ஒரு பழம் பெரும் புத்தகம் 1

கடப்பை சச்சிதானந்த சுவாமிகள் என்பவர் மிகச் சிறந்த யோகி.அவர் எழுதிய 
‘ஜீவப்ரமைக்கிய வேதாந்த ரகசியம்’

என்ற நூலில் எழுதியுள்ள பல விடயங்களை விளக்கியுள்ளார்.அந்த நூல் ஒரு நூற்றாண்டுக்கு முன் உள்ள நூல். அதில் உள்ள ‘ சோகம் ‘ மந்திரம் பற்றிய பயிற்சியையே ‘சுதர்சனக் கிரியா’ என்று வாழும் கலை அமைப்பில் கற்றுத் தருகிறார்கள்.

இதுபோல் பல அமைப்பினர் இந்த நூலில் இருந்து எடுத்த விஷயங்களையே   வேறு பெயரிட்டு கற்றுத் தருகின்றனர்.இதில் வாசி மாற்ற ,உடல் தத்துவம்,பல ஆன்மீக ரகசியங்களையும் , எளிதாக விளக்கியுள்ளார்.

இந்த நூலை தற்போது தினமணி பதிப்பகத்திலிருந்து மறு பதிப்பிட்டிருக்கிறார்கள் . மிக மிக நல்ல புத்தகம் . ஒவ்வொரு ஆன்மீக அன்பர் வீட்டிலும் இருக்க வேண்டிய புத்தகம் . இந்த நூல் கையில் இருந்தால் ஒரு பெரிய ஆன்மீக குரு வீட்டில் இருப்பதற்குச் சமம் .

அந்த மஹானின் படமும் அந்தப் புத்தகத்தின் முதல் இரு பக்கங்கள் பற்றிய விளக்கங்கள்

மற்ற ஆன்மீக ரகசியங்கள் இனி வரும் இடுகைகளில் காணலாம்.
நன்றி 
இப்படிக்கு என்றென்றும் நட்புடன்
சாமீ அழகப்பன்