சித்தர்களின் விஞ்ஞானம் (பாகம் 49) – வர்மம்

சித்தர்களின் விஞ்ஞானம்(பாகம் 49)வர்மம்

 
அன்புள்ள பதிவு வாசகர்களே,
வர்மம் என்றால் என்ன.அது எப்படி செயல்படுகிறது,போன்ற விடயங்களை தெரிந்து கொள்வதற்கு முன் வர்மத்திற்கு பால பாடமான கைபிடி விளையாட்டு என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.


கைபிடி விளையாட்டு என்றால் ஏதோ விளையாட்டு என்று எண்ண வேண்டாம். அது கை மூட்டுகளை பிரிப்பது (ஒடிப்பது).மற்றும் சேர்ப்பது பற்றிய பாடமே.எனது தாத்தா பல ஓலைச் சுவடிப் பிரதிகளிலும் கையெழுத்துப் பிரதிகளிலும் எழுதி உள்ளார்.இதை நம் முப்பாட்டன் போதி தர்மா கற்றுக் கொடுத்து சீனர்களான நம் அண்ணாச்சிகள் பாதுகாத்து வைத்துள்ள விடயம்தான் அது.


அதாவது கை கால்கள் மடங்கும் திசைக்கு எதிராக ஒரு முறுக்கை கை கால்களில் ஏற்றும் தந்திரம்தான்தான் அது.முறுக்கு மீண்டும் அவிழ்க்கப்படாமல் எதிர்க்கப்படுமானால் கை கால்களில் உள்ள மூட்டுக்கள் முறியும்.கை கால்கள் மட்டுமல்ல முதுகு கழுத்து ஆகிய மூட்டுக்களும்தான்.


எச்சரிக்கை அனுபவமில்லாமல் பரீட்சித்து பார்க்க வேண்டாம்.உயிரையே இழக்க நேரிடலாம்.


இதை அவர்கள் “SHAOLIN CHIN NA”என்று அழைக்கிறார்கள்.இது நம் நாட்டிற்கு கற்றுக் கொடுக்க யாரேனும் வந்தால் ஓடிப்போய் நாமும் கற்றுக் கொள்ள வரிசையில் நிற்போம்.நம் நுண்கலைகளை நாம் எவ்வளவு அழித்துவிட்டு வரிசையில் நிற்க தயாராகிவிட்டோம் பார்த்தீர்களா????


இது பற்றி நாம் மிகவும் பெருமை கொள்ளலாம்.

இனிமேலாவது நம் சித்தர் கலைகளை போற்றிப் பாதுகாப்போம்.