தும்பை மற்றும் கவிழ்தும்பை என்ற கௌதும்பை (மச்ச முனி மூலிகையகம் பாகம் 18) பாகம் 2

தும்பை மற்றும் கவிழ்தும்பை என்ற கௌதும்பை(மச்ச முனி மூலிகையகம் பாகம் 18) பாகம் 1 ஐ படித்துவிட்டு இந்த பதிவை படித்தால் தொடர்பு விட்டுப் போகாமல் பரியும்.

தும்பை மூலிகை அருமையான ஒரு மூலிகை.அது உடலில் உள்ள விஷங்களை நீக்குவதில் அற்புதமாக வேலை செய்யும்.ஒரு அற்புதமான இதன் பயனை விவரிக்கின்றேன். நல்ல பாம்பு கடித்துவிட்டால் நல்லெண்ணெய் 100 மி லிட்டரும் , தும்பைச் சாறு 100 மி லிட்டரும் கலந்து உடனே குடிக்க கொடுத்துவிட வேண்டும் .அப்படியே வைத்திருந்தால் அவை கட்டி சேரும் . உடலில் ஏறிய பாம்பின் விஷம் இறங்கும் வரை பேதியாகும் .பாம்பின் விஷம் விஷம் அறவே நீங்கும் . பாம்பின் விஷம் மட்டுமல்ல உடலில் ஏறிய எந்த விஷத்தையும் நீக்கும்.

அது மட்டுமல்ல நாம் இப்போது எடுத்துக் கொள்ளும் சாப்பாடே பூச்சி மருந்து , மற்றும் ரசாயன உரத்தால், விஷத்தன்மையில் இருப்பதால் இதனை வாரம் ஒரு முறை எடுத்துக் கொண்டால் நம் உடல் நச்சுத்தன்மையால் பாதிக்கப்படுவதில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ளலாம்.தும்பை நமது மச்ச முனி மூலிகையகம் தயாரிக்கும் கப நோய் நிவாரணியில் கலந்துள்ளது .

தும்பைப் பூ

LEUCAS ASPERA-FLOWER

தாகங் கடிதொழியுஞ் சந்திபா தங்களறு

மாகத்தனில் வருநோ யண்டுமோ – மாகந்த

வம்பைப் பீறுங்குயத்து மாதேநின் செங்கரத்தாற்

தும்பைப் பூ தன்னைத் தொடு.

                                                                                           – பதார்த்த குண சிந்தாமணி –

குணம்:- தும்பைப் பூவினால் தாக ரோகமும் , சந்தி பாத சுரங்களும் (கை கால் சந்துகளிலும் மூட்டுகளிலும் , பாதங்களிலும்  வலி உண்டாக்கும் சிக்குன் குனியா, பன்றிக் காய்ச்சல் , டெங்கு , மலேரியா போன்ற சுரங்களில் )  , நேத்திரத்தைப் (கண்கள்) பற்றிய கொடிய தோஷங்களும் வியாதிகளும் அகலும்.

செய்கை:-முறைவியாதிரோதி (இது பற்றி முன்னரே நாம் கட்டுரை எழுதி யுள்ளோம் அதற்கான இணைப்பு இதோ

https://machamuni.com/?p=666                  )

உபயோகிக்கும் முறை:- தும்பைப் பூவை நன்றாகக் கசக்கி சாறு எடுத்து, அதில்15-30 துளி வரையில் எடுத்துக் கொண்டு அத்துடன் இரண்டு பங்கு தேனுடன் கூட்டி பெரியவர்களுக்குக் கொடுக்க சந்தி சுரம் 

(கை கால் சந்துகளிலும் மூட்டுகளிலும் , பாதங்களிலும்  வலி உண்டாக்கும் சிக்குன் குனியா, பன்றிக் காய்ச்சல் , டெங்கு , மலேரியா போன்ற சுரங்களில் இந்தக்காய்ச்சல்களுக்கு அல்லோபதி நர்ஸ் ஒருவரே இராஜபாளையத்தில் பலியானார். இவற்றை சித்த மருந்துகள் எளிதில் போக்க பல மருந்துகள் உள்ளன .இது பற்றி பல மாதங்களுக்கு முன்னரே நாம் எழுதிய கட்டுரை இணைப்பு இதோ

https://machamuni.com/?p=884

) , தாகம் இவை போகும்.இத்துடன் பண்டிதர்கள் சமயோசிதமாக கட்டு மாத்திரைகளோ அல்லது செந்தூரங்களோ கூட்டிக் கொடுப்பது வழக்கம்.குழந்தைகளுக்கு 12 துளி பூச்சாறுடன் தேன் கூட்டிக் கொடுப்பதுண்டு.இதனுடன் கோரோசனையாவது , கஸ்தூரியாவது கூட்டிக் கொடுக்க விரைவில் சீதளத்தையும் கபத்தையும் கண்டிக்கும் .பூவைக் கசக்கி துணியில் முடிச்சுக் கட்டி கண்களில் இரண்டொரு துளி விட சந்தி ரோகம் பிரியும்.இம்மாதிரி மருந்தைக் கண்ணில் விடுவதைக் கலிக்கம் என்பர் .இது மருத்துவ மூலிகைகளில் மிக உயர்ந்த மருத்துவ முறை.இது உடனே இரத்தத்தில் கலந்து வியாதியை அறவே போக்கும்.

தும்பையிலை

LEUCAS ASPERA-LEAVES

THUMBAI

சீறுகின்ற பாம்போடு சில்விஷங்கால் சென்னிவலி

யேறுகப மாந்த மிருக்குமோ – நாறுமலர்க்

கொம்பனைய மாதே குளிர்சீத சந்திவிடுந்

தும்பையிலை யென்றொருகாற் சொல்

                                                                             – பதார்த்த குண சிந்தாமணி –

தும்பையிலை யையுண்ணுஞ் சோற்றுக்கெ லாங்கறியா

யம்புவியோர் மிக்க வருந்துங்கால் – வெம்பிவரு

மேகமொடு கண்புகைச்சல் வீறுகை காலசதி

தாகமொடு சோம்பலுறுந் தான்

                                                                                 – பதார்த்த குண சிந்தாமணி –

குணம்:-தும்பையிலையால் சர்ப்ப கீட விஷங்கள் (பாம்பு கடிப்பதால் உண்டாகும் விஷம் , மற்றும் விஷ ஜந்துக்கள் கடிப்பதால் உண்டாகும் விஷம் மற்றும் விஷத்தால் உண்டாகும் நோய்கள் ) , வாத நோய் , தலைவலி , கபதோஷம் , அக்கினி மந்தம் , சிலேஷ்ம சந்தி இவைகள் தீரும். இதைப் புளியிட்டு கடைந்து உணவோடருந்தினால் பிரமேகம் , நேத்திரப் புகை , கைகால்களில் அசதி , தாகம் , சோம்பல் இவைகள் உண்டாம் என்க .

செய்கை:-கபஹரகாரி (சளியை நீக்கும் செய்கையுள்ள மூலிகை) , உற்சாககாரி (உற்சாகப்படுத்தும் மூலிகை) , வமனகாரி (வாந்தியுண்டாக்கல்)

உபயோகிக்கும் முறை:- தும்பையிலையை அரைத்து பாம்புக் கடிக்கும் , சிரங்குகளுக்கும் , போடுவதுண்டு . இதன் சாற்றை நசியமிடத் ( மூக்கில் சில சொட்டுக்களை ஊதுவது ) தலைவலி , ஜலதோஷம் , பாம்பு விஷம் போம்.

தும்பையிலை , அவுரியிலை , பெருங்காயம் , வசம்பு , வெள்ளைப் பூண்டு , மிளகு இவைகளை சமனெடையாக எடுத்துக் கல்வத்திலிட்டு சிறு பிள்ளைகளின் அமுரிவிட்டரைத்து (உண்மையான சித்தர் அமுரிவிட்டரைத்தால் இது மிக அற்புதமாக வேலை செய்யும் ) துணியில் முடிந்து காது , நாசிகளில் துளித் துளியாக விட கடுமையான நாக விஷங்களும் இறங்கும்.

தும்பையின் மற்ற மொழிப் பெயர்கள்.™

Hindi: छोटा हãकसा ु Chhota halkusa, गॊफा Gophaa ™ Malayalam:Tumba

Tamil: தும்பை Thumbai

Telugu: Tummachettu

Manipuri: Champra

Marathi: Tamba

Kannada: Tumbe guda

Bengali: Ghal ghase

Sanskrit: द्रोणपçपी

பதிவு பெரிதாகப் போவதால் அடுத்த பதிவில் தும்பை மற்றும் கவிழ்தும்பை என்ற கௌதும்பை(மச்ச முனி மூலிகையகம் பாகம் 18) பாகம் 3 ல்இவை பற்றி காணலாம்.