மச்ச முனிவரின் சித்த ஞான சபையில் சேர

July 10, 2016 by: machamuni

”ஐயா,
சித்தர் தரிசனத்ததிற்கு காத்து இருக்கிறேன். வழி காட்டவும். தங்களை காண விரும்புகிறேன்.”

“ஐயா,

ஞானத்துக்கு வழி காட்டுங்கள் .”

எனவும் பலரும் கேட்டுக் கொண்டே இருக்கிறார்கள்.மச்ச முனிவரின் சித்த ஞான சபையில் சேரவும் , மச்ச முனிவரின் சித்த ஞான சபைக்கு வரும் வழியும் , அங்கே என்ன உபதேசமாகத் தரப்படுகிறது என்பதை சூசகமாகக் குறிப்பிட்டுள்ளோம்.

நமசிவய என்பதில் உள்ள ஐந்தெழுத்துக்களும் பஞ்ச பூதங்களைக் குறிக்கும். பிருதிவி, அப்பு, தேயு(நெருப்பு), வாயு(காற்று),ஆகாயம் என்பதே அவை.இவற்றில் மூன்று பூதங்கள் பழுதுள்ளவை.அவையாவன நெருப்பு, காற்று ,ஆகாயம்.முதலில் வாசி ,வாசி என வாசிக்கும் காற்று நின்றவுடன் அடுத்து ஆகாயம் உயிருடன் சேர்ந்து ஓடிவிடும்.பிறகு காற்றில்லாவிட்டால் நெருப்பு ஏது ,நெருப்பு அணைந்துவிடும்.பிறகு மீதமுள்ள மண்ணும், நீரும் பிணமாகக் கிடக்கும்.

பெரியவர்கள் சொல்வார்கள்,“`ஐந்துக்கு இரண்டு பழுதில்லாமல் பண்ண வேண்டும் “.ஐந்துக்கு இரண்டு பழுதில்லாமல்தான் இருக்கிறது.பழுதுள்ள மூன்றில் கடைசியாக வெளியேறும் நெருப்பைப் பிடித்தால். பழுதுள்ள மீதமுள்ள காற்றும்,ஆகாயமும் நிற்கும்.

இதல்லாமல் காற்றைப் பிடிப்பது கடினம்.அப்படி காற்றைப் பிடித்தாலும் தேய்க்கும் பஞ்ச பூதத்தைப் பிடிக்காவிட்டால் அது காற்றையும்,ஆகாயத்தையும் தேய்த்து அழித்துவிடும்.மேலும் பஞ்ச பூதங்களில் காற்றுக்கு அணுக்கட்டமைப்பு உண்டு,ஆகாயத்துக்கு அணுக்கட்டமைப்பு(பரமாணு அல்லது ஈதர்) உண்டு, நீருக்கும் அணுக்கட்டமைப்பு உண்டு ,மண்ணுக்கும் அணுக்கட்டமைப்பு உண்டு, ஆனால் நெருப்புக்கு மட்டும் எந்த அணுக்கட்டமைப்பும் கிடையாது.

பற்ற வைத்தால் எந்த பொருளையும் பற்றி எரிய வைத்து,அந்த பொருளை எரித்து தேய்க்கும்.எனவே இது தேயு (நெருப்பு)என அழைக்கப்பட்டது.நமதுடலும் பற்றி எரிய வைக்கப்பட்ட திரி போன்று எரிந்து இரு பூதங்கள் மிஞ்சி, கடைசியில் அவையும் சாம்பலாகிறது.இதுவே காயத்திரி மந்திரத்தின் உள் ரகசியம்.விசுவாமித்திரன் கண்டுபிடித்தது இதைத்தான்.இதுதான் காயத்திரி மந்திரத்தின் ரகசியம்.இதையே பிராமணர்கள் காலையும், மாலையும் சந்தியா வந்தனம் என்ற பெயரில் பொருள் புரியாமல் உச்சரித்து மட்டும் வருகின்றனர். காயத்தை திரியாக்கி வெறும் ஒளியுடலாக மாற்ற ஓர் எளிய வழியுள்ளது. தேயுவானவான நெருப்பு எரியும் முன் எங்கிருந்து வந்ததென்பதும் தெரியாது.மீண்டும் எங்கே சென்றதென்பதும் தெரியாது.

மேற்கண்ட நெருப்பின் வழியே சென்று ஞானத்தை அடையும் வழியே  மச்ச முனிவரின் சித்த ஞான சபையில் உப தேசமாகக் கொடுக்கப்படுகிறது. அதைப் பெற எங்கள் சபைக்கு குறைந்தது மூன்று பௌர்ணமிக்கு ,இரவில் நடக்கும் பௌர்ணமிக்  கூட்டங்களுக்கு வர வேண்டும்.கூட்டங்களுக்கு வர கட்டணம் ஏதும் இல்லை. இலவசமே.கூட்டத்திற்கு திருமணம் ஆகாதவர்களும் வரலாம்.கூட்டங்களில் சித்தர் பாடல்களில் உள்ள ஞானப் பொருள் விளக்கங்கள் தரப்படும்.அதன் பின்னர் மூன்று பௌர்ணமிக் கூட்டங்களுக்கு வந்தவர்களுக்கு மட்டும்  ஒரு நாள் உபதேச நாளாக குறிக்கப்பட்டு அன்று உபதேசம் கொடுக்கப்படும். உபதேசத்திற்கு திருமணம் முடிந்த நபர்கள் மட்டுமே தகுதியுள்ள நபர்கள்.

மேலும் இதற்கு உபதேசக்கட்டணமாக அன்றைக்கு செலவாகும் பால், பழம், சர்க்கரை, மல்லிகைப்பூ, ஆகியவற்றிற்கான செலவாக ரூபாய் 50/= ம்,கட்டிட நன்கொடையாக ரூபாய் 500/= ம் செலுத்த வேண்டும்.

உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்
கருவாய் உயிராய் கதியாய் விதியாய்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே!

சபைக்கு வர வழி
மச்ச முனிவரின் சித்த ஞான சபைக்கு வர வடக்கிலிருந்து வரும் அன்பர்கள் 
மதுரைக்கு வந்து,பரமக்குடிக்கு வந்து அதன்பின்னர் அங்கிருந்து நயினார் கோவில் வழியாக     பாண்டியூர் வரவும். அங்கே ஊருக்குள் பழைய பஞ்சாயத்துத் தலைவர் அல்லது வைத்தியர் மற்றும் சோதிடர் திரு பார்த்த சாரதி ஐயா வீடு எது என்றோ மச்ச முனிவரின் சித்த ஞான சபை எங்கே    என்றோ கேட்டு வரவும். தொலை பேசி எண் :- 04564 - 240294

2 responses to “மச்ச முனிவரின் சித்த ஞான சபையில் சேர”

 1. k.krishakumar says:

  நன்றி ஜயா தொடர்ந்து பதிவிடவும் ஐயா உங்கள் பதிவிற்காக காத்திருக்கிறேன்

 2. Chockalingam says:

  O K. I want to join.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

− 5 = 1