சர்க்கரை வியாதியை குணமாக்கலாம் ( பாகம் 14 )

July 6, 2015 by: machamuni

stomachசர்க்கரை வியாதியை குணமாக்கலாம் ( பாகம் 14 )

சர்க்கரை நோய் என்பது ஒரு நோயே அல்ல . அது நம் உடலின் சீரண சக்தியில் சிறு செயல் குறைபாடே தவிர ( DIS-ORDER ) வேறில்லை. இதனை சீரண சக்தியை சரி செய்வதன் மூலம் சரி செய்து விடலாம்.சரி சீரண சக்தியை எப்படி சரி செய்வது . நம் உடலின் சீரண உறுப்புக்களுக்கு ஓய்வு கொடுத்தல் (விரதம் இருத்தல் )நல்லது . அது நம் சீரண சக்தியை அதிகரிக்கும்.

மூன்று வேளையும் வேளா வேளைக்கு கடமையாக சாப்பிடாமல் , பசித்துப் புசி . அதாவது பசி எடுக்காமல் சாப்பிடாதீர்கள். சாப்பிட்டுவிட்டு உறங்காதீர்கள். நமது வயிற்றில் உள்ள ஜடராக்கினியை அவித்துவிடாமல் ,  உணவை பசித்தபின்  மெதுவாகவும் , அரை வயிற்றுக்கு உண்பதும் நல்லது . நம்  உணவை நம் வயிற்றிற்கு ஒத்துக் கொள்ளுமா என்றறிந்து உண்பது நல்லது.

நான் சாப்பிட்டவுடன் வயிறு நிறைய தண்ணீர் குடிப்பேன் என்கிறீர்களா எனில் உங்களுக்கு சீரண குறைபாடு வரும் . நான் சாப்பிட்டவுடன் வயிறு நிறைய சில்லென்ற குளிர் தண்ணீர் குடிப்பேன் என்கிறீர்களா எனில் உங்களுக்கு கண்டிப்பாக சீரண குறைபாடு வரும். நாம் சாப்பிடும் உணவை  சீரணிக்கும் , சீரண நீர்கள் நீங்கள் குடிக்கும் தண்ணீரினால் நீர்த்துப் போவதால் இது நேர்கிறது . குளிர் நீர் குடிக்கும் போது சீரண நீர்கள் செயல் இழந்தே போகின்றன. விளைவு அசீரணம்,நெஞ்செரிச்சல், பின் விளைவாக சர்க்கரை நோய்.

மேற்கண்ட செயல்களைத் தவிர்த்து சாப்பிட்ட அரை மணி நேரம் கழித்து , நல்ல மிதமான சூட்டில் வெந்நீர் அருந்துவது , நம் குடலில் உள்ள வேதியியல் மாறுபாட்டுக்கு , துணை புரிவதுடன் சீரண நீர்களின் செயல் திறனை அதிகரிக்கிறது .கீழ்க்கண்ட காணொளிக் காட்சிகளை காணுங்கள்.

சர்க்கரை நோயை குணமாக்குவது என்பது ஒரு வாழ்நாள் பழக்கங்களில் ஏற்படும் பழக்க வழக்க மாற்றங்களால் நிகழ்த்தப்படுவதே ஆகும். மருந்துகள் நம் சீரண சக்தியை மேம்படுத்தவும், சர்க்கரை நோயால் பழுதாகி இருக்கும் உள்ளுறுப்புக்களை சரி செய்யவும் மட்டுமே முடியும் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.நாம் நம் உடலுக்கு தகாத , வேண்டாத காரியங்களை செய்யும் போது நம் உடல் தடுமாறும் தடுமாற்றமே சர்க்கரை நோய்.

5 responses to “சர்க்கரை வியாதியை குணமாக்கலாம் ( பாகம் 14 )”

 1. ஜெ.செந்தில்குமார் says:

  ஐயா
  தங்களின் பதிவும் காணொளி காட்சியும் மிகவும் அருமை
  என்றும் அன்புடன்

  ஜெ.செந்தில்குமார்
  லண்டன்

 2. செந்தில்குமார் says:

  ஐயா

  இந்த தரவிறக்க சுட்டியில் நிறைய சித்தர்களின் அரிய புத்தங்கள் உள்ளது பயன் படுத்தவும்
  http://korakkar-sankar.blogspot.co.uk/2015/06/blog-post.html
  என்றும் அன்புடன்

  ஜெ.செந்தில்குமார்
  லண்டன்

 3. அன்புள்ள சாமிஜி,
  அசோக மரம் எனபது அழிவின் விளிம்பில் இருக்கும் மரம். அ + சோகம் என்று பிரித்து, இம்மரம் இருக்கும் இடங்களில் நல்ல அதிர்வுகள் இருக்கும், அதனால் இதன் நிழலில் இருப்பவர்களின் துன்பங்கள் நீங்கும் என்று கேள்விப்பட்டிருக்க்றேன். இதன் மரப்பட்டைகள் பெண்களின் கருப்பை சார்ந்த நோயகளுக்கு மருந்தாக பயன்படுகிறது என்றும் கேள்விப்பட்டுள்ளேன். தமிழகத்தில் வெகு சில இடங்களில் இம்மரம் வளர்க்கப்படுகிறது. என்னிடம் இம்மரத்தின் விதைகள் சில உள்ளன. ஐந்து கன்றுகளும் வளர்த்து வருகிறேன். மேலும் கன்றுகளை வளர்க்க இயலவில்லை.நீங்கள் இம்மரத்தை வளர்க்க விரும்பினால் இந்த விதைகளை உங்களுக்கு அனுப்பி வைக்கிறேன்.
  உங்கள் முகவரியை vasankcs @yahoo .com என்ற என் மின்னஞ்சலுக்கு அனுப்பவும்.
  நானறிந்த வரையில் இந்த மரத்தில் விதைகள் சில நாட்களில் ஈரப்பதம் போய் காய்ந்து விடுகின்றன. ஆகவே கூடுமான வரையில் விதைகளை சீக்கிரம் முளைக்க வைப்பது நல்லது. அணில்களும் மர நாய்களும் அசோக மர காய்கள் உருவாகும்போதே விதைப்பகுதியை மட்டும் கடித்து உண்டுவிடுவதும், மருத்துவத்திற்காக இம்மரங்களின் பட்டையை உரித்து காயவிடுவதும் இம்மரங்கள் அருகிப் போக காரணம் என்று நினைக்கிறேன்.

  அன்புடன்,
  சீனிவாசன்.

 4. varadharajan.v says:

  Ayya,Sarkarai noyekku Nalla theervaka intha Pathippu ullathu.Mikka nandri

 5. மு. பிரசன்ன குமார் says:

  வணக்கம் அண்ணா

  மிக்க நன்றி அண்ணா காணொளிக்கு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 + 3 =