ஓர் அரிய அஷ்ட கர்ம மூலிகை பேய் மிரட்டி என்னும் இரட்டைப் பிரமட்டை

June 23, 2014 by: machamuni

ஓர் அரிய மூலிகை அஷ்ட கர்ம மூலிகைகளில் ஒன்றான பேய் மிரட்டி என்னும் இரட்டைப் பிரமட்டை என்னும் பெருந்தும்பை

பேய் மிரட்டிபேய் மிரட்டி

மாந்தக  கணங்கழிச்சல் மாறா வயிற்றுவலி

சேர்த்து வரும் கரப்பான் றீச்சுரமும் – பேர்த்துவிடும்

வேய்மிரட்டுந்  தோலுடைய மெல்லியலே ராசியமாய்

பேய்மிரட்டி என்றொருகாற் பேசு

– ( பதார்த்த குண விளக்கம் )-

குணம்:- பேய்மிரட்டியினால் கணமாந்தம் , பேதி , வயிற்று நோய் , கரப்பான் , கோர சுரம் , ஆகிய இவைகள் போம் என்க.

( இதுவுமது )

ஏக்கமுறு கழிச்சல் மாந்த சுரம்

வீக்கம் வயிற்று வலி விட்டோடும் -தாக்குகின்ற

பேய்மிரட்டும்  பாதகமும்  பேருலகில் அஞ்சிவிடும்

பேய்மிரட்டி நற்குணத்தைப் பேசு

– ( பதார்த்த குண விளக்கம் )-

( இ – ள் ) பேய்மிரட்டி பூண்டால் கழிச்சல் ,  மாந்த சுரம் , வீக்கம் , வயிற்று வலி , பேய் மிரட்டு என்னும் படியான கிரக தோஷம் முதலியவைகள்  போம் என்க .

செய்கை:- சங்கோசனகாரி , ஜடராக்கினி வர்த்தினி , உதர வாத ஹரகாரி , சுவேதகாரி , சுர ஹரகாரி , அங்காகர்ஷண நாசினி .

உபயோகிக்கும் முறை:-பேய்மிரட்டிச் சமூலம் கசப்புச் சுவையுள்ளது . இதைக் கியாழமிட்டுக் கொடுக்க வாந்தி பேதி , இருமல் ,  சீத சுரம் இவைகள் போம் . ஒரு பலம் சமூலத்தை தட்டி ஒரு மண் குடுவையில் போட்டு அரைப்படி ஜலம் விட்டு , அரைக்கால் படியாக சுண்டக் காய்ச்சி வடிகட்டி  வேளைக்கு  அரை அவுன்ஸ் வீதம் தினம் இரண்டு வேளை கொடுக்கலாம் அல்லது கால் ரூபாய் எடை ஓமத்தையும் , கால் ரூபாய் எடை மிளகையும் ஒரு புதுச் சட்டியில் போட்டு அடுப்பிலேற்றி வறுத்து கரியான சமயம்  கால் படி ஜலம் விட்டு ஒரு பலம் பேய் மிரட்டி இலையை   குறுக அரிந்தது போட்டு காலில் ஒன்றாக குறுக்கிக் காய்ச்சி வடிகட்டி வேளைக்கு அரை அவுன்ஸ் வீதம் தினம் இரு வேளை கொடுக்கலாம் .இத்தகைய கியாழங்கள் குழந்தைகளுக்கு பல் முளைக்கும் சமயம் காணுகின்ற பேதியை குணப்படுத்த இன்றியமையாதது ஆகும் .இதன் சமூலத்தை ஒரு பெரிய பாண்டத்தில் போட்டு ஜலம் விட்டு கொதிக்க வைத்து  வேது பிடிக்க ( ஆவி பிடிக்க ) சுரம் தலைவலி போகும் .

குறிப்பு இந்த இனத்தின் இலை நீளமாக இருப்பதை இரட்டைப் பேய் மிரட்டி  , இலை வட்டமாக இருப்பதை ஒற்றைப் பேய் மிரட்டி என்றும் கூறுவது உண்டு. இவைகள் முறையே ஆண் பெண் என்று கருதப்படுகின்றன . ஆண் பிள்ளைகளுக்கு காணுகின்ற நோய்களுக்கு பெண் இலையும் பெண்களுக்கு காணுகின்ற  நோய்களுக்கு ஆண் இலையும் சிகிச்சைக்கு ஏற்றது என்பது சில அறிவாளர்களின் கருத்து . பேய் பூத கண தோஷங்களுக்கு வேப்பிலையைக் கொண்டு மந்திரித்து  அடிப்பதைப் போல் , பேய் மிரட்டி இலைகளையும் கத்தையாக கட்டிக் கொண்டு அடிப்பது நாட்டு வழக்கம் ஆகையாற்றான்  பேய் மிரட்டி என்று கூறப்படுகிறது .

பேய்மிரட்டியிலை 

 வெள்ளெடுப்பு சீதம் வெதும்பல் சுரத்துடனே

யள்ளடுக்கு  மாந்த மதிவாதந் – தெள்ளு மொழி

மாதே வெதுப்படக்கி வன்றழையுற் காய்ச்சலோடு

கோதேறி ரத்தமும் போக்கும் .

– ( பதார்த்த குண விளக்கம் )-

குணம்:-வெதுப்படக்கி என்னும் பேய்மிரட்டி இலையானது வெளுப்பான பேதி , சிலேஷ்ம கிரகணி , தாபம் , ருட்சை , அள்ளு மாந்தம் , வாதாதிக்கம் , உட்சுரம் , ரத்த தாதுவிலுண்டான  மலினம்  ஆகிய இவைகளைப் போக்கும் என்க .

செய்கை:-சங்கோசனகாரி , ஜடராக்கினி வர்த்தினி , உதர வாத ஹரகாரி , சுவேதகாரி ,

சுர ஹரகாரி

உபயோகிக்கும் முறை:-இதன் உபயோகம் முற்கூறப்பட்ட சமூலத்திற்கு உரித்தானது .

பேய்மிரட்டி இலையை  பச்சையாகவே எடுத்து திரி  போற் திரித்து நல்லெண்ணெய் , நெய் , ஐங்கூட்டு எண்ணெய் போன்றவை ஏதாவதொன்றில் போட்டு வீட்டில் விளக்கேற்றி வர ஏவல் , பில்லி சூனியம் , பேய் , பூதம் , குடும்ப ஒற்றுமை இல்லாத தன்மை ,  இவற்றை நிவாரணம் செய்யும் . கீழே  பேய்மிரட்டி இலையை  பச்சையாகவே எடுத்து திரி  போற் திரித்து விளக்கேற்றும் காணொளிக்காட்சியைக் காணலாம் .இதிலிருந்து வெளிப்படும்  அகச் சிவப்புக் கதிர்கள் சுவர்களையும் தாண்டி ஊடுருவிச் சென்று  வீடு முழுவதும் மட்டுமல்ல , நம் தெரு வரையும்  பரவி நன்மை அளிக்க வல்லது .

இதில் விளக்குகள் எரியும் போது அதில் இருந்தது ஒரு தனி வகையான ஒளிக்கற்றைகள் வருவதைக் காணுங்கள் . இவை அகச்சிவப்புக் கதிர்கள் அலைவரிசையில் இருக்கின்றன . நெய் விளக்கில் ஒரு அலைவரிசையும் எண்ணெய் விளக்கில்  ஒரு அலைவரிசையும் வெளிப்படுவதைக் காணலாம் .இவை கீழே உள்ள விளக்கத்தால் அறியலாம் .

இதோ கீழே உள்ள படத்தில் காணப்படுவது அகச் சிவப்புக் கதிர்களை  அனுப்பும் கருவி சாலையில்  அறையப்பட்டுள்ளது .  அகச் சிவப்புக் கதிர்கள் கண்ணுக்குப் புலனாகாமல் காமிராவில் மட்டும் தெரிவது .தரையை ஊடுருவிச் செல்வது .மெட்ரோ ரயில் அமைக்க தரைக்கு கீழே தோண்டும் கருவியை வைத்து தோண்டிக் கொண்டு வரும் பாதையை இப்படித்தான் கீழே தோண்டும் வாய்க்கால் தோண்டும் ( TUNNEL BORING MACHINE ) இயந்திரத்துக்கு  வழி காட்டப்படுகிறது .

infra red ray guiding tool

இப்படி கீழே தோண்டும் வாய்க்கால் தோண்டும் ( TUNNEL BORING MACHINE ) இயந்திரத்துக்கு  அகச் சிவப்புக் கதிர்களால் வழி காட்டப்படுவதைக் கீழே உள்ள காணொளிக்காட்சிகளின் மூலம்  காணலாம் .

 

இந்த ஓர் அரிய மூலிகைபேய் மிரட்டி என்னும் இரட்டைப் பிரமட்டை  மற்றும் ஐங்கூட்டு எண்ணெய்க்கு நீங்கள் நாட வேண்டிய மின்னஞ்சல் முகவரி

சதுரகிரி ஹெர்பல்ஸ் திரு கண்ணன் அவர்கள் தற்போதைய புதுப்பிக்கப்பட்ட முகவரி மற்றும் அலைபேசி எண் மற்றும் அவரது தொலைபேசி எண்கள் ஆகியவற்றை கீழே காண்க.

+919943205566

+914563282222

+919750806594

+919894912594

அவரது முகவரி:-

திரு பெ.கண்ணன்,

சதுரகிரி ஹெர்பல்ஸ்,

2/159, மங்கம்மாள் கோவில் தெரு,கான்சாபுரம்,(P-O)

திரு வில்லிபுத்தூர் தாலுகா,விருதுநகர் மாவட்டம்.

 

மின்னஞ்சல் முகவரி

herbalkannan@gmail.com

30 responses to “ஓர் அரிய அஷ்ட கர்ம மூலிகை பேய் மிரட்டி என்னும் இரட்டைப் பிரமட்டை”

 1. shareef says:

  சாமிஜி
  முதற்கண் உங்கள் உழைப்புக்கு நன்றி
  விஞ்ஞான முறையில் நிருபணம் செய்தமை மிக அருமை
  இது ஆண் மூலிகை
  பெண் மூலிகை எப்படி இருக்கும் சாமிஜி
  நன்றி
  ஷரீப்
  நன்றி சாமிஜி

  • machamuni says:

   அன்புள்ள திரு ஷரீப் அவர்களே,
   உங்களது கருத்துரைக்கு நன்றி,
   பெண் மூலிகை இலையின் நுனிப்பகுதி வட்டமாக இருக்கும்.
   இப்படிக்கு
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 2. shareef says:

  சாமிஜி
  பேய்விரட்டி மூலிகையை(white sage) வெளிநாடுகளில்
  புகை போட்டு தீய சக்திகளை விரட்ட பயன்படுத்துகின்றனர்

  நன்றி
  ஷரீப்

  • machamuni says:

   அன்புள்ள திரு ஷரீப் அவர்களே,
   உங்களது கருத்துரைக்கு நன்றி,
   நம் நாட்டிலும் அந்தப் பழக்கம் உண்டு.அதை இரவல் பெற்றுத்தான் வெளிநாடுகளில் உபயோகித்து வருகிறார்கள்.பேய் மிரட்டியை சாம்பிராணியுடன் சேர்த்து புகை போடுவார்கள் .இதனால் செய்வினை , ஏவல் , பில்லி சூனியம் , பூதம் , பேய் தொல்லைகள் அகலும் .
   இப்படிக்கு
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 3. shareef says:

  //இதிலிருந்து வெளிப்படும் அகச் சிவப்புக் கதிர்கள் சுவர்களையும் தாண்டி ஊடுருவிச் சென்று வீடு முழுவதும் மட்டுமல்ல , நம் தெரு வரையும் பரவி நன்மை அளிக்க வல்லது .//

  இந்த பலன் நமது வீட்டிற்கு மட்டுமா
  அல்லது நமது தெருவில் உள்ள அ(ந)ன்பர்களின் வீட்டிற்கும்
  கிடைக்குமா ?

  நன்றி
  ஷரீப்

  • machamuni says:

   அன்புள்ள திரு ஷரீப் அவர்களே,
   உங்களது கருத்துரைக்கு நன்றி,
   நல்லவர்களுக்கு நல்லது செய்யும் .தீமை செய்யும் மற்றவற்றை அழிக்கவும் செய்யும் .
   இப்படிக்கு
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 4. J.Senthilkumar says:

  அன்புள்ள ஐயா

  தங்களது புதிய பதிவு மிகவும் அருமை ஆக இருந்தது காணொளிக்காட்சியும் விளக்கமும் மிக தெளிவாக உள்ளது உங்களது அருமையான சேவை தொடரட்டும்
  இப்படிக்கு என்றும் அன்புடன்
  ஜெ .செந்தில்குமார்
  லண்டன்

  • machamuni says:

   அன்புள்ள திரு ஜெ .செந்தில்குமார்
   லண்டன் அவர்களே,
   உங்களது கருத்துரைக்கு நன்றி,
   இப்படிக்கு
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 5. shareef says:

  பெண் மூலிகை படம் இணைக்க முடியுமா சாமிஜி

  நன்றி
  ஷரீப்

  • machamuni says:

   அன்புள்ள திரு ஷரீப் அவர்களே,
   உங்களது கருத்துரைக்கு நன்றி,
   செய்வோம்.
   இப்படிக்கு
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 6. Jaymanika says:

  அன்புள்ள ஐயா
  தங்கள் பதிவிற்கு நன்றி.
  பேய்மிரட்டி whitesage என்பதைத் தெரிவித்த திரு.ஷெரிப் க்கும் நன்றி.
  அன்புடன்
  Jaymanika

  • machamuni says:

   அன்புள்ள திரு Jaymanika அவர்களே,
   உங்களது கருத்துரைக்கு நன்றி,
   இப்படிக்கு
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 7. Saravanan says:

  மச்சமுனி ஐயா அவர்களுக்கு வணக்கம்.
  என் பெயர் சரவணன். எனக்கு வலதுகை பெருவிரல் நகத்தின் கீழ் பகுதியில் சிறிது அழுத்தினாலேயே அதிகம் வலிக்கிறது. ஒருசில நாட்களில் நான் அழுத்தாவிட்டாலும் தானாகவே வலிக்கிறது. இந்த வலி 4 வருடங்களாக இருக்கிறது. இது உடலின் ஏதாவது ஒரு பாதிப்பின் அறிகுறியா? அக்குபஞ்சரில் இதற்கு தீர்வு உண்டா?
  நன்றி ஐயா.

  இப்படிக்கு என்றும் அன்புடன்,
  சரவணன்.
  agilasaran75@gmail.com

  • machamuni says:

   அன்புள்ள திரு சரவணன் அவர்களே,
   உங்களது கருத்துரைக்கு நன்றி,
   கை பெருவிரல் நகத்தின் கீழ் பகுதியில் அதிகம் வலிக்கிறது என்றால் உங்களுக்கு நுரையீரலில் பிரச்சினை உள்ளது என்று பொருள் .மச்ச முனி கப நோய் நிவாரணி வாங்கி சாப்பிட்டு வாருங்கள் . புகை பிடிக்கும் பழக்கம் இருந்தால் உடனடியாக விட்டுவிடுங்கள் .
   இப்படிக்கு
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 8. shareef says:

  மொபைல் காமிரா மூலம் எடுத்தாலும் அகச்சிவப்பு கதிர்கள்
  தென்படுமா ஜி?

  நன்றி
  ஷரீப்

  • machamuni says:

   அன்புள்ள திரு ஷரீப் அவர்களே,
   உங்களது கருத்துரைக்கு நன்றி,
   படம் எடுத்துப் பார்க்கவில்லை.பார்த்துவிட்டு வேண்டுமானால் தெரிவியுங்கள்.
   இப்படிக்கு
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 9. DR V.Sundar says:

  பேரன்புமிக்க சாமி அய்யா அவர்களுக்கு..
  டாக்டர் சுந்தரின் அன்பு வணக்கம் ..தங்களின் பதில் கிடைக்கபெற்றேன் ..மிக்க நன்றி..
  தங்களை சந்திக்க,பேச,என் ஆர்வம் அதிகரிக்கிறது..தங்களின் தொடர்பே என் குருநாதரின் அருளன்றி வேறில்லை ..தங்களின் கைபேசி எண் மற்றும் முகவரி கேட்டிருந்தேன் ,தயைகூர்ந்து தந்துதவ வேண்டுகிறேன்….காலம் கனிய காத்திருக்கிறேன்..
  என்றென்றும் அன்புடன்,
  டாக்டர் சுந்தர்.

  • machamuni says:

   அன்புள்ள திரு டாக்டர் சுந்தர். அவர்களே,
   உங்களது கருத்துரைக்கு நன்றி,
   உங்களுக்கு எமது தொலைபேசி எண் அனுப்பப்பட்டுள்ளது .
   இப்படிக்கு
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 10. lakshmi says:

  sir,
  could you pls say the botanical name of jothi vrutcham .

  • machamuni says:

   அன்புள்ள திரு லட்சுமி அவர்களே,
   உங்களது கருத்துரைக்கு நன்றி,
   முதலில் தமிழில் எழுதுங்கள்.தமிழில் எழுதாதவர்கள் மேல் எனக்கு மரியாதை ஏற்படுவதில்லை . நமது மூலிகைகளின் பெயர்களை ஆங்கிலத்தில் கூறுவதால், மேலும் மேலும் நமது மூலிகை பொக்கிஷங்களுக்கு நமக்கு நாமே வேட்டு வைத்துக் கொள்கிறோம் .
   இப்படிக்கு
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 11. hari says:

  மதிப்பிற்குரிய திரு சாமிஜி அய்யா அவர்களுக்கு வணக்கம்.
  இங்கு விளக்கில் தெரியும் இதே அகச்சிவப்பு வர்ணத்தை, சூரிய உதயம் ஆன சில நிமிடங்களில் காண முடிகிறது. அதற்கான ஆதித்ய ஹ்ருதயம் கானொளி காட்சி ஆதாரம் http://www.youtube.com/watch?v=EV4mrOcJQQg
  தங்களது விளக்கத்தினை தெரிந்துகொள்ள விரும்புகிறேன் அய்யா .நன்றி
  என்றும் அன்புடன் ஹரி

  • machamuni says:

   அன்புள்ள திரு ஹரி அவர்களே,
   உங்களது கருத்துரைக்கு நன்றி,
   சூரியனுடைய கதிர்களில் கண்ணுக்குப் புலப்படும் ஏழு நிறங்களும் ஏழு தேர்க் குதிரைகளாகக் காண்பிக்கப்பட்டுள்ளது . அது போக கண்ணுக்குப் புலப்படாத அகச்சிவப்புக் கதிர்களும் , புற ஊதாக் கதிர்களும் சிற்சில இடங்களில் பல மறைச் சொற்களில் (மறைத்து வைக்கப்பட்ட) சொற்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.அவற்றில் ஒன்றையே நீங்கள் குறிப்பிடப்பட்டுள்ள காணொளிக் காட்சியில் காண்பிக்கப்பட்டது .
   இப்படிக்கு
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 12. Respected Guruji.,

  kodana kodi nandigal guru.,

  thangalin entha karuthu pala thalamuraigalai kapatram udiviyuruku guru.,

  kodana kodi nandigal guru.,

  • machamuni says:

   அன்புள்ள திரு என் நேகா லட்சுமி அவர்களே,
   உங்களது கருத்துரைக்கு நன்றி,
   உங்களது வாழ்த்துரைக்கு மிக்க நன்றி,
   முதலில் தமிழில் எழுதுங்கள்.பொதுவாக தமிழில் எழுதாதவர்கள் மேல் எமக்கு மரியாதை ஏற்படுவதில்லை.
   உங்களது கணிணியின் இருப்பிட முகவரியும் (I.P ADDRESS) திரு குணசுந்தரி அவர்களது கணிணியின் இருப்பிட முகவரியும் (I.P ADDRESS) ஒன்றாக இருந்ததால் உங்களுக்கு சோதனை மின்னஞ்சல் அனுப்பி பதில் வந்தபின்னர் பதிலளிக்கிறோம்.சிலர் போலியான மின்னஞ்சல் முகவரியில் வருவதால் இந்த ஏற்பாடு . மேலும் கணிணியின் இருப்பிட முகவரியும் பதியப்படுவதால் (I.P ADDRESS) உங்களின் இருப்பிடம் பற்றிய தகவலும் எமக்கு வந்துவிடும்.இதன் மூலம் யாம் தெரிவித்துக் கொள்வது யாதெனில் ,போலியான பெயரிலும் , போலியான மின்னஞ்சலிலும் , போலியான இருப்பிட முகவரியும் (I.P ADDRESS) அடைப்படையாகக் கொண்டு வருபவர்களின் கருத்துரைகள் , பதிவு செய்யப்பட மாட்டாது , பதிலளிக்கப்படவும் மாட்டாது என்பதையும் மிகப் பணிவோடும் , கனிவோடும் , அன்புடனும் தெரிவித்துக் கொள்கிறோம்.ஏனெனில் காங்கேயத்திலிருந்து அப்படி ஒருவர் எழுதிக் கொண்டிருக்கிறார் .எம்மைப் பற்றி தவறான எண்ணம் கொண்டு எழுதுபவர்கள்,அவர்களுக்கே சொந்தச் செலவில் சூனியம் வைத்துக் கொள்கிறார்கள் என்று பொருள் . நாம் ஏற்றுக் கொள்ளாத எதுவும் நம்மைச் சேராதல்லவா??
   இப்படிக்கு
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 13. gunasundari says:

  thanks its great thanks a lot guru.,

  your website details will brought more families good life.,

  thank u very much.,

  • machamuni says:

   அன்புள்ள திரு குணசுந்தரி அவர்களே,
   உங்களது கருத்துரைக்கு நன்றி,
   உங்களது வாழ்த்துரைக்கு மிக்க நன்றி,
   முதலில் தமிழில் எழுதுங்கள்.பொதுவாக தமிழில் எழுதாதவர்கள் மேல் எமக்கு மரியாதை ஏற்படுவதில்லை.
   உங்களது கணிணியின் இருப்பிட முகவரியும் (I.P ADDRESS) திரு என் நேகா லட்சுமி அவர்களது கணிணியின் இருப்பிட முகவரியும் (I.P ADDRESS) ஒன்றாக இருந்ததால் உங்களுக்கு சோதனை மின்னஞ்சல் அனுப்பி பதில் வந்தபின்னர் பதிலளிக்கிறோம்.சிலர் போலியான மின்னஞ்சல் முகவரியில் வருவதால் இந்த ஏற்பாடு . மேலும் கணிணியின் இருப்பிட முகவரியும் பதியப்படுவதால் (I.P ADDRESS) உங்களின் இருப்பிடம் பற்றிய தகவலும் எமக்கு வந்துவிடும்.இதன் மூலம் யாம் தெரிவித்துக் கொள்வது யாதெனில் ,போலியான பெயரிலும் , போலியான மின்னஞ்சலிலும் , போலியான இருப்பிட முகவரியும் (I.P ADDRESS) அடைப்படையாகக் கொண்டு வருபவர்களின் கருத்துரைகள் , பதிவு செய்யப்பட மாட்டாது , பதிலளிக்கப்படவும் மாட்டாது என்பதையும் மிகப் பணிவோடும் , கனிவோடும் , அன்புடனும் தெரிவித்துக் கொள்கிறோம்.நாம் ஏற்றுக் கொள்ளாத எதுவும் நம்மைச் சேராதல்லவா??
   இப்படிக்கு
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 14. srinivasan says:

  very nice message sir nan thamizhan tamil type theriyathu sir

  • machamuni says:

   அன்புள்ள திரு ஸ்ரீநிவாசன் அவர்களே,
   உங்களது கருத்துரைக்கு நன்றி,
   இப்படிக்கு
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 15. கோபி says:

  அய்யா அவா்களுக்கு வணக்கம்!

  என் பெயர் கோபி நான் வேலூா் மாவட்டத்தில் வசித்து வருகிறேன். நான் பேய்மிரட்டி என்னும் இலையில் தீபம் ஏற்றி வருகிறேன் மிகவும் அருமையாக இருக்கிறது. இதை போல் பல முலிகை விளக்கங்களுடன் தெரியப்படுத்தவும்

  மிக்க நன்றி

  என் மின்னஞ்சல் ktgopijai@gmail.com

 16. MANIGANDAN says:

  RESPECTED SWAMIJI,
  SWAMY IAM MANIGANDAN FROM VELLORE VALLALAR
  IAM USING THIS HERBAL FOR PAST 15DAYS IAM SATISFIED
  I INTRODUCED FOR MANY PERSONS IN OUR COMPANY AND
  FRIENDS. YOURS DETAILS IMPROVED MORE FAMILIES FOR THEIR GOOD LIFE
  THANKS YOU VERY MUCH
  9865820647

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

6 + 1 =