சர்க்கரை வியாதியை குணமாக்கலாம் ( பாகம் 10 )

March 31, 2014 by: machamuni

சர்க்கரை வியாதியை குணமாக்கலாம்(பாகம் 9) ஐ படித்த பின்னர் இந்தப் பதிவைப் படிக்கவும்.என்றால்தான் தொடர்பு விட்டுப் போகாமல் புரியும்.

naval

ஜீரண சக்திக்  குறைபாடே சர்க்கரை வியாதி முதல் பல வியாதிகளுக்குக் காரணம் என்று முன்னரே பல பதிவுகளில் நாம் கூறியுள்ளோம்.அந்த ஜீரண சக்திக்  குறைபாட்டை  நீக்கவும் தவிர்க்கவும் பல வழிகளை இனி விவரிக்கின்றோம்.

முதலில் சாப்பிட்ட பின்னர் அரை மணி நேரம் கழித்து இலேசான இளஞ் சூடான வெந்நீர் சப்பிச் சாப்பிடுவதன் மூலம் ஜீரண சக்திக்  குறைபாட்டை சிறிது சிறிதாக சரியாக்கலாம் . சோம்புக்  குடிநீரும் , சுக்குக் குடி நீரும் அருந்தி வர ஜடராக்கினி தூண்டப்பட்டு வயிற்றில் போடும் உணவு மிகச் சிறந்த அன்ன ரசமாக மாற்றப்பட்டு , உடலில் தேவையான சப்த தாதுக்களில் எதுவாக மாற்றப்பட வேண்டுமோ அதுவாக மாற்றப் பெறுகிறது . விளைவாக உடல் விரைவில் எல்லா நோய்களிலிருந்தும் விடுபட்டு வலுப் பெறுகிறது .

நாவல் மரப்பட்டை

ஆசியநோய் காச மசிர்க்கரஞ்சு வாசவினை

கேசமுறு பால கிரகநோய் –  பேசரிய

மாவியங்க லாஞ்சனமிவ் வன்பிணி எலாமேகு

நாவலுரு பட்டையத னால்

-( பதார்த்த குண விளக்கம் )-

குணம்:- நாவல் மரப்பட்டையினால் வாயிற் பிறக்கும் நோய்கள் , இருமல் , பெரும்பாடு ( பெண்களுக்கு ஏற்படும் பெரு உதிரப் போக்கு (அதாவது மாதாந்திர  விலக்கு மட்டில்லாமல் உதிரமாகப் போவது  ) பெண்களுக்கு ஏற்படும் வியாதிகளில் இது உயிரையும் கொல்லும் என்பதால் இதற்கு பெரும்பாடு என்று சித்த வைத்தியத்தில் அழைப்பர் ) , ஈளை , பிள்ளைகளின் கிரக தோஷங்கள் , வியங்கம் , வாஞ்சனம் என்ற மச்ச பேதங்கள் ஆகிய இவைகள் தீரும் .

செய்கை:- சங்கோசனகாரி

உபயோகிக்கும் முறை:-நாவல் மரப்பட்டையைச் சூரணம் செய்து 1/2 தோலா எடை{அண்ணளவாக பன்னிரண்டு கிராம் (துல்லியமாக 11.7 கிராம்)} ,வீசம்படிகருங்குறுவை அரிசி மாவுடன் கூட்டிச் சலம் விட்டுப் பிசைந்து  ஆடை போலாவது அல்லது ஏடு  கட்டிப் பிட்டவியலாவது சர்க்கரை , நெய் கூட்டிச் சாப்பிடப் பெரும்பாடு , ரத்தக் கழிச்சல் , ரத்தக் கழிச்சல் , சீதபேதி , முதலியவைகள் போம் . பட்டையை கியாழம் வைத்துக் வாய் கொப்புளிக்க வாய் ரணம் , தொண்டைப் புண் முதலியவைகள் ஆறும் . இதன்  சூரணத்தை ரத்தம் சொரிகின்ற புண்களின் மேற்றூவ , இரத்தத்தை வறட்டி ஆறச் செய்யும் .

நாவல் மரத்தின் வேர்

வாத மறுங்கரப்பான் மாறும் விரணமோ

டோதமுறு நீரழிவு முத்துரத்த – சீதமுங்காய்

மாவன் சுரமும் வளர்மேக மும்போகும்

நாவன் மரவேரி னால்

-( பதார்த்த குண விளக்கம் )-

குணம்:- நாவல் மர வேரினால்வாத விகாரம் , கரப்பான் புண் , வெகு மூத்திரம் , ரத்த சீத பேதி , வாதசுரம் , மச்சைமேகம் இவைகள் விலகும் .

செய்கை:- சங்கோசனகாரி

உபயோகிக்கும் முறை:-நாவல் மரப்பட்டைக்குக் கூறியுள்ள அனைத்து உபயோகங்களும் இதற்குமாகும் .

உங்களுக்கு நாவல் மரத்தின் சிறப்பைச் சொல்ல வேண்டிய விடயங்கள்  நிறைய உள்ளன .முருகன் ஆடு மேய்க்கும் சிறுவனாக வந்து நாவல் மரத்தின் மேல் உட்கார்ந்தது கொண்டுதான் சுட்ட பழம் வேண்டுமா ?? சுடாத பழம் வேண்டுமா ?? என்று கேட்டார்.அதற்கு ஔவை பழம் கூட சுடுமா அப்பா என்று கேட்டார் ?? சுடாத பழமாக பார்த்து போடு என்று கூறினார்.

முருகன் நாவல் மரத்தை உலுக்கிய பின்னர் , ஔவை கீழே விழுந்த நாவல் பழத்தை நன்கு பழுத்த நாவல் பழமாக எடுத்து பழத்தில் ஒட்டியிருந்த மண்ணை ஊத ,அப்போது முருகன் என்ன பாட்டி  சுடாத பழமாக கேட்டுவிட்டு சுட்ட பழத்தை எடுத்து ஊதுகிறாயே ?? என்று கேட்டார். நன்கு பழுத்த பழத்தில் மண் ஒட்டுவதால் மண்ணைப் போக்க ஊதிச் சாப்பிடுவதால்  நாவல் பழத்தில் சுட்ட பழம் என்பது நன்கு பழுத்த பழம் என்பதும் , சுடாத பழம்  என்பது நன்கு பழுக்காத பழம் என்பதும் அப்போதுதான் ஔவைக்கு புரிந்தது .

“கருங்காலிக் கட்டைக்கு நாணாக் கோடாரி , இருங்கதலித் தண்டுதனக்கு  நாணும்” எனக் கூறினார் அதாவது கருங்காலிக் கட்டையை பொடிப்பொடியாக வெட்டும் இரும்புக் கோடாரி வாழை மரத்தை வெட்ட முடியாது வழுக்கிக் கொண்டு வெட்கப்படும் என்று பொருள்  .ஔவை இது வரை நான்தான் தமிழில் வித்தகி என்று எண்ணி இருந்த ஆணவம் எல்லாம் தொலைந்தேன் என்று முருகனை வணங்கி சென்றார் .

வெண்ணாவல் மரம்

VENNAAVAL_mini

மேலே கொடுத்துள்ளது கோரக்கர் மலை வாகடத்திலிருந்து உள்ள குறிப்புக்களை கொடுத்துள்ளோம்.

சதுரகிரியில் சுந்தர மகாலிங்கத்திற்கு செல்லும் வழியில் சின்ன பசுக்கிடைக்கு கடந்த பின்னர் நவ்வலூற்று  ஒன்று இருக்கிறது .செல்லும் பாதையின் அருகிலேயே வெண் நாவல் மரம் ஒன்றுள்ளது. அதனடியில் ஊரும்  தண்ணீர்  சர்க்கரை நோயை குணமாக்கும் வல்லமை உள்ளது.வெண்ணாவல் சத்து அதில் சேர்வதால்தான் இந்தத் தன்மை அதற்கு உள்ளது .

கீழே உள்ள இணைப்பில் இது விவரிக்கப்பட்டுள்ளதை  காணுங்கள் .

http://www.siththarkal.com/2011/01/blog-post_955.html

மேலும் வெண்ணாவல் ( சாதாரண நாவல் மரத்திலிருந்தும் )மரத்திலிருந்து தயாரிக்கப்படும் மூலிகை குடிநீர்க் குவளை ஒவ்வொருவர் வீட்டிலும் இருக்க வேண்டிய மூலிகைப் பொருள் . இது ஆயுர்வேதிக் டம்ளர் என்ற பெயரில் சில கடைகளில் கிடைக்கிறது.

அது நமது அமீர் சுல்த்தான் , மச்ச முனி மூலிகையத்திலும் கிடைக்கிறது.வெண்ணாவல் மரத்திலிருந்து தயாரிக்கப்படும் மூலிகை குடிநீர்க் குவளை கற்பமாக ( உயிரை அழிய விடாமல் செய்யும் தன்மையுடையது )செயல்படும் சிறப்புடையது , என்றாலும் சாதாரண நாவல் மரத்திலிருந்து தயாரிக்கப்படும்  மூலிகை குடிநீர்க் குவளையும் மேலே குறிப்பிட்ட நோய்களைப் போக்குவதில் மட்டும் இத்தகைய சிறப்புக்களை உடையது .

இந்த மச்சமுனி சிறப்பு மது மேகச் சூரணத்துக்கும் , மூலிகை குடிநீர்க் குவளைக்கும்  நீங்கள் நாட வேண்டிய மின்னஞ்சல் முகவரி

திரு அமீர் சுல்தான்.

மின்னஞ்சல்  :-

machamunimooligaiyagam@gmail.com

அலைபேசி எண் :- 9597239953

 

MOOLAIKAI KUVAlAI_miniஇந்தக் குவளையில் தண்ணீர் ஊற்றி வைத்திருந்து தண்ணீர் சிறிது  நிறம் மாறும் , அதைக்  குடிக்க உடலில் உள்ள கழிவுகள் வெளியேறும்.உடல் வளம் பெரும். உடலில் உள்ள சர்க்கரை நோய் , உயர் இரத்த அழுத்தம் , அதீத உடல் சூடு , அந்தச் சூட்டால் விளையும் வெள்ளை , வெட்டை , மேக காங்கை ( உடல் எரிவு ), சர்க்கரை நோயால் வரும் கை கால் எரிவு , கண் புகைச்சல் போன்றவை தீரும்.

திருவேங்கடம் என்னும் ஊரிலிருந்து கோவில்பட்டி செல்லும் வழியில் கழுகுமலை என்ற ஊரில் முருகன் கோவில் உள்ளது .அந்தக் கோவிலருகே உள்ள குளத்தில் மலையில் இயற்கையாக உள்ள அப்பிரேகம்  கரைந்துள்ளது . இந்தக் குளத்து நீரை அருந்தி வந்தாலும் சர்க்கரை நோய் குணமாகும் .நமது முன்னோர்கள் இது போன்ற ஆரோக்கிய விடயங்களை கோயில்களில் வைத்து பொது மக்களின் ஆரோக்கியத்தை நிலை நாட்டியுள்ளனர் .நாம் பாதுகாக்கப்பட்ட குடி நீர் என்ற பெயரில் இவற்றையும் தொலைத்துவிட்டோம்.

கழுகு மலைக்  கோயிலின் படங்களையும் , கழுகு மலைக் கோயில் குளத்தையும் கீழே  உள்ள படங்களில் காணுங்கள் .

kazhukumalai kuLam over view_minikazhukumalai kuLam_minikazhukumalai kuLam 1_mini

வெண்ணாவல் பட்டை நமது  மச்ச முனி மூலிகையக மது மேகச் சூரணத்தில் சேர்க்கப்படுகிறது.அப்பிரேகச் செந்தூரம் 1௦௦ புடமும்   30  புடமும் நமது  மச்ச முனி மூலிகையக சிறப்பு மது மேகச் சூரணத்தில்சேர்க்கப்படுகிறது .நமது வலைத் தள அன்பர்கள் இதைப்  பயன்படுத்தி இன்புறுங்கள் .

பதிவு பெரிதாகப் போவதால் அடுத்த பதிவான  சர்க்கரை வியாதியை குணமாக்கலாம்(பாகம் 11) ல் தொடரலாம்.

34 responses to “சர்க்கரை வியாதியை குணமாக்கலாம் ( பாகம் 10 )”

 1. R.BALAMURALIKRISHNAN says:

  ஐயா

  இயற்கை ஆயுர் வேத டம்ளர் எங்க கிடைக்கும்.

  • machamuni says:

   அன்புள்ள திரு பாலா அவர்களே,
   உங்களது கருத்துரைக்கு நன்றி,
   கட்டுரை தற்போது மேலதிக விவரங்களுடன் புதுப்பிக்கப்பட்டுள்ளது.பார்க்கவும்.
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

  • kalavathi says:

   please inform all medicine tips

   • machamuni says:

    அன்புள்ள திரு kalavathi அவர்களே,
    உங்களது கருத்துரைக்கு நன்றி,
    செய்து கொண்டே இருக்கிறோம் .
    இப்படிக்கு
    என்றென்றும் பேரன்பினால்
    சாமீ அழகப்பன்

 2. இர்ஷாத் says:

  அய்யா தங்களின் சர்க்கரை வியாதியை குணமாக்கலாம் பாகம் 1to10வரை மிகவும் அருமை

  • machamuni says:

   அன்புள்ள திரு இர்ஷாத் அவர்களே,
   உங்களது கருத்துரைக்கு நன்றி,
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 3. J.Senthilkumar says:

  அன்புள்ள ஐயா
  தங்களது பதிவு படித்தே ன் மிகவும் அருமையாக இருந்தது
  உங்களது புதிய பதிவுகளுக்காக ஆவலுடன் காத்திருக்கிறோம்
  இப்படிக்கு என்றும் அன்புடன்
  ஜெ .செந்தில்குமார் .பி.இ
  இலண்டன்

  • machamuni says:

   அன்புள்ள திரு ஜெ .செந்தில்குமார் .பி.இ , இலண்டன் அவர்களே,
   உங்களது கருத்துரைக்கு நன்றி,
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 4. rajesh says:

  Sir vanakkam , intha pathivai parthu varthaiyil vivarikka mudiyatha santhosam sir.unkalai elutha vaitha kadavuluku nanrti.adutha pathivirkaka …..kathirukiren….

  • machamuni says:

   அன்புள்ள திரு ராஜேஷ் அவர்களே,
   உங்களது கருத்துரைக்கு நன்றி,
   தமிழில் கருத்துரை இடுங்கள்.கட்டுரை தற்போது மேலதிக விவரங்களுடன் புதுப்பிக்கப்பட்டுள்ளது.
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 5. r.vijayaragavan says:

  iya vanakkam:
  nalla payanull thagavalai koduthu varugreergal nantrigal, nanum ungallin pinnal ullen nantry.
  malum iya enakku oru siru vilakkam thara vendum ,
  mooligai pirivil:

  valampuri- nanthiyavattam (mooligai agarathi thamarai noolagam)
  idampuri-? theryavillai iya

  kaiyan sar-kaiyantharai
  menichsar-kuppaimeni
  kanichsar-? theriyavillai iya

  thayai koornthu vilakka vendum, nantry

  • machamuni says:

   அன்புள்ள திரு விஜய ராகவன் அவர்களே,
   உங்களது கருத்துரைக்கு நன்றி,
   தமிழில் கருத்துரை இடுங்கள்.
   ///valampuri- nanthiyavattam (mooligai agarathi thamarai noolagam)
   idampuri-? theryavillai iya////
   இதற்குத்தான் தமிழ் வைத்தியம் குரு முகாந்தரமாக கற்றுக் கொள்ள வேண்டும் . வலம்புரிகாய் , இடம்புரிக்காய் என்பவை காது வலிக்கு தைலம் காய்ச்ச உதவுபவை .நாம் கூறியது .சரிதானே!!!
   ///kaiyan sar-kaiyantharai
   menichsar-kuppaimeni
   kanichsar-? theriyavillai iya///
   பொதுவாக கனிச்சாறு என்றாலே கனிகளின் அரசனான எலுமிச்சம்பழச்சாறுதான் .
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 6. Selvakumar says:

  Dear Sir,

  Please let us know where can be find the glass that can control diabetics

  • machamuni says:

   அன்புள்ள திரு செல்வ குமார் அவர்களே,
   உங்களது கருத்துரைக்கு நன்றி,
   தமிழில் கருத்துரை இடுங்கள்.கட்டுரை தற்போது மேலதிக விவரங்களுடன் புதுப்பிக்கப்பட்டுள்ளது . மீண்டும் பார்க்கவும்.
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 7. ஜெ .செந்தில்குமார் says:

  அன்புள்ள ஐயா
  உங்களது பதிவுகள் மிகவும் அருமை
  உங்களது புதிய பதிவுகளுக்காக ஆவலுடன் காத்திருக்கிறோம் மிகவும் நீண்ட இடைவெளி யாக உள்ளது தினமும் உங்கள் தளத்தில் பதிவுகளை காண மிகவும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறோம்.
  இப்படிக்கு என்றும் அன்புடன்\
  ஜெ .செந்தில்குமார்
  லண்டன்

  • machamuni says:

   அன்புள்ள திரு ஜெ .செந்தில்குமார் .பி.இ , இலண்டன் அவர்களே,
   உங்களது கருத்துரைக்கு நன்றி,
   எமக்கு இறைவன் அளித்திருக்கும் நேரத்தில் , இறைவன் அனுமதி அளித்திருக்கும் அதிகமான விழிப்பில் இருக்கும் நேரத்தை நமது வலைத் தளத்திற்கு மிக அதிகமாக செலவிட்டு வருகிறோம் . இது எமது மற்ற உருப்படியான செயல்களுக்கு செலவழிக்கும் காலத்தைவிட அதீதமான அளவுதான் . அதாவது எமனை வெல்ல நாம் செலவிடும் காலத்தைவிட இது அதிகம் . இதைத்தான் சித்தர்கள் ” நாம் செய்யும் கடமைகள் என்ற பெயரில் செய்யும் செயல்கள் அனைத்தும் வெட்டி வேலைகளே !!!” இந்த வெட்டி வேலைகளை நாம் எப்போது செய்யலாம் என்றால் நாம் எமனை வென்ற பின் செய்தால் நலம் . முன்னால் செய்தால் நாம் செய்வது அனைத்துமே வெட்டி வேலை.
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 8. Bala says:

  ஐயா,

  உங்கள் பதிவுகள் பயனுள்ளதாக இருக்கிறது . ஆயூர்வேதிக் டம்ளர் எங்கு கிடைக்கும்

  • machamuni says:

   அன்புள்ள திரு பாலா அவர்களே,
   உங்களது கருத்துரைக்கு நன்றி,
   கட்டுரை தற்போது மேலதிக விவரங்களுடன் புதுப்பிக்கப்பட்டுள்ளது.பார்க்கவும்.
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 9. irsath says:

  அய்யா எனக்கு மலத்துடன் புலுகு வருகிறது தயவு செய்து மருந்து கூறவும் நன்றி

  • machamuni says:

   அன்புள்ள திரு இர்ஷாத் அவர்களே,
   உங்களது கருத்துரைக்கு நன்றி,
   புலுகு அல்ல புழு .மலத்துடன் வரும் புழு குடலில் பெருமளவு புழுக்கள் இருப்பதைக் குறிக்கிறது.நீங்கள் இம்ப்காப்ஸ் மருந்துகளில் முருக்கன் விதை மாத்திரை என்ற மருந்து உள்ளது .அது மாத்திரை வடிவில் இருக்கும் . அதை மூன்று நாட்களுக்கு ஒரு முறை இரவில் இரண்டு முதல் மூன்று மாத்திரைகள் வெந்நீருடன் எடுத்துக் கொள்ள வேண்டும் .இது போல் ஒரு மாதம் சாப்பிட வயிற்றில் உள்ள புழுக்கள் அழிந்துவிடும் .மிண்டும் ஒரு மாதம் கழிந்து மீண்டும் இது போல செய்ய வயிற்றில் மீந்திருந்த முட்டையில் இருந்து வந்த புழுக்களும் அழிந்து ஒழிந்துவிடும் .
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 10. பாலையா says:

  எனது நண்பர் ஒருவரின் குடும்பத்தில் யாருக்கும் சுகரோ பீப்பியோ கிடையாது என்ன வென்று ஆராய்ந்து பார்த்ததில் அவர்களின் உணவுப்பழக்கத்தில் தினம் தினம் ரசம் வைத்து சாப்பிடுகின்றார்கள். சர்க்கரை வியாதிக்காரர்கள் பலரிடம் கேட்டபோது இந்த உலகத்தில் பிடிக்காத உணவு ரசம் சோறு தான் என்று எனது ஆராய்ச்சியில் தெரிய வந்தது. அப்படியானால் ரசம் (உள்ளடக்கம்: மிளகு, தக்காளி, சீரகம், வெந்தயம், இஞ்சி, பூண்டு, பச்சைமிளகாய், கசகசா, மஞ்சள் பொடி, கரும்புச்சர்க்கரைப்பொடி, உப்பு, மிளகாய்ப்பொடி, கடுகு, உளுந்தம் பருப்பு, சின்ன வெங்காயம், பெருங்காயப்பொடி – இவை அனைத்துமே தமிழ் நாட்டு சித்த மருந்துகள்) இவற்றை தினம் தினம் சேர்ப்பவர்கள் யாரும் குண்டாக யில்லை பீப்பி சுகர் ஏதும் அவர்களை அண்டவில்லை . எனவே எனது தகவல் தினம் தினம் மேற்கண்ட பொருட்களை வாங்கி பொடி செய்து வைத்துக்கொண்டு ஒரு நபருக்கு ஒரு டீஸ்பூன் என்ற அளவில் ஒரு டம்ளர் தண்ணீரும் சேர்த்து கொதிக்க வைத்து குடித்தாலே போதும். எதையுமே தொடர்து விடாமல் வைராக்யத்தோடு செய்தால் உங்களின் பீப்பியும் சுகரும் வைராக்கியமாக வெளியே சென்று விடும். இதுவும் பீப்பி சுகர் கொலஸ்ட்ரால் க்கான மருந்து தான். பயன் படுத்தி பார்த்து விட்டு தமிழகத்தில் தன்னிறைவு பெற்ற டாக்டர்கள் யாராவது (பணத்திற்கு ஆசைப்படாத) ஒருவர் இருந்தால் அவரது மருத்துவமனையில் சென்று உங்களின் பீப்பி சுகர் கொலஸ்ட்ரால் ஆகியவற்றின் நிலைகுறித்து டெஸ்ட்டுகள் எடுங்கள் இல்லையேல் ஃலைப் டைம் மெடிசின் உங்களுக்கு தருவார்கள். அவர்களின் மருந்துகள் உங்களின் நோய் எதுவாக இருந்த்தாலும் குணப்படுத்தாது ஆனால் கட்டுப்படுத்தும் நீங்கள் உயிரோடு இருக்கும் வரை சாப்பிட்டே ஆகவேண்டும் இல்லையேல் மரணம் உங்களுக்கு கண்டிப்பாய் வந்துவிடும் (அச்சுறுத்தல்) நீங்கள் எந்த மாத்திரை சாப்பிட்டாலும் பக்க விளைவுகள் வரும் அதற்கும் குணப்படுத்த அல்ல கட்டுப்படுத்த மட்டுமே மாத்திரைகள் தரப்படும் (வட்டிக்கு வட்டி) . உங்களின் உணவுப்பழக்கத்தை மாற்றுங்கள் . சித்தர்களின் சபையில் சேர்ந்து தியாணம் செய்யப்பழகுங்கள் அமைதியாய் இருப்பது அல்லது சும்மா இருப்பது எப்படி என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள். பேராசை வேண்டாம். நமது குடும்பத்திற்கு எவ்வளவு தேவையோ அவ்வளவு சம்பாதித்தால் போதும் காசு காசு என்று அலைந்தே வாழ்வைத்தொலைத்தவர்கள் (அவர்கள் வாழவே இல்லை என்பதை புரிந்து கொள்ளுங்கள்) பலர் அவர்களில் ஒருவராய் நாம் வாழத்தேவையில்லை. இந்த பிரபஞ்சத்தில் கிடைக்காதது அமைதி மட்டும்தான் (எவ்வளவு விலை கொடுத்தாலும் எங்கும் கிடைக்காதது). அந்த அமைதி வெளியில் இல்லை உங்களின் மனதில்தான் உள்ளது அதனைத்தேடுங்கள். மரணம் எப்போது வந்தாலும் சந்தோஷமாக ஏற்றுக்கொள்ளுங்கள் , நாம் தமிழர்கள் வீரர்கள் (மனோ வலிமையில்),
  மரணத்தைக்கண்டு பயப்படவேண்டாம் தைரியமாக இருங்கள் எப்போது மரணம் வந்தாலும் சந்தோசமாக ஏற்றுக்கொள்ளும் பக்குவத்தோடு இருங்கள், குறைபாடுகள் இல்லாது மரணத்தை சந்தோசமாக ஏற்றுக்கொள்பவனுக்கு மறுபிறவி இல்லை ஆசையொடு குறையோடு இறப்பவர் அந்த ஆசையை பூர்த்தி செய்ய மறுபிறவி எடுப்பார். எனவே ஆசை கொள்ளாதிருங்கள். வேண்டாம் வேண்டாம் என்றே சொல்லிப்பாருங்கள் எதுவும் உங்களை அனுகாது ஆசையைக்கட்டுப்படுத்த இது தான் வழி.
  பொறுத்துக்கொள்ளுதலைக்காட்டிலும் ஏற்றுக்கொள்ளுதல் நல்லது. நாம் இந்தப்பிறவியில் நம் குடும்பத்தாரோடு சேர்ந்து அமைதியும் பொறுமையும் சந்தோசமாயும் வாழப்பழக வேண்டும் (எத்தனைக்குடும்பத்தில் ஒருவருக்கொருவர் அடிதடி சண்டை வம்பு வழக்குகள் நிம்மதியின்மை சந்தேகத்தீ நிம்மதியாய் சாப்பிட இயலாமை). மற்ற மனிதர்களோடு சேர்ந்து வாழ்வது அல்லது ஏற்றுக்கொண்டு வாழ்தல் எப்படி என்பது தான் உண்மையான கல்வி ஞானம். சேர்ந்து வாழப்பழகுவோம் அமைதியாய் வாழவும் பழகுவோம்.

  • machamuni says:

   அன்புள்ள திரு பாலையா இல்லை அவர்களே,
   உங்களது கருத்துரைக்கு நன்றி,
   வேண்டுபவர்கள் பயன்படுத்திக் கொள்ள உங்கள் கருத்துரையை வெளியிட்டுளோம்.
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 11. Sridevi says:

  அய்யா, வணக்கம். டையபிடீஸ் போல், பெண்களுக்கு சிரமத்தை தரும் PCOD பிர்ச்சனைக்கும் ஏதாவது தீர்வு இருந்தால் வெளியிடவும். நன்றி

 12. Sridevi says:

  ஐயா,

  மிக்க நன்றி. தவறாமல் உபயோகிக்கிறேன்.

  எனக்கு நீண்ட நாட்களாக இந்த பிரச்னை உள்ளது.

  இதன் காரணமாக thyroid பிரச்சனையும் வந்தது. ஆனால், ஹோமியோபதி மருந்தால் அது இன்று வரை சரியாக உள்ளது. டெஸ்ட் ரிபோர்ட்ஸ் நார்மல் தான்.

  ஆனால், மாத விலக்கு கோளாறு சிறு வயது முதல் இருந்து கொண்டே இருக்கிறது.

  சிறு வயதில் அதிகம் சாப்பாட்டு விசயத்தில் குறும்பு செய்வேன்.. தற்போது அவதி படுகிறேன். மேலும் இரு சக்கர வாகனம் அதிகம் ஓட்டுவேன். அதனால் ஏதேனும் பாதிப்பு வந்ததா?

  மேலும் முகப்பரு பிரச்சனையும் இருந்து கொண்டே இருக்கிறது. தேவையற்ற ரோமங்களும் உள்ளது. testosterone hormone சீரில்லாததால் வரும் பிரச்சனைகளா இவை? இவைகளுக்கு நிரந்தர தீர்வு உள்ளதா?

  ஹோமியோபதியால் thyroid பிரச்சனை தீர்ந்தது. ஆனால் PCOD பிரச்சனையும் அதை சார்ந்த பிரச்சனையும் இருந்து கொண்டேதான் இருக்கிறது. தயவு செய்து உதவவும்.

  நன்றி.

  S. ஸ்ரீதேவி

  • machamuni says:

   அன்புள்ள திருமதி ஸ்ரீதேவி அவர்களே,
   உங்களது கருத்துரைக்கு நன்றி,
   உங்களுக்கு மேலும் விபரமாகச் சொல்வது என்றால் அது ஒரு கட்டுரையாகவே முடியும். விரைவில் இது பற்றி விரிவாக மற்றும் விளக்கமாக பதிவு எழுதுவோம்.
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 13. Sridevi says:

  நன்றி அய்யா. தங்கள் பதிவிற்காக காத்துக் கொண்டு இருக்கிறோம். மேலும் குழந்தைகளுக்கு எந்த உணவு வகைகள் நல்லது என்பது பற்றியும் ஒரு கட்டுரை தாய்மாருக்கு மிகவும் உதவிகரமாய் இருக்கும்.

  மேலும் கோதுமை மாவில் gluten என்னும் பொருள் உடம்பிற்க்கு நல்லதல்ல என்கிறார்கள். அதனை நீரிழிவு நோய் உள்ளவர், குழந்தைகள் மற்றும் pcos பிரச்னை உள்ளோர் உண்ணலாமா? ஏன் இதை கேட்கிறேன் என்றால் இன்று பலர் இட்லி தோசை விடுத்து, கொடுமை ரொட்டி (Bread), சப்பாத்தி, கோதுமை ரவை உப்புமா என்று மாறி வருகின்றனர்.

  அதனால் இது பற்றி ஒரு தொடர் மக்களிடையே தேவையான விழிப்புணர்வை ஏற்படுத்தும். மிக்க நன்றி அய்யா.

  S. ஸ்ரீதேவி

  • machamuni says:

   அன்புள்ள திரு S. ஸ்ரீதேவி அவர்களே,
   உங்களது கருத்துரைக்கு நன்றி,
   அனைத்து பதிவுகளும் இது போலவே வழிகாட்டுதல்களுடனேதான் எழுதி வருகிறோம். இனி ஒரு கட்டுரை நீங்கள் குறிப்பிடும் பொருளை அடிப்படையாக வைத்து தங்களுக்காகவே எழுதப்படும்.
   இப்படிக்கு
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 14. Sridevi says:

  நன்றி அய்யா. தங்கள் பதிவிற்காக காத்துக் கொண்டு இருக்கிறோம்.

  S. ஸ்ரீதேவி

  • machamuni says:

   அன்புள்ள திரு S. ஸ்ரீதேவி அவர்களே,
   உங்களது கருத்துரைக்கு நன்றி,
   இப்படிக்கு
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 15. Balaji says:

  Sir the link shows part 11 whereas it takes us to Part 8. Please update the link at the end.
  Thank you sir
  Vanakkam

  • machamuni says:

   அன்புள்ள திரு பாலாஜி அவர்களே,
   உங்களது கருத்துரைக்கு நன்றி,
   நீங்கள் குறிப்பிட்டுள்ள குறைபாட்டை சரி செய்து விட்டோம் .
   இப்படிக்கு
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 16. sharmilee says:

  ayyaa, ungal katturaigalai thodarndhu padikka yenna seyya vendum?

  • machamuni says:

   அன்புள்ள திரு ஷர்மிலி அவர்களே,
   உங்களது கருத்துரைக்கு நன்றி,
   உங்கள் கருத்துரை முதலில் தமிழில் இருக்க வேண்டும்.தமிழில் எழுதாத நபர்கள் மேல் எமக்கு மரியாதை ஏற்படுவதில்லை.எமது வலைத் தளத்தில் ( http://machamuni.com/ )உள்ள கட்டுரைகள் மொத்தம் 185 . இவற்றை படித்து முடித்துவிட்டீர்களா? மேலும் எனது வலைப் பூவில் ( http://machamuni.blogspot.in/ )182 கட்டுரைகள் உள்ளன .இவற்றையும் படித்து முடித்துவிட்டீர்களா?இனிமேல் வரும் கட்டுரைகளை உடனுக்குடன் படிக்க வலது கைப்புற மூலையில் RSS FEED என்று உள்ள இணைப்பை க்ளிக் செய்து உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதியுங்கள்.இனிமேல் வரும் கட்டுரைகள் உங்கள் மின்னஞ்சல் முகவரிக்கே வந்து சேரும்.
   இப்படிக்கு
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

+ 63 = 72