மச்ச முனி இயற்கை மூலிகை விவசாயப் பண்ணை

October 23, 2016 by: machamuni

vivsayam

மச்ச முனி இயற்கை மூலிகை விவசாயப் பண்ணை

மச்ச முனி இயற்கை மூலிகை விவசாயப் பண்ணை என்ற ஒன்றை ஆரம்பிக்க வேண்டும் என நெடு நாள் ஆசை.மூலிகைகளில் கருப்பு மூலிகைகள் கேள்வியுற்றிருப்பீர்கள் . பல இடங்களில் அது இருப்பதாகவும் பல மடங்கு அவற்றின் மருத்துவ குணத்திற்காக, அதை தேடி அலைபவர்கள் இருக்கிறார்கள். அதை உற்பத்தி செய்தவர்கள் சித்தர்கள்.

மூலிகைக் கருப்பு உற்பத்தி செய்யும் முறை:-  முதலில் ஒரு சுத்த பத்தமான செம்மண் இடத்தை தேர்ந்தெடுத்து பண்படுத்தி ஒரு ஆறுக்கு நாலடி பாத்தி கட்டி அதில் ஒரு அடி மண்ணை எடுத்துவிட்டு அதில் மூக்கு வெட்டிய சேங்கொட்டையை சிதைத்து போட்டு , மீண்டும் மண் மூடி வைத்து , மூன்று மாதம் தண்ணீர் பாய்ச்சி பின் அவற்றை கிளரி ஆற விட வேண்டும்.இது போன்று பதினாறு பாத்திகள் தயார் செய்து கொள்ள வேண்டும். பின் அந்த பாத்தியில்  மூலிகைகளில் மஞ்சள் பொன்னாங்கண்ணி(பொற்றலைக் கையான்) , வெள்ளைப்  பொன்னாங்கண்ணி (கையாந்தகரை) , கரிசலாங்கண்ணி, ஆவாரை போன்ற மூலிகைகளை முதல் நான்கு பாத்திகளில் நட வேண்டும் .

பின்பு ஆறு மாதம் வரை தேவைக்கு தண்ணீர் பாய்ச்சி வர அந்த மூலிகைகள் கால் கருப்பாக மாறும். பின் அந்த மூலிகைகளை , அடுத்துள்ள பாத்திகளை போத்து நடவு செய்து (மூலிகைகளின் இலைப் பகுதியோடு சேர்ந்த தண்டுப் பகுதிகளை )   பின்பு ஆறு மாதம் வரை தேவைக்கு தண்ணீர் பாய்ச்சி வர அந்த மூலிகைகள் அரைக் கருப்பாக மாறும்.

பின் அந்த மூலிகைகளை , அடுத்துள்ள பாத்திகளை போத்து நடவு செய்து (மூலிகைகளின் இலைப் பகுதியோடு சேர்ந்த தண்டுப் பகுதிகளை )  பின்பு ஆறு மாதம் வரை தேவைக்கு தண்ணீர் பாய்ச்சி வர அந்த மூலிகைகள் முழுக் கருப்பாக மாறும்.

இந்த கருப்பான மூலிகைகளின் சக்தி அளப்பரியது , இதை மரணத்தைத் தள்ளிப் போடவும் , பல கர்ம வியாதிகளை குணப்படுத்தவும் சித்தர்கள் உபயோகப்படுத்தி வந்துள்ளனர்,இதில் சேங்கொட்டை மிகக் கவனமாகக் கையாள வேண்டிய மருந்துப் பொருள் . அதன் பால் பட்டாலே கை பொத்துப் போய்விடும்.எனவே கவனம் தேவை ,

இந்த கருப்பு மூலிகைகளை 48 நாட்கள் உபயோகித்து  வர நரை திரை மூப்பு மாறும். தேகம் கல் போலாகும் . ஒரு யானைப் பலமுண்டாகும் என்று சித்தர்கள் கூறுகிறார்கள்.இந்த கருப்பு மூலிகைகளை உற்பத்தி செய்யவும் மூலிகை இயற்கை விவசாயப் பண்ணை வைத்து பலரின் உடற்பிணி போக்கவும் இறைவன் அருள்பாலிப்பானாக.

இதற்கான பெரும் பொருட்செலவு தேவைப் படுகிறது. நமது மச்ச முனி வாசகர்கள்  இதற்கான பொருளுதவி செய்ய இயன்றால் கீழ்க் கண்ட வங்கிக் கணக்கில் போட்டுவிட்டு எமது machamuni.com@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு தெரிவிக்கவும்.இது எனது மகளின் வங்கிக் கணக்கு .

SBI ACCOUNT HOLDER NAME:A.SRI LATHA.

S.B A/C NO:30807797084

A/C MAINTAING BRANCH:RAJAPALAYAM.626117

VIRUDHUNAGAR-DIST.TAMILNADU.INDIA.

IFS CODE :SBIN0000906

இந்த வங்கிக் கணக்கில் S.B.I  TELLER MACHINE லும் போட்டுவிட்டு தகவலை மின்னஞ்சல் முகவரியில் தெரிவிக்கவும்.

நமது மச்ச முனி வலைத்தள வாசகர்களான திரு பிரம்மேந்திரன் அவர்கள்  மற்றும் அவர் மனைவி திருமதி கலைச்செல்வி அவர்களும் ,நமது மச்ச முனி வலைத் தளத்தில் இதுவரை வெளியான மருத்துவக் குறிப்புகளைத் தொகுத்து பி.டி.எஃப் வடிவில் நமது வலைத் தள வாசகர்களுக்காக அளித்துள்ளார்கள் . அவற்றை  நமது வலைத் தள வாசகர்கள் பதிவிறக்கம் செய்யும் வகையில் GOOGLE DRIVE இணைப்பையும் கொடுத்துள்ளோம்.

https://drive.google.com/file/d/0B4eezlYyQs6dX080U2xxOHpxLXVmRUQ3SmgtOFQzNl9ycU9N/view?usp=sharing

machamuni-com-medicinal-usaages

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

65 − = 55