   http://machamuni.com/?p=3822
   இப்படிக்கு
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 32. Sankarananth.s says:

  ஐயா,
  சித்தர் தரிசனத்ததிற்கு காத்து இருக்கிறேன். வழி காட்டவும். தங்களை காண விரும்புகிறேன்.

  • machamuni says:

   அன்புள்ள திரு சங்கரநாத் அவர்களே,
   உங்களது கருத்துரைக்கு நன்றி,
   உங்களுக்காக ஒரு பதிவே எழுதி வெளியிட்டுள்ளோம் .அது உங்களுக்கு மட்டுமல்ல உங்களைப் போல ஞானத் தேடல் உள்ள அனைவருக்கும் பயனாகும். இணைப்பு http://machamuni.com/2016/07/மச்ச-முனிவரின்-சித்த-ஞான-2/

   இப்படிக்கு
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 33. கீதாஞ்சலி says:

  ஐயா , நிறைய குழப்பங்கள் நிறைய பகிர்வுகளை தெரிவிக்க வேண்டும். கருணை கூர்ந்து தங்கள் எண்ணை அனுப்பவும்

 34. கீதாஞ்சலி says:

  தங்கள் தொலைபேசி எண்ணை தயவுகூர்ந்து அனுப்பவும்

 35. SURESH says:

  i read all details about our valuable siththar and i m very happy to read this ‘om sivyanama’

 36. கீதாஞ்சலி says:

  ஐயா கருணை கூர்ந்து தங்கள் தொலைபேசி எண்ணை தெரிவிக்க வேண்டும். தங்களிடம் பேச ஆவலாக உள்ளேன்

 37. NSPrabhu says:

  ஓம்:நமசிவய

  மதிப்பிற்குரிய ஐயா அவர்களுக்கு,

  என் கனவு பற்றிய சந்தேகங்களில் தெளிவு பெற உங்கள் உதவியை வேண்டி இந்த பதிவினை செய்கிறேன் .

  தங்களின் மின்னஞ்சல் முகவரியினை தெரிவிக்கவும்.

  நன்றி,

  • machamuni says:

   அன்புள்ள திரு NSPrabhu அவர்களே,
   உங்களது கருத்துரைக்கு நன்றி,
   machamuni.com@gmail.com
   இப்படிக்கு
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

− 1 = 3