ஜல்லிக்கட்டு (ஏறு தழுவுதல்)

January 17, 2017 by: machamuni

ஜல்லிக்கட்டு (ஏறு தழுவுதல்)

201505242322058604_The-cattle-fair-in-Tirupur_SECVPF Nattupasu

pv10

Slide3

nattumadugal

Slide3

tamil-cow

TN_142114000000

பல நாட்களாக நாம் எழுதுவதையே விட்டுவிட்டேன். நம் எழுத்து என்ன உத்வேகத்தை எழுப்பிவிடப் போகிறது என்ற எண்ணமே காரணம். ஏனெனில்   எமது மச்ச முனி மூலிகைப் பண்ணை என்ற கட்டுரைக்கு எந்த ஆதரவும் காட்டப்படவில்லை . இந் நிலையில் இந்த ஜல்லிக்கட்டு (ஏறு தழுவுதல்) க்கு ஆதரவான இளைஞர் போராட்டம் இன்னும் தமிழன் தன்னுணர்வாளனாகவே இருக்கிறான் என்ற எண்ணத்தை எம்முள்ளே எழுப்பியதின் விளைவே இக்கட்டுரை. இது  எங்கோ எதற்கோ நடக்கும் நிகழ்வு என்றெண்ணாதீர்கள் . உங்கள் குடும்ப ஆரோக்கியம் சம்பந்தப்பட்டது . எதிர்கால நம் சந்ததியினர் சம்பந்தப்பட்டது.எனவே அனைத்து தமிழர்களும் விழித்தெழுந்து போராட வேண்டிய தருணம் இது .

ஜல்லிக்கட்டு என்ற ஏறு தழுவுதல் என்ற இந்த விடயத்தை இவ்வளவு ஆதரவு தெரிவிக்கும் அனைத்து தரப்பு மக்களுக்கும் எமது நன்றி. இவ்வளவு பெரிய எழுச்சி நமது இளைய சமுதாயத்தில் ஏற்பட்டதைக் கண்டு எனக்கு அளப்பரிய சந்தோஷமும் , இதே விடயத்தை வீரிய தற்கொலை விதைகளை அளித்து வரும் மான்சாண்டோ கம்பெனியையும் எதிர்த்து போராட வேண்டும். நமது பாரம்பரிய மாடுகளைக் காக்க போராடுவது போல் நமது பாரம்பரிய விதைகளையும் பாதுகாக்க போராட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.இயற்கை விவசாயத்தையும் காக்கவும் போராட வேண்டும்.

அதோடு சீமைக் கரு வேல மரங்களை ஒழிக்க கடும் போராட்டங்களை நிகழ்த்த வேண்டும்.இதற்கு ஆதரவாக தமிழக மதுரை உயர்நீதி மன்ற கிளை உத்தரவு பிறப்பித்ததை மிக சந்தோஷமாக பார்க்கிறோம்.13 மாவட்ட ஆட்சியாளர்களை இதை கடைப்பிடிக்க பிறப்பிக்கட்ட உத்தரவை சாமானியனும் , கடைக் கோடி தமிழனும் நிறைவேற்ற ஆதரவையும் , தமது பங்களிப்பையும் செய்ய கடமைப் பட்டுள்ளோம். ஒவ்வோர் விவசாயியும் இறக்கிறான் என்றால் என் கண்ணில் குருதி வழிகிறது.

சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம் என்ற வார்த்தைகளை அனைவரும் உணருங்கள்.விவசாயத்தை காப்பாற்றுங்கள் வருங்கால இளைஞர்களே . இதே  ஜல்லிக்கட்டு (ஏறு தழுவுதல்) விஷயத்திற்கு செய்யும் அதே ஆதரவை இந்த விவசாயத்தைக் காப்பதற்கும் உதவுங்கள்.

இயற்கையை சரிசெய்ய இனி சித்தர்களால் மட்டுமே முடியும்

தமிழர்களும் தமிழர் உழவுத்தொழிலும் விழிப்படைய வேண்டிய வேளை(பாகம் 1)

சுயநலமில்லாத பொது நல சமுதாயத்தை சித்தர்கள் விரும்புகிறார்கள்

தமிழர்களும் தமிழர் உழவுத்தொழிலும் விழிப்படைய வேண்டிய வேளை (பாகம் 3)

தமிழர்களும் தமிழர் உழவுத்தொழிலும் விழிப்படைய வேண்டிய வேளை(பாகம் 1)

தமிழர்களும் தமிழர் உழவுத்தொழிலும் விழிப்படைய வேண்டிய வேளை (பாகம் 2)

மச்ச முனி இயற்கை மூலிகை விவசாயப் பண்ணை

நமது மத்திய மாநில அரசுகளை இதற்கு வற்புறுத்த வேண்டும். இல்லையெனில் சீமைக் கரு வேல மரங்களை ஒழித்தாலும் , நம் மாநிலத்தில் நீர் பற்றாக் குறையும் , விவசாயம் மடிதலும் , விவசாயிகள் மரணமும் , வறுமையும்  ,  ஒழிக்க முடியாததாகிவிடும்.

https://www.youtube.com/watch?v=haLimnzibxY


https://www.youtube.com/watch?v=jrHlt0PcYwg

என்றென்றும் பேரன்பினால்.

சாமீ அழகப்பன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 − = 13