சர்க்கரை வியாதியை குணமாக்கலாம் ( பாகம் 11 ) ஆவாரம்பூ ஒரு அற்புத மூலிகை

April 21, 2014 by: machamuni

சர்க்கரை வியாதியை குணமாக்கலாம் ( பாகம் 10 ) தை படித்துவிட்டு இந்தக் கட்டுரையைத் தொடர்ந்து படிக்கவும் . அப்போதுதான் தொடர்பு விட்டுப் போகாமல்  புரியும் .

ஆவாரம் பூ 1ஆவாரம் பூ

ஆவாரம் பூ 2ஆவாரம் பூ 3

ஆவாரம்பூ

ஆவாரம்பூ என்பது தங்கச் சத்துள்ளது என்பதால் தங்கத்திற்கு சமமாக கருதப்பட்டு விஷுக்கனி தரிசனத்தில் இடம் பெற்றுள்ளது . சாதாரணமாக தங்க பற்பத்தின் விலையும் அதிகம் . தங்கத்தின் விலையும் அதிகம் . சரியாக முடியாத தங்க பற்பம் சிறுநீரகத்தைப் பாதிக்கும் . ஆனால் ஆவாரம்பூ என்பது  இயற்கையால் இயற்கையாக முடித்து வைக்கப்பட்டுள்ள தங்க பற்பம் . அதே சமயம்  ஆவாரம்பூ மிக எளிதாக , விலையில்லாமல்  அங்கங்கே பூத்துக் கிடக்கிறது .  

ஒரு முறை மூலிகை ஆராய்ச்சி செய்ய கொல்லி மலைக்குச் சென்ற மாணவர்கள் அங்கே ஒரு சித்தரைக் கண்டார்கள் . அவர் உடல் ஒளி வீசும் பொன்னிறமாக இருந்தது . அவரிடம் அந்த மாணவர்கள் கேட்டார்கள் உங்கள்  ஒளி வீசும் பொன்னிற உடலுக்கு காரணம் என்ன என்று கேட்டார்கள் . அதற்கு அவர் சொன்னார் ” ஆவாரம்பூ என்ற இந்த பொன் மூலிகைதான் எனது  இந்த  பொன்னிற ஒளி வீசும் உடலுக்கு காரணம் “என்றார் . “ஆவாரம்பூ  காலையில் ஒரு கைப்பிடி , மாலையில்  ஒரு கைப்பிடி பல ஆண்டுகளாக சாப்பிட்டு வருகிறேன் ” என்றார் . “அதன் விளைவாக ஆவாரம்பூவில் உள்ள  தங்கச் சத்து எமது உடலில் ஊறி உடல் இப்படி மாறியது ” என்றார் .அவ்வளவு  சிறப்பு வாய்ந்த மூலிகை இந்த ஆவாரம்பூ .

” ஆவாரை பூத்திருக்க சாவாரைக் கண்டதுண்டோ என்று முது மொழி உண்டு  ” ஆவாரை பொதுவாகவே ஒரு காய கற்ப மூலிகை.அதன் சிறப்புக்களையும் உபயோகிக்கும் முறைகளையும் காண்போம்.

ஆவாரம்பூ

தங்கமேனவே சடத்திற்கு காந்தி தரு

மங்காத நீரை வறட்சிகளை – யங்கத்தா

மாவைக் கற்றாழை மணத்தை யகற்றிவிடும்

பூவைச் சேராவாரம் பூ

– ( பதார்த்த குண விளக்கம் )-

குணம்:-ஆவாரம்பூ பிரமேக  நீர் , வறட்சி , உடம்பிற் பூத்த உப்பு , கற்றாழை நாற்றம் இவைகளை நீக்கும் . தேகத்திற்குப் பொற்சாயலைத் தரும் .

செய்கை:-ங்கோசனகாரி, சமனகாரி

உபயோகிக்கும் முறை:- ஆவாரம் பூவை நன்றாய் அலம்பி பச்சைப் பயறுடன் ,கூட்டி பாகப்படி கூட்டமுது செய்து உண்பது  வழக்கம் . இதனால் மது மூத்திரம் , இரத்த மூத்திரம் , பெரும்பாடு  ( பெண்களுக்கு ஏற்படும் பெரு உதிரப் போக்கு (அதாவது மாதாந்திர விலக்கு மட்டில்லாமல் உதிரமாகப் போவது  ) பெண்களுக்கு ஏற்படும் வியாதிகளில் இது உயிரையும் கொல்லும் என்பதால் இதற்கு பெரும்பாடு என்று சித்த வைத்தியத்தில் அழைப்பர் ) , உட்காங்கை , தாகம்  இவைகள் போகும் .

இன்னும் நிழலில் இதழ்  இதழாக சீலையில் போட்டு வதங்கி வரும் சமயம் புஷ்பத்தை எடுத்து  இரண்டு எடைசீனாக் கற்கண்டு போட்டு ஆட்டி வழித்து எடுக்க குல்கந்து போலிருக்கும் , இத்துடன் போதிய அளவு அப்பட்டமான தேன் கூட்டி கலந்து  பிசைந்து சில தினம் ரவியில் வைத்து வேளைக்கு 1/4பலம்அளவிற்கு (ஒரு பலம் என்பது 35 கிராம்) தினம் இரண்டு வேளை சாப்பிட்டு வர அதிக நன்மையைத் தரும் . இந்தப் பூவை உலர்த்தி வேளைக்கு கால் பலம் கியாழமிட்டு பால் சர்க்கரை கூட்டி  காப்பி போல் சாப்பிடுவதுண்டு . இதனால் நீரிழிவு , உட்சூடு ,நீர்க்கடுப்பு  ,முதலியவைகள்குணமாகும்.

இந்தப் பூவை உலர்த்தி நலுங்கு மாவுடன் கூட்டி தேய்த்து ஸ்நானம் செய்து வர கற்றாழை நாற்றம் ,உடம்பில் உப்பு பூத்தலை நீக்கும் . இன்னும் நல்ல தேகத்தை தரும்.

ஆவாரை

சொல்லுதற்கு மட்டோ தொலையாத மேக நீர்

செல்லா மொழிக்கு மெரிவகற்று – மேல்லவச

மாவாரை பம்பரம் போலாட்டுந் தொழிலணங்கே!

யாவாரை மூலி யது

– ( பதார்த்த குண விளக்கம் )-

குணம்:-ஆவாரைச் செடியானது  சர்வப் பிரமேக மூத்திர ரோகங்களையும் , ஆண் குறி எரி  வந்தததையும் குணமாக்கும் .

செய்கை:-ங்கோசனகாரி, வித்திற்கு காம விர்த்தினி

உபயோகிக்கும் முறை:-அரைப்பலம் ஆவாரம் பட்டையை நன்றாய் இடித்து ஒரு மட்கலயத்தில் போட்டு முக்கால் படி சலம் விட்டு அடுப்பில் வைத்து சிறுக எரித்து , வீசம் படியாக சுண்டக் காய்ச்சி வடிகட்டி , தினம் இரு வேளை 1 1/ 2 , அவுன்ஸ் ( 45 மில்லி லிட்டர் ) வீதம் கொடுத்து வர மது மேகம் (சர்க்கரை நோய் ) , ரத்த மூத்திரம் (ரத்த வெட்டை ), பெரும்பாடு( பெண்களுக்கு ஏற்படும் பெரு உதிரப் போக்கு (அதாவது மாதாந்திர விலக்கு மட்டில்லாமல் உதிரமாகப் போவது  ) பெண்களுக்கு ஏற்படும் வியாதிகளில் இது உயிரையும் கொல்லும் என்பதால் இதற்கு பெரும்பாடு என்று சித்த வைத்தியத்தில் அழைப்பர் ) ,இவைகள் போகும் .

இத்துடன் இதர சரக்குகளை கூட்டி லேகியமாகவும்  ,  சூரணமாகவும் , கியாழமாகவும் கொடுப்பது உண்டு . அவற்றுள் சில முறைகளாவன

ஆவாரைப் பஞ்சக சூரணம்

ஆவாரையிலை , ஆவாரம்பூ , ஆவாரம் பட்டை , ஆவாரம் வேர் , ஆவாரங்காய் வகைக்கு வகைக்கு வராகனெடை 4 ,கடலைழிஞ்சிப்பட்டை, மருத மரப்பட்டை , நாவல் மரப்பட்டை  , தண்ணீர் விட்டான் கிழங்கு , பாதிரி வேர் , வகைக்குப் பலம் 2 , மரமஞ்சள் , கல்நார் வகைக்குப் பலம் ஒன்று , குரோசாணி ஓமம்  பலம் கால் , ஆகிய இவற்றை இடித்துச் சூரணம் செய்து வைத்துக் கொள்க . வேண்டும் போது வேளைக்கு  1 தோலா நிறையுள்ள சூரணத்தை கால் படி சலத்தில் போட்டு அரைக்கால் படியாக சுண்டக் காய்ச்சி வடிகட்டி தினம் 2 வேளை சிறிது சர்க்கரை கூட்டிக் கொடுத்து வர மது மேகம் (சர்க்கரை நோய் )  , தேக  காங்கை ( சர்க்கரை நோயாளர்களுக்கான உடல் , கை கால்களில் ஏற்படும் எரிச்சல் ) , அதீத   தாகம் , முதலியவைகள் நீங்கும் . இன்னமும் இக்கியாழம் நாவிற்கு ருசியாக  இருக்க வேண்டின் சிறிது நாட்டுப்  பசுவின்   பாலையும் கூட்டிக் கொள்ளலாம் . இதனால் இதன் குணங் கெடாது .

மேற்கண்ட ஆவாரைப் பஞ்சாங்கமும் , ஆவாரம் பூவும்  மச்சமுனி சிறப்பு மது மேகச் சூரணத்திலும்  , சாதாரண  மது மேகச் சூரணத்திலும் சேர்க்கப்படுகிறது . இவை இரண்டிற்கும் நீங்கள் நாட வேண்டிய முகவரியும் , மின்னஞ்சல் முகவரியும், அலைபேசி  எண்ணும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது .

திரு அமீர் சுல்தான்.

மின்னஞ்சல்  :-

machamunimooligaiyagam@gmail.com

அலைபேசி எண் :- 9597239953

பதிவு பெரிதாகப் போவதால் அடுத்த பதிவான  சர்க்கரை வியாதியை குணமாக்கலாம்(பாகம் 12) ல் தொடரலாம்.

30 responses to “சர்க்கரை வியாதியை குணமாக்கலாம் ( பாகம் 11 ) ஆவாரம்பூ ஒரு அற்புத மூலிகை”

 1. Anantha Kumar says:

  Dear Iyya,
  This is very useful information for those who are intaking the diabetes tablets. I am start to using the madumega suranam since last 30days in morning before food and now I can feel a bit good difference, but not complete cure. I will update you the effectiveness of the suranam after consuming 3 months. I hope this would be alternative for sugar tablets. Thank you very much.

  Anantha Kumar
  Australia

  • machamuni says:

   அன்புள்ள திரு Anantha Kumar,Australia அவர்களே,
   உங்களது கருத்துரைக்கு நன்றி,
   முதலில் சர்க்கரை நோய் என்பது நோயே அல்ல .அது சீரண சக்திக் குறைபாடே தவிர வேறில்லை.எனவே பல ஆண்டுகளாக நீங்கள் ஓய்வு ஒழிச்சல் இல்லாது வேலை பார்த்து வந்த உங்கள் சீரண மண்டலத்துக்கு அவ்வப்போது ஒய்வு அளிப்பது அவசியம் .லங்கணம் பரம ஔஷதம் என்பார்கள் .அதற்கு பட்டினியே சிறந்த மருந்து என்று பொருள். இது பற்றி நாம் எழுதியுள்ள சர்க்கரை நோயை குணமாக்கலாம் பதினோரு பாகங்களையும் படியுங்கள்.அத்துடன் திருவள்ளுவர் காட்டும் மருந்து என்னும் தலைப்பில் எழுதியுள்ள பதிவையும் படியுங்கள் . அதன் இணைப்பை கீழே கொடுத்துள்ளோம் . அந்தப் பதிவையும் படியுங்கள் .
   http://machamuni.com/?p=581
   சித்த மருந்துகளை உபயோகிக்க ஆரம்பித்த உடன் குணம் கிடைத்து விடாது .ஆங்கில மருந்துகளை உபயோகித்து இருந்தால் குணமாக்கல் சற்று தாமதமாகும் . ஏனெனில் அவற்றின் விஷத்தன்மை கல்லீரலிலும் , மண்ணீரலிலும் தேக்கப்பட்டு இருப்பதால் அவை வெளியேறும் வரை வியாதியின் அறிகுறிகள் தெரியும்.ஏனெனில் சீரணம் என்பது வயிறு , கல்லீரல் , மண்ணீரல் , சிறு குடல் இவற்றின் ஒட்டு மொத்த இயக்கமேயாகும்.எனவே மருந்துடன் நாம் குறிப்பிடும் பல ஆலோசனைகளில் சிலவற்றையும் சேர்த்து பின்பற்றினால் உங்கள் வியாதி விரைவில் குணமாகும்.குறைந்த பட்சமாக ஆறு மாதங்கள் மருந்துகளை தொடர்ந்தால் நலம் பிறக்கும் .
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

   • Anantha Kumar says:

    Dear Iyya,

    Thanks for your clear explanation.
    Can stop to use the madumega suranam after 6months? I feel some good improvements when not to drink while eat before and after 30 minutes as well.
    I was suffered type 2 diabetics since last 2years and I consumed pills for a month only. I realised that a lot of side effects when I intake allopathic medicines and I decided not to use such a kind of poisons by grace of God. I have been already gone through your articles, that was really excellent. Soon, I will post my comments in Tamil and I know that you are not comfortable to answer those who post in English.

    Anantha Kumar.
    Australia.

    • machamuni says:

     அன்புள்ள திரு ஆனந்த் குமார் அவர்களே,
     உங்களது கருத்துரைக்கு நன்றி,
     உங்களுக்கு மேலும் விபரமாகச் சொல்வது என்றால் அது ஒரு கட்டுரையாகவே முடியும். இது பற்றி விரிவாக மற்றும் விளக்கமாக நாம் எழுதிய சர்க்கரை நோயை குணமாக்கலாம் பதினோரு பாகப் பதிவுகளையும் படியுங்கள் .
     என்றென்றும் பேரன்பினால்
     சாமீ அழகப்பன்

     • Anantha Kumar says:

      Dear Iyya,

      Thanks for your clarification.
      Can you please email your mobile number to my id? I need to discuss with you regarding my kids health issues which I cannot post here.
      Thanks in advance.

      Regards,
      Anantha Kumar.

     • machamuni says:

      அன்புள்ள திரு ஆனந்த் குமார் அவர்களே,
      உங்களது கருத்துரைக்கு நன்றி,
      உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு எமது அலைபேசி எண் அனுப்பப்பட்டுள்ளது .
      இப்படிக்கு
      என்றென்றும் பேரன்பினால்
      சாமீ அழகப்பன்

  • machamuni says:

   அன்புள்ள திரு jac Sekar அவர்களே,
   உங்களது கருத்துரைக்கு நன்றி,
   மிக்க நன்றி
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 2. jagadeesan says:

  ஐயா
  எனது மனைவிக்கு low bp உள்ளது. அவர்களுடைய வயது 32
  இதற்கு குணமாக மருந்துகள் கூறுங்கள்
  நன்றி
  உங்கள்
  ஜெகதீசன்

  • machamuni says:

   அன்புள்ள திரு ஜெகதீசன் அவர்களே,
   உங்களது கருத்துரைக்கு நன்றி,
   அதிக இரத்த அழுத்தம் , குறைந்த இரத்த அழுத்தம் இரண்டுமே கல்லீரல் , மண்ணீரல் ஆகியவற்றில் குறைபாட்டைக் காட்டுகிறது .கல்லீரல் , மண்ணீரல் ஆகியவற்றில் வெப்பம் அதிகமாக உள்ளது என்றும் பொருள் .எனவே அந்த உள்ளுறுப்புக்களில் உள்ள வெப்பத்தைத் தணிக்க மச்ச முனிவரின் மருந்தகத்தின் ஈரல் காப்பான் சூரணம் நல்ல பலன் தரும்.தினமும் பேரீச்சம்பழமும் , அத்திப் பழமும் தினமும் எடுத்துக் கொள்ளச் சொல்லுங்கள்.ஆங்கில மருந்துகளை அறவே எடுக்காது தவிர்க்கச் சொல்லுங்கள் .அவை கல்லீரல் , மண்ணீரல் ஆகியவற்றை அதிகம் கெடுக்கும்.
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 3. Kindly clarify my doubt, Normally Sarakonnai poov is used to be keept for Vishu kanni, is it the same claimed by u as avaram poov, can u pl explain & put the photo of the tree/plant.

  • machamuni says:

   அன்புள்ள திரு Ing.R.Gopalakrishnan,BE,MS(Fr) அவர்களே,
   உங்களது கருத்துரைக்கு நன்றி,
   சரக் கொன்றைப் பூ என்பதும் , தங்க நிறத்தைக் குறிப்பதே , தங்க நிறமுள்ளவை அனைத்தும் தங்கச் சத்துள்ளவைகளே , அது போலவே பொற்றலைக் கையான், பொன்னாவாரை என்பதும் தங்கச் சத்துள்ளதே ! எனவே தங்கத்துடன் இவற்றையும் அல்லது இவற்றுள் ஏதாவதொன்றையோ வைப்பது பழங்கால வழமையாகும் .
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 4. jagadeesan says:

  மிக்க நன்றி ஐயா
  உங்கள்
  ஜெகதீசன்

  • machamuni says:

   அன்புள்ள திரு ஜெகதீசன் அவர்களே,
   உங்களது கருத்துரைக்கு நன்றி,
   இப்படிக்கு
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 5. dilipraj says:

  sir,
  request u to transalate in english about the diabetics treatment & also regarding stones in gall blader, kidneys or any other way to know the ways / sites

  • machamuni says:

   அன்புள்ள திரு திலீப்ராஜ் அவர்களே,
   உங்களது கருத்துரைக்கு நன்றி,
   மன்னிக்கவும் . தமிழ் தவிர வேற்று மொழியில் எழுத மாட்டோம் . யாம் புகழ் பெறவோ , மற்றவர்கள் பயன் பெறவோ எழுதவில்லை . இறை கட்டளை எழுதுகின்றோம் . எவராக இருந்தாக இருந்தாலும் எம் தெய்வ மொழியான தமிழ் பயின்று தெரிந்து கொள்ளட்டும்.தமிழில் எமது வலைத்தளத்தில் தேடுங்கள் .தகவல்கள் கிடைக்கும் .
   இப்படிக்கு
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 6. irsath says:

  அய்யா சர்க்கரை நோயளிகள்கள் நாட்டு சர்க்கரை, வெல்லம் எடுத்துக்கொள்ளலாமா

  • machamuni says:

   அன்புள்ள திரு irsath அவர்களே,
   உங்களது கருத்துரைக்கு நன்றி,
   ஆம் .நாட்டு சர்க்கரை, வெல்லம் எடுத்துக் கொள்ளலாம் .
   இப்படிக்கு
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 7. dr.m.kanakaraj says:

  வணக்கம் ,
  நலம் நலமே விழைக ,
  இங்கு பதில் எழுதும் போது (பதிவு இடுகையில் )படங்களை இணைக்க முடியவில்லை எதனால் ? எப்படி இணைப்பது தெரிவிக்கவும் ? நன்றி

  • machamuni says:

   அன்புள்ள திரு dr.m.kanakaraj அவர்களே,
   உங்களது கருத்துரைக்கு நன்றி,
   படங்களை இணைக்கும் வசதி செய்யப்படவில்லை.
   இப்படிக்கு
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 8. irsath says:

  அய்யா அமீர் சுல்தான் அவர்களிடம் சிறப்பு மது மேகச் சூரணத்தை வாங்கி விட்டேன் பத்தியம் என்னவேன்று கூறவும்

  • machamuni says:

   அன்புள்ள திரு irsath அவர்களே,
   உங்களது கருத்துரைக்கு நன்றி,
   திரு அமீர் சுல்த்தான் அவர்களை தொடர்பு கொள்ளவும்.
   இப்படிக்கு
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 9. செல்வன் says:

  ஆவாரம்பூவை அப்படியே பறித்து சாப்பிடலாமா? அதனால் கெடுதல் உண்டா பயன்கள் என்ன?

  • machamuni says:

   அன்புள்ள திரு செல்வன் அவர்களே,
   உங்களது கருத்துரைக்கு நன்றி,
   அப்படியே பறித்து தண்ணீரில் அலசிய பின் சாப்பிடலாம்.ஏனென்றால் அவற்றில் புழு இருக்கலாம்.அதை நீக்கிய பின்னர் சாப்பிடலாம். ஆவாரம் பூ பற்றிய பலன்களில் சொல்லிய அனைத்தும் அதற்கும் ஆகும்.ஆனால் உங்கள் உடம்பு சீதள தேகமாக இருப்பதால்,முன் தலைப் பாரம் இருப்பதாகக் கூறி உள்ளீர்கள்.எனவே ஆவாரம் பூவை பச்சையாக சாப்பிடும் போது தொண்டைக் கம்மல் ஏற்படலாம் . எனவே நீங்கள் மட்டும் தவிர்க்கவும்.
   இப்படிக்கு
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 10. செல்வன் says:

  எனக்கு எப்பொழுதும் முன்தலைபாதி பாரமாக உள்ளது. அதை போக்க மருந்து கூறுங்கள் ஐயா

  • machamuni says:

   அன்புள்ள திரு செல்வன் அவர்களே,
   உங்களது கருத்துரைக்கு நன்றி,
   சிரோபார நிவாரணித் தைலம் காலையில் தேய்த்து அரை மணி நேரம் சென்று குளிக்கவும்.உள்ளுக்கு மச்ச முனி கப நோய் நிவாரணிச் சூரணம் மாலை ஒரு வேளை மட்டும் வேந்நீரில் சாப்பிடவும்.இரவில் நீர்க்கோவை மாத்திரையை வெற்றிலைச் சாற்றில் குழைத்து நெற்றியிலும் நெற்றிப் பொட்டுகளிலும் போட்டு காலையில் குளிக்கும் போது கழவி விட வேண்டும்,முன் தலைப் பாரம் நீங்கும்.
   இப்படிக்கு
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 11. anandan says:

  கால் விரல்கள் மரத்து போய் விட்டது சம்பந்தமாக கேள்வி அனுப்பி இருந்தேன் பதில் கிடைக்குமா

  • machamuni says:

   அன்புள்ள திரு ஆனந்தன் அவர்களே,
   உங்களது கருத்துரைக்கு நன்றி,
   விரைவில் பதில் கிடைக்கும்.
   இப்படிக்கு
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 12. greesh says:

  அய்யா ,
  தங்களின் வலைபகுதியை இன்று தான் முதலில் பார்வையிட்டேன்..
  நிஜமாகவே இன்னும் இந்த உலகில் சுயநலம் இல்லாத ஆத்மாக்கள் வாழ்ந்து கொண்டு இருகிறார்கள் என்பதை உங்களின் வாயிலாய் அறிந்து கொண்டேன்.. மகிழ்ந்து அந்த பரம்ஜோதிக்கு நன்றி நவில்கிறேன்.. தமிழ்நடையில் தான் பதில் அளிப்பேன் என்னும் உறுதி சித்தனுக்கும் தமிழுக்கும் தமிழுக்காய் உயிர் நீத்து வாழ்ந்த அத்துணை தமிழனுக்கும் கிடைத்த ஒரு திமிரான பெருமை .. உங்களின் சேவை உள்ளம் வாழட்டும்.. ஹெர்பல் கண்ணன் அவர்களின் சேவையும் பெருகட்டும் …இறைவனின் அருளால்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

− 1 = 6