சித்தர்களின் சாகாக்கலை – மரணமிலாப் பெரு வாழ்வு – 2
ஒரு கடினமான காரியம் இல்லை. சித்தர்கள் எல்லா (4448 வகையென வகுத்திருக்கிறார்கள்) நோய்களுக்கும் மருந்திருப்பது போல் இறப்பும் ஒரு வியாதியென்றும்.சாவு என்பதை மீறியவர்கள் சித்தர்கள்.எனவே அவர்கள் ஒருவரை ஒருவர் சாமீ(சாவை மீறியவர்) என அழைத்துக் கொண்டார்கள்.எங்கள் சித்த ஞான சபை உறுப்பினர்கள் ஒருவரை ஒருவர் இவ்வாறே அழைத்துக் கொள்ளுவோம்.
அய்யப்பன் கோவிலுக்குச் செல்பவர்களும் இவ்வாறே சும்மா அர்த்தம் புரியாமல் அழைத்துக் கொள்ளுகிறார்கள்.
ஒரு நிமிடத்துக்கு 15 மூச்சு வீதம்,ஒரு மணி நேரத்துக்கு 900 மூச்சு வீதம் ஒரு நாளுக்கு 21,600 மூச்சுக்கள் ஓடுகின்றன.இப்படி மூச்சு ஒரு கதியில் ஓடி விதியை உருவாக்கி வைத்து இருக்கிறது.ஒரு நாழிகையான 24 நிமிடங்களில்
360 மூச்சுக்கள் ஓடும்,அந்த 360 மூச்சுக்களும் வட்டத்தின் 360 டிகிரிகளையே குறிக்கும்.அதற்குள் நவகிரகங்களின் கதிரியக்கப் பாய்ச்சல் ஒருசுற்று முடிந்துவிடும்.அதனாலேயே ஒரு நாழிகைக்கு 24 நிமிடக்கணக்கு ஏற்படுத்தப்பட்டது.
216 உயிர் மெய்யெழுத்துக்களும் இந்த 21,600 மூச்சுக்களையே குறிக்கின்றன.12 உயிரெழுத்துக்களும் வலது நாசியில் ஓடும் சூரிய கலை 12 அங்குலம் ஓடுவதைக் குறிக்கும்.ஒரு மாதத்தில் காலையில் 6 மணியிலிருந்து 7 மணிவரை சூரிய கலை 12 நாட்கள் மட்டுமே ஓடும்.அந்த விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது .
உயிரெழுத்துக்களில்குறில் எழுத்து ஐந்தும் பஞ்ச பூதங்கள் ஐந்தை குறிக்கும்.நெடில் ஏழும் நமது உடலில் உள்ள சக்கரங்கள் ஏழைக்குறிக்கும்.வள்ளுவர் தமது குறட்பாக்களில் முதலடியில் 4 சீர்களையும் இரண்டாவது அடியில் மூன்று சீர்களையும் (3+4=7)ஏழும் ,அதிகாரங்கள் 133(1+3+3=7) ஏழும் நமது உடலில் உள்ள சக்கரங்கள் ஏழைக்குறிக்கும்.
18 மெய்யெழுத்துக்களும் இடது நாசியில் 16 அங்குலம் ஓடக்கூடிய சந்திர கலையையும்,மனம்,உயிரையும் சேர்த்து 18 டை குறிக்கும்.இந்த 18 டையே,பதிணென் சித்தர்கள் என்றும் ,(பதி எண்ணும் சித்தர்கள் என்றும் குறிப்பிடுவர்),பதினெட்டுப் புராணங்கள் என்றும், யோக சாதன முறைகளி ஏற்படும் தடைகள்(நிலைகளும்) பதினெட்டு,அய்யப்பன் கோவில் படிகள் பதினெட்டு,பகவத் கீதையில் பதினெட்டுஅதிகாரங்களைக் குறிக்கும்,
தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் நடந்த யுத்தம் பதினெட்டு வருடங்கள்,ராம ராவண யுத்தம் பதினெட்டு மாதங்கள்,மஹா பாரத யுத்தம் பதினெட்டு நாள்,சேரன் செங்குட்டுவன் இமவானுடன் யுத்தம் புரிந்தது பதினெட்டு நாழிகை, பதினெட்டாம் படிக்கருப்பசாமி என்றழைப்பதும் இதனால்தான், ஏன் பைபிளில் ஆகமங்கள் பதினெட்டு,அதே போல இடது நாசியில் மூச்சு காலையில் 6 மணியிலிருந்து 7 மணிவரை ஓடும் நாட்களும் ஒரு மாதத்திற்கு பதினெட்டு நாட்கள்.
Beautiful explanations. Keep up your Excellent work. Thanks.
please explain 5 kuril and 7 nedil in total uierzhuthu ( 5 + 7)= 12
தங்கள் தொடர்புக்கு நன்றி.ஐந்து குறில்களும் பஞ்ச பூதங்கள் ஐந்தை குறிப்பன.நெடில் ஏழும் நமது உடலில் உள்ள சக்கரங்கள் ஏழு.இரண்டும் சேர்ந்தது 12 ம் பனிரெண்டு உயிரெழுத்துக்கள்.இது வலது நாசியில் ஓடும் சூரிய கலையை குறிப்பது.சூரிய கலை 12 அங்குலம் ஓடும்.
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்
sivayanama om vaya nama chi
பஞ்ச கல்பம்(பதார்த்த குண விளக்கம்
பால் விட்டு ஆரைகன்னுமா என்ன சார் வீலகம் தேவை ஐயா
ஐந்து பொருட்கள் கலந்த பொடியை காய வைத்து,ஆறிய பாலில் கலந்து தலையில் தேய்த்து அரை மணி ஊற விட்டுப் பின் குளிக்க வேண்டும்.
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்
siththarkal nesa
ஒரு வேண்டு கொள் நான் உங்களை வரும் satday சந்திகலாமா அனுமதி தேவை உடன் பதில் ஐயா
மன்னிக்கவும் சித்தர்கள் நேசன் ஐயா அவர்களே,
அன்று எனது ஆலையில் என்னை அங்கேயே தங்கச் சொல்லி இருக்கிறார்கள்.அது மட்டுமல்லாது எனது காய சித்திக்கான குரு அன்று என்னைச் சந்திக்க அங்கு வருகிறார்.எனவே அன்று என்னை நீங்கள் சந்திக்க இயலாது.மேலும் எங்களது சபை புதிய கட்டிட திறப்பு விழா வேலைகளும் நெருக்கிக் கொண்டுள்ளன.எனவே இப்போது(01-03-2012 வரை) இல்லை என்றாலும் மீண்டும் ஒருநாள் என்னை சந்திக்க நானே நாள் குறித்து உங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு தெரிவிக்கிறேன்.
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்
sir , want to meet u , can i get , the time and date to meet u , and can i also get ur address to meet u
கருத்துரைக்கு நன்றி திரு ஸ்ரீதர் அவர்களே,உங்களுக்கு தனிப்பட்ட மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது.
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்
Dear Sir,
The explanations about tamizh and the inner self of us is really great. All i have is only one doubt in all your explanations sir.
You have explained about ravi,mathi chudar…. chudar(light) is seen only in eyes and also many poets including Bharathiyar have sung as “Chutum vizhi chudhar thaanadi chooriyan chandiran” like that.
Also his love towards kannamma also emphasize it. So, the proper method is with eyes connecting to inner self(Atmastanam) is it not…. Our Murugan peruman upadesam to Arunagirinathar is also Summa Iru, not to take care of breath but to be still…. meaning, just to see and sit simply and silently.
Kindly clarify.
Thanks and regards,
S. Shakthi
அன்பு மிக்க திரு சக்தி அவர்களே,
கருத்துரைக்கு மிக்க நன்றி!!!!சில விடயங்களை நான் வெளிப்படையாக பேச முடியாது.எனக்கும் சில கட்டுப்பாடுகள் உள்ளன.எனவே இது பற்றி தெரிய எனது சபைக்கு வாருங்கள் .உறுப்பினர் ஆனபின் அங்கேதான் என்னால் இது பற்றி விளக்க முடியும்.
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்
அய்யா வணக்கம்,
எதிர் வரும் பௌர்ணமி கூட்டத்தில் நான் கலந்து கொள்ளலாமா ?
அதற்கு நான் என்ன செய்ய வேண்டும் ?? எப்படி தயாராகி வரவேண்டும் ??
தெரியப்படுத்தவும்
நன்றி
மோகன்குமார்
அன்பு மிக்க திரு மோஹன்குமார் அவர்களே,
கருத்துரைக்கு மிக்க நன்றி !!!!!
எங்களது சித்த ஞான சபையில் உறுப்பினராக திருமணம் முடிந்தவர்தான் புதிய நபராக சேர முடியும் .மேலும் ஒவ்வொரு பௌர்ணமியன்றும் சபைக் கூட்டம் நடக்கும் .அதில் மூன்று கூட்டங்களுக்காகவாவது புதிய நபர்கள் தவறாமல் வந்திருக்க வேண்டும்.இந்த இரண்டு விதி முறைகளுக்கும் யாருக்குப் பொருந்துகிறதோ அவர்களுக்கு அடுத்து வரும் பௌர்ணமியோடு கூடிய வியாழக்கிழமையிலோ அல்லது வளர் பிறையில் வரும் வியாழக்கிழமையிலோ உபதேசம் கொடுக்கப்படும்.இந்த உபதேசம் சித்தர்கள் வழியில் மச்ச முனிவரின் ஞான உபதேச வழியில் கொடுக்கப்படும்.
எம் குருநாதர் ஆன்மீக வள்ளல் திரு பார்த்த சாரதி அவர்கள்,சாமீ அழகப்பனான நான் மச்ச முனிவரின் ஆசிரமத்தைச் சேர்ந்த கடைமகன். இந்த ஆசிரமம் இந்தியாவில் தமிழ்நாட்டில் இராமநாதபுரம் மாவட்டத்தில், பரமக்குடி தாலுக்காவில், நயினார் கோவில் அருகே பாண்டியூர் என்ற தெய்வீகத் திருத்தலத்தில் அமைந்துள்ளது. ஒவ்வொரு மாதம் இரவுப் பௌர்ணமியில் அங்கே சபைக் கூட்டம் நடை பெரும். அதில் சித்தர் பாடல்களுக்கான விளக்கங்கள் அளிக்கப்படும். மதம் ஒரு தடையில்லை.
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்
தங்கள் பதிலுக்கு மிக்க நன்றி அய்யா,
நான் திருமணம் முடிந்தவன். திருப்பூர் நகரில் வசிக்கிறேன்.
வந்து சேர வழியும், தங்கும் வசதி பற்றியும் தெரிந்துகொள்ள சபையின்
தொலை பேசி எண்ணை தெரிவித்தால் உதவியாக இருக்கும்.
பணிவன்புடன் – மோகன்குமார்
அன்புள்ள திரு மோகன் குமார் அவர்களே!!!
தங்களின் கருத்துரைக்கு நன்றி,
நான் கடந்த நான்கு தினங்களாக நான் ஊரில் இல்லை.அதனால் உடனே பதில் கொடுக்க இயலவில்லை.இன்று 01-08-2012 சபையில் பௌர்ணமிக் கூட்டம் உள்ளது. இன்று முடிந்தால் வாருங்கள்.இன்று சபைக்குச் செல்கிறேன்.மதுரை வந்து அங்கிருந்து பரமக்குடிக்கு இரவு 7.30 மணிக்கு வாருங்கள். பின் பாண்டியூருக்கு பேருந்தில்( 4 ம் நம்பர் , பவானி டிரான்ஸ்போர்ட் ) ஏறி பாண்டியூரில் இறங்கி பார்த்தசாரதி ஜோதிடர் வீடு எது என்று கேட்டால் சொல்லிவிடுவார்கள். தொலை பேசி எண் 04564-240294
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்
தகவலுக்கு மிக்க நன்றி அய்யா,
வேலை பளு காரணமாக உங்கள் மின்னஞ்சலை தற்பொழுதுதான் பார்க்க முடிந்தது.
அடுத்த கூட்டத்தில் பங்கு கொள்ள திருவருள் துணை புரிய வேண்டுகிறேன்.
கூட்டம் எவ்வளவு நேரம் நடக்கும் ?? கூட்டம் முடிந்தவுடன் திரும்ப பஸ் வசதி உள்ளதா என்பதையும் தெரியப்படுத்துங்கள் அய்யா.
நன்றி . வணக்கம்.
பணிவன்புடன் – மோகன்குமார்.
அன்பு மிக்க திரு மோகன்குமார் அவர்களே,
கருத்துரைக்கு மிக்க நன்றி !!!!!
பரமக்குடியில் இருந்து இரவு 8.30 க்குப் பிறகு பேருந்து கிடையாது.எனவே வெளியூரில் இருந்து வரும் அன்பர்கள் பரக்க்குடி பேருந்து நிலையத்தில் இரவு 8.00 மணிக்கு இருக்க வேண்டும். இரவு 9.00 மணிக்கு கூட்டம் ஆரம்பித்து இரவு 2.00 மணிக்கோ அல்லது 3.00 மணிக்கோ முடியும் .அதிகாலை 5.30 மணிக்கு பாண்டியூரில் இருந்து பரமக்குடிக்கு பேருந்து கிளம்பும்.அதில் பரமக்குடி போய் வேற்றூருக்கு செல்லலாம்.அடுத்த கூட்டத்தில் புதிய நபர்களுக்கான உபதேசம் இருக்கிறது.அடுத்த கூட்டத்தில் உபதேசம் இருந்தாலும்,ஏற்கெனவே மூன்று கூட்டங்களில் பங்கு கொண்டவர்களுக்கு மட்டுமே உபதேசம் கொடுக்கப்படும்.எனவே அடுத்த கூட்டத்தில் நடக்கும் உபதேசத்தில் புதியதாக ஒரு கூட்டத்திலும் கலந்து கொள்ளாத நபர்,உபதேசம் பெற்றுக் கொள்ள இயலாது.இது சபை வரைமுறையாக வகுக்கப்பட்டுள்ளது.எனவே கலந்து கொள்ளுங்கள்.இறைவன் திருவருள் புரியட்டும்.
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்
பதிலுரைக்கு மிக்க நன்றி அய்யா,
வரும் பௌர்ணமி கூட்டம் எந்த தேதி – கிழமையில் நடக்கிறது என்று தெரிய படுத்துங்கள் அய்யா.
மேலும் முளை கட்டிய பாசி பயிரின் குணங்களை பற்றி ஒரு இடுகை வெளியுடுவதாக
தங்கள் பதிவு ஒன்றில் படித்தேன். தேடி பார்த்தேன் ..கண்டு பிடிக்க இயலவில்லை . அதன்
இணைப்பை தர இயலும அய்யா ??
பணிவன்புடன்
மோகன்குமார்.
அன்பு மிக்க திரு மோகன் குமார் அவர்களே,
கருத்துரைக்கு மிக்க நன்றி !!!!!
வரும் பௌர்ணமி சபைக்கூட்டம் வரும் வியாழக்கிழமை , ஆகஸ்ட் 30 ம்தேதி இரவு 9.00 மணிக்கு சபைக்கூட்டம் ஆரம்பிக்கும்.முளைக்கட்டிய பாசிப்பருப்பு பற்றிய பதிவு எழுத எண்ணியிருந்தேன்.ஆனால் அதற்கு இன்னும் வேளை வரவில்லை போலும்.ஆனால் ஞானம் உடல் சார்ந்ததா உயிர் சார்ந்ததா பாகங்களில் எழுதுகிறொம்.அது வரை பொறுங்கள்.
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்
பதிலுரைக்கு மிக்க நன்றி அய்யா !!
இம்முறை கூட்டத்தில் கலந்து கொள்ள திருவருளை வேண்டுகிறேன்.
முளை கட்டிய பாசி பயிறு – கட்டுரைக்காக காத்திருக்கிறேன் அய்யா.
பணிவன்புடன்
மோகன் குமார்.
அன்பு மிக்க திரு மோகன் குமார் அவர்களே,
கருத்துரைக்கு மிக்க நன்றி !!!!!
வரும் பௌர்ணமி சபைக்கூட்டம் வரும் வியாழக்கிழமை , ஆகஸ்ட் 30 ம்தேதி இரவு 9.00 மணிக்கு சபைக்கூட்டம் ஆரம்பிக்கும்.அன்று சந்திப்போம்.
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்
அன்பு மிக்க சாமீ அழகப்பன் அய்யா அவர்களுக்கு வணக்கம்.
கடந்த பௌர்ணமி கூட்டத்தில் கலந்து கொண்டு தங்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்ததை பெரும் புண்ணியமாக
கருதுகிறேன். குருநாதரின் திருவருளை எண்ணி திருவடி பணிகின்றேன் !!
தொடர்ந்து கூட்டங்களில் கலந்து கொண்டு பயன்பெற திருவருள் துணை நிற்கும் என்றும் நம்புகிறேன்.
பணிவன்புடன்
மோகன்குமார்.
அன்பு மிக்க திரு மோகன் குமார் அவர்களே,
கருத்துரைக்கு மிக்க நன்றி !!!!!
பெரும் வாய்ப்பொன்று உங்களுக்கு விட்ட குறை தொட்ட குறை காரணமாக எளிதில் கிடைத்திருக்கிறது தொடர்ந்து பற்றற்றான் பற்றினை பற்றிக் கொண்டு கடைத் தேறப் பாருங்கள்.தொடர்ந்து சபைக்கு வாருங்கள்.தொடர்ந்து கல்லெரிந்து கொண்டிருந்தால்தான் தண்ணீரில் உள்ள பாசம் விலகும் .விட்டு விட்டால் மீண்டும் தண்ணீரை பாசம் மூடிவிடும் . எனவே விட்டு விடாதீர்கள்!!!!
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்
பேரன்புமிக்க சாமீ அழகப்பன் அய்யா அவர்களுக்கு வணக்கம்,
வேலை பளு காரணமாக கடந்த மாத பௌர்ணமி கூட்டத்தில் கலந்து கொள்ள இயலவில்லை அய்யா.
அடுத்த மாதம் கலந்துகொள்ள இறைஅருளை வேண்டுகிறேன்.
** பல வருடங்களாக என்னால் சரி செய்ய இயலாமல் இருந்த – அதிக நேரம் தூங்கும் பழக்கம் கட்டுப்பட்டு வருகிறது.
ஐந்து மணி நேரமாக குறைந்துள்ளது.
** மன அதிர்வு குறைந்து மன அமைதியில் மாற்றம் தெரிகிறது.
குருவின் திருவடி அருளால் நிகழ்ந்த இந்த மாற்றங்களை தங்களுடன் பகிர்த்து கொள்ள விரும்புகிறேன் அய்யா.
பணிவன்புடன்
மோகன்குமார்
mohankumartup@gmail.com.
9600988602
அன்பு மிக்க பொறியாளர் திரு மோகன் குமார் அவர்களே,
கருத்துரைக்கு மிக்க நன்றி !!!!!
எல்லாம் வல்ல அந்த இறைப் பேராற்றலுக்கு நன்றி .எல்லாம் வல்லான் தனையே ஏற்றுங்கள், போற்றுங்கள் சொன்னேன் அதுவே சுகம்.
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்
ayya ethanal thirumanam aanavarkal mattum. mannikavum terinthu kolluvatharkaka mattum than ketan ethum pilai erunthal mannikauvm pothuvi solla mudiyathu enntral, thiru2962@gmail.com entra mail l pathi anupungal terinthu kolluvate thavaru enral solla vendam nantri
அன்பு மிக்க திரு மது அவர்களே,
கருத்துரைக்கு மிக்க நன்றி !!!!!
ஏற்கெனவே இந்தக் கேள்விக்கு விரிவான பதில் கொடுத்துள்ளோம். நன்றாக பின்னூட்டங்களை படித்துப் பாருங்கள் .அதில் உங்கள் கேள்விக்குப் பதில் கிடைக்கவில்லை என்றால் கேள்வி கேளுங்கள் . எனது நேரத்தை வீணாக்கும் முகமான கேள்விகளை முடிந்த வரை தவிறுங்கள்.
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்
ஐயா அவர்களுக்கு வணக்கம் தங்கள் வலைபூவிற்கு நான் புதியவன் தங்கள் மருத்துவ குறிப்புகள் அனைத்தும் புரிந்துகொள்ள முடிகிறது நத்தைசூரி மூலிகையினை பயன்படுத்தும் விதம் பற்றி சற்று தகவல் தர முடியுமா? நன்றி
அன்புள்ள திரு பாலாஜி.ஆர் அவர்களே ,
கருத்துரைக்கு மிக்க நன்றி,
ஏற்கெனவே இது பற்றி நிறைய எழுதி உள்ளோமே!!!அத்தனையும் பாருங்கள் .பின் கேளுங்கள்.
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்
Dear Sir,
Nice to know about the self.. one small doubt, the breath differs in each person as per their work.. is it not. some are very hardly working so breath out much, some are very lazy… is it all the living being in this world breathing at the same rate? Kindly explain. Also, apart from the below chakras, it’s said in head also 6 chakras are there and to concentrate there not here is the gnana siddhars direction, is it not.. Did vallalar also signified this 21600 in his siddhi valagam? All he explained is within our head, the eyes is it…. please give a detailed explanation for my doubt if permitted by lord… thanks
அன்புள்ள திரு சக்தி அவர்களே,
கருத்துரைக்கு மிக்க நன்றி,
இதற்கு பதிலளிக்க எமக்கு அதிகாரம் இல்லை. எமது சபையில் மட்டுமே உபதேசம் பெற்றவர்களிடம் எம் குருநாதர் விளக்கம் அளிப்பார்.எனவே எம் குருநாதர் திரு பார்த்த சாரதி அவர்களை அணுகவும்.
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்
வணக்கம் ஐயா, திருவருள் துணை காரணமாய் தற்போது தான் உங்கள் பதிவுகளை பார்க்கும் ,படிக்கும் சந்தர்ப்பம் கிட்டியுள்ளது. உங்கள் பதிவுகளை படித்து வருகிறேன். உங்கள் பௌர்ணமி கூட்டத்தில் பெண்கள் கலந்து கொள்ளும் வாய்ப்பு உண்டா. தெரியப்படுத்துங்கள். நன்றி என்றென்றும் அன்புடன்.
அன்புள்ள திருமதி ரஞ்சனா கிருஷ்ணன் அவர்களே,
உங்களது கருத்துரைக்கு நன்றி,
///திருவருள் துணை காரணமாய் தற்போது தான் உங்கள் பதிவுகளை பார்க்கும் ,படிக்கும் சந்தர்ப்பம் கிட்டியுள்ளது. உங்கள் பதிவுகளை படித்து வருகிறேன். உங்கள் பௌர்ணமி கூட்டத்தில் பெண்கள் கலந்து கொள்ளும் வாய்ப்பு உண்டா. ///
ஆண் , பெண் ; கற்றார் , கல்லாதவர் ; ஏழை,பணக்காரன் ; மேல் சாதி , கீழ் சாதி ; வேற்று மதம் , இந்து மதம் ; என்ற வேறுபாடு ஞானத்துக்கு இல்லை . அனைவரும் ஆன்மா என்ற ஒரே வட்டத்துக்குள்தான் வருவார்கள் .யார் வேண்டுமானாலும் பௌர்ணமி கூட்டத்தில் கலந்து கொள்ளும் வாய்ப்பு உண்டு .
இப்படிக்கு
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்
ஐயா வணக்கம் தங்கள் பதிலுக்கு நன்றி.
அன்புள்ள திரு ரஞ்சனா கிருஷ்ணன் அவர்களே,
உங்களது கருத்துரைக்கு நன்றி,
இப்படிக்கு
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்