ஜோதிடம் , ஜாதகம் , வான சாஸ்திரம்,எதிர்காலம் கணித்தல்

Astrology

ஜோதிடம் , ஜாதகம் , வான சாஸ்திரம்,எதிர்காலம் இவை போன்றவற்றையெல்லாம் அறிந்து கொள்வதால் பயன் என்ன??நடக்கப் போவதுதான் நடக்கப் போகிறதே !!!! பிறகெதற்கு இதெல்லாம்??? என்று நீங்கள் கேட்பது எமக்கும் புரிகிறது???நாமும் அதே கேள்விகளை கேட்டுத்தான் வளர்ந்தோம் .அதை எமது ஜோதிட குருவும் எமது சித்தப்பாவுமான திரு சடாட்சரம் அவர்களிடம் கேள்விகளாகக் கேட்டு அதை காணொளிக் காட்சியாக எடுத்து உங்கள் முன் வைக்கிறோம்.

ஜோதிக்கு இடமான இடத்தை திடமாக வைப்பதே ஜோதிடம். ”அந்த இடம் – இருள் வெளி இரண்டுக்கும் ஒன்றிடம் என்ன? அருள் ஆனந்தத் தழுத்தியென் செவியில் எல்லையில்லா இன்பம் அளித்து” என்னும் இடமே அது ? அந்நிலை அடைந்தவனுக்கு இதெல்லாம் ஓர் பொருட்டில்லை.ஆனால் அந்நிலை அடையாத சாதாரண மனிதர்களுக்கு இரங்கி சித்தர்களால் அருளப்பட்டதே இந்த ஜோதிடம் , ஆரூடம் , வான சாஸ்திரம் , தொடு குறி சாத்திரம் , சகுனம் , மச்ச சாஸ்திரம் , நாடி சாஸ்திரம் , கை ரேகை சாஸ்திரம் , பஞ்ச பட்சி சாஸ்திரம் , பஞ்சாங்கம் ,சாமுத்திரிகா லட்சண சாஸ்திரம், சஹாதேவன் சாஸ்திரம் , சாதகக் கணிதங்கள், நஷ்ட சாதகக் கணிதம், எதிர்காலத்தைக் கணிக்கும் தீர்க்க தரிசனம், எனப் பல உண்டு.

நாம் பொதுவாக அறிந்தது முப்பரிமாணம் .அது நீள ,அகலம் , உயரம் . அது போல காலம் என்பது நான்காவது பரிமாணம் . நாம் எப்படி நீள , அகல , உயரத்தில் பயணம் செய்கிறோமோ , அது போல காலத்தின் முன்னும் , பின்னும் பயணம் செய்யலாம்.முப்பரிமாணப் பயணத்தின் போது காலம் விரயமாகி ஆயுள் முடிகிறது.ஆனால், சித்தர்கள் நவ கிரகங்களின் பிடியில் இருந்து ஒளியின் உதவியால் நான்காம் பரிமாணமான காலத்தின் முன்னும் பின்னும் பயணிக்கும் வல்லமை பெற்றுவிட்டனர்.ஐன்ஸ்டீனினின் ஆற்றல் மாறாக் கோட்பாட்டின்படி ஒரு நபர் ஒளியின் வேகத்தில் பயணிக்கும் ஒரு விண்கலத்தில் ஏறி ஒளியின் வேகத்தில் பயணித்து நூறாண்டுகள் கழித்து அவன் திரும்பினால் அவன் ஆயுள் மாறியிருக்காது.அதாவது வயது ஏறியிருக்காது.  ( E= MC2 ) அதனால்தான் சித்தர்களை காலம் என்னும் பரிமாணக் கருவி அழிக்க இயலாது தோற்றுவிடுகிறது.நாமும் அந்த வல்லமை பெறலாம்.ஆனால் அதற்கு முன் சில விடயங்களைத் தெளிவுபடுத்திவிடுகிறோம்.

விதியைப் பற்றி வள்ளுவர் என்ன சொல்கிறார் என்று பார்ப்போம்.

ஊழிற் பெருவலி யாவுள; மற்றொன்று

சூழினும் தான் முந்துறும்.

ஊழான விதியை விட வலிமையானது உலகத்தில் என்ன இருக்கின்றது என்று கேள்வியாக கேட்டுவிட்டு , அந்த ஊழை (விதிக்கப்பட்ட விதி ) வெற்றி பெற ஒன்று முயலுமாயினும் அதன்முன்னர் விதியானது வெற்றி கொண்டுவிடும் என்று கூறுகிறார்.அதாவது ஊழான விதியை எதனாலும் வெற்றி கொள்ள முடியாது என்று கூறுகிறார்.

அதே வள்ளுவர்

ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித்

தாழாது உஞற்றுபவர்

” ஊழ் என்ற விதி தோற்காத ஒன்று.அந்த ஊழையும் தோல்வியடைய வைப்பவர்கள் தாழாத முயற்சி உடையவர்கள் ” என்று கூறுகிறார் .ஏன் இந்த முரண்பாடு என்றால் இரண்டும் உண்மையே ??? மேலே  முதலில் சொன்னது சாதாரண மக்களுக்கு ( அதாவது முயற்சி என்பது எடுக்காத சாதாரண மக்களுக்கு ), பின்னர் சொன்னது அசாதாரண மக்களுக்கு ( விதியையும் தோல்வியடையச் செய்யும் அளவு முயற்சி உள்ளவர்களுக்கு அதாவது சித்தர்களுக்கு அல்லது சித்தரைப் போன்றவர்களுக்கு  ).

ஏனென்றால் மனத்தினால் செயலாற்றுபவர்கள் (மனிதர்கள்)மூச்சு விரயத்தால் மனச் சோர்விற்கு ஆட்படுவார்கள்.சித்தத்தினால் காரியம் ஆற்றுபவர்கள்  ( சித்தர்கள் )உடனே அந்தக் காரியம் சித்தத்தின் சக்தியால் அந்த காரிய நோக்கம்  சிதாகாசம் சென்று மனப் பெருவெளியால் நிறைவேற்றப் பெறுவார்கள்.

ஒரு நிமிடத்திற்கு பதினைந்து மூச்சு வீதம் , ஒரு நாழிகைக்கு ( 24 நிமிடத்திற்கு ) 360 மூச்சுக்கள்  ( ஒரு வட்டத்திற்கு பாகைகள் 360 என்பதை நினைவு கூரவும்) , ஒரு மணி நேரத்துக்கு 900 மூச்சுக்கள் ,ஒரு நாளைக்கு 21600 மூச்சுக்கள்.இதையே தமிழ் உயிர் மெய் எழுத்துக்கள் 216 ஆக வைத்திருக்கிறார்கள்.இதை சாதகத்தில் 21,600 கலைகளாக வைத்துள்ளார்கள்.இந்த 21,600 முறையே 20+40+60+80=200 இவற்றால் பெருக்க  {கலியுகம் =4,32,000} +{ துவாரபார யுகம் =   8,64,000}+{திரேதா யுகம் = 12,96,000}+{கிருத யுகம் =17,28,000}=43,20,000 ஆண்டுகள் கொண்டது ஒரு சதுர்யுகம் ( 21,600 x 4).இவை அனைத்தும் மூச்சை அடிப்படையாக வைத்துள்ள கணக்குகளே.

இந்த 21,600 மூச்சுக்கள் மூலாதாரத்திற்கு 600 மூச்சும் ,

மச்ச முனிவரின் சித்த ஞான சபை வலைத் தளத்தின் நோக்கம் , அனுதினமும் பசியால் துன் புறும் மனிதனுக்கு  முதலில் அதிலிருந்து விடுதலை ( அடிப்படைத் தேவைகள் ) , தினம் தாம் செய்த கர்மத்தால் விளைந்த  வியாதிகளால் வாடித் துன்புறுபவர்களுக்கு  அதில் இருந்து விடுதலை  (சமுதாயத் தேவைகள்  ) , பின்  தான் பெற்ற இன்பம் மற்றவர்களும் பெறச் செய்யத் தக்க ஆன்மாகத் திகழச் செய்தல் ( மரியாதைத் தேவைகள் ) ,பின்னர்  தான் யார் என உணர வைத்தல் , பின்னர் தேவைகளின் தத்துவங்களின் அடிப்படையில் தன்னைத் தானறிதல் நிகழ்ந்து  இறைவனுடன் இரண்டறக் கலத்தல் .இவற்றைப் பற்றி மாஸ்லோ என்ற மேலை நாட்டு ஞானி கொடுத்துள்ள விவரங்களைக் காணவும்  தெளிவாக உணரவும் கீழ்க்கண்ட வலைத் தளங்களைக் காணுங்கள்.

ஏனெனில் தமிழில் சொன்னால் நிறைய நம் தமிழர்களுக்குப்  புரிவதில்லை.எனவே தமிழ் உணர்வாளர்கள் பொருத்தருள்க!!!இதைவிட தெளிவாக நம் சித்தர்கள் சொல்லியுள்ளது நம் மக்களுக்கு புரியாத அளவிற்கு நம் சந்ததிகள் தமிழறிவற்றுப் போனது நம் துரதிருஷ்டமே!!!!

http://www.simplypsychology.org/maslow.html

http://en.wikipedia.org/wiki/Maslow{447c8c239b33e3463d0c067d40bee514ab07bd6d8df12f8084016b41e1737007}27s_hierarchy_of_needs

https://www.google.co.in/search?q=maslow{447c8c239b33e3463d0c067d40bee514ab07bd6d8df12f8084016b41e1737007}27s+hierarchy+of+needs&hl=en&tbm=isch&tbo=u&source=univ&sa=X&ei=aI-XUY7FDIfLrQfw7IGICg&sqi=2&ved=0CDUQsAQ&biw=1024&bih=601

http://psychology.about.com/od/theoriesofpersonality/a/hierarchyneeds.htm

http://www.businessballs.com/maslow.htm

https://commons.wikimedia.org/wiki/File:Maslow{447c8c239b33e3463d0c067d40bee514ab07bd6d8df12f8084016b41e1737007}27s_Hierarchy_of_Needs.svg

http://www.edpsycinteractive.org/topics/conation/maslow.html

தேவையெல்லாம் நிறைவேறிய பின்னர் ஓர் தேவை மீதியாக இருக்குமேயானால் , அத்தேவை இறையுடன் இணைதல்.இதையே வள்ளலார்   ”ஆசை ஒன்று நின்றதெனக்கன்புடைய அய்யாவே ”.

011-2950-030-4-Payranbu Kanni

scan0013_mini

scan0014_mini

எமது சித்தப்பாவான திரு திரு சண்முக சடாட்சரம் அவர்களப் பற்றி ஏற்கெனவே நமது  வலைப்பூவில்  வெளியிட்ட பதிவைக் காண்க.

http://machamuni.blogspot.in/2011/07/5.html

எமது சித்தப்பாவான திரு திரு சண்முக சடாட்சரம் அவர்களிடம் கேள்விகளாகக் கேட்டு அதை காணொளிக் காட்சியாக எடுத்து கீழே காண்க.

[tube]http://www.youtube.com/watch?v=Zyfa5LdpCN8[/tube]]

எனது சித்தப்பா பல சோதனைகளிலும் மனம் கலங்காது வாழும் ஓர் மதிப்புள்ள பொக்கிஷம்.பல விடயங்களில் விற்பன்னர்.

மனையடி சாஸ்திரம்,சிற்ப சாஸ்திர சிந்தாமணி போன்ற நூல்களை கரைத்துக் குடித்தவர்.குறிப்பாக சோதிடத்தில் ஒரு சூரப்புலி.இது போன்ற பல விடயங்களில் அனுபவப்பட்டு தெளிந்த ஒரு ஞானி.அவரின் அலை பேசி எண் +919965195144.