ஒரு பழம் பெரும் புத்தகம் {கடுக்காய் பிரபாவ போதினி (பாகம் 9)

August 13, 2016 by: machamuni

ஒரு பழம் பெரும் புத்தகம் {கடுக்காய் பிரபாவ போதினி (பாகம் 9)

download

இது ஒரு மீள்பதிவு .இந்தப் பதிவு ஏற்கெனவே மச்சமுனி வலைப்பூவில் வெளியான கட்டுரையே இது.

http://machamuni.blogspot.in/search/label/ஒரு%20பழம்%20பெரும்%20புத்தகம்

ஒரு பழம் பெரும் புத்தகம் {கடுக்காய் பிரபாவ போதினி (பாகம் 9)

ஒரு பழம் பெரும் புத்தகம்,(கடுக்காய் பிரபாவ போதினி பாகம் 8) என்ற பதிவைப் படித்துவிட்டு இந்த பதிவுக்கு வரவும்.அப்படிப் படித்தால்தான் தொடர்பு விட்டுப் போகாமல் புரியும்.

வது(இரண்டாவது) மர்மம்

கடுக்காயை ஆகாரஞ் சாப்பிட்ட பின்பு மென்று தின்பதால் பலம் புத்தி ஆகியவை அதிகப்படும். தேகம் செழிப்புண்டாகும். தேக வசீகரமுண்டாகும். வாதம், பித்தம், சிலேத்துமம் என்னும் மூவகைத் தோஷங்கள் நாசமாகும். மலம் கிரமப்பட்டு தேகாரோக்கியம் உண்டாகும்.
ங”வது(மூன்றாவது) மர்மம்

கப சம்பந்தமான ரோகங்களுக்கு கடுக்காயை உப்புடன் சாப்பிடத் தீரும். பித்த சம்பந்தமான ரோகங்களுக்கு கடுக்காயைக் கற்கண்டுடன் மிஸ்ரமித்து சாப்பிடத் தீரும். வாத சம்பந்தமான ரோகங்களுக்கு கடுக்காயை நெய்யுடன் மிஸ்ரமித்துச் சாப்பிட வேண்டும். எல்லா ரோகங்களுக்கும் பொதுவாக வெல்லத்துடன் மிஸ்ரமித்துச் சாப்பிட தீரும்.

கடுக்காயின் பிரமாணம்

(சாப்பிடும் அளவு), அநுபானம்,பரிகாரம் 

கடுக்காயின் சூரணத்தை முக்கால் முதல் ஒரு விராகனிடை வரையில் சாப்பிடலாம். (ஒரு வராகன் என்பது 4.2 கிராம் 32 குன்றிமணி எடை ( ஒரு குன்றி மணி எடை என்பது 130 மில்லி கிராம் )ஆகும்.)

இதன் அநுபானமும், பரிகாரமும், தேனாகும். சில சமயம் கடுக்காயை அதிகம் சாப்பிட்டுவிட்டதால் ஏதேனும் கெடுதியுண்டானால் தேனைப் பானம் செய்யத் தீரும். தேனானது கடுக்காய்க்கு அநுப்பான (மருந்தை சாப்பிட உடன் உபயோகிக்கும் பொருள்) வஸ்துவாயிருப்பதுடன், அதற்கு பரிகார(மருந்தை அதிகம் சாப்பிட்டதால் உண்டான கெடுதலை நீக்கும் பொருள்) வஸ்துவாகவும் இருக்கிறது. 
கடுக்காயை உபயோகிப்பதில் இன்னும் பல மர்மங்களும் உள்ளன. அவற்றுள் அனுபவ சித்தமான சில முறைகளும், மர்மங்களும் பின் வரும் பதிவுகளில் விளக்கமாக வெளியிடப்படும்.

இதன் தொடர்ச்சி ஒரு பழம் பெரும் புத்தகம், (கடுக்காய் பிரபாவ போதினி பாகம் 10)என்ற பதிவில் தொடரும்.

அடுத்து ஒரு முக்கிய விஷயத்தோடு அடுத்த பதிவில் சந்திக்கிறேன்.

மிக்க நன்றி

என்றென்றும் பேரன்பினால்

சாமீ அழகப்பன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 + 3 =