தமிழர்களும் தமிழர் உழவுத்தொழிலும் விழிப்படைய வேண்டிய வேளை (பாகம் 2)

April 14, 2016 by: machamuni

தமிழர்களும் தமிழர் உழவுத்தொழிலும் விழிப்படைய வேண்டிய வேளை

நாடு முழுவதும் இயற்கை விவசாயத்தின் மீதான ஆர்வம் அதிகரித்து வரும் நிலையில், 75 ஆயிரம் எக்டேர்கள் விவசாய நிலத்தை முற்றிலுமாக பயிரிடுவதற்கு ஏற்ற நிலமாக மாற்றியிருப்பதன் வாயிலாக சிக்கிம் மாநிலம் இந்தியாவின் முதல் இயற்கை விவசாய மாநிலமாக அறிவிக்கப்படவுள்ளது. வருகிற 18-ந்தேதி கேங்டாக்கில் நடக்க உள்ள விவசாய கருத்தரங்கில் இதை பிரதமர் மோடி முறைப்படி அறிவிக்கவுள்ளதாக சிக்கிம் ஆர்கானிக் மிசன் தெரிவித்துள்ளது.
12 ஆண்டுகளுக்கு முன்பாக 2003-ல் பவான் சாம்ளிங் தலைமையிலான அரசு சிக்கிம் மாநிலத்தை இயற்கை விவசாய மாநிலமாக மாற்ற வேண்டும் என சட்டசபையில் அறிவித்து இருந்தது. பிறகு, விவசாய நிலங்களில் ரசாயன உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகலுக்கு முற்றிலுமாக தடை செய்யப்பட்டது. மேலும் ரசாயன உர விற்பனையும் தடை செய்யப்பட்டது. இதனால், இயற்கை விவசாயத்தை நோக்கி செல்வதற்கான வாய்ப்பு உருவானது. இதன் எதிரொலியாக தற்போது சிக்கிம் இயற்கை விவசாய மாநிலமாக உருவாகியுள்ளது.

Sikkim-becomes-Indias-first-organic-state_SECVPF

காங்டாக் : இந்தியாவில் முதன்முறையாக இயற்கை விவசாயம் மேற்கொள்ளும் மாநிலமாக சிக்கிம் உருவெடுத்துள்ள நிலையில், அம்மாநிலத்தில் நடைபெறவுள்ள இயற்கை விவசாய விழாவை பிரதமர் நரேந்திர மோடி இன்று(ஜன.,18) துவக்கி வைக்கிறார். கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு சிக்கிமில் பூச்சிக்கொல்லி, உரம் ஆகிய ரசாயனப் பொருட்கள் விற்பனைக்கும், பயன்பாட்டுக்கும் பவன் குமார் சாம்லிங் தலைமையிலான அரசு தடை விதித்தது குறிப்பிடத்தக்கது.

sikkim_vc2

இந்தியாவிலேயே முற்றிலும் இயற்கை வேளாண்மைக்கு மாறிய பெருமையைப் பெற்றிருக்கிறது, நாட்டின் வடகிழக்குப் பகுதியில் ஒதுங்கி நிற்கும் மாநிலமான சிக்கிம்.

முதல்வரின் முழு முயற்சி

இதற்கு முக்கியக் காரணமாகத் திகழ்ந்தவர் அந்த மாநிலத்தின் முதல்வர் பவன்குமார் சாம்லிங். தொடர்ந்து ஐந்தாவது முறையாக முதல்வராக இருக்கும் இவர், அடிப்படையில் ஒரு விவசாயி. உணவையும் நிலத்தையும் நஞ்சாக்கும் நவீன விவசாயத்திலிருந்து மாற்றத்தை விரும்பிய பவன்குமார், 2003-ல் சிக்கிம் மாநிலத்தை ’ஆர்கானிக் ஸ்டேட்’ எனச் சட்டப்பேரவையில் பிரகடனம் செய்தார். ‘மாநிலத்தில் ரசாயன உரங்களுக்கும் பூச்சிக்கொல்லிகளுக்கும் முற்றாகத் தடை விதிக்கப்படுகிறது. தடையை மீறுவோருக்கு ‘ஒரு லட்ச ரூபாய் அபராதம்; மூன்றாண்டுகள் சிறை தண்டனை’எனவும் தடாலடியாக அறிவித்தார்.

வழக்கம் போல இந்த அறிவிப்பு அரசியலாக்கப்பட்டு எதிர்ப்புகள் தூண்டிவிடப்பட்டன. எதைப்பற்றியும் கவலைப்படாத பவன்குமார், தனது திட்டத்தைச் செயல்படுத்துவதற்காக ‘ஆர்கானிக் ஸ்டேட் போர்டு’ என்ற அமைப்பை ஏற்படுத்தினார். அடுத்த ஆறு ஆண்டுகளுக்குள் மாநிலத்தில் 8 ஆயிரம் ஏக்கர் நிலங்களை இயற்கை விவசாயத்திற்கு மாற்றுவது என தீர்மானித்துக் கொண்டு செயலில் இறங்கியது இந்த வாரியம்.

மத்திய மானியம் மறுப்பு

ஒரு பக்கம் இயற்கை வேளாண்மையை ஆதரிக்க வேண்டிய அவசியம் குறித்து மக்களிடையே விழிப்புணர்வுப் பிரசாரம், மறுபுறம் இயற்கை வேளாண்மையை மேற்கொள்வதற்கும் இயற்கை உரங்களைத் தயாரிப்பதற்கும் தாராளமான மானியங்களை வழங்கியது மாநில அரசு. மாநிலம் முழுவதும் 24,536 இயற்கை உரத் தயாரிப்பு மையங்களும் 1,447 பசுந்தாள் உரத் தயாரிப்பு மையங்களும் அரசால் நிறுவப்பட்டன. இயற்கை உரத் தயாரிப்பு முறைகள் குறித்து உழவர்களுக்குப் பயிற்சியும் அளிக்கப்பட்டது.

இந்த நடவடிக்கைகளால் 2009-ம் ஆண்டு இறுதிக்குள் எட்டாயிரம் ஏக்கர் நிலங்கள் இயற்கை வேளாண்மைக்கு மாற்றப்பட்டன. இதற்கிடையே, 2006-07-ம் ஆண்டில் மத்திய அரசு வழங்கிய மானியத்துடன் கூடிய ரசாயன உரக் கோட்டாவை வேண்டாம் என்று அறிவித்தார் பவன்குமார். அடுத்தகட்டமாக ஓராண்டுக்குள் 14 ஆயிரம் ஏக்கரை நஞ்சில்லா பூமியாக மாற்றுவது எனத் திட்டமிடப்பட்டு, அதுவும் நிறைவேற்றப்பட்டது.

உயிர் கிராமங்கள்

இதன் தொடர்ச்சியாக ‘சிக்கிம் ஆர்கானிக் மிஷன்’ என்ற அமைப்பு உருவாக்கப்பட்டு, அதன் கீழ் கிராமங்கள் தத்தெடுக்கப்பட்டு இயற்கை வேளாண் முறைகள் பிரபலப்படுத்தப்பட்டன. இந்தக் கிராமங்களுக்கு ‘பயோ வில்லேஜ்’ என்று அழைக்கப்பட்டன. நல்ல திட்டங்கள் பலன் தராமல் தோற்றுப்போனதற்குக் காரணமே தொடர் ஆராய்ச்சிகளும் வளர்ச்சியும் இல்லாமல் போனதுதான்.

இதைப் புரிந்துகொண்டு இயற்கை வேளாண்மையை மேம்படுத்தவும் அடுத்த கட்டத்துக்கு நகர்த்தவும், Center Of Excellence For Organic Farming என்ற ஆராய்ச்சி மையத்தை உருவாக்கினார். இத்தனை முன்னேற்பாடுகளுடன் 2015-ம் ஆண்டு இறுதிக்குள் சிக்கிம் மாநிலத்தை நஞ்சில்லா விவசாயப் பூமியாக மாற்றத் திட்டமிட்டு, அதை வெற்றிகரமாகச் சாதித்தும் காட்டியிருக்கிறது பவன்குமார் சாம்லிங் அரசு.

தொடக்கத்தில் சில சிரமங்கள் இருந்தாலும் இப்போது சிக்கிம் விவசாயிகளுக்கு இயற்கை வேளாண்மையின் மகத்துவம் புரிகிறது. இவர்கள் விளைவிக்கும் இயற்கை வேளாண் பொருட்களை வாங்குவதற்கு டெல்லி, மத்திய ஆசிய நாடுகளில் தவம் கிடக்கிறார்கள்.

எடுபடாத எதிர்ப்பு

அண்மையில் சிக்கிம் சென்றிருந்த தேசியப் பிற்பட்டோர் ஆணையத்தின் உறுப்பினர் கார்வேந்தன், அங்குள்ள இயற்கை வேளாண் நிலங்களையும், விவசாயிகளையும் சந்தித்துத் திரும்பியிருக்கிறார். தன்னுடைய அனுபவத்தை அவர் பகிர்ந்துகொண்டார்:

’’நானும் ஒரு இயற்கை விவசாயிதான். அந்த ஆர்வத்தில் சிக்கிம் விவசாயிகளைச் சந்தித்துப் பேசினேன். சிக்கிமின் சில மலைப் பகுதிகளில் வாழும் ஒருசிலர் இயற்கை விவசாயத்தை எதிர்த்தாலும், அது எடுபடவில்லை. சிக்கிம் மாநிலத்தில் சுமார் 50 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் உள்ளன. இயற்கை வேளாண்மை மூலம் கடந்த ஆண்டில் மட்டுமே 80 ஆயிரம் மெட்ரிக் டன் விளைபொருட்களை சிக்கிம் விவசாயிகள் உற்பத்தி செய்திருக்கிறார்கள். இதில் இஞ்சி 45,890 மெட்ரிக் டன், மோட்டா ரக மிளகு 3,510 மெட்ரிக் டன், மஞ்சள் 2,790 மெட்ரிக் டன், சன்ன ரகக் கோதுமை 4,100 மெட்ரிக் டன்.

வருடத்தில் மூன்று மாதங்கள் அங்கே கடும் குளிர் நிலவும். அதை சமாளிப்பதற்காக உடலுக்குக் கேட்டை உண்டாக்காத, ரசாயனம் கலக்காத ‘பயோ விஸ்கி’யையும் அங்கே தயாரிக்கிறார்கள்.

இயற்கை உரத் தொழிற்சாலை

பயோ ஃபெர்ட்டிலைசர்ஸ் என்று சொல்லப்படும் இயற்கை உரம் தயாரிக்கும் பெரும் தொழிற்சாலையை அரசே நிறுவியிருக்கிறது. இதன் மூலம் ஒரே நேரத்தில் 3000 மெட்ரிக் டன் இயற்கை உரம் தயாரிக்க முடியும். தெற்கு சிக்கிமில் ராவங்லா என்ற இடத்தில் 440 ஏக்கரில் அரோமா ஆர்கானிக் தேயிலைத் தோட்டத்தையும் அரசு நடத்துகிறது. இங்கு விளையும் உலகத் தரம் வாய்ந்த தேயிலை பெருமளவு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

மிகவும் பின் தங்கிய சிக்கிம் மக்கள் ரசாயனத்தின் ஆபத்தை உணர்ந்து இயற்கை விவசாயத்துக்கு மாறிவிட்டார்கள். ஆனால், நாம் அது குறித்த விழிப்புணர்வுகூட இல்லாமல் இருப்பது வேதனையளிக்கிறது” என்கிறார் கார்வேந்தன்.

ஜனவரி 18-ம் தேதி, சிக்கிமில் நடந்த விவசாயிகள் கருத்தரங்கில் இயற்கை விவசாயத்தில் சாதித்த பவன்குமார் சாம்லிங்குக்கு பாராட்டுப் பத்திரம் வழங்கிக் கௌரவித்திருக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி.

எப்போது மீள்வோம்?

“பசுமைப் புரட்சிக்கு முன்பு நாட்டில் இவ்வளவு நோய்கள் இல்லை. அதிக மகசூல் என்று ஆசைகாட்டி நிலங்களையும் உண்ணும் உணவையும் விஷமாக்கி விட்டார்கள் வெளி நாட்டு உரம் , பூச்சி மருந்துகள் , விவசாய விதைகளைக் கையாளும் கம்பெனிகள்.குறிப்பாக மான் சாண்டோ என்ற அமெரிக்க விதைக் கம்பெனி தற்கொலை விதைகள் அதிக அளவில் மக்காச் சோள உற்பத்தியில் புகுத்தி வருகிறது . ரசாயன உரங்கள், உணவு உண்ணும் அத்தனை உயிர்களையும் சிறுகச் சிறுகக் கொல்கின்றன. ரசாயன உரங்களை ஒழிக்கப் போராடுவதுதான் இப்போது முக்கியம்.

கடந்த ஆண்டில் மட்டும் இந்தியாவில் 10 லட்சம் பேர் புற்றுநோய் பாதிப்பால் இறந்திருக்கிறார்கள். இதில் பெரும்பாலானவர்கள் பெண்கள், குழந்தைகள். இதற்கு ரசாயன உரங்களும் முக்கியக் காரணம். சிக்கிமைத் தொடர்ந்து உத்தராகண்ட், கேரளம், கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்கள் இயற்கை விவசாயத்தை நோக்கி நகர ஆரம்பித்திருக்கின்றன. ராஜஸ்தான், பஞ்சாப் மாநிலங்களில் இது குறித்த விவாதங்கள் தொடங்கிவிட்டன. ஆனால், வளமான விவசாயப் பூமியைக் கொண்ட தமிழகத்தில் இயற்கை விவசாயம் குறித்த புரிதல் வேளாண் அதிகாரிகளுக்கே இல்லையே” என்கிறார் உழவர் உழைப்பாளர் கூட்டமைப்பின் தலைவர் பொங்கலூர் இரா. மணிகண்டன்.

சிக்கிம் இப்பொழுது இந்தியாவின் முதல் 100% ஆர்கானிக் மாநிலம். நீங்கள் நம்பினால் நம்புங்கள்! இந்தியாவின் எந்தவொரு மாநிலங்களும் தங்களால் செய்ய முடியாது என்று உறுதியாக மறுத்துவிட்ட ஒன்றை, இந்தியாவின் கிழக்கு மூலையில் அடங்கிப் போயிருக்கும் இந்த குறுகிய நிலப்பிரதேசமான சிக்கிம் நிறைவேற்றி இருக்கிறது!

ஹிமாலய மலைகளின் இடுக்கில்,  ஆறு லட்சம் மக்கள் வசிக்கும் இந்த “மலர்களின் நிலத்தில்” இதுவரை ஒரு ரயிலோ, கமர்ஷியல் விமானமோ எட்டிக்கூட பார்த்ததில்லை. ஆனாலும் அனைத்து தடைகளையும் தகர்த்தெறிந்து விட்டு, தங்கள் முழு நிலப்பிரதேசங்களையும் முற்றிலும் ரசாயன மற்றும் செயற்கை உரங்கள் அற்ற மாநிலமாக மாற்றி இருக்கிறது  சிக்கிம் அரசு. அதுவும் அந்த மாநிலம் முழுவதிலும். (2011-ம் ஆண்டு கொடிய உரமான எண்டோசல்பானால் தென்னிந்தியாவில் கிட்டத்தட்ட 150 பேர் மூளைச்சேதம், தலையில் வீக்கம் ஆகியவற்றால் அவதிக்குள்ளாக, மத்திய அரசு அந்த எண்டோசல்பானை உடனே தடை செய்தது குறிப்பிடத்தக்கது).

2003-ம் ஆண்டில், முற்றிலும் இயற்கை விவசாய மாநிலமாக சிக்கிமை மாற்றுவதற்கு இவர்கள் எடுத்த முடிவு, பனிரெண்டு வருடங்களுக்குப் பின்பு இன்று சாத்தியமாகி இருக்கிறது. இத்தனை வருடங்களில், மொத்தம் 75000 ஹெக்டர் நிலப்பரப்பை உடைய இந்த மாநிலம், படிப்படியாக ஆர்கானிக் விவசாயத்தை தத்தெடுத்திருக்கிறது. பல சிரமங்களுக்குப் பிறகே இது சாத்தியமாகி இருக்கிறது. சிக்கிம் விவசாயிகள் ஒரு போதும் ரசாயன உரங்களை பயன்படுத்தியதில்லை என்றபோதும், சில ஆண்டுகளுக்கு முன்பு வரை செயற்கை விவசாய உரங்களையே பயன்படுத்தி வந்தனர். சிக்கிம் அரசின் இந்த மாற்றத்திற்கு ஏற்றவாறு அனைத்து விவசாயிகளும் முழுவதுமாக ஆர்கானிக் உரங்களுக்கு மாற வேண்டியதாய் இருந்தது.

இதை சற்றே கடினமான மாற்றமாக அவர்கள் உணர்ந்தாலும், அரசின் நோக்கத்தை அவர்கள் நன்கு அறிந்து வைத்திருந்தனர் என்பதே உண்மை. ரசாயனங்களை முற்றிலும் தவிர்ப்பதே இந்த மக்களின் நோக்கம் என்றாலும்,  நிலத்தின் தரமும் பயிர்களின் தரமும் மறுபுறம் அதிகரிப்பதில் உள்ள மகிழ்ச்சி, இவர்களுக்கு மிகவும் பிடித்து போனதாம். ஆகையால்தான் இவர்கள் அனைவரும் அரசின் இந்த ஒற்றைக்கொள்கையில் அதிக ஈடுபாடு செலுத்தினர் என்கின்றனர் இந்த மாநில மக்கள்.

இந்தியாவில் உற்பத்தியாகும் 12,40,000 டன்கள் ஆர்கானிக் மகசூலில், கிட்டத்தட்ட 80,000 டன்களை சிக்கிம் மாநிலம் மட்டுமே வழங்குகின்றதாம். இந்த மாநிலத்திற்கு வரும் சுற்றுலாப் பயணிகள் அனைவரும் முற்றிலும் இயற்கை விவசாயத்தில் உருவான காய்கறிகளையும், பழங்களையும் உண்ணலாம் என்று இனிமேல் சிக்கிம் பெருமைப்பட்டுக் கொள்ளலாம்.

கலிஃபோர்னியா, விஸ்கான்சின் போன்ற  ஆர்கானிக் பகுதிகளுடன் தற்போது சிக்கிமும் கை கோர்த்துக்கொண்டது. சிக்கிமை முன்னுதாரணமாக வைத்து  கேரளா, மிசோராம், அருணாச்சல பிரதேசம் என இந்திய மாநிலங்கள் பலவும் இந்த வரிசையில் இடம் பிடிப்பதற்கான முயற்சியில் இறங்கிவிட்டன.

இத்தகைய நல்ல முன்னுதாரணங்களை பின்பற்றி தமிழகமும் இந்த வரிசையில் இடம் பிடிக்க முயலலாமே… என்ன தடை அதற்கு?

விவசாயத் துறைக்கு புத்துயிரூட்டும் வகையில், இயற்கை விவசாய முறையை நாடு முழுவதும் விரிவுபடுத்த வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தினார்.
சிக்கிம் மாநிலம், காங்டாக் பகுதியில் திங்கள்கிழமை நடைபெற்ற மாநில விவசாயத் துறை அமைச்சர்கள் மாநாட்டில், இதுகுறித்து மோடி பேசியதாவது:
பயிர் வளர்ப்பு, விலை மதிப்பு மிகுந்த மரக்கட்டைகளுக்காக மரம் வளர்த்தல், கால்நடை பராமரிப்பு ஆகிய மூன்று பாகங்களாகப் பிரித்து விவசாயப் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
பயிர் அறுவடை இல்லாத காலங்களில், மரம் வளர்ப்பும், கால்நடை பராமரிப்பும் விவசாயிகளுக்கு உதவிகரமாக இருக்க வேண்டும்.
குளிர்பானங்களைத் தயாரிக்கும் நிறுவனங்கள், தங்களது தயாரிப்புகளில் 5 சதவீதம் அளவுக்கு பழச்சாறுகளைக் கலக்க வேண்டும். நிதிப் பற்றாக்குறையால் விவசாயிகள் பாதிக்கப்படாமல் இருக்க இது உதவும்.
விவசாயிகள், விவசாயம், கிராமங்கள் என சிதறிக் கிடந்தால், நாட்டுக்கு எந்த ஆதாயமும் ஏற்படாது. எனவே, முழுமையான முறையில், விவசாயத் துறை வளர்ச்சியடைய வேண்டும்.
சுற்றுச்சூழலைப் பாதுகாத்து வளர்ச்சி அடைவதற்கு, சிக்கிம் மாநிலம் புதிய முன்னுதாரணமாகத் திகழ்கிறது. அதை மற்ற மாநிலங்களும் பின்பற்ற வேண்டும்.
ஒரு மாவட்டம் அல்லது தாலுகாவில் உள்ள 100-150 கிராமங்களைத் தேர்ந்தெடுத்து, இயற்கை விவசாய முறையை உத்தி சார்ந்து செயல்படுத்த வேண்டும்.
அந்தச் சோதனை முறை வெற்றிபெற்றால், மற்ற இடங்களில் வசிக்கும் விவசாயிகளும் தாங்களாகவே முன்வந்து இயற்கை விவசாய முறையைத் தேர்ந்தெடுப்பார்கள். விஞ்ஞானிகளின் உரைகளால் விவசாயிகள் ஊக்கம் பெற்றுவிட மாட்டார்கள். நேரடியாகக் கண்டறிந்தால்தான் அவர்கள் நம்புவார்கள்.
இயற்கை விவசாய முறைக்கு சில இடங்களில் எதிர்ப்புகள் வரக்கூடும். ஆனால், அதை அமல்படுத்துவதில்

’நான் முதல் தலைமுறை விவசாயி’

நல்ல சம்பளம் தரும் ஐ.டி. துறை வேலைக்குப் பதிலாக விவசாயத்தில் ஈடுபாடு காட்டும் இளைஞர்களின் வரிசையில் ஒருவர்தான் என்றாலும், செந்தில்குமாரின் வாழ்க்கையும் இயற்கை வேளாண்மையை அவர் முன்னெடுக்கும் முறையும் வித்தியாசமானவை. நமது மரபு விவசாய முறைகள் குறித்த செந்தில்குமாரின் தேடல், வேர்களை நோக்கி அவரைத் திருப்பியது. ஒரு விவசாயியாக இன்று அவர் பரிணமித்திருக்கிறார்.

நம்முடைய மரபு சாகுபடி முறைகளை மீட்டெடுப்பதிலும், அவற்றை அடுத்த தலைமுறைக்குக் கடத்தும் வேலையையும் அவர் செய்துவருகிறார். வேலை நிமித்தம் வெளிநாட்டுக்குச் சென்றபோது செந்தில்குமாருக்கு ஏற்பட்ட அனுபவமே, நம்முடைய மரபு சாகுபடி முறைகள் மீது அவரை கவனம் செலுத்தத் தூண்டியது.

வெளிநாடு தந்த விழிப்பு

“நான் வேலை பார்த்த சாஃப்ட்வேர் கம்பெனி சார்பாக அமெரிக்கா சென்றேன். அங்கே தமிழர்கள் குறித்தும் நம் வாழ்க்கைமுறை குறித்தும் அவர்கள் வைத்திருந்த மதிப்பும் மரியாதையும் என்னை வியக்கவைத்தது. நம் உழவுக் கலாச்சாரத்தையும் தற்காப்புக் கலைகளையும் அவர்கள் பெரிதாக மதிக்கின்றனர். ஆனால், நம்மிடமோ அது பற்றிய எந்த விழிப்புணர்வும் இல்லை.

நம் மண்ணில் விளைகிற பொருட்களை மட்டமாகவும் தரக்குறைவாகவும் நினைத்து ஒதுக்கிவிட்டு, வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களை விரும்பி வாங்கிச் சாப்பிடுகிறோம். வெளிநாட்டில் ஒருவர் வாழைப்பழத்தைச் சாப்பிட்டுக்கொண்டே, அதன் மகத்துவத்தைப் பற்றி சொன்னபோது, அத்தனை நாட்களாக வாழைப்பழத்தை அலட்சியமாக நினைத்த எனக்கு அவமானமாக இருந்தது” என்று சொல்லும் செந்தில்குமார், சென்னை திரும்பியதும் நம் மரபு வேளாண்மை குறித்த தேடலில் இறங்கினார்.

பட்டறிவும் களப்பணியும்

வேளாண் வல்லுநர் சுபாஷ்பாலேக்கரின் ‘ஜீரோ பட்ஜெட் வேளாண்மை’, செந்திலின் தேடலுக்குப் பாதை அமைத்தது. அவர் நடத்திய வேளாண் கருத்தரங்குகளில் பங்கேற்று தன் பார்வையை விரிவுபடுத்திக்கொண்டார். களப்பணி இல்லாத பட்டறிவு, வேளாண்மையைப் புரிந்துகொள்ள உதவாது என்பதால் தும்கூர், மைசூர் ஆகிய இடங்களுக்குச் சென்று விவசாய முறைகளைத் தெரிந்துகொண்டார்.

ஒவ்வொரு நாட்டிலும் எப்படியெல்லாம் இயற்கை முறையில் விவசாயம் செய்யப்படுகிறது என்பதை, அந்தந்த நாட்டு வேளாண் அறிஞர்கள் மூலமாகத் தெரிந்துகொண்டார். பனிபடர்ந்த அண்டார்ட்டிகா கண்டத்திலேயே விவசாயம் நடைபெறும்போது, வேளாண் மற்றும் தரிசு நிலங்களைப் பெருமளவு கொண்ட இந்தியாவில் ஏன் அது சாத்தியமாகாது என்ற கேள்வி, செந்திலை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தியது.

விவசாயிகளே வல்லுநர்கள்!

அடுத்ததாக இயற்கை வேளாண் முன்னோடி நம்மாழ்வார் நடத்திய பயிற்சி முகாம்களில் பங்கேற்றது, வேளாண்மை செய்வதற்கான செந்திலின் தன்னம்பிக்கையை அதிகரித்தது. பல தலைமுறைகளாக விவசாயம் செய்துவருகிறவர்களைச் சந்தித்து, அவர்களுடைய விவசாய முறைகளைக் கற்றறிந்தார். அப்போது, எழுதப் படிக்கத் தெரியாத நம் விவசாயிகளுக்குக் கிட்டத்தட்ட எழுபதுக்கும் மேற்பட்ட வேளாண் கலைகள் தெரிந்திருப்பது செந்திலின் ஆச்சரியத்தை அதிகப்படுத்தியது.

“ஏர் உழ ஏற்ற நாளைத் தேர்ந்தெடுப்பதில் தொடங்கி, ஒரு பருவத்தின் காலநிலை, மழை பொழியும் அளவு, மண் வளம், மண்ணுக்கேற்ற இயற்கை உரங்கள், நுண்ணுயிர்களின் செயல்பாடு, நிலப் பாகுபாடு, கால்நடை பராமரிப்பு, பயிர்ப் பாதுகாப்பு என்று வேளாண்மையோடு தொடர்புடைய அனைத்தும் விவசாயிகளுக்கு அத்துப்படியாக இருந்தது, அவர்கள் மீதான மரியாதையை அதிகப்படுத்தியது” என்று சொல்லும் செந்தில்குமார், விவசாயத்துக்குத் தன்னைத் தகுதிப்படுத்திக்கொள்ளும் செயல்களில் இறங்கினார்.

“ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக நம் விவசாயிகள் பண்படுத்தி வைத்திருந்த நிலத்தை, ரசாயன உரங்களும் பூச்சிக்கொல்லிகளும் வளமற்றதாகி மாற்றிவருகின்றன. நிலமும் நிலம் சார்ந்த வாழ்க்கையுமாக இருந்த நம் ஐந்திணைக் கோட்பாடு காலப்போக்கில் மடிந்து, எதை வேண்டுமானாலும் எங்கு வேண்டுமானாலும் உற்பத்தி செய்யலாம் என்று மாறிவிட்டது. மண்ணுக்கேற்ற பயிர்கள், கால்நடைகள் என்று இயற்கையோடு ஒன்றிவாழ்கிற வாழ்வே சிறந்தது” என்று நம் விவசாய முறையின் பெருமையைப் பகிர்ந்துகொள்கிறார் செந்தில்.

தற்சார்பு விவசாயம் 

பெருமைகளைப் பகிர்ந்துகொள்வதுடன் செந்தில்குமார் நின்றுவிடவில்லை. வேலூர் மாவட்டம் அத்தித்தாங்கலை அடுத்த ஒழலை கிராமத்தில், ஐந்து ஏக்கர் பரப்பளவில் வெற்றிகரமாக விவசாயம் செய்துவருகிறார். நிலத்தை வாங்கி நான்கே ஆண்டுகளில், ஆச்சரியப்படத் தக்க உற்பத்தியைச் சாதித்துக் காட்டியிருக்கிறார். முதலில் அந்த நிலத்தில் படிந்திருக்கும் ரசாயனத்தை அகற்றி, பண்பட்ட நிலமாக மாற்றினார். விவசாயத்துக்கு ஊட்டமளிக்க உள்நாட்டு கால்நடைகள்தான் தேவை என்பதால் உம்பளச்சேரி, திருவண்ணாமலை குட்டை ரக மாடுகளை வளர்த்துவருகிறார்.

இங்கே சூரிய அட்டவணைப்படி விவசாயம் நடக்கிறது. நீர்ப்பிடிப்புக்காகப் பண்ணைக் குட்டைகள் அமைத்திருக்கிறார்கள். சுபாஷ் பாலேக்கரின் ஐந்தடுக்கு விவசாயம் இங்கே கடைப்பிடிக்கப்படுகிறது. மரங்கள், தானியப் பயிர்கள், மூலிகைச் செடிகள் என இங்கே பல பயிர்கள் சாகுபடி செய்யப்படுகின்றன. பஞ்சக் கவ்யா, பழ உரம், மீன் உரம், திரவ உரம், சாம்பல் உரம் எனப் பல்வேறு வகையான உரங்களும் இங்கே தயாரிக்கப்படுகின்றன. பச்சிலை பூச்சி விரட்டி, சாம்பல் – மூலிகை பூச்சி விரட்டி, இஞ்சி – பூண்டுக் கலவை பூச்சி விரட்டி, உலர் மூலிகைப் பூச்சி விரட்டி போன்றவையும் இங்கேயே தயாரிக்கப்படுகின்றன.

உழைப்பும் முக்கியம்

“நஞ்சில்லா உணவை உற்பத்தி செய்ய வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்த விவசாய நிலத்தை வாங்கினேன். நிலத்தில் இறங்கிப் பாடுபட்டால், அதற்கு நிச்சயம் பலன் உண்டு என்பதற்கு, இந்த நிலமே சாட்சி. ஐ.டி. கம்பெனியில் இருந்துகொண்டு விவசாய வேலை பார்ப்பதை ஆரம்பத்தில் எதிர்மறையாகப் பேசியவர்களும்கூட, பாரம்பரிய விவசாயத்தின் அவசியத்தை இன்றைக்குப் புரிந்துகொண்டிருப்பதில் எனக்கு மகிழ்ச்சி. நான் முதல் தலைமுறை விவசாயி என்பதில் பெருமிதமடைகிறேன்” என்று சொல்லும் செந்தில்குமார், அதேநேரம் விவசாயத்தில் ஈடுபட வேண்டும் என்பதற்காக உணர்ச்சிவசப்பட்டு வேலையை விடுவது நல்லதல்ல என்பதையும் சுட்டிக்காட்டுகிறார்.

“விவசாயம் செய்ய வேண்டும் என்றால், நிலத்தில் இறங்கிப் பாடுபடத் தயாராக இருக்க வேண்டும். எடுத்ததுமே பலன் கிடைத்துவிடாது. பொறுமையும் கடின உழைப்பும் அவசியம். இன்று மக்களிடம் ஆர்கானிக் பொருட்கள் குறித்த விழிப்புணர்வு அதிகமாகியிருக்கிறது. ஆனால், இதிலும் கலப்படம் வந்துவிட்டதைப் பார்க்க முடிகிறது. விவசாயிகளிடமிருந்து நேரடியாகக் கொள்முதல் செய்தால், கலப்படத்தைத் தவிர்க்கலாம்” என்கிறார்.

ஒரே நாளில் எந்த மாற்றத்தையும் செய்துவிட முடியாது. ஆனால் மாற்றத்துக்கான விதையை ஊன்றுவதற்கு ஒரு நாள் போதும். நீங்கள் விதை ஊன்றத் தயாரா?

கான்கிரீட் காடுகள் சூழ்ந்த பெருநகரங்களில் நகர்ப்புற விவசாயத்தைச் செயல்படுத்தும் நோக்கத்துடன் தன் நண்பர்களுடன் இணைந்து ‘சென்னை கிரீன் கம்யூன்’என்ற அமைப்பை 2008-ல் செந்தில்குமார் தொடங்கினார். இயற்கை விவசாயத்தை ஊக்குவிப்பதும், நம் மரபு உணவுப் பொருட்களான சிறுதானியங்களை அதிக அளவில் உற்பத்தி செய்வதும் இந்த அமைப்பின் முக்கிய நோக்கம். இயற்கை விவசாயம் மூலம் அமைக்கப்படுகிற தோட்டங்கள் குறித்தும் அவற்றில் விளையும் காய்கறிகள் குறித்தும் மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் இவர்களுடைய செயல்பாடு குறிப்பிடத்தக்கது. வீடுகளிலும் மாடிகளிலும் தோட்டம் அமைக்க விரும்புகிறவர்களுக்கு இக்குழு வழிகாட்டுகிறது.

தனியார் மற்றும் பொது இடங்களில் இயற்கை வேளாண்மை குறித்த பயிலரங்குகளை இலவசமாக நடத்துகின்றனர். பெரிய அளவிலான கூட்டங்களுக்குக் குறைந்த கட்டணம் வசூலிக்கின்றனர். இவர்களுடைய அமைப்பு சென்னை மட்டுமல்லாமல் மைசூர், ஓசூர், கேரளா என்று பல்வேறு இடங்களிலும் கிளை விரித்திருக்கிறது. சென்னை கிரீன் கம்யூன் மூலம் கிட்டத்தட்ட மூவாயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் இயற்கை வேளாண்மையிலும் மாடித் தோட்டம் அமைக்கும் செயல்களிலும் ஈடுபட்டிருக்கிறார்கள்.

விதைகளைக் காப்போம்

அவருடைய பணி அத்துடன் முடிந்துவிடவில்லை. வேளாண்மையின் ஆதாரமே தரமான விதைகள்தான். வீட்டையே விற்கிற வறுமையிலும் விதைநெல்லை விற்காத விவசாயிகளைக் கொண்ட சமூகம் நம்முடையது. நம் பாரம்பரிய வேளாண்மை முறைகளை மீட்டு, அதைப் பரவலாக்கி, பாதுகாக்கும் நோக்கத்துடன் ‘தமிழர் மரபியல் நிறுவனம்’ என்ற அமைப்பையும் செந்தில்குமார் நடத்திவருகிறார். தன்னார்வலர்கள் மற்றும் உறுப்பினர்கள் ஆதரவுடன் செயல்படும் இந்த அமைப்பு மூலம், பள்ளி மாணவர்களுக்கு விதை வழங்கும் திட்டத்தைச் செயல்படுத்திவருகிறது.

“நம் பாரம்பரிய விதைகளை மாணவர்களிடம் கொண்டுசேர்க்கும் எங்கள் நோக்கம், தடங்கல் இல்லாமல் நடந்துவருகிறது.  தங்கள் கையால் பயிரிட்டு, விளைகிற காய்கறிகளை ஆர்வத்துடன் அறுவடை செய்கிற மாணவர்கள், எதிர்காலம் குறித்த நம்பிக்கையை நம் மனதில் அதிகரிக்கிறார்கள்” என்று பெருமிதம் பொங்கச் சொல்கிறார் செந்தில்குமார்.

செந்தில்குமார் தொடர்புக்கு: 09940028160

அது மட்டுமல்ல மேற்கண்ட விடயங்களைப் பேசிக் கொண்டோ சிந்தித்துக் கொண்டோ மட்டும் இருக்காமல் , மச்ச முனி இயற்கை மூலிகை மற்றும் , விவசாயப்பண்ணை ஆரம்பிக்கவும் எண்ணம் உள்ளது. இது ஒரு கூட்டு முயற்சியாகவே இருக்க முடியும் . ஏனென்றால் விவசாயத்திற்கு உள்ள நிலங்களெல்லாம் கட்டிடம் கட்டக் கூடிய இடங்களாக மாற்றப்பட்டு வருவதால் விவசாய நிலங்களின் விலை மதிப்பு பல மடங்கு உயர்ந்துவிட்டது . தனியாக இது போன்று சில (குறைந்த பட்சமாக 1 ஏக்கர் வாங்கவே ) 25 லட்சம் தேவைப்படுகிறது.அந்த இடத்திலேயே ஒரு யோகா மற்றும் இயற்கை மருத்துவ மனை அமைக்கவும் எண்ணமுள்ளது .

4 responses to “தமிழர்களும் தமிழர் உழவுத்தொழிலும் விழிப்படைய வேண்டிய வேளை (பாகம் 2)”

 1. உயிர்மெய்யில் உயர்மெய்யையும் உண்மையையும்
  தாம் உணர்ந்து பிறர் உணர செய்பவரே
  தாமுண்ட நீரதனை பன்மடங்கு பெருக்கி இப்பார் மகிழத்தந்திட (டும்)
  சூல் கொண்டுலவும் மேகத்தை போன்றோரெ
  நீர் கற்றதும் சிறப்பு நீர் காண்பதும் சிறப்பு
  பிறர் கண்டு உணரவைப்பதும் மகா சிறப்பே
  உண்மை கருத்தான உயர்ந்த கருத்தாங்கி உயிரான பதிவை ஈந்தீர்
  வீதியின் பாதியில் உம் சேதிக்காய் ஏங்கியே நான்
  ஆதலினால் விதியில்லை என்பதால் விழிக்க இயலாமல்
  என் ஏழ்மையில் கிடைத்தது ஒருநாளே உணவு – உண்டு
  ஆறு நாள் உறக்கத்தில் அட்சய பாத்திரத்தோடு
  உறக்கத்திலும் யாசித்தல் உம்மிடமே – அற்பமாய்
  பாடென்றால் என்றால் சாப்பாடுதான் என் முதற்பாடே – மற்ற
  ஏர்பாடெல்லாம் இதன் பிற்பாடுதானே அய்யனே – யாம்
  ஏற்பாடென்பது விளைநிலத்தில் ஏருடன் படும் பாட்டை
  அன்றோ நினைத்தேன் – பிழைகாணாதீர் எம்மேல்
  கவியும் விதையாம் ( கவிதை ) செய்யுளுக்கு
  புவியே சதையாம் உழவர்க்கு
  நீதியும் நன்னெறியும் ஓத்துதல் முறையாம் அந்தணர்க்கு
  மழையொன்றுண்டுடாம் ( திங்கள் ) கற்புடைய மாதற்கு
  இறையென்று பொருளுண்டாம் பொறுப்புடைய வேந்தர்க்கு
  இன்று எமையாள ஆளும் வேந்தே உமக்காய் – எம்
  யாவர்க்கும் திங்கள் ஒருமழை பொழிதல் வேண்டி – யான்
  எதற்கெதற்கோ எங்கெங்கோ எவரெவரோ எப்போதும்
  எவரெவர்க்கோ எத்தனை பரிசுகள் தந்திட்டார்
  உழவனுக்காய் இன்றுவரை எவனொருவன் எந்த பரிசினை ஈந்திட்டார்?
  இவ்வுலக மாந்தர் அனைவர்க்கும் உழவனே முதல் தாய்
  பெரும் ஏக்க வணக்கத்துடன் நடேசனின் மகன் ஆனந்தன்

 2. அன்புள்ள சாமிஜி,

  அருமையான, அவசியமான பதிவு.
  சமூகத்தின் மீதான உங்கள் அக்கறையின் பிரதிபலிப்பே இந்த கட்டுரை.

  அன்புடன்,
  செ.சீனிவாசன்.

 3. பெருநோக்கம் உடையீரே, பேரன்பினை பெற்றவரே, பெற்றதை பிரர்க்கு அளிப்பவரே,
  உம் கீர்த்திக்கும் மூர்த்திக்கும் பணிவன்புடன் என்னுடைய சரணங்கள் என்றும்.
  யாம் வேண்டுவது சோதிவிருட்சம் மாலை அணிந்திட நியமணங்கள் தாறும் எமக்காய்

  உம் உன்னதத்தை உள்ளகளிப்புடன் போற்றி மகிழ்ந்திடும் (வாழ்ந்த )சாரதாநடேசனின் மகன் ஆனந்தன்

  • machamuni says:

   அன்புள்ள திரு அகத்தீச ஆனந்தன் அவர்களே,
   உங்களது கருத்துரைக்கு நன்றி,
   சோதிவிருட்சம் மாலை தேவையெனில் கீழ்க்கண்ட மின்னஞ்சல் முகவரிக்கோ அல்லது தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளுங்கள்.

   சதுரகிரி ஹெர்பல்ஸ் திரு கண்ணன் அவர்கள் தற்போதைய புதுப்பிக்கப்பட்ட முகவரி மற்றும் அலைபேசி எண் மற்றும் அவரது தொலைபேசி எண்கள் ஆகியவற்றை கீழே காண்க.
   +919943205566
   +914563282222
   +919750806594
   +919894912594
   அவரது முகவரி:-
   திரு பெ.கண்ணன்,
   சதுரகிரி ஹெர்பல்ஸ்,
   2/159, மங்கம்மாள் கோவில் தெரு,கான்சாபுரம்,(P-O)
   திரு வில்லிபுத்தூர் தாலுகா,விருதுநகர் மாவட்டம்.
   மின்னஞ்சல் முகவரி
   herbalkannan@gmail.com
   இப்படிக்கு
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 + 1 =