திருவண்ணாமலையும் அதிசயக் காட்சியும் கிரி வலம் வரும்போது ஒவ்வொரு லிங்கத்திற்கும் சொல்ல வேண்டிய மந்திரம்
திருவண்ணாமலையும் அதிசயக் காட்சியும் கிரி வலம் வரும்போது ஒவ்வொரு லிங்கத்திற்கும் சொல்ல வேண்டிய மந்திரம்
திருவண்ணாமலை என்ற திருத்தலம் நினைத்தாலே முக்தியளிக்கும் திருத்தலம் . திருவண்ணமலை பஞ்ச பூத சிவத்தலங்களில் அக்னிக்கு என்றுள்ள சிவத்தலமாகும்.அக்னியான நெருப்பு “ நமசிவய ” என்னும் மந்திரத்தில் “ சி ‘காரம் ஆகும் .
“ கிராமத்தில் ஐந்துக்கு இரண்டு பழுதில்லாமல் செய்ய வேண்டும் ” என்பார்கள் . நம் உடலில் ஐந்துக்கு இரண்டு பழுதில்லாமல்தான் இருக்கிறது . நம் உடல் ஐந்து பஞ்ச பூதங்களால் ஆக்கப்பட்டது என்பது உங்களுக்கு தெரியும் . அவையாவன நிலம் (பிருதிவி “ந”) , நீர் (அப்பு “ம”) , நெருப்பு (தேயு “ சி”) , காற்று {(வாயு “வ” ) இதனாலேயே உலோக மாற்று வித்தையான ரசவாதத்தை வகார வித்தை என்பார்கள்} , ஆகாயம் ( விண் “ய” ) . இவற்றில் ஆகாயமான பூதம் உயிருடன் ஓடிவிடும் , மூக்கில் வாசி வாசி என வாசித்த காற்று ஓடிவிடும் , காற்றில்லாவிட்டால் உடலில் நெருப்பு அணைந்துவிடும் , மண்ணும் நீரும் மட்டும் பிணமாகக் கிடக்கும் .அதையும் கொண்டு போய் இடு காட்டிலோ (புதைக்கும் இடம் ) அல்லது சுடு காட்டிலோ (எரிக்கும் இடம் ) .
ஞானிகள் உடலை எரிக்கக் கூடாது . அது அந்த இடத்தை பாதித்து பன்னிரண்டு வருடங்கள் மழை இல்லாமல் செய்துவிடும்.உடலை விட்டு ஓடும் பூதம் இரண்டான ஆகாயம் , காற்று ஆகியவற்றையும் ஓடாத நீர் மற்றும் மண் ஆகியவற்றைப் பிணைத்திருக்கும் பூதம் நெருப்பு . ஆகவேதான் திரு மூலர் நாயோட்டும் மந்திரம் நமனை வெல்லும் என்கிறார்.நாயை எப்படி ஓட்டுவோம் “சி” என்றுதானே.அதுதான் சிகாரமான நெருப்பு.அந்த நெருப்புக்கு உரிய தலமான திருவண்ணமலை மிகச் சிறப்பு வாய்ந்த தலமாகும் . காற்றையும் நெருப்பையும் குறிக்கும் சொல்லே காசி .சுடு காட்டில் எலும்புகளின் மேல் பால் ஊற்றும் போது காற்றையும் நெருப்பையும் காக்காமல் இவன் இறந்துவிட்டான் என்று குறிக்கவே இப்படி செய்கிறார்கள்.
ஐந்து கரத்தனை ஆனை முகத்தனை
இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்றனை ஞானக் கொழுந்தினை
புந்தியில் வைத்து அடி போற்றுகின்றேனே
– திரு மூலர் –
நமது உடலிலுள்ள தீயே நந்தீ .நமது உடலிலுள்ள தீ புந்தீ (புன்மையான (சிறு) தீ ) . நமது உடலிலுள்ள நெருப்பு சிறு நெருப்பாக இருப்பதால் காற்று அணைத்துவிடும் .அதுவே பெரு நெருப்பாக இருந்தால் காற்று பெரு நெருப்புக்குத் துணையாக நெருப்பை வளர்க்கும். சிறு விளக்கின் சுடரை அணைக்கும் காற்று .ஒரு குடிசையில் பற்றிய நெருப்பை வளர்ந்து பெரியதாக எரிய வைப்பதோடு மற்ற இடங்களுக்கும் பரவும்.இது போலவே ஞானத் தீயும் பற்றியுள்ள உடலையும் சித்தியாக்கும் .சுற்றியுள்ள உடல்களையும் சித்தியாக்கும் . இதுதான் காயத்திரி மந்திர ரகசியம். காயத்தையே திரியாக வைத்து யோகாக்கினியால் எரிப்பதே அது.இதையே திருவண்ணாமலை தீபத் திருநாளன்று பரணி தீபம் என்ற சிறு தீபத்தை அம்பின் நுனியில் வைத்து மேலே எய்தவுடன், மலையின்மேல் பெரு நெருப்பு விளக்கான மஹா தீபம் ஏற்றப்படும்.சிறு நெருப்பு பெரு நெருப்பாக மாறிவிட்டது.ஞானம் பிறந்துவிட்டது. பல ஞானிகளுக்கும் ஞானம் வழங்கிய தலம். பரத்தையர் காமத்தில் திளைத்திருந்த அருணகிரி நாதருக்கு குஷ்டத்தை வழங்கி அதன் மூலம் ஞானம் வழங்கிய திருத்தலம் .
மூர்த்தி , தலம் , தீர்த்தம் ஆகிய மூவகையாலும் சிறப்புப் பெற்ற தலம் .மூர்த்தி , தலம் , தீர்த்தம் முறையாகப் பயின்றோர்க்கு ஞானம் சித்திக்கும் என்பது முது மொழி . அருணகிரி நாதர் பேயன் கோபுரத்தில் இருந்து குதிக்கும் காட்சி .
திருவண்ணாமலையில் உள்ள பேயன் கோபுரத்தில் இருந்து குதித்த அருணகிரி நாதரை முருகனே காப்பாற்றி உபதேசம் தந்து ஞானம் வழங்கிய இடம் இது.பேயன் கோபுரத்திற்கு அருகில் முருகன் அவருக்கு பாடும் வல்லமையை அருளும் காட்சி.
சிவ இறை நிலைகளில் சாலோகம் , சாமீபம் , சாரூபம் , சாயுச்சியம் என நான்கு நிலைகள் கூறுவார்கள் . சாலோகம் என்றால் இப்போது நாம் செத்துக் கொண்இருக்கும் லோகமே சாலோகம், சாமீபம் என்றால் இறைவனுக்குச் சமீபமாக செல்வதே சாமீபம் , சாரூபம் என்பது இறைவன் ரூபமாகவே மாறுவது ,சாயுச்சியம் என்பது இறை மயமாகவே ஆவது .
நமது நண்பர் ஒருவர் , இறையருள் பெற்ற மெய்யன்பர். அவருக்கு திருவண்ணாமலைத் திருத் தலத்திற்கு அழைப்பு வந்ததையும் , அழைப்புக்கு முன்னர் சில தகவல்கள் அறிவிக்கப்பட்டதையும், அவை குறிப்பிட்டவாறு நடந்ததையும் விளக்குகிறது ”திருவண்ணாமலையும் அதிசயக் காட்சியும் கிரி வலம் வரும்போது ஒவ்வொரு லிங்கத்திற்கும் சொல்ல வேண்டிய மந்திரம்” என்ற இந்தப் புத்தகம்.
இப்படிப்பட்ட திருத்தலத்தில் நண்பர் அவர்களுக்கு இறைவன் சமீபத்தில் இருந்ததை விளக்கும் புத்தகமே இது . அவருக்கு அருளிய காட்சியின் புகைப்படம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
மேற்கண்ட புத்தகம் கந்தசாமி பப்ளிகேஷன்ஸ் ஆல் வெளியிடப்பட்டுள்ளது. இணைய தள முகவரி http://www.kandasamypublication.com
புத்தகங்களைப் பெற மின்னஞ்சல் முகவரிக்கு அஞ்சலிடவும். kandasamypublication@gmail.com
அன்பளிப்புத் தொகையான விலையோ மிகக் குறைவான 25 ரூபாய் மட்டுமே. இந்தப் புத்தகத்தின் முன் , பின் அட்டைகளின் , உள்பக்கங்களில் இந்த திருவண்ணாமலை தெரிசனக் காட்சிப் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது . இந்தப்புத்தகத்தைப் பற்றிய மேலும் விபரங்கள் தெரிந்து கொள்ள இங்கு சொடுக்கவும்.
இந்தப்புத்தகத்தின் முன்னுரையை மட்டும் இங்கு கொடுத்துள்ளோம். இந்தப்புகைப்படத்தின் காட்சியும் கண்டிப்பாக சிவன் அருளை கொடுக்கும் என்பதில் எனக்கு சந்தேகம் இல்லை. கண்டிப்பாக ஒவ்வொருவர் வீட்டிலும் இருக்க வேண்டிய புகைப்படம் என்று எனக்கு தோன்றியதன் விளைவே இந்தப்பதிவு.
“பெரியது என்ன என முருகன் அவ்வையாரிடம் கேட்க அவ்வை சிவத் தொண்டர் தம் பெருமையே” சொல்லப் பெரியது எனக் கூறியது கீழே பாடலாக கொடுக்கப்பட்டுள்ளது.
பெரியது கேட்கின் எரிதவழ் வேலோய்!பெரிது பெரிது புவனம் பெரிது!
புவனமோ நான்முகன் படைப்பு ! நான்முகன் கரிமாலுந்தியில் வந்தோன் !
கரியமாலோ அலைகடற் றுயின்றோன் ! அலைகடலோ குறு முனியங்கையிலடக்கம்!
குறுமுனியோ கலசத்திற் பிறந்தோன் ! கலசமோ புவியிற் சிறுமண் !
புவியோ அரவினுக் கொருதலைப் பாரம் ! அரவோ உமையவள் சிறு விரன் மோதிரம் !
உமையோ இறைவர் பாகத் தொடுக்கம் !இறைவரோ தொண்டருள்ளத் தொடுக்கம் !
தொண்டர் தம் பெருமையை சொல்லவும் பெரிதே!
-அவ்வையார் –
“ இனியது என்ன என முருகன் அவ்வையாரிடம் கேட்க அவ்வை சிவனடித் தொண்டர் ( அறிவினர்ச் சேர்தல் ) தம்மோடு இருப்பதும், அவரோடு கனவிலும் நனவிலும் அவரைக் காண்பதுதான்” எனக் கூறியது கீழே பாடலாக கொடுக்கப்பட்டுள்ளது.
இனியது கேட்கின் தனிநெடு வேலோய் ! இனிது இனிது ஏகாந்தம் இனிது!
அதனினும் இனிது ஆதியைத் தொழுதல் !அதனினும் அறிவினர்ச் சேர்தல்!
அதனினும் இனிது அறிவுள்ளோரை கனவிலும் நனவிலும் காண்பதுதானே!
-அவ்வையார் –
அன்பார்ந்த ஐயா
அடியேனுக்கு அண்ணாமலையார் தந்த காட்சியை இத்துடன் இணைத்துள்ளேன்
ஆடல் வல்லானின் விரிசடையை மலையை சுற்றி பாருங்கள் ஐயா
அடியேன்
ஜனார்த்தன்
Vannakam!! , please send that pic to me also , Nandri
மிக்க நன்றி அண்ணா தகவலுக்கு மிக மிக அரியதோா் தரிசனம்