மச்ச முனி தாது ஜீவ விருத்திச் சூரணம் (பாகம் 2)

June 17, 2015 by: machamuni

natural

மச்ச முனி தாது ஜீவ விருத்திச் சூரணம்

பலரும் இந்த மச்ச முனி தாது ஜீவ விருத்திச் சூரணத்தை வெறும் விந்து உற்பத்திக்கும் ,ஆண்மைக்குறைவுக்குமான மருந்து என்று எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். உண்மையில் அவை சப்த தாதுக்கள் என்னும் எழு வகைத் தாதுக்களையும் சரிசெய்யும். அவைகளில் ஏற்படும் குறைபாட்டையும் சரி செய்வதோடு நம் உடலின் ஒட்டு மொத்த  உயிர்ச் சக்தியையும் அதிகரிக்கும்.எனவே சப்த தாதுக்கள் பற்றி மீண்டும் விளக்குகிறோம்.

சப்த தாதுக்கள் என்னும் ஏழு வகைத் தாதுக்களைப் பற்றி தெளிவாகத் தெரிந்து தெளியுங்கள்.இவை சரியாக இருந்தால் உங்கள் உடலில் நோய்கள் என்பதே இல்லை.மது மேகம் எனபது சப்த தாதுக்களின் குறைவால்தான் நேருகிறது .அதாவது சர்க்கரை வியாதியால் தாதுக்கள் நலிந்து, உடலுறவு என்பது வெறும் மனதின் ஆசையுடன் நின்று விடுகிறது,உடல் தன் இயலாமையால் ஒத்துழைப்பதில்லை.

இந்த உடல் உறவில் இயலாமை காரணமாக பல குடும்பங்கள் விவாக ரத்து வரை செல்லுகின்றன.அதை இந்த தாது விருத்தி லேகியம் 48 நாட்களில் சரி செய்யும். பல கூடாத பழக்க வழக்கங்களால்  (கைப்பழக்கம் , அதீத உடலுறவு , பர ஸ்திரீகளுடன்  அதீத பழக்கத்தினால் வாங்கிய வெட்டையினால் ஏற்பட்ட உடல் பாதிப்பு )  உடல் ரீதியாக பாதிப்புற்றவர்களையும் இது விரைவில் குணமாக்கும்.

சப்த தாதுக்கள் ஏழு வகைத் தாதுக்கள்

1. சாரம்: சுரப்பிகள் சுரக்கும் நீர்கள். இந் நிண நீர்கள் உடலையும் மனதையும் செம்மையாக வைத்திருக்க சுரப்பது.
2. இரத்தம்: உடல்முழுவதும் சத்துக்களையும் , பிராண வாயுவை எடுத்துச் சென்று வழங்கி, கழிவுகளை திரும்ப எடுத்து வருவது. அறிவு, வன்மை, ஒலி, ஒளி இவற்றை உடலில் நிலைத்திருக்க செய்வது.
3. தசை: உடலுக்கு உருவத்தையும்,அழகையும் , சரியான வடிவையும் , உடலியக்கத்திற்கும் எலும்புக்கும் ஆதரவாகவும் உள்ளது.
4.கொழுப்பு:உறுப்புக்களுக்கு சக்தியை வழங்கும் மிகு சேமிப்பு கிடங்கு இது,ஒரு வாரம் வரை உணவு வழங்கப்படாமல் இருந்தாலும் தான் கரைந்து  உடலை நன்றாக அப்படியே வாடாமல் பார்த்துக் கொள்ளும். ஒவ்வொரு உறுப்பும் தத்தம் வேலையை செய்யும்பொழுது சுலபமாக இயங்க அவற்றிற்கு நெய்ப்பசை ஊட்டி உதவுகின்றது.
5. எலும்பு: உடலை கட்டாக நிறுத்தி வைப்பது இந்த  எலும்புச் சட்டகம் தான் மென்மையான உறுப்புகளை பாதுகாத்தல் உடல் அசைவிற்கு அடிப்படையாக விளங்குதல் முதலிய செய்கைகளை செய்வது.
6. மஜ்ஜை: எலும்புக்குள் நிறைந்த இவைகள் இரத்தச் சிவப்பணுக்களை உற்பத்தி செய்வது , மற்றும் எலும்பை வளப்படுத்துவது ,அதன் மூலம் உடலை பாதுகாக்க செய்வது.
7. சுக்கிலம்/சுரோணிதம்: கருத் தோற்றத்திற்கு முக்கியமாக இருந்து உடலுக்கு வன்மையை தருவது.ஆண்களுக்கு விந்தணு எண்ணிக்கையைத் தீர்மானிப்பதும் , பெண்களுக்கு கரு முட்டையைத் தோற்றுவித்தலைத் தீர்மானிப்பதும் இந்தத் தாதுவே. ஆண்களுக்கு ஆண்மையையும் , பெண்களுக்கு பெண்மைத் தன்மையையும் தருவது இதுவே.
ஆண்பாகத்தில் கலை 3 ஆணிடத்தில் ஆகாசம், பிரகிருதி, ஆன்மவுணர்ச்சி – இம்மூன்றும் ஒருமித்துச் சுக்கிலமாய், அறிவு சத்தி வித்து என்னும் பாகத்தோடு தடித்து ஓர் மணியாம்,பெண்பாகத்தில் கலை 4 , பெண்ணிடத்தில் பிருதிவி, அப்பு, தேயு, வாயு என்னும் சூரியன், சந்திரன், அக்கினி, இயமன் என்னும் உயிர் ஆக நான்கும் சேர்ந்து சுரோணித மாயிற்று., ஆகக் கலை 7. ஒவ்வொரு கலையில் ஒவ்வொரு தாது அணுவாய்ச் சேர்ந்து 7-வது கலையில் கரு சம்பூரணமாய்ச் சப்த தாதுக்களும் கூடியபின் பிண்டமாகும் அதாவது உடலாகும்.
சூரியன் தலை, சந்திரன் நுரையீரல்& சிறு நீரகம் , செவ்வாய் எலும்பு மஜ்ஜை & ரத்தம், குரு என்ற வியாழன் என்ற தேவ குரு இதயம் &வயிறு, சனி  நரம்புகள்,புதன் அண்டம்& தோல் ,சுக்கிரன் என்ற அசுர குரு சஞ்சீவினி வித்தை {இறந்தவரை உயிர்ப்பிக்கும் வித்தை}தெரிந்த அசுர குரு  இனப் பெருக்க உறுப்புகளைப் பார்த்துக் கொள்ளுகிறார்.எனெனில் இறக்கும் முன் பல உயிர்களுக்கு உடலை  மனித உடலில் உருவாக்கி உயிர் பிறக்கக் காரணமாகிறார் அல்லவா????
நவ கிரகங்களில் ராகுவும் , கேதுவும் நிழல்களே , அவை தவிர மற்ற ஏழு கிரகங்களும்தான் சப்த தாதுக்களுடன் தொடர்புடையவை . இப்படி சப்த தாதுக்களும் சப்த கிரகங்களுடன் தொடர்பு கொண்டவை யாதலால்  இந்த சப்த தாதுக்களை சரி செய்தால் சப்த கிரகங்களும் சரியாகும். இவை ஒவ்வொன்றிற்கும் உள்ள மூலிகைகளைச் சேர்ப்பதால் உடலும் மனமும் , வாழ்வும் சரியாகும்.நமது ஜாதகம் , நமக்குச் சாதகமாகத் திரும்பும்.
உடல் ஆரோக்கியத்திற்கு உதவும் இந்த தாது விருத்தி சூரணத்தில் பல முக்கிய  மருந்துப் பொருட்கள் கலந்து இருக்கின்றன அவை உடலில்  நலம் புரிவதோடு பல உடல் கோளாறுகளையும் போக்கி அருள்கிறது.

8 responses to “மச்ச முனி தாது ஜீவ விருத்திச் சூரணம் (பாகம் 2)”

 1. ஜெ.செந்தில்குமார் says:

  ஐயா தங்களின் பதிவு மிகவும் அருமை நீண்ட நாள்களுக்கு பிறகு வந்த பதிவு. எனக்கு அந்த சக்தி தயீலம் பதிவு பிறகு இடுவதாக சொன்ன
  நினைவு .

  என்றும் அன்புடன்

  ஜெ.செந்தில்குமார்
  லண்டன்

  • machamuni says:

   அன்புள்ள திரு ஜெ.செந்தில்குமார் அவர்களே,
   உங்களது கருத்துரைக்கு நன்றி,
   சக்தி தைலம் பற்றி இனி எழுதுகிறோம்.
   இப்படிக்கு
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 2. Gunasekaran says:

  வணக்கம் அய்யா, நான் தற்போது தான் உங்களது வெப் சைட் பார்ப்தற்கு ப்ராப்தம் கிடைத்து. இந்த சூரணத்தை எங்கே எப்படி பெறவேண்டும்.

  தங்களது மேலான பதிலை எதிர்நோக்கும்

  அன்பன்

  குணசேகரன்

  • machamuni says:

   அன்புள்ள திரு குணசேகரன் அவர்களே,
   உங்களது கருத்துரைக்கு நன்றி,
   அந்தக் கட்டுரையிலெயே அமீர் சுல்த்தான் , மச்ச முனி மூலிகையகத்தில் கிடைக்கும் என்று எழுதியிருக்கிறேனே . முழுவதும் படித்துவிட்டு கேள்வி கேளுங்கள்.கீழ்க் கண்ட இணைப்பில் கொடுத்துள்ளோம் .எமது எல்லா கட்டுரைகளையும் படித்துவிட்டு பின் சந்தேகங்கள் கேட்டால் எமது அருமையான நேரம் வீணாகாது .
   http://machamuni.com/?p=3965
   இப்படிக்கு
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 3. Vivekananda says:

  அய்யா வணக்கம் நான் கால் பந்து தினமும் விளையாடுவேன். என் வயது 41. இரண்டு மாதம் முன்பு அடி பட்டு கால் மூட்டில் வலி. ஆர்தோ மரு
  த்துவர் ஜவ்வு சற்று கிழிந்து உள்ளது என நினைக்கீறேன்.விட்டமின் மாத்திறை கள் கொடுத்துள்ளார். தங்களின் முட்டை பற்று போட முடிவு எடுத்தூள்ளேன். முட்டை பற்று எத்தனை நாள் போடவேண்டும். பற்று அவிழ்த பின் எத்தனை நாள் ஒய்வு எடுக்க வேண்டும். நான் தொடர்ந்து விளையாட என்ன செய்ய வேண்டும். நல்ல வழிகாட்டுங்கள் அய்யா.

  • machamuni says:

   அன்புள்ள திரு விவேகானந்தா அவர்களே,
   உங்களது கருத்துரைக்கு நன்றி,
   முட்டை பற்று போட்டால் சரியாகலாம்.மேல் விவரங்களுக்கு கீழேயுள்ள அலைபேசியில் தொடர்பு கொள்ளவும்.
   திரு அமீர் சுல்தான் அவர்கள் ,தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர்,
   மச்சமுனி மூலிகையகம்( MACHAMUNI HERBALS )
   S.S.I NO: 330021189121
   எண்.1/17,5வது தெரு, நாராயணசாமி தோட்டம், சின்னகொடுங்கையூர், சென்னை-118.
   Cell: 9597239953
   மின் அஞ்சல் முகவரி.
   machamunimooligaiyagam@gmail.com
   இப்படிக்கு
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 4. வ பி செல்வராஜ் says:

  பேரன்புள்ள ஐயா,

  வணக்கம்.

  நான் கடந்த இரண்டு வருடங்களாக மச்சமுனி.com ன் வாசகன். அமீர் சுல்தான் ஐயாவிடம் நிறைய மருந்துகள் வாங்கி மற்றவருக்கு கொடுத்துள்ளேன். மச்ச முனி தாது ஜீவ விருத்திச் சூரணம் பற்றிய எனது சொந்த அனுபவத்தை இங்கு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
  சாமீ அழகப்பன் ஐயா இதில் தவறு ஏதேனும் இருந்தால் மன்னித்தருள வேண்டுகிறேன். தங்களின் மருத்துவதின் மேன்மையை மற்றவரும் அறிந்துகொள்ள வேண்டும் என்பதே என் நோக்கம்.

  தாது ஜீவ விருத்திச் சூரணத்தை ஆகஸ்ட் மாதத்தில் எடுத்துக்கொள்ள ஆரம்பித்தேன்.

  இதற்க்கு முன் எனக்கு கழுத்து வலி இருந்தது (Cervical spondylosis). 31-07-15 அன்று MRI scann எடுத்து பார்த்ததில்
  Impression given by the Doctor
  C5-C6 : Central and left paracentral disc bulge causing anterior thecal sac indentation and left nerual foramina narrowing annular tear notted.

  C6-C7 : Central disc bulge causing anterior thecal sac indentation.

  Cervical Spondylosis

  இந்த பிரச்சினையால் எனக்கு எப்போதும் கழுத்திலும் வலது கையிலும் வலி இருந்துகொண்டே இருக்கும். இந்த சூரணத்தை எடுதுக்கொள்ள ஆரம்பித்ததில் இருந்து வலி மெல்ல மெல்ல குறைய ஆரம்பித்துள்ளது. 80% வலி குறைந்துள்ளதே. இடையில் சில காரணங்களால் ஒரு மாத காலம் என்னால் இதை தொடர இயலவில்லை. இப்போது மீண்டும் ஆரம்பித்துள்ளேன்.

  இங்கு இதை பதிவிட காரணம் ஐயா குறிப்பிட்டதை போல் சப்த தாதுக்கள் சரி செய்ய படும் என்பது உண்மை.

  நான் எந்த விதமான அலோபதி வைத்தையமும் (முட நீக்கியல்/ Physiotherapy) செய்து கொள்ள வில்லை. ஆனால் சதைகள் தன் நிலைக்கு தானே சரி செய்துகொண்டு வருகிறது. வர்மம் அறிந்தவரிடம் சென்றாள் இன்னும் சற்று விரைவில் குணமடையும் என்று நம்புகிறேன்.

  இங்கு படம் ஏற்ற வசதி இல்லாததால் MRI scan image-ஐ காட்ட முடியவில்லை.

  இந்த மருந்து தாது விருத்தி மட்டும் அல்ல சகலத்துக்கும் மருந்து.

  ஐயா தங்கள் அலை பேசி அனுப்பினால் இன்னும் சற்று விவரமாக விளக்கியும், சில விவரங்களை கேட்டும் அறிந்து கொள்வேன்.

  இப்படிக்கு,

  என்றென்றும் அன்பை மறவா,

  வ பி செல்வராஜ்.

  ———————————————————————————————————————————
  for the readers of this website

  To type in thamizh in phonetic method please down load and install the below application for Windows-7

  http://www.microsoft.com/ta-in/download/details.aspx?id=17036
  ___________________________________________________________________________

 5. அரவிந்தன் says:

  அன்புடன் வணக்கம்.
  எனக்கு வயது 25. திருமணம் ஆகவில்லை. நான் கடந்த பல வருடங்களாக சுய பழக்கத்தில் மூழ்கி உடலும் உறுப்பும் தளர்ந்து போய் நின்றால் நடந்தால் வலி, உடல் அசதி, கீழே உட்கார்ந்தால் 2 நிமிடத்தில் கால்கள் மறுத்து போகுதல், கை விரல்களில் நடுக்கம், மிக முக்கியமாக, சுய பழக்கத்தில் ஈடுபட்டால் தவிர மற்ற நேரங்களில் உறுப்பில் எழுச்சி என்பதே துளியும் இல்லாமல் இருந்தேன். வெளியேயும் சொல்ல முடியாமல் எனக்குள் நானே மனதுக்குள் புழுங்கிய நாட்கள் பல உண்டு.

  வழக்கம் போல மருத்துவத்தை வியாபாரமாக செய்யும் சில நல்லவர்களிடம் சில ஆயிரங்களை இழந்தேன். என் அனுபவத்தில் ஒன்றே ஒன்று கூறிக்கொள்கிறேன். சுயப்பழக்கம் என்பது அளவோடு இருந்தால் தீங்கு இல்லை. நான் அளவுக்கு மீறி ஒரு நாளிலேயே 2,3 முறை என்று உணர்ச்சிகளை அடக்க முடியாமல் பல ஆண்டுகள் ஈடுபட்டதால் இந்த நிலையை அடைந்தேன்.

  இறைவன் அருளால் நான் இந்த மச்சமுனி இணைய தளத்தில் தாது ஜீவ விருத்தி சூரணத்தின் மருத்துவ குணங்களை பற்றிய பதிவை படிக்க நேரிட்டது. திரு.அமீர் சுல்தான் அவர்களிடம் அலைபேசியில் உரையாடிய பிறகு ஒரு நம்பிக்கையும் தெளிவும் பிறந்தது.

  நம்பினால் நம்புங்கள் நண்பர்களே. இந்த அற்புத சூரணத்தை எடுத்துக்கொண்ட 2 வார காலத்திலேயே ஏற்பட்ட மாற்றங்களை சொல்கிறேன்.. கைகளில் உள்ள நடுக்கம் நீங்கியது! உறுப்புகள் என்னுடைய நேரடி தீண்டல் இல்லாமல் எண்ண ஓட்டங்கள் மூலமாகவே எழுச்சி ஏற்படுவதை கண்கூடாக பார்த்தேன்! அதிகாலை நேர எழுச்சியை பல காலத்திற்கு பிறகு உணர்ந்தேன்! அதன் பிறகு ஒரு ஆன் மகனுக்கு கிடைக்கும் தன்னம்பிக்கையை பற்றி நான் கூற வேண்டியதில்லை.. இப்பொழுது உடலாலும் மனதாலும் மிகவும் உறுதியாக உணருகிறேன்! என்னை பிடித்திருந்த தாழ்வு மனப்பான்மையும், கூச்ச சுபாவமும் நீங்கியது! இதன் பிறகு தான் ஒரே ஒரு விஷயத்தில் என்னை நானே நொந்து கொண்டேன்.. சில காலம் முன்பே இந்த தளத்தை பார்க்காமல் போய்விட்டோமே என்று.. இறைவன் எல்லாவற்றிற்கும் ஒரு நேரம் வைத்திருக்கிறான்!

  இன்னுமொரு முக்கியமான விஷயம், என்னை போல பல இளைஞர்கள் சரியான மருத்துவ முறை தெரியாமல் நிறைய ஆரய்ச்சிகள் செய்து மருத்துவர் என்ற பெயரில் உலாவும் வியாபாரிகளிடம் சிக்கி பணத்தை இழந்து மேலும் துவண்டு போகின்றனரே என்று.. நல்ல விஷயத்திற்கு அதன் தரமே விளம்பரம்! இதை படிக்கும் என் போன்ற உடல் அறிகுறிகளால் அவதிப்படும் இளைஞர்கள், தயவு செய்து உங்கள் தேடலுக்கு ஒரு முற்றுப்புள்ளி கிடைத்து விட்டது என்று ஒரு பெருமூச்சு விட்டு இங்கே கொடுக்கப்பட்டுள்ள அலைபேசியை தொடர்பு கொண்டு உங்களுடைய உடல்நிலையை பற்றி தெளிவாக விளக்குங்கள். நான் உறுதியிட்டு சொல்கிறேன்.. நீங்களும் என்னை போல இங்கே உங்கள் அனுபவங்களை பதிவிடுவீர்கள். என்னை பெற்ற தாயின் மீது ஆணையாக சொல்கிறேன் நான் கூறிய ஒவ்வொரு வார்த்தையும் உண்மை.

  முக்கிய குறிப்பு: இந்த உன்னதமான மருந்தை எடுத்து கொள்ள ஆரம்பித்த பின்னர், உங்களுடைய சிற்றின்ப நடவடிக்கைகளை மேலும் தொடராமல், மனதை ஒருமுகப்படுத்தி, வாழ்வில் மற்ற ஆக்க பூர்வமான விஷயங்களில் உங்கள் மனதை செலுத்துங்கள் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். தகுந்த வாழ்க்கைத்துணையை பெற்று முறையாக வாழ்வின் அனைத்து இன்பங்களையும் பெற்று வளமாக வாழுங்கள்.

  இது வலைத்தளம் இல்லை. இயற்கையோடு இணைந்து வாழ வழிகாட்டும் நல்வாழ்வு தளம்! கோடி நன்றிகள்! வாழ்க வளமுடன்!

  என்றும் அன்புடன்,
  அரவிந்தன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

77 − 73 =