சர்க்கரை வியாதியை குணமாக்கலாம் ( பாகம் 16 )

December 6, 2015 by: machamuni

stomach

சர்க்கரை வியாதியை குணமாக்கலாம் ( பாகம் 16 )

மதுவை விட பாதிப்பை அதிக மண்ணீரலிலும் கல்லீரலிலும் உண்டாக்குகிறது!!!!

மனிதனைக் கொல்லும் மிகப் பெரிய சக்தியாக கோழி இறைச்சி மாறிக்கொண்டிருக்கிறது’ என்றுஇந்திய அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல்கழகம் (CSE), சமீபத்தில் ஓர் அதிர்ச்சியான ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது. இந்தியாவில் விற்கப்படும் கோழிகளுக்கு நோய் தாக்காமல் இருப்பதற்கும், எடை அதிகரிக்கவும் ஸ்டீராய்டு மற்றும் ஆன்டிபயாடிக் மருந்துகளை ஊசி வழியாகச் செலுத்துகின்றனர். டெட்ராசைக்ளின் (Tetracyclin), ஃப்ளுரோகு வினோலோன் (Fluroquinolone), அமினோகிளைகோஸைடு (Aminoglycoside) ஆகிய மூன்று விதமான ஆன்டிபயாடிக் மருந்துகள்தான் கோழிகளுக்கு அதிகம் செலுத்தப்படுகின்றன. கோழியைச் சமைத்தாலும் இந்த மருந்துகள் வீரியம் இழப்பது இல்லை. கொஞ்சம் கொஞ்சமாக நம் உடலுக்குள் ஊடுருவி, பல்வேறு பின்விளைவுகளை ஏற்படுத்துவதற்கு வாய்ப்புகள் அதிகமாம்.
?ஆண்மையை அழிக்கும் பிராய்லர் கோழி: ? ?
40 நாட்களில் வளர்க்கப்பட்டு விற்பனைக்கு வந்து விடும் பிராய்லர் கோழிகள்

? வளர 12 விதமான கெமிக்கல்ஸ், கோழி சாப்பிடும் உணவோடு கலக்கப்படுகிறது.பிராய்லர் கோழிகளுக்கு அளவுக்கு அதிகமாக கீழ்க்கண்ட ஆன்ட்டி பயாடிக் மருந்துகள் கொடுக்கப்படுகிறது.இதனால் கோழிகளுக்கு கல்லீரல் மண்ணீரல் பாதிப்பு ஏற்படுவதோடு , அந்த விஷமித்த கல்லீரல் மண்ணீரலைச்  சாப்பிடும் நமக்கும் கல்லீரலிலும் , மண்ணீரலிலும் குறைபாட்டை உண்டாக்குகிறது.

இதனால் கோழிகளுக்கு ஏற்படும் நோய் எதிர்ப்புச் சக்திக் குறைபாட்டால், சாதாரணமாக வரும் குணப்படுத்தக்கூடிய நோயையும், குணப்படுத்த முடியாமல் போவதோடு, இறைச்சியை சாப்பிடும் மனிதர்களும் அதே போன்று நோய் எதிர்ப்புச் சக்திக் குறைபாட்டால் பல நோய்கள் தோன்றுகின்றன என்று சிஎஸ்இ நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

DANGEROUS DRUGS HAVE BEEN GLOBALLY DISCARDED BUT ARE AVAILABLE IN INDIA …. The most common ones are action 500 & Nimulid.

PHENYLPROPANOLAMINE:
Cold and cough. Reason for ban : stroke.
Brand name :
Vicks Action-500

இருமல் மற்றும் சளி பிடித்தல்  கொடுக்கப்படும் மருந்து பக்க வாத நோய் மற்றும் வாத நோய் ஏற்படுத்தும்.ஆனால் அதைப் படிக்கும் அளவிற்கு நமக்கு எழுத்தறிவோ,படிப்பறிவோ, நிதானமோ இல்லை.
ANALGIN:
This is a pain-killer.
Reason for ban: Bone marrow depression.
Brand name:!
Novalgin

வலிகளுக்காகவும் , கடுமையான ஸ்டீராய்டுகளின் பக்க விளைவுகளைக் குறைப்பதற்காகவும் , தடிப்பு , அழற்சி மற்றும் வீக்கம் கொடுக்கப்படும் மருந்து எலும்பு மஜ்ஜையைப் பாதிக்கும் , விளைவாக இரத்தப் புற்று நோய் ஏற்படும்.ஆனால் அதைப் படிக்கும் அளவிற்கு நமக்கு எழுத்தறிவோ,படிப்பறிவோ, நிதானமோ இல்லை.
CISAPRIDE:
Acidity, constipation.
Reason for ban : irregular heartbeat
Brand name :
Ciza, Syspride

அசிடிட்டி , மற்றும் மல இறுக்கம் ஆகியவற்றுக்காக கொடுக்கும் மருந்துகள் முறையில்லாத இதயத் துடிப்பை ஏற்பத்தும்.ஏனெனில் மனம் சரியில்லாததால்தான் மேற்கண்ட வியாதிகள் ஏற்படுகின்றன. ஏனெனில் மனம் இதயத்துடன் தொடர்புடையதால் மனத்துக்கு கொடுக்கப்படும் மருந்துகள் இதயத்தை பாதிக்கின்றன.ஆனால் அதைப் படிக்கும் அளவிற்கு நமக்கு எழுத்தறிவோ, படிப்பறிவோ, நிதானமோ இல்லை.
DROPERIDOL:
Anti-depressant.
Reason for ban : Irregular heartbeat.

Brand name :Droperol

மன நோய்க்காகவும் , மன அழுத்தத்திற்காகவும் கொடுக்கப்படும் மருந்து முறையில்லாத இதயத் துடிப்பை ஏற்பத்தும்.ஏனெனில் மனம் இதயத்துடன் தொடர்புடையதால் மனத்துக்கு கொடுக்கப்படும் மருந்துகள் இதயத்தை பாதிக்கின்றன.ஆனால் அதைப் படிக்கும் அளவிற்கு நமக்கு எழுத்தறிவோ, படிப்பறிவோ, நிதானமோ இல்லை.
FURAZOLIDONE:
Antidiarrhoeal.
Reason for ban : Cancer.
Brand name :
Furoxone, Lomofen

வயிற்றோட்டத்திற்காகவும் , சீதபேதி  பேதி மற்றும் காலராவிற்காகவும் கொடுக்கப்படும் மருந்து ஈரல் கெட்டுப் போவதையும் , புற்று நோயையும் ஏற்பத்தும்.ஆனால் அதைப் படிக்கும் அளவிற்கு நமக்கு எழுத்தறிவோ, படிப்பறிவோ நிதானமோ இல்லை.
NIMESULIDE:
Painkiller, fever. Reason for ban : Liver failure..

Brand name : Nise, Nimulid

வலி நீக்கியாவும் காய்ச்சலுக்குக்காகவும் கொடுக்கப்படும் மருந்து ஈரல் கெட்டுப் போவதையும் , புற்று நோயையும் ஏற்பத்தும்.ஆனால் அதைப் படிக்கும் அளவிற்கு நமக்கு எழுத்தறிவோ, படிப்பறிவோ நிதானமோ இல்லை.

NITROFURAZONE:
Antibacterial cream.
Reason for ban : Cancer.

பாக்டீரியாக்களை கொல்ல பூசப்படும் மருந்து புற்று நோய் ஏற்பத்தும்.ஆனால் அதைப் படிக்கும் அளவிற்கு நமக்கு எழுத்தறிவோ, படிப்பறிவோ நிதானமோ இல்லை.

Brand name :Furacin
PHENOLPHTHALEIN:
Laxative…
Reason for ban : Cancer.
Brand name :
Agarol

மலம் இளக்குவற்காக கொடுக்கப்படும் மருந்து புற்று நோய் ஏற்பத்தும்.ஆனால் அதைப் படிக்கும் அளவிற்கு நமக்கு எழுத்தறிவோ,படிப்பறிவோ, நிதானமோ இல்லை.
OXYPHENBUTAZONE:
Non-steroidal anti-inflammatory drug.
Reason for ban : Bone marrow depression.
Brand name :
Sioril

வலிகளுக்காகவும் , கடுமையான ஸ்டீராய்டுகளின் பக்க விளைவுகளைக் குறைப்பதற்காகவும் , தடிப்பு , அழற்சி மற்றும் வீக்கம் கொடுக்கப்படும் மருந்து எலும்பு மஜ்ஜையைப் பாதிக்கும் , விளைவாக இரத்தப் புற்று நோய் ஏற்படும்.ஆனால் அதைப் படிக்கும் அளவிற்கு நமக்கு எழுத்தறிவோ,படிப்பறிவோ, நிதானமோ இல்லை.
PIPERAZINE:

Anti-worms….
Reason for ban : Nerve damage.
Brand name :
Piperazine 

புழுக்களைக் கொல்லச் சாப்பிடும் மருந்து நம் நரம்பு மண்டலத்தையே சீரழிக்குமென்று அறிய நமக்கு எழுத்தறிவோ,படிப்பறிவோ, நிதானமோ இல்லை.
QUINIODOCHLOR:

Brand name:Enteroquinol
Anti-diarrhoeal.
Reason for ban : Damage to sight.

தொடர்ந்து 20 மாத்திரைகள் உபயோகித்தால் கண்கள் குருடாகும் என்று அந்த மாத்திரைக் கவர்களிலேயே எழுதப்பட்டிருக்கிறது . ஆனால் அதைப் படிக்கும் அளவிற்கு நமக்கு எழுத்தறிவோ,படிப்பறிவோ, நிதானமோ இல்லை.படிப்பறிவிருந்தாலும்  ” டாக்டரே சொல்லிவிட்டார்” என்று அல்லோபதி மருத்துவர்களை எல்லாம் அறிந்த கடவுளாகக் கருதும் போக்கு உள்ளது.தயவு செய்து அந்த எண்ணத்தை அழித்துவிடுங்கள்.தற்போது ஏற்படும் மிகப் பயங்கர நோய்களுக்கு முக்கிய காரணம் காய்ச்சல் தலைவலி போன்ற அற்ப காரணங்களுக்காக எடுக்கப்படும் மருந்துகளே என்பதை உணர்ந்து தவிருங்கள்.நமது தலைமுறை இவ்வளவு அறிவுக் குறைவாய் போனதை எண்ணி நாம் மிகுந்த வேதனைப்படுகிறோம்.
?பிராய்லர் கோழிகளில் உள்ள கெட்ட  வேதியியல் உட்பொருட்கள் ஆண்களின் விந்துவில் உள்ள உயிரணுக்களை அழிக்கிறது.
?பிராய்லர் கோழிகளில் உள்ள கெட்ட  வேதியியல் உட்பொருட்கள் குழந்தையின்மைக்கு முக்கிய காரணம் .”பத்துப் பதினோரு வயது சிறுமிகள் பெரியமனுஷி ஆவதற்கும் , தேவையில்லாத உடல் பருமனுக்கும் பிராய்லர் கோழிகளில் செலுத்தப்படும் ஆக்சிடோன்தான், முக்கிய காரணம்”.கிட்டத்தட்ட மூன்றறை லட்சம் கருமுட்டைகளுடன் பிறக்கும் குழந்தைகள் , மாதாமாதம் ஒரு சினை முட்டை கருப்பைக்கு வந்து காத்திருந்து , பின் கரு ஆகாமல் இருக்கும் கரு முட்டை சிதைந்து வெளியேறுவதே மாதாந்திர விலக்கு .சாதாரணமாக 15லிருந்து 16 வயதாக இருந்த பெரிய மனுஷி ஆகும் வயது தற்போது 6 வயதிலிருந்து 12 வயதாக குறைந்துவிட்டது.இதனால் அவர்கள் 21 வயதில் திருமணம் ஆகும் போது நல்ல கருமுட்டைகள் அனைத்தும்  காலியாகி முதிர்வுறாத கருமுட்டைககள் மட்டுமே இருக்கும். பெண்களுக்கு இதன் விளைவாக கருப்பிடிக்காது குழந்தைகள் உண்டாகாது .
?மேலும் டைலோ சின் பாஸ்பேட், டினிடோல்மைடு, டயாமுலின் ஹைடயோஜின், மைக்ரோமைன்-பி.சி.எஃப், டோக்சிலின்-ஈ.எஸ்., யூ.எஸ்., குர்ராடோக்ஸ் எம்.எஸ்., நோவா சில்பிளஸ் போன்ற மருந்துகளை ஊசிமூலம் போடுகிறார்கள்.
“இந்த மருந்துகள்தான் சின்னஞ் சிறுமிகளையும் பெரிய மனுஷிகளாக்கி விடுகிறது”.?
?பிராய்லர் கோழிகளில் கல்லீரல் வீக்கமடைந்து கொழுப்புச் சதைகள் (கொலஸ்ட்ரால்) அதிக அளவில் உள்ளது. இதை நாம் சாப்பிடும்போது நமது உடலில் கெட்ட கொழுப்பு சத்துதான் அதிக அளவில் சேருகின்றன. இந்த கெட்ட கொழுப்பானது நமது கல்லீரலில் வீக்கத்தை ஏற்படுத்தி விடுகிறது.
?கெட்ட கொலஸ்ட்ரால் அதிகரிப்பதால், அது ரத்த நாளத்தில் புகுந்து அடைப்பை ஏற்படுத்துகிறது. இதனால் ரத்த அழுத்தம் ஏற்படுகிறது.
?100-ல் 65 பேருக்கு கொழுப்பு நிறைந்த ஈரல் நோய் உள்ளது. இங்குள்ள பெரும்பாலான உணவகங்களில் ஏற்கனவே பயன்படுத்திய எண்ணையை அதிக அளவில் பயன்படுத் துவதால் கல்லீரல் கோளாறின் பிடியில் சிக்கித் தவிக்கிறார்கள்.??
?சிறு நீரகங்களிலும் கல்லீரல்களிலும் கேன்சர் உருவாகிறது.
தொடர்ச்சியாக பிராய்லர் கோழி சாப்பிடுவோர் குடல் புற்றுநோயின் பிடியில் சிக்கி விடுவார்கள்.மேலும் ப்ராய்லர் கோழி மற்றும் முட்டைகளை விரும்பி சாப்பிடும் நமக்கு எலும்புகளில் இருக்கும் சத்து முற்றிலும் அழிகிறது.
?ப்ராய்லர் கோழி மற்றும் முட்டைகளை விரும்பி சாப்பிடும் நமக்கு அவற்றில் உள்ள கெட்ட வேதிப் பொருட்களால் மஞ்சள் காமாலை , இரைப்பை,, கல்லீரல் செயலிழப்பு என்று வியாதிகளின் எண்ணிக்கையை அடுக்கலாம் .
?ப்ராய்லர் கோழி மற்றும் முட்டைகளை அதிகமாக சாப்பிட்ட நாமக்கல் மக்களுக்கு இப்போது புற்று நோய் பிரச்சனை அதிகமாக பரவி வருகிறது …. மக்கள் படும் கஷ்டங்களை கோழி பண்ணைகளின் தலைவர்களான சில அரசியல்வாதிகள் வியாபார நோக்கத்துடன் உண்மை மக்களிடம் போகாமல் பார்த்து கொள்கின்றனர்.

இது போன்று பிராய்லர் கோழிகளாலும் , மேற்கண்ட தடை செய்யப்பட்ட மருந்துகளை அதிக அளவில் உபயோகிப்பதாலும் மண்ணீரலிலும் ,  கல்லீரலிலும்  அதீத பாதிப்புகளை உண்டாக்குகிறது.கல்லீரல் மண்ணீரல் பாதிப்பே கால் பெருவிரல்களில் எதிரொலிக்கிறது.அதாவது கால் பெருவிரல் நகம் சொத்தையாகுதல், கால் பெருவிரல் நுனிகளில் காங்கரீன் என்ற ஆற்ற முடியாத புண் உண்டாகுதல் போன்றவை நிகழ்கின்றன .

ஏனெனில் கல்லீரலின் ஒன்றாவது புள்ளியும் , மண்ணீரலின் ஒன்றாவது புள்ளியும் கால் பெருவிரலில்தான் ஆரம்பிக்கின்றன.எனவே பிரச்சினைகளும் அங்கிருந்து ஆரம்பிக்கின்றன.

எனவே கல்லீரலையும் ,  மண்ணீரலையும் சிதைக்கும் அல்லோபதி மருந்துகளையும் , கறிக்கோழிகளையும் தவிர்த்து நல வாழ்வு வாழுங்கள்.

கோழி சாப்பிட வேண்டுமானால் நம் நாட்டுக் கோழிகளைச் சாப்பிட்டு நலம்,மற்றும் பலம் பெறுங்கள் . நாட்டுக் கோழி மாதிரியே இருக்கும் கிரி ராஜாக் கோழிகளைச் சாப்பிடாதீர்கள்.இதுவும் கறிக்கோழிகளைப் போலவே மிகக் கெடுதலானது.

நாட்டுக் கோழி

 கோழி கறிநெருப்பாங் கொள்ளின் மருந்துரவங்

கூழைக் கடுப்புமந்தங் கூறரச-மாழ்கிப்போம்

நீளுற்ற போக நிணக் கிரந்தி பித்தமுண்டாந்

தூளித்த மெய்யிளை க்குஞ் சொல்

-பதார்த்த குண விளக்கம்-

குணம்:- சூடுள்ள கோழிக்கறியை யுண்ணில் ஔஷத வேகம் , மகாவாதம் , சுவாதம் , தேகக்கடுப்பு , மந்தாக்கினி மூலம் இவை போகும் . சுக்கிலம் , கொழுப்புள்ள ரணம் , பித்தம் இவை விளையும் .உடம்பு இளைக்கும் என்க.

செய்கை:- உற்சாககாரி , காமவிர்த்தினி

உபயோகிக்கும் முறை:- இதைச் சாதாரணமாகச் சாதாரணமாகச் சமைத்துண்ண சமைத்துண்ண இச்செய்யுளிற் கூறப்பட்டுள்ள குணங்கள் ஏற்படும்.இதன் இறைச்சியை அடியிற் கூறப்பட்ட வண்ணம் செய்துண்ணத் தாது பலம் உண்டாகும். எங்ஙனமெனில்:- வெண்மை நிறமாகத் தேய்த்து புடைத்து எடுத்த எள் கைப்பிடி , மண்ணில்லாமல் அலம்பிச் சுத்தப்படுத்திய கசா கசா பிடி 1 , தேங்காய் மூடி அரை , பச்சை மிளகாய் 8 அல்லது 9 , இஞ்சி , கொத்தமல்லி இலை போதிய அளவு இலைகளை சுத்தசலம் விட்டு நெகிழ அம்மியில் அரைத்து ஈயம் பூசிய பித்தளைப் பாண்டத்தில் போட்டு ,கால் அல்லது காலே அரைக்கால் படி சலம் விட்டு கலக்கி போதிய அளவு உப்பிட்டு வைத்துக் கொள்க, அப்பால் ஒரு நடுத்தரமான நாட்டுக் கோழியின் இறைச்சியைத் துண்டு துண்டாக அரிந்து சுத்த சலம் விட்டு அலம்பி வைத்துக் கொள்க ! பிறகு ஒரு ஈயம் பூசிய பித்தளைப் பாண்டத்தில் அரைப் பலம் சுத்தமான நெய்யைவிட்டு , பத்து அல்லது பனிரெண்டு பெரிய வெள்ளை வெங்காயத்தை அரிந்து போட்டு அதனுடன் சிறிது லவங்கப்பட்டை , கிராம்பு , ஏலக்காய் கூட்டி அடுப்பிலேற்றி , வெங்காயம் சிவந்து வரும் பதத்தில் முன் சித்தப்படுத்தி வைத்துள்ள இறைச்சியை கொட்டி அடிப்பிடிக்காமல் துளாவி வருக, இறைச்சி வெந்து சிவந்து வரும் போது முன்னரே கூட்டி வைத்துள்ள குழம்பை விட்டு நன்றாய்த் துளாவி மேல் மூடி சிறு தீயில் வேகும் படி விட்டு வைக்கவும் .இறைச்சி நன்றாய் வெந்து வாசனை கிளம்பும் சமயம் இறக்கி ஆறவிட்டு அன்னத்துடன் உபயோகிக்கவும். இது போக சக்தியை அதிகப்படுத்தும் .எக்காரணத்தை முன்னுட்டும் எலுமிச்சம் பழச் சாறு கூட்டிக் கொள்ளக் கூடாது .இது குணத்தை முற்றிலும் மாற்றிவிடும்.

நாட்டுக் கோழி முட்டை

வாதபித்தஞ் சேர்ப்பிக்கும் வன்றோடம் புண்போக்கும்

தாதுவை மெத்தத் தழைப்பிக்கு – மோது

கபத்தை யடக்குங் கரப்பானுண் டாக்கு

மிபத்தையுறுங் கோழிமுட்டை யெண்

-பதார்த்த குண விளக்கம்-

குணம்:- கோழி முட்டை வாத தோஷம் , விரணம் , கபப் பிணி இவைகளை நீக்கும் . வாத பைத்தியம் , சுக்கில தாது , கரப்பான் , இவைகளை உண்டாக்கும் என்க.

 செய்கை:-  அந்தர்ஸ்நிக்தகாரி , பலகாரி

உபயோகிக்கும் முறை:- இதை வேகவைத்து மேலோட்டை நீக்கி உண்பதனாலாவது அல்லது பொரியல் வடை முதலியவைகளாகப் பாகப்படுத்தி உண்பதனாலாவது மேற்கூறப்பட்ட குணங்கள் உண்டாகும். அரை வேக்காடுள்ள முட்டையை உண்ண இந்திரியம் பலப்படும் .தேகம் புஷ்டியடையும்.

சாதாரண ஒரு முட்டையில் உள்ள வெள்ளைக் கருவை ஒரு புட்டியில் விட்டு இரண்டு அவுன்ஸ் காய்ந்து ஆறிய சலத்தை விட்டு நன்றாய்க் குலுக்கி சலமும் வெண்கருவும் உறவான பதத்தில் கொஞ்சம் கொஞ்சமாக 12 மணி நேரத்திற்குள் எல்லாவற்றையும் உள்ளுக்கு கொடுத்துக் கொண்டு வர வயிற்றில் உள்ள விரணம் ஆறும் .அதனால் ஏற்பட்ட வாந்தியையும் குணப்படுத்தும் . மேற்கூறிய வண்ணம் ஒரு புட்டி சலமும் வெண்கருவும் கூட்டியதில் ஒரு ரூபாய் எடை படிகாரத் தூள் , போட்டு கலக்கி வாய் கொப்பளித்துக் கொண்டு வர ரச தோஷத்தினால் ஏற்பட்ட வாய் வேக்காடு ஆறும்.மயில் துத்தம் , சவ்வீரம் முதலியவற்றை விஷமிக்க தின்றவர்களுக்கு முட்டையின் வெண்கருவை அடிக்கடி உள்ளுக்கு கொடுத்துக் கொண்டு வர அம்மருந்துகளின் வீறு தணியும்.இன்னும் இதன் வீராகிய வாந்தி பேதி தேக எரிச்சல் சாந்தப்படும்.வெண்கருவை சிரசில் இட்டு தேய்த்து ஸ்நானம் செய்ய கண்களுக்கு ஆரோக்கியத்தைக் கொடுக்கும்.

இதிலிருந்து சர்க்கரை நோயை உண்டாக்கும் பிராய்லர் கோழிகளை சாப்பிட்டால் கல்லீரலும் மண்ணீரலும் கெடுவதோடு ,தாதுக்களும் ஷீணப்படுத்தப்படும்.

ஆனால் நாட்டுக் கோழிகளை உண்ணும் போது  கல்லீரலும் மண்ணீரலும் சரியாவதோடு ,தாதுக்களும் பலப்படுத்தப்படும்.ஆண்மை வீரியம் அதிகரிக்கும்.

3 responses to “சர்க்கரை வியாதியை குணமாக்கலாம் ( பாகம் 16 )”

 1. Anbu Rajendran says:

  நல்ல விபரம். மிக்க நன்றி.

  அன்புடன்,
  அன்பு ராஜேந்திரன்

 2. veerappan says:

  please share good articles like this

 3. veerappan says:

  good

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 + 8 =