தமிழின் பெருமை, ஞானம், தீர்க்க தரிசனமும் , தற்போது தமிழில் பேசக் கூசும் நிலையும் (பாகம் 3)
தமிழின் பெருமை, ஞானம், தீர்க்க தரிசனமும் , தற்போது தமிழில் பேசக் கூசும் நிலையும் (பாகம் 2)படித்துவிட்டு இந்த பாகத்தை படித்தால்தான் தொடர்பு விட்டுப் போகாமல் புரியும்.
ஔவையார் காலத்தில் பெரும் பஞ்சம் நிலவியது .அப்போது கடையேழு வள்ளல்களில் ஒருவரான (பாரி , ஓரி , நள்ளி , ஆய் , காரி ,பேகன் , அதியமான் {அதியன்}) காரியை காரி ஆசான் என்றும் திருமுடிக்காரி என்றும் அழைத்தனர் அக்காலத்தவர் . காரி அதியமானின் அரசில் ஒரு சிற்றரசனாக இருந்து வந்தார். அப்பஞ்சத்தில் துயருற்ற எழை , எளியவர்களுக்கு , தனது வரிப்பணத்தில்அதியமானுக்கு செலுத்த வேண்டிய நெல்லை வாரி வழங்கினார் .
அப்போது அங்கு வந்த அதியமானின் வரி வசூல் செய்யும் அதிகாரிகள் காரியை கைது செய்து கொண்டு போய் சிறையில் அடைத்தனர் . அது கண்ட வெகுண்ட பொது மக்கள் அதிமானின் கோட்டை மதில் சுவரை இடித்து காரியை விடுதலை செய்ய முயற்சி செய்தனர் .அப்போது அங்கு வந்த ஔவையார் , காரியை நாம் விடுதலை செய்து கொண்டு வருவோம் என உறுதி மொழி அளித்து சென்று அதியமானிடம் பேசுகிறார்.
அப்போது ஔவையார் “மக்கள் நன்றாக வாழ்ந்தால்தானே அரசும் வாழும் , வரப்புயர நீர் உயரும் , நீர் உயர நெல் உயரும் , நெல் உயரக் குடி உயரும் , குடி உயரக் கோன் உயர்வான் என்பதை மறந்தாயா? குடிகள் நன்றாக இருக்கும் வரைதான் அரசு நன்றாக இருக்கும் .அக்குடிமக்கள் நன்றாக இருக்க நீ செய்யத் தவறியதைத்தான் காரி ஆசான் செய்தான் .நீ அவனைக் கைது செய்யலாமா ?” என்று கேட்கிறார்.
அது கேட்ட அதியமான் “உங்கள் அறிவுரைகள் எமது அகக்கண்களை திறந்தது .இப்போதே காரி ஆசானை விடுதலை செய்யச் சொல்லுகிறேன் ” என்றான் .
அப்போது ஔவையார் இவ்வளவு நல்ல உள்ளங்கள் இருந்த போதும் , உத்தமர்கள் இருந்த போதும் மழை ஏன் பொழிய மறுக்கிறது என்று இயற்கையைப் பார்த்து ஒரு பாடல் பாடுகின்றார் .
நெல்லுக் கிறைத்த நீர் வாய்க்கால் வழியோடி
புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம் -தொல்லுலகில்
நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு
எல்லோர்க்கும் பெய்யும் மழை .
நெல்லுக்கு இறைக்கும் நீர் வாய்க்கால் வழியோடி ஆங்காங்கிருக்கும் புல்லுக்கும் ஆகுமாம் . அதுபோல நல்லவர் ஒருவர் உலகில் இருந்தால் அவரைக் காக்கும் பொருட்டாக உலகிற்கே மழை பொழியும் . இப்படி அவர் பாடியவுடனே மழை கொட்டித் தீர்த்தது.அவரது தமிழுக்கு அவ்வளவு வன்மை இருந்தது.பஞ்ச பூதங்களை ஆளும் வல்லமை தமிழுக்கு உண்டு .அதைப் பாடும் புலவர்களுக்கும் உண்டு.அக்காலத்தில் அறம் பாடியே அநீதியை அழித்தவர்கள் , இயற்கையையும் சரி செய்தவர்கள் தமிழ்ப் புலவர்கள் .
ஓதி உணர்ந்த பயன் உலகினுக்கே தரும்
நீதி முறை வழுவா வேதியராலே எல்லோர்க்கும் பெய்யும் மழை
தொல்லுலகில் நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு
எல்லோர்க்கும் பெய்யும் மழை .
நான் மறைகளை ஓதி உணர்ந்த பயன் , அவற்றை உலகினுக்கு ஆக்கும் பயனால் தான் படித்த படிப்புக்கு பயன் . இப்படி செயலாற்றும் நீதி முறை வழுவா வேதியராலேதான் எல்லோருக்கும் மழை பொழியும் .
கண்ணும் கருத்தும் என , கண்ணும் கருத்தும் என
கணவனைக் கருதும் புண்ணிய மாதர்தம் புகழ் கற்பினாலே
புகழ் கற்பினாலே புகழ் கற்பினாலே
எல்லோர்க்கும் பெய்யும் மழை.
கண்ணும் கருத்தும் என கணவனைக் கருதும் கற்புடை மாதர்கள் கற்புத் திறத்தாலேதான் எல்லோருக்கும் மழை பொழிகிறது .
எண்ண அரிய தொழில் செய்து அரிய தொழில் செய்து
இம்மாநிலம் உண்ண உணவு தரும் உழவர்களாலே
உழவர்களாலே உண்ண உணவு தரும் உழவர்களாலே
எல்லோர்க்கும் பெய்யும் மழை.
இவ்வுலகில் நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு
எல்லோர்க்கும் பெய்யும் மழை .
எண்ணுதற்கு அரிய தொழில் செய்து , உலகைக் காக்கும் இம்மாநிலம் உண்ண உணவு தரும் உழவர்களாலே எல்லோர்க்கும் பெய்யும் மழை.(இப்போதுள்ள உழவர்கள் பூச்சி மருந்துகளைப் போட்டு ,உரத்தையும் போட்டு மக்களைக் கொல்லும் தொழில் செய்வதாலேதான் மழையும் பொய்க்கிறது . இப்போதுள்ள உழவர்கள் எம்மை மன்னிக்கவும் . நீங்களும் உயிர்களைக் கொல்லும் பூச்சி மருந்துகள் ,மற்றும் உரத்தையும் போடும் விவசாயத்தை விட்டுவிட்டு நல்ல இயற்கை விவசாத்துக்கு மாறுங்கள் . இயற்கை மழையைக் கொட்டோ கொட்டென்று கொட்டும் ) .
பதிவு பெரிதாகப் போவதால் அடுத்த பதிவான தமிழின் பெருமை, ஞானம், தீர்க்க தரிசனமும் , தற்போது தமிழில் பேசக் கூசும் நிலையும் (பாகம் 4 ) ல்தொடரலாம்.
ஐயா , வணக்கம் . கடந்த மூன்று நான்கு வாரங்களாக தங்களின் வலைதளத்தை படித்து வருகிறேன். தங்களின் ஒவ்வொரு பதிவும் பொக்கிசமாக திகழ்கிறது. அவை என்னை பல வழிகளில் நெறிப்படுத்தியும் வழிகாட்டியும் வருகிறது. அந்த ஈசனின் கடைக்கண் பார்வை என் மீதும் விழுந்ததாகவே கருதி மகிழ்கிறேன்.
தங்களின் இந்த “தமிழின் பெருமை, ஞானம், தீர்க்க தரிசனமும், தற்போது பேசக்கூசும் நிலையும்” – மூன்று பதிவுகளிலும் சேர்த்து 3 கருத்துரைகள் மட்டுமே தமிழ் மொழி சார்ந்து பதிவாகி இருப்பது மிகவும் வறுத்தமடைய செய்தது.
எல்லாம் நம்மை ஆண்ட ஆண்டு கொண்டிருக்கிற ஆட்சியாளர்களால் வந்தது.
1967-ல் அண்ணா தேர்தலில் ஆட்சி மொழியாக , அலுவலக மொழியாக , பாடத்திட்டத்தில் முதன்மை மொழியாக தமிழே என்ற வாக்குறுதி கொடுத்து ஆட்சிக்கு வந்தவுடன் ஆட்சி மற்றும் அரசியல் மொழியாக ஆங்கிலத்தை அரியணையேற்றி தமிழினை கொன்றது மட்டுமல்லாது பாடத்திட்டங்களில் முதன்மை பயிற்றுமொழி அந்தந்த வட்டார மொழி என்ற சட்டம் இயற்றி குழியும் தோண்டி புதைத்தார்.
ஏன் எல்லா துறை சார்ந்த படிப்பை (பொறியியல்,விஞ்ஞானம்,…) படிப்பையும் சீனர்களும், ஜெர்மானியர்களும், ஜப்பானியர்களும் அவர்களின் தாய் மொழி வாயிலாகவே கற்றுக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் எல்லாத் துறைகளிலும் முன்னணியில் தானே இருக்கிறார்கள்.
அவரவர் தாய் மொழி கல்வியே அதிநுட்பமான ஆராய்ச்சிக்கு (சிந்தனைக்கு) நல்லது என்று வல்லுனர்கள் தெரிவிக்கிறார்கள் .
ஐயா , என்னை பொறுத்தருள்க . என் சிந்தனைக்கு எட்டிய செய்திகளைக் கொண்டு கொட்டிவிட்டேன். (இன்னும் ஆதங்கம் இருக்கு, வேண்டாம்). உங்களது பொன்னான நேரத்தை எடுத்துக் கொண்டேன். மன்னிக்கவும்.
ஈசனின் திருவருளும், சித்தர்களின் பரிபூரண உங்களுக்கு நல்கி அதனை மூலம் நம் தமிழ் மக்கள் சிறக்கவும், அதன் மூலம் தமிழ் மொழி நீடித்து புகழ் பரப்பவும் ஈசன் பாதம் பணிந்து வேண்டுகிறேன்.
நன்றி. வணக்கம். அன்புடன், கு. வேல்முருகன்.
பின்குறிப்பு.
மேல்க்கண்ட கருத்துரையை GMAIL – ல் தட்டச்சு செய்து பின் நகல் எடுத்து தங்கள் தளத்தில் ஒட்டியது.(ஆங்கிலத்தில் கருத்துரை எழுதும் அன்பர்களின் வசதிக்காக இதை குறிப்பிட்டேன்.)
அன்புள்ள திரு ஜி . வேல்முருருகன் அவர்களே,
உங்களது கருத்துரைக்கு நன்றி,
///மூன்று பதிவுகளிலும் சேர்த்து 3 கருத்துரைகள் மட்டுமே தமிழ் மொழி சார்ந்து பதிவாகி இருப்பது மிகவும் வருத்தமடைய செய்தது.///
இதில் வருத்தப்பட ஒன்றும் இல்லை . எமது மொழி தமிழ் .எமது உயிர் தமிழ் . யாம் அதை போற்றுகின்றோம் . இறைவன் அளித்த மொழி தமிழ் மொழி.அதில் உள்ள ஞானம் தீர்க்க தரிசனம் இவை பற்றி உணர்த்தவே இவற்றை நாம் எழுதி வந்துள்ளோம் .இவை மூன்றும் கருத்துரைகள் கருத்துரைகள் அல்ல பதிவுகள் .
///ஏன் எல்லா துறை சார்ந்த படிப்பை (பொறியியல்,விஞ்ஞானம்,…) படிப்பையும் சீனர்களும், ஜெர்மானியர்களும், ஜப்பானியர்களும் அவர்களின் தாய் மொழி வாயிலாகவே கற்றுக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் எல்லாத் துறைகளிலும் முன்னணியில் தானே இருக்கிறார்கள்.அவரவர் தாய் மொழி கல்வியே அதிநுட்பமான ஆராய்ச்சிக்கு (சிந்தனைக்கு) நல்லது என்று வல்லுனர்கள் தெரிவிக்கிறார்கள்///
தமிழ் நம் வாழ்வை விளக்கும் உண்மை மொழி , இதை புரிந்தவர்கள் புரியட்டும் புரியாதவர்கள் போகட்டும்.நாம் எமது தாய் மொழியிலேயே நாம் கற்ற கல்வியை கற்றதனாலேயே இப்போது மிகச் சிறந்த சித்தரியல் வல்லுனராக திகழ முடிகிறது .யாம் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம் என யாம் உரைக்க கற்றதனைத்தும் சொல்ல பணித்துள்ளான் இறைவன் .எமது கருத்துக்களை அவரவர் அலை வரிசைக்கு ஏற்ப அவரவர் புரிந்து கொள்கின்றனர் .
இப்படிக்கு
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்
உயர்திரு ஐயா அவர்களுக்கு,
அன்பு வணக்கம்…தங்களின் வலை தளத்தை முழுவதும் படிக்க நான் என்ன புண்ணியம் செய்தேனோ அறியேன்..அதில் “நவலோக பூபதி”எனும் புத்தகம் மற்றும் “உயிர் நீட்டும் மூலிகைகள் ” புத்தகங்கள் கிடைக்கும் முகவரி தந்து உதவ வேண்டுகிறேன் ..
என்றும் அன்புடன்,
டாக்டர் சுந்தர்..
சென்னை.
அன்புள்ள திரு டாக்டர் சுந்தர் அவர்களே,
உங்களது கருத்துரைக்கு நன்றி,
“நவலோக பூபதி”எனும் புத்தகம் தனியாக இல்லை , அது ” திருவள்ளுவ நாயனார் ஞான வெட்டியான் ” என்ற நூலில் உள்ளது . இது இரத்தின நாயக்கர் அண்ட் சன்ஸ் ஆல் வெளியிடப்பட்டு வருகிறது .
உயிர் நீட்டும் மூலிகைகள் பதிப்பு இப்போது இல்லை .
இப்படிக்கு
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்
அன்புள்ள ஐயா அவர்களுக்கு,
வணக்கம்,
இன்சொல் கூறுவதற்கான உயர்ந்த கருவி வாய். தாங்கள் சிறந்த மருத்துவர். வாய் துர்நாற்றம் வருவதற்கான காரணம் என்ன?. உடல் துர்நாற்றம் வருவதற்கான காரணம் என்ன?. இதற்கு சரியான தீர்வு என்ன?.
நன்றி
அன்புடன்
விக்னேஸ்வரன்
அன்புள்ள திரு விக்னேஸ்வரன் அவர்களே,
உங்களது கருத்துரைக்கு நன்றி,
மண்ணீரல் வாயில் திறக்கிறது . மண்ணீரல் கெட்டுப் போன நிலையையே இது குறிக்கின்றது . பவன முக்தாசனம் செய்வதுடன் மச்சமுனி ஈரல் காப்பான் வாங்கி உபயோகியுங்கள் . நலம் பிறக்கும் .கீழ்க்கண்ட எமது கட்டுரையை படியுங்கள் .
http://machamuni.blogspot.in/2011/02/11.html
இப்படிக்கு
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்