துத்தி(ஒரு அற்புத மஹா மூலிகை) பாகம் 3

துத்தியிலை(ஒரு அற்புத மஹா மூலிகை) பாகம் 3

kirumi

துத்தி(ஒரு அற்புத மஹா மூலிகை) பாகம் 2படித்துவிட்டு இந்தக் கட்டுரையை படித்தால் தொடர்பு விட்டுப் போகாமல்  மிக நன்றாக விளங்கும்.

வெண்துத்தி
வெண்துத்தியைப் பற்றி ஏற்கெனவே எழுதிவிட்டதால் அது பற்றிய கட்டுரையை வெளியிட்டுள்ள இணைப்பை இதில் இணைத்துள்ளோம் .

கருந்துத்தி 

செப்புங் கருந்துத்தி சீருறவே கொண்டார்க்கு

வெப்பு நீர்க் கட்டு விலகுங்காண்-எப்பொழுதும்

நீங்கா முளைமூலம் நீள்கிருமிப் புண் வகைகள்

பாங்காகத் தானொழியும் பார்

( பதார்த்த குண விளக்கம் )

கருந்துத்தியை பாகப்படி உபயோக்கப்படுத்த நீர் எரிச்சல் முளைமூலம், புண் கிருமிக் கூட்டம் இவைகள் போகும்.

சிறுதுத்தி

ஓங்கு மலக்கட்டு மோயாத வன் கரப்பான்

வீங்கும் கடிவிஷமும் விட்டுப் போம் – பூங்குழலே

மீதுஞ் சிறு நீரின் வெப்பந் தணிந்துபோம்

கூறுஞ் சிறு துத்திக் கு

( பதார்த்த குண விளக்கம் )

சிறுதுத்தியால்மலபந்தம் , கரப்பான் ,அற்ப விஷங்களையுடைய பூச்சிகளின் கடி , நீர்எரிச்சல் , முதலியவை போகும்.சிறுதுத்தி இலையை அரைத்து 5.2 கிராம் சுத்தி செய்த சிறுகண் நாகத்திற்கு கவசம் செய்து முழப் புடம் போட நீறும்.செம்பு , வெள்ளியில் பத்துக்கு ஒன்று கொடுக்க பழுக்கும். பஸ்மாக்கி உண்ண சகல நோய்களும் தீரும்.

நிலத்துத்தி

தொடங்காசங் கட்டி தொலையவப்பு லோக

மடங்கிநீ றாகவெண்ணி னம்பொற் – குடம்போ

னலத்துத்தி பூத்தமுலை நல்லா ரமிர்தே

நிலத்துத்திப் பூண்டை நினை

( பதார்த்த குண விளக்கம் )

 நிலத்துத்திப் பூண்டானது ஆரம்ப மூலரோகத்தையும் வித்திரிதிக் கட்டிகளையும் போக்கும் .கருவங்கத்தை (காரீயத்தை ) பஸ்மம் செய்யும் .

பதிவு மிகப் பெரியதாகப் போவதால் துத்தி விதை  பற்றி  துத்தி(ஒரு அற்புத மஹா மூலிகை) பாகம் 4 ம் பாகத்தில் தொடர்ந்து வெளிவரும் .