டெங்கு காய்ச்சல் ஒரு விழிப்புணர்வு சிறப்புக் கட்டுரை

October 5, 2017 by: machamuni

டெங்கு காய்ச்சல் தீர 

இது ஒரு மீள்பதிவு .இந்தப் பதிவு ஏற்கெனவே மச்சமுனி வலைத் தளத்தில்  வெளியான கட்டுரையே இது.

வீணாக அச்சத்தால் பலரும் பயம் கொள்கின்றனர். உண்மையில் இது சித்த வைத்திய முறையில் மிக எளிதில்  தீர்க்கக் கூடிய வியாதியே!

முதலில் இது இவ்வளவு ஆட்களை பலி வாங்கும் உயிர்க் கொல்லி நோய் ஆனதற்கு , நமக்கு தடுப்பூசி என்ற பெயரில் இலவசமாக அரசு வழங்கும் மருந்துகளும் காரணம் என்றால் உங்களுக்கு அது முதலில் புரியாது. முதலில் தடுப்பூசி என்றால் மருந்தோ அல்லது நம்முள் நுழையும் கிருமிகளைக் கொல்லும் மருந்தோ அல்ல. அவை பலவீனமாக்கப்பட்ட கிருமிகளே. அவை உடலில் நுழைந்ததும் உடலில் உள்ள நமது நோய் எதிர்க்கும் அமைப்பு( IMMUNE  SYSTEM ) நமது உடலில் நுழைந்த கிருமியைக்(VIRUS OR BACTERIA) கொல்லும் நோய் எதிர்ப்புப் பொருள்களை (ANTI – BODIES) உற்பத்தி செய்யும்

https://en.wikipedia.org/wiki/Antibody

அந்த நோய் எதிர்ப்புப் பொருள் எந்த கிருமிக்கெதிராக உற்பத்தி செய்யப்பட்டதோ அந்த நோய்க்கிருமியை மட்டுமே நம் உடல் தற்காத்துக் கொள்ளும் வல்லமை கொண்டதாகிவிடும். வேறு கிருமிகள் உள்ளே நுழைந்தால் அதைத் தடுக்க நோய் எதிர்ப்புப் பொருள்களை உற்பத்தி செய்ய அதற்கான மூலப் பொருள் இல்லாததால் வேறு கிருமியை எதிர்க்க வல்லமையில்லாமல் உடல் நோயால் இறந்து போவதைத் தவிர வேறு வழியில்லை.

எனவே தடுப்பூசிகள் எந்த நோய்க்காக போடப்படுகிறதோ , அந்த நோயைத் தவிர , எல்லா நோய்களுக்கும் கதவைத் திறந்து விட்டுவிடும். எனவே தடுப்பூசிகள் தேவையே இல்லையே!!ஏனென்றால் எந்த கிருமிகள் நம் உடலுள்ளே நுழைந்தாலும் தடுக்க நமது உடலில்தான், நமது நோய் எதிர்க்கும் அமைப்பு( IMMUNE  SYSTEM ) இருக்கிறதே , அதுதான் நம் உடலில் நுழையும் கிருமிக்கெதிராக , அவற்றைக் கொல்லும் நோய் எதிர்ப்புப் பொருள்களை (ANTI – BODIES) உற்பத்தி செய்கிறதே , பிறகெதற்கு தடுப்பூசிகள் . தடுப்பூசி என்பது , எந்த ஒரு வியாதிக்காக போடப்படுகிறதோ , அந்த  ஒரு கிருமியைத் தவிர எல்லாக் கிருமியையும் உடலுக்குள் நுழையவிடும், படு மோசமான நிலைக்கு நம்முடலைஉடலைத் தள்ளிவிடும் படுகுழிதான் தடுப்பூசிகள்.

தற்போது டெங்குவால் இறப்பவர்கள் மருத்துவ வரலாற்றை, புள்ளி விவரத்தை முழுவதும் எடுத்து ஆராய்ந்தால் அவர்கள் அதிகமாக தடுப்பூசிகள் மற்றும் ,ஆங்கில மருந்துகளை எடுத்துக் கொண்டு தங்கள் உடலின் நோய் எதிர்க்கும் அமைப்பை( IMMUNE  SYSTEM ) தாங்களே கெடுத்துக் கொண்டவர்களாகவே இருப்பார்கள்(அறியாமையால் தான் என்ன செய்கிறோம் என்று தெரியாமல் செய்து கொள்வதுதான்).

முதலில் இந்த டெங்கு காய்ச்சல் நமக்கு புதிதல்ல.பழைய ஆனந்த விகடனை எடுத்துப் பார்த்தால் அதில் பல வருடங்களுக்கு முன் வெளியான ( 1967 முதல் 1969 வரை ) சிரிப்புக் கி ( டெங்கு ) என்ற பெயரில் பல சிரிப்புக்களையும் , கார்ட்டூன்களையும் வெளியிட்டுள்ளது. என்னிடம் அந்தப் புத்தகங்கள் உள்ளது .தேடிக் கிடைத்தால் வெளியிடுகிறேன்.

நமது நோய் எதிர்க்கும் அமைப்பு( IMMUNE  SYSTEM )காவலாளிகள், தங்களிடம் நோய் எதிர்ப்புப் பொருள்கள் (ANTI – BODIES) என்ற ஆயுதம்,  இல்லாத நிலையில் நம் உடலில் நுழையும் எந்த ஒரு சாதாரண கிருமியும் நம் உடலை எளிதில் கொன்றுவிடும்.எனவே நம் உடலை நிராயுத பாணியாக்கும் இந்த தடுப்பூசிகளைப் போட்டால், உங்கள் உயிரை நீங்களே போக்கிக் கொள்வதற்குச் சமம்.பலவீனமாக்கப்பட்ட கிருமிகளே உடலில் நுழைந்ததும் உடலில் உள்ள நமது நோய் எதிர்க்கும் அமைப்பு( IMMUNE  SYSTEM ) நமது உடலில் நுழைந்த  ???கிருமியைக்(VIRUS OR BACTERIA) கொல்லும் எதிர்ப்புப் பொருள்களை (ANTI – BODIES) உற்பத்தி செய்யும், அந்த கிருமியைக்(VIRUS OR BACTERIA) கொல்லும் நோய் எதிர்ப்புப் பொருள்கள் (ANTI – BODIES) , வாழ்நாள் முழுவதும் அந்த கிருமிக்கு எதிராக பாதுகாப்புக் கொடுக்குமா , என்றால் அதுதான் இல்லை,நோய் எதிர்ப்புப் பொருள்கள் (ANTI – BODIES) , நம்முடலில் வாழும் வாழ்நாள்  எவ்வளவோ அவ்வளவே அந்த கிருமிக்கு எதிரான, நம் பாதுகாப்பும் . எனில் தேவையா  இது?என்று நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்???

அப்போது இது எதனால் உருவாகிறது ? ஈடிஸ் கொசு கடிப்பதனால் கிருமிகள் பரவி அதன் மூலம் காய்ச்சல் உண்டாகி என்று நீண்டு கொண்டே செல்கிறது அல்லோபதி கதை. இதைவிட இந்தக் கொசுவைக் கொல்ல அடிக்கும் புகைப்பானில் தெளிக்கும் மருந்தினால் ஏற்படும் பக்க விளைவுகள் அப்பப்பா சொல்ல முடியவில்லை . இந்தக் கொசுவைக் கொல்வதனால் இந்தக் காய்ச்சலை ஒழிக்க முடியுமா ??? வீட்டில் பத்து பேர் இருந்தால் ஒருவருக்கோ இருவருக்கோ மட்டும் காய்ச்சல் வருகிறது . முதலில் இது அவர்களின் நோய் எதிர்ப்பு சக்தி குறைவால் வருகிறது.

ஒரு விளம்பரம் கூறுகிறது . தற்போது கிருமிகள் பலமாக மாறிக் கொண்டே வருகின்றன ( நாம் பலவீனம் ஆகிக் கொண்டிருக்கிறோம் என்பதை சொல்லாமலே சொல்லி விடுகின்றனர் ). எனவே உங்களுக்குத் தேவை பலமான கிருமி நாசினி என்று !!! இன்னோர் விளம்பரத்தில் ஒரு பையன் எங்க மம்மி சொல்றாங்க ஒரு நிமிடம் நம்ம கையை சோப்பு போட்டு கழுவ வேண்டும் ???? என்று அதற்கு ஒரு பெண் கூறுகிறாள் உன் சோப்பென்ன ஸ்லோவா ??? இவர்கள் என்ன சொல்கிறார்கள் . கிருமிகளைக் கொல்லும் அந்த வேதிப் பொருள் நம் கையிலுள்ள நம் உயிரணுக்களை விட்டு வைக்குமா ????? கிருமிகளை உலகத்தை விட்டே அழித்துவிடலாம் என்கிறார்களா என்ன ???

இதை சாதாரண எந்த உயிரி விஞ்ஞானியும் ஒப்புக் கொள்ள மாட்டார் !!! கிருமிகளை உலகத்தை விட்டோ கேவலம் நம் வீட்டை விட்டோ ஒழிக்க முடியாது .அப்படி ஒரு வீட்டை ஆக்கினால் அந்த வீடு நாமும் வாழத் தகுதியற்றதாக ஒரு விஷமித்த வீடாகத்தான் ஆகிவிடும்.

மீதமுள்ள ஆட்களுக்கு இந்த பயத்திலேயே இது தொற்றிவிடுகிறது . பயத்தினால் காய்ச்சல் பரவுமா ??? நிச்சயமாக ??? பயமே வியாதியை அதிகரிக்க உற்ற துணை !!! ஏனெனில் பீனியல் சுரப்பியின் செயல்பாடு பயம் ஏற்படும் போது குன்றி அதனால் நம் நோய் எதிர்ப்பு சக்தி குன்றுகின்றது.

இப்போது என்னதான் சொல்ல வருகிறீர்கள். உங்கள் வீட்டை முதலில் நீங்கள் நல்ல உயிரினங்கள் வாழும் வீடாக மாற்ற முதலில் நாட்டு மருந்துக் கடையில் சிங்கப்பூர் சாம்பிராணி , நில வேம்புக் குடிநீர் என்று குச்சி குச்சிகளாக அட்டைப் பெட்டியில் அடைத்தது IMPCOPS  தயாரிப்பு கிடைக்கும்.இவற்றை வாங்கி கலந்து கொண்டு முடிந்தால் அத்துடன் குப்பை மேனிப் பொடியும் ,வேப்பிலைப் பொடியும் கலந்து புகை போடுங்கள்.

வீட்டை நல்ல காற்றோட்டமாக திறந்து வையுங்கள் .ஒரு கொசுவும் உங்கள் வீட்டிற்குள் நுழையாது. நீங்கள் ஆவாரை இலைப் பொடி , வேப்பிலைப் பொடி , குப்பை மேனிப் பொடி கலந்து குளிக்கும் போது மேலுக்குத் தேய்த்துக் குளியுங்கள் . ஒரு கொசுவும் உங்களை அண்டாது . கசப்பு உங்களுக்குப் பிடிக்காதது போல எந்தக் கிருமிக்கும் பிடிக்காது. ஒரு கிருமியும் அண்டாது. சோப்பு போட்டு குளிக்கக் கூடாது . பிறகேது காய்ச்சல் .

இது சொல்லி முடித்தவுடன் சோப்பு எப்போது போடலாம் என்று கேட்பது புரிகிறது . சோப்பு போட்டால் உங்கள் உடலில் தோலில் உள்ள அனைத்து    எண்ணைச் சுரப்பிகளும் வறண்டுவிடும் .தோல் வறண்டு விட்டால் உடலின் மீது ஓடும் உயிரோட்டமான `CHI ‘ ஓடாது . இந்த உயிரோட்டத்தில் ஏற்படும் மின் சுற்றுப் பூர்த்தி ஆகாததை சரி செய்வதே அக்கு பஞ்சர் . ஊசி மூலம் அந்தச் மின் சுற்றை ஏற்பட செய்வார்கள் . ஒரு இடத்தில் உயிரோட்டம் அற்றால் பூர்த்தி செய்யலாம் உடலெல்லாம் பல இடங்களில் மின் சுற்று அற்றால் , அதாவது உடலின் ஒட்டு மொத்த உயிரோட்டத்தையே சோப்புக்கள் குன்ற வைத்துவிடும் , எனில் இது தேவையா ??? என்று நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள் !!!!

இருக்கும் இடத்தைச் சரி செய்தாயிற்று. அதற்குப் பிறகு உடலை விஷமிக்காமல் அதாவது அலோபதி மருந்துகளை உட்கொள்ளாமல் இருங்கள் . வீட்டில் அறைக் கதவுகளைப் பூட்டிக் கொண்டு புகை வராது என்று கூறப்பட்ட விஷக் ( அல்லெத்ரின் என்ற விஷத்தைக் கொண்டு தயாரிக்கப்பட்டது ) கொசு வர்த்திகளை ஏற்றி வைத்துக் கொண்டு தூங்காதீர்கள் . காற்றோட்டமான இடத்தில் தூங்குங்கள்.

ஆரோக்கியமான உணவுகளை உண்ணுங்கள்.சாறுள்ள பழங்களை காலையிலும் மாலையிலும் உண்ணுங்கள் . பழச் சாறாக்கி பிழிந்து எடுத்து சாப்பிடாதீர்கள் . இளநீர் அடிக்கடி சாப்பிடுங்கள். மதியம் ஒரு நேரம் மட்டுமே அரிசி உணவை எடுத்துக் கொள்ளுங்கள் .அதுவும் கஞ்சி வடிகட்டின சோறாக இருப்பது நலம் .குக்கர் அரிசிச் சோற்றை தவிருங்கள் .

இதெல்லாம் போக காய்ச்சல் வந்தால் கீழுள்ள மருந்தை உபயோகியுங்கள் .

( 1 ) விஷ்ணு கிராந்திப் பொடி

( 2 ) பற்பாடகப் பொடி

( 3 ) குப்பை மேனிப் பொடி

( 4 ) நில வேம்புப் பொடி

( 5 ) ஆகாச கருடன் கிழங்குப் பொடி

( 6 ) வாய் விளங்கம்

( 7 ) சங்கங் குப்பி

( 8 )  நத்தைச் சூரி விதை

( 9 ) மாவிலங்கப்பட்டை

( 10 ) கடுகு ரோகணி

( 11 ) அக்கரகாரம்

( 12 ) கோஷ்டம்

( 14 ) செப்பு நெருஞ்சில்

( 15 ) விராலியிலை

( 16 ) நொச்சிப் பட்டை

( 17 ) வேப்பம் பட்டை

( 18 ) மஞ்சள்

இவை கலந்து அரை குறையாக இடித்து வைத்துக் கொண்டு மூன்று   நாட்கள் மூன்று வேளை அருந்த காய்ச்சல் பறந்தோடும் . நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் . மேற்கண்ட மருந்துகள் நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும் . இவை கலந்த மருந்துகள் சதுரகிரி ஹெர்பல்ஸ் கண்ணன் அவர்களிடமும் கிடைக்கும் . வேண்டியவர்கள் பயன் பெறலாம்.

மேற்கண்ட மருந்துகள் சுரஹரகாரிகள் , வியதாபேதகாரிகளும் கூட எனவே அவற்றில் ஒன்றிரண்டு கிடைக்காவிட்டாலும் கூட கீழே இருக்கும் இரண்டும் அவசியம் சேர்த்து சாப்பிட்டாலே நலம் பயக்கும்.

விடாத காய்ச்சலுக்கு விஷ்ணு கிராந்தி

 படாத பாடு படுத்தும் காய்ச்சலுக்கு பற்பாடகம்

விராலியிலை

விராலியைப் பற்றி எழுதும் போது அதைப்பற்றி ஓரிரு வார்த்தைகள் சொல்லாமல் போக முடியாது.ஏனென்றால் அவ்வளவு முக்கியமான மூலிகை. இந்த மூலிகை அதிகமாக வளர்ந்துள்ளதால் முருகன் குடி கொண்டு இருக்கும் மலைக்கு விராலி மலை என்று பெயர் .இந்த மலையில் அருணகிரி நாதருக்கு வள்ளி தெய்வானையுடன் முருகன் காட்சி அளித்தார்.

மேலும் இந்த விராலிக் கட்டைகளை உள்ளே வைத்துத்தான் அதன் மீது களிமண்ணை அப்பி அக்காலத்தில் குடிசை வீடுகளுக்கு மண்ணால் சுவர் வைத்துக் கட்டுவார்கள். அந்தச் சுவர்கள் எந்த மழையிலும் நனைந்தாலும் நமது உடலில் எலும்புச் சட்டம் இருப்பது போல மண்ணுக்குள் இருந்து மண் கரைந்து போகாமல் காக்கும் . அவ்வளவு வல்லமையுள்ளது இந்த மூலிகை .இதே போல இது எலும்பையும் , எலும்பு மஞ்சையையும் , அதன் மூலம் இரத்தச் சிவப்பு அணுக்கள் உற்பத்தியையும் காக்க வல்லது.எலும்பு முறிவிற்கும் , எலும்பு தேய்மானத்திற்கும் இதன் இலையை அரைத்து மேற்புறமாக பற்றிடலாம்.

ஏனென்றால் டெங்கு காய்ச்சலில் மரணம் நிகழ்வது இரத்தச் சிவப்பணுக்கள் டெங்கு கிருமிகளால் குறைபடுவதால்தான் .மேற்கண்ட இரு மருந்துகள் மட்டுமே காய்ச்சலைக் கட்டுப்படுத்த போதும் என்றால் இது இரத்தச் சிவப்பணுக்களை காப்பாற்ற இது அவசியம்.எனவே இதை அவசியம் சேர்த்தால் இரத்த சிவப்பணுக்களைக் காப்பாற்றி உயிரையும் காப்பாற்றும்.

இத்துடன் வாத சுரக் குடி நீர் என்ற கஷாயப் பொடி IMPCOPS ,SKM தயாரிப்பிலோ கிடைக்கும். வாங்கிக் கஷாயமாக்கி பயன்படுத்தினால் எல்லா விதக் காய்ச்சல்களிலிருந்தும்(பற்வைக் காய்ச்சல், பன்றிக் காய்ச்சல் , மலேரியா,டெங்கு, சிக்குன் குனியா) உயிரிழப்பை தவிர்த்துக் கொள்ளுங்கள். வீணாக அல்லோபதி வைத்தியத்தை நம்பி உயிரிழக்காதீர்கள்.

இத்துடன் IMPCOPS  தயாரிப்பான ( 1 ) பிரம்மானந்த பைரவம் அல்லது (2) ஆனந்த பைரவமும் மூன்று வேளையும் ஒரு மாத்திரை வீதம் வெந்நீரில் சாப்பிட்டு வரலாம். இது அனைத்துக் காய்ச்சலுக்கும் குணம் செய்யும் . மலையப்பசாமி வைத்திய சாலை பழனி அவர்கள் தயாரிக்கும் சுர மாத்திரையையும் வாங்கியும் உபயோகிக்கலாம் .

One response to “டெங்கு காய்ச்சல் ஒரு விழிப்புணர்வு சிறப்புக் கட்டுரை”

  1. ஸ்ரீதரன் says:

    அய்யா, வணக்கம். சரியான பார்வையை மச்சமுனி எப்போதும் கொண்டிருக்கின்றது என்பதற்கு இந்த கட்டுரை மற்றொரு சான்று. நன்றி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

+ 81 = 88