சர்க்கரை வியாதியை குணமாக்கலாம் ( பாகம் 12 ) ஆவாரைப் பிசின் ஒரு அற்புத மூலிகை

June 9, 2014 by: machamuni

சர்க்கரை வியாதியை குணமாக்கலாம் ( பாகம் 11 ) ஆவாரம்பூ ஒரு அற்புத மூலிகை என்ற பதிவை படித்துவிட்டு இந்தக் கட்டுரையைத் தொடர்ந்து படிக்கவும் . அப்போ-துதான் தொடர்பு விட்டுப் போகாமல்  புரியும் .

ஆவாரம் பூ

ஆவாரைப் பிசின்

பெரு நீர் மறிக்கும் பிரமேகம் போக்கும்

வருநீர்ச் சுருக்குதனை மாற்றுந் – தருநீர்கை

பூணுமே னிக்கமலப் பொன்னே பிடகரெலாம்

பேணுமே காரிப் பிசின்

– ( பதார்த்த குண விளக்கம் )-

குணம்:-ஆவாரைச் செடியின் பிசினானது  வேகுமூத்திரத்தையும், பிரமேக ராகத்தையும் ,வாத கிரிச்சரத்தையும் போக்கும் .

செய்கை:-ங்கோசனகாரி

உபயோகிக்கும் முறை:- ஆவாரைப் பிசின் கிடைப்பது அரிது . ஏனென்றால் அதிலுண்டாகும் பிசினை எறும்புக் கூட்டங்கள் வந்து சிறிதும் விடாமல் தின்றுவிடும் .அப்படி அவைகளுக்கு இரையாகாமல் சர்வ ஜாக்கிரதையாக சேகரித்துக் கொண்டு வந்து பிசினை 2 – 3 குன்றி எடை தினம் 2 வேளை 2௦ – 40 நாள் பசுவின் பாலில் ( நாட்டுப் பசுவின் பாலில் மட்டுமே ) கலக்கிக் கொடுத்து வர விந்து நட்டம் , மது மேகம் ( சர்க்கரை வியாதி ) , தாகம்  , உட்காங்கை , முதலியவற்றிற்கு  இன்றியமையாத மருந்தாகும்.

இந்த பிசினை சேகரிப்பது என்பது பெரும் பிரயத்தனமானது ஏனெனில் ஆவாரைச் செடியின் வேரின் முண்டிலேயே  கருப்புக் கடி எறும்புகள் புற்றுக் கட்டி வைத்திருப்பதனால் பிசின் வெறியேறிய ஓரிரு நிமிடங்களில் இவை அவற்றைத் தின்றுவிடும் . எனவே அதற்குப் பதிலாக  முற்றிய ஆவாரைக் கட்டை மற்றும் வேர்க்குச்சிகளை ஊற வைத்து  , அந்த ஊறல் குடி நீரைக் குடித்து வர மேற்கண்ட அதே பலன்களைப் பெறலாம் . அந்தத் தண்ணீரில் ஆவாரைப் பிசின்  சத்து கரைந்திருப்பதால் சற்று பிசு பிசுப்புத் தன்மையுடன் இருக்கும் .ஒரு முறை ஊற வைத்த குச்சிகளை ஒரு வாரம் வரை உபயோகிக்கலாம் . அதன் சத்துக் குறைந்தவுடன் தண்ணீரில் அதன் பிசு பிசுப்புத் தன்மை  குறைந்தவுடன் வேறு குச்சிகளைப் போட்டு மீண்டும் ஊறல் குடி நீர் தயாரித்து , தினம் மூன்று வேளை குடித்து வர நோய்கள் நீங்கி , குறிப்பாக சர்க்கரை நோய் நீங்கி , சர்க்கரை நோயினால் சப்த தாதுக்களும் நலிந்த நிலை மாறி தாதுக்கள் வலுப்படுவதனால்   , உடல் பலமும் , உடல் நலமும் பெறலாம் .

மேற்கண்ட ஆவாரைத் தண்டின் பட்டையும்  , ஆவாரம் வேரின் பட்டையும்   மச்சமுனி சிறப்பு மது மேகச் சூரணத்திலும்  , சாதாரண  மது மேகச் சூரணத்திலும் சேர்க்கப்படுகிறது . இவை இரண்டிற்கும் நீங்கள் நாட வேண்டிய முகவரியும் , மின்னஞ்சல் முகவரியும், அலைபேசி  எண்ணும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது .

திரு அமீர் சுல்தான்.

மின்னஞ்சல்  :-

machamunimooligaiyagam@gmail.com

அலைபேசி எண் :- 9597239953

மச்ச முனி மூலிகையகம் என்பது , மச்ச முனி  வலைத் தள வாசகர்களாக இருந்த திரு அமீர் சுல்த்தான் அவர்கள் மற்றும் திரு ஸ்ரீதரன்  அவர்கள் ஆகியோரால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. பெரும் தனவந்தரான திரு அமீர் சுல்த்தான் அவர்கள் , மற்றும்  சமுதாய நலன் கருதும் திரு  ஸ்ரீதரன் அவர்கள் ஆகியோர்களின் தன்னலம்  கருதாத சேவையால் மச்ச முனி மூலிகையகம் நன்றாக வளர்ச்சி அடைந்து பலரது நோய்களைத் தீர்த்து வருகிறது . அவர்களுக்கு மேலும் சம்பாதிக்க வேண்டிய தேவையும் , அவசியமும் இல்லை . சமுதாயத்திற்கு தங்களால் ஆன சேவையை செய்ய கிடைத்த வாய்ப்பாக இதைக் கருதி செயல்பட்டு வருகிறார்கள்  . அதற்காக அவர்களைப் பாராட்ட இந்த சந்தர்ப்பத்தை உபயோகப்படுத்திக் கொள்கிறோம் .

மச்ச முனி மூலிகையக மருந்துகள் தயாரிப்பதற்கான மூலிகைகள் பலவற்றை சாமீ அழகப்பனான எம்மால் , பல எளியவர்களைக் கொண்டு எமது மேற்பார்வையில் சுத்தமாக சேகரிக்கப்பட்டு , சென்னைக்கு அனுப்பப்படுகிறது .  இதன் மூலம் பல ஏழைகளுக்கு வாழ்வும் கிடைக்கிறது .

இந்த மருந்துகளை அனைவருக்கும் கிடைக்கச் செய்ய மாவட்ட வாரியாக முகவர்கள் நியமனம் செய்யப்பட்டால் அனைவருக்கும் இந்த மருந்துகள் எளிதில் சென்றடையும் என்று மேற்கண்ட இருவரும் விரும்பியதால் , மாவட்ட வாரியாக இந்த மருந்துகளுக்கு   முகவர்களாக  ஆக விரும்பும் நபர்கள் திரு அமீர் சுல்த்தான் அவர்களைத்  தொடர்பு கொள்ளவும் .

மேலும் மச்ச முனி மூலிகையக மருந்துகள் விற்பதன் மூலம் கிடைக்கும் பண வரவு எழைகளின்  நோய் தீர்க்கவும் ,நோய்களற்ற  சமுதாயத்தை உருவாக்க முப்பூ , குரு , அகரம் , உகரம் , மகரம் , சிகரம் பற்றிய ஆராய்ச்சிக்கும் செலவிடப்பட்டு வருகிறது . இதற்கு பல ஞானிகளின்  , யோகிகளின் உதவியும் உள்ளது . அவர்கள் நமக்கு உதவி செய்வது நம் தன்னலம் கருதாத தன்மையால்தான் என்பதையும் இங்கு குறிப்பிட விரும்புகிறோம்.

பதிவு பெரிதாகப் போவதால் அடுத்த பதிவான  சர்க்கரை வியாதியை குணமாக்கலாம்(பாகம் 13) ல் தொடரலாம்.

13 responses to “சர்க்கரை வியாதியை குணமாக்கலாம் ( பாகம் 12 ) ஆவாரைப் பிசின் ஒரு அற்புத மூலிகை”

 1. srinivasen A says:

  Excellent information and a great service to humanity. Please keep going….

  • machamuni says:

   அன்புள்ள திரு srinivasen A அவர்களே,
   உங்களது கருத்துரைக்கு நன்றி,
   முதலில் தமிழில் எழுதுங்கள் .நமது மொழி தமிழ்.நமது தமிழ் நம் உயிர்.நாமே அதை உபயோகிக்காவிட்டால் தமிழ் எப்படி வாழும்.பழக்கத்தில் உள்ள மொழிதான் வாழும்.நாம் எழுதியதை தமிழை அறிந்ததால் நீங்கள் படித்தீர்கள்.
   இப்படிக்கு
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 2. senthilkumar says:

  ஐயா வணக்கம்
  எனது அம்மாவிற்கு சிறுநீரக கல்(15 cm)இருப்பதாகவும் ஆப்ரேசன் செய்யவேண்டும் என்கிறார்கள், நான் தங்களது உதவியை நாடுகிறேன், தாங்கள் தான் நமது சித்த மருந்தினை தெரிவிக்கும்மாறு கேட்டுக்கொள்கிறேன்.

  • machamuni says:

   அன்புள்ள திரு செந்தில் குமார் அவர்களே,
   உங்களது கருத்துரைக்கு நன்றி,
   திரு அமீர் சுல்த்தான் அவர்களை தொடர்பு கொள்ளவும்.
   இப்படிக்கு
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 3. sujatha.s says:

  it is a very very useful one. Sir myself and my husband having sugar but in control. My husband is experiencing pain in his right arm and leg pain. kindly advise me the medicine to take. Thank you sir.

  • machamuni says:

   அன்புள்ள திரு விக்னேஷ் அவர்களே,
   உங்களது கருத்துரைக்கு நன்றி,
   முதலில் தமிழில் எழுதுங்கள்.பொதுவாக தமிழில் எழுதாதவர்கள் மேல் எமக்கு மரியாதை ஏற்படுவதில்லை.
   சர்க்கரை கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறோம் என்று அலோபதி மருத்துவர்கள் கூறுவதை அப்படியே சொல்கிறீர்கள் . அப்படி என்றால் சர்க்கரை நோயின் பக்க விளைவுகள் ஏன் ஏற்படுகின்றன .திரு அமீர் சுல்தான் அவர்களைத் தொடர்பு கொண்டு மது மேகச் சூரணம் வாங்கி சாப்பிட்டு வாருங்கள்.கீழ்க் கண்ட இணைப்பில் கண்டுள்ளவற்றைக் கடைப்பிடியுங்கள் .அப்படி முழுவதுமாக கடைப்பிடித்தால் எந்த மருந்தும் தேவையில்லை.
   http://machamuni.blogspot.in/2011/10/45.html
   இப்படிக்கு
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 4. ramamurthy says:

  ஐயா, நான் தஙகளிடம் மருந்து வாங்கும் முறையை தெரியப்படுத்தவும்

  • machamuni says:

   அன்புள்ள திரு ramamurthy அவர்களே,
   உங்களது கருத்துரைக்கு நன்றி,
   அந்தந்த கட்டுரைகளிலெயே நாம் இவற்றை திரு அமீர் சுல்தானிடம் பெற்றுக் கொள்ளலாம் என்று எழுதியிருந்தாலும் ஏன் எம்மிடமே கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள் என்று புரியவில்லை???திரு அமீர் சுல்தானிடம் வினவுங்கள்!
   திரு அமீர் சுல்தான் அவர்கள் ,தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர்,
   மச்சமுனி மூலிகையகம்( MACHAMUNI HERBALS )
   S.S.I NO: 330021189121
   எண்.1/17,5வது தெரு, நாராயணசாமி தோட்டம், சின்னகொடுங்கையூர், சென்னை-118.
   Cell: 9597239953
   மின் அஞ்சல் முகவரி.
   machamunimooligaiyagam@gmail.com
   இப்படிக்கு
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 5. kumar says:

  really this fact is useful for all the diabete pationt so thanks for the message.

 6. kumar says:

  nice!!!!!!!!!!!!!!!!!!!!!!!

 7. Mohan Raj says:

  Ayya,
  Thangalin anekamana pathivukalai therinthu kondom.
  Mikka nanrii…..

 8. really it worked
  im in control of sugar
  taking the medicine for more than one year
  thanks

 9. avaram poo pisin super sugar control

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

+ 70 = 79