தடுப்பூசிகளும் அவை பற்றிய எச்சரிக்கைப் பதிவு (பாகம் 3)

February 12, 2017 by: machamuni

body_bacteria-720x480

{தடுப்பூசிகளும் அவை பற்றிய எச்சரிக்கைப் பதிவு (பாகம் 1)}ஐ படித்துவிட்டு பின் இந்தக் கட்டுரையை வாசிக்கவும்.அதன் இணைப்பு இதோ

தடுப்பூசிகளும் அவை பற்றிய எச்சரிக்கைப் பதிவு (பாகம் 2)

தடுப்பூசிகள் பற்றிய விழிப்புணர்வு கட்டுரைகளை அவ்வபோது வெளியிட்டு வருகிறோம். அவற்றுக்கு ஆதாரமாக தற்போது ஒரு பித்தலாட்டம் அம்பலமாகி உள்ளது.

அமெரிகாவின் நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம் (CDC) 2003 ல், அறிக்கை ஒன்றில் 340% ஆட்டிஸம் நோய் (மூளை சிதைவு) ஆப்ரிக்க – அமெரிக்கா பிள்ளைகளிடத்தில் பரவ காரணம் MMR தடுப்பூசி என்பது கண்டுப்பிடிக்கபட்டு மறைக்கப்பட்டது. பின்பு அதில் சில மக்கள் தொகை மறைக்கப்பட்டு சரி செய்யபட்டு வெளியிடப்பட்டது. ஆனாலும் உண்மையான நகலில் ஆட்டிஸம் நோய்க்கு காரணம் MMR தடுப்பூசி தான் காரணம் என்பதை IOM வெளியிட்டுள்ளது .

http://iom.edu/~/media/Files/Activity%20Files/PublicHealth/ImmunizationSafety/DeStefanoslides.pdf

வில்லியம் தாம்சன் என்பவர் அரசு அதிகாரியாக 10 வருடங்களுக்கு மேல் வேலை செய்தவர் . அவர் இந்த MMR தடுப்பூசியின் விளைவாக ஏற்படும் ஆட்டிஸம் நோயின் பாதிப்பு குறித்து நன்கு அறிந்தவர். அவருடைய மேல் அதிகாரிகள் செய்த தவறை 10 வருடங்களாக வெளியிடாமல் இருந்ததற்காக மிகுந்த வருத்தத்தை தெரிவித்துள்ளார்.

2004 ல் டாக்டர் தாம்சன் வெளியிட்ட அறிக்கையில்  அவர் Dr. Gerber ding (head of the CDC at that time)கிடம் இந்த ஊசியின் விளைவுகள் குறித்து பொது மக்கள் எவ்வளவு பாதிப்பிற்கு உள்ளானார்கள் என்பதை விவரித்துள்ளார். ஆனால் இப்போது வரை அதனை மூடி மறைத்து வந்துள்ளது நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம் (CDC)…!

சுருக்கமாக சொன்னால் தடுப்பூசி குழந்தைக்களுக்கு நோயெதிர்ப்பு ஆற்றலை கொடுக்காமல், அதிகப்படியான பக்கவிளைவுகளை கொடுப்பது ஆதாரப்பூர்வமாக உறுதியாகி உள்ளது. இந்த செய்தி வெளிவந்து இத்தனை நாள் ஆனாலும், மக்கள் மேல் அக்கறை கொண்டதாக கூறும் மருத்துவர்கள் இதனை ஒரு செய்தியாக கூட மக்களுக்கு சொல்லவில்லையே…! ஏன்..?

தடுப்பூசிகள் கண்டுபிடிப்பதற்கு முன்பும் பலநோய்கள் தானாக தோன்றி எவ்வித மருந்துகளுமின்றி தானாக குறைந்திருக்கிறது. இப்படி இயற்கையாகக் குறைந்த பலநோய்களை தங்கள் வரைபடத்தில் ஏற்றி வருமானமாக மாற்றியது தடுப்பூசி தயாரிக்கும் கம்பெனிகள். 20 ஆம் நூற்றாண்டின் முதல் 60 ஆண்டுகளுக்குள் தட்டம்மை நோய் பாதிப்பால் ஏற்பட்ட மரணங்கள் 97.7% குறைந்து விட்டன. அமெரிக்காவில் 1900 இல் ஒரு மில்லியனில் 133 பேர் இறப்பு என்பது குழந்தை பொது மரண விகிதம். இவர்களில் 100 பேர் தட்டம்மை யால் இறந்தவர்கள். 1960 இல் மரண விகிதம் 0.3% ஆகக் குறைந்து விட்டது. ஆனால் 1963 இல் தான் தடுப்பூசி அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த தட்டம்மை தடுப்பூசியால் மரண விகிதம் குறைந்துவிட்டதாக இப்போது கூறிக்கொள்(ல்)கிறார்கள்.

இந்தத் தடுப்பூசிகள் நோயைக் கட்டுப்படுத்தா விட்டால் கூட பரவாயில்லை; ஆனால் புதிய, கொடூரமான நோய்களையும் நம் குழந்தைகளுக்கு பரிசாகத் தருகின்றன. 2004 ஆம் ஆண்டில் வெளியான டென்மார்க் நாட்டு அறிக்கையில் தடுப்பூசி போடப்பட்ட குழந்தைகளில் மூளை வளர்ச்சி பாதிக்கப்பட்ட குழந்தைகள் மட்டும் 4,40,000 பேர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. உலகம் முழுக்க இவ்வாறு தடுப்பூசிகளால் பாதிக்கப்பட்ட பட்டியல் இன்றளவும் தொடர்கிறது.

அமெரிக்காவில் 1983 இல் 10 தடுப்பூசிகள் மட்டுமே குழந்தைகளுக்கு பரிந்துரைக்கப்பட்டன. அப்போது மூளை வளர்ச்சிக்குறைவு உள்ள அமெரிக்கக் குழந்தைகள் பத்தாயிரத்தில் ஒருவர் தான். 2008 ஆம் ஆண்டு குழந்தைகளுக்குப் பரிந்துரைக்கப்படும் தடுப்பூசிகளின் எண்ணிக்கை 36. இப்போது அமெரிக்கக் குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்குறைவு விகிதம் 150:1. 3000 மடங்கு அதிகரிப்பு..! (அமெரிக்கத் தடுப்பூசித் திட்டங்களைப் பின் தொடர்ந்து தான் இந்தியா செல்கிறது என்பதை தனியே சொல்ல வேண்டிய அவசியம் இருக்காது).

DPT தடுப்பூசியோடு ஒரு எச்சரிக்கை அறிக்கையும் தரப்படுகிறது. (இந்த தடுப்பூசி மருந்தையே நம் டாக்டர் கண்ணில் காட்டமாட்டார். சிரிஞ்சில் ஏற்றப்பட்ட பிறகே நாம் அதைப் பார்க்க முடியும்.இந்த நிலையில் அறிக்கையாவது மண்ணாவது). DPT தடுப்பூசி போட்டுக் கொள்வதால் சில பின்விளைவுகள் ஏற்படலாம் என்று குறிப்பிடும் இந்த எச்சரிக்கை அறிக்கையை கொஞ்சம் வாசியுங்களேன்.

1.அதிகப்படியான காய்ச்சல் (105 டிகிரி அல்லது அதற்கு மேல்)
2.மந்தமாக இருத்தல்
3.நீடித்த அசதி
4.விட்டு விட்டு ஏற்படும் அலறல்
5.மூளை வளர்ச்சிக் குறைபாடு
6.அதிகப்படியான துறுதுறுப்பு
7.எப்பொழுதாவது வலிப்பு
8.மூளை பாதிப்பு
9.மயக்கம்
10.கண் நரம்புக் கோளாறுகள்
11.நரம்பு சம்பந்தமான நிரந்தரக் கோளாறுகள் அல்லது மனநலக் குறைபாடு. .

இப்படி ஒவ்வொரு தடுப்பூசி மருந்துடனும் வெவ்வேறு வகையான எச்சரிக்கைக் குறிப்புகளை இணைத்துத்தான் உலகம் எங்கும் விற்கப்படுகின்றன. தடுப்பூசியால் ஏற்படும் உச்சபட்ச விளைவாக குறிப்பிடப்படுவது எது தெரியுமா? SIDS தான். SIDS என்றால் Sudden Infant Death Syndrome அதாவது ‘குழந்தை திடீரென இறந்துபோகும்’ என்பதைத்தான் இவ்வளவு அழகாகச் சொல்கிறார்கள்.

தோண்டத் தோண்ட வெளிவரும் தடுப்பூசி பற்றிய உண்மைகள் இத்தோடு முடிந்துவிடவில்லை. இந்த தடுப்பூசி களின் இரகசிய வரலாற்றில் நம் குழந்தைகள் இடம்பெறாது போக வேண்டுமானால் விழிப்புணர்வு ஏற்பட்டே ஆகவேண்டும்.

டாக்டர்.வில்லியம் ட்ரெப்பிங் தன் நூலில் (Good Bye to Germ Theory) சில கேள்வி பதில்களைத் தந்துள்ளார். அவற்றை இங்கே வாசிப்பது பொருத்தமானதாக இருக்கும்.

உங்கள் மருத்துவருக்கு கற்றுத் தருவது எப்படி?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

உங்களையும் என்னையும் போன்ற சராசரி மக்களுக்கு அடிப்படை விழிப்புணர்வு கிடைக்கப்பெற வேண்டும். உங்களுடைய குழந்தை நல சிறப்பு மருத்துவர் அவர் பயன்படுத்தும் தடுப்பூசி பற்றிய சந்தேகங்களுக்கு திருப்திகரமான பதில்களை உங்களுக்கு அளித்தே ஆக வேண்டும். இல்லையெனில் சரியாக பதிலளிக்கும் இன்னொரு மருத்து வரை நீங்கள் தேர்வு செய்ய வேண்டிய நேரம் வரும்.

உலகத்திலுள்ள எல்லா மருத்துவர்களும் பெரும்பாலும் ஒரே மாதிரியான கேள்விகளையே கேட்பார்கள். நீங்கள் மருத்துவருடன் உரையாட பின்வரும் கேள்விபதில்கள் உதவும்.

மருத்துவர் : தடுப்பூசி மருந்து முற்றிலும் பாதுகாப்பானது.

உங்கள் பதில்: நீங்கள் சொல்லும் தடுப்பூசிகளில் பாதரசம், அலுமினியம், பார்மால்டிஹைட் போன்றவைகள் உள்ளன. இவைகள் விஞ்ஞானரீதியில் நிரூபிக்கப்பட்ட நரம்பை பாதிக்கும் விஷங்கள். நீங்கள் எவ்வாறு இவ்வளவு உறுதியாக இந்த ரசாயன விஷங்களை பாதுகாப்பானது என்று கூறுகிறீர்கள்?

மருத்துவர்: தடுப்பூசியை எதிர்க்கும் மக்கள் போலியான ஆராய்ச்சிகளை நம்புகிறார்கள்.

உங்கள் பதில்: தடுப்பூசி பற்றிய எச்சரிக்கைகளை மக்களுக்கு வழங்கிய ஆய்வுகள் அனைத்தும் தரமான, தகுதியான மருத்துவர்களாலும், பல பல்கலைக்கழகங்களிலிருந்து வந்த அனைத்துத்துறை சார்ந்த நிபுணர்களாலும் மேற்கொள்ளப்பட்டன. இவ்வாய்வுகள் அமெரிக்காவில் மட்டுமல்ல பல்வேறு உலகநாடுகளிலும் செய்யப்பட்டன. ஆராய்ச்சியாளர்களில் பெரும்பாலோர் மருத்துவத்திலும், நுண்ணுயிரியலிலும் பட்டம் பெற்றவர்கள். தடுப்பூசிக்குச் சாதகமான ஆய்வுகள் அனைத்தும் உண்மைக்குப் புறம்பாக மருந்துக் கம்பெனிகளால் செய்யப் பட்டவைகளாகும்.

மருத்துவர் : குழந்தைகளுக்கு தடுப்பூசி போடாமல் இருப்பது ஆபத்தான, பொறுப்பற்ற பெற்றோரின் அணுகுமுறை.

உங்கள் பதில்: தடுப்பூசி போடாமல் இருக்கும் முடிவை எடுப்பதற்குத்தான் கூடுதலான பொறுப்புணர்வு தேவை. ஆழமான ஆய்வு நோக்கம் இருந்தால் தவிர இம்முடிவை யாராலும் எடுக்க முடியாது. இன்றைய சூழலில் நிறையக் குழந்தைகள் மூளைக்கோளாறால் பாதிக்கப் பட்டிருக்கும் போது வெறும் மருத்துவ ஆலோசனையை மட்டும் நம்புவது போன்ற முட்டாள் தனம் வேறெதுவும் இல்லை.

மருத்துவர்: நீங்கள் தடுப்பூசி போடவில்லை என்றால் (அமெரிக்க) சட்டத்தை மீறுகிறீர்கள் என்று அர்த்தம். இதன் காரணமாக நீங்கள் கைது செய்யப்படலாம் அல்லது உங்கள் குழந்தையை உங்களிடமிருந்து பிரிக்கலாம்.

உங்கள் பதில்: நீங்கள் வழக்கறிஞர் அல்ல; தயவு செய்து சட்டத்தைப் பற்றி பிரசங்கம் செய்ய வேண்டாம். ஏனென்றால், எந்த ஒரு சட்டமும் தனிமனித உரிமைக்கு எதிராய் அமைய முடியாது.

மருத்துவர் : நீங்கள் தடுப்பூசி போடவில்லையென்றால் உங்கள் குழந்தைக்கு மிகப்பெரிய ஆபத்து உள்ளது. மிகத் தீவிரமான நோய் உங்கள் குழந்தையின் உயிரையே குடிக்கலாம்.

உங்கள் பதில்: தடுப்பூசிகள் உண்மையிலேயே நீங்கள் நம்புவதுபோல் வேலை செய்தால் தடுப்பூசி போட்ட பெரும்பாலான குழந்தைகளுக்கு நோய்கள் வந்திருக்கக்கூடாது. அதேபோல, தடுப்பூசி போடாதவர்கள் நீங்கள் கூறும் ஆபத்து எதுவுமின்றி ஆரோக்கியமாகவே வாழ்கிறார்கள் (இயற்கை வழியில் சுகபிரசவம் ஆகும் குழந்தைகள் ஒருவர் கூட தடுப்பூசிகளோ, ரசாயண மருந்து விஷங்களோ, எந்த மருத்துவமோ எடுப்பதில்லை).

மருத்துவர்: தடுப்பூசி போலியோவை 1950களிலேயே தடுத்து விட்டது. அழித்துவிட்டது.

உங்கள் பதில் : நீங்கள் கூறுவது மிகவும் அதிகப்படியான கற்பனை. உண்மை என்னவென்றால் 1953 க்குப்பிறகு போலியோவின் தாக்கம் இயற்கையாகவே குறைந்துவிட்டது. 1957 க்குப்பிறகுதான் போலியோ தடுப்பூசி பிரச்சாரம் செய்யப்பட்டது. தடுப்பூசி போடப்பட்ட பின் போலியோவைப் போன்ற மூளை, தண்டுவட நோய்கள் பயங்கரமான அளவில் பெருகியுள்ளது (இந்த ஆதாரம் இப்பொழுதுதான் வெட்ட வெளிச்சம் ஆகியுள்ளது). போலியோவைக் கண்டிபிடித்த ஜோன்ஸ் சால்க் தான் கண்டுபிடித்த தடுப்பூசி மருந்தால் 1966 – 76வரை ஏற்பட்ட போலியோவில் 3 ல் 2 பங்கு அதிகரித்தது என்று கூறியுள்ளார்.

மருத்துவர் : தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்ட பிறகுதான் சின்னம்மை, பெரியம்மை போன்ற நோய்கள் குறைந்துள்ளன. தடுப்பூசிகளால் பாதிக்கப்படும் குழந்தைகள் எண்ணிக்கையில் குறைவுதான். (அறிவியல் வளர்ச்சியில் இப்படியான பாதிப்புகளும் இருக்கத்தானே செய்யும்).

உங்கள் பதில் : உலகின் எந்த நாடானாலும் சரி; அரசாங்கம் அழிந்து விட்டதாகக் கூறும் அதே நோய்கள் இன்றும் பாதிப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றன. அப்படி பாதிக்கப்பட்டவர்களில் 95% குழந்தைகள் தடுப்பூசி போட்டவர்கள்  என்று ஆய்வு முடிவுகள் கூறுகின்றன.

மருத்துவர் : இக்கால மக்களின் சராசரி ஆயுட்காலம் அதிகரித்துள்ளது. இதற்கு காரணம் தடுப்பூசிகளும், நுண்ணியிர்க்கொல்லி மருந்துகளும் தான்.

உங்கள் பதில் : இயற்கையாகவே நீண்டநாட்கள் வாழ்பவர்களுடைய பலனை ஆங்கில மருத்துவம் தனக்குச் சாதகமாக மாற்றிக்கொள்கிறது. ஆனால் உண்மைவேறுவிதமாக உள்ளது. நுண்ணியிர்க்கொல்லி மருந்துகள் சில தற்காலிகத் தொந்தரவுகளை மறைய வைக்கலாம். ஆனால் இந்த மருந்துகளைப்பற்றிய ஆராய்ச்சிகள் அனைத்தும் அதிகப்படியான நோய்கள் உருவாக இவற்றையே காரணமாகக் கூறுகின்றன. நுண்ணியிர்க்கொல்லி மற்றும் தடுப்பூசிகள் இரண்டுமே விற்பனைக்காக மருந்துக் கம்பெனிகளால் பிரச்சாரம் செய்யப்படுபவை தான். இந்தக் கம்பெனிகள் தங்கள் லாபத்திற்காக ஆராய்ச்சிகளை நடத்தி அறிக்கைகளைத் தயார் செய்கின்றன. இந்த பித்தலாட்டம் இல்லாமல் அரசாங்க உதவியுடன் மருந்து விற்க முடியாது.

மருத்துவர்: புதிய பெரியம்மை தடுப்பூசி ஆங்கில மருத்துவத்தின் இன்னொரு மைல் கல்.

உங்கள் பதில்: இந்த புதிய ஊசியைப் பயன்படுத்தி செய்யப்படும் ஆராய்ச்சி துவக்கநிலையில் தான் உள்ளது. அந்த ஆராய்ச்சியையும் ஒரு தடுப்பூசி தயாரிக்கும் மருந்து கம்பெனிதான் செய்கிறது. பெரியம்மையால் தாக்கப்பட்டவர்கள் பெரும்பாலும் 95% பேர் பெரியம்மை தடுப்பூசி போட்டவர்கள்தான். தடுப்பூசி தவிர மாற்று (பாரம்பரிய) மருத்துவ முறைகளில் சிகிச்சை பற்றி உங்கள் ஆராய்ச்சிகள் ஏன் பேச மறுக்கின்றன? பெரியம்மைக்கு ஹோமியோபதி முறையில் சிகிச்சைஎடுத்துக்கொண்டவர்கள் 36 மணி நேரத்தில் அதிலிருந்து விடுபடுகிறார்கள்.

“தடுப்பூசியால் உடல்நலம் ஏற்படும் என்று பிரச்சாரம் செய்வதைக் காட்டிலும் கொடூரம் வேறொன்றுமில்லை” – டாக்டர். ஹென்றி லிண்ட்லார்.

“தடுப்பூசிகளின் காரணத்தால் உலகின் ஒரு நாள் இரத்த ஆறு ஓடும். நாளைய டாக்டர்கள் அதிர்ச்சிக்குள்ளாகி எப்படி ஒரு நல்ல ஆராய்ச்சியும் இல்லாமல் எந்த ஒரு நன்மையும் இல்லாத விஷத்தை நம்முடைய பிஞ்சுக் குழந்தைகளின் உடலில் ஏற்றி 21 ஆம் நூற்றாண்டு வரை கொண்டு சென்றோம் என்று புலம்புவார்கள்” – டாக்டர். டெட் கோரன், தடுப்பூசி ஆராய்ச்சியாளர். (அமெரிக்காவில் இன்றைய தினம் இதுதான் நடந்து கொண்டிருகிறது)

மருத்துவர்.லட்சுமி சிவசங்கரன் தன்னுடைய கட்டுரையில் திறந்த மனதோடு வெளிப்படுத்தியுள்ள சில உண்மைகள்:

# காச நோய்த்தடுப்பு மருந்துத்திட்டம் இந்தியாவிற்கு வருவதற்கு முன்பே பிற நாடுகளில் அந்நோய் குறைந்துவிட்டது. இந்த நோய்களுக்கு காரணம் கிருமிகளை விட சமூக, பொருளாதார, அரசியல் காரணங்கள் தான் முக்கியம்.

# சில காலகட்டங்களில் (சூழல் மாறுபாடுகளில்) சிலவகையான கிருமிகளால் சில உயிர்க்கொல்லி நோய்கள் வருவதும் அது அந்த சீசன் முடிந்தவுடன் போய்விடுவதும் உண்மைதான்.

# மூன்றாம் உலக நாடுகளின் புதிய முதலாளித்துவ தேசியத் தலைமைக்கு இப்படிப்பட்ட தடுப்பூசித்திட்டங்களும், கிருமிகளின் தோற்றம் பற்றிய லூயி பாஸ்டரின் கருத்துக்களும் தேவைப்பட்டன.

# தடுப்பூசியால், டிபிடி, போலியோ சொட்டு மருந்துகளால் பக்கவிளைவுகள் வரும் என்பது உண்மை.

# பல்ஸ் போலியோ சொட்டு மருந்து திட்டம் பன்னாட்டு கம்பெனிகளின் லாப வெறிக்கே உலக சுகாதார நிறுவனம் மூலம் உலகெங்கிலும் நடைமுறைத்தப்படுகிறது. ஆண்டிற்கு சுமார் 2500 கோடி ரூபாய் இத்திட்டத்திற்கு அரசால் செலவிடப்படுகிறது. ஆனால் மற்ற ஒட்டுமொத்த தடுப்பூசித் திட்டதிற்கும் அது செலவிடும் தொகையோ சுமார் 500 கோடி மட்டுமே.  இதிலிருந்து இந்த திட்டத்தின் மோசடி புரியும்.

# போலியோவை இந்தியா மாதிரி நாடுகளில் முற்றிலும் ஒழித்துவிட முடியுமா என்பதிலேயே அறிவியல்பூர்வமாக பல கருத்துக்கள் உண்டு. இப்படிப்பட்ட நிலையில்தான் இந்த போலியோ சொட்டு மருந்தால் பாதிக்கப்படக்கூடிய குழந்தைகளின் எண்ணிக்கை என்பது உண்மையில் போலியோ வைரஸால் வரக்கூடிய பாதிப்பைவிட அதிகமாக உள்ளது.

# பன்னாட்டுக் கம்பெனிகள் தேவையில்லாத தடுப்பூசிகளையும், மற்றும் திட்டங்களையும் செயல்படுத்தச் செய்கிறது.

# எல்லாவற்றையும் சந்தைப் பொருளாக்கும் முதலாளித்துவம் ஆங்கில மருத்துவத்தையும், தடுப்பூசிகளையும், திட்டங்களையும் தன் லாபவெறிக்கு பயன்படுத்துகிறது.

# பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய நோய்களுக்கான நிரந்தரத் தீர்வு அதன் சமூக, பொருளாதார அரசியல் சூழலில் தான் உள்ளது.

மருத்துவம் சார்ந்த வியாபாரம் பெருகுவதற்கு மூலகாரணமே அந்த மருத்துவத்தின் அடிப்படை தெளிவின்மைதான். தடுப்பூசி பற்றிய தெளிவான, குழப்பமற்ற கருத்தை ஆங்கிலமருத்துவம் உலகிற்குக் கூறியிருக்குமேயானால்,  கிருமி தத்துவம் பற்றிய தன் முழுமையான உண்மைகளை வெளிப் படுத்தியிருக்குமேயானால், (நோய்க்கு காரணி கிருமிகள் அல்ல..! : மேலும் விளக்கம் பெற என்னுடைய நோட்சில் உள்ள “முக்கியமான விழிப்புணர்வு கட்டுரைகளின் தொகுப்பு” படிக்கவும்) வணிகவெறி பிடித்த பன்னாட்டு நிறுவனங்கள் மருந்துத் தொழிலில் மனித உயிர்களைப் பணயம் வைத்து சூதாடும் வாய்ப்பு அவற்றிற்கு கிடைத்திருக்காது. மருத்துவம் சார்ந்த உண்மைகளை மக்களிடம் மறைக்கும் ஆதிக்க மனப்பான்மை தான் ஆங்கில மருத்துவத்தின்  வணிகமயமாக்கலுக்கும் அடிப்படைக் காரணமாகும்.

தடுப்பூசி விஷங்கள் மூலம் ‘மூளை சிதைவால்’ பாதிக்கப்பட்ட குழந்தைகளின் பெற்றோர்கள் கொடுக்கும் வீடியோ ஆதாரங்கள் இதோ:
Hear This Well: Breaking the Silence on Vaccine Violence (199 videos – till 03.09.2014 @ 10.30AM)
https://www.youtube.com/watch?v=WsLuR3X6cpg&list=PLJpPObXpZncOfT0bG2ghgkVb2Nxjd_bNe

இந்த வீடியோக்களை பார்த்த எனக்கு, என்னை அறியாமலே கண்கள் கலங்குகின்றன.. எப்படி மக்கள் இப்படி படித்தும் முட்டாள்களாக இருக்கிறார்கள்..! எப்படி இவ்வளவு கொடுமைகளையும் பார்த்த பின்பும் சிலர் தடுப்பூசிகள் நல்லது என்று வாய் கூசாமல் கூறுகிறார்கள்..! சுய அறிவு என்ற ஒன்று நமக்கு எதற்காக படைக்கப்பட்டுள்ளது.

இவற்றை எல்லாம் பார்த்த பின்னும், இனியும் உங்கள் குழந்தைகளுக்கு தடுப்பூசிகளும், சொட்டு மருந்துகளும்  போடப் போகிறீர்களா..? (ஆம் என்றால், பாவம் அது அந்த குழந்தைகளின் விதி அல்ல.. உங்களின் அறியாமையும், ஆணவமும் மட்டுமே… 🙁 )

தடுப்பூசிகள் பற்றி விளக்கமாக எழுதப்பட்ட டாக்டர்.வில்லியம் ட்ரெப்பிங் அவர்களின் நூல் (Good Bye to Germ Theory) “தடுப்பூசி வரலாற்று மோசடி” – என்னும் பெயரில் தமிழில் கிடைக்கும்.
http://www.puthuyir.blogspot.in/

“தடுப்பூசி வெளிப்படும் உண்மைகள்” – புத்தகம் மற்றும் உடலியல் சார்ந்த புத்தகங்களை நம்முடைய ப்லாகில் PDF வடிவில் இலவச பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
http://rkacu.blogspot.in/p/free-e-books-download.html

மேலும் தடுப்பூசி தொடர்பான நம்முடைய பழைய பதிவுகள், மருத்துவ விழிப்புணர்வு கட்டுரைகள், புத்தகங்கள் படிக்க

https://www.facebook.com/rkacu/notes

மேலும் தடுப்பூசி தொடர்பான சமீபத்தில் வெளியான ஆங்கில கட்டுரைகள்:

3 Easy Steps Parents Can Use to Form an Opinion About Vaccines
http://vactruth.com/2011/03/07/3-easy-steps-parents-opinion-vaccines/

Vaccination leads to Cancer, Leukemia, Brain Damage and many other chronic diseases?
http://www.medicinekillsmillions.com/articles/doctors-scientists-warn-dangers-of-vaccination-immunisation.html

All Vaccines Cause Brain Damage
http://dreisenstein.blogspot.in/2014/06/all-vaccines-cause-brain-damage.html

Vaccinations and Autism: Massive Cover-up at the CDC!
http://donboys.cstnews.com/vaccinations-and-autism-massive-cover-up-at-the-cdc

Fraud at the CDC uncovered, 340% risk of autism hidden from public
http://ireport.cnn.com/docs/DOC-1164794

#end vaccine violence
https://www.facebook.com/hashtag/endvaccineviolence?source=feed_text&story_id=10203018463676785

When 1 in 88 is Really 1 in 29
http://vaxtruth.org/2012/04/when-1-in-88-is-really-1-in-29/

Is the CDC Guilty of Crimes Against Humanity
http://www.thelibertybeacon.com/2014/08/27/is-the-cdc-guilty-of-crimes-against-humanity/

CDC: You’re Fired. Autism Coverup Exposed.
http://kellybroganmd.com/article/cdc-youre-fired-autism-coverup-exposed/

CDC Director of Immunization Safety Admits Bias and Withholding Data Linking Vaccines to Autism
http://healthimpactnews.com/2014/cdc-director-of-immunization-safety-admits-bias-and-withholding-data-linking-vaccines-to-austim/

இந்த கட்டுரையை தொகுக்க உதவிய, அன்பிற்குரிய Acu Healer Umar Farook அவர்கள் மற்றும் அன்புள்ள மருத்துவர்.புகழேந்தி மற்றும் மொழி பெயர்ப்பு உதவி செய்த அன்புள்ளம் Rekha Samuel அம்மா மற்றும் ஆங்கில கட்டுரைகள் மற்றும் வீடியோக்களை லிங்க் கொடுத்த அன்பு சகோதரி Prema Gopalakrishnan (ஹோமியோபதி மருத்துவர்) ஆகிய அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றிகள். 🙂 .

அன்புடன், அக்குஹீலர்.ர.கார்த்திகேயன்.

தடுப்பூசிகள் பற்றி ஹீலர் பாஸ்கர் சொல்வதையும் கேளுங்கள்,

https://www.youtube.com/watch?v=ZJsIGQK-zD0

மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

21 − = 12