புற்று நோய் குணமாக்கலும் சர்க்கரை நோய் குணமாக்கலும்

August 14, 2016 by: machamuni

நாம் பல வலைத்தள அன்பர்களுடன் அலை பேசியில் பேசித் தொடர்பு வைத்துள்ளோம்.அவர்களில் பலர் என்னிடம் மருந்துகள் சம்பந்தமாகக் கேட்டு பலன் பெறுகிறார்கள் .இதுவும் அவர்களின் விதிப்படியேதான் என்று எண்ணுகிறோம்.எம்மிடம் பேசுபவர்களில் திரு உதய் என்பவர் அடிக்கடி பேசுவார்.

அவர் தாயாருக்கு புற்று நோய் என்று என்னிடம் கூறினார்.ஆனால் அதற்கு மருந்து ஒன்றும் கேட்கவில்லை, மாறாக நாங்கள் அவருக்கு வேதியியல் சிகிச்சை (CHEMOTHERAPY ),  கதிர் வீச்சு சிகிச்சை  ( RADIOTHERAPY) அளிக்கப் போவதாகக் கூறினார்.நாம் அவ்வாறு செய்ய வேண்டாம் என்று கூறினோம். திரு உதய்யும்  , நான் கூறியதை என் பெற்றோர் கேட்கவில்லை என்று கூறினார். நாம் அப்போது , அதற்குப் பதிலாகக் கூறியதை இங்கே அப்படியே தருகிறோம்.நாம் அரியலூரில் பணியாற்றிக் கொண்டிருந்த போது எமது மனைவியின் தாயாருக்கு , கர்ப்பப்பையில் புற்று நோய் போன்றதொரு அறிகுறி உள்ளதென்று தொலைபேசியில் தெரிவித்தார்கள்.அப்போது அலைபேசிகள் இல்லை. நாம் அதற்கு “C A 125 (CANCER ANTIGEN) என்ற பரிசோதனை செய்தாலேயே அது புற்று நோய் என்பது தெரிந்துவிடும். அதாவது இந்த கேன்சர் செல்களைக் கொல்ல உடல் உற்பத்தி செய்யும் நோய் எதிர்ப்பு மூலக் கூறே அது .எமது மனைவியிடம் கேன்சர் கட்டியை வெட்டி பரிசோதனைக்கு அனுப்ப வேண்டும் என்பார்கள், அதை மட்டும் செய்யாதீர்கள் என்றோம் “.  அதற்கு முன் காரியம் மிஞ்சிவிட்டது .” BIOPSY ” என்று சொன்னார்கள் . செய்யுங்கள் என்று சொல்லிவிட்டோம் .அதன் பின்னர்தான் தெரிந்தது , கட்டியை வெட்டி அனுப்புவதுதான் ” BIOPSY ” என்று  ”எமது மனைவி சொன்னார்கள். மிக வருந்தினேன். ஏனென்றால் புற்றுக் கட்டி என்பது அதைத் தொடாமல் இருக்கும் வரை அதிகம் பரவாது ,மாறாக கத்தியை வைத்து அதை வெட்டும் போது புற்று நோயின் செல்கள் விதைகளாக உடலெங்கும் பரவிவிடும்.

இதைத்தான் அல்லோபதி மருத்துவத்தில் முதலாவதாக செய்கிறார்கள்.தயவு செய்து இது போன்றதொரு முட்டாள்தனத்தைச் செய்யாதீர்கள் . இது போன்ற ” BIOPSY ” செய்துவிட்டால் புற்று நோயின் செல்கள் விதைகளாக உடலெங்கும் பரவிவிடும் என்பதால் சித்த மருந்து சிகிச்சை ஏதும் செய்யவில்லை. இதன்பின்னர் அல்லோபதி மருத்துவ முறையில் , எனது மனைவியின்  தாயாருக்கு செய்யப்பட்டது  வேதியியல் சிகிச்சை (CHEMOTHERAPY ),  கதிர் வீச்சு சிகிச்சை  ( RADIOTHERAPY) அளிக்கப்பட்டது . விளைவு பூமியில் ஒரு கடும் நரகத்தைச் சந்தித்தார்கள் , கதிர் வீச்சு சிகிச்சையின்போது  ( RADIOTHERAPY) யோனித் துவாரத்தில் கதிர்வீச்சை கொடுத்துவிட்டு அந்த கருவியை எடுக்கும் போது , யோனித் துவாரத்திலிருந்து இரத்தம் வெளியே வந்து அந்தப் பகுதி முழுவதும் இரத்தம் நனைந்தது. இது மிக நல்ல அறிகுறி என்று மருத்துவர்கள் கூறியதாக என் மனைவி கூறினார்கள் . (இதனைக் கேள்விப் பட்டவுடனேயே இது சித்திரவதைக் கூடங்களில் நடப்பதைப் போலல்லவா இருக்கிறது என நினைத்தேன்) . ஆனால் எனது மாமியார் அவர்களோ , ஒன்றுக்குப் போகும்போதும் , எப்போதும்  நீர்த்தாரை முழுவதும் கடும் எரிச்சலும் வேதனையும் இருக்கிறது .என்று கூறிக் கொண்டே இருந்தவர்கள் , அந்த சிகிச்சையின் முடிவில் உடலெங்கும் எரிகிறதே , எரிகிறதே என்று புலம்பி , கண்ணீர் விட்டுக் கதறினார்கள் .உடலெங்கும் ரணமாகி , பெரும் வேதனையை அனுபவித்தார்கள்.

கடைசியில் எனது மாமியார் அவர்கள் உயிர் பிரியும் தருவாயில்  என்னை அழைத்தார்கள். என் கையைப் பிடித்துக் கொண்டு “ உங்கள் மனைவியை என் மகளை முள் முனை முறியாமல் (காலில் முள் பாய்ந்துவிட்டால் அதனை எடுக்கும் போது அதன் முனை முறிந்துவிட்டால் , அந்த முள் முனை உள்ளேயே இருந்து புறையோடி காலையே எடுக்க வேண்டி வரும் . சில சமயம் உயிர் ஆபத்து கூட நேரலாம் . எனவே முள் முனை முறியாமல் பார்த்துக் கொள்வது என்றால் என் மகளை உங்கள் மனைவியை கண்ணீர் விடாமல் பார்த்துக் கொள்ளுங்கள் என்று பொருள் )பார்த்துக் கொள்ளுங்கள் , நான் இனிமேல்  உயிரோடு இருக்க மாட்டேன் இந்த சித்திரவதையை என்னால் பொறுக்க முடியவில்லை என்று கதறியபடியே உயிர் விட்டார்.

இதில் முக்கியமாக ஒரு விடயத்தைக் குறிப்பிட விரும்புகிறேன். எனது நண்பர் இது போன்ற கர்ம வியாதிகளுக்கு மருந்துகள் கொடுத்து வருகிறார். அவர் இது போன்ற அல்லோபதி மருந்துகள் கொடுத்துக் கொண்டே , சித்த மருந்துகளையும் எடுத்துக் கொள்ளச் சொன்னார்.அவருக்கு நான் சொன்னது மேலே சொன்னவைகளைத்தான்,மேலும் சித்த மருந்து உயிர் கொடுக்கும் , ஆனால் அல்லோபதி மருந்து உயிரை எடுக்கும் . புற்று நோயாளி இறந்துவிட்டால் பொது மக்கள் “அல்லோபதி வைத்தியம் எங்கோ போய்க் கொண்டிருக்கிறது , இந்தக் காலத்தில் போய் நாட்டு மருந்தைக் கொடுத்துக் கொன்றுவிட்டார்கள் “என்று சித்த வைத்தியனின் மேல் பழி போடுவார்கள்.எனவே கொல்வது அல்லோபதி மருத்துவராக இருந்தாலும் (அல்லோபதி மருத்துவர்கள்  “LICENSED TO KILL “) பழி அவர்கள் மேல் சொல்ல மாட்டார்கள் , சித்த வைத்தியரின் பேரில்தான் சொல்வார்கள் .எனவே அல்லோபதி மருத்துவ முறையை மேற்கொண்டு கொண்டே சித்த மருந்துகளை எடுத்துக் கொள்கிறேன் மருந்து கொடுங்கள் என்று கூறினால் எனது சித்த மருத்துவ நண்பர்களே அவர்களை நல்ல இதமான வார்த்தைகளைச் சொல்லி , மருந்துகள் ஏதும் கொடாமல் திருப்பி அனுப்பிவிடுங்கள்.இல்லையேல் அந்த நோயாளரைக் கொன்றது அல்லோபதி மருந்துகளாக இருக்கும் பழி சித்த வைத்தியர்கள் மேல் விழும் என்பதை வருத்தத்துடன் சொல்லிக் கொள்கிறேன்.

திரு உதய் அவர்களின் தாயார் உயிரிழந்துவிட்டார் என்று கேள்விப்பட்டேன்.அன்னாரின் ஆத்மா இறைவனின் திருவடி நிழலில் இளைப்பாற இறைவனை வேண்டுகிறேன்.அத்துடன் பல்லாயிரக் கணக்கானவர்கள் இனி நம் நாட்டில் புற்று நோயால் பாதிக்கப்படுவார்கள் என்பதையும் இங்கே எச்சரிக்க விரும்புகிறேன் , இதற்குக் காரணம் நம் பல்லாண்டுகளாக பசுமைப் புரட்சி என்ற பெயரில் , உணவுப் பொருள் உற்பத்தியில் பயன்படுத்தி வந்த, நஞ்சுக்களான உரம் , மற்றும் பூச்சி மருந்துகளே.மேலும் அல்லோபதி மருந்துகளின் பயன்பாடு என்பது இந்த நோயை அதிகரித்துள்ளது .அதாவது எல்லா வலிகளுக்கும் உபயோகிக்கும் பாராசிட்டமால் தொடர்ச்சியாக 100 மாத்திரைகள் பயன்படுத்தினால் புற்று நோய் உறுதியாக வரும் என்று நீதியரசர் பலராமையா அவர்கள் தமது புற்றுநோயைக் குணமாக்கலாம் என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார்.

எனவே இந்தப் பதிவு இப்போது மிக அவசியமானதாகவே உள்ளது .நீதியரசர் பலராமையா அவர்கள் உயிருடன் இருந்த போது , புற்று நோயால் பாதித்த பலரை எமது வேலைப் பழுவின் காரணமாக எம்மால் சிகிச்சையளிக்க இயலாது என்று கூறி, நீதியரசர் பலராமையா அவர்களின் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளேன். அவரது மருத்துவ மனையில் , புற்று நோய்க்கு சில எளிய மருத்துவக் குறிப்புக்களை  கொடுத்துள்ளார்கள் . அதைக் கீழே கொடுத்துள்ளோம் . பயன்படுத்தி பயன் பெறுங்கள்.

judge palaramaiah cancer treatment 2

துளசி இலை , அருகம்புல் இலை இவற்றைப் பயன்படுத்தும் போது அவற்றை நன்றாக அலசிய பின்னர் உபயோகிக்கவும் , ஏனெனில் மாடு ஆடு போன்றவை மேயும் போது அவற்றின் மலம் மற்றும் மூத்திரம் (லெப்டோ பைரோசிஸ் ) போன்றவற்றில் இருக்கும் கிருமிகள் பரவ ஏதுவாகும்.இதற்காகவேதான் ஒவ்வொரு கோவிலிலும் நந்தவனம் போன்றவை அமைத்து நம் முன்னோர்கள் ஆடு மாடுகள் அணுகாதவாறு பாது காத்து வந்தனர்.ஒவ்வொரு தெய்வத்துக்கும் ஒரு மூலிகை என்று உண்டாக்கி வைத்தார்கள் . நாம் அவற்றின் காரணம் புரியாமல் வீதிக்கொரு கோவில் உண்டாக்கி வருகிறோம்.ஆனால் அவற்றுக்கு நந்தவனம் போன்றவை உண்டாக்க இயலாது .இதனால் கோவில் உண்டாக்கப்பட்டதன் முழு நோக்கம் நிறைவேறவில்லை.அருகம் புல்லை உபயோகிக்கும் போது அதன் கணுப் பகுதியை நீக்கியே இலையை மட்டுமே உபயோகிக்க வேண்டும்.வீதியோரங்களில் அருகம் புல் ஜூஸ் என்று தயாரித்து விற்பவர்கள் இது போன்ற கவனங்களை மேற்கொள்வதில்லை .எனவே இவற்றை உபயோகிப்பதில் கவனம் தேவை.வில்வ மரம் ஒவ்வொரு சிவன் கோவிலிலும் உண்டு .இதில் மஹா வில்வம் என்பது மிகச் சிறப்பு மிக்கது .

மேலும் புற்று நோயைத் தீர்ப்பதில் மிக வல்லமையான எனது முப்பாட்டனாரின் மருத்துவக் குறிப்பொன்று தருகிறேன். இதில் கூறப்பட்டுள்ளவைகளை கவனமாக மேற்கொள்ள வேண்டும்.

நூறு ஆண்டுகள் பழமையான வேப்ப மரத்தைக் கண்டுபிடியுங்கள் . அது ஏதாவது பழைய கோவிலில் இருக்கும். அது ஊர்ப் பெரியவர்களின் பாதுகாப்பில் இருக்கும்.அந்த வேப்ப மரத்தின் பட்டைகளை மருந்துக்காக வெட்டிக் கொள்ள அவர்களிடம் அனுமதி கோருங்கள். அதை மும்முறை வலம் வந்து வணங்கி , நோயாளரின் பெயரை, ஒரு பனங்குருத்தோலையில் எழுதி மஞ்சள் தடவிய நூலால் கட்டி அந்த வேப்ப மரத்தில் கட்டுங்கள். பின் அந்த வேப்ப மரத்தின் அருகில் சென்று ” நசி ! மசி! உன்னுயிர் , உன்னுடலில் தங்குவதாகுக! என்று 108 முறை செபித்து பின்னர் மரப்பட்டைகளை வெட்டி எடுக்க வேண்டும். மரப்பட்டையை வெட்டிய பின்னர் அந்த இடத்தில் அந்த மரத்தின் கீழே இருக்கும் மண்ணை குழைத்து அப்பி விட வேண்டும் . மரத்தைப் பாது காப்பது அதன் பட்டைகளே , அதனை வெட்டிவிட்டால் மரம் பட்டுபோய்விடும்.பல நூறு ஆண்டுகளாகக் காக்கப்பட்டிருந்த மரம் பட்டுப் போய்விட்டால் பலருக்கும் பயனில்லாமல் போய்விடும்.மரப்பட்டைகளை வெட்டிய காயத்தை ஆற்ற மண்ணே மருந்தாக வேலை செய்து அந்த காயத்தை ஆற்றி மீண்டும் மரப்பட்டையை வளர்த்துவிடும்.

பின்பு அந்த மரப்பட்டையைக் கொண்டு வந்து சிதைத்து நிழலில் உணர்த்தி காயவைத்து அதன் எடைக்கு  , நாலு பங்கு தூசி நீக்கி ,கல் மண் நீக்கி தண்ணீரில் அலசிக் காய வைத்த சீரகம் சேர்த்து கல்லுரலில் இடித்து பருத்தி சல்லாத் துணியில் சலித்து(வஸ்திர காயம் என்பார்கள்) எடுத்து வைத்துக் கொண்டு வெறும் வயிற்றில் அந்தி , சந்தி (காலை ஆறு மணிக்கும், மாலை ஆறு மணிக்கும் குளித்து முடித்து அரை மணி நேரம் கழித்து) ஆறு மாதங்கள் சாப்பிட்டு வர புற்று நோய் குணமாகும்.

இதே போல் சர்க்கரை நோய் வராமல் தடுக்கவும் , வந்ததைப் போக்கவும் பலமுறைகள் உள்ளன.அதில் மது மர்த்தினி சூரணம் என்றும் மது மேக சூரணம் என்றும் அழைக்கப்படும் சூரணம்  சர்க்கரை நோயைக் கட்டுக்குள் வைப்பதுடன் , ஆறு மாதங்கள் தொடர்ந்து உபயோகிக்க சர்க்கரை நோயினால் ஏற்பட்ட அத்தனை பிரச்சினைகளும் உடலில் இருந்து நீக்கப்படும் .கீழ்க் கண்ட பதிவுகளைப் படியுங்கள்.

மச்ச முனி மூலிகையகம் (பாகம் 3)மதுமேகச் சூரணம் சர்க்கரை நோயாளர்க்காக

சர்க்கரை வியாதியை குணமாக்கலாம் ( பாகம் 11 ) ஆவாரம்பூ ஒரு அற்புத மூலிகை

judge palaramaiah sugar treatment 001

நன்றி நீதியரசர் பலராமையா அவர்கள்.

12 responses to “புற்று நோய் குணமாக்கலும் சர்க்கரை நோய் குணமாக்கலும்”

 1. வாழ்க வளமுடன்! வாழ்க வாழ்வாங்கு !!
  வாழ்க வளமுடன் வாழ்க வாழ்வாங்கு
  அன்புடன்,
  செ. சீனிவாசன்

 2. prem says:

  interstitial lung disease (ILD) என்ற நோய்க்கு சித்தாவில் தீர்வு உண்டா?

  • machamuni says:

   அன்புள்ள திரு ப்ரேம் அவர்களே,
   உங்கள் கருத்துரைக்கு நன்றி,
   கீழ்க்கண்ட விடயங்களை படியுங்கள்.
   Interstitial (In-Tur-STISH-Ul) Lung Disease Describes A Large Group Of Disorders Characterized By Progressive Scarring Of The Lung Tissue Between And Supporting The Air Sacs. The Scarring Associated With Interstitial Lung Disease May Cause Progressive Lung Stiffness, Eventually Affecting Your Ability To Breathe And Get Enough Oxygen Into Your Bloodstream.
   Interstitial Lung Disease May Be Broadly Categorized Into Known And Unknown Causes. Common Known Causes Include Autoimmune Or Rheumatologic Diseases, Occupational And Organic Exposures, Medications, And Radiation. Interstitial Lung Disease Of Unknown Cause Is Predominated By Idiopathic Pulmonary Fibrosis, A Specific And Progressive Fibrotic Lung Disease, Followed By The Idiopathic Interstitial Pneumonias, Such As Nonspecific Interstitial Pneumonia (NSIP), And Sarcoidosis.
   Once Lung Scarring Occurs, It’s Generally Irreversible. Medications May Slow The Damage Of Interstitial Lung Disease, But Many People Never Regain Full Use Of Their Lungs. Lung Transplant Is An Option For Some People Who Have Worsening Interstitial Lung Disease Despite Treatment.
   http://journal.publications.chestnet.org/pdfaccess.ashx?ResourceID=2110250&PDFSource=13
   Abstract
   The interstitial lung diseases are comprised of a group of pulmonary disorders characterized clinically by diffuse infiltrates on the chest radiograph and histologically by distortion of the gas exchanging portion of the lung. The physiologic correlates are restriction of lung volumes and impaired oxygenation. The term “interstitial” when applied to these diseases is actually a misnomer because it implies that the inflammatory process is limited specifically to the area between the alveolar epithelial and capillary endothelial basement membranes. The diseases currently grouped as “interstitial” also frequently involve the alveolar epithelium, alveolar space, pulmonary microvasculature, and less commonly, the respiratory bronchioles, larger airways, and even the pleura.
   The enormous differential diagnosis of interstitial lung disease can be made manageable by understanding that pneumoconiosis, drug-induced disease, and hypersensitivity pneumonitis account for over 80% of the responsible entities and can usually be identified from the patient’s history. The nine remaining diseases/disease categories include: sarcoidosis, idiopathic pulmonary fibrosis, bronchiolitis obliterans-organizing pneumonia, histiocytosis X, chronic eosinophilic pneumonia, collagen vascular disease-associated interstitial lung disease, granulomatous vasculitis (Wegener’s granulomatosis, Churg-Strauss syndrome, lymphomatoid granulomatosis), Goodpasture’s syndrome, and pulmonary alveolar proteinosis.
   The diagnosis of a specific interstitial lung disease can be made via various means including the patient’s history, specific serologies, bronchoalveolar lavage, transhronchial biopsy, and biopsy of extrathoracic tissues or open lung biopsy. A directed diagnostic approach can be formulated based on an understanding of these techniques and a thorough knowledge of the clinical presentations and specific diagnostic criteria for each of the major diseases.
   This monograph will serve as a guide for the clinician to use in evaluating and treating patients with interstitial lung disease. We begin by reviewing the clinical presentation, diagnostic criteria, and management of specific interstitial lung diseases excluding pulmonary infection, neoplasm, and sarcoidosis. Pneumoconiosis and drug-induced syndromes are not discussed in detail, but the agents responsible and pertinent exposures are presented in tabular form in the discussion of the general diagnostic approach.

   http://www.sciencedirect.com/science/article/pii/0011502991900224
   This article reviews the most important articles published in interstitial lung disease, as reviewed during the Clinical Year in Review session at the 2012 annual European Respiratory Society Congress in Vienna, Austria.
   Since the recent international guidelines for the management of idiopathic pulmonary fibrosis (IPF), important new evidence is available. The anti-fibrotic drug pirfenidone has been recently approved in Europe. Other pharmacological agents, especially nintedanib, are still being tested. The so-called triple combination therapy, anticoagulation therapy and endothelin receptor antagonists, especially ambrisentan, are either harmful or ineffective in IPF and are not recommended as treatment. Although the clinical course of IPF is highly variable, novel tools have been developed for individual prediction of prognosis. Acute exacerbations of IPF are associated with increased mortality and may occur with higher frequency in IPF patients with associated pulmonary hypertension.
   Interstitial lung disease associated with connective tissue disease has been definitely established to have a better long-term survival than IPF. A subset of patients present with symptoms and/or biological autoimmune features, but do not fulfil diagnostic criteria for a given autoimmune disease; this condition is associated with a higher prevalence of nonspecific interstitial pneumonia pattern, female sex and younger age, although survival relevance is unclear.
   பொதுவாக அல்லோபதி மருத்துவம் ஒரே உள்ளுறுப்பில் உண்டாகும் நோய்க் குறிகளுக்கு, வாதநோய் கழுத்தில் வந்தால் செர்விகல் ஸ்பாண்டிலிட்டிஸ் என்றும் கீழ் முதுகில் வந்தால் எல் 3, எல் 4, எல் 5 லம்பர் வெர்டப்ராவில் எலும்பு தேய்ந்துவிட்டது என்றும் , முழங்காலில் வந்தால் ஆர்த்தரைடிஸ் என்றும் , கணுக்காலில் வந்தால் அங்கில் ஆர்த்தரைடிஸ் நோய்கள் என பல பெயரிட்டு அழைக்கும்.அது போலவே நுரையீரலில்( வெள்ளீரல் ) உண்டாகும் நோய்களை ஆஸ்துமா என்றும், ப்ரைமரி காம்ப்லெகஸ் என்றும் , ஈசனோபிலியா என்றும் இண்டெர்சியல் லங் டிசீஸ் என்றும் இன்னும் பல பெயரிட்டு என்றும் அழைப்பார்கள்.ஆனால் இதற்கு திரு அமீர் சுல்தானிடம் கப நோய் நிவாரணி என்ற மருந்து கிடைக்கும்.அந்த மருந்து இந்த நோயைக் குணமாக்கும்.
   இப்படிக்கு
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 3. அன்புள்ள சாமிஜி,
  சுக்கு பொடி செய்வது பற்றி . சுக்கின் மீது சுண்ணாம்பு தடவி, காய வைத்து, நெருப்பினுள் சுட்டு, பின் மேல் தோல் சீவி, பொடியாக்கி பயன்படுத்த வேண்டும் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். இந்த தளத்தில்(http://asmunies.blogspot.com/2013/07/blog-post_3319.html), உப்பை தாண்ணீர்விட்டு அரைத்தது, கவசம்போல் பூசி, வெய்யிலில் காயவைத்தது, நெருப்ப்பில், சுட்டு மேல் தோல் நீக்கி, பொடிக்க வேண்டும் என்று இருக்கிறது. சரியான முறையை தெரிவிக்கவும்.
  அன்புடன்,
  செ. சீனிவாசன்,.

 4. அரவிந்தன் says:

  அன்புடன் வணக்கம்.
  எனக்கு வயது 25. திருமணம் ஆகவில்லை. நான் கடந்த பல வருடங்களாக சுய பழக்கத்தில் மூழ்கி உடலும் உறுப்பும் தளர்ந்து போய் நின்றால் நடந்தால் வலி, உடல் அசதி, கீழே உட்கார்ந்தால் 2 நிமிடத்தில் கால்கள் மறுத்து போகுதல், கை விரல்களில் நடுக்கம், மிக முக்கியமாக, சுய பழக்கத்தில் ஈடுபட்டால் தவிர மற்ற நேரங்களில் உறுப்பில் எழுச்சி என்பதே துளியும் இல்லாமல் இருந்தேன். வெளியேயும் சொல்ல முடியாமல் எனக்குள் நானே மனதுக்குள் புழுங்கிய நாட்கள் பல உண்டு.

  வழக்கம் போல மருத்துவத்தை வியாபாரமாக செய்யும் சில நல்லவர்களிடம் சில ஆயிரங்களை இழந்தேன். என் அனுபவத்தில் ஒன்றே ஒன்று கூறிக்கொள்கிறேன். சுயப்பழக்கம் என்பது அளவோடு இருந்தால் தீங்கு இல்லை. நான் அளவுக்கு மீறி ஒரு நாளிலேயே 2,3 முறை என்று உணர்ச்சிகளை அடக்க முடியாமல் பல ஆண்டுகள் ஈடுபட்டதால் இந்த நிலையை அடைந்தேன்.

  இறைவன் அருளால் நான் இந்த மச்சமுனி இணைய தளத்தில் “தாது ஜீவ விருத்தி சூரணத்தின்” மருத்துவ குணங்களை பற்றிய பதிவை படிக்க நேரிட்டது. திரு.அமீர் சுல்தான் அவர்களிடம் அலைபேசியில் உரையாடிய பிறகு ஒரு நம்பிக்கையும் தெளிவும் பிறந்தது.

  நம்பினால் நம்புங்கள் நண்பர்களே. இந்த அற்புத சூரணத்தை எடுத்துக்கொண்ட 2 வார காலத்திலேயே ஏற்பட்ட மாற்றங்களை சொல்கிறேன்.. கைகளில் உள்ள நடுக்கம் நீங்கியது! உறுப்புகள் என்னுடைய நேரடி தீண்டல் இல்லாமல் எண்ண ஓட்டங்கள் மூலமாகவே எழுச்சி ஏற்படுவதை கண்கூடாக பார்த்தேன்! அதிகாலை நேர எழுச்சியை பல காலத்திற்கு பிறகு உணர்ந்தேன்! அதன் பிறகு ஒரு ஆண் மகனுக்கு கிடைக்கும் தன்னம்பிக்கையை பற்றி நான் கூற வேண்டியதில்லை.. இப்பொழுது உடலாலும் மனதாலும் மிகவும் உறுதியாக உணருகிறேன்! என்னை பிடித்திருந்த தாழ்வு மனப்பான்மையும், கூச்ச சுபாவமும் நீங்கியது! இதன் பிறகு தான் ஒரே ஒரு விஷயத்தில் என்னை நானே நொந்து கொண்டேன்.. சில காலம் முன்பே இந்த தளத்தை பார்க்காமல் போய்விட்டோமே என்று.. இறைவன் எல்லாவற்றிற்கும் ஒரு நேரம் வைத்திருக்கிறான்!

  இன்னுமொரு முக்கியமான விஷயம், என்னை போல பல இளைஞர்கள் சரியான மருத்துவ முறை தெரியாமல் நிறைய ஆரய்ச்சிகள் செய்து மருத்துவர் என்ற பெயரில் உலாவும் வியாபாரிகளிடம் சிக்கி பணத்தை இழந்து மேலும் துவண்டு போகின்றனரே என்று.. நல்ல விஷயத்திற்கு அதன் தரமே விளம்பரம்! இதை படிக்கும் என் போன்ற உடல் அறிகுறிகளால் அவதிப்படும் இளைஞர்கள், தயவு செய்து உங்கள் தேடலுக்கு ஒரு முற்றுப்புள்ளி கிடைத்து விட்டது என்று ஒரு பெருமூச்சு விட்டு இங்கே கொடுக்கப்பட்டுள்ள அலைபேசியை தொடர்பு கொண்டு உங்களுடைய உடல்நிலையை பற்றி தெளிவாக விளக்குங்கள். நான் உறுதியிட்டு சொல்கிறேன்.. நீங்களும் என்னை போல இங்கே உங்கள் அனுபவங்களை பதிவிடுவீர்கள். என்னை பெற்ற தாயின் மீது ஆணையாக சொல்கிறேன் நான் கூறிய ஒவ்வொரு வார்த்தையும் உண்மை.

  முக்கிய குறிப்பு: இந்த உன்னதமான மருந்தை எடுத்து கொள்ள ஆரம்பித்த பின்னர், உங்களுடைய சிற்றின்ப நடவடிக்கைகளை மேலும் தொடராமல், மனதை ஒருமுகப்படுத்தி, வாழ்வில் மற்ற ஆக்க பூர்வமான விஷயங்களில் உங்கள் மனதை செலுத்துங்கள் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். தகுந்த வாழ்க்கைத்துணையை பெற்று முறையாக வாழ்வின் அனைத்து இன்பங்களையும் பெற்று வளமாக வாழுங்கள்.

  இது வலைத்தளம் இல்லை. இயற்கையோடு இணைந்து வாழ வழிகாட்டும் நல்வாழ்வு தளம்! கோடி நன்றிகள்! வாழ்க வளமுடன்!

  என்றும் அன்புடன்,
  அரவிந்தன்

 5. machamuni says:

  ”அன்புள்ள சாமிஜி,
  அந்த தளத்தை அலுவலகத்தில் இருந்து படித்தேன். சில () காரணங்களினால் முழுமையாக படிக்க இயலவில்லை.
  நான் இதுவரை சுக்குப்பொடி செய்ததில்லை. கேள்விப்பட்டிருக்கிறேன். அவ்வளவே. எதேச்சையாக, இந்த தளத்தை வாசிக்க நேர்ந்தது. எதற்கும் தங்களிடம் கேட்டுக்கொள்ளலாம் என்று யதார்த்தமாக கேட்டேனே தவிர, தாங்கள் நினைப்பது போன்று, தங்களை ஏளனம் செய்யும் எண்ணம் எனக்கு எள் முனையளவும் கிடையாது.
  என்னுடைய கேள்விகள் முட்டாள்தனமானவையாக இருக்கலாம். ஆனால், ஒரு போதும் ஏளனம் செய்யும் நோக்கிலோ, தங்களை சோதிக்க வேண்டும் என்ற நோக்கிலோ கேட்கப்பட்டதல்ல. தாங்கள் இதை அவசியம் புரிந்துகொள்ள வேண்டும்.
  தங்கள் தளத்தினால் ஆயிரக்கணக்கானவர்கள் பயன் பெறுகிறார்கள். அதில் நானும் ஒருவன். வேலை, மற்றும் குடும்ப சூழல் காரணமாக நீண்ட நாட்கள் தொடர்பில் இல்லை. தற்போது, நெருங்கிய உறவினர் ஒருவருக்காகவும், எனக்கும் சுக்குப்பொடி செய்ய வேண்டும் என்ற தேவை இருந்ததால், இதை கேட்டேன்.

  உண்மையில், உங்கள் விரிவான பதிலுக்காக காத்திருந்தேன். இதுபோன்ற பதில் வருமென்று கனவிலும் கருதியதில்லை. நல்லது. என் ஊழ்வினை போலும்.
  வாழ்க வளமுடன். வாழ்க வாழ்வாங்கு.
  சந்தோசம்,
  செ.சீனிவாசன்.”

  115.241.41.129

  203.91.201.57

  116.202.169.175

  116.203.22.239

  180.215.48.152

  116.202.164.228

  திரு செ.சீனிவாசன் என்ற நீங்கள் இது வரை எழுதிய அனைத்து கருத்துரைகளும் மேலே கண்ட வெவ்வேறு ஐ பி முகவரிகளில் இருந்து எழுதப்பட்டவைகளே. சென்னையில் இருந்தும் பெங்களூருவில் இருந்தும் எழுதப்பட்டிருக்கின்றன . நீங்கள் எஸ் எஸ் டெக்ஸ் என்ற நிறுவனத்தைச் சார்ந்த சீனிவாசன் என்பது முதலில் தெரிய வேண்டும்.அவரும் கீழ்க் கண்ட மின்னஞ்சல் முகவரிகளில் இருந்தும் , ஹரி என்ற பெயரிலும் வெங்கடெசன் என்ற பெயரிலும் , ஹரி கிருஷ்ணன் என்ற பெயரிலும் கீழ்க்கண்டஐ பி முகவரிகளில் இருந்தும் எழுதி வந்த நபர் இப்படியே பல்வேறு முகமூடிகளை அணிந்து கொண்டு வந்து இது போலவே எனது தளத்தில் இல்லாது பிற தளங்களில் உள்ள விடயங்களை எடுத்துக் கொண்டு வந்து கேள்விகள் கேட்பார் .அந்த நபராக இருந்தால் நான் பதில் அளித்திருப்பது சரியே .இல்லையேல் வருந்துகிறேன். எம்மிடம் வர பல்வேறு முகமூடிகளை அணிந்து வர தேவையில்லை..

  haritiens@gmail.com,ssetex@gmail.com,hariharansa@yahoo.co.in

  163.47.14.17

  163.47.14.210

  168.235.197.204

  64.102.255.40

  122.178.187.130

  122.178.115.147

  115.241.15.119

  122.178.167.57

  122.178.164.188

  117.235.12.240

  116.202.119.188

  116.202.122.128

  122.178.147.82

  122.178.150.249

  இப்படிக்கு

  என்றென்றும் பேரன்பினால்

  சாமீ அழகப்பன்

 6. sundar says:

  Sir
  I have a same problem like aravinth.
  I want mr.ameer sulthan mobile no
  And thadhu jeeva viruthy sooranam. Plzzz help me

  • machamuni says:

   அன்புள்ள திரு சுந்தர் அவர்களே,
   உங்களது கருத்துரைக்கு நன்றி,
   அவர் என்ன எழுதியிருக்கிறாரோ அதையே நீங்களும் பின்பற்றுங்கள்.
   இப்படிக்கு
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 7. Anand says:

  புற்று நோயை குணப்படுத்தும் தன்மை கொண்ட
  மருத்துவமாக புற்றுநோய் உள்ள இடத்தின் பகுதியை வெட்டி எடுத்து biobsy செய்வர். இதனால் அந்த பகுதியில் இருக்கும் புற்று நோய்க்கிருமிகள் அகற்றப்படுகின்றன.அனால் எவ்வாறு விதையாக மாறி பரவும் என்று தெரியவில்லை.

  • machamuni says:

   அன்புள்ள திரு ஆனந்த் அவர்களே,
   உங்களது கருத்துரைக்கு நன்றி,
   அல்லோபதி மருத்துவ முறையில் கையாளும் பல முறைகள் பற்றி மக்களிடையே , குறிப்பாக படித்த மக்களிடையேயும் விழிப்புணர்வு இல்லை என்பதையே உங்கள் கேள்வி காட்டுகிறது.அதுவே எனது வருத்தமும் கூட .இருந்தாலும் உங்கள் கேள்விக்கு பதிலளிக்கிறோம்.புற்று நோயை குணப்படுத்த புற்றுக் கட்டியை வெட்டவோ , குத்தி ஊசியினால் திரவம் எடுக்க முயற்சிப்பது , அதனைச் சுற்றி ஓடும் இரத்த ஓட்டத்தில் இந்தப் புற்று நோய் செல்கள் கலந்து உடலெங்கும் ஓடி அந்த செல்கள் உடலின் பல இடங்களில் படியும். இந்த புற்று செல்கள் வெளியில் இருந்து வரும் செல்கள் அல்ல,அவை உடலின் பல பகுதிகள் இப்படித்தான் வளர வேண்டும் என செய்தி எழுதப்பட்ட டி.என்.ஏ மற்றும் ஆர்.என்.ஏ (D.N.A & R.N.A) அழிக்கப்பட்ட முழு முட்டாள்தனமான உடலின் செல்களே .எனவே அவைகள் உடலில் படியும் இடங்களில் எல்லாம் புற்றுக் கட்டிகளாக, வளரும்.விளைவு ஒரு இடத்தில் இருந்த கட்டி இந்த சோதனையின் விளைவினாலேயே உடலெங்கும் பரவி ஒரு புற்று நோயாளியை நிரந்தரமான நோயாளிகளாக மாற்றிவிடும்.கீழுள்ள இணைப்பிலுள்ள யூ டியூப் வீடியோவைப் பாருங்கள்.
   https://youtu.be/gWLrfNJICeM
   உங்களுக்கு இதற்கு முன் விரிவான கருத்துரை பதில் எழுதி வரும் போது ,எமது பிரௌசர் க்ராஷ் ஆகிவிட்டது .எனவே அந்தப் பதில் உங்களுக்குத் தேவையான பதில் அல்ல என்னும் முடிவுடன் . மீண்டும் சிறு அளவு விளக்கங்களுடன் எமது பதில் எழுதப்பட்டுள்ளது.
   இப்படிக்கு
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

 8. Anand says:

  மருத்துவ துறையில் அல்லோபதி மருத்துவர்கள் licensed to kill என்று கூறி தெரிவித்துள்ள உண்மை மதிக்க படவேண்டும். அதேபோல் இன்று நீதி துறையும், காவல் துறையும்.

  • machamuni says:

   அன்புள்ள திரு ஆனந்த் அவர்களே,
   உங்களது கருத்துரைக்கு நன்றி,
   ஆம்.அரசாங்கமே இது போன்ற மோசமான காரியங்களுக்கு ஆதரவாக இருப்பதோடு , மற்ற அருமையான பாரம்பரிய விஷயங்களையும் நம்மை விட்டு அழித்து வருகின்றது, எம்மை மிகுந்த வருத்தத்தை அளிப்பதோடு , இதற்கு நம்மால் என்ன செய்ய முடியும் என்பதை மக்களுக்கு பரப்புரை செய்து , விழிப்பு ஏற்பட எம்மால் ஆன காரியத்தை செய்து வருகின்றோம்.
   இப்படிக்கு
   என்றென்றும் பேரன்பினால்
   சாமீ அழகப்பன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

91 − 83 =